Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ramaniyin Thaayar
Ramaniyin Thaayar
Ramaniyin Thaayar
Ebook278 pages2 hours

Ramaniyin Thaayar

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

எஸ்.வி.வி: இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் தமிழுக்கு அணி செய்த பல சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1934-க்கு முன்பு திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்து கொண்டே ஆங்கிலத்தில் சிறந்த நகைச்சுவைக் கட்டுரை களையும், ஹாஸ்ய சொற்சித்திரங்களையும் "ஹிந்து' பத்திரிகையில் எழுதி வந்தார். அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த திரு. கல்கி, அதிபர் திரு. வாசன் ஓரிரவு திருவண்ணாமலைக்கே போய் எஸ்.வி.வி.யை சந்தித்து, தமிழிலும் விகடனுக் காக எழுதும்படி கேட்டுக்கொண்டார்கள். அது முதல் தமிழுக்குப் பிறந்தது புதுயோகம். 1933-லிருந்து 1950 வரை எஸ்.வி.வி. மிக உயர்தரமான நகைச்சுவைக் கதைகள், ஹாஸ்ய சித்திரங்கள், நாவல்கள், நெடுங்கதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய நகைச்சுவை பல வகையானது. இலேசான புன்னகையை வரவழைக்கக் கூடியவை. Satire என்ற கேலிச்சித்திரங்கள், குபீரென்று வெடிக்கும் ஹாஸ்யம் இப்படி பலவகை. தமிழில் நகைச் சுவை நூல்கள் மிகவும் குறைவு. அந்தக் குறையை நிறைவு செய்ய அவருடைய நூல்கள் பெரிதும் உதவுகின்றன. எஸ்.வி.வி.யின் சிறுகதைகளையோ அல்லது நாவல்களையோ படிக்கையில், நாம் ஒரு கதை படிக்கிறோம் என்ற பிரக்ஞை மறந்து போய் ஒரு நெருங்கிய ஹாஸ்ய உணர்வு நிறைந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்ற வைத்துவிடும். இந்த எழுத்து தற்கால வாசகர்கள் படித்து ரசிக்க வேண்டிய எழுத்து.

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580128804760
Ramaniyin Thaayar

Read more from S.V.V.

Related to Ramaniyin Thaayar

Related ebooks

Reviews for Ramaniyin Thaayar

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ramaniyin Thaayar - S.V.V.

    http://www.pustaka.co.in

    ரமணியின் தாயார்

    Ramaniyin Thaayar

    Author:

    எஸ். வி. வி

    S. V. V

    For more books

    http://www.pustaka.co.in/home/author/svv

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நிலாவில் படகு

    2. சாபம் பலிக்குமா?

    3. குழந்தை ரமணி

    4. கடைசி நேரம்

    5. உயில் யாருக்கு?

    6. அன்னபூரணி

    7. ஆதிசேஷன்

    8. அத்தை வீடு

    9. குசேலரின் கதை

    10. பகீரத முயற்சி

    11. வீட்டுச் சாவி

    12. முறையீடு

    13. புத்திமதி

    14. ரமணி எங்கே?

    15. வினையின் விளைவு

    16. கல்யாணப் பேச்சு

    17. வீம்பு ஏன்?

    18. புதிய துணை

    19. ஏன் இந்த அக்கறை?

    20. திருடிய ரகசியம்

    21. பழையபடியே

    22. கடவுளின் உதவி

    23. பொறுப்பாளி யார்?

    24. மாறிய மனம்

    25. நொடிக்கு ஒரு குணம்

    26. ரமணி வந்தான்

    27. எல்லாம் நன்மைக்கே

    1. நிலாவில் படகு

    அந்திப் பொழுது. மணி ஐந்தரை. ரமணி வீட்டிற்கு வந்தான். அணிந்திருந்த நிஜார் பூட்ஸைக் கழற்றாமலும், தலையில் இருந்த ஹாட்டைக் கூட எடுக்காமலும் வெகு அவசரத்தோடு, அம்மா, டீ போட்டு வைத்திருக்கிறாயா? என்றான்.

