Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - April 2023
Kanaiyazhi - April 2023
Kanaiyazhi - April 2023
Ebook175 pages56 minutes

Kanaiyazhi - April 2023

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

April 2023 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580109509762
Kanaiyazhi - April 2023

Read more from Kanaiyazhi

Related to Kanaiyazhi - April 2023

Related ebooks

Reviews for Kanaiyazhi - April 2023

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - April 2023 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி பிப்ரவரி 2023

    மலர்: 58 இதழ்: 01 ஏப்ரல் 2023

    Kanaiyazhi February 2023

    Malar: 58 Idhazh: 01 April 2023

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    A person wearing glasses Description automatically generated with medium confidence
    வீட்டுக்கு அனுப்ப வேண்டும்தானே!

    பல்லைப் பிடுங்கிய

    காவல் அதிகாரியைப்

    பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்

    தமிழக முதல்வர்!

    காட்டுமிராண்டிக் கால

    காவல் நடவடிக்கை கண்டிக்கப்பட்டிருக்கிறது!

    பல் என்பது உறுப்பு மட்டும் இல்லை

    பலம்! அதிகாரம்!

    கடித்தால் கோபம்! காட்டினால் பயம்!

    பல்லைப் பிடுங்குதல் எதிரியைப்

    பலமிழக்கச் செய்யும்

    பயத்தின் வெளிப்பாடு!

    மனித உரிமையை மறுக்கும்

    அதிகார ஆணவம்!

    தயிர் வழியாகவும்

    தமிழ் உரிமையைப்

    பறிக்க நினைக்கும் காலத்தில்

    தமிழ்நாடு முதலமைச்சர்

    ஒரு கோடிப் பெண்களுக்கு

    உரிமைத் தொகை அறிவித்திருக்கிறார்!

    ஆண் என்றால் வரவு

    பெண் என்றால் செலவாம்!

    திருமணம் எல்லாம்

    சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக

    நம்புகிறவர்கள்

    வரதட்சிணையை மட்டும்

    பூமியில் நிச்சயிக்கிறார்கள்!

    பெண்கள் முறையிடப் போனால்

    எல்லா மதத்திலும்

    அதிகாரக் கடவுள்கள் எல்லாம்

    ஆண்களாகவே இருக்கிறார்கள்!

    எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்

    இறக்காமலேயே சொர்க்கத்துக்குப் போக!

    பெண்கள்!

    சொல்வதைக் கேள் என்று

    சொல்லிச் சொல்லியே

    சுதந்திரம் பறிக்கப்பட்டவர்கள்!

    குருகுலத்தில் கூட

    கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்கள்!

    ஈன்று புறம் தருதல் மட்டுமே

    கடன் என வைக்கப்பட்டவர்கள்!

    சாதிக்கு மதத்திற்கெல்லாம்

    உரிமை இருக்கிற நாட்டில்

    மற்றவர்களைப் போல

    உயிர் வாழவும் மகிழ்ச்சியை நாடவும்

    தனிமனித உரிமைக்குப்

    போராடுகிறார்கள் பெண்கள்!

    தனியாளாய் நின்று

    குழந்தைகளை வளர்க்க

    ஆண்களுக்கு முடிவதில்லை!

    கணவனை இழந்தபின்பும்

    குழந்தைகளைக் கரை சேர்க்கிறது

    பெண்களின் வைராக்கியம்!

    அதனால்தான்

    வள்ளுவர் அவர்களை

    வாழ்க்கைத் துணை நலம் என்றார்!

    தன்னைக் காத்துக் கொள்வதோடு

    தன் கணவனையும் பாதுகாப்பது

    மனைவியின் கடமை என்று

    சொல்கிறார் திருவள்ளுவர்!

    சதுரங்க ஆட்டத்திலும்

    அரசனைக் காப்பாற்றவும்

    அரசனை விடவும்

    ஆற்றல் கொண்டிருப்பது இராணிதான்!

    ஆனால் வாழ்க்கையில்

    ஆடு என்றால் கிடா

    கோழி என்றால் சேவல் என்று

    வேண்டுதலுக்காக வெட்டப்படும்

    விலங்குகள் பறவைகள் எல்லாம்

    ஆண் பாலாக இருக்கின்றன.

    ஆனால் மனிதர்களில் மட்டும்

    கொல்லப்படுகிறவர்கள் பெண் சிசுக்கள்!

    ஒன்றிய அரசின் தகவல் அடிப்படையில்

    ஓர் ஆய்வறிக்கை (Pew research Centre)

    புள்ளிவிவரம் சொல்கிறது

    2000 முதல் 2019 வரையில்

    90 இலட்சம் பெண்கள்

    கொல்லப்பட்டிருக்கிறார்களாம்.

