Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Selavai Kurainga Sir!
Selavai Kurainga Sir!
Selavai Kurainga Sir!
Ebook170 pages56 minutes

Selavai Kurainga Sir!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செலவைக் குறைப்பதற்கான வழிமுறைகளை ஒரு நூலாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. தொழிற்துறையில் போட்டிகள் அதிகரித்து, லாப விகிதங்கள் குறைந்து வரும் இன்றைய சூழலில், வருமானத்தை அதிகரித்து லாபத்தைப் பெருக்குவதை விட, செலவைக் குறைத்து லாபத்தைப் பெருக்குவது எளிதாகும். இதைத்தான் இந்நூலில் உதாரணங்களோடும், சான்றுகளோடும் எடுத்துச் சொல்ல முயன்றிருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580150907923
Selavai Kurainga Sir!

Read more from Ramkumar Singaram

Related to Selavai Kurainga Sir!

Related ebooks

Reviews for Selavai Kurainga Sir!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Selavai Kurainga Sir! - Ramkumar Singaram

    http://www.pustaka.co.in

    செலவைக் குறைங்க சார்!

    Selavai Kurainga Sir!

    Author :

    இராம்குமார் சிங்காரம்

    Ramkumar Singaram

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ramkumar-singaram

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நூலாசிரியர் உரை

    செலவைக் குறைப்பதற்கான வழிமுறைகளை ஒரு நூலாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. தொழிற்துறையில் போட்டிகள் அதிகரித்து, லாப விகிதங்கள் குறைந்து வரும் இன்றைய சூழலில், வருமானத்தை அதிகரித்து லாபத்தைப் பெருக்குவதை விட, செலவைக் குறைத்து லாபத்தைப் பெருக்குவது எளிதாகும். இதைத்தான் இந்நூலில் உதாரணங்களோடும், சான்றுகளோடும் எடுத்துச் சொல்ல முயன்றிருக்கிறேன்.

    மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் நிதிக் கட்டுப்பாட்டியல் (Master of Finance & Control) துறையில் படித்த போது, இரண்டாண்டு காலம் நான் பாடமாகக் கற்றவற்றையும், வளர்தொழில் இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய போது, மூன்றாண்டு காலம் நான் தெரிந்து கொண்டவற்றையும், கடந்த பல ஆண்டுகளாக நடத்தி அனுபவப்பட்டவற்றையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறேன்.

    தமிழில் தன்னம்பிக்கையை உயர்த்தி, எண்ணங்களை மேம்படுத்தி, உங்களைப் பணக்காரராக்க எண்ணற்ற நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் செலவைச் சுருக்கவும், சிக்கனமாக வாழவும் கற்றுத்தர எந்த நூலும் இல்லை. அந்தக் குறையை இந்த நூல் நிச்சயம் போக்கும்.

    இந்நூலில் ஆங்காங்கே பல உதாரணங்களும், சம்பவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை எதுவும் கற்பனை கிடையாது. அனைத்தும் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்தான். முடிந்தவரை அயல்நாட்டு நிறுவனங்களின் மேற்கோள்களைத் தவிர்த்து விட்டு நம் நாட்டு நிறுவனங்களின் உதாரணங்களை இந்நூலில் பயன்படுத்தியிருக்கிறேன்.

    இந்நூல் ‘வளர்தொழில்’ மாத இதழில் 18 மாதங்கள் தொடர் கட்டுரையாக வந்தபோது இதற்குக் கிடைத்த வரவேற்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. தெரியாத மனிதர்கள் பலர் தேடித் தேடி என்னை வந்து சந்தித்தனர். அவர்கள் மூலம் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    தோழமையுடன்

    இராம்குமார் சிங்காரம்

    மின்னஞ்சல்: singaram.ramkumar@gmail.com/catalystpr@gmail.com

    பொருளடக்கம்

    1. சிதம்பர ரகசியம்!

    2. சப்ளையர்களைத் தேடுங்கள்!

    3. 35-ல் முடிவெடுங்கள்!

    4. ரொக்கக் கொள்முதல் லாபம் தரும்!

    5. விற்பனை உயரும் வழி!

    6. அலுவலகச் செலவைக் குறைப்பது எப்படி....?

