Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Laabam
Laabam
Laabam
Ebook143 pages29 minutes

Laabam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எப்போதுமே வேலையில்லா திண்டாட்டத்தைப்பற்றி பேசும்போது, எல்லோருமே வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்காமல் சொந்த தொழில் தொடங்கினால் இன்னும் பத்து பேருக்கு வேலை தரலாமே என்று அட்வைஸ் அள்ளி வழங்குவார்கள். ஆனால், வேலை தேடுபவர்களை போய் கேட்டால், “எங்களுக்கு வெளியூருக்கு இண்டர்வியூ போறதுக்கே காசு இல்லாம சிங்கி அடிக்கிறோம். இதுல நாங்க எங்க பிசினஸ் ஆரம்பிக்கிறது” என்று அவர்கள் புலம்புவார்கள். இந்த இரண்டு தரப்பிலுமே யதார்த்தம் இருக்கிறது என்றாலும்கூட, சொந்தமாக தொழில் தொடங்குவதுபற்றிய விழிப்புணர்வும், ஆர்வமும் முன்பைவிட சமீபகாலங்களில் சற்று அதிகமாகியிருக்கிறது என்றே சொல்லலாம். இப்படி பலதரப்பட்ட பின்னணியினர் தொழில் முனைவோராக முயற்சி செய்யும்போது அனைவருக்கும் பொதுவான விஷயங்கள் பல இருக்கும். அவரவர் பின்னணிக்கு ஏற்ப கவனிக்க வேண்டிய விஷயங்களும் தனித்தனியாக நிறையவே இருக்கும். இவை அனைத்தையும்பற்றி விரிவாக பார்ப்பதுதான் இந்த நூலின் நோக்கம். இந்த நூலில், தொழில் முனைவோருக்கான வழிகாட்டல் மட்டுமல்லாமல், அவர்களை ஊக்கப்படுத்துகிற தகவல்களும், உலகளாவிய பல பிசினஸ் உதாரணங்களும் இடம்பெறும். படித்துப் பயன்பெறுங்கள். விரைவிலேயே நீங்கள் ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக உருவாக வாழ்த்துகள்!

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580149707658
Laabam

Read more from Dr. Ramesh Prabbha

Related to Laabam

Related ebooks

Reviews for Laabam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Laabam - Dr. Ramesh Prabbha

    https://www.pustaka.co.in

    லாபம்

    Laabam

    Author:

    ரமேஷ் பிரபா

    Dr. Ramesh Prabbha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-ramesh-prabbha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ரமேஷ் பிரபா

    B.Sc., B.Tech. (MIT), MBA (IIMC)

    Academic Council Member, Anna University, Chennai

    Advisory Member, University Stakeholders Forum,

    Anna University of Technology, Chennai

    Planning and Development Committee Member, University of Madras

    Board of Studies Member, EMRC, Anna University

    Board of Studies Member, Mass Communication &

    Journalism, Madurai Kamaraj University

    Academic Council Member, Centre for Social Initiative and Management

    என்னுரை

    எப்போதுமே வேலையில்லா திண்டாட்டத்தைப்பற்றி பேசும்போது, எல்லோருமே வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்காமல் சொந்த தொழில் தொடங்கினால் இன்னும் பத்து பேருக்கு வேலை தரலாமே என்று அட்வைஸ் அள்ளி வழங்குவார்கள். ஆனால், வேலை தேடுபவர்களை போய் கேட்டால், எங்களுக்கு வெளியூருக்கு இண்டர்வியூ போறதுக்கே காசு இல்லாம சிங்கி அடிக்கிறோம். இதுல நாங்க எங்க பிசினஸ் ஆரம்பிக்கிறது என்று அவர்கள் புலம்புவார்கள். இந்த இரண்டு தரப்பிலுமே யதார்த்தம் இருக்கிறது என்றாலும்கூட, சொந்தமாக தொழில் தொடங்குவதுபற்றிய விழிப்புணர்வும், ஆர்வமும் முன்பைவிட சமீபகாலங்களில் சற்று அதிகமாகியிருக்கிறது என்றே சொல்லலாம்.

