Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Madha Sirasetham
Madha Sirasetham
Madha Sirasetham
Ebook293 pages1 hour

Madha Sirasetham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மயிலிறகுக்குள் சுடு நெருப்பு.

மைமகள் சுடுநெருப்பாய்த் தன்னை உருமாற்றிக் கொள்ள எண்ணம் காட்டும் அணுப்பாய்ச்சல் மதச் சிரசேதம்.

தட்டாம் பூச்சியைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு, இறக்கை ஒவ்வொன்றாகப் பிய்த்து துன்புறுத்தி இன்பம் காண்பது போல, மதம் இன்று சிலர் கைகளின் கொடூர விளையாட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

சமுதாயத்தின் குறியீட்டில் நலமானவை பதிவாக வேண்டும் என்ற எண்ணத்தில் மனிதன் கண்ட மதங்கள் இன்று மேனி தொலைத்து, மெய் தொலைத்து, சீழ்ப்பிடித்து கலவர பீதிகளின் பக்கங்களாக மாறி நிற்கின்றன. புரட்சி விதைகளை அறநெறியில் சுமந்த மதங்கள் தன் இலக்கைத் தாண்டி குறுக்கு வழிப் புதருக்குள் சிக்கிக் கொண்டன.

வில்லிலிருந்து கிளம்பிய அம்பு, குறி தவறி அப்பாவியின் நெஞ்சைத் துளைத்தது போல, மதத்தின் ஒவ்வொரு அசைவுகளும் விரும்பத்தகாத விரியன் பாம்புகளாக உள்ளன.

நெருப்பு பிளம்பென சூட்டில் மிதந்து கொண்டிருந்த புவிப் பந்து இயற்கையின் ஒவ்வொரு முத்தத்திலும் தன்னைத் தொலைத்து குளிர்ச்சிக்குள் முகம் புதைத்துக் கொண்டன.

இயற்கைக் காதலியின் முத்தத்தில் குளிர் நிலை அடைந்த புவிக் காதலன் இறையை மிஞ்சிட நிலம் எனும் உருவகம் கண்டான். பெளதீகக் காதலில் நிலம் மனிதன் வாழும் வீடானது.

நிலத்தில் உயிரினங்களின் தோற்றம் மனிதனின் பரிமாணம் போன்றவை விரிவாகச் சொல்ல மதச் சிரச்சேதம் களம் அல்ல. பரிமாணப்பட்டோ, படைக்கப்பட்டோ மனித இனம் மண்ணில் முத்திரையானது. அதுவும் அரச முத்திரை.

மனித இனத்தின் வளர்ச்சிப் பரிமாணத்தில் மதமும், சமுதாயமும் பெரும் ஆளுமையைத் தனதாக்கிக் கொண்டன.

மனிதனின் பயத்தில் தொடங்கிய மதம் இன்று மனிதனுக்கு அச்சமாகவே மாறி நிற்கிறது. பூவிடம் தேனை அருந்தி எழில் நடனம் புரியும் வண்டினம் போல, மனிதனின் நம்பிக்கைத் தேனை உறிஞ்சி எழில் நடனம் போடுகின்ற மதங்கள், அகிலத்தின் மாற்றச் சக்கரத்தில் எழில் என்பதைத் தொலைத்து கொடூரம் என்ற நிலையில் முகம் பதித்து விட்டன. இனி மதச் சிரச்சேதம்தான் புதுமை சிந்தனைக்குள் மதத்தை இழுத்து வரும்.

இறையியல் எனும் தத்துவக் கோட்பாட்டில் அன்பைத்தான் முதன்மைச் சின்னமாக மதங்கள் கொண்டு வந்தன. அன்பு சிவனாகவும், அன்பு நபியாகவும், அன்பு புத்தனாகவும், அன்பு இயேசுவாகவும் காட்டப்பட்டன. காட்டப்பட்ட மெல்லியக் கோடுகள் சிலரின் தன்னலத்தினால் வல்லினக் கோடுகளாக பயங்கரத்தைப் பறைசாற்றும் குருதிக் குறியீடுகளாக மாறின.

