Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - July 2019
Kanaiyazhi - July 2019
Kanaiyazhi - July 2019
Ebook209 pages1 hour

Kanaiyazhi - July 2019

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

July 2019 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580109504527
Kanaiyazhi - July 2019

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - July 2019

Related ebooks

Reviews for Kanaiyazhi - July 2019

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - July 2019 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, ஜூலை 2019

    மலர்: 54 இதழ்: 04 ஜூலை 2019

    Kanaiyazhi July 2019

    Malar: 54 Idhazh: 04 July 2019

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி ஜூலை 2019

    தலையங்கம் - ம.ரா.

    இன்னொரு மொழி படிக்கும் இயல்புக்கு வழிவிடுங்கள்!

    தண்ணீர் கேட்ட குடங்களுக்குத்

    தடியடியே கிடைக்கிறது!

    தண்ணீர்த் தாகம்

    மழைவந்தால் தீருமாம்.

    இயற்கை

    இயல்புக்கு மாற வேண்டுமாம்.

    எப்போது நாம் இயல்புக்கு வருவோம்?

    சுற்றியிருப்பவர்களைச் சூழலைக்

    கொள்ளையடிக்கவும் கூறு போடவும்

    அடக்கியாள நினைக்கும்

    அதிகார மோகம் எப்போது போகும்?

    ஆதரிக்காதவர்களின் வாழ்வாதாரங்களை

    அழிக்கவும் அதன்வழி

    பயப்பட வைக்கவும் பயமுறுத்தவுமான

    அதிகாரப் பசி மாறி

    எப்போது வருவார்கள் இயல்புக்கு?

    ஆடிப் பாடி கூடி வாழத்

    தேவைப்பட்ட மொழியை

    அதிகார வேட்டைக்குப்

    பயன்படுத்துகிறார்கள்!

    மொழியைக் கொண்டு நடக்கிறது

    மொழி வேட்டை.

    மொழிப் படுகொலைகளை நிறுத்த

    முன்வருமா ஐ.நா. மன்றம்?

    அடிமை நாட்டிலும் சுதந்திர நெருப்பு

    மொழிக்குள் இருக்கும்.

    பாதுகாப்புக்குப் போராடும்

    ஆதிகாலத்தில் நாம் இல்லை.

    தசைகளில் இருந்த ஆற்றல்

    நரம்புகளுக்கு இடம் மாறி இருக்கிறது!

    உடல் வலிமை மிருக ஆற்றல்

    அறிவே மனித ஆற்றல்!

    ஆகவே

    இப்போது கொண்டாடப்படும்

    மனித இயல்பு

    அழித்தொழிக்கும் அதிகாரத்திற்கான

    போரில் இல்லை! அறத்திற்கான

    போராட்டத்தில் இருக்கிறது.

    எனவே வரலாறு என்பது

    அதிகார மாற்றத்தைச் சொல்லாமல்

    நியாயம் கேட்கும்

    போராட்டமாகி இருக்கிறது!

    அடிமை விலங்கை உடைக்க மட்டுமன்றி

    அதிகாரத்தைக் கூண்டில் அடைக்கவும்

    சமுதாய நடவடிக்கைகளை

    முன்னெடுக்கவும்

    எல்லாரையும் இணைத்துச் செல்லவும்

    மொழி வேண்டியிருக்கிறது.

    புதிய தேசியக் கல்விக் கொள்கையில்

    மும்மொழிக் கொள்கை!

    உலகில் இளமையான நாடாக

    இந்தியா மாறப் போகிறதாம்!

    இளமை இந்தியாவுக்கு

    இந்தி வேண்டுமாம்!

    இரண்டு வயது முதல்

    எட்டு வயது வரை

    எத்தனை மொழிகளையும்

    கற்கும் ஆற்றல்

    குழந்தைகளுக்கு உண்டாம்!

    இயல்பை மாற்றினால்

    இயற்கைக்கும் சீற்றம் வரும்!

    ஒரு குழந்தைக்குப்

    பன்மொழிக் கல்வி

    சுமையாகாதா?

    மனித குல வரலாற்றில்

    பலமொழி கற்றாக வேண்டிய

    சூழலில் மக்கள் சிக்கியது எப்போது?

