Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rajamudi
Rajamudi
Rajamudi
Ebook159 pages48 minutes

Rajamudi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செம்பியன் மாதேவி மழவர் நாட்டு சிற்றரசரின் மகள். சோழ மன்னன் கண்டராதித்தரின் இரண்டாவது மனைவியாகி அரசியானார். இவருக்கு ‘மதுராந்தகன்’ என்ற ராஜகுமாரன் பிறந்தார். கணவர் கண்டராதித்தரைப் போலவே செம்பியன் மாதேவியும் சிறந்த சிவபக்தை. சோழ நாட்டின் காவிரிக் கரையோரம் எல்லாம் திருக்கோயில்கள் தோன்றக் காரணமானவர்.

கண்டராதித்தர் இறந்த பிறகு முறைப்படி பட்டம் சூட்டப்படவேண்டிய மதுராந்தகனிற்கு சூட்டப்படாமல், கண்டராதித்தனின் தம்பி அரிஞ்சயனுக்கு முடி சூட்டப்பட்டபோதும், அவரது வழித்தோன்றல் சுந்தர சோழனுக்கு முடி சூட்டப்பட்ட போதும் மகனுக்காக ராஜமுடி கேட்டு போராடாமல் நாட்டு நலனுக்காக விட்டுக் கொடுத்தார். ஆனால், சுந்தர சோழன் இறந்த பிறகு அரசவை செம்பியன் மாதேவி புதல்வர் மதுராந்தகனுக்கு முடி சூட்ட நினைத்தபோது மக்களிடம் கிளர்ச்சி தோன்ற ஆரம்பித்தது. காரணம், மக்களில் ஒரு சாரர், சுந்தர சோழன் மகன் அருண்மொழி வர்மனுக்கு முடி சூடும்படி கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள்.

அந்தக்கிளர்ச்சியை அடக்கும்போது ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பு, உறவுச் சிக்கல் ஆகியவற்றை செம்பியன் மாதேவி கையாண்ட முறை பிற்காலச் சோழப் பேரரசிற்கு அடித்தளமாக இருந்தது என்பதையும், அக்காலத்தில் பெண்ணியமும், மக்கள் உணர்வும் மதிக்கப்பட்டன என்பதையும் விளக்கவே புனையப்பட்டது இந்நாடகம்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580140406734
Rajamudi

Read more from K.S.Ramanaa

Related to Rajamudi

Related ebooks

Reviews for Rajamudi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rajamudi - K.S.Ramanaa

    https://www.pustaka.co.in

    ராஜமுடி

    Rajamudi

    Author:

    கே. எஸ். ரமணா

    K.S.Ramanaa
    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-ramanaa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முகம் தொலைத்த மனிதர்கள்

    நியாயத் தராசு

    முள்வேலி

    யுக வேள்வி

    என்னுரை

    அறிவியலின் அபரிதமான வளர்ச்சியால் தொன்மையான கூத்துக்கலை நசிந்து ஒளி ஒலி ஊடகங்கள் செழித்து வளர்ந்து வருகின்றன. ஆனால் கூத்து நாடகமாக மாறி தொலைக்காட்சியில் தொலைக்காட்சித் தொடராகவும், வானொலியில் நாடகமாகவும் உருமாற்றம் அடைந்து இன்றும் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன.

    மேடை நாடகத்திற்கும், வானொலி நாடகத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடே முன்னது காட்சியமைப்பால் நகர்வது; பின்னது உரையாடல் மற்றும் ஒலியால் நகர்வது என்பது தான்!

    தொலைக்காட்சியின் ஆக்ரமிப்பால் நம்மிடையே வானொலி கேட்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. இருப்பினும் என்றுமே வானொலி நாடகத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அரிச்சந்திர நாடகத்தின் மூலம்தான் நமக்கு உத்தமர் காந்தி கிடைத்தார். எனவே சொல்ல வேண்டிய செய்திகளை நாடகத்தின் வழியே சொல்லி, அது கேட்பவர் காதில் சரியாக விழுந்தால், நமக்கு இன்னொரு உத்தமர்கூடக் கிடைக்கலாம்!

