Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Utharakaandam
Utharakaandam
Utharakaandam
Ebook429 pages2 hours

Utharakaandam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இந்திய சுதந்தரத் திருநாளின் பொன்விழா கொண்டாடப்பட்டது. முதல் சுதந்தரத் திருநாளின் பரவச உணர்வுகளை. அநுபவித்த அந்நாளை மக்கள். அன்றைய மகிழ்ச்சி அருபவத்தில் நூற்றில் ஒரு பங்கு கூடப் பிரதிபலிக்காத கொண்டாட்டத்தைக் காண்கையில், பழைய நினைவுகளையே அசைபோடுவது தவிர்க்க இயலாததாக இருந்தது. புதிய தலைமுறைகள். நுகர் பொருள் வாணிப அலையிலும், சினிமா, சின்னத்திரை மாயைகளிலும், வெளி நாட்டு வாய்ப்புகளைத் தேடி, நுழைவுக்கான அனுமதி தேடி அந்த அலுவலக வாயில்களில் இரவு பகலாகத் தவம் கிடக்கும் உறுதி நிலையிலும், தங்களை மூழ்கடித்துக் கொண்டிருந்தன. நடுத்தர வர்க்கம் என்று அடையாளமிடப்பட்ட வர்க்கம். அன்றாடம் ஏறும் விலைவாசிகளிலும் தேவையில்லாப் பொருட்களின் 'திணிப்பு’ தேவை நெருக்கடிகளிலும் வரவுக்கும் செலவுக்கும் தாக்குப்பிடிக்க இயலாமல், 'உபரி’ வருமானங்களுக்காகச் சத்தியங்களைத் தொலைப்பதுதான் தருமம் என்று பழக்கப்பட்டு விட்டிருந்தது.

1972 இல், நாம் சுதந்திரத் திருநாட்டின் வெள்ளி விழாவைக் கொண்டாடினோம். ஆனால் விடுதலைப் போராட்டத்தில் ஆக்க சக்தியாகப் பரிணமித்த அஹிம்சைத் தத்துவமும், மொழி, சமயம், சாதி, இனங்கள் கடந்த நாட்டுப் பற்றும் இந்நாள், முற்றிலும் வேறுபாட்டு, பிரிவுகளும், பிளவுகளும், சாதி-சமய மோதல்களாகவும், வன்முறை அழிவுகளாகவும் உருவாகியிருந்தன. 72இல், இந்தச் சறிவை அடிநாதமாக்கி, காந்தியக் கொள்கைகள் இலட்சியமாக ஏற்க இயலாதவையாக, இந்நாட்டின் மேம்பாட்டுக்கு அக்கொள்கைகளைச் செயல்படுத்துவது மதியீனமா, என்ற வினாக்களை எழுப்பினேன். ‘வேருக்கு நீர்’ என்ற புதினம் காந்தி நூற்றாண்டும், தீவிரவாதமும் முரண்பாடும் சூழலில் உருவாயிற்று.

காந்தியடிகள், சமுதாயத்துக்கும் அரசியலுக்குமாக ஏழு நெறிகளைக் குறிக்கிறார். 1. கொள்கையோடு கூடிய அரசியல். 2. பக்தியோடு இணையும் இறைவழிபாடு. 3. நாணயமான வாணிபம். 4. ஒழுக்கம் தலையாய கல்வி. 5. மனிதநேய அடிப்படையிலான அறிவியல் வளர்ச்சி. 6. உழைப்பினால் எய்தும் செல்வம். 7. மனச்சாட்சிக்குகந்த இன்பம். இந்த ஏழுநெறிகளில் ஒன்று பழுதுபட்டாலும், சமுதாயமாகிய மரத்தில் பூச்சிகள் மண்டி பயன் நல்கும் உயிர்ச்சத்தை உறிஞ்சிவிடும் என்றார்.

இந்த நெறிமுறைகளில் - வழிமுறைகளில் சிற்சில வேற்றுமைகள் பிரதிபலித்த போதிலும், அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபடும் இலட்சியம் ஒன்றுபட்ட குரலாக ஓங்கி, அதைச் சாதித்தது.

இந்நாள், முப்பது கோடிகளாக இருந்தவர்கள். நூறு கோடியைத் தாண்டி விட்டவர்களாக மக்கள் பெருகியிருக்கிறோம். இந்தப் பெருக்கமும், அறிவியல் காரணமாக பலதுறை வளர்ச்சிகளும், மக்களை ஒருங்கிணைக்கும், சமுதாய மேம்பாட்டு எல்லைகளைத் தொட்டாலும், நடப்பியல் வாழ்வில் குரோதங்களும், வன்முறை அறிவுகளும், மனித நேயம் மாய்ந்து விடும் வாணிப அவலங்களும் இரைபடுவதற்கு என்ன காரணம்? கிராமங்கள் தன்நிறைவு கண்டு, மக்களை வாழவைத்து, நலங்களைப் பெருக்கி, அவசியமான நகரங்களுக்கும் வளங்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படைப் பொருளாதாரம் என்னவாயிற்று? இயற்கை தரும் கொடையை என்னுடையது ‘உனக்கில்லை' என்று அரசியலும் ஆதாயம் தேடுகிறது. ஏவுகனைகளை வெற்றிகரமாகச் செலுத்தும் சாதனை நிகழும் களத்திலேயே, பட்டினியாலும், குண்டு வெடிப்புகளாலும் எந்தப் பாவமும் அறியா மனிதர். போருக்குச் சோறு போடும் தொழில் செய்பவர் மடிகின்றனர்.

இந்த அநியாயங்களுக்குத் தீர்வு இல்லையா? எங்கு தொடங்கி எப்படிச் செயல்படுவோம்? எதிர்கால இந்தியாவுக்கு நம்பிக்கை உண்டா? உண்டு. அழிவுகளிலும், சில நல்ல விதைகள் தோன்றியிருக்கின்றன. வெளிச்சத்தில் நின்று பார்க்கும் போது தான், இருள் துல்லியமாகத் தெரிகிறது. நம் வேர்களை உணர்ந்து, சுயநம்பிக்கையும் எழுச்சியும் பெற்று, இலட்சியத்துக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் முன் வைத்தார்கள்.