    பிறந்த இடம் கடந்து

    அரசியல், பொருளாதாரம், புவியியல்

    அடித்து விரட்டும் தருணங்களில்

    வாழ்தல் வேண்டி

    இன்னொரு மொழி ஆளுகை

    தாய்மொழியை

    வீட்டில் சிறை வைக்கிறதே!

    இந்தி பேசாத மக்களுக்கு

    இந்தியா அப்படி இல்லையே

    இந்தியர்களை

    மொழிவழி பிரிக்க வேண்டாமே!

    இயல்பு நிலையில் இருக்க விடலாமே!

    ஆங்கிலேயர் வருகைக்கும் முன்பே

    இந்தியா இருக்கிறது என்றால்

    இதுவரை இருந்தது போலவே

    இருந்துவிட்டுப் போகட்டுமே!

    இந்திமொழி தெரிந்தா

    சுதந்திரத்திற்குப் போராடினார்கள்?

    இந்தி தெரியாமலே

    காந்தியையும் நேதாஜியையும்

    கொண்டாடவில்லையா?

    இப்போது மட்டும்

    இயல்பை மாற்றுவானேன்?

    சமஸ்தானங்களைப் போல

    மொழிகளை இணைக்க

    முன்வர வேண்டாமா?

    காஷ்மீர் முதல்

    கன்னியாகுமரி வரை

    இந்தியா

    ஒரே மாதிரி இல்லையே!

    அரசமைப்புச் சட்டப்படி

    இந்தியா ஒரு யூனியன்

    ஒரே மதம் ஒரே தேர்தல் போல

    ஒரே மொழிக்கு வாய்ப்பில்லையே!

    ஒரு குழந்தைக்கே

    ஒன்றுக்கும் மேற்பட்ட

    மொழிகள் தேவை எனில்

    ஒருநாட்டுக்கு மட்டும்

    ஒரேமொழி போதுமா?

    அரசமைப்புச் சட்டத்தின்

    அட்டவணை மொழிகளில்

    பதவியேற்ற உறுப்பினர்களின்

    தாய்மொழித் தாகத்தில்

    நாடாளுமன்றக் கூச்சலுக்கு

    விக்கல் வரவில்லையே?

    புதிய தேசியக் கல்வியில்

    இந்தி மொழி ஆதிக்கம்

    எங்கே நுழையலாம் என்று

    கல்விக் கூடங்களின்

    கதவுகளைத் தட்டுகிறதே ஏன்?

    இன்னொரு மொழியை இந்தியருக்குக்

    கற்றுக் கொடுக்கவா?

    இந்தி மொழிக்கு அதிகாரம் சேர்க்கும்

    எண்ணம் இல்லாமல்

    ஒரே மதமாக்கும் முயற்சிக்கு

    ஒரேமொழி உதவும் வழியை

    உருவாக்கும் கருத்து இல்லாமல்

    இன்னொரு மொழியைப்

    படிக்கச் சொல்கிறார்களா?

    அப்படியென்றால்,

    அட்டவணையில் உள்ள

    மொழிகளையெல்லாம்

    ஆட்சிமொழிகள் ஆக்கிவிட்டு

    இந்தியர்கள்

    இன்னொரு மொழி படிக்கும்

    இயல்புக்கு வழிவிடுங்கள்!

    அன்புடன் ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    அஞ்சலி - கன்னடத்தில்: சந்தியாராணி, தமிழில்: கே.நல்லதம்பி

    அஞ்சலி - எஸ்.வி. வேணுகோபாலன்

    கவிதை - மு.ச.சதீஷ்குமார்

    சிறுகதை - பிரவின் குமார்

    கவிதை - கவிஜி

    கட்டுரை - கி. அரங்கன்

    கவிதை - ஹிகிகொமோரி

    கட்டுரை-பா. செயப்பிரகாசம்

    அஞ்சலி - முனைவர் பா.ரா. சுப்பிரமணியன்

    கவிதை - இராய. வாகீசன்

    கட்டுரை - கவிதைக்காரன் இளங்கோ

    சிறுகதை - ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

    ஏன் எழுதினேன்? - கிருஷ்ணமூர்த்தி

    கட்டுரை - ஆனந்த் அமலதாஸ் சே.ச

    சிறுகதை - துளிர்

    கட்டுரை - ந. பெரியசாமி

    கட்டுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    கட்டுரை - அ. நாகராசன்

