Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Penmozhi
Penmozhi
Penmozhi
Ebook361 pages2 hours

Penmozhi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேனம்மைலெக்ஷ்மணன் கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர், சுதந்திரப் பத்ரிக்கையாளர். சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு ஆகிய ஐந்து நூல்களின் ஆசிரியர். நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கத்தில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

குங்குமம், குங்குமம் தோழி, குமுதம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் ஹெல்த் ப்ளஸ், ஆனந்தவிகடன், அவள் விகடன், கல்கி, இந்தியா டுடே, தேவதை, மல்லிகை மகள், மெல்லினம், லேடீஸ் ஸ்பெஷல், பாக்யா, பூவரசி, சமுதாய நண்பன், நம் தோழி, சூரியக்கதிர், இவள் புதியவள், தினமலர், தினமணி, தினமணிக் கதிர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம், பரிவு, குறுஞ்செய்தி, தினகரன் வசந்தம், புதிய தலைமுறை, யுகமாயினி, இன் & அவுட் சென்னை, சென்னை அவென்யூ, கொளத்தூர் டைம்ஸ், ஆச்சி வந்தாச்சு, புதிய பயணி, ஹாலிடே நியூஸ், நமது மண்வாசம், கோகுலம், ஷெனாய் நகர் டைம்ஸ், தமிழ்த்தேர், மங்கையர்மலர், ஐபிசிஎன், மகளிர் தரிசனம், தென்றல் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி வருகின்றன.

இளமை விகடன், திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், அதீதம், முத்துக் கமலம், கழுகு, வலைச்சரம், ஊடகம், சுவடு, பூவரசி, தகிதா, புதிய “ழ” , அவள் பக்கம், தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல் ஆகிய இணையங்களில் எழுதி வருகின்றார் .

நம் உரத்த சிந்தனை, தீக்கதிர், லேடீஸ் ஸ்பெஷல், தினமலர், தினமணி, இந்தியா டுடே, தி தமிழ் இந்து, புதிய தரிசனம், தென்றல், புன்னகை உலகம், மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றில் இவர் பற்றியும் இவரது நூல் பற்றியும் வெளியாகி உள்ளன.. சாஸ்த்ரி பவன், போர்ட் ட்ரஸ்ட், பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். கலைஞர் தொலைக்காட்சி, விஜய் டிவி , சன் நியூஸ் தொலைக்காட்சி, புதிய யுகம், வானவில், பொதிகை, வானொலி ஆகியவற்றில் இவரது கருத்து & பேட்டி வெளியாகி உள்ளது.

இவருடைய கவிதைகள் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சகி என்ற கன்னடப் பத்ரிக்கையில் இவரது கவிதையின் மொழிபெயர்ப்பு வெளியாகி உள்ளது. அன்ன பட்சி நூலுக்காக ”அரிமாசக்தி” விருது பெற்றவர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் கவிதைப் போட்டியில் இருமுறை பரிசு பெற்றவர். வலைப்பூ எழுத்துக்களுக்காக 25 விருதுகளும், சமூக இணையப் பங்களிப்புக்காக சிறப்பு விருதும், மதர் தெரசா அவார்டு, விமன் எம்பவர்மெண்ட் அவார்டு, கம்யூனிட்டி சர்வீஸ் அவார்டு பெற்றவர். லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கையின் “ஸ்பெஷல் லேடி” விருது பெற்றவர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580120802325
Penmozhi

Read more from Thenammai Lakshmanan

Related to Penmozhi

Related ebooks

Reviews for Penmozhi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Penmozhi - Thenammai Lakshmanan

    http://www.pustaka.co.in

    பெண்மொழி

    Penmozhi

    Author:

    தேனம்மை லெக்ஷ்மணன்

    Thenammai Lakshmanan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/thenammai-lakshmanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    பெண்மொழி
    (மெல்லினம் கட்டுரைகள்).
    தேனம்மை லெக்ஷ்மணன்.

    பொருளடக்கம்

    1.இல்லத்தரசிகள் பற்றிய மனோபாவம்

    2. பெண்சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு:- பெண் சிசுக்களை நேசிப்போம்.

    3. மாமியார் மருமகள் உறவுமுறை

    4. பதின்பருவப் பெண்களின் பிரச்சனைகள்

    5. ஐந்தாவது வர்ணத்தின் முன்னேற்றம்

    6. பெண்ணியமும் பெண்களும்

    7. வயதான பெண்களின் உடல் நலம்

    8. பெண்களும் பக்தி என்னும் போதையும்

    9. பங்குச்சந்தையில் பெண்களின் பங்கு

    10. பேறுகாலப் பாதுகாப்பு - ட்ரைமெஸ்டர்

    11. கோலங்களும் கோலக் கிளிகளும்

    12. பாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்

    13. கைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.

