Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Kadan Pani Seivathey! Thoguthi - 2 Makkalai Kaaka Mathu Vilakku!
En Kadan Pani Seivathey! Thoguthi - 2 Makkalai Kaaka Mathu Vilakku!
En Kadan Pani Seivathey! Thoguthi - 2 Makkalai Kaaka Mathu Vilakku!
Ebook200 pages1 hour

En Kadan Pani Seivathey! Thoguthi - 2 Makkalai Kaaka Mathu Vilakku!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Dr. S. Ramadoss is the founder and president of the Pattali Makkal Katchi (PMK), an Indian political party.

Under the leadership of Ramadoss, PMK was able to obtain a significant share of power both in the regional government in Tamil Nadu and the central government, primarily due to coalition pressures.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352854073
En Kadan Pani Seivathey! Thoguthi - 2 Makkalai Kaaka Mathu Vilakku!

Read more from Dr. S. Ramadoss

Related to En Kadan Pani Seivathey! Thoguthi - 2 Makkalai Kaaka Mathu Vilakku!

Related ebooks

Reviews for En Kadan Pani Seivathey! Thoguthi - 2 Makkalai Kaaka Mathu Vilakku!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Kadan Pani Seivathey! Thoguthi - 2 Makkalai Kaaka Mathu Vilakku! - Dr. S. Ramadoss

    http://www.pustaka.co.in

    என் கடன் பணி செய்வதே!

    (தொகுதி-2)

    மக்களைக் காக்க மது விலக்கு!

    En Kadan Pani Seivathey!

    (Thoguthi – 2)

    Makkalai Kaaka Mathu Vilakku!

    Author:

    மருத்துவர் ச. இராமதாசு

    Dr. S. Ramadoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/dr-ramadoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    பொருளடக்கம்

    மது விலக்கு

    1. பின்பற்றுங்கள் குசராத் வழியை!

    2. படிக்க இடிந்த பள்ளிக் கூடங்கள்!

    குடிக்க குளுகுளு குடிப்பகங்களா?

    3. மதுவை ஒழிப்பது மாநில அரசின் பொறுப்பே!

    4. விடுதலை நாள் பரிசு மதுவிலக்கு!

    5. மூடுங்கள் மதுக்கடைகளை!

    6. மராட்டியம் காட்டும் வழி!

    7. பண்டிகை என்றால் குடிக்கணுமா?

    நிலம் எடுப்பு

    8. விமான நிலையத்திற்காக ஏழைகள்

    வீடுகளை இழக்கவேண்டுமா?

    9. நிலம் கொடுத்தோருக்கு வேலை!

    10. நிலம் எடுப்பு: மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துங்கள்

    11. நிலம் எடுப்பு! வழிகாட்டும் உத்திரப்பிரதேசம்!

    12. நிலம் எடுத்தல் சட்டத்திற்கு வரவேற்பு

    13. வளர்ச்சிக்காக உழவர்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்!

    14. எது வளர்ச்சி? எது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை?

    மின்சாரம்

    15. பணி நிலைப்பு செய்க!

    16. தமிழகம் இருளில் மூழ்கிவிடக் கூடாது

    17. அதிர்ச்சி தரும் அமைச்சரவை முடிவுகள்

    18. கட்டுப்படுத்துங்கள் மின்துறை அமைச்சரை!

    19. மக்களை ஏமாற்ற முடியாது!

    20. நிறைவேற்றுங்கள் கோரிக்கையை!

    21. போராட்டத்தைத் தீர்க்க நடவடிக்கை!

    22. கல்விக் கொள்ளையருக்கு மின்சார சலுகையா?

    வணிகம்

    23. சிமெண்ட் ஆலைகளை நாட்டுடைமையாக்க வேண்டும்!

    24. சிமெண்ட விலை! ஏமாற்ற முயலக் கூடாது!

    25. சிமெண்ட் – அரசுக்கு ஒரு கோரிக்கை!

    26. சில்லறை வணிகத்தைச் சீரழிக்கக் கூடாது!

    27. ஊக வணிகத்திற்கு தடை தேவை!

    28. பங்கு விற்பனை கூடாது!

    29. பெட்ரோல் விலை உயர்வு கூடாது!

    30. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது!

    சமூகப் பிரச்சனை

    31. கடல்சார் பல்கலைக்கழகம் கட்டாயம் தேவை!

    32. சேதுக்கால்வாய் – முடக்கும் முயற்சிகளை

    முறியடிக்க வேண்டும்!

    33. தொழிலாளர் நலன்காக்க வேண்டும்!

    34. சேது திட்டம் நிறைவேறத் துணை நிற்போம்!

    35. ஜல்லிக்கட்டுக்குத் தடை கூடாது!

    36. பிளாஸ்டிக்கிற்கு தடை!

    37. கலைஞர் முடிவுக்கு வரவேற்பு!

