Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Padithal Mattum Podhumey
Padithal Mattum Podhumey
Padithal Mattum Podhumey
Ebook77 pages24 minutes

Padithal Mattum Podhumey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தற்போதைய கால கட்டத்தில் ஒரு பள்ளி மாணவனின் வாழ்க்கையில் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு அவனது வாழ்க்கைப் பாதையையே முடிவு செய்யும் சக்தி வாய்ந்ததாக +2 திகழ்கிறது. +2 சீரியஸான விஷயம் என்பது எல்லா +2 மாணவர்களுக்குமே தெரிந்திருந்தாலும்கூட அது +2 இறுதி தேர்வுகளின் போது மட்டுமே உணரப்படுகிறது. ஆனால் +2 நிர்ணயிக்கப்போகும் பல விஷயங்கள் எஸ்.எஸ்.எல்.சி. கால கட்டமான 10ஆம் வகுப்பிலேயே தொடங்கி விடுகின்றன என்பதுதான் உண்மை. காலம் கடந்த ஞானோதயம் பல நேரங்களில் உதவாது. எனவே பத்தாம் வகுப்பிலிருந்தே மாணவர்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதையும் விரிவாக விளக்கி ‘குங்குமம்’ இதழில் நான் எழுதிய தொடரின் தொகுப்புதான் இந்த நூல். இதை +2 மாணவர்கள் மட்டுமல்லாமல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களும், ஏன் அத்தனை பள்ளி மாணவர்களுமே படிப்பதன் மூலம் பயன் பெறலாம். தங்கள் எதிர்காலத்தை நல்ல முறையில் திட்டமிடலாம். ஒரு பள்ளி மாணவனின் நடவடிக்கைகள், மனோபாவம், அவனது சூழல், குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் நடவடிக்கைகள் இவையெல்லாம் சேர்ந்து எப்படி அவனது வாழ்க்கைப் பாதையை தாழ்த்தவோ, உயர்த்தவோ செய்யும், அதிலிருந்து மீண்டு போராடி தன்னை அந்த மாணவன் எப்படி உயர்த்திக் கொள்ளலாம் என்பதை எடுத்துச் சொல்லும் வழிகாட்டியாக இந்த நூல் செயல்படும். படித்துப் பயன் பெறுங்கள். ஒரு புதிய தலைமுறை உருவாகட்டும். வாழ்த்துக்கள்!

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580149707659
Padithal Mattum Podhumey

Read more from Dr. Ramesh Prabha

Related to Padithal Mattum Podhumey

Related ebooks

Reviews for Padithal Mattum Podhumey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Padithal Mattum Podhumey - Dr. Ramesh Prabha

    https://www.pustaka.co.in

    படித்தால் மட்டும் போதுமே

    Padithal Mattum Podhumey

    Author:

    ரமேஷ் பிரபா

    Dr. Ramesh Prabbha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-ramesh-prabbha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ரமேஷ் பிரபா

    B.Sc., B.Tech. (MIT), MBA (IIMC)

    Academic Council Member, Anna University, Chennai

    Advisory Member, University Stakeholders Forum,

    Anna University of Technology, Chennai

    Planning and Development Committee Member, University of Madras

    Board of Studies Member, EMRC, Anna University

    Board of Studies Member, Mass Communication &

    Journalism, Madurai Kamaraj University

    Academic Council Member, Centre for Social Initiative and Management

    என்னுரை

    கல்வி நமக்குத் தேவை என்பது அனைவரும் அறிந்த ஒரு சாதாரண விஷயம்தானே. இதை விளக்கிச் சொல்ல என்ன இருக்கிறது? என்ற கேள்வி உங்களில் பலர் மனதில் எழலாம். நம்மிடையே உலவும் பல விஷயங்கள் நமக்கு தெரிந்தவைதான். ஆனால் அவற்றை நினைவூட்டுவதன் மூலமும் அடிக்கடி வலியுறுத்துவதன் மூலமும்தான் ஓரளவாவது செயல்படுத்த ஆரம்பிக்கிறோம் என்பது நடைமுறை உண்மை. போக்குவரத்து விதிகளைப் பொறுத்தவரை சாலைகளை எப்படி கடக்க வேண்டும் என்பதோ, வாகனங்களை ஓட்டும் போது என்ன செய்ய வேண்டும் என்பதோ நமக்குத் தெரியாதது அல்ல. இருந்தாலும்கூட, சாலைப் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு நமக்குத் தெரிந்த விஷயங்களையே மீண்டும் மீண்டும் நினைவுறுத்துவதன் மூலம்தான் நாம் அவற்றுக்கு தொடர்ந்து செயல்வடிவம் கொடுக்கிறோம்.

    அதே வேலையைத்தான் இந்த நூலும் கல்வி விஷயத்தில் செய்யப்போகிறது. கல்வி சம்பந்தமாக நமக்குத் தெரிந்த ஆனால் செயல்படுத்த மறந்த பல விஷயங்களை மீண்டும் நினைவுறுத்தி நிலைநிறுத்துவதுதான் நூலின் நோக்கம். சுருக்கமாக சொல்லப்போனால் கல்வியைப் புறக்கணித்தால் ஒரு குடும்பத்தின் வளர்ச்சி எப்படியெல்லாம் தடைபடும். கல்வியை அரவணைத்தால் ஒரு குடும்பம் எப்படியெல்லாம் உயர்ச்சி பெறும் என்பதை ஆதாரப்பூர்வமாக அனுபவப் பூர்வமாக புரிய வைத்து. மாணவர்களை வழிநடத்துவதுதான் இந்த நூல் செய்யப் போகும் பணி.

    தற்போதைய கால கட்டத்தில் ஒரு பள்ளி மாணவனின் வாழ்க்கையில் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு அவனது வாழ்க்கைப் பாதையையே முடிவு செய்யும் சக்தி வாய்ந்ததாக +2 திகழ்கிறது. +2 சீரியஸான விஷயம் என்பது எல்லா +2 மாணவர்களுக்குமே தெரிந்திருந்தாலும்கூட அது +2 இறுதி தேர்வுகளின் போது மட்டுமே உணரப்படுகிறது. ஆனால் +2 நிர்ணயிக்கப்போகும் பல விஷயங்கள் எஸ்.எஸ்.எல்.சி. கால கட்டமான 10ஆம் வகுப்பிலேயே தொடங்கி விடுகின்றன என்பதுதான் உண்மை. காலம் கடந்த ஞானோதயம் பல நேரங்களில் உதவாது. எனவே பத்தாம் வகுப்பிலிருந்தே மாணவர்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதையும் விரிவாக விளக்கி ‘குங்குமம்’ இதழில் நான் எழுதிய தொடரின் தொகுப்புதான் இந்த நூல். இதை +2 மாணவர்கள் மட்டுமல்லாமல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களும், ஏன் அத்தனை பள்ளி மாணவர்களுமே படிப்பதன் மூலம் பயன் பெறலாம். தங்கள் எதிர்காலத்தை நல்ல முறையில்

    Enjoying the preview?
    Page 1 of 1