Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - October 2018
Kanaiyazhi - October 2018
Kanaiyazhi - October 2018
Ebook224 pages1 hour

Kanaiyazhi - October 2018

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

October month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109503517
Kanaiyazhi - October 2018

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - October 2018

Related ebooks

Reviews for Kanaiyazhi - October 2018

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - October 2018 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, அக்டோபர் 2018

    மலர்: 53 இதழ்: 07 அக்டோபர் 2018

    Kanaiyazhi October 2018

    Malar: 53 Idhazh: 07 October 2018

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி, அக்டோபர் 2018

    தலையங்கம் - ம.ரா.

    ஒருநாள் நீங்கள் உணர்வீர்கள்!

    அக்டோபர் 2

    காந்தி பிறந்த நாள்.

    விடுதலையின் போது

    இந்தியா துண்டாடப்பட்டது

    பாகிஸ்தான் உருவானது.

    பிரிந்த பாகிஸ்தானுக்கு

    இந்தியா தர ஒப்புக்கொண்ட

    55 கோடி ரூபாயில் தொடங்கியது

    காஷ்மீர் சூதாட்டம்!

    முதலில் பணம் கேட்டது பாகிஸ்தான்.

    முதலில் காஷ்மீர் என்றார் படேல்.

    ஒப்புக்கொண்ட பணத்தைக்

    கொடுக்கச் சொல்லி

    மகாத்மா காந்தி

    உண்ணாவிரதம் அறிவித்ததை

    இந்து ராஷ்ட்ரா பத்திரிகை அலுவலக

    டெலிபிரிண்டரில் பார்த்துக் கொண்டிருந்த

    பத்திரிகை ஆசிரியர் கோட்சே

    காந்தியின் கருத்துச் சுதந்திரத்திற்கும்

    இயற்கை மரணத்திற்கும்

    முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தார்.

    ஜனவரி 30, 1948 இல் நடந்த

    துப்பாக்கி முழக்கம்

    காந்தியின் கருத்துச் சுதந்திரத்தையும்

    சேர்த்தே பறித்தது.

    கத்தியின்றி இரத்தமின்றி

    வாங்கிய சுதந்திரத்தில்

    கருத்துச் சுதந்திரத்துக்காகக்

    காந்தியின் இரத்தம்

    இப்போதும்

    துப்பாக்கி முழக்கத்தில்

    காஷ்மீர் உரிமை!

    துப்பாக்கி முழக்கம்

    தொலைவது எப்போது?

    விழிப்புணர்வுக்குத் துண்டறிக்கையா

    தீவிரவாதமென சிறைச்சாலை!

    அரசியலை ஐ.நா. வில் பேசுகிறாரா

    திருமுருகனை விரட்டிப் பிடிக்க

    பெங்களூருக்குக் காவல்துறை!

    சோபியாவின் கருத்துரிமைக்குக்

    காவல்துறையின் வாய்ப்பூட்டு!

    மாணிக்கவாசகர் பற்றி எழுதினால்

    தொல்லியல் அறிஞர்

    பத்மாவதிக்கு மிரட்டல்!

    சைவம் பற்றிப் பேசினால்

    சென்னைப் பல்கலைக்கழக

    சைவ சித்தாந்தத் துறைப் பேராசிரியர்

    நல்லூர் சரவணனுக்குக் கொலை மிரட்டல்!

    ஆனால்

    பெரியார் சிலைக்கும் தமிழுணர்வுக்கும்

    பங்கம் விளைவிப்பவர்களுக்குத்

    துப்பாக்கிப் படைசூழப் பாதுகாப்பு!

    தூத்துக்குடியில் 1948 இல்

    மாகாண மாநாட்டில் பெரியாரின் பேச்சு இது-

    "சுயராஜ்ஜிய ஆட்சியில்

    கள்ள மார்க்கெட் கொள்ளைக்கும்

    இலஞ்சத்திற்கு ஒரு அளவே காணோம்.

    பணத்திற்கு மிஞ்சிய மோகினியைக்

    காண முடியவில்லையே.

    எதையும் பணம் கொடுத்து

    சாதித்துக் கொள்ள முடிகிறது.

