Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manam Sinthanai Seyalpadu
Manam Sinthanai Seyalpadu
Manam Sinthanai Seyalpadu
Ebook139 pages51 minutes

Manam Sinthanai Seyalpadu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதர்களுக்கு இது தெரிவதில்லை. அது தெரிவதில்லை என்பது போலவே அவர்களுக்கு அவர்கள் தம் உள்ளத்தின் தன்மையே தெரிவதில்லை.
நான் யார் என்கிற தேடலும், நாம் எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒருவித இலக்கும் புரியாதவர்களாகவே பலரும் இருக்கிறார்கள்.
மனிதர்களிடம் பொருத்தியிருக்க வேண்டிய சில விசேஷத் தன்மைகள் இந்நூலில் பேசப் பட்டுள்ளன. அத்தனை கருத்துக்களும் யதார்த்த நிலையை ஒட்டியே கூறப்பட்டுள்ளன.
நமது நெருங்கிய நண்பரிடம் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கிற உணர்வே நூல் படிக்கும்போது உணரவரும். சிறந்த உளவியல் செய்திகள் நூலுக்கு மெருகூட்டுகின்றன. வாசகர்கள் தங்கள் வரவேற்பறையில் பொக்கிஷமாக வைத்து போற்றப்பட வேண்டிய நூல் இதுவென்று அறுதியிட்டு கூறுவேன்.
இந்நேரத்தில், இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய கெழுதகை நண்பர் எம்.சந்திரன் அவர்களுக்கும், வாசகர்கள் யாவர்க்கும் நன்றி பாராட்டி நெஞ்சம் மகிழ்கிறேன்.
நன்றி! வணக்கம்.
என்றும் அன்புடன்
எம். கே. சுப்பிரமணியன்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130904963
Manam Sinthanai Seyalpadu

Read more from Mk.Subramanian

Related to Manam Sinthanai Seyalpadu

Related ebooks

Reviews for Manam Sinthanai Seyalpadu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manam Sinthanai Seyalpadu - MK.Subramanian

    http://www.pustaka.co.in

    மனம் சிந்தனை செயல்பாடு

    Manam Sinthanai Seyalpadu

    Author:

    எம்.கே. சுப்பிரமணியன்

    M.K.Subramanian

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mk-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மனதின் இயல்பு

    2. நல்ல மனம்

    3. வக்கிர மணம்

    4. மன நலம் குன்றும் காரணிகள்

    5. மன நலம் சிறக்கும் வழிகள்

    6. சிந்தனை செய்க

    7. உடனடி லட்சியங்கள்

    8. கவனம்

    9. அடிமையாகாதீர்

    10. பயம் நீக்கு

    11. நிர்வகிக்க!

    12. பூஜ்யத்திலிருந்து...

    13. அவமானங்களும்.... வெகுமானங்களும்...

    14. காத்திருங்கள்

    15. செயல்பாடு

    16. பகல் கனவு வேண்டாம்

    17. முதலிடம் தேடிப் பிடிக்க

    18. வருத்தப்படலாகாது

    19. ஆள் பாதி; ஆடை பாதி

    20. தடைகளை தாண்டு

    21. விலகியிருங்கள்

    22. அப்புறம் பார்க்க லாம்

    23. குணங்களின் குன்று நீங்கள்

    அணிந்துரை

    நூலாசிரியர் எம்.கே. சுப்பிரமணியன் 'மன அலங்காரங்களை’ இந்நூலின் கண் வடித்து உள்ளார்.

    ஒப்பனைகளை விரும்பும் காலம் இது. மனம் சூட வேண்டிய ஒப்பனைகளை திறம்பட பட்டியல் இட்டுள்ளார் நண்பர். இவை மனத்திற்கு அலங்காரமாக மட்டும் இல்லாமல் கவசமாகவும் விளங்கும் என்பது சர்வ நிச்சயம்.

    இலக்கியம் படைப்பது என்பது அனைவருக்கும் வாய்த்திடும் செயலல்ல. ஒரு சிலரே இலக்கியம் என்ற சுரங்கத்தின் சொந்தக்காரர்களாகி அள்ள அள்ளக் குறையாத கருத்து நவமணிகளை வாரி வழங்கி களிப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் முன்னணியில் நிற்பவர் எம்.கே. சுப்பிரமணியன் என்னும் என் ஆருயிர்த் தோழர் என்று எண்ணுகின்றபோது என் எண்ணம் இனிக்கின்றது.