    38. நிவாரண உதவி கிடைக்க உதவ வேண்டும்!

    39. நிவாரண உதவி தேவை!

    40. சென்னையைக் காக்கத் திட்டம்!

    41. பி.டி.கத்திரிக்காய்க்குத் தடை!

    42. புதிய மாநகராட்சிகளே வளர்ச்சிக்கு வகை செய்யும்!

    43. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண்சாமரம்!

    44. தலைமைச் செயலகத்தை மாற்றக்கூடாது!

    45. வேண்டாம்.... கிராம மருத்துவர் முறை!

    46. கூடங்குளம் போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி

    47. பழங்குடியினருக்கு அதிக இழப்பீடு

    48. மின்வெட்டைப் போக்க போர்க்கால நடவடிக்கை

    49. நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்!

    ***

    மது விலக்கு

    1. பின்பற்றுங்கள் குசராத் வழியை!

    ‘குசராத் மாநிலத்தில் மூவாயிரம் சிற்றூர்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக 11 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்புத் திட்டத்தை நிறைவேற்றப் போகிறோம்’ என்று அம்மாநில முதலமைச்சர் நரேந்திரமோடி அறிவித்திருக்கிறார். ‘பிசினஸ் ஸ்டேண்டர்டு’ என்கிற நாளேடு உட்படச் சில நாளேடுகளில் இந்தச் செய்தி இன்று (8.3.2007) வெளிவந்திருக்கிறது. ‘மக்களுக்குத் தேவையான சலுகைகளையும், திட்டங்களையும் நிறைவேற்று வதற்கு டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் அவசியம் தேவைப்படுகிறது’ என்ற கருத்தை வலியுறுத்தும் நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அளித்துள்ள விளக்கமும் இன்று எல்லா நாளேடுகளிலும் வெளிவந்திருக்கிறது.

    தமிழ்நாட்டைப் போலச் குசராத்தில் மதுவிலக்கு தளர்த்தப்படவில்லை. அரசாங்க மதுக்கடைகள் அங்கே இல்லை. மது விற்பனையினால் கிடைக்கும் ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரி வருமானப் பெருக்கமும் அங்கே இல்லை. ஆனாலும் அங்கே வளர்ச்சிப்பணிகள் எதுவும் தடைபட்டு நிற்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முன்னனி மாநிலங்களில் ஒன்றாகக் குசராத் விளங்கிக் கொண்டிருக்கிறது.

    டாஸ்மாக் கடைகளின் வருமானம் இல்லாமலேயே குசராத் மாநிலம் எப்படி வளர்ச்சியில் முன்னணியில் நிற்கிறது? பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் புதுப்புது வளர்ச்சித் திட்டங்களை அங்கே எப்படி நிறைவேற்ற முடிகிறது? சலுகைகளையும், திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு டாஸ்மாக் கடைகளின் வருமானத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை தமிழகத்திற்கு மட்டும் ஏன் ஏற்பட்டிருக்கிறது? இந்த வினாக்கள் எல்லாம் நியாயமானவை.

    தமிழகத்தில் மதுவிலக்குத்துறை தனியாக இருக்கிறது. மதுவிலக்கைச் செயல்படுத்துவதற்குத் தனியாகக் காவல்துறை இருக்கிறது. ஆனாலும் மதுவிலக்கு மட்டும் இல்லை. மதுவிலக்குக் கொள்கைக்குப் புது விளக்கம் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘மதுவிலக்குக் கொள்கையின் முக்கிய நோக்கம் ஏழை எளிய மக்களின் பொருளாதார நலவாழ்வையும், உடல் நலத்தையும் வெகுவாக பாதிக்கும் கள்ளச் சாராயத்தினை ஒழிப்பதே ஆகும்’ என்று கடந்த ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் செல்வி செயலலிதா சொல்லி வந்தார். ‘டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்’ என்று இப்போது நம்முடைய முதலமைச்சர் கலைஞர் சொல்கிறார். கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை அதனால் தான் கடைகளைத் திறந்து விட்டிருக்கிறோம் என்பது தான் இவர்களது விளக்கத்திற்குப் பொருள்.

    காவல்துறைப் பொறுப்பை என்னிடம் கொடுத்துப் பாருங்கள் என்று சொல்ல மாட்டேன். என்னுடைய கருத்துரைகளைக் கேட்டுச் செயல்பட காவல்துறைக்கு நீங்களே ஆணையிடுங்கள். 6 மாதக் காலத்தில் தமிழகத்தில் ஒரு துளிக் கள்ளச் சாராயம் கூட இல்லை என்கிற நிலைமையை உருவாக்கிக் காட்டிவிட முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. அரசு நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