அன்பைக் குறித்து மதங்கள் மக்கள் மனதில் பல அடையாளங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. விவிலியத்தில் இயேசுவின் முகம் அன்பின் நீரூற்று என அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன.

கொல்கொதா மலை என்பது தண் டனைகள் வழங்கப்படும் கொலைக்களம். சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டார் என்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாய் இயேசுவைக் கொல்கொதா மலைக்குத் தண்டனை நிறைவேற்ற யூதர்கள் அழைத்துச் செல்கிறார்கள்.

காவலாளிகள் அடித்துத் துவைத்ததில் இயேசுவின் மேனி எல்லாம் குருதி வெள்ளம். தாகம் வாட்டியெடுக்க ஒரு வாய் தண்ணீர் கிடைக்குமா? என இயேசுவ் பரிதவிக்கிறார். கருணை என்ன என்று அறியாத காட்டுமிராண்டி மதவாதிகள் எச்சமான கழிவு நீரை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற தத்துவத்தின் படி தன்னைக் கொடூரமாகத் தாக்கியவர்களுக்காக இயேசு பரிதாபப்பட்டார். அன்புதான் உண்மையான மதம் என்பதை இயேசுவின் செயல் காட்டியது. அன்பைப் பரிசாக அளிக்க கிறித்தவம் புதுப் பிறப்பைப் பூண்டது. மனித குலம் நன்னெறி தத்துவத்தில் தன்னைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என மதத் தோற்றவாளர்கள் முடிவு செய்து பயணப்பட்டார்கள். ஆனால், அவர்களின் பயணம் வெற்றியைத் தந்ததா? என வினா எழுப்பினால், மதங்களுக்குள் புதைந்து கிடக்கும் மர்மம் போல, வினாவும் மர்மமாகவே காணாமல் போகும்.

மதங்களின் பெயரில் சிலர் புறத் தோற்றத்தின் கண்ணோட்டத்தில் தங்களை இழந்து, வணிகத்தனங்களை மூளையின் செயல் ஊக்கிகளாக மாற்றிக் கொண்டார்கள்.

மதச் சிரச்சேதம் உண்மையான பாதையை உணர்த்த முயல்கிறது. மதங்களின் முகப் பொலிவை மக்கள் அறிய வேண்டும் என்பதுதான் இச்சூழலில் சொல்லப்படும் கருத்துக்களில் புதைந்து கிடக்கும் உண்மை.

யாரையும் புண்படுத்தக் கூடாது என்பது என் எண்ணம். ஆனால், புண்படாமல் மனித மனம் பண்பட முடியாது என்பதையும் நான் அறிவேன். அதனால், உண்மையைச் சொல்லும் போது தவறி யார் மனதாவது காயம் அடைந்தால் மன்னிக்கக் கோரமாட்டேன். எங்கோ அவர்கள் மீதும் தவறுகள் உண்டு என்பதை அந்தக் கணை ஒருவேளை சுட்டிக் காட்டியிருக்கலாம். கமுக்கக் கடலில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் முத்துக்களை ஒவ்வொன்றாகச் சேகரிக்கக் கிளம்பியிருக்கிறேன்.

- ம. சுவீட்லின்

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128904651
Madha Sirasetham

Related to Madha Sirasetham

Related ebooks

Reviews for Madha Sirasetham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Madha Sirasetham - M. Sweetlin

    http://www.pustaka.co.in

    மத சிரசேதம்

    Madha Sirasetham

    Author:

    ம.சுவீட்லின்

    M. Sweetlin

    For more books

    http://pustaka.co.in/home/author/m-sweetlin

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. இறைமை என்னும் இசை நரம்புகள்

    2. புரிந்து கொண்டால் தத்துவம்

    3. இறையல்ல இயேசு.

    4. வெற்றிச் சிலுவையான கழுமரம்

    5. நற்கருணை சுமந்த வெள்ளைப் பூக்கள்

    6. சிலுவைப் பலி இரத்தப் பலியின் நிறை

    7. கிறித்துவத்தின் விழிகளில் வலிகள்

    8. அழகோவியத்தின் அகமொழி…

    9. தூபமாய் என்னுள்ளம்…

    10. திரித்துவம் சொல்லும் கிறித்தவம்.