இராமாயணம். இராமனின் முடிசூட்டுதலுடன் முடிந்து விடுவதில்லை. அதேபோல் குருட்சேத்திரப் போருடன் மகாபாரதம் நிறைவு பெற்றுவிடவில்லை. சீதை வனவாசம் தொடருகிறது; யாதவர்களின் அழிவும் நிகழ்கிறது. நம் சுதந்தரப் போராட்டமும் ஒரு காப்பியம் போன்றதுதான். காரிருள் கவியும் போதே, விடிவெள்ளி தோன்றும் என்பது நிச்சயமாகிறது. எனவே ‘உத்தர காண்டம்’ என்ற தலைப்பிட்ட இந்தப் புதினத்திலும் அந்த நம்பிக்கை விடி வெள்ளிகளைக் காட்டியிருக்கிறேன். இந்தப் புனைகதை. சற்றே வித்தியாசமாக, முன்னும் பின்னுமாகப் புனையப்பட்டிருந்தாலும், என் சிறுமிப் பருவத்திலிருந்து இந்நாள் வரையிலும் நான் கண்டு பேசிப் பழகி, அறிந்து உணர்ந்த பாத்திரங்களையே உயிர்ப்பித்திருக்கிறேன். தன்னார்வத் தொண்டியக்கங்கள் வாயிலாக, இந்நாட்டின் வேர்களைக் கண்டு புத்துயிரூட்ட முனைந்துள்ள இளைய தலைமுறையினரும் கற்பனையில் உதித்தவரல்லர்.

- ராஜம் கிருஷ்ணன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114404204
Utharakaandam

Read more from Rajam Krishnan

Related to Utharakaandam

Related ebooks

Reviews for Utharakaandam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Utharakaandam - Rajam Krishnan

    http://www.pustaka.co.in

    உத்தரகாண்டம்

    Utharakaandam

    Author:

    ராஜம் கிருஷ்ணன்

    Rajam Krishnan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajam-krishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    முன்னுரை

    இருபதாம் நூற்றாண்டின் இறுதியில். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இந்திய சுதந்தரத் திருநாளின் பொன்விழா கொண்டாடப்பட்டது. முதல் சுதந்தரத் திருநாளின் பரவச உணர்வுகளை. அநுபவித்த அந்நாளை மக்கள். அன்றைய மகிழ்ச்சி அருபவத்தில் நூற்றில் ஒரு பங்கு கூடப் பிரதிபலிக்காத கொண்டாட்டத்தைக் காண்கையில், பழைய நினைவுகளையே அசைபோடுவது தவிர்க்க இயலாததாக இருந்தது. புதிய தலைமுறைகள். நுகர் பொருள் வாணிப அலையிலும், சினிமா, சின்னத்திரை மாயைகளிலும், வெளி நாட்டு வாய்ப்புகளைத் தேடி, நுழைவுக்கான அனுமதி தேடி அந்த அலுவலக வாயில்களில் இரவு பகலாகத் தவம் கிடக்கும் உறுதி நிலையிலும், தங்களை மூழ்கடித்துக் கொண்டிருந்தன. நடுத்தர வர்க்கம் என்று அடையாளமிடப்பட்ட வர்க்கம். அன்றாடம் ஏறும் விலைவாசிகளிலும் தேவையில்லாப் பொருட்களின் 'திணிப்பு’ தேவை நெருக்கடிகளிலும் வரவுக்கும் செலவுக்கும் தாக்குப்பிடிக்க இயலாமல், 'உபரி’ வருமானங்களுக்காகச் சத்தியங்களைத் தொலைப்பதுதான் தருமம் என்று பழக்கப்பட்டு விட்டிருந்தது. வறுமைக்கோடு மேலே மேலே உயர்ந்து, மக்கள் தொகையின் அதிக விழுக்காட்டைத் தன் வரையறைக்குக் கீழே தள்ளிக் கொண்டிருந்தது. அந்த அடித்தளத்துக்கு இன்றியமையாத தேவைகளாகப் பெருகியிருந்த சாராய, சூது, பெண்வாணிப விவகாரங்கள். கோட்டு வரையறை கடந்த உச்சாணிவரை கோலோச்சிக் கொண்டிருந்தன. நாளொரு கொலையும் பொழுதொரு கொள்ளையுமாக அழிவுகள் சாம்ராச்சியப் படையெடுப்பையும் விஞ்சிக் கொண்டிருந்தன. நம் அறிவியல் மேம்பாடுகள். ‘ராக்கெட்’ ஏவுகணை. விண்வெளி ஆய்வு. வீரிய விதைக் கண்டுபிடிப்பு என்ற சாதனையாளரால் மட்டும் பெருமை பெறவில்லை. இத்தகைய தொழில் நுட்பங்கள், உலகளாவிய மோசடிகளாலும், பெண் வாணிபங்களாலும் 'வாணிபம்' நடத்தும் அளவுக்கும் ‘பெருமை’ பெற்றிருக்கின்றன.

    இந்தச் சூழலிலும், அரசியல் கட்சிகளின் பதவி பிடிப்புக் கூட்டணிச் சதுரங்க ஆட்டக்காய் நகர்த்துதலின் இடையே ஒரு முக்கியப் புள்ளியாக, சுதந்தரப் பொன்விழா அரங்கேற்றப்பட்டது. புத்தாயிரம், புதிய நூற்றாண்டு என்ற எதிர்பார்ப்பும் இந்தக் கொண்டாட்டங்களுக்கு ஒரு விறுவிறுப்பூட்டியது. அரசு சார்ந்தும், சாராமலும், சேர்ந்து கிடந்த மேற்பரப்புக்கு. ஒரு 'காபி’ குடிக்கும் விறுவிறுப்பு உற்சாகம் ஊட்டியது. சின்னத்திரை, பெரிய திரைகள், பத்திரிகைகள், நட்சத்திர இரவுகளை உருவாக்கி, தேசபக்திப் பாடல்களை அரங்கேற்றினர். கண் பார்வையும் மங்கி, செவிப்புலனும் கூர்மை குறைந்து, இக்கால நடப்பியலுக்குச் சிறிதும் தொடர்பில்லாமல் வாழும், சுதந்தரப் போராட்ட கால முதியவர்களைத் தேடிப் பிடித்து, அவர்கள் அரை குறையாக உதிர்க்கும் நினைவுகளைப் பதிவு செய்து மக்கள் தொடர்பு சாதனங்கள் கடமையை நிறைவேற்றின. இந்தக் கொண்டாட்டங்களில், சுதந்தரப் போராட்ட நாட்களில் இருந்து தொடர்ந்து பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும், ஒரே இலட்சியத்துடனும் வேகத்துடனும் செயல்பட்டு வரக்கூடிய ஒரு மனிதரைக்கூட அடையாளம் காண முடியவில்லை. ஏனெனில், ‘சுதந்தரம் வரும்' என்ற விடிவெள்ளி உதயமாகும் போதே, நாடு துண்டாடப்பட்டதும், குறிக்கோள்களை எட்டும் பாதைகளில் இருந்து குறுகிய இடைவெளிகளில் போராளிகள் தள்ளப்பட்டதும் குழுக்களாகப் பிளவுகள் ஏற்பட்டதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாயின.

