Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - July 2018
Kanaiyazhi - July 2018
Kanaiyazhi - July 2018
Ebook201 pages1 hour

Kanaiyazhi - July 2018

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

July month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109503149
Kanaiyazhi - July 2018

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - July 2018

Related ebooks

Reviews for Kanaiyazhi - July 2018

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - July 2018 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, ஜுலை 2018

    மலர்: 53 இதழ்: 04 ஜுலை 2018

    Kanaiyazhi July 2018

    Malar: 53 Idhazh: 04 July 2018

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி, ஜூலை 2018

    தலையங்கம்-ம.ரா.

    இடம் பெயர மறுக்கும் எதிர்க்குரல் அல்லவா?

    சாலைகள் என்றால் இணைக்க வேண்டும்.தெருக்களை இணைப்பது சந்துகள்இணைக்காதது முட்டுச் சந்து!

    தேசத்தை இணைப்பதுதேசிய நெடுஞ்சாலைகள்,தெருவும் சந்தும் முட்டுச் சந்தும்வீடுகளும் கூட மரங்களின் நிழல்களில்ஆனால் நிழல்கள் அற்றுபுறவழிச் சாலைகள் சுரங்கப்பாதைகள்பாலச் சாலைகள் நெடுஞ்சாலைகள்!

    பெரும் நகரங்களை இணைக்கும் சாலைகள்ஊர்களைப் பிரிக்கின்றன!நாடுகளை இணைக்கும் சாலைகள்வீடுகளை இடிக்கின்றன!ஆறுகிடந்தன்ன அகனெடுஞ் சாலைகள்ஊர்களை ஒதுக்கி வைக்கின்றன.

    காடுகொன்று நாடாக்கி வந்த காலத்தில்2500 ஆண்டுகளுக்கும் முன்பேசாலை ஓரங்களில்மரம் நடச் சொன்னவன் அசோகன்இப்போது சாலைகளுக்காகமரங்களை வெட்டுகிறோம்!

    என்ன தொகை கொடுத்தாலும்அப்படியொரு மரத்திற்குஎத்தனை ஆண்டுகள்காத்திருக்க வேண்டியிருக்கும்?வலசைக் காலத்தில் வரப் போகும்பறவைத் தலைமுறைக்குப்பதிலிருக்கா நம்மிடம்?வறுமை ஒழியுமா? வளருமா?குடிபெயரும் மக்கள்இடம் தேடியும் வேலை தேடியும்அலையும் வேலைவாய்ப்புகள் அதிகமாகலாம்!மரங்களற்ற சாலைகளில் வாகனமற்ற மனிதர்கள்கால்நடைகளைப் போல!

    சில நாடுகளில் புறாக்கள்சிலநாடுகளில் காக்கைகள் போலவிரட்டியடிக்கப்படுகின்ற பட்டியலில்.விலங்குகளோடும் பறவைகளோடும்விருப்பம் இல்லாமல் இடம்பெயரமனிதர்களும் விதிக்கப்பட்டிருக்கிறர்களா?பிரிட்டீஷ் கொலம்பியா-கனடா16 வழி நெடுஞ்சாலைக்காகமண்ணின் மக்களுக்குப் பரிசு1017 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்164 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள்கண்ணீர் சாலையாக (Highway of Tears) இருக்கிறது

    தேசிய சாலைகள் கட்டுப்படுத்தும்:திரும்பச் சொல்லும்; வேகம் கூட்டும்:விருப்பப்படி நிற்கவோ, நடக்கவோஅனுமதிக்காது.நகரப் பேருந்துகளுக்கோபொதுமக்களுக்கோ இடம் கொடுக்காது.