    மந்திரிகளே பணக்காரன் காலடியில்

    விழுந்து கிடக்கிறார்கள்.

    பணக்கார முதலாளிகளுக்குச்

    சாதகமாகத் தொழிலாளிகளுக்குக்

    கூடுமான அளவுக்குத் தொல்லை கொடுக்கிறார்கள்.

    இந்தக் குறைபாடுகளை

    எடுத்துக் கூறுவது கூட

    குற்றமாக கருதப்படும் ஆட்சி என்று

    ஒன்று இருக்க வேண்டுமா?"

    ஆதரித்துச் சொல்லும் உரிமை மட்டும்

    அனைவருக்கும் உண்டு என்பது

    கருத்துச் சுதந்திரத்தைக்

    கழுவில் ஏற்றுவதாகும்.

    இந்தியாவைப் பாதுகாப்பதாகச்

    சொல்லி வாங்கும்

    இராணுவத் தளவாட ஊழல்களில்

    காந்தியின் தேசம்

    பொசுங்கிக் கொண்டிருக்கிறது.

    மருத்துவக் காப்பீடு எனும்

    மடைமாற்றம் கடந்தும்

    எட்டுவழிச் சாலை முதல்

    எரிகிற மின்சாரம் வரை

    ஊழல் காப்பீட்டில் தமிழகம்!

    ஆளும் கட்சி செய்யும்

    சமகாலக் குற்றத்திற்கு

    ஆண்ட கட்சியின்

    கடந்த காலத்தைப் பதிலாக்குகிறார்கள்!

    கட்சிகள் கேட்டால்

    கடந்த காலத்தைப் பதிலாக்கலாம்.

    மக்கள் கேட்கிறார்கள்

    பதில் சொல்லுங்கள்!

    பதில் சொல்ல முடியாத நீங்கள்

    கேட்க முடியாமல் மக்களை

    ஆக்காதீர்கள்!

    விடுதலை இந்தியாவில்

    ஆட்சியைப் பிடிக்கவும்

    தக்கவைத்துக் கொள்ளவும்

    தேர்தல் நேரங்களில்

    எல்லைகளில் துப்பாக்கி முழக்கம்!

    நாட்டுக்குள் ஊழல் முழக்கம்

    அன்று போபர்ஸ்! இன்று இரபேல்!

    இரபேல் என்ற சொல்லுக்கு

    இராணுவத் துப்பாக்கிகளின்

    தொடர் முழக்கம் என்று பொருளாம்!

    கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான

    துப்பாக்கி முழக்கம்

    தொலைவது எப்போது?

    காந்தியைச் சுட்ட கோட்சே

    தில்லி காவல்நிலையத்தில் இருந்தபோது

    கம்பிகளுக்கு வெளியே

    காந்தியின் மகன் -

    இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளர்

    தேவதாஸ் காந்தி எட்டிப்பார்க்கிறார்

    அடையாளம் கண்டு கோட்சே

    பேச அழைக்கிறார்; அவரும் இசைகிறார்.

    காவல்துறை அனுமதிக்கவில்லை.

    சிறையில் இருக்கும் கோட்சேவுக்கு

    காந்தியின் இன்னொரு மகன்

    இராமதாஸ் காந்தி கடிதம் எழுதுகிறார்,

    "ஒருநாள் அழியப்போகும் உடலைத்தான்

    உங்களால் அழிக்க முடிந்தது

    ஒருநாள் நீங்கள் உணர்வீர்கள்!"

    கருத்துச் சுதந்திரம் என்பதில்

    கருத்தில் சுதந்திரம் இருக்கட்டும்

    கருத்தைச் சொல்லும்

    சுதந்திரமும் இருக்கட்டும்.

    சொல்லும் உரிமையைப்

    பறிக்க நினைக்கலாம்!

    ஆனால்

    சிந்திக்கும் உரிமையைத் தடுக்க முடியாது

    ஒருநாள் நீங்கள் உணர்வீர்கள்!