    11. மூன்றில் முடிவில்லா முடிச்சு

    12. அநாதைகளல்ல ஆனந்த யாழ்கள்

    13. மரியாள் மகிமையின் மகிழ்வு

    14. மரியாள் மெய்ஞானத்தின் தொட்டில்

    15. மகதலேனாவுக்கு சரியாசனம்?

    16. கலையில் கலையான கிறித்துவின் பெயர்

    17. இயேசு பெண்மையின் நிழல்

    18. களப்பலியான இரத்த சாட்சிகள்

    19. அக்கரை சாமிகள்

    இயற்கை இறைவனின் கொடை

    நீயும் ஒருநாள்!

    ஆசிபா இருந்திருந்தால்…

    எந்தையின் பரிசு

    ஈழ வலி கொண்ட இந்தியா…

    சிலுவை...

    கருப்பு...

    நான்...

    நட்பு...

    வியர்வை குளித்து

    முகவரி தந்த விசித்திரம்

    மரியராஜ் எனும்

    ஈன்ற தூயோனுக்கு...

    காலமெல்லாம்

    கை கொடுக்கும்

    எல்சின் என்ற

    துணைக்கு...

    இன்பா எனும்

    அழகிய நட்பிற்கு...

    ஏகலைவர்கள்...

    அருட்திரு அம்புரோஸ்

    அருட்திரு எட்வர்ட் செல்வராஜ்

    சகோ. சூசை பிரகாசம்

    நட்பில்...

    திரு.ஜெரோம் செல்வராஜ்

    (மரியின் அன்பு)

    திரு.அலெக்சாண்டர் (சுருஷ்டி)

    தோழி.லிட்ரிஷியா

    அகக்குவியலில் அன்புடன்

    ஐயா. வி.ஜி. சந்தோசம்

    ஐயா. ஜே.டி.சபையார்

    கவிஞர் சிவா

    பாச மெய்யெழுத்துக்கள்

    இரா.தமிழரசு

    அம்மா

    சேவியர்

    ஜார்ஜ்

    இந்நூல்

    பாலியல் வன்கொடுமைக்கு

    ஆளான ஹாசினியின்

    மலர் பாதங்களுக்கு

    சமர்ப்பணம்...

    என்னுரை

    மயிலிறகுக்குள் சுடு நெருப்பு

    மைமகள் சுடுநெருப்பாய்த் தன்னை உருமாற்றிக் கொள்ள எண்ணம் காட்டும் அணுப்பாய்ச்சல் மதச் சிரசேதம்.

    தட்டாம் பூச்சியைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு, இறக்கை ஒவ்வொன்றாகப் பிய்த்து துன்புறுத்தி இன்பம் காண்பது போல, மதம் இன்று சிலர் கைகளின் கொடூர விளையாட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

    சமுதாயத்தின் குறியீட்டில் நலமானவை பதிவாக வேண்டும் என்ற எண்ணத்தில் மனிதன் கண்ட மதங்கள் இன்று மேனி தொலைத்து, மெய் தொலைத்து, சீழ்ப்பிடித்து கலவர பீதிகளின் பக்கங்களாக மாறி நிற்கின்றன. புரட்சி விதைகளை அறநெறியில் சுமந்த மதங்கள் தன் இலக்கைத் தாண்டி குறுக்கு வழிப் புதருக்குள் சிக்கிக் கொண்டன.

    வில்லிலிருந்து கிளம்பிய அம்பு, குறி தவறி அப்பாவியின் நெஞ்சைத் துளைத்தது போல, மதத்தின் ஒவ்வொரு அசைவுகளும் விரும்பத்தகாத விரியன் பாம்புகளாக உள்ளன.

    நெருப்பு பிளம்பென சூட்டில் மிதந்து கொண்டிருந்த புவிப் பந்து இயற்கையின் ஒவ்வொரு முத்தத்திலும் தன்னைத் தொலைத்து குளிர்ச்சிக்குள் முகம் புதைத்துக் கொண்டன.