    கடலை, வெள்ளரிக்காய்,மல்லிகைப்பூக்களோடுவெயில் மழை பார்க்காதவாழ்வாதாரங்களைத் தடுமாறச் செய்யும்.இந்தியாவின் மிக நீளமான (2369 கி.மீ)தேசிய நெடுஞ்சாலை (NH7)வாரணாசி முதல் கன்னியாகுமரிவரைநீண்டு கிடக்கிறது!தங்க நாற்கரச் சாலைத்திட்டம் (5846 கிமீ)தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை என்றுவளைத்துக் கிடக்கிறது இந்தியாவை!

    பயண நேரம் குறையும்;எரிபொருள் மிச்சமாகும்பாதுகாப்பான பயணம் தரும்என்றெல்லாம் சொல்லப்படுகின்றன.ஆனாலும் அவை மட்டுமேகாரணங்கள் இல்லை.இயற்கைச் சூழல் மாறாமல்வாழ்வாதாரத்தை இழக்காமல்இருக்கிற சாலைகளின் மேலேயும்தரைக்குக் கீழேயும்எட்டுவழிச் சாலைகள் அமைக்கலாமே?சென்னையில் சுரங்க இரயிலும்மேம்பால இரயிலும் சாத்தியமெனில்சேலத்திற்கு முடியாமல் போகுமா?மக்கள் நடக்க மட்டும் அசோகன்மரம் நடவில்லை; படை கடக்கவும்தான்பக்தர்களுக்கு மட்டுமில்லைசத்திரங்கள், படைகளுக்கும்தாம்அரசர்களின் போர்களுக்குக்கொள்கை வேறுபாடுகளா காரணங்கள்?போர் என்றால் கொள்ளை தானே?கத்தியின்றி இரத்தமின்றிக்கொள்ளையடிக்க நவீன வழிகள்.

    இப்போதுஎன்னைக் கேட்காமல் எனது நிலம்யாருக்கோ விற்கப்படுகிறது..எனக்குத் தெரியாமல் என் மண்ணின் கனிம வளம்போராடும் மக்களைக் கொல்லதளவாடம் ஆகப் போகிறது.மக்கள் நலனுக்காகத்தனிமனிதன் தியாகம் செய்யலாம்.அதுமக்களை அடக்கக் கருவியாகிறபோது மக்கள் தெருவுக்கு வருகிறார்கள்!பிறந்த குழந்தை கைகளை உயர்த்திக்காற்றை உதைப்பதுபோராட்ட வாழ்க்கையின் புள்ளியா?புரண்டு படுக்கும் போதும்இடமாற்றத்தில் உடல்புவியீர்ப்பின்மீது சண்டை போடுகிறதோ?

    மதிப்பிழப்பது பணத்திற்கு நடக்கலாம்வாழ்க்கையில் மதிப்பிழத்தல் வதையல்லவா?வதை இல்லாமல் வளர்ச்சி இல்லையா?வரப்பைத் தலையணையாக்கிவயலில் படுத்துக் கிடந்த அவர்களின்தூக்கம் கலைப்பது சாத்தியமா?மண்ணைக் கரைத்துக் குடித்துமரண விநாடிகளை எதிர்கொள்ளும்மனநிலையை என்ன சொல்ல?இடத்தைவிட்டு நிலத்தைவிட்டுவிரட்டியடிக்கப்படும் துயரத்துக்குவிலை சொல்ல முடியுமா?

    இந்த உலகில்வாழ விரும்புவதற்கானநேர்மையான காரணங்கள்அருகி வருகின்றன; ஆனாலும் வாழ்கிறோம்!உலகோடு உயிரைஇணைத்திருப்பது நம்பிக்கைதானே!

    புயலுக்கும் இடிக்கும்தலையசைக்கும் மரங்கள் எனினும்வேர்கள் மண்ணை விடுவதில்லையே!மரம் செடி கொடிகள் முறிந்தே விழுந்தாலும்புவியீர்ப்பை உடைத்துவேரிலிருந்து வெளிவரும் உயிர்கள்இடம் பெயர மறுக்கும்எதிர்க்குரல் அல்லவா?