    எனவே சமூகப் பொறுப்புடன் பாரதி கண்ட பெண்ணியத்தையும், தற்போது சமூகத்தில் நிலவி வரும் வரதட்சிணை, அந்நிய நாட்டு மோகம், பெண்ணடிமை, பாசப்போராட்டம், தன்னம்பிக்கையின்மை ஆகியவற்றை மையப்படுத்தி அகில இந்திய வானொலி, திருச்சி நிலையத்திலிருந்து ஒலி பரப்பப்பட்ட ஐந்து நாடகங்களைத் தொகுத்து ராஜமுடி என்று தலைப்பிட்டு காதில் கேட்ட கதைகளை கண்களால் படிக்கவும், மனத்தால் நினைக்கவும் புத்தகமாக வெளியிடப்படுகிறது. இந்நாடகங்களை ஒலி பரப்பிய அகில இந்திய வானொலி, திருச்சி நிலையத்தாருக்கு எனது பதிவான நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வானொலி கேட்கும் பழக்கம் இல்லாவிட்டாலும், வாசிக்கும் பழக்கம் உள்ள வாசகர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்!

    நாடகம் தானே என்று அலட்சியமாக நினைக்காமல் நாடகம் மூலமும் பல நல்ல செய்திகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படிக்கும் வாசகர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இது ஓர் தன்னம்பிக்கை வழிகாட்டி!

    படியுங்கள் பயனடையுங்கள்!

    வாழ்க வளமுடன்,

    (கே.எஸ். ரமணா)

    (கே. சுப்ரமணியன்)

    எண்: புதியது H-13A/பழைய எண்: H-31A

    மாந்தோப்புக் காலனி மேற்கு

    9வது அவென்யூ

    அசோக் நகர்

    சென்னை 600 083

    செல்: 95978 16276

    கதைச் சுருக்கம்

    செம்பியன் மாதேவி மழவர் நாட்டு சிற்றரசரின் மகள். சோழ மன்னன் கண்டராதித்தரின் இரண்டாவது மனைவியாகி அரசியானார். இவருக்கு ‘மதுராந்தகன்’ என்ற ராஜகுமாரன் பிறந்தார். கணவர் கண்டராதித்தரைப் போலவே செம்பியன் மாதேவியும் சிறந்த சிவபக்தை. சோழ நாட்டின் காவிரிக் கரையோரம் எல்லாம் திருக்கோயில்கள் தோன்றக் காரணமானவர்.

    கண்டராதித்தர் இறந்த பிறகு முறைப்படி பட்டம் சூட்டப்படவேண்டிய மதுராந்தகனிற்கு சூட்டப்படாமல், கண்டராதித்தனின் தம்பி அரிஞ்சயனுக்கு முடி சூட்டப்பட்டபோதும், அவரது வழித்தோன்றல் சுந்தர சோழனுக்கு முடி சூட்டப்பட்ட போதும் மகனுக்காக ராஜமுடி கேட்டு போராடாமல் நாட்டு நலனுக்காக விட்டுக் கொடுத்தார்.

    ஆனால், சுந்தர சோழன் இறந்த பிறகு அரசவை செம்பியன் மாதேவி புதல்வர் மதுராந்தகனுக்கு முடி சூட்ட நினைத்தபோது மக்களிடம் கிளர்ச்சி தோன்ற ஆரம்பித்தது. காரணம், மக்களில் ஒரு சாரர், சுந்தர சோழன் மகன் அருண்மொழி வர்மனுக்கு முடி சூடும்படி கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள்.

    அந்தக்கிளர்ச்சியை அடக்கும்போது ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பு, உறவுச் சிக்கல் ஆகியவற்றை செம்பியன் மாதேவி கையாண்ட முறை பிற்காலச் சோழப் பேரரசிற்கு அடித்தளமாக இருந்தது என்பதையும், அக்காலத்தில் பெண்ணியமும், மக்கள் உணர்வும் மதிக்கப்பட்டன என்பதையும் விளக்கவே புனையப்பட்டது இந்நாடகம்.