    போட்டு வைத்திருக்கிறேன். ஜிலேபி கூடப் பண்ணி வைத்திருக்கிறேன் என்று அவைகளை எடுத்துக் கொண்டு வரத் தாயார் லோகநாயகி உள்ளே சென்றாள்.

    அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், அம்மா, இராத்திரி வந்து சாப்பிடுகிறேன். டீ மாத்திரம் கொண்டு வா என்றான் ரமணி.

    தாய் கொண்டு வந்த டீயைக் குடித்துக் கொண்டே, பத்து ரூபாய் பணம் வேண்டும். எடுத்துக் கொண்டு வா, அம்மா என்றான் ரமணி.

    தாயின் முகத்தில் சிறிய துன்பக் குறி ஏற்பட்டது. பிள்ளை கேட்ட ரூபாயை அவள் கொடுக்கப் போகிறவளே. எதுவாக இருந்தாலும் அவன் கேட்டதை அவள் எப்பொழுதும் மறுப்பதில்லை. ஆனாலும், சமயம் நேர்ந்த போது, கொஞ்சம் கண்டித்துப் பேசிவிட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

    பத்து ரூபாய் வேண்டுமா! பத்து ரூபாய்க்கு இப்போது எங்கே போவது?... ஏண்டா! அப்படிப் போகிறது, இப்படி வருகிறது, பத்து ரூபாய் கொண்டு வா, பதினைந்து கொண்டு வா என்றால் பணம் எங்கிருந்து விளையுமடா? இப்போது எதற்காகப் பத்து ரூபாயாம்? மூன்று தினங்களுக்கு முன்னே பத்து ரூபாய் வேண்டுமென்றாய்; கொடுத்தேன். மூன்று நாட்களுக்குள்ளேயா பத்து ரூபாயும் தீர்ந்து விட்டது? இப்படிச் செலவழித்தால் எப்படியடா முடியும்? இன்னும் தேதி பன்னிரண்டு ஆக வில்லை; மாதம் பிறந்து இது வரையில் சொந்தச் செலவுக்கென்று ஐம்பத்தாறு ரூபாய் வாங்கிக் கொண்டு போயிருக்கிறாய். சிறிது போனால் போகிறது என்று கொடுத்துக் கொண்டு வந்தால், மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருந்தாயானால், எங்கிருந்தடா பணம் வந்து கொண்டே இருக்கும்? நம் வருமானம் உனக்குத் தெரியாதா? நீ சிறு குழந்தையா? வயது இருபதாச்சேடா? இன்னும் தாயின் கீழ்ப் பிள்ளையாய் நான் கொடுத்து, நீ வாங்கிக் கொள்வாய் என்று இருக்கும் பொழுதே நீ இப்படிக் கண்டபடி செலவழித்துக் கொண்டு போனால், உனக்கே சுயராஜ்யம் வந்து விட்டால் எப்படி இருப்பாயடா? செலவழிக்கிறது என்றால் அதற்கும் ஒரு ‘லிமிட்’ இல்லையா? கொஞ்சங் கூட நன்றாயில்லையப்பா, நீ சின்னக் குழந்தையா? புத்தி தெரிந்த பிள்ளை; இவ்வளவுதான் உனக்கு நான் சொல்லலாம். எதற்காக இப்போது பத்து ரூபாய்? மூன்று நாட்களுக்கு முன் கொடுத்த பத்து ரூபாயை என்ன செய்தாய்? என்று தாய் சொல்லிக் கொண்டிருக்கையில், டீ கப்பையும் சாஸரையும் திடீர் என்று ரமணி கீழே வைத்தான். வாயைத் திறந்து ஒன்றும் பேசாமல், கன கோபத்தோடு வெகு விறைப்பாய்த் தெருப் பக்கம் போய் விட்டான். கேட்டண்டை போனதும் வீதியில் போய்க் கொண்டிருந்த ஒரு காலி ரிக்ஷவை நிறுத்தி, அதில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

