Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velai Ready!
Velai Ready!
Velai Ready!
Ebook290 pages1 hour

Velai Ready!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வேலை கிடைக்காத ஒவ்வொரு மாணவனிடமும் நிச்சயம் ஏதேனும் ஒரு தடைக்கல் ஒளிந்திருக்கும். அதனை சரியாக கண்டறிந்து அகற்றினால், நிச்சயம் வேலைக்கு தகுதியானவராக மாறிவிடுவார் என்கிறார் நிர்மல். கொஞ்சம் ஆங்கிலம், தவறு இல்லாத ரெஸ்யூம், படித்த பாடங்களில் தெளிவு, நிறைய தன்னம்பிக்கை, மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் மனப்பாங்கு போன்ற ஐந்து தன்மைகள் இருந்தாலே, வேலை கிடைத்துவிடும் என்கிறார் நிர்மல். இந்த ஐந்து குணங்களை பெறுவதற்கான வழிகளையும் காட்டியிருக்கிறார் நிர்மல். படித்துப்பாருங்கள், வேலை நிச்சயம்.

Languageதமிழ்
Release dateSep 24, 2022
ISBN6580158409087
Velai Ready!

Related to Velai Ready!

Related ebooks

Reviews for Velai Ready!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velai Ready! - M. Nirmal Murugan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வேலை ரெடி!

    (மாணவர்களுக்கு இன்டர்வியூ வழிகாட்டி)

    Velai Ready!

    (Maanavargalukkana Interview Vazhikatti)
    Author:

    எம். நிர்மல் முருகன்

    M. Nirmal Murugan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-nirmal-murugan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் பக்கம்

    கடைசி பக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    ஆசிரியர் பக்கம்

    தொட்டுவிடும் தூரம்தான், வேலை!

    நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் சின்ன வயதில் இருந்தே நான் ஆசிரியர்களின் செல்லப்பிள்ளை. பள்ளியில் ஸ்கூல் டாப்பர் என்பதால், அதே நம்பிக்கையுடன் பி.இ. படித்தேன். நான் எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள் கிடைத்தன.

    நான்காவது வருடம் தொடங்கிய நேரத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களை தேர்வுசெய்ய ஒரு பெரிய நிறுவனம் எங்கள் கல்லூரிக்கு வந்தது. நான் மேற்கொண்டு படிப்பதா அல்லது வேலைக்குப் போவதா என்று தெளிவாக முடிவு செய்யவில்லை என்றாலும் இன்டர்வியூவில் கலந்துகொண்டேன். எழுத்துத்தேர்வு, டெக்னிக்கல் தேர்வுகள் எனக்கு மிகவும் எளிதாக இருக்கவே, இறுதிச்சுற்றுக்கு வந்துவிட்டேன்.

    என்னுடைய மதிப்பெண்களை பார்த்து தேர்வு குழுவினர் ரொம்பவே பாராட்டினார்கள். மேற்படிப்பு, குழுவாக இணைந்து பணியாற்றுவது, இன்றைய அரசியல் நிலவரம் குறித்து ஜாலியாக சில கேள்விகள் கேட்டார்கள். நானும் இயல்பாக பதில் சொன்னேன். மீண்டும் ஒரு முறை நல்ல மதிப்பெண்ணுக்காக என்னை பாராட்டி வழியனுப்பினார்கள்.

    முதல் பெயராக என்னை தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஆனால், கடைசிவரை என்னுடைய பெயர் அவர்களது பட்டியலில் இடம்பெறவே இல்லை. நிறைய மதிப்பெண் எடுத்திருப்பதால், நான் மேற்படிப்புக்கு போய்விடுவேன் என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்.

    அடுத்த நிறுவனமும், அதற்கடுத்துவந்த நிறுவனமும் எனக்கு வேலை தரவில்லை என்றதும்தான் எனக்கு விழிப்பு வந்தது. என்னிடம் ஏதோ ஒரு குறை இருக்கிறது என்று நம்பினேன். மதிப்பெண்கள் குறித்த குருட்டு நம்பிக்கையில் இத்தனை நாட்கள் கழித்திருக்கிறேன் என்பது புரிந்தது. உடனே வேலை கிடைத்த என் நண்பர்களுடன் கூடிப்பேசி, நான் என்னென்ன தவறுகள் செய்திருக்கிறேன் என்று என்னை நானே அலசிப் பார்த்தேன்.

