Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karuporul
Karuporul
Karuporul
Ebook426 pages3 hours

Karuporul

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் பெயர் நந்தினி... என் சிறு வயதில் இருள் சூழ்ந்த சமயத்தில் ஒளி கிடைத்தது போல எதேர்ச்சியாக என்னுள் நுழைந்த சித்தாந்தம், என் மனஇருளை அகற்றி எனெக்கென்று ஒரு பாதையை வகுத்து, என் எண்ணம், சொல், செயல் அனைத்தையும் இயக்கும் கருப்பொருளாக செயல்பட்டது... அந்த கருப்பொருள் என்னை சரியாக வழிநடத்துகிறது என்ற குருட்டு நம்பிக்கையில் அது வகுத்து கொடுத்த பாதையில் வெற்றிக் கனிகளை சுவைத்தவாறே பயணித்தேன்... ஆனால் அந்த பாதையின் முடிவு என் உயிரை குடிக்க போகும் நரகத்தின் வாயில்... எத்திசை மாறினாலும் அதன் முடிவு நரகத்தின் வாயிலே... நான் தப்பிப்பேனா?... இல்லை நான் கொடூர சித்திரவதைக்குட்பட்டு உயிரிழக்கப் போகிறேனா?... என்னை வழி நடத்தும் கருப்பொருளின் நோக்கம் தான் என்ன?
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580104304492
Karuporul

Related to Karuporul

Related ebooks

Related categories

Reviews for Karuporul

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karuporul - Ramcharan Sundar

    http://www.pustaka.co.in

    கருப்பொருள்

    Karuporul

    Author:

    இராம்சரண் சுந்தர்

    Ramcharan Sundar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ramcharan-sundar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இந்த நாவலை மறைந்த என் தாயார் ருக்மிணி சுந்தர் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

    *****

    "ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்

    அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

    பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்

    அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்"

    கவிஞர் கண்ணதாசன்

    *****

    முகவுரை

    என்னுடைய முந்தைய நாவலை வெளியிட்ட பிறகு, அடுத்த நாவலில் ஒரு பெண்ணை மையமாக வைத்து எழுத திட்டமிட்டுருந்தேன். தோராயமாக ஜூலை மதம், 2016 ஆம் ஆண்டு இந்த கதையை எழுத ஆரம்பித்தேன். முதலில் இந்த கதைக்கான கருவை வடிவமைப்பதில் மிகவும் தடுமாறினேன். ஒரு கட்டத்தில் என் கற்பனை திறன் எல்லாம் வடிந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றியது எனக்கு. பிறகு, வாழ்நாள் முழுக்க இந்த கதையையே எழுதிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை, மனத்திருப்தி வரும் வரை கிழித்து கிழித்து எழுதி கொண்டிருப்போம் என்று முடிவெடுத்தேன். இரண்டு வருடங்கள் இப்படியே கழிந்தன. திடீரென்று ஒரு நாள் என் எண்ணத்தில் ஒரு கதையின் கரு உருவானது. அந்த கரு நான் எதிர்பார்த்த மனதிருப்தியை கொடுத்தது. இரண்டே மாதங்களில் இந்த கதையை தமிழில் எழுதி முடித்தேன். எனக்கு கிடைத்த அதே மனத்திருப்தி படிக்கும் வாசகர்களுக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் கற்பனையே.

    *****

    07 செப்டம்பர், 2016

    மனிதனின் காலடி படாத முற் செடி புதர் மரங்கள் என வளர்ந்திருந்த ஒரு அடர்த்தியான காடு அது. அப்படிப்பட்ட இடத்தில் கனமான இரும்புக் கழி போல் ஒருவனின் கால் தடம் அழுத்தமாக பதிந்தது. கீழே இருக்கும் காய்ந்த முள் சருகுகள் அவன் பாதத்தை குத்தி புண் படுத்துவதை சற்றே பொருட் படுத்தாமல் நடந்து கொண்டிருந்தான். அவன் முன்னேறி செல்ல செல்ல முற்செடிகள் அவனின் உடம்பை கீறி உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் குருதியை எட்டிப் பார்க்க செய்தது. அவன் அதையும் பொருட் படுத்தாமல் முன்னேறி நடந்துக் கொண்டிருந்தான். அந்த அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் மரம் செடி கொடிகளினால் ஏற்பட்ட இருளை, சூரியன் ஆங்காங்கே உள்ள இலை தழைகளின் இடைவெளிக்குள் நுழைந்து அவனுக்கு ஒரு வெளிச்சத்தை கொடுத்தான். சில விஷப் பூச்சிகள் அவன் மீது ஏறி அவனை கடிக்கத் தொடங்கின. அவன் அந்த பூச்சிகளையும் தட்டி விடாமல் நடந்து முன்னேறிக் கொண்டிருந்தான். நிச்சயமாக, பெரும் மன உறுதி உள்ளவனால் மட்டுமே இந்த வலியையும் வேதனையையும் தாங்கி கொள்ள முடியும். அதே போல மிகுந்த மன தைரியம் உள்ளவனால் மட்டுமே இப்படி ஒரு பாதையை தேர்ந்தெடுக்க முடியும். அவனுடைய உறுதியான நடையை அந்த சரிவான பாதை பின்னே தள்ளியது. அவன் சளைக்காமல் முன்னேறிக் கொண்டிருந்தான். சில மணிநேர நடைக்குப் பின்னர் வானத்தை மூடியிருந்த இலை தழைகள் கலைந்து நீலவானம் தெளிவாக தெரிந்தது. சூரியனின் ஆதிக்கமும் அதிகரித்திருந்தது. அவன் பயணத்தை நிறுத்தி வானத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    திடீரென்று 'ஓ ஓ ஓ...' என்று தன் அடிவயிற்றிலிருந்து மூச்சு விடாமல் ஓலமிட்டான். ஒரு நிமிடம் வரை நீடித்தது அந்த ஓலம். பிறகு வேகமாக சுவாசித்த அவன், நிதானமான பிறகு