    14. உலகளாவிய குடும்ப வன்முறையில் ராணிகள் அடிமைப் பெண்களாய்.

    15. தமிழர்களும் தங்க மயில்களும்

    16. பச்சிளம் குழந்தைகளும் பாலியல் பலாத்காரமும்

    17. வாடகைத் தாய்களும் டிசைனர் குழந்தைகளும்

    18. தற்பால் சேர்க்கையும் கோணல் கோட்பாடும்

    19. அனைவருக்கும் கல்வி.(RIGHT TO EDUCATION)

    20. ஐம்பத்தாறு வகை மனிதர்களும் அங்கீகரிக்கப்படாத தொழிலும்.

    21. இளம் குடிமகன்களும் குடிமகள்களும்

    22. திருநம்பிகளும், திருநங்கைகளும் எதிர்கொள்ளும் சவால்கள்.

    23. உடை அரசியலும் உடல் அரசியலும்.

    24. சாதனைப் பெண்களும். சக்திவாய்ந்த பெண்களும்

    25. பூக்களும் பூவையர்களும்.

    26. திருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்

    27. காதல் காதல் காதல்.

    28.டேட்டிங், லிவிங் டுகெதர், கம்பானியன்ஷிப் – ஆன்மநேயக் காதலா

    29. புலம் பெயர்ந்த பெண்களின் மன அழுத்தம் தீர

    30. இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் பெண்கள்

    31. ஆசிரியை என்பது பணியல்ல.. ஒரு வாழ்வியல்.

    32. நிதி நித்தி நித்தம்

    33. ஜெண்டர் அஜெண்டா.. ஆண் பெண் சமத்துவம் உண்டாகிவிட்டதா.

    34. ரேட்டிங்கும் ரா(ங்)கிங்கும்

    35. நாட்டின் சுதந்திரமும் நமது சுதந்திரமும்.

    36. இரு மனங்களும் திருமணங்களும்

    37. அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும்.

    38 மகளிர் மன்றங்களின் தேவைகளும் சேவைகளும்

    39. பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்

    ***

    1.இல்லத்தரசிகள் பற்றிய மனோபாவம்

    இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னிடம் நீங்க என்னவா இருக்கீங்க என்று கேட்டால் நான் வெறும் ஹவுஸ் வைஃபாதாங்க இருக்கேன். என சொல்லி இருக்கிறேன் . அது என்ன ஹவுஸ் வைஃப். சில வீடுகளில் தற்போது பெண்கள் நல்ல ப்ரொஃபஷனில் இருக்க அவர்கள் துணைவர்கள் எழுத்தாளர்களாகவோ அல்லது திரைத்துறையில் வெற்றி காணும் முயற்சியிலோ ஈடு பட்டு இருக்காங்க. மனைவி அலுவலகம் செல்ல அவங்க துணையா இருக்காங்க இது அவர்களின் சுய தேவையின் பொருட்டே. அவங்க கிட்ட நீங்க என்ன செய்கிறீங்கன்னு கேட்டா நான் தற்போதைக்கு ஹவுஸ் ஹஸ்பெண்டா இருக்கேங்க என சொல்வதில்லை. மாறாக என்ன செய்ய அல்லது என்னவாக ஆக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விலாவாரியாக சொல்வார்கள்.

    ஹவுஸ் வைஃபாக மட்டும் இருப்பது ரொம்ப சுலபமான காரியமா என்ன.? ஒரு மனைவி அல்லது தாய் அல்லது அந்த வீட்டின் மூத்த உறுப்பினரான பாட்டி உங்க பாஷையில் சொல்லணும்னா ஹவுஸ் வைஃப் என்னென்ன கடமைகளை நிறைவேற்றுகிறாங்க. ஒரு இல்லத்தை இனிய இல்லமா உருவாக்குறவங்க இவங்கதான். இவங்க நிழல்லதான் நீங்க எல்லாரும் வளர்ந்திருப்பீங்க வளர்ந்து வருவீங்க. மனைவி கூட கணவரை குழந்தைகள் போலத்தான் வளர்த்துகிட்டு இருக்காங்க.

    ஒரு அம்மா அல்லது மனைவி குடும்பத்தின் நிர்வாகியா, நல்ல நிதி மந்திரியா, நல்ல உணவு கொடுப்பவரா, உடல்நிலையை கவனிக்கும் தாதியா, வீட்டோட வேலைகளை எல்லாம் செய்யும் வேலைக்காரியா எல்லாப் பரிமாணங்களும் எடுக்கிறாங்க.

