Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - April 2020
Kanaiyazhi - April 2020
Kanaiyazhi - April 2020
Ebook191 pages54 minutes

Kanaiyazhi - April 2020

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

April 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580109505299
Kanaiyazhi - April 2020

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - April 2020

Related ebooks

Reviews for Kanaiyazhi - April 2020

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - April 2020 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி ஏப்ரல் 2020

    மலர்: 55 இதழ்: 01 ஏப்ரல் 2020

    Kanaiyazhi April 2020

    Malar: 55 Idhazh: 01 April 2020

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி ஏப்ரல் 2020

    தலையங்கம் - ம.ரா.

    ஆம்! அதன் பிறகும் நாம் இருப்போம்!

    கரோனா!

    உலக வரலாற்றில்

    இந்த அளவு அச்சம் மூட்டிய

    முன் நிகழ்வு ஏதும்

    இருந்ததாகத் தெரியவில்லை.

    பூமியின் எசமானர்களை -

    எல்லா உயிர்களுக்கும்

    தலைவர்களை - மனிதர்களைக்

    கதிகலங்க வைத்திருக்கிறது!

    ஊரடங்கு உத்தரவு

    உலக வாழ்க்கையை

    உருமாற்றி இருக்கிறது!

    வெறிச்சோடிக் கிடக்கின்றன

    வானமும் கடலும்!

    அமைதியின் குரூரத்தில்

    பேச்சற்றுக் கிடக்கிறது பொதுவெளி!

    இயற்கையின் சீற்றமா?

    மரபணுச் சிதைவின் மாற்றமா?

    வல்லரசுகளின்

    உயிர் ஆயுத ஒத்திகையா?

    ஊடக அலசல்

    ஒரு முடிவுக்கும் வரவிடவில்லை.

    பாக்டீரியாக்கள்

    தனியாக உயிர் வாழுமாம்

    வைரஸ்

    இன்னொன்றில் தொற்றிக்கொண்டே

    அலைக்கழிக்குமாம்!

    தொற்றிக் கொண்டதில்

    ஊடுருவிப் பரவுமாம்!

    தொற்றிக்கொள்ள இடம் கொடுத்தவரைக்

    கொன்றழித்துத் தன் இனம் பெருக்குமாம்!

    இடம் கொடுக்காவிட்டால்

    தற்கொலை செய்துகொள்ளுமாம்!

    செத்துப் போகுமாம்!

    உலகம் இடம் கொடுத்துவிட்டது!

    கரோனா

    உலா வரத் தொடங்கிவிட்டது!

    அறிவியலுக்கும் அதிகாரத்திற்கும்

    சவால் விடுகிறது!

    எந்த நாட்டின்

    ஏவுகணை கிருமி இது?

    துக்கமாகி இருக்கிறது மக்களின் தூக்கம்.

    உலக நாடுகளை மாநகரங்களை

    ஊர்களை வீடுகளைத்

    தனிமைப்படுத்திய கரோனா

    இப்போது ஒவ்வொரு மனிதரையும்

    தனியாக இருக்கச் சொல்கிறது!

    அன்றாடக் கூலியில் ஆயுளைக் கரைக்கும்

    சாதாரண மக்களின்

    வாய்க்கும் கைக்குமான

    வாழ்க்கைப்பாட்டைத்

    திகிலாக்கி இருக்கிறது.!

    உழைக்க வழியின்றி

    இருபத்தோரு நாட்களை

    ஓட்டுவது எப்படி?

    உழைத்த கைகள்

    முகம்பார்க்க அச்சப்பட்டு

    முடங்கிக் கிடக்கின்றன.

    மனிதர்களுக்கு இப்போது

    வீடே முகக் கவசம்.

    வெளிக்காற்றிலும் நம்பிக்கை இல்லை

    வீட்டிற்குள் உயிரோடு

    புதையுண்டு கிடக்கிறார்கள்.

    எழுத்தும் பேச்சும் செயலும் சிந்தனையும்

    முடக்கப்படும் உலகில்

    இப்போது

    உடலை வீட்டிற்குள் முடக்க

    ஊரடங்கு உத்தரவு!

    என்ன இது?

    பெரியம்மையும் காலராவும் வந்து

    கொத்துக் கொத்தாக மக்கள்

    செத்துக் குவிந்த போது

    மற்றவர்களை எச்சரிக்க

    வீட்டுக் கூரையில்

    வேப்பிலை சொருகினார்கள்.

    மாரியம்மனையும் காளியையும்

    மதக் கடவுள்களையும்

    வழிபாட்டிடங்களையும்

    தேடித் தேடிப் போனார்கள்!