    இந்திய மக்கள் தொகையில்

    80% இருக்கும் இந்துக்களில்

    கொல்லப்பட்ட பெண்களில்

    இந்துப் பெண்கள் 89%

    மக்கள் தொகையில் 14% இருக்கும்

    இசுலாமியர்களில்

    கொல்லப்பட்ட பெண்களில்

    இசுலாமியப் பெண்கள் 6.6%

    இயல்பான ஆண் பெண் விகிதம்

    100 பெண்களுக்கு

    103 முதல் 107 ஆண்கள் வரையாம்.

    100 பெண்களுக்கு ஆண்கள்

    உத்தரப் பிரதேசத்தில் 111

    குஜராத்தில் 112; மகாராட்டிரத்தில் 113.

    தமிழ்நாட்டில் 1981-91 இல் பெண்களைவிட

    ஆண்கள் சதவீத அதிகம் 2.03.

    1991-2001 இல்

    ஆண்களின் சதவீத அதிகம் 0.66

    என்று குறைந்திருக்கிறது

    ஆனால் குஜராத்தில் இதே காலகட்டத்தில்

    2.08 ஆக இருந்த சதவீத அதிகம்

    5.01 ஆக உயர்ந்திருக்கிறது.

    ஆண்களின் சதவீதம் அதிகம் என்பது

    பெண் கொலைகள்

    கூடியிருப்பதற்கான அடையாளமாம்.

    இப்படிக் காலம் காலமாக

    உரிமை மறுக்கப்பட்ட பெண்களுக்கு

    உரிமைத் தொகை வழங்கி இருக்கிறார்

    தமிழ்நாடு முதல்வர்!

    இவ்வளவு காலம்

    சமுதாயம் வழங்காமல் விட்ட

    உரிமைக்கான தொகை!

    அதனால்

    தானம், இலவசம், அன்பளிப்பு

    என்றெல்லாம் கூறாமல்

    உரிமைத் தொகை என்று

    முதல்வர் சொன்னதில்

    பெருமைப்பட்டிருக்கிறது

    பெண்களின் பெருமிதம்!

    விசாரணை நடக்கும் போதே

    பல்லைப் பிடுங்கி இருக்கிறார்

    அம்பா சமுத்திரக் காவல் அதிகாரி!

    அவசரம் அவசரமாகப்

    பிடுங்கப்பட்டிருக்கிறது

    ஜனநாயக உரிமை

    ராகுல் காந்தியிடமிருந்து!

    பாராட்டுவோம்!

    மனித உரிமையை மறுத்த அதிகாரியை

    வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்

    தமிழக முதல்வர்!

    ஆம்!

    மற்றவர் உரிமைகளைப்

    பறிக்கத் துடிப்பவர்களை

    வீட்டுக்கு அனுப்ப வேண்டும்தானே!

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - மு. இராமசுவாமி

    கவிதை - ஆர். வத்ஸலா

    சிறுகதை - தேவகி கருணாகரன்

    கவிதை - ந.சிவநேசன்

    கட்டுரை - கவிதைக்காரன் இளங்கோ

    சிறுகதை - வாசுதேவன் அருணாசலம்

    கவிதை - ரகுநாத் வ

    கட்டுரை - சா. தேவதாஸ்

    கவிதை - நிர்மலாகணேஷ்

    சிறுகதை - சந்திரகிருஷ்ணன்

    கவிதை - ப.காளிமுத்து

    கவிதை - செ.புனிதஜோதி

    கவிதை - கவிஜி

    கட்டுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    கடைசிப் பக்கம் - மரன்

    ***

    கட்டுரை - மு. இராமசுவாமி

    மு ராமசாமி.jpg

    ‘கிடுகு-சங்கிகளின் கூட்டம்’- கைகாட்டும்

    வெவகாரமான அரசியலும்!

    ‘அயோத்தி’ -கைபிடித்து அழைத்துச்

    சொல்லும் விவரமான அரசியலும்!

