Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaaladiyil Pootha Kamala Malar
Kaaladiyil Pootha Kamala Malar
Kaaladiyil Pootha Kamala Malar
Ebook157 pages59 minutes

Kaaladiyil Pootha Kamala Malar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தென் திசையில் இருந்த காலடியில் பிறந்து துறவு மேற்கொள்ள விரும்பி, காலடியிலிருந்து கிளம்பி, நர்மதை ஆற்றங்கரையில் இருந்த கோவிந்த் பகவத் பாதரின் சீரடியை அடைந்து, அத்வைத தத்துவத்தைப் புரிந்து, ஞானம் பெற்று குமரி முதல் இமயம் வரை கருத்துக்களை விளக்கம் கொடுத்து, பரப்பி இந்து மதத்தை ஒருங்கிணைத்தார் இளந்துறவியொருவர்.

அவர் தான் இந்து மதம் புத்துணர்ச்சி பெறவும், மக்களிடையே வழி பாட்டில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தியதற்கு காரணமான 'ஆதி சங்கரர்'!

மதத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்த அவர் செய்த ஆன்மிகப் பயணத்தை எளிமையாகவும், விளக்கமாகவும் ஒரு ஜீவ நதியாய் தொட்டுச் செல்கிறது இந்நூல்.

வாருங்கள் புனித நதியில் நீராடி மகிழ்வோம்!

Languageதமிழ்
Release dateFeb 11, 2023
ISBN6580140409537
Kaaladiyil Pootha Kamala Malar

Read more from K.S.Ramanaa

Related to Kaaladiyil Pootha Kamala Malar

Related ebooks

Reviews for Kaaladiyil Pootha Kamala Malar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaaladiyil Pootha Kamala Malar - K.S.Ramanaa

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    காலடியில் பூத்த கமல மலர்

    Kaaladiyil Pootha Kamala Malar

    Author:

    கே. எஸ். ரமணா

    K.S.Ramanaa

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-ramanaa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஒரு மலரின் உதயம் காலடி.

    2. மதத்தைப் பரப்பிய மகான்

    3. அஞ்ஞான இருளை அகற்றிய சுடர்

    4. அத்வைத தத்துவம்

    5. பிறப்பால் பேதம் இல்லை.

    6. ஆன்மிக மறுமலர்ச்சி

    7. பிரபஞ்சாலயம்

    8. உலகே மாயம்!

    9. சர்வமும் பிரம்மமயம்

    10. வாதப் பிரதிவாதங்கள்

    11. ஆன்மிகப் பயணங்கள்

    12. ஆன்மிகமும் மக்கள் தொடர்பும்

    13. மதத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

    14. கயிலையில் ஆதிசங்கரர்!

    15. மத எதிர்ப்புகள்

    16. திருவருள் ஞானியின் அற்புதங்கள்

    17. எழுதியவையும் விளக்க உரைகளும்

    18. கயிலாயபதி காலடியை பூஜித்த மலர்

    நுழைவாயில்...

    ‘அறம் வெல்லும் அதுவன்றி அறநெறி பிறழ்ந்த ஆட்சி அல்லலுறும்’ என இந்திய மண்ணை ஆண்ட மன்னனும் நம்பினான்; மக்களும் நம்பினர்.

    ‘அறம்’ எனப்படுவது சர்வ வல்லமையுடையது என்றும், இந்தப் பிரபஞ்சத்தில் கோள்கள், விண்மீன்கள் போல எந்த இடத்திலும் இறைமையின் வெளிப்பாடாகவே அறத்தை முன்னோர் நம்பினர்.

    ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதை உணர்த்தவே தமிழில் ஒரு குடிமக்கள் காப்பியம் உருவாயிற்று.

    அறம் பொதுமையாகக் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறி என்றும், அந்த நெறி கடைப்பிடிப்பதில் முறை தவறி பிழை ஏற்பட்டால் பிரபஞ்ச அழிவுகள் ஏற்படும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை ஆள்வோருக்கும் இருந்தது, ஆளப்படும் மக்களுக்கும் இருந்தது.

    பிரபஞ்சம் முழுதுமே மனிதனின் ஆளுமைதான் அதிகம். அவ்வாறு ஆளுமை அதிகம் பெற்ற மனித சமுதாயம் அறம் சார்ந்த வழி நடத்தினால், மனித சமுதாயம் உயர்வடையும் என்றே மன்னரும் மக்களும் அறவழி நடந்தனர். அதற்கு அறிவுசார் இலக்கியங்களும் துணை நின்றன.

    இலக்கியங்களை எடுத்துக்கொண்டால் மக்களை நெறிப்படுத்த எழுந்த படைப்புகளே அதிகம் வரவேற்பைப் பெற்றன.

    அரிஸ்டாட்டில் என்ற கிரேக்க ஞானி ஆட்சிக்கலையை அறிவியலாகப் படைத்தார். மௌரியர் காலத்தில் எழுதப்பட்ட கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும், மனஸ்மிருதியும் அரசநீதியை எடுத்துச் சொன்ன நூல்கள்.