    கடவுளின் கோபம் நோய் என்றார்கள்!

    கடவுளின் சாந்தம் மருந்து என்றார்கள்!

    இப்போது

    எல்லாக் கடவுளும் தனிமையில் இருக்க

    அரசும் மதங்களும் ஆணையிடுகின்றன.

    கரோனா வைரஸிலிருந்து

    காப்பாற்றச் சொல்லிக்

    கடவுளை யாரும்

    கட்டாயப்படுத்தக் கூடாதென்று

    வழிபாட்டு இடங்களையும்

    பூட்டச் சொல்கிறார்கள்!

    விமானங்களில் பயணிக்கத்

    தொடங்கிய போதே

    கரோனாவைக் கட்டுப்படுத்தி

    இருக்கலாமாம்!

    வெளிநாட்டிலிருந்து வருகிறவர்களை

    விமான நிலையத்திலிருந்து

    மருத்துவ முகாமுக்கு அனுப்பிப்

    பதினான்கு நாட்கள்

    தனிமைப்படுத்தி இருந்தால்

    கரோனா வைரஸைக்

    கட்டுப்படுத்தி இருக்கலாமாம்!

    பணக்காரர்களை அதிகார வர்க்கத்தை

    விளம்பரம் மிக்கவர்களைத்

    தேடிப்பிடித்துத் தொற்றிப் பரவ

    கரோனா வைரஸ்

    காத்துக் கொண்டிருப்பது தெரியாமல்

    அவர்களைத்

    தனிமையில் வீட்டில் இருங்கள் என்று

    கரோனாவை ஊர்மேய விட்டோமோ!

    கூட்டம் கூடாதீர்கள் என்று

    பொதுமக்களுக்குச் சொல்லிக் கொண்டே

    எதிர்க் கட்சித் தலைவர்கள்

    சொல்லியும் கேட்காமல்

    சட்டமன்றத்தையும் நாடாளுமன்றத்தையும்

    தொடர்ந்து நடத்தி

    எல்லாத் தொகுதிகளுக்கும்

    கரோனா பரவ

    இடம் கொடுத்துவிட்டோமோ?

    சென்னை, காஞ்சி, ஈரோடு

    மாவட்டங்களைத் தனிமைப்படுத்த

    மத்திய அரசு சொன்ன பிறகும்

    சென்னையிலிருந்து தமிழகம் முழுதும்

    கரோனாவை ஏற்றிப் போக

    கோயம்பேட்டில்

    இலட்சக் கணக்கில் மக்களை

    ஏற்பாடுசெய்து விட்டோமோ?

    எப்படியோ போகட்டும் இனி என்ன செய்ய?

    கைக்கும் வாய்க்கும்

    கலவரம் வந்துவிட்டது

    கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல்

    கரோனா இறக்க இருபத்தோரு நாட்கள்

    வீட்டுச் சிறையில் நாமிருப்போம்!

    ஆம்!

    அதன் பிறகும்

    நாம் இருப்போம்!