    காந்தியடிகள் கண்ட சுயராச்சிய. கிராம ராச்சியக் கனவுகள். தனிமனிதத் தூய்மை. ஒழுக்கப் பண்புகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் அந்த வரையறைகள் மெல்ல மெல்ல, தன்னலம், பதவி, புகழ் ஆகிய பூச்சிகளால் அழிக்கப் பெற்றன. அதே பூச்சிகள், மனித வாழ்வியலின் அனைத்து நல்லணுக்களையும் விழுங்கி, புற்று வளர்ச்சி போன்றதொரு சமுதாய வளர்ச்சியை, மேன்மையைத் தோற்றுவித்திருக்கிறது. வாழ்க்கை வசதிகள் ஏராளம். ஆனாலும் அடிப்படை வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.

    இந்தப் பின்னணியில், நான் இந்தப் புதினத்தை எழுதுவதற்கான உந்துதல் பெற்றதற்கொரு காரணம் உண்டு.

    ‘ஸ்டாலின் குணசேகரன்' என்ற ஈரோட்டு வழக்கறிஞர், தம் தொழிலை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ என்ற தலைப்பில், ஓர் அரிய நூலைத் தொகுக்கும் முயற்சியில் இறங்கினார். அந்த நண்பர், இதற்காக நாடு முழுதும் மக்களைச் சந்தித்தும், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் என்று அலைந்து திரிந்து தேடியும் தகவல்கள் திரட்டுகையில் அவ்வப்போது வந்து என்னைச் சந்திப்பார். ஆர்வமுடன் விடுதலைப் போராட்ட வீரர்களை, தியாகிகளைப் பற்றிய செய்திகளை விவரிப்பார். தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற வீரர்களைப் பற்றிய நூல்கள், நாடு தழுவியும், பல்வேறு பிராந்தியங்கள் சார்ந்தும் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த நூல்களிலெல்லாம், தமிழகம் சார்ந்த வீரர்களின் போராட்டம் பற்றிய விவரங்கள் முழுமையாகப் பதிவு செய்யப் படவில்லை என்ற உண்மை புலனாயிற்று. எனவே அவருடைய பெருமுயற்சியின் பயனாக, பல்வேறு சான்றோர்களால் எழுதப்பட்ட நூறு கட்டுரைகள், சுமார் ஆயிரத்து இருநூறு பக்கங்களைக் கொண்ட நூல் இரு தொகுப்புகளாகப் பதிப்பிக்கப்பட்டு விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற தலைப்பில் 2000ம் ஆண்டில் வெளிவந்தது.

    இந்த அரிய தொகுப்பு நூலைப் படித்தபின், சுதந்தரப் போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்போ, அனுபவங்களோ எதுவும் இல்லை என்ற நிலையிலும், என் சிறுமிப் பருவத்திலிருந்து, எழுபத்தெட்டு வயதை எட்டியிருக்கும் இந்நாள் வரை, இந்நாட்டில் பிறந்த ஒரு பெண்ணாய், பார்வையாளராய், ஓர் எழுத்தாளராய் மலர்ந்த உணர்வுகளுடன் இந்த தேசிய நீரோட்டத்தில் கலந்த கொண்டிருக்கிறேன் என்ற தன்னுணர்வு ஏற்பட்டது. நான் அறிந்த பழகிய பலரும் என் மன அரங்கில் உயிர் பெற்றார்கள்.

    இந்திய சுதந்தரப் போராட்டம் என்பது, உலகிலேயே முதன் முதலாக, அஹிம்சை நெறியில் மக்களை ஒன்று திரட்டி, அந்தப் பேருணர்வில் விளைந்த ஆற்றிலனாலேயே, அந்நிய ஆதிக்கத்தை எதிர்கொள்ளத் துணிந்த வரலாறாகும். அதைச் சாதித்தவர், இந்த இருபதாம் நூற்றாண்டின் மாமனிதராகிய காந்தியடிகள். அந்த 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் -14-15 நாள்ளிரவுக் கொண்டாட்டங்கள் நடந்த போது நான் சென்னையில் இருந்தேன். புதிய இளமை; புதிய விடிவெள்ளி. மக்களின் அந்த மகிழ்ச்சியை, அந்த ஆரவாரங்களை, எதிர்பார்ப்பை, நம்பிக்கையை, குடிசையில் இருந்து கோமான் வரையிலுமான மகிழ்ச்சிப் பிரதிபலிப்பை நானும் அநுபவித்தேன்.

    இந்நாட்களில் கொண்டாட்டம் என்றால், குடி, கூத்து, விரசமான ஆட்டபாட்டங்கள் என்பது நடைமுறையாகி இருக்கிறது; குற்றமற்ற அந்த மகிழ்ச்சி ஆரவாரங்களை. 'ஆடுவோமே. பள்ளுப்பாடுவோமே' ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட்டோமென்று' பாடல் முழங்கும் சூழலை மறக்கவே இயலாது.