    7. மின் சிக்கனம்

    8. அந்நியன் ஸ்டைல் அவசியம்

    9. வாடகையில் கிடைக்குமே வரவு!

    10. தவணையில் வாங்கினால் தவறா...?

    11. முன்னுரிமை முதலைக் காக்கும்

    12. செலவும் ஒருவகை முதலீடு தான்!

    13. டெக்னாலஜியைப் பயன்படுத்துங்கள்

    14. மார்க்கெட்டிங் செலவைக் குறைப்பதெப்படி?

    15. புதிதாய் சிந்திப்போம்

    16. அனுபவத்தால் அடக்குங்கள்!

    17. காசோலைகளைக் கையாள்வது எப்படி...?

    18. கடன்களில் கவனம் தேவை

    19. முழுமையாக பயன்படுத்துங்கள்

    20. திட்டமிட்டுச் செலவிடுங்கள்

    21. மாற்று வழிகளைக் கவனியுங்கள்

    22. பணியாளர் உதவியும் முக்கியம்!

    23. செலவினங்களில் கண் வையுங்கள்

    24. வால்மார்ட்டின் வெற்றிக் கதை

    25. விசாரியுங்கள்... செலவைக் குறையுங்கள்!

    26. டெல் டெக்னிக்

    27. விளம்பரச் செலவுகள் அவசியமா? ஆடம்பரமா?

    28. கழிவிலும் காசு வரும்

    29. சிக்கல் வரும் வேளையிலே சிரிங்க!

    30. ராம்கி வகுத்த 10 கட்டளைகள்

    1. சிதம்பர ரகசியம்!

    உங்கள் தொழிலின் லாபம் அதிகரிக்க வேண்டுமா...? அதைச் செய்ய வழி தெரியாமல்தான் இங்கே இருக்கிற அத்தனை பேரும் பாடாய்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மட்டும் அந்த ரகசியம் சொல்கிறேன், அருகே வாருங்கள்.

    ஒரு நிறுவனத்தின் இலாபம் அதிகரிக்க 2 வழிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது, விற்பனையை அதிகரித்து, அதன் மூலம் நிகர லாபத்தைப் பெருக்குவது. இது தரமான பொருட்களைத் தருவது, பரவலாக விளம்பரம் செய்வது, வாடிக்கையாளர் திருப்தி என்று பலதுறைகள் சம்பந்தப்பட்டது. இது வெளி லாபம்.

    உள் லாபம் ஒன்று உண்டு. இப்படிச் சொன்ன உடனே, 2-ம் நம்பர் கணக்கு, உடனிருக்கும் பார்ட்னரை ஏய்ப்பது... இப்படி எல்லாம் தப்பாக யோசிக்க வேண்டாம்.

    ஓகே. அதென்ன உள் லாபம்…? இதோ, இந்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னதைக் கேளுங்கள்.

    "இந்தியாவின் துணை நிதியமைச்சராக இருந்தபோது அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றிருந்தேன்.

    அங்கிருந்த மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. உலகம் முழுக்க பிரசித்தி பெற்ற கார்களைத் தயாரிக்கும் அந்தத் தொழிற்சாலையின் நிறுவனர் 90 வயது கொண்ட முதியவர். அவர் ஓய்வேதும் எடுக்க விரும்பவில்லை. தான் விரும்பி வளர்த்த நிறுவனத்தை அந்த வயதிலும் தானே நிர்வகிக்க விரும்பி, தினமும் அரைநாள் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

    பரந்து விரிந்த நிறுவனம் அது. ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பணியாற்றும் அந்த நிறுவனத்தில் இந்தப் பெரியவர் எந்தத் துறையில் கவனம் செலுத்துவார்... அநேகமாக விற்பனைப் பிரிவாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. காரணம், ஒரு நிறுவனம் மாபெரும் வெற்றியைப் பெற்று உலகளவில் முன்னணியில் இருக்கும்போதும், அந்த நிறுவனத்தின் நிறுவனர், தினமும் தொழிற்சாலைக்கு வந்து போகிறார் என்றால், மிக முக்கியமான துறையைத்தானே தனக்கென தேர்ந்தெடுப்பார்.