    அன்புடன்,

    ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - மு. இராமசாமி

    கவிதை - தேவரசிகன்

    கவிதை - கவிஜி

    சிறுகதை - சக்தி

    கவிதை - மு.முகமதுசிக்கந்தர்

    கட்டுரை - முனைவர் நா.சந்திரசேகரன்

    சிறுகதை - ஆர். வத்ஸலா

    கவிதை - தமிழ் உதயா

    நேர்காணல்- சூழலியலாளர் மாதவ் காட்கில் தமிழில்: பாரதிராஜா

    குறுநாவல் -அகரமுதல்வன்

    கட்டுரை - நாஞ்சில் நாடன்

    கவிதை - பிரபாகரன் ஈசுவரமூர்த்தி

    சிறுகதை - பத்மநாபன்

    கவிதை - பாவலர். கருமலைப் பழம் நீ

    கட்டுரை - ராம் முரளி

    எதிர்வினை - பேரா. கனகா அஜிதாதாஸ், கவிஞர் கமலக்குமார் Er. R. பானுகுமார் மற்றும் கணையாழி கட்டுரை மறுப்புக் குழு

    கட்டுரை - வெள் உவன்

    ஏன் எழுதினேன்? - நாச்சியாள் சுகந்தி

    தங்கேஸ் கவிதைகள்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கட்டுரை - மு. இராமசாமி

    மேற்குத் தொடர்ச்சி மலை

    மலைக்காட்டு மண்ணின் வாழ்க்கையைச் சிதறு தேங்காயாய்க் கருத்தினில் நிறைத்து திசைமாறும் அரசியலை அடிமனதில் பேசும் திரைப்படம்!

    1973இல் மழையும் குளிருமாய் ஒன்றுடன் ஒன்று அடங்க மறுத்து, உசுருகளை வாட்டி வதக்கிக் கிடந்த ஓர் உறைபனிக்காலத்தில், நானும் என் முதுகலை வகுப்பு நண்பர் அ.ச. இராமையாவும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ப் பகுதியில், மூணாறுக்கருகில் வாழ்ந்துவந்த முதுவப் பழங்குடி மக்களுடன் தங்கி, அவர்களைப் பற்றி அறிந்துகொள்வதற்காகவும், மலைக்குமேல், அதற்கருகிலிருந்த எட் டிமலை, குண்டுமலைத் தேயிலைத் தோட்டங்களில் நெல்லை மாவட்டத்துச் சங்கரன்கோயில் வட்டத்திலிருந்து புலம் பெயர்ந்து, அத்தேயிலைத் தோட்டங்களில் தோட்டத் தொழிலாளிகளாய் உரு மாறியிருந்த, நெல்லைப் பகுதி மக்களின் வழக்காறுகளைப் பதிவுசெய்யும் நோக்குடனும் அந்தப் பகுதிக்குப் பயணப்பட்டிருந்தோம். நண்பர் அ.ச. இராமையாவின் முன்னெழுத்து ‘அ’ என்பது, சங்கரன் கோயில் வட்டத்தில் தேவர்குளத்தை ஒட்டியிருக்கிற அச்சம்பட்டி என்கிற கிராமத்தைக் குறிப்பது! அந்த ஊர்க்காரர்களில் பெரும்பாலோர், பிழைப்பிற்காய்ப் புலம்பெயர்ந்த குண்டுமலைத் தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளர்கள் என்பதும், நண்பர் அ.ச. இராமையாவின் சகோதரர், அச்சம்பட்டித் தரைக்காட்டிலிருந்து முதுவர்கள் வாழும் மலைக்காடுகளுக்குத் துணி வியாபாரம் செய்து அங்குள்ளவர்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதும் மட்டுமே, எங்களுக்கு அங்கு போவதற்கான போதுமான அடையாளத் துருப்புகளாய் அன்று விளங்கின. இப்பொழுது 2018 செப்டம் பர் 24 இல்(31-12-2015 அன்றே இத்திரைப்படம் தணிக்கையாகியிருக்கிறது) லெனின் பாரதியின் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தைத் தேனி ஈஸ்வரின் கரம் பிடித்து, அவர் காட்டும் திசையெங்கும் பார்க்கையில், 45 ஆண்டுகளுக்குப்பின் அப்பயணத்தை விலகி நின்று வாசிக்கிற இன்னொரு புது அனுபவமாய், அந்தப் பயணம் என் நினைவுகளின் விளிம்புகளைப் பிடித்துக் கரையேறத் தொடங்குகின்றது.

