Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Magizhchiyaga Vaazhungal
Magizhchiyaga Vaazhungal
Magizhchiyaga Vaazhungal
Ebook206 pages1 hour

Magizhchiyaga Vaazhungal

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

விருப்பங்கள் வெவ்வேறானவை. சிறு குழந்தைகள் ஒவ்வொரு பொம்மையாக எடுத்து விளையாடும்; எந்த பொம்மையும் திருப்தி தராமல், சற்று நேரத்தில் அவற்றை தூக்கி வீசிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று பார்க்கும். அதுபோல, எதை செய்துமுடித்த பின்னும் முழு திருப்தி கிடைக்காமல், அலைபாயும் கண்களுடனும் மனதுடனும், வேறு வேறு என்று அடுத்தடுத்து எதையாவது தேடுகிறவர்களாகவே நாமெல்லாம் இருக்கிறோம்.

படிப்புதான், அதில் பெற வேண்டிய மதிப்பெண்கள்தான் கட்டாயம் பெற வேண்டியது எனறு பள்ளிப்பருவத்தில் அலைந்துவிட்டு, பின் நல்ல வேலை அல்லது வெற்றி தரும் வியாபாரம் என்று மற்றொன்றைத் துரத்துகிறோம். அதன்பிறகு, பணம்தான் பிரதானம் என்று சில ஆண்டுகள் பணத்தின் பின் ஓடுகிறோம். காதலா? பெற்றோர் பார்த்துசெய்து வைக்கும், திருமணமா? பதவி உயர்வுகளா, பிரபலமடைவதா, எதில் கிடைக்கும் வெற்றி மகிழ்ச்சிதரும் என்று அலைபாய்கிறோம்.

வயது நாற்பதினைத் தாண்டியதும், இவ்வளவுநாள் என்னை கவனிக்காமல் விட்டுவிட்டாயே என்று உடல் கோபிக்க, அடுத்து அதனை சரிசெய்ய மனது கிடந்து துடிக்கிறது.

மொத்தத்தில் வாழ்க்கை முழுக்கவே அல்லாட்டம் ஆகிவிடுகிறது. ஓடி ஓடி களைத்துப் போய், ஒருகட்ட்த்தில் முடியாமல் மூச்சிரைத்தபடி உட்கார்ந்து விடும் விளையாட்டு வீரனைப் போல, பரிதாபமாக இருக்கிறது பலரையும் பார்த்தால்... எவையெல்லாம் பெரிது என்று தேடி அலைந்து பெற்றோமோ, அவை எதுவுமே முழு திருப்தி தரவில்லை என்று ஒரு கட்டத்தில் தெரிந்து போகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் விடாமல் அதன் பின்னும் இன்னொரு தேடலை மும்முரமாக ஆரம்பிக்கிறது மனது!

பெற்றவர்கள், பெரியவர்கள் வாழ்த்துகிறார்கள். படிப்பு, பணம், பட்டம், பதவி போன்றவற்றில் உச்சத்தை நாம் அடையவேண்டும் என்று. நம் விருப்பம் அறிந்து ஆசிர்வாதம் செய்கிறார்கள்.

இறைவனிடம் வைக்கப்படும் விண்ணப்பங்களிலும் மக்கள் குறிப்பாகவே இன்னது வேண்டும் என்று கேட்கிறார்கள். அதைத் தா, இதைத் தா என்று மனமுருகி வேண்டுகிறார்கள். கட்டணம் செலுத்தி, காணிக்கை கொடுத்து, ஏன் பேரம் பேசிக் கூட தங்களுக்கு வேண்டியதை கடவுளிடம் கேட்கிறார்கள். ஆனால் கேட்ட்தை சரியாக பெற்றுக்கொண்டதுடனாவது, அவர்கள் தாகம் தீருகிறதா என்றால் அதுதான் இல்லை. எவ்வளவு மொண்டு குடித்தும், தீராத தாகம், இந்த தாகம், என்ன தாகம்!

எவ்வளவு பெற்றும் நிறையாத பை, என்ன பை! அதை எடுத்துக்கொண்டு, கால் கடுக்க, வியர்க்க விறுவிறுக்க, எல்லா இடமும், எல்லோரிடமும் சென்று வந்தாகிவிட்டது. ஆனாலும் தேவையை நிறைவு செய்துகொள்ள முடியவில்லை. வல்லமை தாராயோ...

சிவசக்தி...