    இயற்கைக் காதலியின் முத்தத்தில் குளிர் நிலை அடைந்த புவிக் காதலன் இறையை மிஞ்சிட நிலம் எனும் உருவகம் கண்டான். பெளதீகக் காதலில் நிலம் மனிதன் வாழும் வீடானது.

    நிலத்தில் உயிரினங்களின் தோற்றம் மனிதனின் பரிமாணம் போன்றவை விரிவாகச் சொல்ல மதச் சிரச்சேதம் களம் அல்ல. பரிமாணப்பட்டோ, படைக்கப்பட்டோ மனித இனம் மண்ணில் முத்திரையானது. அதுவும் அரச முத்திரை.

    மனித இனத்தின் வளர்ச்சிப் பரிமாணத்தில் மதமும், சமுதாயமும் பெரும் ஆளுமையைத் தனதாக்கிக் கொண்டன.

    மனிதனின் பயத்தில் தொடங்கிய மதம் இன்று மனிதனுக்கு அச்சமாகவே மாறி நிற்கிறது. பூவிடம் தேனை அருந்தி எழில் நடனம் புரியும் வண்டினம் போல, மனிதனின் நம்பிக்கைத் தேனை உறிஞ்சி எழில் நடனம் போடுகின்ற மதங்கள், அகிலத்தின் மாற்றச் சக்கரத்தில் எழில் என்பதைத் தொலைத்து கொடூரம் என்ற நிலையில் முகம் பதித்து விட்டன. இனி மதச் சிரச்சேதம்தான் புதுமை சிந்தனைக்குள் மதத்தை இழுத்து வரும்.

    இறையியல் எனும் தத்துவக் கோட்பாட்டில் அன்பைத்தான் முதன்மைச் சின்னமாக மதங்கள் கொண்டு வந்தன. அன்பு சிவனாகவும், அன்பு நபியாகவும், அன்பு புத்தனாகவும், அன்பு இயேசுவாகவும் காட்டப்பட்டன. காட்டப்பட்ட மெல்லியக் கோடுகள் சிலரின் தன்னலத்தினால் வல்லினக் கோடுகளாக பயங்கரத்தைப் பறைசாற்றும் குருதிக் குறியீடுகளாக மாறின.

    அன்பைக் குறித்து மதங்கள் மக்கள் மனதில் பல அடையாளங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. விவிலியத்தில் இயேசுவின் முகம் அன்பின் நீரூற்று என அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன.

    கொல்கொதா மலை என்பது தண் டனைகள் வழங்கப்படும் கொலைக்களம். சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டார் என்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாய் இயேசுவைக் கொல்கொதா மலைக்குத் தண்டனை நிறைவேற்ற யூதர்கள் அழைத்துச் செல்கிறார்கள்.

    காவலாளிகள் அடித்துத் துவைத்ததில் இயேசுவின் மேனி எல்லாம் குருதி வெள்ளம். தாகம் வாட்டியெடுக்க ஒரு வாய் தண்ணீர் கிடைக்குமா? என இயேசுவ் பரிதவிக்கிறார். கருணை என்ன என்று அறியாத காட்டுமிராண்டி மதவாதிகள் எச்சமான கழிவு நீரை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்.

    இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற தத்துவத்தின் படி தன்னைக் கொடூரமாகத் தாக்கியவர்களுக்காக இயேசு பரிதாபப்பட்டார். அன்புதான் உண்மையான மதம் என்பதை இயேசுவின் செயல் காட்டியது. அன்பைப் பரிசாக அளிக்க கிறித்தவம் புதுப் பிறப்பைப் பூண்டது.

    மனித குலம் நன்னெறி தத்துவத்தில் தன்னைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என மதத் தோற்றவாளர்கள் முடிவு செய்து பயணப்பட்டார்கள். ஆனால், அவர்களின் பயணம் வெற்றியைத் தந்ததா? என வினா எழுப்பினால், மதங்களுக்குள் புதைந்து கிடக்கும் மர்மம் போல, வினாவும் மர்மமாகவே காணாமல் போகும்.

    மதங்களின் பெயரில் சிலர் புறத் தோற்றத்தின் கண்ணோட்டத்தில் தங்களை இழந்து, வணிகத்தனங்களை மூளையின் செயல் ஊக்கிகளாக மாற்றிக் கொண்டார்கள்.