    'நீ யாரு?... நீ உண்மையா?... அப்படி உண்மையா இருந்தா ஏன் இப்படி என்னை கஷ்டப்படுத்தற?... எனக்கு ஒன்னுமே புரியல?... நான் இந்த மலை மேல ஏறி வரும்போது நிறைய முள்ளு என்னை காய படுத்திச்சு... நிறைய விஷப் பூச்சி என்னை கடிச்சிது... அதையெல்லாம் என்னால தாங்கிக்க முடியுது... ஆனா நீ கொடுக்கற வேதனையையும் வலியையும் என்னால இனிமேல் தாங்கிக்க முடியாது... நான் என் வீட்டை விட்டு ரொம்ப தூரம் வந்துட்டேன்... அவங்களால என்னை தேடி கண்டு பிடிக்க முடியுமான்னு தெரியாது... அதை நான் எதிரும் பாக்கல... என் உடம்பு யாருக்கும் தெரியாம இங்கேயே அழுகி சிதைஞ்சு போனாலும் பரவாயில்ல, நான் அவங்களுக்கு கிடைக்கவே கூடாது...... இதுக்கப்புறமா என்ன நடக்கும்னு எனக்கு தெரிய போறதில்லை... இதோட நீ என்னை விட்டுடு' என்று வானத்தைப் பார்த்து உரக்க கூறிவிட்டு பார்வையை தரையை நோக்கி நகர்த்தினான். கீழே மிக ஆழத்தில் உள்ள அடர்த்தியான காடு அவன் கண்ணிற்கு தெரிந்தது. தன் இரு கைகளை விரித்து அந்த மலை உச்சியிலிருந்து குதித்தான் அவன்.

    *****

    08 ஜூன், 1981(சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர்)

    உயரமான ஒரு அலுவலக கட்டிடத்தின் மாடியில் சந்திரனும் ராதாவும் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்த வேளையில் மிகவும் பலத்த காற்று வீசியது. புகையிலை சுருளை (CIGARETTE) தன் இரு உதடுகளுக்கு இடையே சொருகி அதன் மறுமுனையை அங்கு வீசும் வேகமான காற்றில் அணையாமல் பாதுகாப்பாக பற்றவைத்து புகையை உள்ளே இழுத்து வெளியிட்டான் சந்திரன். அந்த புகையின் வாசத்திற்கு எந்த வித அருவெறுப்பையும் காட்டாமல் அவனருகில் கையில் அழைப்பிதழை அவனிடம் நீட்டியவாறு நின்று கொண்டிருந்தாள் ராதா.

    அதை பெற்றுக் கொண்ட சந்திரன் அந்த அழைப்பிதழில் மாப்பிள்ளையின் பெயரின் கீழே ஜுனியர் என்ஜினீயர், ரயில்வேஸ் என்று அவருடைய பணி விவரம் குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்தான்.

    'நல்ல படியா செட்டில் ஆயிட்டே... ரொம்ப சந்தோஷமாயிருக்கு...' - சந்திரன்.

    ஒரு பெரு மூச்சை விட்ட ராதா சந்திரனிடம்

    'இவ்வளவு நாள் நாம ரெண்டு பேரும் காதலர்களா இருந்தோம்... நேத்து வரைக்கும் உன் மனசு மாறிடும்னு நம்பினேன்... கடைசீல நான் மாறிட்டேன்... ' - ராதா.

    சந்திரன் லேசாக நகைத்தவாறே

    'நீ என்னோட பேசி பழகும் போதே சொன்னேனே... எனக்கு கல்யாணம், ஒருவனுக்கு ஒருத்தின்ற கான்செப்ட் அப்புறம் கடவுள் மேல எல்லாம் நம்பிக்கையே இல்ல... இதை என்னை லவ் பண்ற எல்லா பெண்கள் கிட்டேயும் முன்னாடியே சொல்லிடுவேன்... அப்படியிருந்தும் எல்லாரும் உன்னை நான் மாத்தி காட்டேறேன்னு சொல்லிட்டு என் கூட பழகுவாங்க... அப்புறம் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிடுவாங்க...' என்று கூறினான்.