    அவங்க ஏதோ வெட்டியா வேஸ்டா வீட்டுல உக்காந்துகிட்டு டிவி பாக்குறாங்க . பொழுதைக் கழிக்கிறாங்க. வீண் பேச்சுலயும், வெட்டி வேலைகள்லயும் ஈடுபடுறாங்கன்னு நினைச்சா அந்த எண்ணத்தை முதலில் மாத்திக்குங்க.

    முதலில் அவங்களோட நிர்வாகத் திறமை. மேனேஜ்மெண்ட். இதுல உங்க வீட்டோட மேனேஜ்மெண்ட், நிதி நிலை மேனேஜ்மெண்ட், உறவுமுறை மேனேஜ்மெண்ட், குழந்தைகள் மேனேஜ்மெண்ட், ஹெல்த் மேனேஜ்மெண்ட், வீட்டு வேலை செய்பவர்களை மேனேஜ்மெண்ட் , குடும்பத்துக்கான சேவிங்கஸ் என எம்பிஏ எல்லாம் படிக்காமலே எல்லா நிர்வாகத்தையும் திறமையா நடத்து்றாங்க.

    வீட்டில் என்ன இருக்கு, என்ன தேவை, என்னென்ன பொருட்களை எப்படிப் பராமரிப்பது, வீட்டை, தோட்டத்தை, பொருட்களை எப்படிப் பராமரிப்பது என்பதெல்லாம் அவங்களுக்குக் கைவந்த கலை. உணவுப் பொருள் பற்றாக்குறை வராம அவ்வப்போது பார்த்து வாங்கி வச்சிடுவாங்க. வீட்டில் வாங்கிய பொருட்கள் கெட்டுப் போகாம எப்படி டைம் பார்த்து உபயோகப்படுத்துவது. வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் (வத்தல் வடகம் ஊறுகாய் போன்ற பொருட்களை ) தானே தயாரிப்பது. இது வீட்டோட மேனேஜ்மெண்ட். ஃபோன்பில், தண்ணீர் பில், கரண்ட் பில், ந்யூஸ்பேப்பர், ஃப்ளாட் அல்லது வீடு மெயிண்டனன்ஸ் கட்டணம், வேலைக்காரி சம்பளம், பால், மளிகை, உடைகள் எல்லாம் கரெக்டா பணத்தை ஒதுக்கி இருப்பாங்க. இப்போ ட்ரெயின் முதல் கரண்ட், தண்ணீர், இன்சூரன்ஸ் வரை இண்டர்நெட் பாங்கிங்கில் மணி ட்ரான்ஷாக்‌ஷன் செய்ய முடிகிறது. எனவே இல்லத்தரசிகளும் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டு தங்கள் கணக்கு வழக்குகளை கணினியில் பதிவிட்டு முறையா செய்கிறார்கள்.

    நிதி நிலை மேனேஜ்மெண்ட். வேலைக்குப் போற எல்லாரும் பணத்தட்டுப்பாடு இருக்கலாம். ஆனா இல்லத்தரசிகளுக்கு பணத் தட்டுப்பாடே இருக்காது. சொல்லப்போனா சிறுவாட்டுக் காசு, சீட்டுப் பணம் தொடங்கி, இன்சூரன்ஸ், அஞ்சலக சேமிப்பு மற்றும் சிலர் பங்குச் சந்தையில் கூட ஈடுபடுறாங்க. என் அம்மாவுக்கு 65 வயது. அவர் பங்குச் சந்தையில் வெற்றிகரமா முதலீடு செய்து வருகிறார். அவசரம் சமயத்துக்கு உங்ககிட்ட கூட பணம் இருக்காது. ஆனா அஞ்சரைப் பெட்டியிலிருந்தோ தன்னோட சிறுசேமிப்பிலிருந்தோ அவங்க தேவையான தொகையை தந்துதவுவாங்க.