    பண்டைய மன்னர்கள்கூட இலக்கியங்கள் எடுத்துச் சொன்ன அறங்களை அரசியலில் நிலைநிறுத்த அறிவுசார் புலவர்களை அரசவையிலே கொலுவீற்றிருக்க வைத்தனர். அவர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் ‘தன்னுடையது எனச் சுயநலம் பாராது ‘பொதுமைநோக்கில் நன்னெறியுடன் ஆட்சி செய்தனர். ஆனால், நாளடைவில் பேராசை, பொறாமை, காமம், பொருளாசை இவை அதிகமாகவே, மனித இனத்தில் வலியோர் எளியோரை வதைத்து தங்கள் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ளத் துவங்கினர்.

    மண்ணாசை, பெண்ணாசை காரணமாக நடுநிலையோடு ஆட்சி செய்ய வேண்டிய மன்னர்களிடையே போட்டியும் நாடுபிடிக்கும் ஆசையும் தோன்றியது. அப்போது அந்த மன்னர்கள் தாங்கள் பின்பற்றிய சமயக் கொள்கைகளை தாங்கள் பிடித்து கைவசம் வைத்திருந்த நாடுகளில் வலிந்து புகுத்தத் துவங்கினர். அதனால் சமயப் போட்டிகளும், சச்சரவுகளும், மனித சமுதாயத்தில் பிரிவுகளும் தோன்றலாயின.

    மக்களிடையே பரப்பப்பட்ட பல்வேறு மதங்களின் பல்வேறு பிரிவினர் தங்கள் கோட்பாடுகள்தான் மேம்பட்டவை என்பதை மக்களிடையே பரப்புவதில் தீவிரம் காட்டினர். அதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கின.

    இந்தியாவைப் பொருத்தமட்டில் ‘இந்துமதம்’தான் மிகப் பழமையானதாகும். இது தனியொரு மனிதரால் தோற்றுவிக்கப்பட்ட மதமல்ல. வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை மூலாதாரமாகக் கொண்டு வகுக்கப்பட்டது இது.

    ரிக், யஜுர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்களும், வேதாந்தம் என்று அழைக்கப்படும் உபநிடதங்களும் தோன்றி அதன் அடிப்படையில் தத்துவஞானம் எனப்படும் தத்துவ விளக்கங்கள் ஞானிகளால் சொல்லப்பட்டன.

    தத்துவ ஞானத்தை அடிப்படையாகக் கொண்டுதான் வான சாஸ்திரமும், விஞ்ஞானமும் தோன்றின. இந்து மத தத்துவங்களை உருவாக்கிய முனிவர்கள் வரலாற்றால் அளவிட முடியாத காலந்தொட்டு நதிக்கரைகளிலும், காடுகளிலும் சுற்றி அலைந்து தங்கள் சிந்தனா சக்திமூலம் உய்த்து உணர்ந்ததை தங்கள் மாணவர்கள் மூலமாக உலகுக்கு வெளிப்படுத்திவிட்டுச் சென்றனர்.

    அதனால், ஒரு புத்தகத்தில் தொகுக்கப்பட்ட கோட்பாடாகவோ, ஒரு தனி மனித சிந்தையால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளோ இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறையில் வாழ்ந்து பார்ப்பது என்ற நியதியிலே இந்துமதம் அமைந்தது.

    நாளடைவில் தத்துவ ஞானத்துக்கான விளக்கங்கள் சொல்லும்போது அவர்களின் சிந்தனா சக்திக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக பொருள் கூற ஆரம்பித்தனர். அப்போது மாற்றுக் கருத்துக்கள் உருவாக ஆரம்பித்தன. அவர்கள் தங்களுக்கு தோன்றிய கருத்தை மக்கள் மனதில் திணிக்க, மக்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிய ஆரம்பித்தனர்.

    தத்துவ ஞானிகளின் விளக்கங்களால் மாற்றுக் கருத்துகள் தோன்றலாயின. சுமார் கி.மு. ஏழாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் இந்துமத வேதாந்தக் கருத்துகளில் ஒன்றான ‘கடவுள் உண்டு என்ற கொள்கை பிற்காலத்தில் தோன்றிய சமணம், பௌத்தம் மற்றும் சாங்கியம் என்ற மதங்களில் ‘கடவுள் மறுப்புக்கொள்கை நியாயவதாரம், அபிதம்மபிடகா, சாங்கிய பிரவசன சூத்திரம் ஆகிய நூல்களில் விளக்கப்பட்டு, அவை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கியது.

    மக்கள் மனதில் மாற்றுச் சிந்தனை தோன்றியது. மதக் குழுக்கள் அதிகம் தோன்ற ஆரம்பித்தன. மக்களின் வாழ்க்கையில் நிம்மதி குறையத் தொடங்கியது. பழமையான இந்து மதம் நசியவும், மாற்றுக் கருத்துகளுடன் புதுமையாகத் தெரிந்த பௌத்தம், சமணம், சாங்கியம் போன்ற மதங்கள் தலைதூக்கவும் ஆரம்பித்தன.