    'மனசுக்கு பிடிச்ச ஆளோட வாழணும்... அந்த வாழ்க்கை தெகட்டிட்ட பிறகு புதுசா மனசுக்கு பிடிச்ச வேற ஒரு ஆளோட வாழணும்... அதுவும் தெகட்டிருச்சா அப்புறம் வேற ஆள்னு உன் ஐடியாலஜி படி என் வாழ்க்கையை வாழணும்னு தான் ஆசை... என்ன பண்றது?... பொண்ணா பொறந்துட்டேனே... உன்னோட ஐடியாலஜி படி பெண்கள் நடந்துக்கறதை ஏத்துக்கறதுக்கு இன்னும் நம்ம சமுதாயம் பக்குவம் அடையலை... அம்மா அப்பாவுக்காகவும், சமுதாயத்துக்காகவும், என்னோட பாதுகாப்புக்காகவும் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் ஆகணும்... ஆனா உன் கடைசி காலம் வரைக்கும் நீ இப்படியே வாழ முடியாது... நமக்குன்னு உறவுகள் தேவை... நீயும் உன் ஐடியாலஜியை மாத்திக்கிட்டு சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிக்கோ...' - ராதா.

    'எனக்குள்ள கருவா இருந்து என்னோட சொல் செயல் எண்ணத்தை ஆட்டுவிக்கறதே என்னோட இந்த ஐடியாலஜி தான்... இந்த கரு எப்படி உருவாச்சுனே தெரியலை... ஒருவேளை என் அம்மா என்னோட சின்ன வயசுலியே சாகாம இருந்திருந்தா என்னோட ஐடியாலஜி வேறமாதிரி இருந்திருக்குமோ என்னவோ... உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்... சின்ன வயசுல என் அப்பா வியாபாரம்னு வெளியூர் போய்டுவாரு... நான் ஹாஸ்டல்ல தான் வளர்ந்தேன்... என் அப்பாவும் என்னை எவ்வளவோ மாத்த முயற்சி பண்ணாரு... இன்னும் பண்ணிக்கிட்டு இருக்காரு... இதுவரைக்கும் எந்த சம்பவங்களும் என் ஐடியாலஜியை மாத்திக்கற அளவுக்கு என் மனச பாதிச்சதில்ல...' - சந்திரன்.

    ராதா செயற்கையாக புன்னகையை சிந்தி

    'ஒரு நாள் உன் மனசை பாதிக்கற சம்பவம் ஒன்னு கண்டிப்பா நடக்கும்... அது உனக்கு அன்பு பாசம் அப்புறம் பிரிவோட வலியை உனக்கு உணர்த்தும்... நிச்சயமா நீ உன் ஐடியாலஜியை மாத்திக்குவ...' என்று கூறினாள். அப்படி கூறும் போது அவள் கண்கள் கலங்கியது. உடனே சந்திரன் தீவிரமாக

    'ஹே... என்னாச்சு?' என்று கேட்டான்.

    'ஒண்ணுமில்ல... தானா கண் கலங்குது... நீ இதை சீரியஸ்ஸா எடுத்துக்காதே... அவசியம் என் கல்யாணத்துக்கு வந்துடு... பயப்படாத... எனக்கு உன்னை பாத்தா எந்த குற்ற உணர்ச்சியும் வராது... உன்னோட இருந்த இந்த தற்காலிக உறவுல நான் கத்துக்கிட்டது இந்த மன பக்குவத்தை தான்... நிறைய பேர இன்வைட் பண்ணனும்... நான் கிளம்பறேன்...' என்று சந்திரனிடம் விடைபெற்று சென்றாள் ராதா.

    ராதவுடனும் மற்றும் அவனின் முன்னாள் காதலிகளுடனும் நடந்த இனிமையான நிகழ்வுகளை நினைத்து பார்த்துக் கொண்டே வாயில் இருந்த புகை சுருளை முடித்து விட்டு அந்த மாடியிலிருந்து கீழே பார்த்தான். அந்த உச்சியிலிருந்து கீழே பார்க்கும் அவனை ஒரு வித பயம் பற்றிக் கொண்டது. லேசாக தலை சுற்றியது. சட்டென்று தன் பார்வையை விலக்கி அந்த இடத்தில இருந்து நகரத்தொடங்கினான். அவன் மாடி படிக்கட்டுகளில் இறங்கி கொண்டிருக்கும் போது சட்டென்று ஒருவன் முகத்தில் ஒரு வித கலக்கத்துடன் சந்திரனை வேகமாக கடந்து மாடியை நோக்கி படிக்கட்டுகளில் ஓடினான். சில நொடிகள் அவன் ஓடுவதை சந்தேகமாக பார்த்த சந்திரன் கீழே இறங்குவதை தொடர்ந்தான். சட்டென்று சந்திரனுக்கு அந்த உயரமான மாடியிலிருந்து கிழே பார்க்கும் போது உண்டான பயம் அவன் நினைவிற்கு வந்தது, அடுத்து அவனை கடந்து ஒருவன் கலக்கத்துடன் வேகமாக மாடியை நோக்கி ஓடியதும் நினைவிற்கு வந்தது. உடனே தான் நடக்கும் திசையை மாற்றி மாடியை நோக்கி சந்திரனும் ஓடினான். மாடியை அடைந்த அவன் தன்னை கடந்து வந்த ஆசாமியை தேட சற்றே சுற்றும் முற்றும் பார்வையை படரவிட்டுக் கொண்டிருக்கும் போது, சந்திரனுக்கு வந்தவன் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டானா என்ற சந்தேகம் தோன்றியது. அந்த சந்தேகத்தை போக்கி கொள்வதற்கு மாடியிலிருந்து கீழே எட்டி பார்த்தான். கிழே எந்த பதட்டமும் பரபரப்பும் இல்லை, இயல்பான நிலையில் மக்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். மறுபடி அந்த மாடியில் அவனை தேடும் போது, சந்திரனுக்கு அழுகை சத்தம் கேட்டது. உடனே அந்த அழுகை சத்தம் வரும் திசையை நோக்கி போனான். அப்படி அந்த சத்தத்தை நோக்கி சென்ற சந்திரனின் கண்களுக்கு மேலே ஓடி வந்தவன் மாடியின் நுழைவாயில் அறையின் பின்னே அமர்ந்து அழுது கொண்டிருப்பது தெரிந்தது. உடனே அழுது கொண்டிருப்பவனிடம் வேகமாக சென்று அவன் அழுவதை சில நொடிகள் பார்த்துவிட்டு அவனிடம் தயக்கமாக