    அன்புடன் ம.ரா

    ***

    பொருளடக்கம்

    கட்டுரை-சிவம் சங்கர் சிங் (தமிழில்-பாரதீ)

    கவிதை-காரைக்குடி சாதிக்

    சிறுகதை-துவாரகா சாமிநாதன்

    கட்டுரை-சுனில் கிருஷ்ணன்

    கவிதை-முர்ரெ மெக்லாக்லன் (தமிழில்: முனைவர் சாந்தி சித்ரா-முனைவர் ஜெய்கணேஷ்)

    ஏன் எழுதினேன்?-சுரேஷ் பிரதீப்

    கவிதை-சௌந்தர மகாதேவன்

    சிறுகதை-பத்மநாபபுரம் அரவிந்தன்

    கவிதை-உஷாதேவி

    குறுநாவல்-அ. நாகராசன்

    கட்டுரை-வெ. வெங்கடாசலம்

    கவிதை-பா. ராஜா

    சிறுகதை-சித்ரூபன்

    கவிதை-அய்யாவு பிரமநாதன்

    கவிதை-கவிஜி

    நேர்காணல்-தமிழில் : பாரதிராஜா

    கட்டுரை-பேராசிரியர் க. நெடுஞ்செழியன்

    கடைசிப் பக்கம்-இந்திரா பார்த்தசாரதி

    கட்டுரை-சிவம் சங்கர் சிங் (தமிழில்-பாரதீ)

    நான் ஏன் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன்

    நரேந்திர மோதி ஆதரவாளரும் கட்சியின் பிரச்சார ஆய்வாளருமான ஒருவர்

    இந்த அரசின் உண்மையான எதிர்மம் என்பது, நன்கு எண்ணித் தேர்ந்த ஓர் உத்தியோடு அது எப்படி தேசிய உரையாடலைப் பாதித்திருக்கிறது என்பதே. இது தோல்வியல்ல, இதுதான் திட்டமே.’

    அரசியல் உரையாடல் ஆகக் கீழான புள்ளியில் இருக்கிறது, குறைந்தபட்சம் என் வாழ்நாளில் இதுதான் ஆகக் கீழான புள்ளி. கண்மூடித்தனமான சார்புநிலைப்பாடு நம்ப முடியாத அளவில் இருக்கிறது. என்ன ஆதாரம் என்பது பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லாமல் தன் பக்கம் எதுவோ அதை ஆதரிக்கிறார்கள் மனிதர்கள். அவர்கள் பொய்ச்செய்தி பரப்புகிறார்கள் என்பதை நிரூபித்தாலும் கூட எந்த மன உறுத்தலும் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு-கட்சிகள், வாக்காளர்கள், ஆதரவாளர்கள் என்று எல்லோரையுமே பழிக்கலாம்.

    பாரதீய ஜனதா கட்சி, ஆற்றல்மிக்கதொரு பிரச்சாரத்தின் துணை கொண்டு சில குறிப்பிட்ட செய்திகளைப் பரப்புவதில் நம்பமுடியாத அளவுக்கு அருமையானதொரு பணியைச் செய்திருக்கிறது. இந்தச் செய்திகள்தாம் நான் அந்தக் கட்சியை இனியும் ஆதரிக்க முடியாது என்பதற்கான முதன்மையான காரணம். ஆனால் அதற்குள் எல்லாம் நுழைவதற்கு முன், எல்லோரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்-அதாவது, எந்தக் கட்சியும் முற்றிலும் தீயதுமல்ல; எந்தக் கட்சியும் முற்றிலும் நல்லதுமல்ல. எல்லா அரசுகளும் சில நல்லவையும் செய்திருக்கின்றன, சில கூறுகளில் சொதப்பியும் இருக்கின்றன. இந்த அரசும் அதற்கு விதிவிலக்கல்ல.

    நல்லவை

    சாலைகள் போடுவதில் முன்பைவிட வேகமாகச் செயல்பட்டது. சாலையின் நீளத்தை அளவிடும் முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, அதையும் கருத்தில் கொண்டு பார்த்தாலும் கூட, வேகம் கூடியிருப்பதாகத்தான் படுகிறது.

