Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Charectero Charecter!
Charectero Charecter!
Charectero Charecter!
Ebook219 pages1 hour

Charectero Charecter!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவரது ​ ‘​கேரக்டரோ கேரக்டர்’ புத்தகத்தை படிக்கும்போது சிரித்து சிரித்து, விலா வலிக்கும் ​;​ நெகழ்ச்சியூட்டும் கட்டுரைகள் மனதைத் தொடும். இந்த கேரக்டர் கட்டுரைகள் ஒவ்வொன்றும் உயிரூட்டமானவை; ​ ​பிரமாதமான வார்த்தைச் சித்திரங்கள்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580120702304
Charectero Charecter!

Read more from Kadugu

Related to Charectero Charecter!

Related ebooks

Related categories

Reviews for Charectero Charecter!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Charectero Charecter! - Kadugu

    http://www.pustaka.co.in

    கேரக்டரோ கேரக்டர்!

    Charectero Charecter!

    Author:

    கடுகு

    Kadugu

    For more books
    http://www.pustaka.co.in/home/author/kadugu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    சமர்ப்பணம்

    ஐம்பது வருட நண்பர்

    ஓவிய மேதை

    கோபுலு

    அவர்களுக்கு.

    ***

    மூன்று பேர்

    என் எழுத்துப் பணிக்கு வழி வகுத்து வளமடையச் செய்தவர்கள் மூவர்.

    தமிழ் எழுத்துலகிலும் பத்திரிகை உலகிலும் பல மைல்கல்களைப் பதித்தவர் அமரர் கல்கி அவர்கள். அவரை ஆதர்சமாகக் கொண்டு தங்கள் எழுத்துப் பணியை செய்துள்ளவர்களில் முக்கியமானவர் ஆசிரியர் சாவி அவர்கள். எழுத்தும் பத்திரிகையுமே தனது முழுமூச்சாகக் கருதியவர். இல்லாவிட்டால் நிதி வசதி துளிக்கூட இல்லாத அவர் தனது 27-வது வயதில் ‘வெள்ளிமணி' என்ற வார இதழை ஆரம்பித்து வெற்றி நடை போட்டிருப்பாரா? (துரதிர்ஷ்டம், தீபாவளி மலர் போட்டு அகலக் காலை வைத்ததால் நஷ்டம் ஏற்பட்டு பத்திரிகையை நிறுத்த வேண்டியதாயிற்று!)

    'இங்கே போயிருக்கிறீர்களா', 'இவர்கள் சந்தித்தால்', 'கேரக்டர்' என்று பல சுவையான சிறப்பு அம்சங்களை பத்திரிகையில் செய்தவர். நகைச்சுவை, அவர் நாவிலும் பே’நா'விலும் என்றும் குடி இருந்தது.

    சராசரிக்கும் அதிகமாகவே வாழ்க்கையில் சோகங்களைக் கண்டவர். எந்த சோகமும் அவரை இடிந்துப் போய்விடச் செய்யவில்லை. அந்த சோகங்களை எல்லாம் தனது நகைச்சுவை உணர்வு என்னும் போர்வையால் போர்த்திவிட்டு, நிலை குலையாமல் இருந்துவிட்டார்.

    அவரது 'கேரக்டர்' கட்டுரைகளைப் படித்து ரசித்த எனக்கு, சிறுவனாக இருந்த போதே அது மாதிரி எழுதவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆசை இருந்தது; ஆகவே திறமையும் இருக்கிறது என்று நானாகவே கருதிக் கொண்டு விட்டேன்!

    பின்னால் சாவி அவர்களின் பொறுப்பில் 'தினமணி கதிர்' இருந்த போது கிட்டத்தட்ட அதன் ஆஸ்தான எழுத்தாளனாக நான் ஆனேன். என் எழுத்தின் மேல் அவருக்கு அபாரமான (தவறான?) மோகம் இருந்தது. அப்போது எழுதியவை தான் இந்த 'கேரக்டர்' கட்டுரைகள். அதாவது சாவி அவர்களிடமே ஓ. கே. வாங்கிய கட்டுரைகள் இவை! இதுவே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு. அதை என்றும் போற்றிப் பாதுகாத்து வருகிறேன்.

