Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thittamiduvom! Vetri Peruvom!
Thittamiduvom! Vetri Peruvom!
Thittamiduvom! Vetri Peruvom!
Ebook207 pages1 hour

Thittamiduvom! Vetri Peruvom!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திட்டமிட்டுச் செய்தால், வெற்றி பெறலாம் என்பது ஒன்றும் கம்ப சூத்திரமோ, ராக்கெட் சயின்சோ இல்லை, உலகின் மிகப் பெரிய உண்மைகள் எளிமையானவை என்பதைப் போல.

என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்தவை, கேட்டவை, படித்தவை அனைத்துமே திட்டமிட்டுச் செயல்படுவதின் அவசியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதாக அமைந்தன.

இந்த உண்மையை நான் நடத்திவந்த பல்வேறு மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகளில் சொல்லிவந்தேன். ஏன் இதையே விரிவாக ஒரு நூலாக எழுதலாமே? பலரையும் சென்றடையுமே என்ற எண்ணம் எழுந்தது. செய்துவிடலாம், நம் முதல் புத்தகத்தை எழுதிவிடலாம் என முடிவு செய்ததே இந்நூல்...

Languageதமிழ்
Release dateSep 20, 2021
ISBN6580110107433
Thittamiduvom! Vetri Peruvom!

Read more from Soma Valliappan

Related to Thittamiduvom! Vetri Peruvom!

Related ebooks

Reviews for Thittamiduvom! Vetri Peruvom!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thittamiduvom! Vetri Peruvom! - Soma Valliappan

    https://www.pustaka.co.in

    திட்டமிடுவோம்! வெற்றி பெறுவோம்!

    Thittamiduvom! Vetri Peruvom!

    Author:

    சோம. வள்ளியப்பன்

    Soma. Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆசிரியர் குறிப்பு

    சோம. வள்ளியப்பன் தமிழகத்தின் அனைத்து முன்னணிப் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் கட்டுரைகள், தொடர்கள் எழுதுபவர். தொலைக்காட்சிகளில் பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கருத்துகள் சொல்பவர்.

    தமிழகம் முழுவதுமிருந்தும் பல்வறு கல்லூரிகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களால் பேச, பயிற்சி கொடுக்க அழைக்கப்படுபவர். நிர்வாகம், உறவுகள், சுயமுன்னேற்றம், பணம், பங்குச் சந்தை, ஆளுமைகள் பற்றி இதுவரை 40 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

    பொருளாதாரம், படித்திருக்கும் சோம.வள்ளியப்பன், பெல், பெப்ஸி, வேர்ல்பூல், டாக்டர் ரெட்டீஸ் பவுண்டேஷன், நவியா உட்பட பல்வேறு நிறுவனங்களில் 30 ஆண்டுகள் மனிதவளத் துறையில் பணியாற்றிவிட்டு, தற்போது மேன்மை மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சியின் தலைமை ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் சென்னையில் பணிபுரிகிறார்.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1.வாழ்க்கையில் வெற்றி

    வெற்றி அனைவருக்கும் சாத்தியமா?

    திட்டமிடல் என்றால் என்ன?

    வெற்றி பெற என்ன தேவை?

    உந்து சக்தி எங்கிருந்து வரும்?

    தனக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிவது எப்படி?

    2. உங்கள் லட்சியத்தை உருவாக்கல்

    உங்கள் லட்சியத்தை உருவாக்கச் சில வழிகள்

    இலக்கு அல்லது லட்சியம் எப்படி இருக்க வேண்டும்?

    இலக்கை நிர்ணயிப்போம் வாங்க!

    இலக்கை நிர்ணயிப்பதில் உத்வேகம்

    3. உங்கள் வெற்றிக்கு திட்டமிடல்

    இலக்கை நிர்ணயித்த பின்பு...

    திட்டமிடல்

    சரியானவரின் உதவி பெறுவது சாத்தியமே!