    'சார்... தப்பா எடுத்துக்காதீங்க... என் பேரு சந்திரன்... என்னை உங்க நண்பனா நினைச்சுக்கோங்க... உங்களோட துக்கத்தை என்கிட்ட பகிர்ந்துக்கோங்க...' என்றான். சில நொடிகளில் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்ட அந்த நபர்

    'என் பேரு விவேக்... மேனேஜர் கண்ட படி எல்லார் முன்னாடியும் திட்டிட்டார்... அந்த அவமானத்தை என்னால தாங்கிக்க முடியலை' என்றான். அவனின் பதிலை கேட்டு சந்திரன் வியப்பாக நகைத்தவாறே

    'சார்... மேனேஜர் னாலே திட்டிகிட்டு தான் இருப்பாங்க... நான் என் மேனேஜர் கிட்ட டெய்லி திட்டு வாங்குவேன்... அந்த ஆள் கிட்ட திட்டு வாங்கலைன்னா எனக்கு தூக்கமே வராது... வாங்க கேன்டீன் போய் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்...' என்று விவேக்கை சமாதான படுத்தி அந்த அலுவலகத்தின் உணவகத்திற்கு அழைத்து சென்றான்.

    அங்கே அமர்ந்து உணவகத்தின் பணியாளிடம் தனக்கு வேண்டிய சிற்றுண்டிகளை எடுத்து வருமாறு கூறிக் கொண்டிருந்தான் சந்திரன். அப்போது அங்கு ஒரு அலுவலக பணியாள் விவேக்கிடம் வந்து

    'சார்... உங்க அம்மா கிட்டேருந்து உங்களுக்கு போஃன் கால் வந்திருக்கு...' என்றான்.

    இதை கேட்டவுடன் விவேக் கோபமாக

    'நான் உயிரோட இல்ல செத்துட்டேன்னு சொல்லுங்க...' என்று சொன்னான். உடனே சந்திரன் விவேக்கிடம்

    'ஐயோ... சார் ஏன் இவ்வளவு கோபம்?... அதுவும் அம்மா கிட்ட... எனக்கெல்லாம் அம்மா இல்லையேன்னு ரொம்ப வறுத்த பட்டிருக்கேன்... போய் பேசுங்க...' என்றான்.

    விவேக் 'ப்ப்ச்...' என்ற சப்தத்துடன் வேறு பக்கம் திரும்பினான். அவனின் முகபாவனையை பார்த்த சந்திரன் அந்த அலுவலக பணியாளிடம்

    'நான் அவங்க கிட்ட பேசறேன்...' என்று கூறிவிட்டு அங்கிருந்து அந்த அலுவலக பணியாளுடன் சென்றான். தொலைபேசியின் ஒலிக்கடத்தியை ஏந்தி

    'ஹலோ அம்மா...' என்றான்.

    'விவேக்கா?' என்று ஒரு தழுதழுத்த குரல் கேட்டது.

    'இல்லமா... நான் அவர் ப்ரண்ட் சந்திரன்...' - சந்திரன்.

    'ஓ... அவன் எப்படி பா இருக்கான்?... காலைல அவன் என் கூட சண்டை போட்டுட்டு வந்துட்டான்... அதான் எப்படி இருக்கானு கேட்கலாம்னு போஃன் பண்ணினேன்...' - விவேக்கின் தாய்.

    'பரவாயில்ல மா... நார்மலா தான் இருக்காரு... என்ன? உங்க மேல தான் கோபம்... அவ்வளவுதான்... நான் அதை பேசி சரி பண்ணிடறேன்...' - சந்திரன்.

    'அவனை பத்திரமா பாத்துக்கோ பா... அந்த பொண்ணு அவனை விட்டு போனதுலேருந்தே அவன் ரொம்ப சென்சிடிவ் ஆயிட்டான்...' - விவேக்கின் தாய்.

    'யாரந்த பொண்ணு?... என்னாச்சு?... நான் இப்போ தான் அவரோட நட்பா பழக ஆரம்பிச்சிருக்கேன்... எனக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாதுமா...' சந்திரன்.