    1972 இல், நாம் சுதந்திரத் திருநாட்டின் வெள்ளி விழாவைக் கொண்டாடினோம். ஆனால் விடுதலைப் போராட்டத்தில் ஆக்க சக்தியாகப் பரிணமித்த அஹிம்சைத் தத்துவமும், மொழி, சமயம், சாதி, இனங்கள் கடந்த நாட்டுப் பற்றும் இந்நாள், முற்றிலும் வேறுபாட்டு, பிரிவுகளும், பிளவுகளும், சாதி-சமய மோதல்களாகவும், வன்முறை அழிவுகளாகவும் உருவாகியிருந்தன. 72இல், இந்தச் சறிவை அடிநாதமாக்கி, காந்தியக் கொள்கைகள் இலட்சியமாக ஏற்க இயலாதவையாக, இந்நாட்டின் மேம்பாட்டுக்கு அக்கொள்கைகளைச் செயல்படுத்துவது மதியீனமா, என்ற வினாக்களை எழுப்பினேன். ‘வேருக்கு நீர்’ என்ற புதினம் காந்தி நூற்றாண்டும், தீவிரவாதமும் முரண்பாடும் சூழலில் உருவாயிற்று.

    காந்தியடிகள், சமுதாயத்துக்கும் அரசியலுக்குமாக ஏழு நெறிகளைக் குறிக்கிறார். 1. கொள்கையோடு கூடிய அரசியல். 2. பக்தியோடு இணையும் இறைவழிபாடு. 3. நாணயமான வாணிபம். 4. ஒழுக்கம் தலையாய கல்வி. 5. மனிதநேய அடிப்படையிலான அறிவியல் வளர்ச்சி. 6. உழைப்பினால் எய்தும் செல்வம். 7. மனச்சாட்சிக்குகந்த இன்பம். இந்த ஏழுநெறிகளில் ஒன்று பழுதுபட்டாலும், சமுதாயமாகிய மரத்தில் பூச்சிகள் மண்டி பயன் நல்கும் உயிர்ச்சத்தை உறிஞ்சிவிடும் என்றார்.

    இந்த நெறிமுறைகளில் - வழிமுறைகளில் சிற்சில வேற்றுமைகள் பிரதிபலித்த போதிலும், அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபடும் இலட்சியம் ஒன்றுபட்ட குரலாக ஓங்கி, அதைச் சாதித்தது.

    பொது உடமைச் சித்தாந்தம் 'தனிமனித’ அடிப்படையில் உருவாகவில்லை. அது ஓர் இயக்கமாகவே செயல்படுத்தும் தத்துவமாகிறது.

    ஆனால் தனிமனித ஒழுக்கத்தை முன்னிறுத்தியே 'சத்தியக் கிரகப்போர்’ செயல்படுத்தப்பட்டது.

    வறுமையும், எழுத்தறியா அறியாமையும் பல்வேறு சமய கலாசாரங்களும் இருந்தாலும், ‘பாரத கலச்சாரம்' என்ற பண்பாடு - இருந்தத் துணைக் கண்டத்து மக்களை ஓர் ஆலமரமாக, விழுதுகளாக, ஒன்றுபடுத்தித் தாங்கி நின்றது.

    இந்நாள், முப்பது கோடிகளாக இருந்தவர்கள். நூறு கோடியைத் தாண்டி விட்டவர்களாக மக்கள் பெருகியிருக்கிறோம். இந்தப் பெருக்கமும், அறிவியல் காரணமாக பலதுறை வளர்ச்சிகளும், மக்களை ஒருங்கிணைக்கும், சமுதாய மேம்பாட்டு எல்லைகளைத் தொட்டாலும், நடப்பியல் வாழ்வில் குரேதங்களும், வன்முறை அறிவுகளும், மனித நேயம் மாய்ந்து விடும் வாணிப அவலங்களும் இரைபடுவதற்கு என்ன காரணம்? கிராமங்கள் தன்நிறைவு கண்டு, மக்களை வாழவைத்து, நலங்களைப் பெருக்கி, அவசியமான நகரங்களுக்கும் வளங்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படைப் பொருளாதாரம் என்னவாயிற்று? இயற்கை தரும் கொடையை என்னுடையது ‘உனக்கில்லை' என்று சகமனிதரைச் சாகவைக்கும் பிளவுகளில், அரசியலும் ஆதாயம் தேடுகிறது. ஏவுகனைகளை வெற்றிகரமாகச் செலுத்தும் சாதனை நிகழும் களத்திலேயே, பட்டினியாலும், குண்டு வெடிப்புகளாலும் எந்தப் பாவமும் அறியா மனிதர். போருக்குச் சோறு போடும் தொழில் செய்பவர் மடிகின்றனர்.

    இந்த அநியாயங்களுக்குத் தீர்வு இல்லையா? எங்கு தொடங்கி எப்படிச் செயல்படுவோம்? எதிர்கால இந்தியாவுக்கு நம்பிக்கை உண்டா? உண்டு. அழிவுகளிலும், சில நல்ல விதைகள் தோன்றியிருக்கின்றன. அடிமைப்பட்டுக் கிடந்த நாட்களில், பாரத விடுதலையைப் பற்றிய ஊக்கம் பெற்ற தலைவர்கள். அந்நிய மண்ணில் தான் கிளர்ச்சி பெற்றனர். வெளிச்சத்தில் நின்று பார்க்கும் போது தான், இருள் துல்லியமாகத் தெரிகிறது. நம் வேர்களை உணர்ந்து, சுயநம்பிக்கையும் எழுச்சியும் பெற்று, இலட்சியத்துக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் முன் வைத்தார்கள்.