    கவிதை - வணவை தூரிகா

    கடைசிப்பக்கம் - இந்திராபார்த்தசாரதி

    ***

    அஞ்சலி

    கன்னடத்தில்: சந்தியாராணி

    தமிழில்: கே.நல்லதம்பி

    கிரீஷ் கர்னாட்

    ஒரு மனிதன் இந்த உலகைவிட்டு மறையும்போது அவனுடன் நம்முடைய ஒரு பகுதியும் மறைந்துவிடுகிறது. பிறகு நாம் முன்போல் இருப்பது சாத்தியப்படுவதே இல்லை. விடியற்காலையில் கிரீஷ் கார்னாட் இனி இல்லை என்னும் செய்தி கிடைத்தபோது, அந்தச் செய்தி எதிர்பாராத ஒன்றல்ல என்றே தோன்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘இலக்கிய விழா’வில் பங்குபெற்ற பொழுதே அவர் தனக்குத் தேவையான பிராணவாயுவைத் தானே சுமந்துகொண்டு நடந்தார். ஒரு சிறிய குழாய் அவரை இந்த உலகுடன் இணைத்திருந்தது. அவர் விடைபெறுவதற்கு இது நம்மைத் தயார்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் செய்தி கேட்டதும் ஒரு பெரிய சூனியமே சூழ்ந்துகொண்டது. அப்படிப் பார்த்தால் கார்னாட் உணர்வுகள் வழியாகச் செலுத்திய செல்வாக்கைவிடச் சிந்தனைகளின் வழியாகச் செலுத்திய செல்வாக்கே அதிகம். அவர் என்றால் உறுதியான, தெளிவான பேச்சுகள். பலமுறை அவர் சொற்களில் பரிவைவிடவும் உறுதியே அதிகம் தெரியும். ஆனால் அந்த எல்லா உணர்வுகளும், போராட்டங்களும், மண்ணின் உறவும் அவர் நாடகங்களில் இருக்கும். ஒவ்வொருமுறை அதைப் படிக்கும் பொழுதும் பார்க்கும் பொழுதும் வாழ்க்கையைப்பற்றிக் கூடுதலாகவே புரிந்துகொள்ளமுடியும். ‘துக்ளக்’ எனக்கு மிகவும் பிடித்த நாடகம். பிறகு ‘ஹயவதனா’, அடுத்தது ‘யயாதி’, ‘நாகமண்டலா’ பிறகு.... இப்படி பட்டியலிட்டுக்கொண்டே போகமுடியும்.

    மேற்கத்திய நாடகங்களின் சூழலிலிருந்து நம்மை நம் வேருக்கு ஈர்த்தவர்களில் முக்கியமானவர்கள் சந்திரசேகர கம்பாரர் மற்றும் கிரிஷ் கார்னாட். நம் புராணங்களிலிருந்தும், நாட்டுப்புறக்கதைகளிலிருந்தும் கருக்களைக் கண்டடைந்து கார்னாட் அவற்றை நம் தற்காலத்திற்கு ஏற்றதாக உருமாற்றியது சிறப்பு மிக்க முயற்சியாகும். அதனால்தான் அவை எழுதப்பட்ட காலத்திற்கும், படிக்கும் காலத்திற்கும், பார்க்கும் எல்லாக் காலங்களுக்கும் பொருந்திப்போகிறது. அப்படித் தொடர்ந்து மாறுபடும் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றதாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்வது ஒரு மகாகவியத்தின் தன்மை.

