Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pokiri Mama
Pokiri Mama
Pokiri Mama
Ebook290 pages1 hour

Pokiri Mama

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேவன், இயற்பெயர் ஆர். மகாதேவன். 1913 செப்டெம்பர் 8 அன்று திருவிடைமருதூரில் பிறந்தார். பி.ஏ. படித்து, சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு, 'ஆனந்த விகடன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து, தொடர்ந்து இருபத்து மூன்று ஆண்டுகள் விகடன் நிறுவனத்தில் பணியாற்றினார். 1942 முதல் 1957 வரை 'ஆனந்த விகடன்' நிர்வாக ஆசிரியராக இருந்தார். சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், நாவல்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆர்.எம்., அம்பி, விச்சு, காயத்ரி, மயூரம், கேட்டை போன்ற புனைப்பெயர்களிலும் ஏராளமாக எழுதியுள்ளார். தேவன், ஒரு நாடக ஆசிரியரும்கூட; ஸிம்ஹம் என்ற பெயரில் வானொலி நாடகங்கள் இயற்றியிருக்கிறார். தேவன், எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக இருமுறை பதவி வகித்தார். 1957 மே 5 அன்று, தனது 44 - வது வயதில் காலமானார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126604193
Pokiri Mama

Read more from Devan

Related to Pokiri Mama

Related ebooks

Related categories

Reviews for Pokiri Mama

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pokiri Mama - Devan

    http://www.pustaka.co.in

    போக்கிரி மாமா

    Pokiri Mama

    Author:

    தேவன்

    Devan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. போக்கிரி மாமா

    2. மெய்யும் பொய்யும்

    3. தூக்கம் வராதா?

    4. பயந்த மாதிரி

    5. பரம வெகுளிகள்!

    6. யுத்த காலம் ஸார்!

    7. கேசவன் பழி

    8. வைர மோதிரம்

    9. விஷயம் தெரிந்தவன்

    10. பழ வியாபாரம்

    11. கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை!

    12. வாழ்க்கைச் சித்திரம்

    13. யோசனை எப்படி?

    14. தரகன் சுந்தரம்

    15. அபாயம் இல்லை!

    16. புலி கொடுத்த பரிசு!

    17. நகையும் நங்கையும்

    18. தமயந்தியின் நிபந்தனை

    19. கலெக்டரின் மகன்

    20. ஈசுவரன் சித்தம்

    21. பகல் கனவு

    22. ஏலம் போகிறது!

    23. ஒரே ஒரு கடிதம்

    24. காதல் பரீட்சை

    25. பால்காரி காவேரி

    26. பாகீரதியின் கவலை

    27. சிரிக்காதீர்கள்

    1. போக்கிரி மாமா

    கோபாலன் சென்னைப் பட்டணத்தில். கோபால் கபே என்று ஒரு போர்டைத் தொங்கவிட்டுக் கொண்டு. ஒரு முதல் தரமான ஹோட்டல் நடத்துகிறான். நல்ல வரும் படியும் கிடைக்கிறது. ஒரு நாள் கோபாலன் பக்கத்தில் உட்கார்ந்து தான் பேசிக் கொண்டிருந்தேன். கோபாலன் மணியை அடித்து. ஒரு பையனை வரவழைத்து. ஒரு பை நிறைய காரம் தீட்டிய முந்திரிப் பருப்பைக் கொண்டு. தரச் சொன்னான்.

    அந்தச் சமயத்தில் ஹோட்டலுக்குள் இரண்டு பேர் ஆஜானுபாகுவாக நுழைந்தார்கள். இருவர் உயரமும் ஒன்று: சுற்றளவும் ஒன்று; முகஜாடைகளும் கூடக்கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்தன. இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கினாற்போல் வந்து. ஒரு மேஜையின் முன்னால் எதிர் எதிராக உட்கார்ந்தார்கள்.