என்று பாரதி கேட்பது போல... நாமும் நம் இறைவனிடம் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எதற்கான வல்லமையை எனக்குத் தா கேட்பது? இதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில்?

படித்துப் பாருங்கள். உங்கள் எண்ணங்களையும் எனக்கு எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்
- சோம வள்ளியப்பன்
writersomavalliappan@gmail.com

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580110104539
Magizhchiyaga Vaazhungal

Read more from Soma Valliappan

Related to Magizhchiyaga Vaazhungal

Related ebooks

Reviews for Magizhchiyaga Vaazhungal

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Magizhchiyaga Vaazhungal - Soma Valliappan

    http://www.pustaka.co.in

    மகிழ்ச்சியாக வாழுங்கள்

    Magizhchiyaga Vaazhungal

    Author:

    சோம. வள்ளியப்பன்

    Soma. Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. என்ன வேண்டும்?

    2. எது சந்தோஷம்?

    3. இதுதான் சந்தோஷம்

    4. ஆராய்ச்சிகள் தெரிவிப்பதும் இதையே...

    5. சத்தியமற்ற முட்டாள்தனமான (!) எதிர்பார்ப்புகள்

    6. அறிவார்ந்த எதிர்பார்ப்புகள்

    7. கோபமே, போ போ

    8. மகிழ்ச்சி வெளியில் இல்லை

    9. மனதில் இருக்கிறது மகிழ்ச்சியின் சாவி

    பின் அட்டையில் தெரிவிக்க

    முன்னுரை

    விருப்பங்கள் வெவ்வேறானவை. சிறு குழந்தைகள் ஒவ்வொரு பொம்மையாக எடுத்து விளையாடும்; எந்த பொம்மையும் திருப்தி தராமல், சற்று நேரத்தில் அவற்றை தூக்கி வீசிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று பார்க்கும். அதுபோல, எதை செய்துமுடித்த பின்னும் முழு திருப்தி கிடைக்காமல், அலைபாயும் கண்களுடனும் மனதுடனும், வேறு வேறு என்று அடுத்தடுத்து எதையாவது தேடுகிறவர்களாகவே நாமெல்லாம் இருக்கிறோம்.

    படிப்புதான், அதில் பெற வேண்டிய மதிப்பெண்கள்தான் கட்டாயம் பெற வேண்டியது எனறு பள்ளிப்பருவத்தில் அலைந்துவிட்டு, பின் நல்ல வேலை அல்லது வெற்றி தரும் வியாபாரம் என்று மற்றொன்றைத் துரத்துகிறோம். அதன்பிறகு, பணம்தான் பிரதானம் என்று சில ஆண்டுகள் பணத்தின் பின் ஓடுகிறோம்.

    காதலா? பெற்றோர் பார்த்துசெய்து வைக்கும், திருமணமா? பதவி உயர்வுகளா, பிரபலமடைவதா, எதில் கிடைக்கும் வெற்றி மகிழ்ச்சிதரும் என்று அலைபாய்கிறோம்.

    வயது நாற்பதினைத் தாண்டியதும், இவ்வளவுநாள் என்னை கவனிக்காமல் விட்டுவிட்டாயே என்று உடல் கோபிக்க, அடுத்து அதனை சரிசெய்ய மனது கிடந்து துடிக்கிறது.

    மொத்தத்தில் வாழ்க்கை முழுக்கவே அல்லாட்டம் ஆகிவிடுகிறது. ஓடி ஓடி களைத்துப் போய், ஒருகட்ட்த்தில் முடியாமல் மூச்சிரைத்தபடி உட்கார்ந்து விடும் விளையாட்டு வீரனைப் போல, பரிதாபமாக இருக்கிறது பலரையும் பார்த்தால்...

    எவையெல்லாம் பெரிது என்று தேடி அலைந்து பெற்றோமோ, அவை எதுவுமே முழு திருப்தி தரவில்லை என்று ஒரு கட்டத்தில் தெரிந்து போகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் விடாமல் அதன் பின்னும் இன்னொரு தேடலை மும்முரமாக ஆரம்பிக்கிறது மனது!

    பெற்றவர்கள், பெரியவர்கள் வாழ்த்துகிறார்கள். படிப்பு, பணம், பட்டம், பதவி போன்றவற்றில் உச்சத்தை நாம் அடையவேண்டும் என்று. நம் விருப்பம் அறிந்து ஆசிர்வாதம் செய்கிறார்கள்.