    மின் இணைப்புகள் கூடியிருக்கின்றன. எல்லாக் கிராமங்களும் மின்னூட்டப்பட்டிருக்கின்றன. கூடுதலான நேரம் மக்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது. (காங்கிரஸ் ஐந்து இலட்சம் கிராமங்களுக்கும் மேல் மின்னூட்டியிருந்தது, மோதி அரசு கடைசி 18,000 கிராமங்களை இணைத்து வேலையை முடித்துவைத்தது-எனவே இந்தச் சாதனையை உங்களுக்கு வேண்டியபடி நீங்கள் எடைபோட்டுக்கொள்ளலாம். அது போலவே, விடுதலை அடைந்த காலம் முதலே மக்கள் மின்சாரம் பெறும் நேரத்தின் அளவு கூடிக்கொண்டேதான் வருகிறது, ஆனாலும் அதிகரிப்பின் அளவு பா.ஜ.க. காலத்தில் கூடுதலாக இருக்கலாம்.

    மேல்மட்ட ஊழல் குறைக்கப்பட்டிருக்கிறது. இப்போதுவரை அமைச்சர்கள் அளவில் பெரிய வழக்குகள் ஏதும் இல்லை (ஆனால் இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 1-க்கும் பொருந்தும்). கூடுதலான தொகைகளுடன் கீழ்மட்டத்தில் அப்படியேதான் இருப்பது போலத்தான் தெரிகிறது. அதிகாரிகள், கணக்கர்கள் போன்றவர்களை யாரும் கட்டுப்படுத்த முடிந்தது போலத் தெரியவில்லை.

    தூய்மை இந்தியா இயக்கம் ஒரு நிச்சயமான வெற்றி. முன்பைவிடக் கூடுதலான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தூய்மை என்பது மக்களின் மனதில் பதியவைக்கப்பட்டுள்ளது.

    உஜ்வாலா திட்டம் ஓர் அருமையான முன்னெடுப்பு. எவ்வளவு பேர் இரண்டாவது சிலிண்டர் வாங்குவார்கள் என்பதை நாம் இன்னும் பார்க்கவில்லை என்றபோதும். முதல் சிலிண்டரும் அடுப்பும் இலவசமாகத்தான் கொடுக்கப்பட்டன, இப்போது கூடுதலான சிலிண்டர்களுக்கு மக்கள் பணம் செலுத்த வேண்டும். இந்த அரசு வந்தபின் சிலிண்டர்களின் விலை கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி இருக்கிறது. இப்போதைய விலை 800 ரூபாய்க்கும் மேல் ஓடிக்கொண்டிருக்கிறது.

    வடகிழக்கு மாநிலங்களுக்கான இணைப்பு நிச்சயமாகக் கூடியிருக்கிறது. கூடுதலான தொடர்வண்டிகள், சாலைகள், விமானங்கள், மற்றும், அவற்றுக்கெல்லாம் மேலாக, அந்தப் பகுதி இப்போதுதான் தேசிய செய்திச் சேனல்களில் பேசவே படுகிறது.

    சட்டம்-ஒழுங்கு, பிராந்தியக் கட்சிகளின் ஆட்சியின் போது இருந்ததைவிட மேலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

    உங்களால் சிந்திக்க முடிகிற மற்ற சாதனைகளையும் தயங்காமல் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும், தோல்விகள் அறுதியானவை, சாதனைகளுக்குத்தான் நிபந்தனைகள் அவசியமாக இருக்கின்றன.

    அல்லவை

    அமைப்புகளையும் நாடுகளையும் கட்டுவதற்கு பல பத்தாண்டுகளும் நூற்றாண்டுகளும் தேவைப்படுகின்றன. பா.ஜ.க.வின் மிகப்பெரும் தோல்வியாக நான் பார்ப்பது இதுதான்-மிக அற்பத்தனமான காரணங்களுக்காக சில உயர்ந்த விஷயங்களை நாசம் செய்துவிட்டார்கள்.