    உடனே ஹோட்டல் பையன்கள் அவர்களுக்கு நாலு நாலு இட்டிலிகளையும் காப்பியையும் கொண்டு வைத்தான். இருவரும் ரசித்துச் சாப்பிட்டார்கள். ஜோடியாக எழுந்து வந்து. மேஜையண்டை பில்லைக் கொடுத்து விட்டு. ஜோடியாக வெளியேறினார்கள்.

    அவர்கள் கண்ணுக்கு மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு. அந்த இரண்டு பேரும் வந்தது முதல் போகும் வரை ஒன்றுமே பேசிக் கொள்ளாதது விசித்திரமாயிருந்தது. ஒருவரையொருவன் வெட்டுகிறாப் போல் பார்த்துக் கொண்டான். முகத்தில் தோன்றிய குரோதம் ஒருவன் குரல்வளையை மற்றவன் பிடித்து விடுவானோ என்று தோன்றும்படி இருந்தது. ஆனாலும் சேர்ந்தே வந்து சேர்ந்தே வெளியில் போனார்கள்.

    நான் இப்படி யோசனை செய்து கொண்டே இருக்கும் போது. ஹோட்டல் முதலாளி என்னைக் கவனித்து வந்தான். ஒரு புன்னகை செய்து. உன் மனதில் என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும். அது பெரிய கதை! என்றான்.

    அதென்ன கதை.

    முந்திரிப் பருப்புப் பொட்டலத்தைப் பிரித்து வைத்துக் கொள் என்று கூறி. கோபாலன் கதை சொல்லத் தொடங்கினான்:

    ராமனும் கிருஷ்ணனும் இரட்டைப் பிள்ளைகள். அவர்கள் பிறக்கும்போதே அழுது கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும்தான் பிறந்தார்களாம். அப்புறமும் அவர்கள் ஒவ்வொன்றுக்கும் போட்டி போட்டு. குஸ்தியும் செய்திருக்கிறார்கள். அடுத்த வீட்டுக்காரர்கள் இந்தக் குழந்தைகளை ‘ஸுந்தோபஸுந்தர்கள்' என்று நாமகரணம் செய்திருந்தார்கள். சங்குப் பாலுக்காகச் சண்டை போட்டார்கள். பிறகு சிலேட்டுப் புஸ்தகத்துக்காகச் சண்டை போட்டார்கள்; விளையாட்டில் சண்டை போட்டார்கள். அப்பாவின் முதுகில் யார் பலமாக உதைக்க முடியுமென்று போட்டி போட்டார்கள். இனி மேல் இவர்கள் சண்டையைப் பார்க்கக் கொடுத்து வைக்காமல். அவர்கள் தந்தை உத்தரவு பெறாமலேயே உலக வாழ்க்கையை நீத்தார்.

    ராமனும் கிருஷ்ணனும் தங்கள் தாயுடன் தாய் மாமன் வீட்டிற்கு இந்த ஊருக்கு வந்துவிட்டார்கள். மாமனுக்கு ஒரு வீடும். ஒரு தோப்பும். பாங்கில் ரொக்கமாகப் பணமும் இருந்தன. ரொக்கம் எவ்வளவு என்று நிச்சயமாக யாருக்கும் தெரியாது. சுமார் இருபதினாயிரம் ரூபாய் வரையில் னவத்திருப்பதாக ஒரு வதந்தி மட்டும் இருந்தது. மாமன் இந்த வதந்தியை ஒரு போதும் மறுக்கவில்லை.