    மாணவனின் மகத்தான தேர்வுத் திட்டம்

    எதிர்பாராத திருப்பங்கள்

    4. உங்கள் வெற்றிக்கு தேவையான வளங்கள்

    வளங்களைத் திட்டமிடுவது எப்படி? (Resource Planning)

    5. உங்கள் வெற்றி வழித்தடம்

    உயர்வுக்கு உதவும் உன்ன வழித்தடங்கள் (Road Map)

    ‘வழித்தடம்’ (Road Map)

    6. வெற்றிக்கு தடைகளும், தகர்க்கும் முறைகளும்

    தடைகளின் வகைகள்

    தயக்கம் ஒரு சுருக்குக் கயிறு

    தடைகளைத் தகர்ப்பதற்கான உபாயங்கள்

    7. வெற்றிக்கு பின்பு

    வெற்றிக்கு அடுத்த என்ன!

    முன்னுரை

    திட்டமிட்டுச் செய்தால், வெற்றி பெறலாம் என்பது ஒன்றும் கம்ப சூத்திரமோ, ‘ராக்கெட் சயின்சோ’ இல்லை, உலகின் மிகப் பெரிய உண்மைகள் எளிமையானவை என்பதைப் போல.

    என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்தவை, கேட்டவை, படித்தவை அனைத்துமே திட்டமிட்டுச் செயல்படுவதின் அவசியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதாக அமைந்தன.

    இந்த உண்மையை நான் நடத்திவந்த பல்வேறு மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகளில் சொல்லிவந்தேன். ஏன் இதையே விரிவாக ஒரு நூலாக எழுதலாமே? பலரையும் சென்றடையுமே என்ற எண்ணம் எழுந்தது. செய்துவிடலாம், நம் முதல் புத்தகத்தை எழுதிவிடலாம் என முடிவு செய்த பொழுது ‘உபதேசம் அடுத்தவருக்குத்தானா?’ என்ற எண்ணம் எழுந்தது. உடன் திட்டமிட்டால் வெற்றி என்ற விஷயத்தை இந்தப் புத்தகம் எழுதுவதிலேயும் நான் எனக்குச் செய்து காட்டிக்கொள்ள வேண்டும் என்று ஒரு உத்வேகமும் வந்தது.

    முடிவு செய்தேன். இந்தப் புத்தகத்தில் என்ன சொல்ல வேண்டும். இதன் நோக்கம், பயன்பாடு என்ன? எவரைச் சென்றடைய வேண்டும்? என்னென்ன விஷயங்களைச் சொல்ல வேண்டும்? என யோசித்து முடிவு செய்தேன்.

    ஒவ்வொ£ரு நாளும் இத்தனை பகுதிகள் என முன்கூட்டியே முடிவு செய்துவிட்டிருந்ததால், ஒரு தெளிவு பிறந்தது. எழுதி முடித்தேன்.

    Every one has the will to win, but a few have the will to prepare to win - வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற மனத்திட்பம் எல்லோரிடமும் உண்டு; ஆனால் வெற்றி பெறுவதற்கான திட்டமிடும் மனத்திட்பம் சிலரிடமே உள்ளது என்பது முதுமொழி.

    இந்தப் புத்தகத்தை வாசிப்பதன் மூலமும், இதை முழுமையாக மனத்தில் நிறுத்தி, இதன் வழிநடப்பதன் மூலமும், எவராலும் நிச்சயமாக வெற்றிக்குத் திட்டமிட முடியும்.

    வெற்றி பெறுவதற்கான திட்டம் தீட்ட நீங்கள் தொடங்கியாயிற்று. நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

    அன்புடன்,

    சோம. வள்ளியப்பன்

    வெற்றி பெறும்வரை முயற்சி, விழுவதைப் பற்றிக் கவலையில்லை.

    வெற்றிபெற முதல் தேவை, நம்மால் முடியும் என்ற நம்பிக்கை.

    ஒன்றைக் கண்டிப்பாக அடைய முடியும் என்ற ஆழமான

    நம்பிக்கை அதை அடையவைத்துவிடுகிறது.

    தயக்கத்தைத் தள்ள தயங்க வேண்டாம்.

    1.வாழ்க்கையில் வெற்றி

    வெற்றி அனைவருக்கும் சாத்தியமா?

    வாழ்க்கையில் அனைவருமே வெற்றிபெறத்தான் விரும்புகிறோம். அது சிறிய விஷயமாக இருந்தாலும் சரி. பெரிய விஷயமாக இருந்தாலும் சரி.