    உறவுமுறை மேனேஜ்மெண்ட். இது ரொம்ப முக்கியம் ஆண்கள் ஒரு பெண்ணை மட்டும்தான் மணம்முடிக்கிறாங்க.. ஆனா பெண்கள் தங்களோட கணவரோ வீட்டையே தன்னோடதா மாத்திக்கிறாங்க. 20 வயது வரை வளர்ந்த அம்மா அப்பா உறவுகளை விட்டு இன்னொருத்தரோட குடும்பத்தில் ஒருத்தரா பொருந்துறது ரொம்ப கஷ்டம். மாமியார் மாமனாரை அம்மா அப்பா போலவும், கணவரோட தம்பி தங்கைகளை தன் தம்பி தங்கைகள் போலவும் நினைப்பது மட்டுமல்ல. கணவர் சார்ந்த மற்ற உறவுகளோடயும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கிறாங்க. ஆண்களை விட பெண்களே குடும்பத்தின் எல்லா விசேஷங்களையும் சிறப்புற செய்யணும்னும்., எல்லா உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கும் தவறாம போகணும்னு குழந்தைகளை கணவரோடவோ அல்லது தனியாவோ விட்டுட்டு கட்டாயம் போயிட்டு வருவாங்க. போக முடியாட்டா ஃபோன் மூலமோ, ஈ மெயில் மூலமோ, கடிதம்மூலமோ தொடர்பு கொண்டு கட்டாயம் வரமுடியாததற்கு விளக்கம் கொடுத்துடுவாங்க. இன்றைய தலைமுறை குழந்தைகள் நட்பு மட்டுமே போதும் என நினைக்கிறார்கள், ஆனால் உறவுகளின் பெருமையை தாய் சொன்னால் புரிந்துகொள்வார்கள். தாத்தா பாட்டியிடம் குழந்தைகள் நடந்துகொள்ளவேண்டியவிதம், விடுமுறைகளில் அவர்களோடு இருந்து பண்பாட்டை, அன்பை கற்றுக் கொள்ள அனுப்புதல் என செய்வார்கள்,

    குழந்தைகள் மேனேஜ்மெண்ட். வீட்டில் கைக்குழந்தைகளை வைத்துக் கொள்பவர் அம்மாதான். கொஞ்சம் பெரிதானால் மட்டுமே அப்பா பார்த்துக் கொள்வார். இருந்தும் குழந்தைகளை பராமரிப்பது, பழக்க வழக்கங்களை சொல்லித்தருவது, இறைபக்தி, படிக்க வைப்பது, குழந்தைகள் உடல்நலன், நட்புவட்டம், வேலைவட்டம், வாழ்க்கைத் துணை எல்லாவற்றிலும் குழந்தைகளை வழிகாட்டி அழைத்துச் செல்வது பெரும்பகுதி அம்மாவின் பணிதான். குழந்தைகளிடம் இருக்கும் நல்ல பழக்கங்களை ஊக்குவிப்பது, தீய பழக்கங்கள் அல்லது நட்புவட்டத்தை உடனே அறிந்து களைவது எல்லாம் அம்மாதான், இன்றைய மாடர்ன் க்ரெச்சுகள் குழந்தைக் காப்பகங்கள் மட்டுமே. ஆனால் ஒரு குழந்தையை பண்படுத்துவது இல்லத்தில் இருக்கும் தாய்தான்.எந்த வெளிநாட்டில் இருந்தாலும் குழந்தைகளுக்கு முதலில் தேடிவருவது தாய்தான். பின்தான் தகப்பன். அம்மாவின் அரவணைப்பு என்பது நாமெல்லாம் மறக்கவோ மறுக்கவோ கூடியதா என்ன?

    பிள்ளைகளுக்கு இரவு நேரக் கதைகள், நீதிநெறிக் கதைகள், எல்லாம் சொல்வது, தைரியம் தன்னம்பிக்கை ஊட்டுதல், எந்த சூழ்நிலையிலும் இருக்க குழந்தைகளைப் பழக்குதல், இருப்பதை வைத்து சந்தோஷமாக இருக்கக் கற்பித்தல், மற்றவர்களோடு நல்ல உறவுமுறையைப் பேணுதல், நல்ல குடிமகன்களாக, பேர்சொல்லும் பிள்ளைகளாக உருவாக்குதல், அவங்க குறைகள் (உடற்குறைகள் ) நிறைகளைக் கண்டு ஊக்குவித்தல், உடற்குறை இருந்தா அதைப் போக்க போராடுதல் எல்லாம் அம்மா மட்டுமே செய்ய முடியும்.

    ஹெல்த் மேனேஜ்மெண்ட். குழந்தைகளுக்கு பாஸ்டா பிடிக்கும்., மாமா மாமிக்கு நன்கு கு்ழைந்த உணவுகள் கொடுக்கணும். இதுக்கு பாரதிதாசன் பாடல் ஒண்ணு இருக்கு.

    "கொண்டவர்க்கெது பிடிக்கும்

    குழந்தைகள் எதை விரும்பும்

    தண்டூன்றி நடக்கும் மாமன்

    மாமிக்குத் தக்கதென்ன?

    உண்பதில் அவர் உடம்புக்கு

    எது ஒவ்வாது என்பதைக்

    கண்டறிந்து கொண்டனள்

    வழங்கியே அன்பைத் தந்தாள்.."