    இந்த மாதிரி பிள்ளைகளை வீட்டில் வைத்துக் கொள்ள யாருமே முதலில் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள். மாமா என்னமோ முயற்சி செய்து ஒழுங்குப்படுத்திப் பார்க்கலாமென்று எண்ணினார். அவர்கள் வீட்டில் செய்யும் ரகளை பொறுக்காமல் உத்தியோகம் தேடிக் கொடுத்தார். இரண்டு பேரும் ஒன்றரை மாதத்தில் அதைத் தொலைத்து விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

    மாமா ஒரு மாதிரி வேடிக்கைப் பிரியர். அவருக்கு ராமனும் கிருஷ்ணனும் செய்யும் காரியங்கள் எல்லாமே வேடிக்கையாகத்தான் இருக்கும். இருவரும் முகத்தைத் தாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆனந்தப்படுவார். நான் ஒருத்தன் சீக்கிரம் போய் விடுவேன். என் பணம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஒன்றைத் தவிர இவர்களுக்கு இங்கே இருக்க ஒரு காரணமும் நான் வைக்கவில்லை என்பார். அவர் வெளியில் தம்முடைய வீட்டையும் நிலத்தையும் அவர்களுக்குப் பொதுவாக விட்டு வைக்கப் போவதாகவும். பணத்தை மட்டும் சமமாகப் பிரிக்கப் போவதாகவும் பிரஸ்தாபித்தார். இது காதில் கேட்டவுடன் ராமுவும் கிட்டுவும் பரமானந்தமடைந்தார்கள். அதைக் கண்டு மாமா கண்ணைச் சிமிட்டினார். பசங்கள் என்னைப் பார்க்கிற போதெல்லாம். இந்தக் கிழவன் எப்போ தொலைவான் என்றே பார்க்கிறார்கள் என்று கூறிச் சிரித்தார்.

    நாள்கள் பறந்து கொண்டு வந்தன. மாமா மட்டும் சாகாமல் இருந்து வந்தார். ராமனும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் எவ்வளவு வெறுத்துக் கொண்டார்களோ. அவ்வளவு மாமாவையும் வெறுத்தார்கள். மேலும் மாமா பணத்தை பாங்கியில் போடவில்லை. எங்கேயோ ஒளித்து பத்திரமான இடத்தில் வைத்திருக்கிறார் என்று தெரிந்ததும் அவர்கள் கோபம் பன்மடங்கு அதிகமாயிற்று. இந்தக் கிழம். பணம் எங்கிருக்கிறதென்று சொல்லாமல். உயிரைத் திடீரென்று விட்டு வைத்தால் என்ன செய்வது? என்று அவர்கள் கவலைப்பட்டார்கள்.

    ஒரு நாள் இரண்டு பேரும் அதை மாமாவைக் கேட்டும் விட்டார்கள்.

    மாமா. மாமா! நீங்கள் திடீரென்று செத்துவிட்டால்...

    நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் அப்படிச் சாகவே மாட்டேன்! என்றார்

    என்றாலும் மாமா நாலு பேரிடம். என் மருமகன்கள் படுகிற கவலையைப் பார்த்தீர்களா? அவர்கள் சொல்கிறாப் போல் நான் திடீரென்று செத்துவிட்டால் அவர்கள் பாடு சங்கடந்தான். ஏனென்றால். நான் ஒளித்து வைத்திருக்கிற இடத்திலிருந்து பணத்தை எடுக்க. ஒரு ஆயுள் காலம் முழுதும் தேடினாலும் போதாது. நான் சொன்னாலும்கூட. அதைக் கண்டுபிடிக்க இரண்டு மணி அவகாசம் ஆகும் என்றார். இது விஷயமும் இந்த மருமான்கள் காதுக்கு எட்டியபோது. பல்லைக் கடித்துக் கொண்டார்கள்.

    அவர்கள் எதிர்பார்த்ததற்கு விரோதமாக. முதலில் இறந்தது அவர்களுடைய தாயார்தான். அதற்கு இரண்டு வருஷத்துக்குப் பிறகுதான் மாமா படுக்கையில் படுத்தார். அதற்குள் இரண்டு பிள்ளையாண்டான்களும் அவரைத் தினந்தோறும் எச்சரித்துப் பார்த்துவிட்டார்கள். ஒன்றும் பலிக்கவில்லை

    மாமாவுக்கு உடம்பு அதிகமாகிவிட்டதும். ராமுவும் கிட்டுவும் போய் நின்றார்கள். மாமா. அவர்களை நிமிர்ந்து பார்த்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும் என்றார்.

    இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். மாமா மீண்டும் சொன்னார்: உங்களுடைய நடவடிக்கைகளைக் கவனிக்கும் போது. நான் ஒரு தம்படிக்கூடக் கொடுக்கக் கூடாது! என்னிடம் நீங்கள் நடந்து வந்திருப்பதை நான் பாராட்டாவிட்டாலும். உங்களுக்குள் நீங்கள் போட்டுக் கொண்டிருக்கும் சண்டை இவ்வளவு அவ்வளவு அல்ல. ஒருவன் கழுத்தை ஒருவன் அறுக்கப் பின் வாங்க மாட்டீர்கள். ஆனாலும் இனிமேலாவது உங்களில் ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் செய்ய உபயோகப் படும்படி என் பணத்தை வைக்கப் போகிறேன்.

    மாமா ஒரு பெருமூச்சுவிட்டார். படபடவென்று பேசியதால் சற்றுக் கலங்கினாப் போல் காணப்பட்டார்.

    இதை எல்லாம் இந்தப் பிணத்தை யார் கேட்டது! பணம் இருக்கும் இடத்தைச் சொல்லாமல் எதை எதையோ உபதேசம் பண்ணுகிறதே. பாரம் கிழம்! என்று இரண்டு பேரும் பல்லைக் கடித்தார்கள்.

    மாமா. தொண்டையைக் கனைத்துவிட்டுக் கொண்டு. மீண்டும் சொல்லத் தொடங்கினார்:

    என் பணத்தை நான் வீட்டுக்குள் எங்கும் வைக்கவில்ல. இங்கே இருந்தால் நீங்கள் வீட்டை நிமிஷத்தில் இடித்தாவது அதை எப்படியாகிலும் எடுத்திருப்பார்கள். அந்த இடம் இன்னதென்று நான் இப்போது ஸ்பஷ்டமாகச் சொன்னாலும் அதை நீங்கள் போய் எடுக்க இரண்டு மணி நேரம் பிடிக்கும். நீங்களாகக் கண்டுபிடிப்பதாக இருந்தால் இருபது வருஷமும் ஆகலாம்; அது இருக்கும் இடத்தைச் சொல்லும் அடையாளங்களை இந்தக் காகிதத்தில் விவரமாக எழுதியிருக்கிறேன்...

    இப்படிச் சொல்லிக் கொண்டே. அவர் ஒரு கடுதாசியை நீட்டிப் பிடித்தவாறு எழுந்து உட்கார முயன்றார். அதற்குள் அவரை ஒரு இருமல் பற்றிக் கொண்டு. குலுக்கிக் குலுக்கி வதைத்துவிட்டது. அந்தக் குலுக்கலில். பக்கத்திலிருந்த ஒரு ‘ஷேட்' விளக்கைத் தள்ளிவிட்டார். அது அணைந்து உடைந்து போயிற்று. அறையில் வேறு விளக்கு இல்லாததால். ஒரே அந்தகாரமாகி விட்டது. இவ்வளவு நேரம் பேசிய அதிர்ச்சியும் இருமலும் தாங்காமல். மாமா படுக்கையில் மூர்ச்சையானார்!

    மறுபடி விளக்கைக் கொண்டு வந்து. உடைந்த 'ஷேட்' விளக்கை அகற்றிவிட்டுப் பார்த்தால். மாமா கையிலிருந்த கடுதாசியைக் காணோம். மாமாவோ மூர்ச்சையாகி நினைவிழந்து கிடக்கிறார். மற்ற இருவருமோ ஒருவரைப் பார்த்து ஒருவர். நான் எடுக்கவில்லை; நீதான் எடுத்திருக்கிறாய்! என்று கூச்சல் போட்டுக் கொள்கிறார்கள். ஏக ரகளை!