    'என் நண்பர்கள்' என்ற தலைப்பில் பல் வேறு பிரமுகர்களிடம் கட்டுரையை வாங்கி குமுதம் இதழில் பிரசுரித்து வந்தார்கள். சாவி அவர்கள் எழுதிய கட்டுரையில், தமது நண்பர்களில் ஒருவராக என்னையும் குறிப்பிட்டிருந்தார் என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிட விரும்புகிறேன்.

    டெல்லியிலிருந்து சென்னை வரும்போதெல்லாம் குமுதம் ஆசிரியர் எஸ். ஏ. பி. அவர்களைச் சந்திப்பேன். அவரை சந்தித்த ஒரு சில எழுத்தாளர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்குத் தனி கெüரவம். அவர் எனக்கு அளித்த ஊக்கத்திற்கும் வாய்ப்புகளுக்கும் அளவே இல்லை!

    பேராசிரியர் கல்கி, எழுதவேண்டும் என்ற ஆர்வத்திற்கு விதை போட்டார். குமுதம் ஆசிரியர் எஸ். ஏ. பி. என்னும் மாமனிதர் அதற்கு உரமிட்டு மரமாக்கினார். ஆசிரியர் சாவியோ அந்த மரம், கப்பும் கிளையுமாக பரவச் செய்தார். இது எனக்குக் கிடைத்த பாக்கியம். இம்மூவருக்கும் என் பணிவான வணக்கங்களையும் நெஞ்சார்ந்த அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த கேரக்டர் கட்டுரைகளுக்கு அற்புதமாக ஓவியம் வரைந்து உயிரூட்டிய, ஐம்பது வருட நண்பர் கோபுலு அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    * * * * *

    என் நினைவிலும் வாழ்விலும் எனக்குத் தெய்வமாக விளங்கும் அமரர் கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களை, சிரத்தால் வணங்கி, கண்களில் ஒற்றிக்கொண்டு இப்புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன். அவருடைய ஆசி எனக்கு என்றும் கிடைப்பதாக!

    - கடுகு

    ***

    என்னுரை - 1

    நான் 1962ல் டில்லி சென்றேன். சுமார் 40 வருடங்கள் அங்கு குப்பை கொட்டினேன். டில்லி போனதால் எனக்கு பல இனிய அனுபவங்கள் கிடைத்தன. என் உலகம் சற்று விரிந்து பரந்தது. எல்லாம் சற்று புதிதாகவும் வியப்பூட்டுவதாகவும் தென்பட்டன!

    டில்லியில் முதன் முதலில் தென்பட்ட பல வித்தியாசமான விஷயங்களை "அரே டில்லிவாலா'' என்ற தலைப்பில் 'குமுதம்' இதழுக்கு அனுப்பினேன். சில நாட்கள் கழித்து குமுதத்திலிருந்து 'செக்' வந்தது. நாலு நாள் கழித்துதான் 'குமுதம்' இதழ் டில்லிக்கு வந்தது. அடுத்த 6, 7 வருடங்கள், என் கட்டுரை இல்லாத குமுதமே இல்லை! சில இதழ்களில் இரண்டு, மூன்று கட்டுரைகள் கூட வந்ததால், ஆசிரியர் குழுவே சில பல புனைப் பெயர்களை எனக்குச் சூட்டி விட்டது. ரா.கி. ரங்கராஜன், பாக்கியம் ராமசாமி, புனிதன் ஆகிய மும்மூர்த்திகள் பல கடிதங்கள் எழுதி எனக்கு ஊக்கம் அளித்தனர். ஆரம்ப காலத்தில் ஒரு சில கட்டுரைகளை அவர்கள் எடிட் செய்திருந்தார்கள். அவர்கள் எடிட் செய்ததை எழுத்து எழுத்தாக ஊன்றிப் பார்த்து பல உத்திகளையும் பாடங்களையும் கற்றுக் கொண்டேன். அவ்வகையில் எஸ்.ஏ.பி. அவர்களும் இம்மும்மூர்த்திகளும் என்னை செதுக்கியவர்கள். (இன்னும் நன்றாகச் செதுக்கி இருக்கலாம், என்று நீங்கள் அலுத்துக் கொள்வது கேட்கிறது!)