    மிகவும் அசட்டையாக ரெஸ்யூம் தயாரித்திருந்தேன். மதிப்பெண்களை மட்டுமே ரெஸ்யூமில் பெரிதாக குறிப்பிட்டிருந்தேன். கூடுதலாக படித்திருந்த கம்ப்யூட்டர் மொழிகள் பற்றி எழுதவில்லை. தேர்வாளர்கள் பாடத்தை தாண்டியும் கேட்பார்கள் என்று நினைக்கவில்லை. என்ன கேள்வி கேட்டாலும் சமாளித்துவிடலாம் என்ற அசட்டுத்தனத்தால் தோற்றுப்போனேன் என்பது புரிந்தது. இன்னும் எந்தெந்த ஏரியாவில் நான் வீக் என்பதை சுயபரிசோதனை செய்து, அவற்றை எல்லாம் நிவர்த்தி செய்தேன். அடுத்த நிறுவனம் வந்தபோது, நான் முழுமையாக தயாராகியிருந்தேன். மிக எளிதில் வேலையை கைப்பற்றினேன்.

    சென்னையில் படித்து சரளமாக ஆங்கிலம் பேசும் எனக்கே இந்த நிலைமை என்றால், புறநகர் மற்றும் கிராமங்களில் வளர்ந்து வேலை தேடும் மாணவர்கள் நிலைமை எப்படி இருக்கும் என்ற சிந்தனை என்னை மிகவும் யோசிக்கவைத்தது.

    ஏனென்றால் இன்றும் பல இன்ஜினீயரிங் கல்லூரிகளில் வழிகாட்டும் வகுப்புகள் நடப்பதில்லை. ஒருசில கல்லூரிகளில் கண்துடைப்பிற்காக தகுதியே இல்லாத நபர்களைக்கொண்டு அல்லது பாடம் சொல்லித்தரும் ஆசியர்களைக்கொண்டு இந்த வகுப்புகளை நடத்துகிறார்கள். அதனால்தான் சென்னை தவிர்த்த இடங்களில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்படும்போது, 20 சதவிகித மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதே கடினமாக இருக்கிறது.

    தமிழகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் வெளிவருகிறார்கள். இந்தியா முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் இன்ஜினீயரிங் முடிக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு வருடமும் ஐ.டி. துறையில் சுமார் 2.5 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இந்த வேலையை பெறுவதற்கு கடுமையான போட்டியை மாணவர்கள் சந்திக்கவேண்டி இருக்கிறது.

    பாடங்களை நன்றாக படிப்பதால் மட்டும் கேம்பஸ் இன்டர்வியூவில் வென்றுவிட முடியாது என்பதற்கு நானே சாட்சி. அதனால் என்னைப் போன்று வேலை கிடைக்காமல் தடுமாறும் என் நண்பர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூவிற்கான பயிற்சி கொடுக்கத்தொடங்கினேன். என் நண்பர்களுக்காக தொடங்கிய இந்த பயிற்சி வகுப்பை, இப்போது ஜூனியர்கள் மற்றும் பிறகல்லூரி மாணவர்களுக்கும் நடத்திவருகிறேன்.

    என் அனுபவத்தை, நான் கற்றுக்கொண்டதை அனைத்து மாணவர்களும் அறிந்து பயன்பெற வேண்டும் என்றுதான் இந்த புத்தகத்தை எழுதினேன். கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைப்பதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பதை ஒவ்வொரு பகுதியாக எழுதி, ஒரு முழுமையான வழிகாட்டியாக இந்தப் புத்தகத்தை தயார் செய்திருக்கிறேன். இதனை புத்தகமாக்குவதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த சிக்ஸ்சென்ஸ் பதிப்பகத்தின் புகழேந்தி மற்றும் கார்த்திக்கிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த நேர்முகத்தேர்வு குறித்து ஆலோசனைகள் வழங்கியிருக்கும் கல்வியாளர் திரு.ஜெயப்பிரகாஷ் காந்தி, டி.சி.எஸ்.நிர்வாகி திரு.சசிராம் ராஜதனசேகரன், காக்னிஸென்ட் நிர்வாகி திரு ஶ்ரீராம், விப்ரோ நிர்வாகி எஸ்.ராமச்சந்திரன், சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமி நிர்வாகி திரு.சங்கர் மற்றும் சி.டி.எஸ்.நிறுவனத்தில் பணிபுரியும் என் நண்பன் ஆர்.ரவிச்சந்திரன், அன்புத்தோழன் பாலசுந்தரம் ஆகியோருக்கும் இன்ஜினீயரிங் மாணவர்கள் சார்பில் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

    அன்பைத்தவிர வேறொன்றும் அறியாத அம்மா ஜோதிக்கு இந்த நூலை காணிக்கையாக்குகிறேன்.

