Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennam Enna Seyyum?
Ennam Enna Seyyum?
Ennam Enna Seyyum?
Ebook56 pages1 hour

Ennam Enna Seyyum?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதன் தன்னுள் எண்ணுவது போலவே இருக்கின்றான் என்பது முதுமொழி.

இந்தக் கூற்று மனித இருப்பின் சகல பரிமாணங்களையும் தழுவி நிற்கின்றது. அவன் வாழ்வின் ஒவ்வொறு நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் பொருந்தி நிற்கிறது.

மனிதன் என்பவன் உண்மையிலேயே அவனது எண்ணங்களே. ஒருவரது குணம் என்பது அவரது எல்லா எண்ணங்களின் மொத்தக் கூட்டலே.

விதையிலிருந்தே செடி எழுச்சி பெறுகிறது. விதையின்றிச் செடி துளிர்த்திருக்க வாய்ப்பில்லை.

அவ்வாறே மனிதனின் ஒவ்வொறு செயலும் அவனுள் மறைந்திருக்கும் எண்ணங்கள் என்னும் விதைகளிலிருந்ததே எழுச்சி பெறுகிறது. அவ்வாறின்றி செயல் மலர்ந்திருக்க வாய்ப்பில்லை.

இது தற்செயலான செயல்களுக்கு மட்டுமன்றி திட்டமிட்டு செய்யும் செயல்களுக்கும் சமமாக பொருந்தும்.

செயல் என்பது எண்ணத்தின் மலர்ச்சி. இன்பமும் துன்பமும் அதன் கனிகள். ஆக மனிதன் சேகரிக்கும் சுவையானதும் மற்றும் கசப்பானதுமான அத்தனை கனிகளும் அவனால் பயிரிடப்பட்டவையே.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580146007255
Ennam Enna Seyyum?

Related to Ennam Enna Seyyum?

Related ebooks

Reviews for Ennam Enna Seyyum?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennam Enna Seyyum? - Subramanya Selva

    https://www.pustaka.co.in

    எண்ணம் என்ன செய்யும்?

    Ennam Enna Seyyum?

    Author:

    James Allen

    AS A MAN THINKETH

    தமிழாக்கம்:

    சுப்ரமண்ய செல்வா

    Subramanya Selva

    For more books

    http://www.pustaka.co.in/home/author/subramanya-selva

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளடக்கம்

    நூலாசிரியர் பற்றி…

    ஜேம்ஸ் ஆலன் அவர்களின் முன்னுரை

    மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை

    எண்ணமும் குணமும்

    எண்ணமும் சூழ்நிலைகளும்

    எண்ணமும் உடல்நலமும்

    எண்ணமும் குறிக்கோளும்

    சாந்தம்

    நூலாசிரியர் பற்றி…

    ஜேம்ஸ் ஆலன் அவர்களின் As a Man Thinketh என்னும் இந்த நூல் பலர் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, உலகில் சுயமுன்னேற்றத் துறை என்னும் ஒரு துறை உருவாக ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், அவரைப்பற்றி மிகக் குறைவாகவே வெளியுலகிற்கு தெரிந்திருக்கிறது. ஜேம்ஸ் ஆலன் 1864ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள லெஸ்டர் என்னும் இடத்தில் பிறந்தார். 1902ம் ஆண்டு வரை இங்கிலாந்தின் பெரிய நிறுவனமொன்றின் உயர் அலுலர் ஒருவருக்கு அந்தரங்கச் செயலாளராக பணியாற்றினார். தனது 38ஆவது வயதில் பணியிலிருந்து விலகி தனது மனைவியுடன் இல்ஃப்ராகொம்ப் என்னும் இடத்தில் ஒரு சிறு குடிலில் குடியேறி எழுதத் தொடங்கினார். தனதும் 48வது வயதில் திடீரென இறப்பதற்கு முன் இருபது நூல்களை எழுதினார்.

    ஒரு சிறு தொகுப்பு என அவரால் குறிப்பிடப்படும் இந்த நூல் ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் பல இலட்சம் பேருக்கு தங்களின் எண்ணத்தின் ஆற்றல் மூலம் தங்கள் பெருங்கனவுகளை நனவாக்கிக்கொள்ளலாம் என்னும் பேருண்மையை உணர்த்தியுள்ளது.

    ஜேம்ஸ் ஆலன் அவர்களின் முன்னுரை

    எனது சொந்த அனுபவம் மற்றும் ஆழ்ந்த தியானம் மூலம் பெறப்பட்ட அறிவைக் கொண்டும் எழுதப்பட்ட இச்சிறு தொகுப்பு எண்ணத்தின் ஆற்றல் என்னும் பெருமதிப்புமிக்க விடயம் பற்றி எழுதப்பட்ட முழுமையான ஆய்வு நூல் அன்று. இது ஒரு தெளிவான விளக்க நூல் என்பதைவிட ஒரு சிறு குறிப்பு என்பதே பொருத்தமாக இருக்கும். இந்த நூலின் நோக்கம் மனிதர்கள் தங்களுக்குள் ஊட்டி வளர்க்கும் எண்ணங்கள் மூலம் 'தங்களை உருவாக்குபவர்கள் தாங்களே' என்னும் பேருண்மையை உணரத் தூண்டுவதாகும். மனமே மனிதரின் தேர்ந்த நெசவாளி. அது ஒருவரின் குணநலம்

    Enjoying the preview?
    Page 1 of 1