    இந்நாட்களில், புதிய கல்வியும் தொழில் நுட்பமும் பெற்ற இளைஞர் பலர். நம் வேர்களைத் தேடப் புத்துணர்வு பெற்றிருக்கின்றனர். பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் இயக்கங்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அறியாமையையும் வறுமையையும் அகற்ற, அவற்றுக்குக் காரணமான கற்றுக் கண்களைத் தகர்க்க, செயல்படத் தொடங்கி இருக்கின்றனர். நலிந்த இடங்களில் எல்லாம், புதிய ஊக்கமும் விழிப்புணர்வும் காட்ட, இந்த இயக்கங்கள் செயல்படுகின்றன. ‘சிப்கோ' இயக்கத்தில் இருந்து, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், எழுத்தறியாமை ஒழிப்பு. சிறார் தொழில் சிறுமைகளைதல், சாதி சமய மோதல்களில் நிகழும் குரூர வன்முறைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குக் காரணமான சமூக அவலங்களைக் களைதல். என்றெல்லாம் பல இலக்குகளில் இளைஞர் பலர் செயல்படத் தொடங்கியுள்ளனர். புலம் பெயர்ந்து அந்நாட்களில் கூலித் தொழில் செய்து சிறுமைப் படச் சென்ற தலைமுறையில் இருந்து, இந்நாள் புலம் பெயர்ந்து சென்றிருக்கும் இளைஞர் வேறுபட்டவர்கள். இந்நாட்களில் தலையெடுத்து நிமிரும் இளைஞர் நம்பிக்கைக்குகந்தவர்களாய் புதிய புதிய துறைகளில் சாதனைகள் செய்பவர்களாய்த் திகழ்கிறார்கள். அவர்கள் தம் வேர்களைக் கண்டறிந்து, புதிய ஆற்றலுடன், பாரதத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வார்கள்.

    மகாபாரதமும், இராமாயணமும், பாரதத்தின் பெருமை சொல்லும் இதிகாசங்கள். நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் இவ்வுலகில் இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அழிவு, உயிர்ப்பு இரண்டையும் மாறி மாறிக் காட்டும் காலத்துக்கு முடிவோ எல்லையோ இல்லை.

    இராமாயணம். இராமனின் முடிசூட்டுதலுடன் முடிந்து விடுவதில்லை. அதேபோல் குருட்சேத்திரப் போருடன் மகாபாரதம் நிறைவு பெற்றுவிடவில்லை. சீதை வனவாசம் தொடருகிறது; யாதவர்களின் அழிவும் நிகழ்கிறது. நம் சுதந்தரப் போராட்டமும் ஒரு காப்பியம் போன்றதுதான். அரசியல் விடுதலையைத் தொடர்ந்து இந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சரிவுகளும் மோதல்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காரிருள் கவியும் போதே, விடிவெள்ளி தோன்றும் என்பது நிச்சயமாகிறது. உறைபனியில் கருகும் பசுமைகள் மீண்டும் உயிர்க்கின்றன. எனவே ‘உத்தர காண்டம்’ என்ற தலைப்பிட்ட இந்தப் புதினத்திலும் அந்த நம்பிக்கை விடி வெள்ளிகளைக் காட்டியிருக்கிறேன். இந்தப் புனைகதை. சற்றே வித்தியாசமாக, முன்னும் பின்னுமாகப் புனையப்பட்டிருந்தாலும், என் சிறுமிப் பருவத்திலிருந்து இந்நாள் வரையிலும் நான் கண்டு பேசிப் பழகி, அறிந்து உணர்ந்த பாத்திரங்களையே உயிர்ப்பித்திருக்கிறேன். தன்னார்வத் தொண்டியக்கங்கள் வாயிலாக, இந்நாட்டின் வேர்களைக் கண்டு புத்துயிரூட்ட முனைந்துள்ள இளைய தலைமுறையினரும் கற்பனையில் உதித்தவரல்லர்.

    நன்றி வாழ்த்துக்கள்.

    ராஜம் கிருஷ்ணன்

    *****

    1

    வாசலில் வண்டி வந்து நின்று கதவு அரைபடும் ஓசை கேட்கிறது. முற்பகல் நேரம். தாயம்மாள் கூடத்தில் மேலே மாட்டப்பட்ட காந்தியடிகள் படத்தை, சிறு மேசையில் ஏறித் துடைத்துக் கொண்டிருக்கிறாள். அன்றாடம் அதைத் துடைப்பது அவளுக்கு ஒரு வழிபாடாக இருக்கிறது. காந்தியடிகளின் படத்துக்குக் கீழே ஐயாவின் படமும் அம்மாவின் படமும் இருக்கின்றன. அவற்றுக்குச் சற்றுக் கீழே ராதாம்மாவின் படம்.

    இவர்கள் யாரும் இன்று இல்லை. ஆனால் இவர்களுடைய வாழ்நாளின் நினைவலைகள் அவள் உள்ளக் கடலில் மாயவேயில்லை.

    அழுக்குப்படியாமல் துடைப்பது மட்டுமே அவள் செய்யும் பணி. பொட்டு, பூ, மாலை என்று எதுவும் இல்லை.

    அய்யா இருந்த நாட்களில், காந்தி படத்தைக் கையால் நூற்ற நூலினால், மலர்மாலை போல் செய்யப்பட்ட மாலை ஒன்று அலங்கரித்துக் கொண்டிருந்தது. அய்யா நூற்பதை விட்ட பின்னரும், மதுரை ஆசிரமத்திலிருந்து, ஒவ்வொரு காந்தி ஜெயந்தி நாளிலும் நஞ்சுண்டையா வருவார். பழைய மாலையை எடுத்துவிட்டுப் புதிய மாலையை இசைப்பார். அய்யா, படுக்கையோடு விழுந்தபின், நஞ்சுண்டையா அடிக்கடி வந்து உட்கார்ந்திருப்பார். பேசவே மாட்டார்கள். அய்யா இறந்தபின் உடனே வந்தார். அடுத்த ஆண்டுக்கு அவரும் இல்லை...

    மின்னல் கோடுகளாக நினைவலைகளின் தாக்கத்தில் அப்படியே பொஞ்சியின் மீது நின்ற அவள். சட்டென்று இறங்க முயன்று சாயுமுன் இருகரங்கள் அவளைத் தொட்டுத் தாங்குகின்றன.

    கூச்சத்தில் குறுக இறங்கி நிலை பெறுகிறாள்.

    ஓ... இவனா? வெறுப்பு முகத்தைச் சுளிக்க மேலிடுகிறது.

    ‘என்னை ஏதற்கடா தொட்டுத் தாங்கினாய்? உன்னைப் பத்துமாதம் இந்த வயிற்றில் வைத்துக் கொண்டு, பால் கொடுத்து, பாசம் காட்டி வளர்த்ததற்காக அணு அணுவாய்ச் சிதைந்து கொண்டிருக்கிறேன்...' என்று மனம் குமைகிறது.