    எம். நிர்மல்

    yemnirmal@gmail.com

    கடைசி பக்கம்

    வெற்றிக்கு வழிகாட்டும் நிர்மல்!

    எம்.பி.ஏ., முடித்திருக்கும் நிர்மல் இப்பொழுது இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்ஜினீயரிங் படித்த காலத்திலேயே நண்பர்களுக்கும், கல்லூரித் தோழர்களுக்கும் நேர்முகத்தேர்வுக்கான வகுப்புகள் எடுத்த அனுபவம் கொண்டவர். நிறைய நண்பர்களின் வேலை வாய்ப்புக்கு அடித்தளமாக இருந்திருக்கிறார்.

    தனி நபர் ஆலோசனையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். வேலை கிடைக்காத ஒவ்வொரு மாணவனிடமும் நிச்சயம் ஏதேனும் ஒரு தடைக்கல் ஒளிந்திருக்கும். அதனை சரியாக கண்டறிந்து அகற்றினால், நிச்சயம் வேலைக்கு தகுதியானவராக மாறிவிடுவார் என்கிறார் நிர்மல்.

    கொஞ்சம் ஆங்கிலம், தவறு இல்லாத ரெஸ்யூம், படித்த பாடங்களில் தெளிவு, நிறைய தன்னம்பிக்கை, மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் மனப்பாங்கு போன்ற ஐந்து தன்மைகள் இருந்தாலே, வேலை கிடைத்துவிடும் என்கிறார் நிர்மல். இந்த ஐந்து குணங்களை பெறுவதற்கான வழிகளையும் காட்டியிருக்கிறார் நிர்மல். படித்துப்பாருங்கள், வேலை நிச்சயம்.

    அத்தியாயம் 1

    பொறியியல் கல்லூரியில் சேரும் பெரும்பாலான மாணவர்களின் நோக்கம், ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து கை நிறைய பணம் சம்பாதிப்பதுதான். அதற்காகத்தான் +2 தேர்வுக்கு கடினமாக உழைத்து, நிறைய மதிப்பெண்கள் பெற்று பொறியியல் படிப்பைத் தேர்வு செய்கிறார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் கல்லூரியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே போதாது. அதாவது பொறியியல் படிப்பில் நீங்கள் 90 சதவிகிதம் மதிப்பெண்கள் வைத்திருந்தால்கூட, உடனே கூப்பிட்டு வேலை கொடுத்துவிட மாட்டார்கள். வேலை பெறுவதற்கு என மேலும் சில திறமைகள் தேவைப்படும். அந்தத் திறமைகள் உங்களிடம் இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்தே வேலை தருவார்கள். அதனால் படிக்கும்போதே அதற்கும் நீங்கள் தயாராக வேண்டும். அதுசரி, எப்போது வேலைக்குச் செல்வதற்காக தயார்படுத்திக்கொள்ள வேண்டும்?

    நீங்கள் முதல் வருடம் படிக்கிறீர்கள் என்றால் - நல்லது

    இரண்டாம் வருடம் படிக்கிறீர்கள் என்றால் - மிகவும் நல்லது

    மூன்றாம் வருடம் படிக்கிறீர்கள் என்றால் - மிகமிக நல்லது.

    நான்காவது வருடத்தில் இருக்கிறீர்களா? - ரொம்ப நல்லது.

    படித்து முடித்து வேலை தேடுகிறீர்களா? - அதுவும் நல்லதே.

    ஆம், கடந்துபோன காலத்தை நினைத்து வருந்துவதில் அர்த்தமே இல்லை. இப்போது நீங்கள் இப்போது எந்த தருணத்தில் இருக்கிறீர்களோ, அதற்கு ஏற்றாற்போல் தயாராகலாம். நான்காவது வருடம் இறுதியில்தான் கல்லூரிக்கு வரும் நேர்முகத்தேர்வுகளை சந்திக்கப் போகிறீர்கள் என்றாலும், முன்கூட்டியே தயாராவது மிகவும் சிறப்பானது. ஒவ்வொருவரும் எப்படி தயாராகவேண்டும் என்பதை பார்க்கலாம்.