    அந்த அறையில் ஒரு சந்து பொந்து பாக்கியில்லை. தேடிப் பார்த்தாகிவிட்டது: கடுதாசியைக் காணவில்லை! மாமாவுக்குப் பிரக்ஞை வந்தப்புறம். கடுதாசியைக் கேட்டார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாற்றிக் கொண்டு நின்றார்கள். மாமா பல்லைக் கடித்துக் கொண்டு. படுபாவிப் பசங்களா! கொலைகாரங்களா! சாகக் கிடப்பவனிடமா திருடுகிறீர்கள்!' நாசமாய்ப் போவீர்களடா! என்று கண்டபடி திட்டத் தொடங்கினார். இரண்டு பேருமாய் எப்படியோ சமரசம் செய்து கொண்டு சுடுதாசியைக் கொண்டு வருவதானால் இங்கே வாருங்கள். இல்லா விட்டால் என் முகத்தில் இனி முழிக்காதீர்கள். போங்கள்! என்று கண்ணை மூடிக் கொண்டார்.

    அதற்குப் பிறகு ஒரு மாதம் சென்றதும் மாமா இறந்து போனார். அவருக்கு உடம்பு அதிகமானதும். சில நண்பர்கள். ஸ்வாமி! நீங்கள் அந்தப் பயல்களை மன்னித்து ஏதாவது கொடுத்துவிட்டுப் போங்கள்! என்று கேட்டார்களாம். மாமா மகா ரௌத்ரமாய். எந்தப் பயல் அதைத் திருடினான் என்று எனக்கு லட்சியமில்லை! என் வாழ்நாளை அந்த மூதேவிகள் குலைத்துப் பாழாக்கினார்கள். அவர்களை நான் அப்படிச் செய்கிறேன். உயில் எழுதுங்கள்! 'எந்தப் பயல் பணத்தைக் கண்டெடுத்தாலும். மற்றவனுக்குச் சரிபாதி கொடுக்க வேண்டும்’ - அவர்களாகப் பார்த்துக் கொள்ளட்டும். சாமர்த்தியம் போல்! என்றார். பிறகு நிம்மதியாக உயிரை விட்டார்.

    அன்று ஆரம்பித்தது இன்றும் தீர்ந்தபாடில்லை. ராமு போகிற இடமெல்லாம் கிட்டு போகிறான்; கிட்டு போகிற இடமெல்லாம் ராமு போகிறான். ஒருவனிடம் மற்றொருவனுக்கு நம்பிக்கை கிடையாது. இரண்டு பேரும் பக்கத்தில் பக்கத்தில் கட்டிலைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாங்குகிறார்களோ. என்னமோ. எனக்குத் தெரியாது. ராமுவுக்கு எண்ணம். கிட்டுவிடம்தான் பத்திரம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறதென்று! கிட்டுவும் அப்படியே நினைக்கிறான். இன்று வந்தாப்போல் தினம் சேர்ந்து வந்தே சாப்பிட்டுப் போகிறார்கள்.

    ***

    இப்படிச் சொல்லி. கோபாலன் நிறுத்தினான். நான் ஒவ்வொரு முந்திரிப் பருப்பாக வாயில் போட்டுக் கொண்டே வந்தவன் சட்டென்று நிறுத்தி. வாஸ்தவமாகவே அந்தக் கிழவர் பணத்தை எங்கே வைத்திருப்பார்? அது கண்டுபிடிக்க முடியாத இடம்தானா? வேறு யாராவது எடுத்திருக்க மாட்டார்களா? அந்தக் கடுதாசி எங்கே போயிருக்கும்? என்று கேட்டேன்.