    2001 - 2002 ஆம் ஆண்டில் ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரிகள் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 3694 கோடி ஆகும். 2006 - 2007 ஆம் ஆண்டில், 10 மாதங்களில் மட்டும் அந்த வருமானம் 5599 கோடி ரூபாய். முழு ஆண்டில் இந்த வருமானம் 6 ஆயிரம் கோடியைத் தாண்டிவிடும். 5 ஆண்டுக் காலத்தில் மது வருமானம் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இது பெருமைப்படக் கூடியது அல்ல. மதுவினால் அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது என்றால், ‘குடி’மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் எவ்வளவு? மதுவினால் அரசுக்கு ஒரு ரூபாய் வருமானம் வருகிறது என்று வைத்துக்கொண்டால், குடிப்பவர்க்ள 3 ரூபாயை இழக்கிறார்கள் என்று ஒரு கணக்குச் சொல்லப்படுவதுண்டு. அந்தவகையில் பார்த்தால் அரசாங்கத்திற்குக் கிடைத்திருக்கும் வருமானம் ரூ. 6 ஆயிரம் கோடி என்றால், ‘குடி’மக்கள் இழந்திருப்பது 18 ஆயிரம் கோடி ரூபாய்.

    தெருக்கள் தோறும் மதுக் கடைகளைத் திறந்து, கடைகள் தோறும் குடிப்பகங்களை நள்ளிரவு 12 மணி வரை திறந்து வைத்துக் குடியைப் பெருக்கிக் ‘குடி’மக்களிடமிருந்து பல்லாயிரம் கோடி ரூபாயைப் பறித்து, பிறகு அதிலிருந்து சலுகைகளையும், திட்டங்களையும் நிறைவேற்றினால் யார்தான் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்? ஆண்டு தோறும் அரசுக்குக் கிடைத்து வரும் மது வருமானம் உயர்ந்து கொண்டே வந்திருப்பதைப் பார்க்கும் போது, குடிகாரர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டு வந்திருக்கிறது என்பதை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நம்முடைய இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு மிக வேகமாக ஆளாகிவருகிறார்கள். இதை மறுப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் பரப்புரையின் (பிரச்சாரத்தின்) மூலமாகக் குடிப்பழக்கத்தைக் குறைத்துவிட முடியாது. ‘குடி குடியைக் கெடுக்கும்; குடிப்பழக்கம் உடலுக்கும், நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு’ என்று எழுதிவைத்துத் தான் விற்பனை செய்கிறோம். ஆனாலும் குடியைக் குறைக்க முடியவில்லை என்பதை அரசாங்கம் தரும் புள்ளி விவரங்களிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.

    குடிப்பவர்களே இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை என்று சொல்கிற முதலமைச்சர், அத்தகைய நிலைமையை உருவாக்க முன் வரவேண்டும். குடியினால் பாதிக்கப்படுவது ஏழை எளியவர்கள் தான். ஏழை எளியவர்களின் குடும்பப் பொருளாதாரம் குடியினால் சீரழிந்து நிற்கிறது என்று ‘நந்தினி வாய்ஸ்’ என்கிற சென்னையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி அறிவித்திருக்கிறது.

    எனவே சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் மதுபானங்களுக்குச் செலவும் செய்யும் அளவிற்கு வசதி உள்ள பிரிவினர்கள் பயன்படுத்தும் மதுபானங்களைத் தான் விற்கிறோம் என்கிற அரசாங்கத்தின் நவீன மதுவிலக்குக் கொள்கை இதன் மூலம் தோல்வியடைந்துவிட்டது. குடியினால் வருகிற வருமானம் ஏழை எளிய குடும்பங்கள் பறிகொடுத்துள்ள வருமானம். அவர்களது வருமானத்தைப் பறித்து அவர்களுக்குச் சலுகை என்ற நிலை வேண்டாம். இந்தப் புதிய மதுவிலக்குக் கொள்கை தமிழகத்திற்குத் தேவையில்லை. ஏழைகளை மேலும் பரம ஏழைகளாக்கும் மதுக்கடைகளைப் படிப்படியாக மூட ஆணையிடுங்கள். மக்களுக்கான சலுகைகளையும், திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கான நிதியினைப் பெறக் குசராத் வழியைப் பின்பற்றுங்கள்.

    (தமிழ்நாட்டில் மக்களைச் சீரழிக்கும் மதுக்கடைகளை மூடவேள்டும் என்றும் மக்கள் நலத் திட்டங்களுக்காக வருவாயைப் பெருக்க குசராத் வழியைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வெளியிட்ட அறிக்கை 8.3.2007)

    ***

    2. படிக்க இடிந்த பள்ளிக் கூடங்கள்!

    குடிக்க குளுகுளு குடிப்பகங்களா?

    இடிந்த நிலையில் பள்ளிக் கூடங்கள்; மரத்தடியில் வகுப்புகள் என்ற நிலைமை மாநிலம் முழுவதும் பரவலாக இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலைமையில் முதல் கட்டமாக 300

    Enjoying the preview?
    Page 1 of 1