    1. முதல் வருட மாணவர்கள்

    உங்களுக்கு நிறைய நிறைய காலம் இருக்கிறது. அதனால் நிதானமாக ஆனால் ஆழமாக தயாராக முடியும். முதலில் நீங்கள் ஆங்கில மொழியில் கவனம் செலுத்த வேண்டும். நிறைய நாளிதழ்கள் படியுங்கள், நண்பர்களுடன் குரூப் டிஸ்கஸனில் ஈடுபடுங்கள். சரளமாகப் பேசும்வகையில் ஆங்கில மொழியில் தேர்ச்சிகொள்ளுங்கள். உங்களுக்கு அதற்கான சூழல் இல்லை என்றால் தயங்காமல், ஒரு தரமான நிறுவனத்தில் ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்பில் சேருங்கள். நிறைய புதுப்புது வார்த்தைகளை பழகுங்கள். ஆங்கிலம் மட்டுமே இப்போது உலகப் பொதுமொழி. மேலும் ஆங்கிலம் மட்டுமே பெரிய நிறுவனங்களில் கையாளப்படும் மொழி என்பதால் முழு கவனம் செலுத்துங்கள். ஆங்கிலம் எழுதுவதைவிட பேசுவதற்கு முன்னுரிமை கொடுங்கள்.

    இதுவரை நீங்கள் படித்த கணிதம் மிகவும் முக்கியம். எழுத்துத் தேர்வு நடைபெறும் நேரங்களில் கணிதம் அதிகளவில் பயன்படும். அதனால் +2 வரை படித்த கணிதத்தை அவ்வப்போது போட்டுப் பழகுங்கள். உங்கள் ஞாபகத்தில் எப்போதும் கணிதம் மறந்துவிடாமல் இருப்பதற்கான பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். ஆங்கிலம், கணிதம் இரண்டுடன் உங்கள் பொறியியல் படிப்பையும் ஆழமாக படியுங்கள். இப்போது இருந்தே வேலைக்கான தேர்வுக்குத் தயாராகும் மாணவனால் மிக எளிதில் வெற்றிக்கனியை பறித்துவிட முடியும்.

    2. இரண்டாம் வருட மாணவர்கள்

    பொறியியல் படிப்பில் முழுகவனம் செலுத்த வேண்டிய நேரம். அதனால் ஆழ்ந்து புரிந்துகொண்டு நன்றாக படியுங்கள். ஆங்கில மொழி அறிவு போதுமான அளவு இருக்கிறதா என்பதை சோதித்துப்பார்த்து, அதனை மேம்படுத்துங்கள். அத்துடன் மேற்படிப்புக்காக நடத்தப்பெறும் ஜி.ஆர்.இ.(GRE), கேட்(CAT)., ஜி.மெட். (GMAT) போன்ற பரிட்சைகளுக்குத் தயார்படுத்தும் வகுப்புகளில் சேருங்கள். ஏனென்றால் இந்த பரிட்சைகளுக்கு கேட்கப்படும் கேள்விகளும், வேலைக்கான இன்டர்வியூக்களில் கேட்கப்படும் கேள்விகளும் பெரும்பாலும் ஒரே தன்மையாகத்தான் இருக்கும். நீங்கள் மேற்படிப்பு படிப்பதில் ஆர்வம் இல்லாதவராக இருந்தால்கூட பரவாயில்லை. இந்த பரிட்சைகளுக்கான கேள்வித்தாள்களை வாங்கி படிக்கத்தொடங்கினால், நேர்முகத்தேர்வுக்கு எளிதில் உங்களால் தயாராகிவிட முடியும்.

    3. மூன்றாம் வருட மாணவர்கள்

    படிப்பில் இந்த வருடங்களில் அதிகபட்சம் நீங்கள் அக்கறை செலுத்தவேண்டி இருக்கும். அதாவது இந்த வருடத்துக்குள் எத்தனை கூடுதல் சதவிகிதம் மதிப்பெண்கள் பெறமுடியுமோ, அதைப் பெற்றுவிடும் வகையில் உழைக்க வேண்டும். ஏதாவது அரியர் வைத்து இருந்தால், அவற்றில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றியடைய வேண்டும். அதனால் இந்த வருடம் முழுக்கவே நீங்கள் படிப்பில் தீவிரமாக, முழு கவனம் செலுத்த வேண்டும்.