    வாங்கையா? வாங்க? என்று கொல்லைப்புறம் இருந்து வரும் ரங்கசாமி. மேலே சுழலும் விசிறிக்கான விசையைப் போடுகிறான். கூடத்தில் நாற்காலி ஏதுமில்ல. அகலமான பெஞ்சு ஒன்றுதான் இருக்கிறது. அய்யா கடைசி நாட்களில் அதில் தான் படுத்திருந்தார். அந்தக் கூடத்தில் உத்தரக்கட்டைக் கொக்கிகளில் தொங்கிய தேக்குமர ஊஞ்சல் அது. ராதாம்மா உட்கார்ந்து ஆடுவாள். தேனாம்பேட்டை வீடும் சுற்றுப்புறங்களும் சேவாகுருகுலம் என்றான பிறகு அந்த ஊஞ்சல் இங்கு வந்தது. இந்த வீடும் சுற்று வட்டம் மன்னர்களும் அம்மாவின் பிறந்த வீட்டு வழியில் வந்தவை.

    உக்காருங்கையா? விசிறில காத்தே வரல...

    அவள் துடை துணியை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் வந்து அடுப்பைப் பார்ப்பது போல் பாவனை செய்கிறாள்.

    ராகிக்கூழோ ஓர் அரிசிப் பொங்கலோ தான் இவள் சமையல்.

    ஏதேனும் காய், கீரை-மோர்.

    ரங்கசாமி சமையற்கட்டின் வாயிற்படியில் நிற்கிறான். எதுனாலும் வாங்கிட்டு வரட்டுமாம்மா?

    என்ன வாங்கணும்? பச்சக் கொத்துமல்லி துவையல் அரச்சிக்கிறேன். எனக்கு ஒண்ணும் வாங்கித் தர வேணாம்! நறுக்கென்று துண்டிப்பு.

    ரங்கசாமி?

    ஐயா? என்று அவன் ஓடி வருகிறான்.

    சில்லுனு கொஞ்சம் மோர்... அம்மா...!

    உள்ளே வந்து அடைந்த அவளைக் கொக்கி போட்டு இழுக்கிறானா? உழக்குத் தயிரைக் குறுக்கி, பானையில் இருந்த நீரை ஊற்றி, உப்பும் சீரகத்தூளும் தாவி தவலைச் செம்பில் கொண்டு வந்து பலகையில் வைக்கிறாள்.

    என்ன வீராப்பானாலும், வயிற்றுச்சதை அசையாமலில்லை. இவனை அவள் எப்போது பார்த்தாள்? இந்தப் பக்கம் ஏதோ விழா - கல்யாணம் என்று வந்ததாகச் சொன்னான். மாலை சால்வை என்ற வரிசைகளை ஒரு கட்சிக்காரன் அவளுக்குத் தெரிவதற்காக வாங்கிக் கொண்டு நின்றான். இவள் அப்போது வாசல் மேல் திண்ணையில் அமர்ந்திருந்தாள்.

    அப்பனைப்போல் கறுப்புத்தான். எடுப்பான முகம். சாதிப்பேன் என்ற திமிர் தெரியும் பார்வை. கட்சிக்கரை வேட்டி

    இவள் அலட்சிய பாவத்துடன் விசிறிக் கட்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.

    எப்படி இருக்கீங்கம்மா? உங்க மருமவதா பாத்துட்டு, கூட்டிட்டு வாங்கன்னு நச்சரிக்கிறா. மஞ்சு கல்யாணத்தப்ப வந்திட்டு உடனே கிளம்பிட்டீங்க. புது வீடு வசதியா கட்டிருக்கு. உங்க இஷ்டப்படி கிணத்துல எறச்சி ஊத்திட்டுக் குளிக்கலாம். வயசு காலத்துல மகன் செல்வாக்கா இருக்கறப்ப நீங்க இப்ப இருக்கலாமா...? என்று கெஞ்சினான்; குழைந்தான்.

    ஆப்பிலும் மலை வாழயுமாகத் தட்டுக்கள் வந்தன.

    இதெல்லாம் இங்க எதுக்குக் கொண்டாரீங்க? எனக்கு கூழுகுடிச்சித்தா பழக்கம். எனக்கு எதுவும் வாணாம். இதெல்லாம் கொண்டு போயி அதா அங்க ரோட்டோரம் கட்டிடம் இடிக்கிற ஏழைக்கும்பல் குஞ்சும் குழந்தையுமா பிழைக்க வந்திருக்கு. கொண்டு கொடுங்க! என்று திருப்பினாள்.

    ஆனால் அன்று பார்த்த அந்த உருவமா? அவனா இவன்? ஐம்பதைத்தானே கடந்திருக்கிறான்? எழுபது எழுபத்தைந்து என்று மதிப்பிடும் அளவுக்கு எப்படிச் சோர்ந்து போனான்? மழையும் காற்றும் வெயிலும் புரட்டிப் போட்டதாகச் சொல்ல முடியாது. சொகுசு கார்; ஏ.ஸி. என்று ஏதேதோ சொல்கிறார்கள். உழவோட்டி, சேற்றிலும் சகதியிலும் ஊறி, கால் வயிற்றுக் கஞ்சியும் கள் மொந்தையும், பண்ணையடிமையின் உலகில் முழு வாழ்வையும் கழித்த பாட்டன் அவளுக்கு நினைவு தெரிந்து தொண்ணூறு வயதிலும் இப்படித் துவளவில்லையே!

    தாயம்மா? உங்காயா நல்ல செவப்பு. அதா நீயும் செவப்பா இருக்கிற... எந்தெரியுமா? என்று ஒரு பல் தெரியச் சிரிப்பான்.

    அட, சீ! நீ எதும் பேசாதே? பச்சப்புள்ள கிட்டப் போயி இதெல்லாம் பேசிக்கிட்டு! என்று சின்னாயி அதட்டுவாள். அந்தப் பாட்டன் பொடுக்கென்று செத்துப் போனான்.

    அடிமை வருக்கம் மேல் படியில் வந்ததும், மேல் படிக்குரிய எல்லாக் கசடுகளும் படிந்து விடுமோ? அவளுக்குத் தோன்றவில்லையே? மேலும் இவன் மேல் வருக்கத்தில் தானே கண் விழித்தான்!