    குமுதம் இதழில் எழுதியதால் எனக்குப் பல அரிய அனுபங்கள் கிடைத்தன. ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அளித்த குடியரசு தின தேநீர் விருந்தில் கலந்து கொள்ள முடிந்தது. ஜனாதிபதி பக்ருதின் அகமதுவுடன் சமமாக ஒரு சோபாவில் உட்கார்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியை சந்தித்துப் பேச முடிந்தது. ஜவஹர்லால் நேருவின் அறைக்குள் சென்று, (அவர் இல்லாத சமயம்!) சில கணம் மெய் மறந்து நின்ற அரிய அனுபவம் கிடைத்தது.

    பின்னால், ஆசிரியர் சாவி அவர்களுடன் காமராஜ் அவர்களை, பிரதமர் பதவி ஏற்ற மறுதினம் மொராய்ஜி தேசாய், மற்றும் பல பிரமுகர்களைச் சந்திக்க அரிய வாய்ப்புகள் கிடைத்தன. ஏராளமான எம்.பி.களுடன் மிகவும் நெருங்கிப் பழகவும் முடிந்தது.

    இவையெல்லாம் நான் பெற்ற பேறுகள்! எழுத்தாளன் என்ற காரணத்தால் கிடைத்த வெகுமதிகள்!

    இவற்றிற்கெல்லாம் நான் யாருக்கு நன்றி சொல்வேன்!

    1954அ'ம் ஆண்டு என் கட்டுரையை படித்து 'பேஷ்' என்று ஒரு வார்த்தையில் ஷொட்டு கொடுத்து, என்னுள் எழுத்து ஆர்வத்திற்கு வித்திட்ட அமரர் கல்கி அவர்களுக்குத் தான் என் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகும் .

    - கடுகு

    ***

    என்னுரை - 2

    நான் பொக்கிஷங்களாக கருதும் பாராட்டுகள்.

    ராஜாஜியின் 'பேஷ்'

    ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது அவர் தலைமையில் செங்கல்பட்டில் நடந்த மிகப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் நன்றி உரை கூறும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுருக்கமாகவும் சுவையாகவும் (!) நான் பேசி முடித்தவுடன் ராஜாஜி 'பேஷ்' என வாய்விட்டுப் பாராட்டினார். உடனே நான் என் ஆட்டோகிராஃப் புத்தகத்தை எடுத்து அவரது கையெழுத்தைக் கேட்டேன். அதற்கு ராஜாஜி, "முடியாது. உனக்குக் கையெழுத்துப் போட்டால் இன்னும் நிறைய பேர் வருவார்கள். ஏற்கெனவே மணி பத்து ஆகி விட்டது'' என்றார் கண்டிப்புடன்.

    "நீங்கள் என் பேச்சைப் பாராட்டி 'பேஷ்' என்று சொன்னீர்கள். அதற்காகவாவது நீங்கள் ஆட்டோகிராஃப் போட்டுத் தர வேண்டும்'' என்றேன் துணிச்சலாக. (இளங்கன்று பயமறியாத துணிச்சல்!). உடனே என் ஆட்டோகிராஃப் நோட்டை ராஜாஜி வாங்கி, கையெழுத்துப் போட்டு நோட்டை என்னிடம் கொடுத்தார். நோட்டைப் பிரித்துப் பார்த்தேன். ஒரு இனிய அதிர்ச்சி! ராஜாஜி வெறுமனே கையெழுத்திட்டிருக்கவில்லை. ‘பேஷ்' என்று எழுதி அதன் கீழே கையெழுத்திட்டிருந்தார். இது எனக்கே, எனக்கு மட்டுமே ராஜாஜி தந்த கிடைத்தற்கரிய பாராட்டு. அதை அரிய பொக்கிஷமாக போற்றி வருகிறேன். பின்னால் நான் எழுதத் துவங்கியதும் ராஜாஜி பாராட்டிய என் பேச்சு பாணியை எழுத்திலும் கடைபிடிக்கத் துவங்கினேன்.