    வெற்றிக்குப் பல அடையாளங்கள் உண்டு. அது பணம், பதவி, தேர்ச்சி, நிம்மதி, ஆரோக்கியம், நட்பு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

    அந்த, நாம் விரும்பும், வேண்டும் ‘வெற்றி’யை அடைய முடியுமா? அனைவராலும் முடியுமா?

    முடியும்!

    அதற்கு என்ன வேண்டும்?

    சிலர் நினைக்கலாம். அதற்கு அதிர்ஷ்டம் தேவை என்று. சிலரோ, சிபாரிசுகளை நம்புகிறார்கள். வேறு சிலர் அந்த ‘வெற்றி’க்கனியை எவராது பறித்து வந்து அவர்கள் கையில் கொடுப்பார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அவர்கள் எல்லாம் நம்புவது போல், வேண்டுவது போல் நடக்கலாம் - மிகச் சிலருக்கு, நூற்றில் ஒருவருக்கு நடக்கலாம். மீதம் உள்ள நூற்றுக்கு 99 நபர்களுக்கு அப்படி நடக்காது.

    அவர்கள் விதியை, தங்கள் நேரத்தை நொந்து கொள்வார்கள். தங்களுக்கு வெற்றிக்கனியை சிபாரிசு செய்யாத நண்பர்களை, பறித்துத் தராத உறவினர்களைக் குற்றம் கூறுவார்கள். மேலும் தங்களைத் தாங்களே சுயஇரக்கத்தோடு பார்த்து ‘உச்சு’க் கொட்டிக் கொள்வார்கள்.

    வெற்றி அனைவருக்குமே சத்தியமாக சாத்தியந்தான்!

    ஆனால், வெற்றி ஒரு விபத்து அல்ல, அது தற்செயலாக, நேரம் கூடி வரும்பொழுது, மற்றவர் கைதூக்கிவிடும் பொழுது, அல்லது அடுத்தவர் சலுகை காட்டி உதவும் பொழுது மட்டும் நடைபெறுவதல்ல. அப்படி நடப்பதெல்லாம் தற்செயல். மிகமிக அரிதாக நடைபெறுவன, லாட்டரிச்சீட்டில் கோடி ரூபாய் பரிசு விழுவதுபோல. நடப்பதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு.

    பின் வெற்றி அனைவருக்கும் எப்படிச் சாத்தியம்?

    வெற்றி என்றால் என்ன?

    சாத்தியத்தைப் பார்ப்பதற்கு முன், ‘வெற்றி’யைப் புரிந்து கொள்ளுதல் முக்கியம்.

    பள்ளி மாணவன் தன் வகுப்புத் தேர்வில் கணிதத்தில் 100/100 வாங்குவது அவனுடைய வெற்றி. விரும்பிய கல்லூரியில் விரும்பிய வகுப்பில் சேர்வது சிலருக்கு வெற்றி. நினைத்த அளவு செல்வம், வசதி வாய்ப்புகள், சேர்ப்பது வேறு சிலருக்கு வெற்றியாக இருக்கலாம். ஆக, வெற்றிக்குப் பல அடையாளங்கள் உண்டு.

    குறிப்பிட்ட அளவில் புத்தகங்களை எழுதுவது, வெளியிடுவது; ஆசைப்பட்ட கலையில் தேர்ச்சி பெறுவது, திரைப்பட இயக்குநராகுவது, விளையாட்டுத் துறையில் மனதில் ஆசைப்பட்ட நிலையை அடைவது; வெளிநாட்டிற்கு வேலைக்குப் போவது; பொதுத் தேர்வில் மாவட்ட - மாநில அளவுகளில் இடங்கள் பெறுவது; குறிப்பிட்ட காலத்தில் பதவியுயர்வு; குறிப்பிட்ட காலத்தில் வீடு கட்டுதல்; மகளுக்குத் திருமணம் செய்தல்.