    அவன் மோரைக் குடித்து விட்டுக் குளிர்ச்சியை அநுபவிப்பவனாக முகம் கனியப் பார்க்கிறான்.

    பானைத் தண்ணி ஊத்திக் குடுத்தியாம்மா? என்ன இருந்தாலும் பானைத் தண்ணி சுகம் சுகம்தான். ஃபிரிடஜ்ல வச்சத எடுத்தா தேள் கொட்டுறாப்புல இருக்கும். வெளில வச்சாலும் தாகம் அடங்காது...

    உப்புத் தின்னுறவனுக்கு வெளில வச்சாலும், ஃபிரிட்ஜூக்குள்ளாற வச்சாலும் தாகம் அடங்காது?

    சுருக்கென்று ஊசிக் குத்து பாய்கிறது.

    பேச்சு எழவில்லை.

    ஆனால் அவள் மனம் புலம்புகிறது.

    'மேல் படி'யில் தான் அந்த அய்யா கண் விழித்தார். படிகளைத் தட்டி, எல்லோரும் சமம் என்று பெரிய கைகளை நீட்டி எல்லோரையும் அணைத்துக் கொள்ளவில்லை?

    இதழ்கள் துடிக்க மேலே படங்களைப் பார்க்கிறாள்.

    காத்தி... மகான் காந்தி... மகாத்துமா காந்தி... அந்தச் சொல்லின் காந்தியில், கீழ் வரிசையில் உள்ள அய்யாவும் அம்மாவும் தங்கள் வாழ்க்கையையே காணிக்கையாக்கினார்கள்.

    அவர்கள் புழங்கிய மண்; தண்ணீர்... கிணறு. இன்றும் அதில் நீர் அடியில் தெரியும் பாறையைக் காட்டிக் கொண்டு பளிங்காய், ஊற்றுக் கண்களால் வாழவைக்கிறது...

    அம்மா... உன்னைக் கூட்டிட்டுப் போகணும்னு வந்திருக்கிறேன். புது வீட்டில் உன் அடிபடணும்னு கெஞ்சிக்கிறேன்... அவள் காலைப் பிடிக்கவும் விழைகிறான்.

    ஏய், இந்தக் காலுல விழற சாகசமெல்லாம் வேணாம். நா எதுக்கு அங்க வரணும்? எனக்கு ஒரு உறவும் யாருடனும் இல்ல. நீ என் வயித்தில் குடியிருந்த தோசத்துக்கு என்னென்ன எப்பவோ பெருமைப் படுத்தி கவுரவிச்சிட்ட. அதுவே எனக்கு இந்த சன்மம் முச்சூடும் போதுமப்பா!

    அம்மா... நீங்க இப்படிப் பேசலாமா? அரசியல்ங்கறது, சொந்த பந்தத்துக்கு அப்பாற்பட்டது. நீங்க ஆயிரம் மறுத்தாலும், நா உங்க மகன்ங்கறது இல்லாம போயிடுமா? ரஞ்சிதம் படுபடுக்கையாயிருக்கா. அவதா அம்மாளை எப்படின்னாலும் கூட்டிட்டுவாங்க. அவங்க மனசெரியும்படி நடந்து போச்சு. வாஸ்தவந்தா, ஆனா அதுக்குப் பிறகு எத்தனையோ மாறிப்போச்சி. நேத்து பரம விரோதியா இருந்தவன்லாம், இன்னைக்கு அரசியல் மேடையிலே கட்டித் தழுவி சொந்தம் கொண்டாடுறா. தாய் மகன் தொடர்பு. பெத்த மக்கள் தொடர்பு விடுமா. விடாது... என்று என்னைக் கட்டாயப் படுத்தி அனுப்பிச்சிருக்கா. அவ பேச்சுக்கு மதிப்புக் குடுக்கக் கூடாதா?"

    அவள் பார்க்கிறாள். இவன் மகா சாமர்த்தியக்காரன். நாடகம், வசனம், சினிமான்னு ஊறியவன். அரசியலில் சூது வந்திட்டதுன்னு, அன்றைக்கு அய்யா உதறித் தள்ளினார். அந்த அரசியல் மக்களை நல்ல மனிதர்களாக்கும் ஒழுக்க இலட்சியத்தை முதலில் வைத்தது... இவர்கள் அடிப்படையே வேறு தூ...! மனசுக்குள் காறி உமிழ்ந்து கொண்டு அவள் சமையலறைப் பக்கம் திரும்புகிறாள்.

    அம்மா... அம்மா...

    அவன் அவள் பின் வந்து காலடியில் விழுகிறான்.

    இதபாரு. இந்த நடிப்பெல்லாம் எனக்கு வேண்டாம். என்னால் இந்த நிழலை விட்டுவர முடியாது...

    தொண்டை கம்மி, கண்கள் கலங்குகின்றன.

    சரி. அதைப்பத்தி நா இப்ப எதும் பேசல. பேயானாலும் தாய்ம்பாங்க. ரஞ்சிதத்துக்கு நாளைக்கு ஆபரேசன்... அதுக்கு முன்ன உங்களைப் பார்க்கணும்னு சொல்றா...

    அப்படி உருகுபவன் என்றேனும் வண்டியெடுத்துக் கொண்டு வந்திருக்கலாமே? இனி என்ன ஆபரேசன்? முப்பத்திரண்டு வயசிலேயே கர்ப்பப்பையை எடுத்துப் போட்டாயிற்று. பெரிய பையனே அப்பனின் வாரிசாக சரித்திரம் பண்ணிக் கொண்டிருப்பதாக அவள் செவிகளில் விழுகிறது - அடுத்த பெண்தான் மஞ்சு. இரண்டுக்கும் ஒரே மாசம்தான் வித்தியாசம். அது பதினெட்டாகுமுன் ஒரு காதலில் விழுந்து, வயிற்றில் வாங்கிக் கொண்டு, கல்யாணம் பண்ணினார்கள்... அது என்னவோ டிவோர்சாம்.

    குப்பைகள் மேலே மேலே சேர்ந்தால், அடங்காத துர்நாற்றத்தில் ஆவியடிப்பதுபோல் இருக்கிறது.