    'மனம்-சிந்தனை-செயல்பாடு' என்ற இந்த நூலின் தலைப்பே நூலடக்கத்தை உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்க வைக்கிறது. மனமே அனைத்து வாழ்வியல் செயல் இயக்கங்களின் நடுநாயகமாக விளங்குகிறது. மனம் காட்டும் வழியில் சிந்தனையும், சிந்தனை வழியில் செயல்பாடும் பெறுவதை மையமாக வைத்து நூலை நேர்ததியாக உருவாக்கியுள்ளார் எழுத்தாளர் சுப்பிரமணியன் அவர்கள்.

    ஒரே நாளில் யாரும் சிகரத்தைத் தொட்டுவிட முடியாது என்று ஆனித்தரமாக படைப்பாளி பகர்வதை இன்றைய தலைமுறை உன்னிப்பாக கவனிக்கத் தவறக்கூடாது.

    அதேபோல பயந்தாங்கொள்ளிகள் சாதனை படைக்க முடியாது என்ற எச்சரிக்கையை ஏற்றுக் கொள்ளும் எவரும் வெற்றிச் சிகரத்தை தொடாமல் இருக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகிறது.

    பேச்சு வழக்கில் யதார்த்தமான உண்மைகளை எளிய உவமைகளுடன் எடுத்துச் சொல்லும் இவரது முயற்சி போற்றத்தக்கது. அவருக்கே உரிய தெளிந்த நீரூற்று நடையில் இன்றைய அவசர உலகிற்கு அவசியமானவற்றை எடுத்துரைக்கின்ற பாங்கு தனித்துவம் மிக்கது. ஆங்காங்கே பிறமொழிச் சொற்கள் இவரின் இந்த படைப்பில் தலை காட்டிய போதிலும் முக்கிய கருத்தோட்டம் அவைகளால் எந்த வகையிலும் சீர் கெடவில்லை என்பது உண்மையாகும்.

    இந்த நூல் சுய முன்னேற்றக் கருத்துக்களை வாரி வழங்கும் பெட்டகம். எளிய தமிழ் உலாவரும் அரங்கம். இன்றைய தலைமுறை படித்து பயன்பெற நாடவேண்டிய சுரங்கம்.

    சிறுகதை எழுத்தாளராக முத்திரை பதித்துள்ள எம்.கே. சுப்பிரமணியன் கட்டுரையாளராகவும் சிறக்க இதுபோன்ற நூல்களை படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    அன்புடன்,

    எம். சந்திரன்.

    என்னுரை

    மனிதர்களுக்கு இது தெரிவதில்லை. அது தெரிவதில்லை என்பது போலவே அவர்களுக்கு அவர்கள் தம் உள்ளத்தின் தன்மையே தெரிவதில்லை.

    நான் யார் என்கிற தேடலும், நாம் எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒருவித இலக்கும் புரியாதவர்களாகவே பலரும் இருக்கிறார்கள்.

    மனிதர்களிடம் பொருத்தியிருக்க வேண்டிய சில விசேஷத் தன்மைகள் இந்நூலில் பேசப் பட்டுள்ளன. அத்தனை கருத்துக்களும் யதார்த்த நிலையை ஒட்டியே கூறப்பட்டுள்ளன.

    நமது நெருங்கிய நண்பரிடம் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கிற உணர்வே நூல் படிக்கும்போது உணரவரும். சிறந்த உளவியல் செய்திகள் நூலுக்கு மெருகூட்டுகின்றன. வாசகர்கள் தங்கள் வரவேற்பறையில் பொக்கிஷமாக வைத்து போற்றப்பட வேண்டிய நூல் இதுவென்று அறுதியிட்டு கூறுவேன்.

    இந்நேரத்தில், இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய கெழுதகை நண்பர் எம்.சந்திரன் அவர்களுக்கும், வாசகர்கள் யாவர்க்கும் நன்றி பாராட்டி நெஞ்சம் மகிழ்கிறேன்.

    நன்றி! வணக்கம்.

    என்றும் அன்புடன்

    எம். கே. சுப்பிரமணியன்.

