Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - November 2019
Kanaiyazhi - November 2019
Kanaiyazhi - November 2019
Ebook214 pages1 hour

Kanaiyazhi - November 2019

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

November 2019 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580109504762
Kanaiyazhi - November 2019

Read more from Kanaiyazhi

Related to Kanaiyazhi - November 2019

Related ebooks

Reviews for Kanaiyazhi - November 2019

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - November 2019 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, நவம்பர் 2019

    மலர்: 54 இதழ்: 08 நவம்பர் 2019

    Kanaiyazhi November 2019

    Malar: 54 Idhazh: 08 November 2019

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி நவம்பர் 2019

    தலையங்கம் - ம.ரா.

    சரணம்! சரணம்! கச்சாமி!!

    கடற்கரை கோயில்

    வெண்னெய் உருண்டை

    அர்ஜுனன் தபசு

    இளநீர் விருந்து

    இளம் இரவுக் காற்று

    சீன அதிபரைச்

    சிந்திக்க வைத்திருக்கும்!

    இருபத்தொன்பது வயதில்

    மனைவியையும் மகனையும் விட்டு

    வெளியேறிய சித்தார்த்தன்

    அடுத்த வேளை உணவுக்குக்

    கையேந்தி நின்றதும்

    கிடைத்த உணவு வாயருகே போன போது

    குமட்டல் எடுத்ததும்

    இப்போது

    புலம் பெயர்ந்த தமிழர்கள்

    மனம் கசிந்து வாழ்வதும்

    சீன அதிபர் நினைவில் வந்திருக்கும்!

    சவ ஊர்வலத்தையும்

    முதுமையையும் நோயையும் பார்த்து

    அரண்மனையை விட்டு வந்தவருக்கு

    அந்த முதல் பிச்சையில்

    மக்களின் ஏழ்மை நாற்றம்

    முகத்தில் அடித்திருக்கும்.

    புத்தரின் கதையில்

    தன் குஞ்சுகளுக்கு மட்டுமில்லாமல்

    இரை எடுக்க பறக்க முடியாத

    முதுமையடைந்த கிளிகளுக்கும்

    பசி தீர்க்கக் கூடு திரும்பும்

    பச்சைக் கிளியின்

    சிவப்பு மூக்கும் கதிர் சுமக்கும்!

    ஆனால்

    நாடு திரும்ப முடியாத சோகம்

    தமிழர்கள் கண் சிவக்க மனம் சுமக்கும்!

    சித்தார்த்தன் பிறந்ததும்

    அரண்மனையைவிட்டு வெளியேறியதும்

    போதி மரத்தடியில் புத்தர் ஆனதும்

    மறைந்து போனதும்

    வைகாசி மாத முழுநிலவில்தான்!

    புத்தரின் காலத்தைக் கணக்கிட

    வைகாசி நிலவுகளே

    கைகொடுத்திருக்கின்றன.

    புத்தரின் நினைவுச் சுவடுகளில்

    மனம் பதிக்க வந்தவருக்கு

    மாமல்லை சொல்லியிருக்குமா?

    புத்தரின் ஜாதகக் கணக்கு

    தமிழில்தான் இருக்கிறது என்று.

    "இருள் பரந்து கிடந்த மலர்தலை உலகத்து

    விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன

    ஈரெண்ணூற்றொடு ஈரெட்டாண்டில்" என்று

    பேரறிவாளன் புத்தரின்

    பிறப்பு ஆண்டு சொன்னது

    மணிமேகலைதான்!

    தமிழ்த் தாத்தா உ.வே.சா.

    ஈசான சகாப்தம் 68 ஆம் வருடம்

    வைகாசி பூர்ணிமையும்

    விசாக நட்சத்திரமும் கூடிய

    வெள்ளிக்கிழமை என்று சொல்லுவர்"

    என்று ஜாதகம் தந்திருக்கிறார்.

