Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thozhilaali to Mudhalaali
Thozhilaali to Mudhalaali
Thozhilaali to Mudhalaali
Ebook193 pages53 minutes

Thozhilaali to Mudhalaali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தொழிலாளியாக இருந்து முதலாளியானவன் நான். என்னைப் போல பலரும் முதலாளி ஆக வேண்டும் என்பது என் விருப்பம்.

இந்த எண்ணத்தை மேலும் வலுவாக்க, என்னைப் போன்றவர்களைத் தேடிச் சென்று, எடுத்த பேட்டிகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

ஏதாவது ஒரு கோணத்தில் உங்களுக்கு ஒரு சிறிய உந்துதலைத் தரலாம்... உங்களுக்குள் நம்பிக்கையை விதைக்கலாம்... அதன்மூலம் நீங்களும் முதலாளி. அதுதான் எனது நோக்கம்.

Languageதமிழ்
Release dateJan 22, 2021
ISBN6580150907921
Thozhilaali to Mudhalaali

Read more from Ramkumar Singaram

Related to Thozhilaali to Mudhalaali

Related ebooks

Reviews for Thozhilaali to Mudhalaali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thozhilaali to Mudhalaali - Ramkumar Singaram

    https://www.pustaka.co.in

    தொழிலாளி டூ முதலாளி

    (குறைந்த முதலீட்டில் முதலாளி ஆனவர்களின் வெற்றிக்கதை)

    Thozhilaali to Mudhalaali

    (Kuraintha Muthaleettil Mudhalaali Aanavargalin Vetrikathai)

    Author:

    இராம்குமார் சிங்காரம்

    Ramkumar Singaram

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ramkumar-singaram

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    தொழிலாளியாக இருந்து முதலாளியானவன் நான். என்னைப் போல பலரும் முதலாளி ஆக வேண்டும் என்பது என் விருப்பம்.

    இந்த எண்ணத்தை மேலும் வலுவாக்க, என்னைப் போன்றவர்களைத் தேடிச் சென்று ‘வளர்தொழில்’ பத்திரிகைக்காக, எடுத்த பேட்டிகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

    தனி ஆள் தொழிலாகவோ, நிறுவனமாகவோ, எதைத் தொடங்க வேண்டுமென்றாலும் அதற்கு ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் வேண்டும். ஏதாவது ஒரு நிறுவனத்தில் மாதந்தோறும் கிடைக்கும் சம்பளம் இனி கிடைக்காது என்ற பயமே, பலரது தொழில் தொடங்கும் ஆர்வத்துக்கான முட்டுக்கட்டை.

    இந்த நூலில் இடம்பெற்றுள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். கடை போட இடம், கையில் முதலீடு, வலுவான வாடிக்கையாளர் வட்டம்... இதெல்லாம் இருக்கிறதோ, இல்லையோ... முதலாளி ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்துள்ளனர். இவர்களை உங்களுடன் பொருத்திப் பாருங்கள். அவரது செயல்பட்ட விதம், ஏதாவது ஒரு கோணத்தில் உங்களுக்கு ஒரு சிறிய உந்துதலைத் தரலாம்... உங்களுக்குள் நம்பிக்கையை விதைக்கலாம்... அதன்மூலம் நீங்களும் முதலாளி ஆகலாம். அதுதான் எனது நோக்கம்.

    இந்த நூலை எழுதத் தூண்டியதோடு, ஊக்கமும் உற்சாகமும் அளித்த எனது எழுத்துலக ஆசான் ‘வளர்தொழில்’ ஆசிரியர் திரு.க. ஜெயகிருஷ்ணன் அவர்களுக்கும் புத்தக வடிவம் பெற உதவிய எஸ்.பி. அண்ணாமலை, பேட்டிகளில் உதவிய டைட்டஸ் ராஜா மற்றும் சு. தனலட்சுமி மற்றும் புகைப்படங்கள் எடுத்துத் தந்த பேஜர் கிருஷ்ணமூர்த்தி, இப்புத்தகத்தை வடிவமைத்த கோவி. செந்தில் ஆகியோருக்கும், பிழை திருத்தம் பார்த்து, கட்டுரைகளுக்கு முதல் வாசகியாக இருந்து, கருத்துத் தெரிவித்த எனது மனைவி ஆர்.எம். வள்ளியம்மை நெஞ்சார்ந்த நன்றிகள்!