    அரசியலில் நினைத்த நிலையை அடைவது; மற்றவர்க்கு உதவுவதில் உயர்நிலை அடைவது; பள்ளி கல்லூரிகள் கட்டுவது; உயரிய கண்டுபிடிப்புகளைச் செய்வது, பெரிய கட்டிடங்களை நிர்மாணம் செய்வது, கலெக்டராவது, ராணுவத்தில் சேர்வது என்று வெற்றி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

    ஏன் சிலருக்கு வெற்றி என்பது விரும்பிய நபரைத் திருமணம் செய்வதாகக் கூட இருக்கலாம்.

    இவற்றில் ஏதாவது, வெறும் அதிர்ஷ்டத்தில், அல்லது நாம் முன்பு பார்த்த காரணங்களால் மட்டும் நடக்குமா? நடக்காது. ஆயினும் வெற்றி எனக் கருதப்படும் இவையெல்லாம் சத்தியமாக சாத்தியமே!

    வெற்றியை நிச்சயமாக்குவது எப்படி?

    வெற்றியை, எடுத்துக் கொண்ட எவற்றிலும், எல்லாவற்றிலும் நிச்சயப்படுத்திக் கொள்ள முடியும். அதற்குச் சிலவற்றை முறையாகச் செய்ய வேண்டும்.

    சரியாகத் திட்டமிடல், திட்டத்தை நிறைவேற்றுதல், திட்டப்படி நடக்கிறதா எனத் தொடர்ந்து கண்காணித்தல், தேவையாயின் மாறுதல்கள் செய்தல், முழுவதுமாக நிறைவேற்றுதல் என, அது பல நிலைகள் கொண்ட ஒரு பயணம், பயணத்தின் முடிவில் ‘வெற்றி’ நிச்சயம்.

    அந்தப் பயணத்தின் முக்கிய, முதல் தேவை ‘திட்டமிடுதல்’ அந்தத் திட்டமிடலைச் சற்று விபரமாக உதாரணங்களுடன் பார்ப்போம். இந்தப் புத்தகத்தில் வருபவை Wishful thinking எனப்படும். இப்படி நடந்தால் நன்றாக இருக்குமே என்பது போன்ற, வெற்று ஆசைகள் அல்ல. இவை எல்லாம் Learnt by experience எனும் அனுபவப்பூர்வமாக உணரப்பட்டவை. செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுத் தந்தவை.

    திட்டமிடுவோம் - வெற்றி பெறுவோம்!

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் சொன்ன ஒரு வாசகம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதை இங்கு சொல்லுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    If I have 8 hours for cuting a tree, I will spend 6 hours in sharpening the Axe.

    ‘‘எனக்கு ஒரு மரத்தை வெட்ட 8 மணிநேரம் இருக்கிறதென்றால், அதில் 6 மணி நேரத்தை கோடாரியைத் தீட்டுவதில் செலவழிப்பேன்’’ என்பது அந்த ஆங்கில வாசகத்தின் பொருள்.

    அட! எவ்வளவு பெரிய உண்மை. ஒரு கூர்மை இல்லாத கோடாரியால் 8 மணி நேரம் என்ன, எத்தனை மணிநேரம் வெட்டினாலும், அந்த வேலை முற்றுப் பெறப் போவதில்லை. ஆனால், நாம் அந்தக் கோடாரியைக் கூர்மைப்படுத்துவதில் செலவழிக்கும் நேரம், நாம் வெட்டும் நேரத்தை வெகுவாகக்க குறைக்கப் பயன்படும் அல்லவா!

    பலரும் வாழ்க்கையில் பல செயல்பாடுகளில் இவ்வாறுதான் செயல்படுகிறார்கள். மொக்கைக் கத்திகளை வைத்துக் கொண்டு அறுக்கிறார்கள். அல்லது அறுக்க முயன்று தோற்றுப் போய், வருத்தப்பட்டு தம் தோல்விக்குக் காரணமாக மரத்தை, அல்லது கத்தியைக் குறை சொல்லுகிறார்கள்.

    - அது எது போன்ற மரம்?

    - அதன் வலிமை, கட்டுமானம் என்ன?

    - அதை வெட்ட என்ன வகையான கருவி சரியாக இருக்கும்?

    - எந்தப் பகுதியில் வெட்ட / அறுக்க வேண்டும்?

    - எத்தனை நேரம் அறுத்தபிறகு,

    Enjoying the preview?
    Page 1 of 1