    உங்கள் படிப்போடு சம்பந்தப்பட்ட புரோகிராமிங் மொழியில் அதீத கவனம் செலுத்துங்கள். ஆம், புரோகிராமிங் மொழியில் நீங்கள் எத்தனை ஆற்றலுடன் செயல்படுகிறீர்களோ, அத்தனை எளிதாக வேலை கிடைத்துவிடும். புரோகிராமிங் வல்லுநராக உங்களை உருமாற்றிக் கொள்ளுங்கள். இந்த வருடம் நீங்கள் படிக்கும்போதே, ஆங்கில உரையாடல் உங்களுக்கு எளிதாக வந்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் குரூப் டிஸ்கஸன் மூலம் வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

    4. நான்காம் வருட மாணவர்கள்

    வேலை வாய்ப்பு உங்கள் வாசலில் இருக்கிறது. அதனால் இந்த நேரத்தில் நீங்கள் செய்யவேண்டியது வேலை பெறுவதற்கான திறனை அதிகரித்துக் கொள்வதுதான். வேலை தரும் மல்டிநேஷனல் நிறுவனங்கள், ஒரு சில கோர்ஸ்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தரும். அதாவது நீங்கள் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் மாணவர்களாக இருப்பீர்கள். உங்கள் பாடத்திட்டத்தில் ஜாவா, சி ப்ளஸ் போன்றவை இருக்காது. ஆனால், இவற்றை நீங்கள் தனியே படித்துத் தேறி இருந்தால் கூடுதல் மதிப்பெண்களைப் பெற முடியும். அதனால் இதுபோன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

    5. படித்து முடித்தவர்கள்

    உங்கள் கல்லூரிக்கு கேம்பஸ் இன்டர்வியூ வந்திருக்கலாம், அல்லது வராமல் இருக்கலாம். ஆனால் படித்து முடித்த ஒரு வருட காலத்தில் வேலையில் சேர்வது மிகவும் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு வருட காலத்திற்குள் வேலையில் சேரவில்லை என்றால், அடுத்த வருடம் கல்லூரியில் இருந்து வரும் மாணவர்களும் உங்கள் பட்டியலில் சேர்ந்துகொள்வார்கள். உங்களுக்கான போட்டி கூடிவிடும். அதனால் முதல் வருடத்திற்குள் எப்படியாவது வேலையை பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். இப்போது உங்களுக்கு கல்லூரி படிப்பு இல்லை என்பதால் முதல் வருடம் மாணவர்களைப் போன்று ஆங்கிலப் பயிற்சியில் இருந்து நான்காம் வருட மாணவர்களுக்காக சொல்லப்பட்ட கிராஸ் கோர்ஸ் வரை அனைத்துப் பயிற்சிகளையும் முழுநேரமாக மேற்கொள்ள வேண்டும்.

    படித்து முடித்து ஒருவருடத்தைக் கடந்தவர்கள் கண்டிப்பாக சில இன்டர்வியூக்களை கடந்து வந்திருப்பார்கள். அங்கே ஏன் தோல்வி கிடைத்தது என்பதை ஆராய்ந்து, எந்தப் பகுதியில் வீக் என்பதைக் கண்டடைந்து, அதில் தேர்ச்சி அடையவேண்டும்.

    வெறுமனே கல்லூரி படிப்பும், புரோகிராமிங் திறமையும், கூடுதல் தகுதி தரும் கிராஸ் படிப்புகளும் மட்டுமே உங்களுக்கு வேலை பெற்றுத் தந்துவிடாது.

    அப்படியானால் வேறு என்னவெல்லாம் தேவை என்கிறீர்களா? இந்த புத்தகத்துக்கு உள்ளே வாருங்கள். நீங்கள் வேலை பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது, அதனை ஒவ்வொன்றாக தெரிந்து, தெளிந்து கொள்ளுங்கள். கண்டிப்பாக வேலை நிச்சயம்.

    அத்தியாயம் 2

    பொன்னான வாய்ப்பு

    பொறியியல் படிப்பைத் தேர்வுசெய்த மாணவர்களின் கனவு என்பதே ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை மற்றும் கை நிறைய சம்பளம் பெறுவதை நோக்கித்தான் இருக்கும். இதனை எந்த வகையில் சாத்தியமாக்கமுடியும் என்பதை இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

    வேறு எந்தப் படிப்புக்கும் இல்லாத ஒர் அரிய வாய்ப்பு இன்ஜீனியரிங் மாணவர்களுக்கு மட்டுமே உண்டு, அது கேம்பஸ் இன்டர்வியூ.