    மார்ச் 1, 2023-இல், தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் 70-ஆவது பிறந்த நாள் விழாவில், பீகாரின் துணை முதல்வர் திரு தேஜஸ்வி யாதவ் அவர்கள் கலந்துகொண்டு, சமூக நீதியில் பீடுநடை போடும் தமிழ்நாடு பாசிச எதிர்ப்பில், இனி இந்தியாவிற்கே வழிகாட்ட வேண்டும் என்கிற பொருளில் பேசிச் சென்றதன் சதிவினையாக, 2023 மார்ச் 3-5 தேதிகளில், பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் துண்டாடப்படுகின்றனர் என்கிற மனிதத்துவத்தைப் பிளவுபடுத்தும் பிளேடுபக்கிரி வதந்தியை இந்தியாவெங்கும் பரப்பி, கலவரத்தைத் தமிழ்நாட்டிற்குள்ளும் தமிழ்நாட்டிற்கு வெளியிலும் கால்கோள் நடத்தக் கணக்கிட்டிருந்த ‘சாவர்க்கர்-கோல்வால்க’ரின் குடிவாரிசு அகோரிகளின் சதித்திட்டம், தழிழ்நாடு அரசின் துரிதச் செயற்பாட்டினால் அம்பலமாகி, சங்கிகள் ‘எனக்கெதுவும் தெரியாது’ என்கிற பல்லவியையே, திரும்பிய பக்கமெங்கும் சுருதி பிசகாமல் பாடி, வாயைப் பிளந்திருந்த அதே மார்ச் 5-ஆம் நாளில்தான், ‘கிடுகு-சங்கிகளின் கூட்டம்’ என்கிற திரைப்படமும் யூ-டியுப்பில் வெளிவந்திருந்தது. இந்தியத் தேசியம் என்பதற்கும் இந்துத் தேசியம் என்பதற்கும் இடைவெளியே இல்லை என்பதாய் நம்பவைக்கப்பட்டிருக்கிற-இந்து மத அடிப்படை வாதத்தில் கால் பதித்திருக்கிற-இந்து சமய அறநிலையத் துறையைக் கபளீகரம் பண்ணத் துடிக்கிற-ஒரு சங்பரிவாரக் கூட்டமானது, அரசு அதிகாரிகளின் உதவியுடன், மக்களைப் பிளவுபடுத்தும் இந்தக் கருத்துருவிற்கு எதிர்ச் சித்தாந்தக் கருத்தியலைத் தன் கவச குண்டலமாய்க் கொண்டிருக்கிற-இந்துசமய அறநிலையத்துறை அரசின் கீழியங்குவதே நியாயமானது என்று வாதிடுகிற-சமநீதி, சமூகநீதி பேசுகிற-பொதுவுடைமை, திராவிடம், இன்னும் இடதுசாரித் தமிழ்த் தேசியச் சிந்தனை முகாம்களைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்துப் பழியெடுப்பதுதான், 25-11-2022-இல் தணிக்கைக் குழு ‘U/A’ சான்று கொடுத்திருக்கிற, ‘கிடுகு-சங்கிகளின் கூட்டம்’ (KIDUGU-Sangikalin Kottam) திரைப்படத்தின் கதை! முழுக்க முழுக்கச் சங்கிகள், மனிதாபிமானமற்ற மனுதரும-இந்துத்துவ அரசியலைப் பேசிக் ‘கொட்டம்’ அடிக்கிற–காந்தியைக் கொன்ற கோட்சேவின் பெயரை, முதல் இந்துத் தீவிரவாதி எனும் அடையுடன், தன் பெயராய்ச் சொல்லி மகிழ்கிற-நவீன காளாமுகர்களைப் பற்றிய ஒரு படம்! மிகமிக ஆபத்தான ஒரு காலகட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்தத் திரைப்படமும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டில், 2025-இல், இந்தியாவை, இந்து ராஷ்ட்ரமாக அறிவிப்பதற்கேதுவான முன்தயாரிப்பிற்காக, 2024 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தே, பழிபாவத்திற்கு அஞ்சாத அவர்களின் ஒவ்வொரு கோயபல்ஸ் குழிபறிக்கும் நடவடிக்கையும், அவர்களின் இலக்கை நோக்கியே நகர்ந்து வருகிறது என்பது அவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டிலிருந்தும் புரிந்துகொள்ள முடிகிறது. இதை, சனநாயக மக்கள் சக்திகள்-மக்கள் மேன்மையைக் கருதியே உழைக்கிற நேசசக்திகள் உணராமல் போனால்-கருத்தியல் எதிர்நடவடிக்கையில் இணக்கமாகத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாது தவிர்த்தால்-மீள முடியாத ஆபத்தை நம் தலையிலே நாமே தூற்றிக் கொள்வது போலத்தான் அமையும்! முசோலினி, ஹிட்லரின் பாசிச நடவடிக்கைகளுக்கு, நாம் நேரிடைச் சாட்சியர்களாகிப் போவோம் என்பதன்றி வேறில்லை!

    இந்தப் படம், திரையரங்கில் வெளிவராததால், மக்கள் பார்ப்பதற்கு வாய்ப்பில்லையென்றும், நாம் வேறு இதை விளம்பரப்படுத்திப் பெரிதுபடுத்தி விடவேண்டாம் என்றும் ஒதுங்கிப் போனால், இது ஒவ்வொருவர் கைக்குள்ளேயும், யூ-டியுப் வழி கெட்ட கொழுப்பாய்க் கலந்துபோய், இதயத்திற்குக் கேடு செய்யக்கூடியது-இலவசப் பொய்களால் மனச்சலவை செய்துகொண்டிருக்கக்கூடியது- என்கிற உண்மையை எவரும் மறுத்துவிட முடியாது.

    Enjoying the preview?
    Page 1 of 1