    அப்படி அவர் அந்த அரைநாளில் எந்தத் துறையில் இன்னமும் கவனம் செலுத்துகிறாரோ, அந்தத் துறைதான் மொத்த தொழிற்சாலையின் வெற்றிக்கே காரணமாக இருக்க முடியும். இதனைத் தெரிந்து கொண்டே தீர வேண்டும் என்ற ஆவலில் அந்தப் பெரியவரைச் சந்திக்க முற்பட்டேன். வாய்ப்பு கிடைத்தது. என் சந்தேகத்தைக் கேட்டேன்.

    ஐயா, இந்த வயதிலும் நீங்கள் அலுவலகத்துக்கு வந்து என்ன வேலை செய்கிறீர்கள்... உற்பத்தித் துறையில் கவனம் செலுத்துவீர்களா... அல்லது நிதித்துறையில் கவனம் செலுத்துகிறீர்களா... அல்லது தொழிலாளர் நலனிலா... இதில் எந்தத் துறை உங்கள் வெற்றிக்கு அடிப்படை? என்று கேட்டேன்.

    சிறிய சிரிப்போடு என்னை நிமிர்ந்து பார்த்தார். நீங்கள் சொல்கிற எல்லாமே முக்கியமான துறைகள். ஆனால், இதில் எந்தத் துறையிலும் நான் நேரடியாக கவனம் செலுத்துவதில்லை. நான் பின்வாசல்காரன்! என்று சிரித்தார்.

    புரியாமல், அப்படியானால், நீங்கள் அலுவலகம் வந்து என்ன செய்வீர்கள்...?

    நிறுவனத்தின் ஓட்டைகளை அடைப்பவன் நான். இங்கே வருவாய் வாசலைக் கவனிக்க, பலர் இருக்கிறார்கள். செலவு என்ற பின்வாசல் பலருக்குத் தெரிவதில்லை. நான் கவனம் செலுத்துகின்ற ஒன்று, இந்நிறுவனத்தின் செலவுகளை எப்படிக் குறைப்பது என்பதில் மட்டும்தான். நாள்தோறும் நான் செலவு விவரம் அனைத்தையும் பெற்றுக்கொண்டு தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டே இருப்பேன்.

    100 ரூபாய் வருமானம் வருகிற இடத்தில் செலவுகள் 90 ரூபாய் என்றால் 10 ரூபாய்தான் லாபம் கிடைக்கும். வருமானத்தை 130 ரூபாய் ஆக்க அதற்கான பிரதிநிதிகள் பாடுபடலாம். அப்படிச் செய்யும்போது, கூடவே செலவுகளும் 120 ரூபாய்க்கு உயர்ந்து விடலாம். பேப்பரில் வருமான உயர்வு காட்டுவதைவிட, பாக்கெட்டுக்கு வந்து சேரும் லாபம்தான் முக்கியம்.

    ஒரு நிறுவனத்தின் இலாபம் அதிகரிக்க வேண்டுமானால் வருமானம் உயர்ந்தால் மட்டும் போதாது. வருமானத்தின் காலைப் பின்னால் பிடித்து இழுக்கும் செலவுகளையும் குறைக்க வேண்டும். தொழிற்சாலையில் வேலை பார்க்கின்ற அனைத்து ஊழியர்களும் வருமானத்தை அதிகரிக்க உழைத்துக் கொண்டிருப்பார்கள். நான் செலவைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால், நிறுவனத்தின் லாபம் இருமடங்காக உயருகிறது. இது, எங்கள் வெற்றியின் ரகசியம் மட்டுமல்ல... நாங்கள் முன்னணி நிறுவனமாக சோர்வின்றி சென்று கொண்டிருக்கும் ரகசியமும்கூட" என்றார்.

    சில ஆண்டுகளுக்கு முன் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தனியார் வங்கி ஒன்றின் பொன் விழாக் கொண்டாட்டத்தின் போது கூறிய இந்த விஷயம், பெருநிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, சிறிய ஸ்தாபனங்களுக்கும் பொருந்தும்.

    ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரிக்க இன்றைக்கு எண்ணற்ற நிர்வாக உத்திகள் கையாளப்படுகின்றன. ஆனால், செலவைக் குறைப்பதற்கு பலர் முக்கியத்துவம் தருவதில்லை.

    10 ரூபாயை நாம் வருமானமாக ஈட்டி, அதில் 8

    Enjoying the preview?
    Page 1 of 1