    அவரவர்க்குத் தக்கதை செய்தாளாம் இல்லத்தரசி. அதுபடி வீட்டில் அடிக்கடி பாஸ்டாஸ் நூடில்ஸ், ஃபாஸ்ட் ஃபுட் ப்ரியர்களாக பிள்ளைகள் விளங்கினால் காய்கறி, பழங்கள், நார்ச்சத்துக்கள் விட்டமின்கள் தேவையை வலியுறுத்தி குழந்தைகளுக்கு நல்ல ஹெல்த்தை பராமரிப்பவள் அம்மாதான்.

    என் உறவினரின் ஒருவரின் பையன் கல்லூரி ஹாஸ்டலில் தங்கியபோதும் சரி, வேலைக்காக பேயிங்க் கெஸ்டாக தங்கிய போதும் சரி. அம்மாவின் உணவுக்காய் வாராவாரம் வீட்டுக்கு ஓடி வருவான். வீட்டில் இருந்தபோது ஒழுங்காக உண்ணாத பிள்ளைக்கு வீட்டை விட்டு சென்றபின்தான் வீட்டு உணவின் அருமை புரிந்திருக்கிறது. அம்மா செய்யும் சாம்பார், பொரியல், கூட்டிலேயேயும் ஆவியில் வேகவைக்கப்படும் இட்டிலி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றிலும் நம் உடம்புக்கு தேவையான சத்து இருக்கிறது.

    உடம்பு சரியில்லை என்றால் கேட்கவே வேண்டாம். அம்மா பார்த்துக் கொண்டால் 2 நாளில் எழுந்து அமரலாம். ரசம்சாதம், ப்ரெட், பால், பார்லி கஞ்சி, உடைகஞ்சி என கொடுத்து பிள்ளை எழுந்து ஆக்டிவாக ஆனால்தான் அம்மாக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

    வீட்டு வேலை செய்பவர்கள் மேனேஜ் செய்வதுதான் முக்கியமான பிரச்சனை. நிறைய உறவினர்கள் வந்திருக்கும்போது லீவு போடுவார்கள், நாமொன்று நினைத்து சொல்ல அவர்கள் ஒன்று செய்து வைப்பார்கள். அவர்களுக்கு வேலை கற்றுக் கொடுத்து அவர்கள் கவலையில் பங்கெடுத்து அம்மாவின் ஆலோசனைகளை அவர்கள் நாடும் அளவு வைத்திருப்பார்கள் அம்மா. மேலும் அவர்களையும் குடும்பத்தில் ஒருவராக கருதி நாள் கிழமைகளில் உடை, உணவு, பணம் கொடுத்து விடுமுறை கொடுத்து வேலை செய்பவர்களின் மனதிலும் அம்மாவுக்கு ஒரு நல்ல இடம் கிடைத்திருக்கும்.

    நிதி நிலையை திறம்பட நிர்வகிப்பது மனைவி என்றால் மிகையாகாது. ஒரு மகள் பிறந்துவிட்டால் போதும் சேமிப்பு சேமிப்பு சேமிப்புதான். அவளை நன்கு படிக்கவைத்து வேலைக்கு அனுப்பவும் அம்மா உறுதுணையாக இருந்தாலும் திருமணம் என்றால் வேணுமே என்று போனஸ் பணம் வந்தால் ஃபிக்சட் டெப்பாசிட்டில் போடுவது , மாதாந்திர நகை பாத்திரச் சீட்டு கட்டி விதம் விதமான நகைகள் பாத்திரங்கள் வாங்கி வைப்பது. பிற்கால வாழ்க்கைக்காக இன்சூரன்ஸில் போடுவது. இடம் வீடு மனைகளில் சேமிக்க கணவனை வற்புறுத்துவது என எல்லாம் மனைவிகள்தான். எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள எல்லாரின் கணவன்மார்களும் வெளிநாடுகளில் சொற்ப சம்பளத்திற்கோ , அதிக சம்பளத்திற்கோ வேலை செய்கி்றார்கள். ஆனால் அவர்கள் மனைவியர் இங்கே அவர்கள் கட்டிய வீட்டில் பிள்ளைகளைப் படிக்கவைத்து வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். கணவன் அனுப்பும் பணத்தை இன்சூரன்ஸ் செய்வது, ஃபிக்சட் டெப்பாசிட்டில் போடுவது மட்டுமல்ல. வீட்டுத் தோட்டத்தில் விளைந்தவற்றையும் விற்றுக் காசாக்குவார்கள். அவர்களில் ப்ளஸ்டூ படித்த பெண்ணும் அடக்கம். டிகிரி படித்த பெண்ணும் அடக்கம். ஏனெனில் குழந்தை வளர்ப்பிற்காக வேலைக்கு செல்ல முடியாது. இல்லத்தாரும் அந்தப் பெண் வேலைக்குச் செல்வதை விரும்புவதில்லை. புருஷன் சம்பாதிப்பதே போதும் என வீட்டில்முடக்கிப் போட்டு விடுகிறார்கள். மிகப் பெரிய நிறுவனங்களில் வேலை செய்தும் தற்போது தன் குழந்தைகளுக்காக வேலையை விட்டு வீட்டில் இருக்கும் அம்மாக்களையும் அறிவேன்.