    திருநெல்வேலி, தமிழறிஞரும்

    பஞ்சாங்கக் கணித ஆராய்ச்சியாளருமான

    இ.மு. சுப்பிரமணியபிள்ளை

    புத்தர் வாழ்க்கையின்

    நான்கு முக்கிய நிகழ்வுகளும்

    வைகாசி நிலவில் நடந்திருப்பதைக் கொண்டு

    வரலாறு சொல்லியிருக்கிறார்.

    இலங்கைத் தீபவம்சமும் மகாவம்சமும்

    இதற்கு அரண் செய்கின்றன.

    "தனக்குத்தானே தலைவனாக இருங்கள்!

    உங்களுக்கு நீங்களே தீபங்களாய் இருங்கள்!

    வாழ்வில் எல்லோருக்கும் ஆசை இருக்கிறது.

    மற்ற உயிர்களையும்

    தன்னைப்போல் எண்ண வேண்டும்

    கொல்லவும் கூடாது

    கொலைக்கு உடன்படவும் கூடாது."

    என்றெல்லால் சொல்லியிருக்கிறார் புத்தர்.

    கடல் முழுதும் நீர் இருக்கிறதே

    அலைகள் கரையிடம் அடம் பிடிப்பானேன்?

    மரம் பற்றி எறிந்தபோது

    கூட்டில் இருந்த பறவைகள்

    குஞ்சுகளோடு கருகிப் போயிருக்குமே?

    "விறகு தீர்ந்த பிறகும் சுடர் அணைந்த பிறகும்

    நித்தியமான ஒளியில்

    எரிந்துகொண்டிருக்கும் தீ" என்றாரே

    "அந்தத் தீ

    சுடரிலும் இல்லை விறகிலும் இல்லை

    உட்புறத்திலும் இல்லை

    மேலேயும் கீழேயும் எங்கும் உள்ளது" என்றாரே!

    மக்கள் தொகையில் உலகில்

    முன்னணியில் இருக்கும்

    இருநாடுகளின் தலைவர்கள்

    தமிழ்நாட்டில்!

    சீன அதிபர்

    சென்னைக்கு வந்துவிட்டுப் போக

    வரலாறு காணாத வரவேற்பும் பாதுகாப்பும்!

    மத்திய மாநில அரசுகள்

    கொசுக்களிடமும் சோதனையிட்டார்கள்.

    புத்தம் சரணம் கச்சாமி

    இந்தியப் பொருளாதாரம்

    கவலைக்கிடம் என்ற

    அபிஜித் பானர்ஜிக்கு

    நோபல் பரிசு அறிவிப்பு

    தம்மம் சரணம் கச்சாமி!

    தாமரையில் இருக்கும் புத்தரின் பக்தரான

    சீன அதிபர் வந்து போன பின்

    பிரதமர் மோடியின் தமிழ்ப் பற்று

    சங்கம் சரணம் கச்சாமி!

    அறிவு, உணர்ச்சி நம்பிக்கைதாம்

    மனித வாழ்வின் கட்டுமானங்கள்!

    மக்களின்

    அறிவையும் உணர்ச்சியையும்

    கட்டிப்போடத் தெரிந்தவர்கள்

    நம்பிக்கை மூலம்

    எதையும் ஏற்றுக்கொள்ளச் செய்வார்கள்.

    தெருவெங்கும் கொசுவளர்ப்பு!

    டெங்கு கொசுக்களின் கோரப்பிடியில்

    சிக்கிக் கிடக்கிறது தமிழகம்.

    தனியார் பல்கலைக்கழகம் முதல்வருக்கு

    டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறது!

    நாங்குநேரி, விக்கிரவாண்டியில்

    எடப்பாடி வெற்றி பெற்றிருக்கிறார்

    சரணம் சரணம் கச்சாமி!