    'விவேக் எங்களுக்கு ஒரே பையன்... அவன் மேல ரொம்ப அன்பையும் பாசத்தையும் கொட்டி வளத்தோம்... படிப்பெல்லாம் நல்ல படியா முடிச்சு நல்ல வேலை கிடைச்சு அவன் வாழ்க்கை நல்ல படியா போய்கிட்டு இருந்தது... அவனுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வெக்கணும்னு எனக்கு ஆசை... அவனும் இப்போ வேணாம் மா னு தான் சொன்னான்... நான் தான் கேக்கலை... ஒரு நாள் அவனுக்கு பொண்ணு பாக்க ஏற்பாடு பண்ணிருந்தோம்... அவன் வேணாம் எனக்கு பிடிக்கலைனு ரொம்ப அடம்பிடிச்சான்... அவனை கட்டாயப்படுத்தி பொண்ணு பாக்க கூட்டிகிட்டு போனேன்... அவளுக்கு பதினெட்டு வயசு தான்... பாக்க ரொம்ப லட்சணமா அழகா இருந்தா... இப்போ கல்யாணமே வேணாம்னு அடம்புடிச்சவன் அந்த பொண்ணை பாத்தவொடனே மனச மாத்திகிட்டான்... அவனுக்கு அவளை ரொம்ப பிடிச்சிருந்தது... அவளோட வரவு அவனுக்கு நல்லதை குடுக்கும்னு நம்பினோம்... ஆனா கல்யாணம் ஆன மூணாவது நாளே அந்த பொண்ணு அவனை விட்டுட்டு போய்டுவான்னு எதிர் பாக்கலை... பொண்ணு பாக்கும் போதே அந்த பொண்ணு பிடிக்கலைனு சொல்லி இருந்தா நாங்க அவன் கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சிருப்போம்... எல்லா சடங்கும் நடக்கும் போது மௌனமாவே இருந்துட்டு கல்யாணம் நடந்த மூணாவது நாளே அந்த பொண்ணு இப்படி பண்ணிட்டாப் பா.. அந்த சம்பவத்துக்கு முன்னாடி என் பையனை சீறாட்டி பாராட்டின சொந்தகாரங்க எல்லாம் இவனுக்கு ஏதோ குறை இருக்கு அதான் அவ விட்டுட்டு போய்ட்டா ன்ற மாதிரி ஜாடை மாடையா சொல்லிட்டு போறாங்க... எல்லாரோட உண்மையான முகமெல்லாம் இப்போ தான் பா எங்களுக்கு தெரிய வருது... நாங்களும் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் எவ்வளவோ பேசி பாத்தோம்... மொதல்ல நாங்க எப்படியாவது பேசி அவளை அனுப்பி வெக்கிறோம்னு சொன்னவங்க போக போக எங்களை மன்னிச்சிருங்க... எங்க பொண்ணுக்கு இப்போ கல்யாண வாழ்க்கைல இஷ்டம் இல்லனு சொல்லிட்டா... மேற்கொண்டு காட்டாயப்படுத்தினா நான் தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டுறா... அதனால உங்க பையனுக்கு வேற கல்யாணம் பண்ணிடுங்கனு சொல்லிட்டாங்க... நாங்களும் இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் கிடையாதுப்பா... நாங்க வேற நல்ல பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணி வெக்கிறோம்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறான்... இதை பெரிய அவமானமா எடுத்துக்கிட்டு இதனால தான் தனக்கு நிறைய கெட்ட விஷயங்கள் நடக்குதுன்னு நினைச்சுக்கறான்...' - விவேக்கின் தாய்.

    'நீங்க கவலை படாதீங்க மா... நிச்சயமா அவர் நார்மல் ஆவார்... அடுத்த வருஷம் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க மனச திருப்தி படுத்துவார்... இதுக்கு நான் பொறுப்பு... நீங்க கவலை படாம போஃனை வைங்க மா. ' - சந்திரன்.

    'இல்லப்பா... அவனுக்கு வர சின்ன சின்ன கஷ்டத்தையெல்லாம் பெரிசா எடுத்துக்கறான்... அவனுக்கு வர கஷ்டத்துக்கெல்லாம் நானும் அவன் அப்பாவும் தான் காரணம்னு எரிஞ்சு விழறான்... நாங்க பொறுமை இழந்து இன்னிக்கு காலைல அவனை திட்டும் போது நான் உயிரோட இருந்தா தானே பிரச்சனை உங்களுக்கு... நான் இப்போவே போய் சாகறேன் னு சொல்லிட்டு வீட்டை விட்டு போய்ட்டான்... அதான்பா கால் பண்ணி அவனை கொஞ்சம் ஆசுவாச படுத்தலாம்னு நினைச்சேன்... அவனை கொஞ்சம் பேச சொல்லுப்பா... அப்போ தான் எனக்கு திருப்தியா இருக்கும்...' - விவேக்கின் தயார்.

    'சரிங்க மா... லைன்ல இருங்க... நான் போய் விவேக்கை கூட்டிகிட்டு வரேன்...' என்று ஒலிப்பானை மேஜையில் வைத்து விட்டு விவேக்கை அழைத்துவர அலுவலக உணவகத்தினுள் நுழைந்தான். அங்கு ஒரு ஜன்னலின் பக்கம் கூட்டம் கூடி முன்னமுனுத்து கொண்டிருந்தது. அதை பார்த்தவுடன் சில நிமிடங்களுக்கு முன் அந்த அலுவலக மாடி உச்சியிலிருந்து கீழே பார்க்கும்போது வந்த பயம் நினைவிற்கு வந்தது.