    ஊழியராக இருக்கும் வாசகராகிய நீங்கள், தொழிலதிபராக உயரவிருக்கும் உங்கள் பயணத்தில், நானும் ஒரு திசைகாட்டியாக இருந்திருந்தால், அதுவே எனக்கு மகிழ்ச்சி.

    உங்கள் இலக்கை விரைவில் எட்ட வாழ்த்துகள்!

    தோழமையுடன்

    இராம்குமார் சிங்காரம்

    rkcatalyst@gmail.com, 0091 98410 47455

    உள்ளே...

    1. சலூன் மாஸ்டர்... டியூஷன் வாத்தியார்!

    2. சணல் பொருள்... சரியான லாபம்!

    3. காலையில் தொழிலாளி மாலையில் முதலாளி!

    4. பேச்சாற்றலே, வழக்கறிஞர் ஆக்கியது!

    5. விரட்டிய தோல்விகள்... வென்றது நம்பிக்கை!

    6. உறுத்தாத காலணிகள்... உறுதியான வருமானம்!

    7. பதிப்பகத் தொழில்... கலகல கவிதா!

    8. பள்ளிக்குப் போகாமலே நர்சரி தொடங்கிய பாலன்

    9. தேடி வந்த சோதனை... சோஃபியாவின் சாதனை!

    10. உணவுக்கான செலவு... உணவு தரும் வருமானம்

    11. சிறப்பான சேவைகளே விளம்பர தூதர்கள்!

    12. பழக்கடையிலும் உண்டு பலப்பல நுணுக்கங்கள்!

    13. நேர்மைதான் வெற்றியின் ரகசியமே!

    14. வாய்ப்பை வசமாக்கினால், வெற்றி நிச்சயம்!

    15. காரோட்ட வந்தார்... கார் அதிபர் ஆனார்!

    16. தேடலில் கிடைத்த இயற்கை வருமானம்!

    17. கற்றது செல்லளவு... கல்லாதது கணினியளவு!

    18. தொழிலில் ஜெயிக்கத் தெரிந்த ரூட்டுக்காரன்!

    19. பயிற்சிகள் பெற்றேன்... பலருக்கும் அளித்தேன்!

    20. அன்று தனி ஆள், இன்று மூன்று தொழில்!

    21. உழைப்பே மூலதனம்... தேடி வரும் வருமானம்!

    22. பதிப்பகம், பங்கு வர்த்தகம் இரட்டைக் குதிரை சவாரி!

    23. தெரியாத தொழிலிலும் ஜெயிக்க வைத்த ஆர்வம்!

    1

    சலூன் மாஸ்டர்... டியூஷன் வாத்தியார்!

    சரவணன்

    பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வருகிற சந்தானம் மாதிரி சலூனையும் டியூஷன் சென்டரையும் ஒருங்கே நடத்துகிறார் சரவணன்.

    சென்னை, மேற்கு சைதாப்பேட்டைப் பகுதியில் வசித்து வரும் இவருக்கு சலூன் தொழில் அப்பாவின் ஆசை. அப்பா ஆசைப்படுகிறாரே என்று தமது கனவை விடமுடியுமா...? என்று யோசித்த சரவணன் ஆரம்பித்ததுதான், மாலை நேர டியூஷன் சென்டர். கணிதப் பட்டதாரியாயிற்றே! கணக்குப் போட்டு நேரத்தைப் பயன்படுத்துகிறார்.

    "நான் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தபோது, என் தந்தை சேது திடீரென நரம்புத் தளர்ச்சி நோய் பாதிப்புக்கு ஆளானார். நான் ஒரே மகன் என்ற காரணத்தால் அவர் நடத்தி வந்த சலூன் கடையில் காலடி எடுத்து வைத்தேன்.

    நான் படித்து, பெரிய நிலைக்கு வரவேண்டும் என்பதுதான் அப்பாவின் எண்ணம். ஆனால், குடும்பச் சூழல் திசையை மாற்றியது. படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு 30 ஆண்டுகளாக என் அப்பா நடத்தி வந்த, எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிய ஓம் சக்தி சலூனை கவனிக்க ஆரம்பித்தேன். கடின உழைப்பால், இன்று நல்ல நிலைக்கு விரிவாக்கி உள்ளேன்..." என்கிறார் அடிப்படையிலேயே சென்னை வாசியான சரவணன்.