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி

    கவிதை - சு. சுசித்ரா

    கட்டுரை - பாரதிராஜா

    குறுநாவல் - விஜய ராவணன்

    கட்டுரை - அ. நாகராசன்

    கவிதை - இரா.கவியரசு

    கட்டுரை - பாலசுந்தரம்

    கவிதை - கவிதைக்காரன் இளங்கோ

    கட்டுரை - முனைவர் நா.சந்திரசேகரன்

    கவிதை - சதீஷ் குமரன்

    சிறுகதை - தெலுங்கில் - துரகா ஜானகிராணி, தமிழில் - ராஜி ரகுநாதன்

    கவிதை - ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

    கவிதை - ரேவா

    கட்டுரை - சுகன்யா

    சிறுகதை - செய்யாறு தி.தா. நாராயணன்

    கட்டுரை - வ.ந. கிரிதரன்

    சிறுகதை - பிரவின் குமார்

    கடைசிப் பக்கம் - மரன்

    ***

    கட்டுரை – எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி

    ஓல்காவின் கற்பனையில் கலியுகமும், போதி மரமும்

    ஓல்கா டொக்கார்ட்சுக் (Olga Tokarczuk): நோபல் பரிசு பெறும் பதினைந்தாவது பெண் எழுத்தாளர்

    இந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 2018ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு 57 வயதான ஓல்கா டொக்கார்ட்சுக் (Olga Tokarczuk) எனும் போலந்து நாட்டுப் பெண் எழுத்தாளருக்கு அளிக்கப்படுகிறது. உலக இலக்கியத்தில் அப்பரிசைப் பெறும் பதினைந்தாவது பெண் எழுத்தாளர் இவர்.

    1990 களில் சோவியத் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சுதந்திரக் காற்றைச் சுவாசித்துவரும் போலந்து நாட்டில் முதல் எழுச்சிக் குரலாக ஒலிப்பவர் ஓல்கா டொக்கார்ட்சுக்.

    ஓல்கா டொக்கார்ட்சுக் இந்தியாவுக்குப் பரிச்சயமானவர். இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில இந்தியில் மொழிபெயர்க்கப் பெற்றிருக்கின்றன. பிடித்த உணவு இந்திய உணவு, அதுவும் சைவ உணவு.

    போலந்தில் மிகப்பெரிய எழுத்தாளராகக் கருதப்படும் இவர் இதுவரை எட்டு நாவல்களும், இரண்டு சிறுகதை தொகுதிகளும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய படைப்புகள் பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன.

    வார்சா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பட்டம் பெற்ற ஓல்கா டொக்கார்ட்சுக் தன்னுடைய படைப்புகளில் போலந்து நாட்டுத் தொன்மங்கள் மட்டுமன்றிப் பல்வேறு நாட்டுத் தொன்மங்களையும், தத்துவங்களையும் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.

    எடுத்துக்காட்டாகச் சில படைப்புகளை இங்குக் குறிப்பிடலாம்.

    அவர் எழுதிய உலகின் மிகவும் அருவருப்பான பெண் எனும் சிறுகதை மிகச் சிறந்த ஐரோப்பியப் புனைகதைகள்-2011 எனும் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. கதாநாயகியான பெண், தோற்றத்தில் அருவருப்பானவள். திருமணமானபின் அவளுடைய கணவன் அவளிடம் இரக்கமற்று நடந்துகொள்கிறான். அவள் இறந்தபின், கணவன் சிந்தித்துப் பார்க்கும்போது, குணத்தால் அவளைவிடத் தான்தான் அருவருக்கத் தக்கவனாக இருந்துவந்ததை உணரும் வகையில் ஆசிரியர் கதைக் கருவைக் கையாளும் பாங்கு போற்றத்தக்கதாகக் கருதப்படுகிறது.

    இவருடைய தொடர் பயணங்கள் எனும் நாவல் ஆங்கிலத்தில் ஃப்ளைட்ஸ் (Flights) என்று மொழிபெயர்க்கப்பட்டு 2018 ஆண்டு சர்வதேசப் புக்கர் பரிசு பெற்றது.