    இறைவனிடம் வைக்கப்படும் விண்ணப்பங்களிலும் மக்கள் குறிப்பாகவே இன்னது வேண்டும் என்று கேட்கிறார்கள். அதைத் தா, இதைத் தா என்று மனமுருகி வேண்டுகிறார்கள். கட்டணம் செலுத்தி, காணிக்கை கொடுத்து, ஏன் பேரம் பேசிக் கூட தங்களுக்கு வேண்டியதை கடவுளிடம் கேட்கிறார்கள். ஆனால் கேட்ட்தை சரியாக பெற்றுக்கொண்டதுடனாவது, அவர்கள் தாகம் தீருகிறதா என்றால் அதுதான் இல்லை. எவ்வளவு மொண்டு குடித்தும், தீராத தாகம், இந்த தாகம், என்ன தாகம்!

    எவ்வளவு பெற்றும் நிறையாத பை, என்ன பை! அதை எடுத்துக்கொண்டு, கால் கடுக்க, வியர்க்க விறுவிறுக்க, எல்லா இடமும், எல்லோரிடமும் சென்று வந்தாகிவிட்டது. ஆனாலும் தேவையை நிறைவு செய்துகொள்ள முடியவில்லை.

    வல்லமை தாராயோ...

    சிவசக்தி...

    என்று பாரதி கேட்பது போல... நாமும் நம் இறைவனிடம் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எதற்கான வல்லமையை எனக்குத் தா கேட்பது? இதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில்?

    படித்துப் பாருங்கள். உங்கள் எண்ணங்களையும் எனக்கு எழுதுங்கள்.

    வாழ்த்துக்கள்

    சோம வள்ளியப்பன்

    1. என்ன வேண்டும்?

    ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் தேடுபவை வெவ்வேறாக இருந்திருக்கின்றன.

    அள்ள அள்ளக் குறையாத செல்வம், பேச்சுக்கு மறு பேச்சு வராத நிலை, ஏவல் செய்ய, அதிகாரம் செலுத்த ஆட்கள், பலரும் விரும்பும் அழகும் இளமையும், எடுத்ததெல்லாம் ஜெயம் எனும் விதம் குவியும் வெற்றிகள், சென்ற இடமெல்லாம் சிறப்பு, பார்க்கிறவர்கள் எல்லாம் பாராட்டு, மாபெரும் சபைகளில் விழும் தொடர்ந்துவிழும் மாலைகள்.

    எவரால்தான் இவற்றையெல்லாம் மறுக்க முடியும்? எவர் இவற்றை வேண்டாம் என்பார்? பிரார்த்தனைகளில், வேண்டுதல்களில், கோரிக்கைகளில், தெரிவிக்கும் தேவைகளில், உள்மன ஆசைகளில் இவற்றைத் தேடாதவர்கள் உண்டா? குறைவுதானே.

    கண்டிப்பாக இவை எல்லாம் வல்லமைகள்தான். ஆனால், இந்த சக்திகளை கேட்டும், பெற்றும் சலித்துவிட்ட்தே! அதனால், இவற்றை இனி கேட்கப் போவதில்லை என்று முடிவு செய்தால் என்ன?.

    ஆம், இவையெதுவும் வேண்டும் என்று ஒவ்வொன்றாக தனித்தனியாக, மூலப்பொருட்களாக கேட்க வேண்டாம். விழைய வேண்டியது, கேட்க வேண்டியது, பெறவேண்டியது ஒன்றே ஒன்றைத்தான்.

    அது, மகிழ்ச்சியாக, சந்தோஷமாக வாழும் வாழ்க்கையினை. அப்படி ’மகிழ்ச்சியாக வாழக் கூடிய வல்லமை நமக்கு வேண்டும்' என்போம்.

    உங்களுக்கு என்ன வேண்டும்? என்று எவராவது நம்மிடம் கேட்டால் என்ன பதில் சொல்லலாம். அதுவும் கேட்பது கிடைக்கும் சாத்தியம் மிக அதிகம் என்றால் எதை வேண்டும் என்று கேட்பது?

    கேட்க வேண்டியது தற்போதைய தேவைக்கோ, உடனடி பயன்பாட்டுக்கோ அல்ல. உங்கள் வாழ்க்கை முழுவதற்குமான ஒன்றினைக் கேட்கலாம் என்கிற நிலை என்று வைத்துக் கொள்வோம். எதைக் கேட்பது?