    பொருளடக்கம்

    காட்சி: 1

    காட்சி: 2

    காட்சி: 3

    காட்சி: 4

    காட்சி: 5

    காட்சி: 6

    காட்சி: 7

    காட்சி: 8

    'ராஜமுடி' - நாடகம்

    பாத்திரங்கள்

    செம்பியன் மாதேவி - சோழப் பேரரசி

    மதுராந்தகன் - சோழப் பேரரசியின் மகன்

    நந்தினி தேவி – மதுராந்தகனின் மனைவியரில் ஒருவர்

    அருண்மொழி வர்மன் - சுந்தர சோழனின் புதல்வன்

    குந்தவை - சுந்தர சோழனின் புதல்வி

    விஜயாதித்தர் - சோழ அரசனின் அமைச்சர்

    விசித்ர சேனன் - படைத் தளபதி

    ஆலத்தூருடையார் - சேம்பியன் மாதேவியின் மெய்க்காப்பு மற்றும் ஆலோசகர்

    மற்றும் காவலர்கள் / பொது மக்கள்

    (2011-ம் ஆண்டிற்கான அகில இந்திய வானொலி நாடக விழாவில் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து 09-06-2011 அன்று இரவு 8 மணிக்கு ஒலிபரப்பப்பட்டு அனைத்து நிலையங்களும் இந்நாடகத்தை அஞ்சல் செய்தன.)

    நன்றி: அகில இந்திய வானொலி நிலையம், திருச்சி.

    காட்சி: 1

    இடம்: அரண்மனைக் கோயில்

    நேரம்: மாலை

    பாத்தி: செம்பியன் மாதேவி, அமைச்சர் விஜயாதித்தர், மெய்க்காப்பாளர், ஆலத்தூருடையார்.

    அ.நிலை: சேகண்டி, முரசு, மத்தள மங்கல வாத்திய ஒலி, மணியோசை ஒலி.

    செம்பியன் மாதேவி: (பாடுகிறார்)

    ஓம் நமசிவாயவே ஞானமுங் கல்வியும்

    நமச்சிவாயவே நாதவின் றேத்துமே

    நமச்சிவாயவே நன்னெறி காடுமே!

    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

    இமைப் பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான்

    தாள் வாழ்க

    கோகழி ஆண்ட குருமணி தன்தாள் வாழ்க!

    (பாடலை நிறுத்தி): எல்லாம் வல்ல இறைவனே! சோழ நாடும், மக்களும் வளமையுடனும் செழுமையுடனும் வாழ இறையருள் புரிக!

    அமைச்சர்: தென்னாடுடைய சிவனே போற்றி!

    (வந்தபடியே பாடுகிறார்): எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

    (பாடலை நிறுத்தி): வணக்கம் சோழப் பேரரசியே!

    செ. மாதேவி: அமைச்சர் விஜயாதித்தரே! அதிகாலையிலேயே ஆலத்தூருடையாருடன் அரசியை (கண்களை திறந்து) சந்திக்க வந்த நோக்கம்?

    அமைச்சர்: ஆமாம் தேவி! செய்தி முக்கியமானது. அதனால்தான்...

    செ. மாதேவி: அப்படியா ஆலத்தூருடையாரே!

    ஆலத்தூருடையார்: பேரரசிக்கு வணக்கம்! ஒற்றர் தகவல்கள் அரச குடும்பத்திற்கு கலக்கம் தருவதாக உள்ளது.

    செ. மாதேவி: பீடிகை வேண்டாம். நேராகவே செய்தியைப் பகிரலாமே!

    ஆலத்தூரு: அரசர் சுந்தர சோழன் இறந்தவுடனே தங்கள் குலக்கொழுந்து மதுராந்தகருக்கு முடி சூட்டலாம் என்று அரசவைப் பெரியோர் கூரியதால், நாமும் முடிசூட்டு விழா பற்றி முரசறிவிப்புச் செய்துவிட்டோம்.

    செ. மாதேவி: அமைச்சரே! இதை நாம் முன்பே விவாதித்துவிட்டோமே?

    அமைச்சர்: ஆமாம் தேவி! ஆனால், அரசர் கண்டராதித்தர் உயிரோடிருந்தபோது தங்கள் புதல்வர் மதுராந்தகனுக்கு இளவரசு பட்டம் சூட்டாமல், அவரது தம்பி அரிஞ்சயனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது.

    செ. மாதேவி: ஆமாம். அப்போது அவனுக்கு வயது பதினான்கு. போதுமானவாள் பயிற்சி பெறவில்லை. எனவே என் முழு சம்மதத்துடன்தான் அரிஞ்சயனை இளவரசாக்கினார். அரிஞ்சயனுக்குப் பட்டம் சூட்டிய போதும், சுந்தர சோழனுக்குப் பட்டம் சூட்டியபோதும், எனக்கு நாடு மட்டும்தான் முக்கியமாகத் தெரிந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1