    தொடர் பயணங்கள் ஒரு முழு நீள நாவலன்று. பல்வேறு சம்பவங்களும் சிந்தனைகளும் அடங்கிய ஒரு தொகுப்பு. 116 துணைத் தலைப்புகள் கொண்டது. ஆசிரியரின் சிந்தனை வளையத்தில் கலியுகம் இடம் பெறுகிறது. போதி மரம் இடம் பெறுகிறது. உடற்கூறு ஆய்வுகள் இடம்பெறுகின்றன. பல்வேறு நாட்டினர் இடம்பெறுகின்றார்கள். அவர்கள் கருத்துகளும் இடம் பெறுகின்றன.

    ஃப்ளைட்ஸ் (தொடர் பயணங்கள்) என்ற தலைப்பு ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஜென்னிஃபர் க்ராஃப்ட் (Jennifer Croft) டினால் கொடுக்கப்பட்டது. மூல நாவலின் தலைப்பாகிய Bieguni எனும் சொல் நாடோடிகளைக் குறிக்கும் சொல்லாகும். போலந்து நாட்டில் வாழும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தாங்கள் ஒரே இடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடக்கூடாது எனும் கொள்கையைக் கடைபிடிப்பவர்களாம். அப்படித் தங்கிவிட்டால் சாத்தானின் ஆதிக்கத்தில் சிக்கிக் கொள்வார்களாம்.

    இந்தக் கருத்து தொடக்கத்திலேயே தெளிவாக்கப் படுகிறது.

    கதைசொல்லி தன்னுடைய சிறு வயதில் தன்னந்தனியாக மேற்கொண்ட முதல் பயணத்தின்போது ஓர் ஆற்றங்கரையில் நின்று சிந்திக்கிறார். கரையில் நின்று ஆற்றைப் பார்க்கும்போது எனக்கு ஒரு செய்தி தெளிவாகியது. நிலையாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும் ஒன்றைவிட நகர்ந்துகொண்டே இருக்கும் ஒன்றுதான் மேலானது. நிலைத்திருப்பதைவிட மாற்றத்தைத் தழுவுவதே சிறப்பாகும். ஒரே இடத்தில் நிலைத்திருக்கும் எதுவும் விரைவில் சக்தி இழந்து, செயலற்று, கருகிச் சாம்பலாகிவிடும். மாற்றம் மட்டுமே நிலைபேறுடைமைக்கு வழிவகுக்கும்.

    கதைசொல்லி மேற்கொள்ளும் பயணங்களின் போது அவர் பல்வேறு மனிதர்களைச் சந்திக்கிறார். அவருக்குப் பல்வேறு அனுபவங்கள் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் சிறு சிறு கட்டுரைகளாகவும், கதைகளாகவும் சித்திரிக்கிறார்.

    அவற்றில் சில:

    ‘சியோரானின் வழிகாட்டுதல்’ எனும் தலைப்பில் சியோரானைத் தெய்வமாக நினைத்துப் போற்றும் ஒருவரைப் பற்றி பேசுகிறார். சியோரான் (Cioran) 20ஆம் நூற்றாண்டு ஐரோப்பியத் தத்துவ மேதைகளில் ஒருவர். ருமேனிய நாட்டவர். மனித வாழ்க்கையில் தோல்வி என்பது எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி அதிகம் சிந்தித்திருக்கிறார். அவர் தன் வாழ்க்கையில் தோல்வியைச் சந்திக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு புத்தகம் எழுத ஆரம்பித்துவிடுவாராம். ‘புத்தகம் எழுதுவது தற்கொலையைத் தள்ளிப்போடுவதாகும்,’ என்று கூறி இருக்கிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரைத்தான் கதைசொல்லி தற்செயலாகச் சந்தித்திருக்கிறார். அந்த ரசிகர் சொல்கிறார்:

    "(ஐரோப்பிய) ஓட்டல் அறைகளில் வாசிப்பதற்கென்று ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1