    "நான் கடைக்குள் காலடி எடுத்து வைத்தபோது, எவ்வித முன் அனுபவமும் இல்லாத சூழல். சவரக் கத்தி, கத்திரிக்கோல் போன்றவற்றைக் கையாளக் கற்றுக் கொள்வது எளிது. ஆனால், நாம் விளையாடும் களம் வாடிக்கையாளரின் முகம் மற்றும் தலை என்பதால் ஆரம்பத்தில் சிறிது உதறல் இருந்தது. எனது வளர்ச்சிக்காக சில வாடிக்கையாளர்கள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள்.

    திருப்புமுனை!

    குடும்பச் சுமை தோளில் இறங்கியது. நம்மைக் காப்பாற்றிய தொழிலை நாம் காப்பாற்றினால்தான் குடும்பச் சக்கரம் சுழலும் என்ற நிலையில், இந்தத் தொழிலில் துணிச்சலாக இறங்கினேன். எனது வளர்ச்சிக்காக நான் ரத்தம் சிந்தி உழைத்தேனோ இல்லையோ, வாடிக்கையாளர்கள் பலர் ரத்தம் சிந்தியுள்ளனர்.

    எனினும், ஓராண்டுக்குள் தொழிலின் நெளிவு, சுளிவுகளைச் சிரமப்பட்டுக் கற்றுக் கொண்டேன். இந்தப் பகுதியில் தற்போது 5 சலூன் கடைகள் இருந்தாலும், எனக்கென 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், அதைத் தொடர்ந்து மதியம் 3.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் கடையில் வேலை பார்க்கிறேன்.

    தொடக்கத்தில் கடையில் வேலைக்கு வைத்திருந்த சிலர் பண விஷயத்தில் நம்பிக்கையாக நடந்து கொள்ளாததால், வேலையாட்களைத் தேடும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன். கடையில் அனைத்து வேலைகளையும் தனியாளாகவே கவனித்து வருகிறேன்.

    திங்கள் முதல் வெள்ளி வரை நாளொன்றுக்குச் சராசரியாக 15 வாடிக்கையாளர்கள் கடைக்கு வருகிறார்கள். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

    செவ்வாய்க்கிழமை பொதுவாக சலூன்களுக்ககு வார விடுமுறை என்பதால், கடையைத் திறப்பதில்லை. அதேபோல வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளைகளில் கடையை அடைத்துவிடுவேன். மழை நேரங்களில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். அதேபோல சபரிமலை சீசனிலும் தொழிலில் மந்தநிலை ஏற்பட்டுவிடும்.

    கட்டண நிலவரங்களை, முடி திருத்தும் கடை உரிமையாளர்கள் சங்கம் நிர்ணயம் செய்து வருகிறது. இருப்பினும், இத்தொழிலில் போட்டி இருப்பதால், குறைவான கட்டணமே வசூலிக்கிறேன். ஒரு நாளில் சராசரியாக ரூ.750 சம்பாதிக்கிறேன்.

    செலவுகளைப் பொறுத்தவரையில், தோராயமாக நாள்தோறும் ரூ.100 வாடகைக்குச் சென்று விடுகிறது. இத்தொழிலுக்குத் தேவைப்படும் பொருள்கள் சென்னை, பாரீஸ் கார்னர் ஏரியாவில் மலிவான விலைக்குக் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களைக் கவர, அடிக்கடி கடையின் உள் அலங்கார வேலைப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டியிருக்கிறது. எனவே ஆண்டுக்கு ரூ.10,000 வரை செலவழிக்க வேண்டியிருக்கும். கடையின் மேற்கூரையில் அலங்கார வேலைகளைச் செய்து, எலெக்ட்ரிக் பொருட்களை வாங்கிப் பொருத்துவது, வண்ணம் பூசுவது என்று புதிதாக கடையை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

    நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் புகழ்பெற்ற சலூன் நிறுவனங்களில் முடிதிருத்திக் கொள்வதற்கு அதிகபட்சமாக ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். அங்கு பணிபுரிபவர்கள் இதற்கெனத் தனியாகப் பட்டயப் படிப்பை முடித்துச் சான்றிதழ் பெற்றவர்களாக இருக்கின்றனர். எனக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1