    கணவரை அனு்சரித்தல், குழந்தைகளை பண்புள்ளவர்களாக வளர்த்தல், பெரியோரிடம் மரியாதை. அக்கம் பக்கத்தாரோடு நல்லுறவு பேணுதல், வேலை செய்பவர்களை நிர்வகித்தல் பணம் சம்பந்தப்பட்ட செலவுகள் சேமிப்புகள். என தசாவதாரம் எடுக்கும் மனைவியை இனி வெறும் ஹவுஸ் வைஃபென்று சொல்லாமல் இல்லங்களை இதயங்களால் உருவாக்கும் இனிய இல்லத்தரசி என சொல்லுவோம். உங்க இல்லத்தின் எல்லாமே நீங்கதான்.. நீங்கதான் இயங்கும் சக்தி. இயக்கும் சக்தி. இனி உங்ககிட்ட நீங்க யார்? என்ன செய்றீங்கன்னு கேட்டா நான் என் இல்லத்தின் அரசியா இருக்கேங்க என கம்பீரமா சொல்லுங்க.

    ***

    2. பெண்சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு:- பெண் சிசுக்களை நேசிப்போம்.

    பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு.. இது இருக்கிறதா இல்லையா என்பது பற்றி பொதிகை தொலைக்காட்சியில் கருத்துக்களைக் கூற ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இன்னும் விழிப்புணர்வு தேவை என்பது என் கருத்தாக இருந்தது.. அங்கு நடந்த பல சுவையான கருத்துக்களை இங்கே நான் என்னுடைய கருத்துக்களோடும் தர விழைகிறேன்.ஆயிரம் ஆண்களுக்கு 933 பெண் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். இன்னும் பெண் பிறப்பின் சதவிகிதம் குறைந்து வருகிறது. அதற்கு பெண் சிசுக் கொலைதான் காரணம்.

    பெண் சிசுக்கொலை பொதுவாக ஏன் நடக்கிறது. வரதட்சணைக் கொடுமையை முதன்மையாக சொன்னார்கள் பலரும். நான் சொன்னேன். "நானும் படித்திருக்கிறேன் , நானும் வேலைக்கு செல்கிறேன் நான் ஏன் உனக்கு வரதட்சணை தரவேண்டும் என பெண் கேட்கும் காலம் வரும். எனவே ஆண் பிள்ளை காப்பாற்றுவான். பெண் பிள்ளை என்றால் செலவு என்ற மனோபாவம் மாற வேண்டும். அப்படி மாறினால்தான் பெண் சிசுக் கொலை நிற்கும்.

    அரசியல் ஆதிக்கம் மற்றும் இலக்கியத்தில் மொழி வழக்கு என்பதில் கூட ஆண்பால் ஆதிக்கம்தான் அதிகம். ஆண் சார்ந்து சிந்திக்கும் சமுதாயத்தில்தான் நாம் இன்னும் இருக்கிறோம். பெண்ணைச் சுய சார்புள்ளவளாக இருக்கவும் சிந்திக்கவும் விடுவதில்லை. அதில் ஆண் முடிவு செய்பவளாகவும் பெண் அந்த முடிவை ஏற்று நடத்துபவளாகவுமே இன்றைய காலகட்டத்திலும் இருக்கிறாள்.

    ஒரு குழந்தை ஆணா , பெண்ணா என்பதல்ல முக்கியம் அது நல்லபடியாக சுகமாகப் பிறந்ததா.. தாயும் சேயும் நலமா, என்பதுதான் முக்கியம். ஆண் உசத்தி, வாரிசு, பேர் சொல்ல ஒரு பிள்ளை என்பதெல்லாம் போல பெண்ணும் உசத்திதான், வாரிசுதான்., பேர் சொல்லும் பிள்ளைதான். இன்று பல குடும்பங்களில் பெண்கள் தங்கள் தாய் தந்தையரைப் பாதுக்காக்கிறார்கள்.