    நமது நாடு விவசாய பூமி, அடிப்படையில் விவசாயமே ஒரு தொழில்தான் என்றாலும்கூட நாம் காலங்காலமாக விவசாயம் செய்வது தனி, தொழில் செய்வது தனி என்றே பிரித்து பார்த்து வந்திருக்கிறோம். கிராமங்களில் விவசாயத்தில் முழுமையாக ஈடுபட்டிருப்பவர்களில் ஒரு சிலர் ஏதாவது பிசினஸ் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனாலும், அதிக பட்சமாக அவர்கள் செய்வது, பத்து பேர் சேர்ந்து 'சீட்டு போடுவது’ என்பதாகத்தான் இருக்கும். இதில் கோவில் சீட்டு, அமாவாசை சீட்டு, பௌர்ணமி சீட்டு என்று பல வகை இருக்கும். அதைத்தாண்டி யோசித்தால் ஃபைனான்ஸ் கம்பெனி நடத்துவார்கள். இவை எல்லாமே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் மூலமாகவே நடப்பதால் பெரும்பாலும் சிறப்பாகவும் நம்பிக்கையாகவும் நடக்கும் என்றாலும்கூட திடீரென அதில் யாராவது ஒருவர் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது அல்லது ஏமாற்றும் எண்ணம் உடையவராக இருக்கும் போது ஒட்டுமொத்த பேருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. கிராமத்தில் இதைத் தாண்டி யோசிக்கிற பிசினஸ் என்று பார்த்தால் வாடகை சைக்கிள் கடை, சவுண்ட் சர்வீஸ், பெட்டிக் கடை, டீ கடை, தட்டி விலாஸ் ஓட்டல் போன்று சின்ன அளவிலும் லேத் பட்டறை, லாரி/பஸ் டிரான்ஸ்போர்ட், சினிமா கொட்டகை என்று சற்று பெரிய அளவிலும் தொடங்கி நடத்துவார்கள்.

    இதுவே நகரங்களில் பார்க்கும் போது, டெலிபோன் பூத், ஜெராக்ஸ் கடை, ஃபேன்ஸி ஸ்டோர் என்று சிறிய அளவில் தொடங்கி அதன் மூலம் பிசினஸ் ருசி பார்த்தவர்கள் பிறகு செல்போன் ஷோரூம், பிரின்டிங் பிரஸ், நகைக்கடை என்று பெரிய அளவில் வளர்வதையும் கண்கூடாக காண முடிகிறது. இப்படி, தொழில் தொடங்குவதற்கெனவே கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் நிறையவே உண்டு.

    விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டே தொழில் செய்பவர்களில் இரண்டு வகை உண்டு. விவசாயத்தில் வரும் வருமானம் போதவில்லை என்பதற்காக சைடு பிசினஸ் செய்வது ஒரு வகை. விவசாயத்தில் நல்ல வருமானம் இருந்தும்கூட அந்த ஊரில் ஒரு தனி அந்தஸ்து வேண்டும் என்பதற்காகவே சினிமா கொட்டகை தொடங்குவது, பஸ் சர்வீஸ் ஆரம்பிப்பது போன்ற தொழில்களில் ஈடுபடுவது இன்னொரு வகை. இரண்டாவதாக இருக்கிற சிக்கல் என்னவென்றால், பிசினஸ் தொடங்கும்போது இருக்கிற ஆர்வம் அவர்களிடம் காலப்போக்கில் குறைந்து விடுவதால் லாபத்துக்காக அல்லாமல் பெயருக்காக அந்த ஊரில் அந்த பிசினஸை செய்து கொண்டிருப்பார்கள். இது பல சமயங்களில், புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகக்கூட ஆகிவிடுவதுண்டு.

    நகரத்தில் தொடங்கப்படும் பல்வேறு புதுமையான தொழில்களுமேகூட சில சமயங்களில் நமக்கு தவறான முன்னுதாரணங்களாக ஆவதுண்டு. ஒரு புதிய விஷயத்தை யாராவது முயற்சி செய்து அது தோல்வி அடைந்துவிட்டால், அவர் சரியாக செய்யாததால் அது தோல்வி அடைந்துவிட்டது என்கிற உண்மை வெளிவராமல், அந்த புதிய விஷயமே மக்களுக்கு பிடிக்கவில்லை என்கிற தவறான கருத்தே பதிவாகிவிடுகிறது.

    கிராமம், நகரம் என்று நாம் பிரித்துப் பார்த்தது போலவே

    Enjoying the preview?
    Page 1 of 1