    1. மனதின் இயல்பு

    மனம் பற்றி தத்துவ ஞானிகள் போதித்திருப்பவை ஏராளம். நாம் அவ்வளவு தூரம் நுகரத் தேவையில்லை. ஆனாலும் நமக்குள்ளே இருந்து கொண்டு நம் தரத்தை நிர்ணயம் செய்யும் மனதின் இயல்பைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அதி அவசியம்.

    காற்று, கடவுள், மனம் மூன்றும் ஒரே ரகம் உடையன. இருக்கின்ற ஒன்று; வெளியில் தெரியாதன. காற்றை நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிற மாதிரி, கடவுளை நேசித்துக் கொண்டிருக்கிற மாதிரி, மனதோடு நாம் சதா உறவாடிக் கொண்டு தானிருக்கிறோம்.

    மனம் எங்கே இருக்கிறது என்பதில் சிலருக்கு சந்தேகம். சிலருக்கு மனமே இல்லை என்பது வேறு விஷயம். மனம் என்பது மூளைக்குள் பொருந்தி இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இருதயம் தான் மனம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மனம் என்பது சதையாலோ, எலும்புகளாலோ ஆன ஒன்றல்ல என்பது மட்டும் சர்வ நிச்சயம். ஆனாலும் மனம் எலும்புக்குள்ளேயும், சதைக்குள்ளேயும் தான் சிக்கியிருக்கிறது. அதன் உற்ற நண்பன் மூளையாகும். மூளைதான் மனதிற்கு கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறது.

    மனம் உணர்வுகளை பீடமாகக் கொண்டு, அதன்மேல் ஒய்யாரமாக சிம்மான மிட்டபடி அமர்ந்திருக்கிறது. மனதில்தான் ஒவ்வொரு உணர்வும் சுரக்கின்றது. மனதில் கெட்ட உணர்வுகள் என்கிற தூசிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுவது மனம் படைத்தவர்களின் தலையாய கடமையாகும்.

    மனம் ஒரு நீருற்று போல. முதன் முதலில் அவற்றிலிருந்து ஜனனிக்கும் உணர்வுகள் என்னும் ஊற்றுகள் தெளிவாக சுத்தமானதாகத்தான் இருக்கும். ஆனால், சேர்க்கை, சூழல் காரணமாகவே அது மாசடைகிறது.

    "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

    ஆகுல நீர பிற"

    என்பது வள்ளுவன் வாக்கு. மனதின் இயல்பு மாசில்லாமல் இருத்தல். மாசு படியுமானால் அதனை தெளிவு, அறிவு, ஞானம் என்பனவற்றின் துனையோடு அம்மாசினை வெட்டியெறிதல் வேண்டும்.

    சில பேர்கள் வீட்டை தூய்மையானதாக வைத்திருக்க மாட்டார்கள். சில பேர்கள் ஆலயத்தை தூய்மையாக வைத்திருக்க மாட்டார்கள். சிலபேர்கள் உடல் தூய்மை பேண மாட்டார்கள்.

    வீடுகளின் தூய்மை கூட குறையலாம். ஆலயத் தூய்மையில் கூட அரைகுறை இருக்கலாம். உடல் தூய்மையில்கூட ஓரளவு குறைபாடு இருக்கலாம்.

    மனத்தூய்மை மிகமிக முக்கியமாகும். அதில் நஞ்சு கலந்தால் அத்தனையும் பாழ்.

    தலைவாழை இலை நிறைய அறுசுவை உணவு பரிமாறப்பட்டு, துளி விஷத்தை அதில் கலந்தால் எப்படி இலை முழுவதும் பரப்பப்பட்ட அறுசுவை உணவு விஷமாக மாறுமோ, அப்படியே விரிந்த மனதில் சிறு கலப்பு நேர்ந்தாலும் காலப்போக்கில் முழுமனதின் நிலைமை சீர் குலையும்.

    மனிதர்கள் காசு - பணத்திற்கு ஏகபோக உரிமையாளர்கள் என்றால் அது பெரிய அந்தஸ்தைக் கொடுக்கும். இன்னமும் அவர்களிடம் கொஞ்சம் கூடுதலாக வீடு, மனை, தோட்டம் - தொரவு, கார் - பங்களா, வங்கியிருப்பு என்றெல்லாம் இருந்து விட்டால் சமூகத்தில் அவர்கள் செல்வாக்குடையவர்களாக போற்றப்படுகிறார்கள்.

    அது

    Enjoying the preview?
    Page 1 of 1