    ரமணி ரோஷத்தோடு போனதைக் கண்ட தாயின் உள்ளத்தில் திடீரென்று பயமும் விசாரமும் புகுந்து கொண்டன. முகத்தில் கவலைக் குறி தவழ்ந்தது. தேகம் வலிவிழந்து சீவனற்றது போல் ஆகிவிட்டது. திகில் அடைந்தவளாய் ரமணியைத் தொடர்ந்து வேகமாய்த் தெருப்பக்கம் ஓடினாள். இங்கே வாடா! என்றாள். அவள் இருந்த பக்கத்தைக் கூடத் திரும்பிப் பாராமல், போ, மேன் என்று ரமணி ரிக்ஷக்காரனுக்கு உத்தரவிட்டான். ரிக்ஷ நகர்ந்தது. இங்கே வாடா; இதைக் கேட்டுக் கொண்டு போ; ரூபாய் கொடுக்கிறேன், வாங்கிக் கொண்டு போ என்று தாய் பின்னிருந்து கத்தினாள். காதில் வாங்கிக் கொள்ளாமலே ரமணி போய் விட்டான். எதற்கும் சளைக்காத நெஞ்சுறுதியுள்ள லோகநாயகியின் கண்களில் நீர் பரவியது.

    பிரமை கொண்டவள் போல் சிறிது நேரம் போகும் ரிக்ஷவைப் பார்த்துக் கொண்டு கேட்டண்டை நின்று கொண்டிருந்தாள். கண்களினின்று ஒன்று இரண்டு நீர்த்துளிகள் சிந்தின. துக்கம் மேலும் மேலும் மூண்டது. மனம் கங்கு கொள்ளாமல் பரிதவித்தது. ஏன் இப்படி எனக்குப் புத்தி கெட்டுப் போய் விட்டது! என்று தன் புத்தியையே மொத்திக் கொண்டாள், மோதிக் கொண்டாள்.

    தள்ளாடிக் கொண்டு நடைப் பிணம் போல் உள்ளே சென்று ஹாலில் போட்டிருந்த ஊஞ்சலில் போய் உட்கார்ந்து கொண்டாள். சுற்றியிருந்த ஒன்றும் அவள் கண்ணில் படவில்லை. தன்னையும் மறந்து யோசனையில் ஆழ்ந்தாள்.

    இப்படியும் எனக்குப் புத்தி கெட்டுப் போய் விடுமா! ‘இந்தாடா அப்பா’ என்று பத்து ரூபாயை முதலில் எடுத்துக் கொடுத்து விட்டு, பிறகு எதையாவது சொன்னாலும், குழந்தை அவ்வளவாக மன வருத்தப்பட்டிருக்க மாட்டான். விளையாட்டாகச் சிரித்து விட்டுப் போயிருப்பான். இருந்த வரையில் அவன் அப்பா அதைத்தானே சொல்லிக் கொண்டிருப்பார்? ‘பிள்ளையாகட்டும், பால்காரனாகட்டும்; பணம் கொடுக்கும் பொழுதோ வேறு உபகாரம் செய்யும் பொழுதோ குற்றங்களைச் சொல்லிக் காட்டிக் கொண்டு செய்யக் கூடாது. எப்பேர்ப்பட்டவனுக்கும் அந்தச் சமயத்தில் கோபம் வரும். செய்ய வேண்டியதை அந்தச் சமயத்தில் தயாளத் தனமாயும் சந்தோஷமாயும் செய்வது போலக் காட்டிக் கொள்ள வேண்டும். பிறகு சுமுகமாய்ச் சந்தோஷித்துக் கொண்டு இருக்கும் சமயம் பார்த்து விளையாட்டுப் போல் விநயமாகப் புத்தி மதியை ஏற்ற வேண்டும்’ என்பாரே. அந்தப் புத்திமதி எனக்கு இப்பொழுது உபயோகப்படாமல் போய் விட்டதே! குழந்தை எதற்காகக் கசப்போடு போக வேண்டும்? ‘நான்கு பிள்ளைகளாகச் சேர்ந்து சினிமாவுக்கோ, வேறு எங்கோ போக வேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்டிருக்கலாம்; இவன் பணம் கொண்டு வருவதாகச் சொல்லி இருக்கலாம்; இப்போது எந்த மூஞ்சியோடு குழந்தை அவர்கள் முன் போய் நிற்பான்? குழந்தைக்கு இம்மாதிரி சிறுமை ஏற்படும்படியாக நான் ஏன் நடந்து கொண்டேன்? என்ன புத்தி கெட்டத்தனம்! நமக்கு இருக்கிறது இவன் ஒருவன்; உலகம் என்பது நமக்கு அவனைத் தவிர வேறு இல்லை. பத்து ரூபாய் செலவழிக்கிறதுக்கு அவனுக்குப் பணம் இல்லையா, யோக்கியதை இல்லையா? இந்த நேரத்தில் அவன் சிறுமைப்பட்டுத் தலை குனிந்து கொண்டிருப்பான் என்று நினைக்க என் மனம் தாளவில்லையே. என் பிள்ளையா சிறுமைப்படுவது! ஐயோ, என்ன புத்தி கெட்டத்தனம்’ என்று மேலும் அலட்டிக் கொள்ளலானாள். உடலும் மனமும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து ஒரு நிலைபடாது துடித்தன.