    ஆன்மிக வாதம், பொருள்முதல் வாதம் என இரு கருத்துகள் தோன்றின.

    ‘ஆன்மிக வாதம்’ என்பது ‘உலகத்தின் மூலப்பொருள் ஆன்மா அல்லது கடவுள் என்ற கொள்கையுடைய ஆத்திக சிந்தனையாகும். ‘பொருள்முதல் வாதம்’ என்பது கடவுளையும் ஆன்மாவையும் ஒப்புக்கொள்ளாது, உலகத்தின் மூலப்பொருள் நம் புலன்களால் உணரப்படும் பொருள்தானே தவிர, கடவுள் இல்லை என்ற கொள்கையுடைய நாத்திக சிந்தனையாகும்.

    எனவே, கடவுள் தத்துவமும், கடவுள் மறுப்புத் தத்துவமும் இணைந்தே சமநிலையாக இந்திய மக்களிடையே நடை போட்டிருக்கின்றன. ஆனால், ஒரு காலகட்டத்தில் ஒன்று மற்றதை பின்னுக்குத் தள்ளி உயர்வு பெற்றது.

    ஆதியில் மனிதன நதிப்புறங்களில் குடியேறி தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக விவசாயத்தை மேற்கொண்டான்.

    விவசாயத்துக்கு இயற்கை கொடையான தண்ணீரும், சூரிய ஒளியும் மிக முக்கியமானவை. காடுகளில் காட்டுமிராண்டியாக பிராணிகளைக் கொன்று தின்று பழகிய மனிதன், நதியோரங்களில் விவசாயம் செய்ததால் நாகரிகப் போக்கு தோன்ற ஆரம்பித்தது. விவசாயத்துக்கு மாடு, ஆடுகள், கோழிகள் என மனிதனுக்கு ஊறு விளைவிக்காத பிராணிகளைத் தன் முயற்சிக்கு துணை சேர்த்துக் கொண்டான்.

    மழையை நம்பி விவசாயம் செய்த மனிதன், திடீரென மழை பொழிவதும், பொய்த்துப் போவதும் எதனால் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

    சூரியன் தோன்றுவது, மறைவது, வானத்தில் மின்னும் நட்சத்திரங்களுடன் இரவில் சந்திரன் தோன்றுவது, மழை பெய்வது, காற்று சுழன்று அடிப்பது, தீயின் பயன் என ஒவ்வொரு இயற்கை சக்தியும் ஏதோ நியமப்படி நடக்கிறது என்றால் ஏதோ ஓர் சக்தி இருக்கத்தானே வேண்டும் என்ற சிந்தனை அவனுள் இறைவழிபாடு செய்யத் தூண்டியது.

    நமது இதிகாசங்களும் நன்னெறி, தியாகம், குடும்ப ஒற்றுமை போன்ற நற்குணங்களைப் போதித்ததுடன் மனிதனின் கர்ம வினைக்கேற்பவே அவனது வாழ்வு இருக்கும் என தெரிவித்த கருத்துகள் மனித சிந்தனையில், இறையருள் தோன்றிட காரணமாக அமைந்தன. முதலில் இயற்கையை வழிபட ஆரம்பித்தவன், கொஞ்சம் கொஞ்சமாக உருவ வழிபாடு செய்ய ஆரம்பித்தான். தான் உருவாக்கிய உருவங்களுக்கு பெயரிட்டு அவரவர் விருப்பத்திற்கு விக்ரகங்களுக்கு படையல், வேள்வி, உயிர்ப்பலி என தனது தகுதிக்கு ஏற்ப செய்ய ஆரம்பித்தான்.

    நமது வேதங்களையும், உபநிடதங்களையும் படித்து ஆய்ந்த ஞானிகள், காடுகளில் சுற்றித் திரிந்து வேதங்களில் கூறப்பட்ட நியமங்களை கடைப்பிடித்து இறையருள் பெற்றனர். ஆனால், எல்லோராலும் அவ்வாறு இறையருள் பெற இயலாது. அவ்வாறு முயன்றாலும் பல ஆண்டுகள் கடும்தவம் செய்த பின்னர்தான் இறையருள் அல்லது முக்தி கிடைக்கும். அன்றாட வாழ்வியலில் உழலும் மனிதனால் அது இயலாத காரியம் என்பதால், உருவ படிமங்களாக விக்ரகங்களைத் தோற்றுவித்து வழிபட ஆரம்பித்தனர்.

    இவ்வாறு உருவ வழிபாடு தொடங்கியபோது இந்து மதம் என்று அழைக்கப்படாமல், சைவ மதம், வைணவ மதம் என இரு பிரிவுகளாக அழைக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவினரும் தனித் தனி

    Enjoying the preview?
    Page 1 of 1