    தூய்மை உள்ளத்தில் மெல்லிய பனி தூவும் மனம் கொண்ட நல்ல மனிதர்கள் வணிக மனம் கொண்ட ஆக்டோபசின் கையில் சிக்கிச் சீரழிந்து போனார்கள்.

    கள்ள மத வர்ணனையாளர்களால் உயிர்க்காற்றை இழந்து மதங்கள் கரிமலக் காற்றை சுவாசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

    மதச் சிரச்சேதம் உண்மையான பாதையை உணர்த்த முயல்கிறது. மதங்களின் முகப் பொலிவை மக்கள் அறிய வேண்டும் என்பதுதான் இச்சூழலில் சொல்லப்படும் கருத்துக்களில் புதைந்து கிடக்கும் உண்மை.

    அலகை வளைக்குள் நுழைத்து ஒளிந்திருக்கும் நண்டைத் தேடி வெளிக்கொணரும் மீன் கொத்தியின் விவேகம் என் பேனாவுக்கு இன்று.

    யாரையும் புண்படுத்தக் கூடாது என்பது என் எண்ணம். ஆனால், புண்படாமல் மனித மனம் பண்பட முடியாது என்பதையும் நான் அறிவேன். அதனால், உண்மையைச் சொல்லும் போது தவறி யார் மனதாவது காயம் அடைந்தால் மன்னிக்கக் கோரமாட்டேன். எங்கோ அவர்கள் மீதும் தவறுகள் உண்டு என்பதை அந்தக் கணை ஒருவேளை சுட்டிக் காட்டியிருக்கலாம். கமுக்கக் கடலில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் முத்துக்களை ஒவ்வொன்றாகச் சேகரிக்கக் கிளம்பியிருக்கிறேன்.

    ம. சுவீட்லின்

    அன்பே கடவுள் - கிறித்தவம்

    அன்பே சிவம் – இந்து

    அன்பே உலகு – புத்தமதம்

    அன்பாய் இருங்கள் - இஸ்லாம்

    1. இறைமை என்னும் இசை நரம்புகள்

    மனிதன் தன்னை மீட்டுக்கொள்ள இறைவன் என்னும் இசை நரம்புகளைத் தேடுகிறான். செல்வத்தின் செழுமையிலும், வறுமையின் கோடுகளிலும் இறை என்னும் யாழை மீட்டத் துடிக்கிறான். தனக்கு மிஞ்சிய ஆற்றலைத் தன்னில் ஆற்றாமையால் தேடுவதில் மூழ்கிவிடுகிறான். எப்படியென்றாலும் இறை என்னும் பெருமை இருண்ட வீட்டின் விளக்காகிறது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது போல, தன் மதக் கொள்கைகளில் குற்றம் பார்க்கில் சுற்றம் கண்டு அதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    ஆக, மனிதன் என்னும் முகத்திற்கு மதம் எனும் முகமூடி அவசியம் தேவைப்படுகிறது. அதை மாற்றிக் கொள்ளலாமே தவிர, கழற்றி எறிவது கடினம். மக்களை அடிமைகளாக்கி அசுரக் கொள்கைகளோடு ஆட்சி செய்கின்ற மதங்கள், மனிதர்களை ஒடுக்கும் பார்வையை விட்டுவிட்டு தற்பொழுது அடியோடு ஒழிக்கும் முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. இதற்கு எந்த மதங்களும் விதிவிலக்கல்ல.

    அகிலத்தில் தோன்றியதாகச் சொல்லப்படும் எந்தக் கடவுளும் தங்களை எந்த மதத்திற்குள்ளும் உட்படுத்திக் கொள்ளவில்லை. மதங்கள் தாங்கள் மேற்கொள்ளும் வித்தியாசக் கண்ணோட்டங்களைப் பொறுத்து புகழ்ச்சி நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில், மனிதனுக்கு வீழ்ச்சிப் பாதையை வகுத்துக் கொண்டும் செல்கிறது.