    படித்துமுடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துவைத்து, எப்போது இன்டர்வியூ வரும் என்று பிற துறையைச் சேர்ந்த மாணவர்கள் காத்திருக்கும்போது ஐ.டி. மாணவர்களை மட்டுமே, படிக்கும்போதே வந்து வேலைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

    இது எத்தனை பெரிய வாய்ப்பு! தமிழகத்தில் உள்ள அநேக கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறுகிறது. இதற்காகத்தான் கல்லூரியைத் தேர்வு செய்யும்போதே, மிகச் சரியானதைத் தேர்வு செய்யவேண்டும். ‘கடந்த ஆண்டு எத்தனை நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்தார்கள், எத்தனை மாணவர்களைத் தேர்வு செய்தார்கள்‘ என்று ஒவ்வொரு கல்லூரியும் வெளியிட்டு இருக்கும் அறிக்கையை கவனமாக ஆராய்ந்தே கல்லூரியைத் தேர்வு செய்திருக்க வேண்டும். அதன்படி சரியான கல்லூரியை தேர்வு செய்திருந்தால், கண்டிப்பாக பெரிய நிறுவனங்கள் உங்களைத் தேடி வந்துவிடுவார்கள்.

    கேம்பஸ் தேர்வு மூலமாக அனைத்து மாணவர்களுக்கும் வேலை பெற்றுத்தருவதில் பல கல்லூரிகள் மிகவும் தீவிரமாக இருப்பது உண்டு. சில கல்லூரிகளில் அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எல்லா மாணவர்களையும் எல்லா நிறுவனங்களும் நடத்தும் கேம்பஸ் இன்டர்வியூக்களில் கலந்துகொள்ள அனுமதிக்க மாட்டார்கள். அப்போதுதான் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைப்பார்கள். ஒரு சில கல்லூரிகளில் ஒரு மாணவரே நாலைந்து ஆஃபர் லெட்டர் வைத்திருப்பதும் உண்டு.

    கேம்பஸ் இன்டர்வியூவுக்கு பெரிய நிறுவனங்கள் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது இல்லை. இன்று கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே கிட்டத்தட்ட ஒரே அளவு சம்பளம் தருகின்றன. அனைத்து நிறுவனங்களின் வேலையும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. அதனால் எந்த நிறுவனம் என்றாலும், முதலில் கையில் ஒரு ஆஃபர் லெட்டர் வாங்கியே தீரவேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றுங்கள், அதுவே முக்கியம். பெரிய நிறுவனம், சிறிய நிறுவனம் என்பது முக்கியமல்ல. ஏனென்றால் நீங்கள் எந்த ஒரு நிறுவனத்திலும் மூன்று ஆண்டுகள் பணி செய்துவிட்டால், அடுத்த நிறுவனங்களுக்கு எளிதில் மாறிக்கொள்ள முடியும். அதனால் முதலில் கிடைக்கும் வேலையை, உங்களுக்கான டிரெயினிங் காலம் என்று நினைத்துக்கொள்ளுங்கள். கிடைக்கும் வேலையை எந்த காரணத்துக்காகவும் உதறித் தள்ளாதீர்கள். ஏனென்றால் வெளி உலகத்தில் வேலை கிடைக்காமல் லட்சக்கணக்கானவர்கள் காத்துக் கிடக்கிறார்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

    ஒருவேளை உங்கள் கல்லூரிக்கு அதுபோன்ற கேம்பஸ் இன்டர்வியூ வாய்ப்பு இல்லை என்றால், எப்படி வேலை பெறுவது என்பதை பின்னர் பார்க்கலாம். முதலில் கேம்பஸ் இன்டர்வியூக்களை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பதை இப்போது அறிந்துகொள்ளலாம்.

    கேம்பஸ் இன்டர்வியூ எத்தனை மதிப்பு மிக்கது என்பதை பலர் அறிவது இல்லை. இதனை அசட்டையாக நினைத்த பலர், அதன்பிறகு வேலை வாங்குவதற்கு எத்தனை சிரமத்தை அனுபவித்தார்கள் என்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

    நான் படித்த கல்லூரிக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஆட்களை எடுக்க நிறைய நிறுவனங்கள் வந்தன. அப்போது எனது நண்பன் ஒருவன் வெளிநாட்டுக்குச் சென்று மேற்படிப்பு படிக்கும் எண்ணத்தில் இருந்தான். அதனால் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொள்ள ஆர்வமின்றி இருந்தான். அப்போதே அவனிடம், ‘நீ கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு வேலையைக் கையில் வைத்துக்கொள். அதன்பிறகு

    Enjoying the preview?
    Page 1 of 1