    நமக்கு என்ன வேண்டும்?

    மகிழ்ச்சியாக வாழ்தல் வேண்டும் என்று பதில் சொல்லலாமா? வாழ்க்கையை சந்தோஷமாக வாழும் வகை வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கலாமா?

    உங்களுடைய தற்போதைய வயது எதுவாகவும் இருக்கலாம். 20க்கு மேல் 30க்குள் என்று வைத்துக் கொண்டால், மீத வாழ்க்கை முழுவதும், அதாவது வாழக்கூடிய 75, 85 வயது வரை மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன் என்று சொல்லி விடலாம். அதற்கான வரத்தைக் கேட்கலாம். மகிழ்ச்சியாக வாழவண்டும் என்று கேட்பது எப்படியிருக்கிறது? வேறு எதையும் கேட்காமல், குறிப்பாக அதை மட்டும் கேட்பது போல தோன்றலாம்.

    ’இது சரியா?’

    ’சரிதான்...’

    ’இல்லை இல்லை. இது சரியில்லையே!’

    மகிழ்ச்சியாக என்கிற வார்த்தை பொதுவானதாக தெரிகிறதே! குறிப்பாக இல்லையே என்றும் சொல்லலாம். அதுவும் சரிதான்.

    எப்படிக் கேட்டிருந்தாலும் சரி, ஏன் அதனைக் கேட்கலாம் என்கிறோம். உலகத்தில் பெரும்பாலானவர்கள் விரும்புவது வேறு சிலவற்றை அல்லவா? கேட்பது கிடைக்கும் என்கிற சூழ்நிலையில் ஏன் அவற்றில் எதையாவது அல்லது பலவற்றையும் கேட்கக் கூடாது?

    அள்ள அள்ளக் குறையாத பணம் வேண்டும் அல்லது நான் தொட்டதெல்லாம் வெற்றியடைய வேண்டும் அல்லது என் அழகு அதிகரிக்க வேண்டும், இளமை மாறக் கூடாது, நான் பிரபலமடைய வேண்டும், என்னை பலருக்கும் தெரிய வேண்டும். என் பின் பெரிய கூட்டமே வரவேண்டும். விருதுகள், பட்டங்கள் என்னைத் தேடி வர வேண்டும். மாபெரும் சபைகளில் எனக்கு மாலைகள் விழவேண்டும். பலரும் விரும்பும் இவற்றில் எதையும் கேட்காமல், எதற்காக மகிழ்ச்சியாக இருப்பதைக் கேட்கவேண்டும்? காரணம் இல்லாமல் இல்லை.

    உலகத்தின் நம்பர்1 பணக்காரர் என்கிற நிலையை எட்டிப் பிடித்தவர் முகேஷ் அம்பானி. அவரைப் போலவே மிகப்பெரிய பணக்காரர்கள் பலரைப் பற்றி நாம் படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்களுடைய சொத்து மதிப்பு பற்றிய விவரங்களைப் பார்த்து மலைத்துப் போயிருக்கிறோம். ஆனால் ஒருவர் விடாமல் அவர்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் அல்லது வாழ்கிறார்கள் என்று நம்மால் உறுதியாகக் கூற முடியுமா?

    பணக்காரர்களில் தற்கொலை செய்து கொள்பவர்கள், வழக்குகளில் சிக்கிக் கொள்பவர்கள், அடிதடி தகராறுகளில் மாட்டிக் கொள்கிறவர்கள், சிறை செல்பவர்கள் இல்லையா? உறவுகளால் உதாசீனப்படுத்தப்படுபவர்கள், தனிமையில் வாடுபவர்கள், சிக்கல்களில் மாட்டித் தவிப்பவர்கள் உண்டா இல்லையா? நிறையவே உண்டு.

    பிரபலத்திற்கும் புகழுக்கும் வேறுபாடு உண்டு. நல்லது கெட்டது எதை செய்துவிட்டு செய்தியில் அடிபட்டாலும் ஒருவர் பிரபலமானவர் ஆகிவிடுகிறார். பின்லேடன் பிரேமானந்தா எல்லாம் பிரபல்யமானவர்கள். ஆனால் புகழ் நன்மைக்கு மட்டும் கிடைக்கிறது. பிபல்யம் வேண்டாம், புகழ் பெற்றவர்கள் கூட எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்/இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

    ஒன்று புகழுக்கு இழுக்கு வந்துவிடுகிறது. அல்லது வேறு சிக்கல்கள் வந்துவிடுகின்றன. அவர்களிலும் சிலர் மகிழ்ச்சியை தொலைத்து விடுகிறார்கள்.