    ‘மனிதச் சாதி ஒன்றே குலம்’ என்ற கவிஞர் பம்பனின் வார்த்தைகள் இன்றைக்கும் ஏற்கப்படுவது போல, கார்னாடின் மாறுபடும் சமுதாய, அரசியல் சூழ்நிலைகளுக்குத் தன் நாடகங்களின் வழியாகப் புதிய ஒளியை வீசிக்கொண்டே வந்திருக்கிறது. கார்னாட் பன்முகத் திறமை கொண்டவர். நாடகக்காரராக, நடிகராக, அழுத்தமான சொற்களைப் பயன்படுத்துபவராக, சமுதாய அக்கறை மற்றும் கடமையின் மனிதராக அவர் நமக்கு முக்கியமாகிறார். யு.ஆர். அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ புனைகதை படமானபோது கார்னாட் அதன் உணர்ச்சி வட்டத்திற்குப் பொருந்தக்கூடிய கட்டமைக்குள் திரைக்கதை எழுதியது மட்டுமல்ல, அதில் நடிக்கவும் செய்திருந்தார். இன்றைக்கும் பிரானேஷாச்சாரியார் என்றால் கண்முன் வந்து நிற்பது கிரிஷின் உருவம். இந்தப் படம் முதல் முதலாகக் கன்னடத்திற்குத் தங்கத் தாமரை விருதைப் பெற்றுத் தந்தது. பிறகு அவர் இயக்குனரானார். ‘வம்சவிருக்ஷ’ தேசிய விருது பெற்றது. அது ஒரு கலை நயமான படம். ஆனால் வியாபாரப் படங்களில் நடிக்கும் பொழுது, அதற்குத் தகுந்த எந்தக் காட்சியிலும் பொருந்திவிடுவார். அவர் நடிப்பு படத்துடன் இணைந்திருந்தாலும் எடுப்பாகத் தனித்து வெளிப்படும். எந்த வேடமானாலும் அதற்கு ஒரு தனித்துவத்தைக் கொடுக்கும் கலை அவருக்குக் கைவந்தது. அதற்குத் துணையாக அவர் குரலின் ஆழமும் தாரவாட கன்னடத்தின் தொனியும் அமைந்திருந்தன.

    ‘தப்பலியு நீனாதே மகனே’, ‘கானூர ஹெக்கடதி’, ‘நிஷாந்த்’, ‘மந்தன்’, ‘ஆ தினகளு’ கூடவே ‘ஏகே 47’ மற்றும் ‘டைகர்’ படத்தின் வேடங்களிலும் அவர் அப்படியே ஒத்துப்போவார். இரண்டு பத்மÿ விருது, பத்மபூஷன் விருது, அகாடெமி விருது, ஞானபீட விருது, காளிதாஸ் விருது என அவர் அடைந்த விருதுகளுக்குக் கணக்கில்லை. இவற்றுக்கு நடுவிலும் எங்கேயோ ஒரு குறையாக நின்றது ‘நாகமண்டலா’ பாட்டுக்களைப் பற்றிய தகராறு. அந்த விஷயத்திற்காகக் கோபால வாஜபாய் மற்றும் அவருக்கும் இடையே உரசலும் ஏற்பட்டது. அது நடந்திருக்கக் கூடாது. அது ஒரு அற்புதமான படம் அதுபோலவே அற்புதமான பாட்டுக்கள். அவற்றை எல்லாம் கோர்த்து மாலையாக்கிய மூன்று திறமைசாலிகள் ஷங்கர்நாக், கோபால வாஜபாய் மற்றும் கிரீஷ் கார்னாட். இன்று எல்லோரும் நம்மை விட்டு மறைந்துவிட்டார்கள். அந்த வெறுமை நம்முடன் எப்போதும் இருக்கும். இதனுடன் நம்முடன் இருக்கவேண்டியது கார்னாட் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு எதிர்வினை ஆற்றும் விதம். அதைக் கேட்கும் காதுகளும் எதிர்கொள்ளும் இதயமும் அவருக்கு இருந்தன. அதனால்தான் எந்தப் போராட்டத்தின் போதும் அவர் குரல் மிகத் தெளிவாகக் கேட்கும். இப்படிப்பட்டவர்கள் நம்மை விட்டுச் செல்லும்பொழுது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது போனவர்களைப் பற்றி மட்டுமல்ல, நம்மைப் பற்றியும் பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லும். அவர் இனி இல்லை என்ற வலியை

    Enjoying the preview?
    Page 1 of 1