    உடனே பதட்டமாக என்னவென்று ஒருவரிடம் விசாரித்தான்.

    'யாரோ ஒருத்தன் நம்ம ஆபிஸ் மாடியிலிருந்து குதிச்சு தற்கொலை பண்ணிகிட்டான்...' என்று கூறியவுடன் சந்திரன் வேகமாக அந்த அலுவலக கட்டிடத்தின் கீழ் தளத்தை அடைந்து அந்த அலுவலகத்தை விட்டு வெளியே சாலைக்கு வந்தான். அங்கு கூடியிருந்த கூட்டத்தை விலக்கி அந்த சாலையின் தரையை பார்த்தான். அங்கே ரத்த வெள்ளத்தில் உயிரற்று மிதந்து கொண்டிருந்தது விவேக்கின் உடல். அதை பார்த்தவுடன் சந்திரனுக்கு, விவேக்கின் தாயிடம்

    நீங்க கவலை படாதீங்க மா... நிச்சயமா அவர் நார்மல் ஆவார்... அடுத்த வருஷம் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க மனச திருப்தி படுத்துவார்... இதுக்கு நான் பொறுப்பு... நீங்க கவலை படாம போஃனை வைங்க மா. என்று கூறியதும்

    ஒரு நாள் உன் மனசை பாதிக்கற சம்பவம் ஒன்னு கண்டிப்பா நடக்கும்... அது அன்பு பாசம் அப்புறம் பிரிவோட வலியை உனக்கு உணர்த்தும்... நிச்சயமா நீ உன் ஐடியாலஜியை மாத்திக்குவ... என்று ராதா கூறியதும் நினைவிற்கு வந்தது. மறுபடி அந்த மாடியின் உச்சியிலிருந்து எட்டி கீழே பார்க்கும் பயம் நினைவிற்கு வந்து அவனின் சொல் செயல் எண்ணங்களின் கருவை உலுக்கி அவனுள் ஒரு அதிர்வை கொடுத்தது. கீழிருந்து அந்த கட்டிடத்தின் உயரத்தை பார்த்தவாறே மயங்கி கீழே விழுந்தான் சந்திரன்.

    மேஜையில் இருந்த ஒலிப்பானிலிருந்து

    'ஹலோ... சந்திரன்... ஹலோ... யாராவது ரிசீவரை எடுத்து பேசுறீங்களா?... நான் என் பையன் விவேக்கோட பேசணும்... ஹலோ... யாராவது ரிசீவரை எடுங்க ப்ளீஸ்...' என்று அந்த தாயின் குரல் கவனிப்பாரற்று ஒலித்துக் கொண்டிருந்தது.

    *****

    09 ஜூன், 2016(35 ஆண்டுகளுக்கு பின்னர்)

    தூக்கம் கலைந்து ஐம்புலன்களும் சுற்றுப் புறத்தில் நடக்கும் இயக்கத்தினை மெதுவாக கிரகிக்கத் தொடங்கியது. சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே என்று சுப்ரபாத பாடல் லேசாக காதில் ஒலிக்க, தன் சுயநினைவு மெதுவாக விழிப்படைந்ததை உணர்ந்தாள் நந்தினி. மனதில் லேசாக ஒரு பயம் கலந்த குழப்பம் வெளிப் பட்டது. சோம்பல் முறித்துவிட்டு கண்களை கசக்கிவிட்டு, இரவு விளக்கின் மங்கிய ஒளியின் உதவியால் கடிகாரத்தின் நேரத்தை பார்த்தாள். மணி காலை 6.30யை காட்டியது. படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து பக்கத்தில் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்கும் ரவியை பார்த்துவிட்டு, மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்து நடந்து அந்த அறையின் கதவை தாழிழித்து திறந்தாள்.

    'ரொம்ப அவசரமா முடிவு எடுத்துட்டேனோ?... எல்லாம் உடனே சட்டுனு முடிஞ்ச மாதிரி இருக்கு?... ' என்று யோசித்துக் கொண்டு நடு கூடத்தை அடைந்த நந்தினியை

    'ஏம்மா பல் தேச்சு முடிச்சிட்டு வாசல்ல போய் கோலம் போட்டுடு.' என்று ரவியின் தாய் வாசுகி கூற, அது சுருக்கென்று ஊசியை போல் நந்தினியின் மனதை குத்தியது. 'நான் படிச்சவ... ஒரு கம்பெனில வேலை பாக்கறேன்... மாசமான சம்பளம் வாங்கறேன்' என்ற எண்ணம் தோன்றி அவளை கோபமுற செய்தது. அதனை தன் முகத்தினில் வெளி காட்டாமல் மெதுவாக தலையை மட்டும் அசைத்து விட்டு சென்றாள்.

    கோலம் போட்டுவிட்டு வீட்டினுள் நுழையும் போது

    'போய்... பால் காய்ச்சிடு... எனக்கு சக்கரை இல்லாத ஒரு காபி' என்று கேட்டாள் நந்தினியின் மாமியார். அப்போது தூக்க கலக்கத்தில் அங்கு வந்த ரவியின் தங்கை சுமதி.