    ஆண்மகன் மட்டும்தான் தாய் தந்தையரைக் கடைசிவரை காப்பாற்றுவான்., பெண் திருமணம் செய்து கொண்டு போய் விடுவாள் எனபது தவறான கண்ணோட்டம். "

    பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப் பீழை இருக்குதடி தங்கமே என்ற பாட்டை கேட்டிருப்போம். இன்று பீடு நடை போடும் பெண்களுக்கு மத்தியில் இன்னும் சில கிராமங்களில் பெண் சிசுக் கொலையாகவும், நகரங்களில் கருக்கலைப்பாகவும் அது செயல்படுவதாக வெளிச்சம் என்ற அமைப்பில் இருந்து வந்த பெண் கூறினார்.

    இன்னும் கிராமங்களில் பெண் சிசுக் கொலை தொடர்வதை செய்தித்தாள்களில் பார்க்கலாம். குப்பைத்தொட்டியிலும், சாக்கடைகளிலும் வீசும் குழந்தைகளின் படம் பார்த்தாலே மனம் பதைக்கும்.. இது சில சமயம் குடும்பத்தாராலும், கணவனாலும் நடைபெறுகிறது. முறையற்ற உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் கூட இவ்வாறு கொல்லப்படுவது தண்டனைக்குரிய செயல்.. எனவே சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும்.

    ஒரு மருத்துவர் தான் உயிரைக் காக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். அவரை மக்கள் தெய்வமாகக் கருதுகிறார்கள். அவர் தான் உயிரைக் காப்பாற்றும் தன் இறையாண்மையை உறுதியை நிறைவேற்ற வேண்டுமே தவிர ஒரு உயிரை கருவிலேயே அழிக்கும் செயலுக்கு உடன்படக்கூடாது என கருதுகிறேன். அதை உரத்தும் அங்கு பதிவு செய்தேன்.

    இதில் சமூக ஆர்வலர் ஜேனட் செல்வகனி, முனைவர் ஹாஜா கனி, சமூக ஆர்வலர் ஷைலா சாமுவேல் ஆகியோர் சிறப்பு பங்கேற்று தங்கள் வலிமையான கருத்துக்களையும் சொன்னார்கள். பொதுவாக ஆசிய நாடுகளில் தென் தமிழங்களில்தான் சிசுக் கொலை அல்லது கருக்கலைப்பு நடக்கிறது. ஸ்கானிங்க் செய்யும்போது பாலினம் பற்றிக் கூறாவிட்டாலும் சில மருத்துவ மனைகள் திங்கட் கிழமை ரிப்போர்ட்டை வாங்கிக் கொள்ளச் சொன்னால் அது ஆண் குழந்தை என்றும் செவ்வாய்க் கிழமை வாங்கிக் கொள்ளச் சொன்னால் அது பெண் குழந்தை என்றும் ஒரு சொல்லப்படாத சட்டத்தைக் கடைப்பிடிப்பதாக ஒருவர் சொன்னார்.

    1994 இல் வந்த சட்டப்படி கருக்கலைப்பு செய்வது குற்றமாக கருதப்படும். 2003 இல் கொண்டு வரப்பட்ட பெண்கள் பாதுகாப்பு சட்டமும் அதையே சொல்கிறது. முதல்வர் தொட்டில் திட்டத்தை அறிமுகப்படுத்திய போது அதில் வந்த குழந்தைகள் அனைத்துமே பெண் குழந்தைகள்தான். உன் குழந்தையை நீ கொல்லாதே. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பெற்றவர்களிடம் அரசாங்கம் உறுதி அளிப்பது எவ்வளவு கொடுமையான விஷயம். இது கலாசாரா சீரழிவான ஒரு விஷயமும் கூட.

    1982 இல் இருந்து சமூக ஆர்வலராக தொண்டு செய்யும் ஷைலா சொன்னார், தத்தெடுக்க வரும் பெற்றோரும் ஆண் குழந்தைகள்தான் வாரிசு என ஆண் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பார்கள், பெண் குழந்தைகளை யாரும் தத்தெடுப்பதில்லை .

    அந்தக் காலத்தில் பரிசம்தான் இருந்தது . வரதட்சணை அல்ல என கூறினார் ஹாஜா கனி. பெண் குழந்தைகள் சாபக்கேடு என எண்ண வைத்ததில் இந்த வரதட்சணைக் கொடுமைக்கு முக்கிய இடம் உண்டு எனக் கூறினார். 1997 இல் அரசாங்கம் இயற்றிய ஓரு சட்டப்படி இரு பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்துக்கு அரசாங்கம் பாதுகாப்புத்தொகை தருவதாக கூறினார். பொதுவாக பெண்களுக்கு, சமூகப் பாதுகாப்பு, குடும்பப்பாதுகாப்பு மற்றும் முக்கியமாக கருவில் பாதுகாப்பு வேண்டும் என சொன்னார்.