    திடீர் என்று ஒரு யோசனை தோன்றி, டேய் பொன்னுசாமி என்று தோட்டக்காரனைக் கூப்பிட்டாள். ரமணி, இப்போதுதான் வெளியில் போனாண்டா; இன்னும் பத்து நிமிஷம் ஆகவில்லை. பத்து ரூபாய் கேட்டான். நேராகப் பத்மநாபன் வீட்டிற்குத்தான் போயிருப்பான். நீ இந்தப் பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு பத்மநாபன் வீட்டிற்குப் போய் ரமணியிடத்தில் கொடுத்து விட்டு வா. ஜல்தி! ஓட வேண்டும்! இதோ பார்; அவனைத் தனிமையில் கூப்பிட்டு நோட்டைக் கொடு. நாலு பேர் இருக்கும் போது கொடுக்காதே. ஓட வேண்டும் என்று பத்து ரூபாயைத் தோட்டக்காரன் கையில் கொடுத்து அவனைத் துரிதமாய்த் துரத்தினாள்.

    தோட்டக்காரப் பொன்னுசாமி பத்மநாபன் வீட்டிற்குப் போய், நோட்டைத் திருப்பி எடுத்துக் கொண்டு வந்து விட்டான்.

    தம்பி அங்கு இல்லையம்மா. கொஞ்ச நேரம் முன்னே அங்கே ரிக்ஷவில் வந்துச்சாம். தம்பியும் அந்த வீட்டுப் பிள்ளையுமா உடனே கிளம்பிப் போய் விட்டாங்களாம், அம்மா! ரூபாயை எடுத்து வந்து விட்டேன் என்றான்.

    எங்கே போனாங்களாமடா?

    அதை அவுங்க சொல்லவில்லை, அம்மா.

    நீ கேட்கிறதுதானே?

    நான் கேட்கவில்லை அம்மா.

    போடா மந்தி! மாட்டுக்கு தண்ணி காட்டுடா என்றால் தண்ணீரண்டை கொண்டு போய்க் கண்ணுக்குக் காட்டி விட்டு, திருப்பி ஓட்டிக் கொண்டு வந்து விடுகிற வேலைக்காரனைச் சேர்ந்தவன்தானேடா நீ? மத்து! நல்ல வேலைக்காரன் நமக்கு நீ வந்து சேர்ந்தாயடா! என்று அவன் மேல் லோகநாயகி காய்ந்து விழுந்தாள்.

    இரவு மணி எட்டாயிற்று; எட்டரையாயிற்று; ரமணி வந்து சேரவில்லை. தாய் உள்ளே முன்னாடியே சமையல் செய்து வைத்திருந்தாள். அதை மறுபடி போய்ப் பார்த்தவள் அல்ல; தெரு கேட்டண்டை போய் ரமணியை எதிர்பார்ப்பதும், மறுபடியும் ஊஞ்சலில் வந்து உட்கார்ந்து கொள்வதுமாகத் தெருவுக்கும் உள்ளுக்கும் நடை போட்டுக் கொண்டிருந்தாள். மணி ஒன்பதாயிற்று. திகிலும் தவிப்பும் மேலிட்டுப் போய் மறுபடி தோட்டக்காரனைக் கூப்பிட்டாள்.