    'நந்தினி... எனக்கு கொஞ்சம் சர்க்கரை தூக்கலா ஒரு காபி' என்று கேட்க, 'அண்ணின்னு மரியாதையே இல்லை' என்று நந்தினியின் கோபம் உச்சத்தை அடைந்தது. இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் குழப்பத்துடன் சில நொடிகள் மௌனமாக நின்றாள்.

    'நந்தினி, என்னமா நிக்கற? போய் சுமதி கேட்டதையும் எடுத்துக்கிட்டு வா.' - வாசுகி.

    'நான் என்ன வேலைக்காரியா?' என்று எண்ணத்தில் உதித்த கேள்வியை வெளிகேட்காமல் மௌனமாய் சமயலறைக்குச் சென்று இருவருக்கும் காபியை கொடுத்தாள்.

    'நந்தினி... இன்னிக்கு மோர் கொழம்பு, வாழைக்காய் பொறியல்...' என்று அன்றைய தினத்திற்கு தேவையான உணவு வகைகளை கூறினாள். ஏதோ சிறையில் அடைப்பட்டதை போல மன உணர்வு அவளுக்கு, ஒரு கட்டாயத்தில் வேலை செய்யும் அடிமை போல சமைக்கத் தொடங்கினாள்.

    அவசரமாக சமைத்து முடித்து விட்டு

    'அம்மா சமைச்சு முடிச்சிட்டேன்... ஆபிசுக்கு டைம் ஆயிடிச்சு... நான் குளிச்சிட்டு வந்துடறேன்.' என்று கூறிவிட்டு குளியலறைக்குச் சென்றாள்.

    குளிக்கும் பொழுது கஷ்டம் தெரியாமல் ஒரு பறவை போல சுதந்திரமாக தன் தாய் தகப்பன் மற்றும் தங்கையோடு வாழ்ந்த காலங்கள் அவள் நினைவில் வந்து சென்றது. அந்த நினைவுகள் கண்ணீராய் சுரந்து அவள் குளிக்கும் நீரோடு கலந்து வடிந்தது. ஒரு கனத்த மனதுடன் அலுவலகத்திற்கு புறப்பட தயாரானாள். அப்போது சமயலறையில் யாரோ கோவமாக கத்தும் சத்தம் கேட்டது. என்னவென்று சமயலறைக்கு ஓடி போய் பார்த்தாள். அங்கே ரவியின் தம்பி அருண் கோபமாக அவன் தாயிடம் கத்திக் கொண்டிருந்தான்.

    'அம்மா... நான் எவளோவாட்டி சொல்லிருக்கேன்... எனக்கு மோர் குழம்பு பிடிக்காதுனு... அப்புறம் ஏன் அதையே பண்றீங்க?... எனக்கு சாப்பாடும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்... நான் ஆபிஸ் கேண்டீனிலியே சாப்டுக்கறேன்' என்று வாசுகியிடம் கத்திவிட்டு நந்தினியை ஒரு பார்வை மெளனமாக பார்த்துவிட்டு அமைதியாய் நின்றான்.

    உடனே வாசுகி நந்தினியிடம் திரும்பி

    'தம்பிக்கு அப்படிதான் கோபம் வரும்... நீ ஒன்னு பண்ணு... அவன் ஆபிஸ் கிளம்பறத்துக்குள்ள நீ நாலு வெண்டைக்காயை அறிஞ்சு போட்டு கம்மியா ஒரு வெண்டைக்காய் குழம்பு வெய்' என்றாள். பொறுமையிழந்த நந்தினி

    'அம்மா... எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆயிடுச்சு... இத மட்டும் நீங்க வெச்சுருங்கமா' என்று கூற, உடனே அருண்

    'அம்மா... நீ ஏன் மா கஷ்டப் படணும்... நான் தான் சொல்றேன்ல ஆபிஸ் கேன்டீன்ல சாப்டுக்கறேன்னு' என்று குரலை உசத்தி கூற,

    'இல்லப்பா... நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல பண்ணிடறேன்' என்றாள் வாசுகி.

    நந்தினியும் அருணிடம்

    'அருண் இன்னிக்கு ஆபிஸ்க்கு டைம் ஆயிடுச்சு அதான்... இல்லனா நானே...' என்று கூறிமுடிப்பதற்குள் அருண் அவளிடமிருந்து பார்வையை திருப்பி வாசுகியிடம்

    'அம்மா... நீ வயசான காலத்துல கஷ்டப்பட வேணாம்... நான் ஆபிஸ் கேண்டீனிலியே சாப்டுக்கறேன்' என்று அழுத்தமாக கூறிவிட்டு சென்றான். வாசுகியும் மௌனமாக நந்தினியை பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் நகர்ந்த்தாள். இப்பொழுது அவர்களின் வருத்தத்திற்கு காரணம் தான் தானோ என்று எண்ணத் தோன்றியது நந்தினிக்கு. செய்வதறியாமல் மிகுந்த மன உளைச்சலோடு வெண்டைக்காயை நறுக்க தொடங்கினாள் நந்தினி.