    உண்மையில் இந்த மதத்தின் கோட்பாடுகள் தேவைதானா? என்ற கேள்விக்கு உங்கள் மனதுதான் பதில் சொல்ல வேண்டும். நல்லவை போதிக்கும் அதே மதங்கள்தான் தீயவையையும் தருகின்றன.

    தீயவைத் தீயவை பயத்தலால்

    தீயவை தீயினும் அஞ்சப்படும் - திருக்குறள்.

    என ஓதும் நூலை விட வேறு ஒரு நல்ல மனித நூல் இருக்கும் என்றால் ஆச்சரியம்தான்.

    கடவுள்கள் தன் தூய்மை நிலையை மனித நிலைக்கு உட்படுத்தும் பட்சத்தில் அவர்களும் கடவுள் என்ற நிலையை இழக்கின்றனர். மனிதன் ஏற்படுத்தும் சூழ்ச்சி வலைகள் கடவுள்களுக்கு உள்ளும் நடக்கும் என்றால், மனிதத் தன்மையிலிருந்து இறைத்தன்மை எவ்வாறு வேறுபடக் கூடும்?

    மத நூல்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவைகள். மதங்கள் மனிதர்களின் வரைகோடுகள், மதச் சட்டங்கள் மனிதனால் திரிக்கப்பட்டவை என்பதை உணர்ந்ததால் என் மனம் கடவுளை மதத்திற்குள் அடக்க மறுக்கிறது.

    ஒரு விமர்சனக் கோரிக்கையை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்

    நீங்கள் வணங்கும் கடவுள்களில் உண்மையில் கடவுள் தன்மையில் விளங்குபவர் யார்?

    ஏன்?

    புராணக் கதைகள் சுட்டும் புண்ணியத்தலங்களும் அதில் தெய்வங்கள் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஊர்களிலும், உண்மையில் அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எங்கே?

    எல்லா சமயங்களின் வரலாறுகள், தோற்றுவித்தவர் இன்னார் என்றிருக்க, இந்து சமயம் மட்டும் யாரால் தோன்றியது என்பதே கேள்விக்குறி. இந்தியாவில் இந்து மதம் எங்கு தோன்றியது? ஏறக்குறைய 850 மில்லியன் மக்களினத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கும் இம்மதம் அகிலத்தின் மூன்றாவது பெரிய மதம். அகிலத்தில் இந்து சமய மக்கள் பெரும்பான்மை உள்ள நாடுகளில் முதலாவதாக நேபாளம் உள்ளது. அதைத் தொடர்ந்த வரிசையில் இந்தியாவும் அடுத்து மொரீசியசும் உள்ளன. இது பலக் கடவுள் கொள்கைகளைப் பின்பற்றுகிறது. இந்து மக்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் அகிலத்தில் எல்லா நாடுகளிலும் காண முடிகிறது.

    இந்து சமயம் இந்தியத் துணைக் கண்டமான இந்தியா, பாகிசுதான், ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றியது. அகிலத்தில் அதிகமான இந்துக்கள் வாழும் இடமாக இந்தியத் துணைக்கண்டம் விளங்குகிறது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்து சமயம் தென்கிழக்கு ஆசியா வழியாக வியட்னாம் மற்றும் இந்தோனேசியத் தீவுகளுக்கும் பரவி விரிந்து காணப்பட்டது.

    19-ம் நூற்றாண்டிற்குப் பிறகு இந்துக்களை வேலையாட்களாக அய்ரோப்பிய காலனித்துவ நாடான திரினிடாட், கயானா, சுரினாம், ரியுனியன், மொரிசியஸ் மற்றும் தென் ஆப்ரிக்காவுக்கு அழைத்து வந்தனர்.

    வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்படும் மவுசு போல வெளிநாட்டு மதமான கிறித்தவம், யூதர்களிலிருந்து பிரிந்து, மனித எண்ணங்களைப் பரவவிட, நமக்கு மிஞ்சிய ஆற்றல்தான் கடவுள், அவர் எங்கும் இருப்பார் என தன் கனவுகளைப் படரவிட்டது. அதைத் தொடர்ந்தவர்கள் ஏசுவைக்

    Enjoying the preview?
    Page 1 of 1