    மறுபடி ஓட்டமாய்ப் பத்மநாபன் வீட்டிற்கு ஓடிப் போய் பத்மநாபன் வந்து விட்டானா என்று பார்த்துக் கொண்டு வா. மறுபடி மந்தி போல் வந்து நிற்காதே. அவர்கள் வந்திரா விட்டால் எங்கே போயிருக்கிறார்கள், எப்பொழுது வருவார்கள் என்று விசாரித்துக் கொண்டு வா என்று பொன்னுசாமியை அனுப்பினாள்.

    இன்னும் அவங்க யாரும் வரவில்லையாம், அம்மா. நிலாவில் படகில் போகப் போவதாகச் சொல்லிப் போனாங்களாம். எப்போ வருவாங்க என்று தெரியாது என்னாங்க. வர வேளைதான் என்னாங்க அம்மா என்று அவன் வந்து சொன்னான்.

    எங்கே படகில் போகிறது? ஹார்பரிலா? வெளியில் எங்காவதாடா?

    அது சொல்லவில்லை அம்மா என்றான் பொன்னுசாமி.

    ரொம்பச் சமர்த்தன்தான், போ என்றாள் தாய்.

    லோகநாயகியின் விசாரம் மேலும் அதிகமாயிற்று. பத்து மணி ஆயிற்று; பதினொன்றும் ஆயிற்று. ரமணி வீடு வந்து சேரவில்லை. தாய் சாப்பிடவில்லை. அவளுக்குப் பசியே போய் விட்டது. வயிற்றில் திகில்தான் புகுந்து கொண்டிருந்தது. தவித்துத் தண்ணீராய் உருகிக் கொண்டு ஊஞ்சலுக்கும் தெருவுக்கும் நடை போட்ட வண்ணமாகவே இருந்தாள்.

    பதினொன்றரை மணிக்கு ரமணி வந்து சேர்ந்தான். தாயின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பயம் ஒன்று நீங்கியது. வந்ததும் ரமணி முன்னிருந்த விறைப்பு மாறாமலும் பேசாமலும் நிஜார் சட்டை எல்லாவற்றையும் கழற்றிப் போட்டான். மேல் டவலை எடுத்துக் கொண்டு மெளனமாகவே படுக்கக் கிளம்பினான்.

    சாப்பிட வேண்டாமாடா? சாப்பிட வா என்று தாய் கூப்பிட்டாள்.

    வேண்டாம், நான் சாப்பிட்டாயிற்று என்று ரமணி விறைப்பாகவே பதில் சொன்னான்.

    ஜிலேபி வைத்து வைக்கச் சொன்னாயே; வைத்திருக்கிறேன். அதையாவது சாப்பிட்டுப் படுத்துக் கொள்.

    வேண்டாம்.

    பால் சூடாக வைத்திருக்கறேன். அதையாவது குடி.

    எனக்கு ஒன்றும் வேண்டாம்.

    எங்கே போயிருந்தாய்? ஆனாலும், இவ்வளவு நேரமாகி விட்டதே.

    எங்கேயோ போயிருந்தேன்.

    பத்து ரூபாய் பணத்தைக் கொடுத்துப் பொன்னுசாமியைப் பத்மநாபன் வீட்டிற்கு அனுப்பினேன். நீ அங்கு இல்லை என்று வந்து விட்டான் என்றாள் தாயார்.

    அதற்கு ஒரு பதிலையும் சொல்லாமல் ரமணி பிகுவாகவே படுக்கப் போய் விட்டான். இருந்தாலும் தாயின் மனம் சிறிது நிம்மதியை அடைந்தது.

    ‘காலையில் எழுந்தால் எல்லாம் சரியாய்ப் போய் விடும்’ என்று நினைத்துக் கொண்டு அவளும் படுக்கப் போனாள்.