    திரைத் துறைதானே பிரபலத்துக்கும் புகழுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கிற இடம். என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு, நாகேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்கள் பெறாத புகழா? ஆனால் அவர்கள் இறுதிவரை நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியுமா?

    முடியவே முடியாது. ஹேன்சி குரோனியே. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர். அவர் புகழ் கொடி கட்டிப் பறந்தது. சர்வதேச வீரர்கள் மட்டுமல்ல, உலககெங்கிலும் இருந்த பல தேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் அவரை மதித்தார்கள், விரும்பினார்கள். ஆனால் அவர் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லையே!. சார்லி சாப்ளின், போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளும், புகழ் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டுவந்து விடாது என்பதற்கு உதாரணங்களாக திகழ்கின்றன.

    இளவரசி டயானாவிடம் இல்லாத அழகும் இளமையுமா? மர்லின் மன்றோ முதல், நம்மூர் சில்க் ஸ்மிதா வரை எத்தனை எத்தனை அழகான நடிகைகளின் வாழ்க்கை துயரங்களால் பொசுக்கப்பட்டிருக்கிறது. கந்தலாகிப் போன வாழ்க்கை. சிரமங்கள், அழுகை, துக்கம், தூக்க மாத்திரை, நிரந்தர நித்திரை என்று சோகமாகவே முடிந்துபோன சோக சித்திரங்கள்.

    நெப்போலியனும், ஹிட்லரும் பெறாத வெற்றிகளா? பாபர், ஹுமாயுன் என மாபெரும் ஆட்சியாளர்களின் வாழ்க்கை எல்லாம் மகிழ்ச்சியானவையாகவா இருந்தன? நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்று பிரதமர் பதவி. திரு.மன்மோகன் சிங் சந்தோஷமாக இருப்பதாக யாராவது சொல்வார்களா?

    அரசியல், வியாபாரம், வேலை, தொழில் என்று பலவற்றிலும் அடுக்கடுக்காக வெற்றி பெற்ற பலரின் வாழ்க்கை அமைதியாக மகிழ்ச்சியாக இல்லை என்பதே நிஜம்.

    ஆக, மகிழ்ச்சி என்பது இவர்களில் பலருக்கு எட்டாக் கனியாகவே, கானல் நீராகவே இருந்திருக்கிறது. மற்றவற்றில் உச்சம் தொட்ட்டிருக்கிறார்கள்தான். ஆனால் மகிழ்ச்சி என்ற தராசில் அவர்களின் எடை குறைவே.

    என்ன, என்ன சொல்ல வருகிறோம் நாம்? அழகாக இருப்பவர்கள், பணக்காரர்கள், அதிகாரங்களில் இருப்பவர்கள், வெற்றி பெற்றவர்கள் எவரும் மகிழ்ச்சியாக இல்லை என்றா சொல்லுகிறோம்?

    இல்லை. அப்படி சொல்லவில்லை. அது தவறு. எவ்வளவோ நபர்கள் அவற்றைப் பெற்றிருக்கிறார்கள். மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதே சமயம், அவற்றைப் பெற்றும் சிலர் சந்தோஷமில்லாமல் வாழ்கிறார்கள். அதுதான் செய்தி.

    ஆக, பணம், அதிகாரம், புகழ், அழகு, இளமை, வசீகரம், வெற்றிகள் எல்லாம் மகிழ்ச்சியை உறுதி செய்பவை அல்ல. அவை கிடைத்தாலே மகிழ்ச்சி வந்துவிடும் என்பதில்லை. இரண்டுக்குமான நேரடி காரண காரிய (Cause & effect) உறவு இல்லை. இதுதான் நாம் சொல்லுவது.

    யோசித்துப் பார்த்தால் தெரியவரும். நாமே ஒரு (அளவு) வெற்றியாளர்தான். இதுவரை வாழ்க்கையில் சிலவற்றை செய்திருக்கிறோம். சாதித்திருக்கிறோம். நமக்கு மேலே சாதித்தவர்களும், இருப்பு நிறையவே வைத்திருப்பவர்களும்

    Enjoying the preview?
    Page 1 of 1