    உடுமலைப்பேட்டையிலிருந்து விடிகாலை 3 மணியளவில் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் ஒரு லாரியில் ‘மங்கி டாப்’பில் அமர்ந்தபடி, மழைச் சாரலுக்கும் குளிருக்கும் பத்தும் பத்தாததுமாய் ஒரு பக்கத் தோதாக வண்டியில் கிடந்த ஒரு முரட்டுத் துணியை உடம்பெங்கும் சுற்றிக் கொண்டு பயணப்பட்டது இப்பொழுதும் பசுமையாய் இருக்கிறது. முதுவப் பழங்குடி மக்கள் தரும் தேன், திணை மாவை நம்பியே அங்குச் சென்றிருந்த எங்களுக்கு ஏமாற்றமளித்தது, அவர்கள் அடிவாரத்தில் கூலி வேலை செய்து திரும்பிவந்தால்தான் அவர்களுக்கே அன்றைக்கு உணவு என்பது! அது, 22 வயது இளைஞர்களாய்த் தரைக்காட்டிலிருந்து மலைக்காட்டிற்குக் கிளம்பிய எங்களின் அன்றைய அனுபவம்! அந்த அனுபவத்தின் இன்னொரு காட்சி விரிவாய், இத்தனை ஆண்டுகளுக்குப் பின், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படம், உலகமய அரசியலின் ஊடறுத்தலில், அம் மண்ணின் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதை யதார்த்தத் தளத்தில் காட்டுகிறது. நிலம் பற்றிய அவர்களின் கனவுகள் அவர்களின் கையைவிட்டு விதிவசத்தால் கழறுவதையும், சதிவசத்தால் முதலாளிமாரின் ஐந்து ஏக்கர் எஸ்டேட் நிலங்கள் பினாமிகளின் கைகளுக்குப் பகிரப்பட்டுச் சங்கத் தொழிலாளர்கள் உரிமையற்று விரட்டப்படுவதையும், மொத்த வளங்களும் கார்ப்பரேட் கையில் காவு கொடுக்கப்பட்டு மக்கள் அடிவாரத்திற்கு அப்புறப்படுத்தப்படுவதையும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ பேசுகிறது. இன்றைக்கும் அவர்கள் நிலமற்றுத் துடைத்து விரட்டப்படுகிறார்கள் என்பதை, திரைப்படத்தின் இறுதியில், மலையின் மேலிருந்து கீழ்நோக்கி வந்து ‘சுமைகார’ ரங்கசாமியைச் ‘செக்யூரிட்டி’ ரங்கசாமியாக இறக்கிவிட்டு நகரும் அந்தக் காரில் நிரம்பி வழியும் அந்த மலைக்காட்டு மக்கள் கூட்டம் எளிதில் உணர்த்துகிறது.

    நினைத்துப் பார்க்கையில், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தில் திருமண அழைப்பிதழ் வைக்கக் கிளம்பும் பாக்கியத்தம்மாளின் உறவினர், நிலக்கோட்டைக்காரர் கதையைப்போலவே, என் கதையும், மலைக்காட்டில் நான் நேருக்குநேர் சந்தித்திராத யானை பற்றிய பீதியுடனேயே அன்றைக்குக் கழிந்து, என் நடையின் துரிதத்தை மட்டுப்படுத்தியிருந்தது. குண்டுமலை எஸ்டேட் செல்லும் பாதையின் காலை நேரத்துத் தூறலின் அமைதியில் உறைந்த தனிமை, மரங்களின் மழை வருடலில் கவிந்திருந்த இருளின் சூழல்போல் என்னைப் பயப்படுத்திய அந்த அமைதி, யானையின் படிமமாய் மனசுக்குள் தொடர்ந்து பிளீறிட்டுக் கொண்டே என்னைத் துரத்தியது. அசாதாரண அந்தக் காலை அமைதியின் இதத்தையும், தொட்டுவிடும் தூரத்தில் வானம் மழைத் தூறல்களாய்ச் சிலிர்ப்பிக் குளிர்விக்கிற அழகையும் தும்பிக்கையின்

    Enjoying the preview?
    Page 1 of 1