    2. சாபம் பலிக்குமா?

    ரமணியின் தகப்பனார் இறந்தது முதல், சென்னைப் பட்டணத்திலேயே லோகநாயகியின் தாய் வழியிலும் புருஷன் வழியிலும் அநேக நெருங்கிய உறவினர்கள் இருந்த போதிலும், அவர்களுடைய சகாயத்தை லட்சியம் செய்யாமலும் சிறிதும் விரும்பாமலும், லோகநாயகி பிள்ளையை அடங்காப் பாசத்தோடும் மேன்மையாகவும் வளர்த்து வந்தாள். லோகநாயகியின் மாமனார் மாமியார், மைத்துனன்மார்களில் ஒருவன், அவளுடைய தாய் தகப்பனார், இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள் - எல்லோரும் சென்னைப் பட்டணத்திலேயே இருந்து வந்தார்கள். அவர்களில் யாரும் அதிகமாக லோகநாயகி வீட்டிற்கு வருவது போவதில்லை. இவளும் போவதில்லை. லோகநாயகிக்கு ஒரு மனிதரும் வேண்டியதில்லை. ஏழைகள் நாம் எல்லாரும் அவளுக்கு லட்சியமா? நம்மால் அவளுக்கு என்ன ஆக வேண்டும்? வேண்டிய சொத்து இருக்கிறது; செல்வாக்கு இருக்கிறது; காசை விட்டெறிந்தால் ஆயிரம் ஆட்கள் கையின் கீழ்க் காத்துக் கொண்டிருக்கத் தயாராய் இருக்கிறார்கள். நம் தயவு அவளுக்கு எதற்கு? இருக்கட்டும். அழையாத வீட்டுக்கு நுழையாத சம்பந்தி என்கிற மாதிரி அவள் வீட்டிற்குத்தான் யார் இப்போது போகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்று அவளுடைய தாய் தகப்பன் முதல் எல்லா உறவினர்களுமே நிஷ்டூரமாய்ச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவைகளை எல்லாம் லோகநாயகி பாராட்டியவளல்ல. நிஷ்டூரங்களெல்லாம் அவள் புருஷன் சாம்பமூர்த்தி உயிரோடிருந்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்தவை. அவர் இருந்த பொழுதே அவர் வழி உறவினர்களையாவது அவள் வழி உறவினர்களையாவது அவர்கள் கிட்ட நெருங்க விட்டவர்களல்ல. அந்த விஷயத்தில் இருவரும் சரியான ஜோடியாக அமைந்திருந்தார்கள். அப்படி இருப்பதற்கு அனுகூலமாக அவர்களுக்குச் சரியான செல்வமும் செல்வாக்கும் சேர்ந்து இருந்தன.

    ரமணியின் தகப்பனார் சாம்பமூர்த்தி ஐயர், ரமணி பத்து வயதாயிருந்த பொழுது இறந்து போனார். அவர் ‘இன்கம்டாக்ஸ்’ ஆபீசராக இருந்தார். நானூறு ஐந்நூறு சம்பளமும் வாங்கிக் கொண்டிருந்தார். சம்பளத்திற்கு மேல் ‘கிம்பள’த்தில் இரண்டத்தனை கூட வருமானம் வந்து கொண்டிருந்ததாக அவருக்குப் பேரும் இருந்து வந்தது. மாம்பலத்தில் ஆறு ‘க்ரௌண்டு’களுக்கு மத்தியில் ஓர் அழகான பங்களா சொந்தமாகக் கட்டிக் கொண்டிருந்தார். வீட்டில் கார் இருந்தது. குஞ்சுமணி என்ற பாலக்காட்டுப் பிள்ளை சமையற்காரனாக இருந்தான். சமீபமாக இருந்த ஒரு வளமான கிராமத்தில் பதினைந்து இருபது ஏகரா நிலம் வாங்கிப் போட்டிருந்தார். பாங்கில் ரொக்கத்தில் பணம் வேறு வைத்துக் கொண்டிருந்தார். இந்த நிலைமையில் அவர்களுக்கு யார் தயவு வேண்டும்?