    கல்வியறிவு பெற்ற சமூகம் பெண் சிசுக் கொலை செய்வதில்லை. என்ன குழந்தை பிறந்தாலும் நம் குழந்தை என்ற மனோபாவம் வேண்டும். குழந்தைகள் நேசிக்கப்பட வேண்டும். பெண்கள் தங்கள் கணவனிடமும், மாமியார் வீட்டிலும் நம்பிக்கை கொடுக்க வேண்டும் நம் குழந்தை அது..நம்மால் நன்றாக வளர்க்க முடியும் என. பெண்குழந்தைகள் மதிக்கப்பட வேண்டும்

    பொதுவாக மனமாற்றம் வேண்டும். சட்டங்கள் மூலமாக மன மாற்றத்தைக் கொண்டு வருவதை விட தனி நபர் ஒவ்வொருவரும் அந்த மன மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். தன் வங்கியில் சேர்மனாக ஒரு பெண் இருப்பதாலும் பெண்களும் நன்கு படித்து சமூகத்தின் உயர் பொறுப்புக்களில் இருப்பதாலும் பெண் சிசுக் கொலை குறைந்திருப்பதாக என் கணவர் தன் சார்பாக விழிப்புணர்வு வந்து விட்டதாக சொன்னார்.

    இன்னும் கிராமங்களில் கள்ளிப் பால், கருவை முள், கருக்கலைப்பு, சிசுக் கொலை போன்றவை அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அனைவருமே நல்ல கல்வி அளிக்கப்பட வேண்டும். தன்னுடைய சுதந்திரம், வாழ்வுரிமை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். தான் சூல் கொண்டது பெண்ணோ ஆணோ, குடும்பத்தாரின் கட்டாயத்துக்கு ஆட்படாமல் ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் உரிமை ஒரு தாய்க்கு உண்டு. அதற்கு இந்திய சட்டங்களிலும் வழி உண்டு.

    பெண் சக்தி என்கிறோம்.. தாயாய், தாரமாய் , மகளாய் எல்லாமாய் நினைக்கிறோம் ஆனால் பெண் குழந்தை பிறந்தால் அழிக்கும் மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் மனோபாவம் மாற வேண்டும். ஆணும் பெண்ணும் சமம்தான் என உணர வேண்டும். இருவருமே வாரிசுகள்தான் எனபதையும், இருவருமே தம் ரத்தத்தில் உருவானவர்கள் என்பதையும் இறுதிவரை தம்முடனே இருக்கப் போவதும் அவர்கள்தான் என்பதையும் உணர்ந்தால் பெண் சிசுக் கொலை அல்லது கருக்கொலை என்ற அவலம் நிகழாது.

    பெண் சக்தியைப் போற்றுவோம்.. பெண் சிசுக்களை நேசிப்போம். புதிய உயிர்களையும் புதிய பயிர்களையும் விளைவிக்கும் புதிய பூமியைப் போன்ற பெண் குழந்தைகளின் பிறப்பை வரவேற்போம்.!!!

    ***

    3. மாமியார் மருமகள் உறவுமுறை

    பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதே பையனோட தகுதிகளோடு கூட மாமியார் நல்லவங்களா., பொண்ணை நல்லா வச்சிப்பாங்களா என்பதுதான் பெற்றோரின் கேள்வியாய் இருக்கும். பின்னாளில் இந்தப் பொண்ணு நம்ம நல்லா கவனிச்சுக்குவாளா என்பதே பையனைப் பெற்ற தாயின் எண்ணமாய் இருக்கும். ஒரு ஆண்மகன் மனைவி பக்கமோ, தாய் பக்கமோ பேசமுடியாதபடி நடுநிலைமை வகிக்க வேண்டியிருக்கும். இருவருமே அவருக்கு முக்கியம்.

    இன்றைய காலகட்டத்தில் மாமியார் மருமகள் உறவு என்பது எப்படி இருக்கு?. மாமியார் வெர்சஸ் மருமகளான்னு கேட்டா சே ..சே எங்களுக்குள்ள கருத்து வேறுபாடே கிடையாது என்பார்கள். தனித்தனியா உங்க மாமியார் கிட்ட உங்களுக்குப் பிடிச்ச பிடிக்காத விஷயம், உங்க மருமகள் கிட்ட உங்களுக்கு பிடிச்சது பிடிக்காதது சொல்லுங்கன்னு சொன்னா கொஞ்சம் சொல்லுவாங்க. அப்போ தெரியவரும் நிறைய விஷயம். அது கணவன் மனைவி உறவு போல பொக்கிஷமானது. கணவனை முக்கியமா கருதுற

    Enjoying the preview?
    Page 1 of 1