    தேர்தல் பத்திரங்கள். அடிப்படையில் இவை ஊழலை சட்டபூர்வமானதாக்கி, பெருநிறுவனங்களும் வெளிநாட்டு சக்திகளும் நம் அரசியல் கட்சிகளை எளிதில் விலைக்கு வாங்க அனுமதிக்கின்றன. இந்தப் பத்திரங்கள் பெயரற்றவை, எனவே ஒரு குறிப்பிட்ட கொள்கையை-சட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு பெருநிறுவனம் ரூ. 1,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரத்தைக் கொடுப்பதாக வாக்குறுதியளிக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அது சட்டப்படி குற்றமாகாது. ஒரு பெயரற்ற ஒப்பந்தப் பத்திரத்தை வைத்துக்கொண்டு சட்டரீதியான கைம்மாறு (quid pro quo) நிகழ்ந்ததை நிறுவவே முடியாது. இதுவே அமைச்சர்கள் மட்டத்தில் எப்படி ஊழல் குறைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது-ஊழல் என்பது, ஒவ்வொரு கோப்புக்கும் ஒவ்வொரு ஆணைக்கும் என்பது போய், இப்போது அமெரிக்கா போல் ஆகிவிட்டது-கொள்கை அல்லது சட்ட அளவில் செய்யப்படுகிறது.

    திட்ட ஆணைய அறிக்கைகள். முன்பு இவை தரவுகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருந்தன. அரசுத் திட்டங்களை தணிக்கை செய்து அவை எவ்வாறு செயல்பட்டன என்று வெளியிட்டனர். இப்போது அவை இல்லாமல் போய்விட்டதால், அரசு எந்தத் தரவுகளைக் கொடுக்கிறதோ அவற்றை நம்புவதைத் தவிர வேறு வழி இல்லை (இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கைகள் நீண்ட காலத்திற்குப் பின் வெளிவருகின்றன). நிதி ஆயோகுக்கு (NITI Aayog) இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை, எனவே அடிப்படையில் அது ஒரு சிந்தனைக் கலமாகவும் மக்கள் தொடர்பு முகமையகமாகவும் மட்டுமே இருக்கிறது. ‘திட்டம் / திட்டமற்றவை’ என்ற வேறுபாட்டை அகற்ற, திட்ட ஆணையத்தின் தணிக்கை அறிக்கைகளையே அகற்றியிருக்க வேண்டியதில்லை. திட்ட ஆணையத்தின் அறிக்கைகளை அகற்றாமலேயே அதைச் செய்திருக்க முடியும்.

    மத்தியப் புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குனரகத்தின் தவறான பயன்பாடு. நான் பார்த்தவரை இவை அரசியல் நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. அப்படி இல்லை என்றே வைத்துக்கொண்டாலும் கூட, நரேந்திர மோதி அல்லது அமித் ஷாவுக்கு எதிராக எவர் பேசினாலும் அவர்களை நோக்கி இந்த நிறுவனங்கள் கட்டவிழ்த்துவிடப்படுமோ என்ற அச்சம் உண்மையானது. இதுவே மக்களாட்சியின் முக்கியக் கூறாக இருக்கும் கருத்து முரண்பாட்டைக் கொல்வதற்குப் போதுமானது.

    விசாரணை நடத்துவதில் தோல்வி. கலிக்கோ புல்லின் தற்கொலைக் குறிப்பு, நீதிபதி லோயாவின் சாவு, சோராபுதீன் படுகொலை, கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கற்பழிப்புக்கு உள்ளான பெண்ணின் தந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் அந்தச் சட்டமன்ற உறுப்பினரின் உறவினரும் பாதுகாக்கப்படுவது, ஓராண்டுக்கும் மேலாகியும் முதல்

    Enjoying the preview?
    Page 1 of 1