    உனக்கு நான் உறவு, எனக்கு நீ உறவு, மற்றவர் உறவு நமக்கு எதற்கு? என்ற மனப் போக்குடன் கணவனும் மனைவியும் பரம ஒற்றுமையுடன் உல்லாசமாயும் திருப்தர்களாயும் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். அருகிலேயே அவர்களுடைய தாய் தகப்பன்மார்கள், தம்பிகள் தங்கைகள் எல்லாரும் அவரவர்கள் தனித் தனியே கஷ்ட ஜீவனம் செய்து வந்தார்கள். அதைக் கண்டு, தாங்கள் அடைந்திருக்கும் உன்னத நிலையை நினைத்து அவர்கள் பெருமையும் செருக்கும் கொண்டிருந்தார்களே ஒழிய, அவர்கள் கஷ்டம் அவர்கள் மனத்தைச் சிறிதும் பாதிக்கவில்லை. உறவினர்களைக் காணும் போது காரியத்தில் ஒன்றும் இல்லாமற் போனாலும், வாய்ப் பேச்சிலாவது சாம்பமூர்த்தி சிறிதும் கர்வம் கொண்டவரல்ல போல் காட்டிக் கொண்டு தேனொழுகப் பேசுவார். லோகநாயகியிடத்தில் அதுவும் இல்லை.

    எல்லோரையும் விட, சாம்பமூர்த்தியின் தகப்பனாருக்கும் தாய்க்கும் இவர்கள் பேரில் வெகு ஆத்திரம். பெற்றுச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த பிள்ளை, எவ்வளவோ அன்பும் ஆதரவுமாய் இருக்கப் போகிறான் என்று அவர்கள் கனாக் கண்டு கொண்டிருக்க, அவன் உதாசீனமாயும் அலட்சிய புத்தியையுடையவனாகவும் ஆகிவிட்டான் என்று நினைக்க அவர்களுக்கு ஆத்திரம் எவ்வளவு பொங்காது! சாம்பமூர்த்தியின் தகப்பனாரும் தாயாரும் கல்யாணத்திற்கு இருந்த ஒரு பெண்ணையும் வைத்துக் கொண்டு புரசைவாக்கத்தில் தனிக் குடித்தனம் செய்து வந்தார்கள். அவர்கள் இருந்த வறுமை நிலை அவர்களுடைய ஆத்திரத்தை மேலும் மூட்டியது.

    லோகநாயகி பிரசவத்திற்குத் தாய் வீட்டிற்குப் போய் ரமணியைப் பெற்றெடுத்து வந்த தினம் அவளைச் சுபமாய் வீட்டிற்கு அழைக்கத் தகப்பனாரையும் தாயாரையும் அழைத்து வருவதற்காகச் சாம்பமூர்த்தி காரைப் போட்டுக் கொண்டு புரசைவாக்கம் போயிருந்தார். வெளி மரியாதைகளில் சாம்பமூர்த்தி எப்பொழுதும் தவறுகிறவர் அல்ல. தகப்பனார் வீட்டில் இல்லை. தாயார் மாத்திரம் இருந்தாள். கல்யாணத்திற்கு இருந்த தங்கையும் ஊருக்குப் போயிருந்தாள்.

    அப்பா எங்கே, அம்மா? என்றார் சாம்பமூர்த்தி.

    அவர் காலையில் வீட்டில் எப்படி இருப்பார்? ட்யூஷனுக்குப் போயிருக்கிறார். வருகிறதற்குப் பன்னிரண்டு மணியாகுமோ, ஒன்று இரண்டு ஆகுமோ! என்றாள் தாய் சம்பூர்ணம்மாள்.

    இன்றைய தினம் லோகா குழந்தையை எடுத்துக் கொண்டு பத்து மணிக்கு அகத்துக்கு வருகிறாள், அம்மா என்றார் சாம்பமூர்த்தி.

    வருகிறாளா? ரொம்ப சந்தோஷம்!

    உங்களை அழைத்துக் கொண்டு போகலாம் என்று தான் வந்தேன்.

    "அதற்கு

    Enjoying the preview?
    Page 1 of 1