    அம்மா, இப்படி, முன்னும் இல்லாமல், பின்னும் இல்லாமல் நீ எதற்காக இந்த வீட்டைக் கட்டிக் காத்துக் கொண்டு இருக்கணும்? எஸ்.கே.ஆர். இருந்த வரை சரி. அவர் போய் பதினாறு வருசமாயிடிச்சி. வாரிசுன்னு யாரும் இல்லை. இது டிரஸ்ட்டைச் சேந்தது. அந்தப் பரசுராமன் நீ கட்டிக் காக்குறதாக நினைக்கும் இலட்சியத்தை என்னிக்கோ குழிதோண்டிப் புதைச்சிட்டான். உன்னை ஒருநாள், வேலைக்கார நாயே, வூடு சொந்தம்னு நினைக்காதே, வெளியே எறங்குன்னு சொல்லு முன்ன, நீ முடிவெடுக்கணும்!

    அவள் ஒருகணம் திகைக்கிறாள். அவன் சொல்வானோ. சொல்லமாட்டானோ, இவன் சொல்கிறான்.

    நெஞ்சு கொதிக்கிறது.

    தாயம்மா. நீ தகுந்த பேர வச்சிட்டு. இங்கே ஏழைப் பெண்கள் தொழிற் கூடம் எதானும் வைக்கணும். நான் உயிலில் எழுதி இருக்கிறேன். கடைசி வரையிலும் நீதான் இருந்து கவனிக்கணும்... ராதாம்மா பேரை வைத்து நடத்தணும். எங்கெங்கோ பெண் குழந்தைகளைக் கொல்லுறாங்களாம். அந்த அவநம்பிக்கையைக் கிள்ளி எறியணும்...

    அவருடைய சொற்கள் ஒலிக்கின்றன.

    அப்போது பெரிய டிஃபன் காரியருடன், ரங்கன் அய்யாவுக்குச் சாப்பாடு கொண்டு வருகிறான்.

    கிருஷ்ணா ஹோட்டல் முதலாளி ஐயாவைப் பார்க்க வரேன்னாருங்க... ரங்கன் குழைந்து நிற்கிறான். இவன் போய்ச் சொல்லி இருப்பான். சாராய, வாட்ஜ் சாம்ராச்சியம் என்பது தெரியும். 'இவனெல்லாம் அரசியல் மேடைகளில் புகழ் மாலைகளைத் தேடுகிறாங்க!’ என்று அய்யா புழுங்கிக் குமைந்தார். அவன் பஞ்சாயத்து. நகராட்சி என்று தேர்தல் காலங்களில் அவரைக் காண வருவான். தாயம்மா நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவு! கறைபடிந்த தடங்கள் என்பார்.

    இன்று பெரிய சாலையில் பெரிய ஓட்டல் கட்டி விட்டான். காரோடு வந்து தங்குறாங்களாம்...

    அய்யா. சாப்பாடு வைக்கட்டுங்களா...?

    பெரிய பெஞ்சின் பக்கம். சிறிய மேசையைப் போட்டு அவன் பின்பக்கம் வாழை இலை அறுக்கச் செல்கிறான். ஆனால் அதற்குள் தலைவர் விடுக்கென்று திரும்பி கோபத்துடன் வெளியே நடக்கிறார். அவருடைய மேல் வேட்டியின் விசிறியில் காரியரின் நீண்ட ஆணி மாட்டி, அது நிலைகுலையச் சரிகிறது. குப்பென்ற மசாலா வீச்சமும் வறுத்த அசைவமும். தாயம்மாளின் உள்ளக்கனலை வீசி விடுகின்றன.

    *****

    2

    கார்க்கதவு பட்டென்று அறைபடும் ஓசை கேட்கிறது.

    கோபம்... கோபம் பாவம்... அது நீசத்தனமான செயல்களுக்கு வழி வகுக்கும். அவளும் கோபப்படுகிறாள்.

    ஏய் ரங்கா? என்ன எழவுடா இது? எதுக்குடா இதெல்லாம் இங்க கொண்டு வந்த...?

    அவன் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கிறான். சேவா குருகுல அறங்காவலர் குழுதான் அவனை இங்கு நியமித்திருக்கிறது. அய்யா இறந்தபின், கிராமத்திலிருந்து வந்தவன்தான். இந்தப் புள்ளியைச் சுற்றி இவன் உறவுகள் ஏதேதோ காரணம் சொல்லிக் கொண்டு நகரச் சந்திக்கு வந்திருக்கின்றனர். இந்த நகரத்தில் குடியிருப்பவர் அதிகமானவர்கள் கிராமங்களில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வந்து வேர்விட்டவர்கள்தா... எங்கப்பாவுக்கப்பா அந்தக் காலத்தில் வியாபாரம்னு வந்தார். டவுனில் மளிகைக்கடை வைத்தாராம். எங்கப்பா, சித்தப்பா அத்தை எல்லோருமே - ஊரைவிட்டு வந்து குடியேறினாங்க... என்று அய்யா படுக்கையோடு விழுந்த நாட்களில் அந்தக் கதை எல்லாம் சொல்வார். பதினாறு வயதில் கல்யாணத்தைப் பண்ணி வைத்து. பையனை மேல் படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கனவு கண்ட அப்பாவைமீறி. அவர் கனவைப் பொய்யாக்கினார். காங்கிரசில் சேர்ந்து கதர் உடுத்தும் விரதம் ஏற்றதும், கள்ளுக்கடை மறியல், தீண்டாமை ஒழிப்பு என்றெல்லாம் மகன் அன்றைய நடைமுறை சட்ட திட்டங்களை உடைத்தார். இந்த வீடு, அவரை மணம் புரிந்த பத்தினி தெய்வத்துக்குச் சொந்தமானது. அந்நாளில் அரிசி மண்டி மொத்த வியாபாரம் செய்த குடும்பத்தின் ஒரே வாரிசு. ரங்கூனில் இருந்து வேர் பற்றிய குழந்தையும் குட்டியுமாக வந்த குடும்பங்களை வரவேற்று ஆதரித்த காலத்தில் கட்டப்பட்ட வீடு. தாயம்மாவுக்கு அப்போது இருபது இருபத்திரண்டு பிராயம் இருக்கும். பானை பானையாகப்

    Enjoying the preview?
    Page 1 of 1