    கல்கியின் 'பேஷ்'

    சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு செங்கல்பட்டிற்கு அருகிலுள்ள ஒரு பண்ணைக்கு கல்கி அவர்கள் விஜயம் செய்தார். அப்பண்ணையைப் பற்றி எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் எழுதிய கட்டுரையை அவரிடம் நேரிடையாகக் கொடுத்தேன். என் எதிரிலேயே படித்துவிட்டு வாய் விட்டு ‘பேஷ்' என்று கூறினார். அந்த 'பேஷ்', என் ஊனிலும், உயிரிலும் கலந்து இன்னும் ஆட்கொண்டு உந்து சக்தியாக விளங்கி என்னை இயக்கிக் கொண்டு வருகிறது.

    எஸ்.ஏ.பி.யின் பாராட்டு

    குமுதம் ஆசிரியர் உயர்திரு எஸ்.ஏ.பி. அவர்களை நேரில் சந்தித்து பேசிய ஒரு சில எழுத்தாளர்களில் நானும் ஒருவன். ஒவ்வொரு சந்திப்பின் போதும் நான் கற்ற பாடங்கள் பற்பல. ஒரு அரசு வேலைக்காக மனு செய்வதற்கு ஒரு நற்சான்றுக் கடிதம் எனக்குத் தேவைப்பட்டது. எஸ்.ஏ.பி. அவர்களிடம் கேட்டேன். அவர் என் எழுத்தைப் பாராட்டி எழுதி கையெழுத்திட்டு கடிதம் தந்தார். அது ஒரு கோஹினூர் வைரம் அல்லவா!

    சாவியின் ஷொட்டு

    ஆசிரியர் சாவி எனக்குத் தந்த பாராட்டுகள் ஒன்றா, இரண்டா? பக்கம் பக்கமாகக் கடிதம் எழுதிப் பாராட்டியிருக்கிறார். டில்லிக்குப் போன் செய்து மணிக் கணக்கில் பாராட்டி இருக்கிறார். ஒரு சமயம் அவர் எழுதிய புத்தகத்தை எனக்கு அனுப்பியிருந்தார். அதன் முதல் பக்கத்தில், "கல்கியைப் போல், என்னைப் போல் நகைச்சுவையுடன் எழுதவல்ல, என் அருமை நண்பருக்கு...'' என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார். இதற்கு நான் தகுதி உடையவனா என்று தெரியவில்லை. ஆனால் தகுதி உடையவனாக ஆக வேண்டும் என்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். சாவியின் ஷொட்டுகள் யாவும் நான் பெற்ற பரிசுகள்!

    இவர்களைப் பற்றி எழுதும் இக்கணத்தில் என் நெஞ்சத்தில் பெருமிதம் பொங்குகிறது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது!

    - கடுகு

    ***

    கடுகு எழுதிய

    கேரக்டரோ கேரக்டர்!

    முன் குறிப்பு இப்புத்தகத்திற்கு முதலில் ‘கேரக்டர்’ என்று தான் தலைப்பு வைக்க நினைத்தேன். இப்போது ஊரெல்லாம் ‘ஓ’ போடு என்று உபதேசம் செய்கிறார்கள். ஆகவே நானும் ஒரு ‘ஓ’ போட்டு ‘கேரக்டரோ கேரக்டர்’ என்று மாற்றிவிட்டேன்!

    கேரக்டரோ கேரக்டர் என்னும்

    Enjoying the preview?
    Page 1 of 1