    அவசரமாக வெண்டைக்காய் குழம்பை சமைத்து கொண்டிருக்கும் வேளையில் சுமதி சமயலறைக்குள் நுழைந்து அங்கிருக்கும் உணவுகளை சுவைக்கத் தொடங்கினாள். லேசாக நந்தினியினுள் கோபம் முளைக்கத் தொடங்கியது.

    'வாழைக்காய் இன்னும் கொஞ்சம் வெந்துருக்கலாம்... ம்ம்ம்ம்... மோர் கொழம்பு கெட்டியாவே இல்லை தண்ணி மாதிரி இருக்கு...' என்று குறைகளை கூறிக் கொண்டிருந்த சுமத்தியினால் மேலும் எரிச்சலடைந்த நந்தினி

    'என்னால அவளோ தான் முடியும் சுமதி... உனக்கு பிடிச்ச மாதிரி வேணும்னா நீயே சமைச்சிக்கோ' என்று சுமதியை பார்த்து கூறிவிட்டு அடுப்பிலிருந்த வெண்டைக்காய் குழம்பில் கவனத்தை செலுத்தினாள். அவளின் வார்த்தைகளினால் அதிர்ச்சியடைந்த சுமதி கண் இமைக்காமல் நந்தினியை சில நொடிகள் மெளனமாக பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

    அவள் சென்றவுடன் நந்தினியின் மனது லேசாக அஞ்சத் தொடங்கியது.

    'பக்குவமா பேசியிருக்கணுமோ... இவ போய் சொல்லி ஏதாவது பிரச்சனை வந்திருமோனு பயம் வேற வருது' என்று தனக்குள் பேசி விட்டு சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு

    ‘நான் எவளோ தான் பொறுமையா இருக்கறது... எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு... நந்தினி, நீ ஒன்னும் தப்பு பண்ணலை... பயப்படாதே... உன்னோட கம்பர்ட்னஸ் தான் ரொம்ப முக்கியம்' என்று தனக்கு தானே தைரியம்மூட்டிக் கொண்டு சமைப்பதில் கவனத்தை செலுத்தினாள்.

    சில நிமிடங்களுக்கு பிறகு சுமதி உள்ளெ வந்து

    'நந்தினி... அம்மா கூப்பிடறாங்க' என்றாள்.

    'சமையல் வேலை பாதியில போயிட்டிருக்கு... முடிச்சிட்டு வரேன்' - நந்தினி.

    'பரவாயில்ல... கேஸை ஆப் பண்ணிட்டு வா.' என்று கூறிவிட்டு சென்றாள்.

    நந்தினி கோபத்துடன் 'என்ன ரொம்ப ஓவரா போயிட்டிருக்கு' என்று அடுப்பை அனைத்து விட்டு வெளியே நடக்கத் தொடங்கினாள்.

    நந்தினி வெளியே வந்தவுடன் சுமதி வாசுகியை லேசாக இடித்து

    'அம்மா... அவ வந்துட்டா' என்று சொன்னாள்.

    மனதை தைரிய படுத்திக் கொண்டு அவர்களை நெருங்கினாள் நந்தினி.

    'கல்யாணம் ஆகி பதினைஞ்சு நாள் தான் ஆயிருக்கு... இவளோ நாள் கோயில் குலம்னு ஊரெல்லாம் சுத்திட்டு இன்னிலேருந்து எங்க வீட்ல வாழ்க்கையை தொடங்க போற... இன்னிக்கே உன் நாத்தனார் கிட்ட மரியாதை இல்லாம இப்படி நடந்துக்கலாமா?... ரொம்ப வறுத்த படறா மா...' - வாசுகி.

    'நானும் அதே தான்மா கேக்கறேன்... இன்னிலேருந்து தான் என் வாழ்க்கையை உங்க வீட்ல ஆரம்பிக்க போறேன்... வீட்டுக்கு வந்த பொண்ணை இப்படி தான் வேலை வாங்குவாங்களா?... அதே மாதிரி அண்ணி ன்ற மரியாதையை நாத்தனார் கொடுத்தாங்கனா நிச்சயமா அவங்க அவங்களோட மரியாதையை பத்தி கவலை பட வேண்டியதில்லை' - நந்தினி.

    வாசுகி சில நொடிகள் உக்கிரமாக நந்தினியை பார்க்க, நந்தினியும் சில நொடிகள் தன் பார்வையில் தற்காப்புக்காக திமிரை வெளிப் படுத்தினாள். இவர்கள் இருவரையும் தடுமாறியவாறு மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் சுமதி.

    சில நொடிகளுக்கு பிறகு வாசுகி மறுப்பது போல தலையை அசைத்துக் விட்டு

    'தப்புமா... இந்த திமிரு இருக்கக் கூடாது' என்றாள்.

    'இந்த திமிரு தான் மா என்னோட மனச பாதுகாக்கற இரும்பு கதவு... அது என் மேல அன்பு காட்டறவங்களுக்கு மட்டும் தான் திறக்கும்' - நந்தினி.

    இவர்களின் வாதத்தை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த ரவியின் தந்தை தேசிகன், இவர்களின் விவாதம் சூடு பிடிப்பதற்குள் அவர்களிடம் வந்து

    'சரி ரெண்டு பேரும் நிறுத்துங்க' என்று பொதுவாக கூறிவிட்டு,

    Enjoying the preview?
    Page 1 of 1