    அன்புடன்

    ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - பாரதிராஜா

    கவிதை - பல்லவிகுமார்

    கவிதை - மு.முபாரக்

    சிறுகதை - சந்தினி ப்ரார்த்தனா

    கவிதை - லார்க் பாஸ்கரன்

    கட்டுரை - கவிதைகாரன் இளங்கோ

    சிறுகதை - ஜெயச்சந்துரு

    கவிதை - தேவரசிகன்

    கட்டுரை - வ.ந. கிரிதரன்

    கவிதை - ஹரணி

    சிறுகதை - ஜீவ கரிகாலன்

    கட்டுரை - மு. இராமசுவாமி

    கவிதை - கட்டாரி

    சிறுகதை - ஏ.ஆர்.முருகேசன்

    கவிதை - அருணா சுப்ரமணியன்

    கட்டுரை - ந.பெரியசாமி

    சிறுகதை - கா.சிவா

    கட்டுரை - கவிஜி

    சிறுகதை - ஸிந்துஜா

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கட்டுரை - பாரதிராஜா

    கொரோனா: முடிவு தெரியாத போரின் தொடக்கம்

    புதிய கொரோனா நோய்க்கிருமி சீனாவின் உஹான் நகரத்திலிருந்து புறப்பட்டு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அதைவிடப் பற்பல மடங்கு வேகமாக அது பற்றிய புரளிகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இது போன்ற கொள்ளை நோய்கள் என்று மட்டுமில்லை, பரபரப்பாக நடப்புச் செய்திகளில் எதுவெல்லாம் புழக்கத்தில் இருக்கிறதோ அது பற்றி அலசி ஆராயும் அந்தந்தத் துறையின் வல்லுனர்களும் அந்தந்தப் பருவத்திற்கு ஏற்ப வல்லுனராகிக் கொள்கிறவர்களும் ஈசல் போலப் புறப்பட்டு வருவது நாம் அன்றாடம் காண்பதுதான். இதெல்லாம் செய்தால் அல்லது செய்யாவிட்டால் நோய் வேகமாகப் பரவும், இதெல்லாம் செய்தால் அல்லது செய்யாவிட்டால் அப்படி வேகமாகப் பரவுவதைத் தடுக்கலாம் என்பது போன்ற மருத்துவக் குறிப்புகளும் நோய்த் தடுப்பு ஆலோசனைகளும் நோயைவிட வேகமாகப் பரவுவது நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லதுதான். அத்தோடு சேர்ந்து பல புரளிகளும் பரவுவதும் எவையெல்லாம் புரளிகள் என்று விளக்கங்கள் வலம் வருவதும் இயல்பானதுதான். அதுவே வாட்சாப் வந்த பிறகு ஒவ்வொரு மனிதனும் நூறு வாய்களும் இருநூறு காதுகளும் கொண்டவனாக மாறிவிட்டது போல் ஆகிவிட்டது.

    இது ஒருபுறம் என்றால், இப்படியான நடப்புச் செய்தி ஒவ்வொன்றுக்குமே மூலக்காரணம் என்று இரண்டு எதிரெதிர் கருத்துக்களோ அல்லது இன்னும் கூடுதலாகக் குழப்பும் வகையில் பல்வேறு கருத்துக்களோ அரசியல் பிழைக்கும் வெவ்வேறு சாராரால் சுற்றில் விடப்படுவதும் கூடிக்கொண்டேதான் போகிறது. உண்மையும் அவற்றுள் ஒன்றாக இருக்கிறதா என்கிற கேள்வியும் இருக்கிறது. இந்தப் புதிய கொரோனா நோய்க்கிருமி எங்கிருந்து புறப்பட்டது என்பது பற்றியும் பல்வேறு கதைகள் வந்து கொண்டிருக்கின்றன. அதிகபட்சம் அவற்றில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். அப்படியானால் மற்ற கதைகளும் பெரிதளவிலான மக்கள் நம்பும்படியாக எப்படி இருக்கின்றன? அவற்றுள் பல அறியாமையால் நம்பப்படுபவை என்று வைத்துக் கொண்டாலும், ஓரிரு கதைகள் நம்ப மறுக்க முடியாத அளவுக்கு உண்மை போல் இருப்பது எதனால்? எதுவுமே சாத்தியமில்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு மனித இனம் முன்னேறி(!) இருப்பதனால்தானே!

    திடீரென்று உலகம் அழிந்து போவதற்கு எத்தனையோ வழிவகைகள் இருக்கின்றன. சூரியன் வெடிப்பது, பூமி வெடிப்பது, வேறொரு கோள் வந்து பூமியில் மோதிச் சிதறடிப்பது, வேற்றுலகவாசிகள் வந்திறங்குவது, தீயால் அழிவது, நீரால் அழிவது போன்ற நம்பக் கடினமானவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், நாம் அதிகம் பயப்படுவது அணு ஆயுதப் போர்களுக்குத்தான். அதுவும் ஏதோவொரு பயங்கரவாத இயக்கம் வந்து தொடங்கிவைக்கப் போவதில்லை. அப்படி ஒன்று நடந்தால் அரசபயங்கரவாதம்தான் (அல்லது பயங்கரவாத அரசுகள்தாம்) அதற்குக் காரணமாக இருக்கும். அரசுகள் செய்வதோடு ஒப்பிட்டால் பயங்கரவாத இயக்கங்கள் செய்வதெல்லாம் வெறும் பூச்சாண்டி வேலை. பயங்கரவாத இயக்கங்களின் அதிகபட்சச் சாதனை என்றால் அது ஒரு சில நூறு உயிர்களைக் கொல்வதுதான். மாறாக, உலகத்தையே அழிக்கும் ஆற்றல் சில அரசுகளிடம்தான் இருக்கிறது. அந்த அரசுகள் யாவும் தம் மக்களின் பாதுகாப்புக்காக என்று சொல்லி அம்மக்களே ஏற்றுக்கொள்ளாத பல வேலைகளைப் பின்னணியில் செய்து கொண்டிருக்கின்றன.

    அணு ஆயுதப்

    Enjoying the preview?
    Page 1 of 1