    "அது வேறு கதை: வாஸ்தவமாக அந்தப் பணத்தைக் காணவே முடியாது. ஏனென்றால். பணமே இல்லை! நான் ஒரு நாள் கிழவரைப் பார்த்துவிட்டு வந்தேன். அவர் என்னிடம் ரகசியமாகச் சொன்னார். அவரிடம் என்றுமே அதிகச் சொத்து இருந்ததில்லையாம். ஆனால் இருந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல். அதிகம் இருப்பதாகச் சொல்லி வந்திருக்கிறார். வரும்படி இல்லாமல் வீட்டோடு இருந்தால் எத்தனை நாளைக்குத்தான் அது தாங்கும்? அத்தனையும் அவர் அந்திய காலத்துக்குள் செலவாகி விட்டது.

    ஆனால். இந்தப் பயல்களை ஒன்று சேர்ப்பதற்குத்தான் அவர் ஒரு யுக்தி செய்தார். பணம் வெளியே இருப்பதாகவும். அதற்கு வழி ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருப்பதாகவும் ஒரு கற்பனை செய்தார். தாமே வேண்டுமென்று விளக்கை அணைத்துவிட்டு. அந்தக் கடுதாசியையும் சட்டையிலேயே ஒளித்துக் கொண்டு மூர்ச்சை அடைந்ததாகப் பாசாங்கு செய்தார்.

    ராமுவும் கிட்டுவும் நம்பி ஏமாந்தார்கள். கிழவர் சீக்காயிருந்தபோது. கரடி புலி மாதிரி தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்புறம் அவர் உயில் எழுதி வைத்த பிறகு ஓய்ந்து. ஒருவனை ஒருவன் பிரியாமல் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போது சண்டை ஒன்றும் கிடையாது: ஆனால் ஆத்திரம் மட்டும் குறையவே இல்லை"

    இந்த விஷயத்தை யாராவது அவர்களிடம் சொல்லக் கூடாதா?

    நான் சொன்னேன். ராமுவிடம். அவன் உடனே. ‘ஓஹோ! கிட்டு இப்படி வேறு வேலை செய்கிறானா? இதில் உமக்கு என்ன கமிஷன்?' என்றான். இதே மாதிரி கிட்டுவும் கேட்டு. ஒருவரையொருவர் அதிகமாகச் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டனர்?

    அட பாவமே! இது எப்படித்தான் முடியப் போகிறது?

    கோபாலன் சிறிது சிரித்துவிட்டு. எனக்குத் தெரியாது! இப்படியே அதிகம் பழகினால் சகோதர வாஞ்சைதான் அந்தச் சொத்து என்று அவர்கள் தெரிந்து கொள்ளலாம். அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் அது கிழவருடைய பிசகு இல்லை! என்றான்.

    *****

    2. மெய்யும் பொய்யும்

    முன் ஒரு காலத்தில் கிருஷ்ணசாமி நாயுடு என்று ஒரு பிரபு இருந்தார். அந்தப் பிரபுவுக்குக் கல்யாணி. கல்யாணி என்பதாக ஒரு புதல்வியும் உண்டு. இந்தக் கதை ஜனனமாகிற காலத்தில் நாயுடுவின் மனைவி. கல்யாணியின் தாயார். ஸ்ரீபதி மோகாம்பாள். இந்த மண்ணுலகை விட்டுப் பொன்னுலகுக்குப் போய்விட்டாள். ஆகையினாலே. நண்பர்களே. நீங்கள் மோகனாம்பாள் கதையைக் கேட்டுப் போகிறதாக ஆசை வைத்துக் கொண்டிருந்தீர்களானால். அந்த ஆசையை வாசலில் வீசி எறிந்துவிட்டு. இப்போது கல்யாணியின் கதையைக் கேட்கத் தயாராகுங்கள்!

    இந்தக் கல்யாணி இருந்தாளே. அவளை அப்படியொன்றும் அழகு என்று சொல்வதற்கில்லை. ஆனால் அவள் குணம் மட்டும் தங்கமாக இருந்ததென்று பார்த்த பேர் சொன்னார்கள். அவள் ஈ எறும்பைக் கூடக் கொல்ல மாட்டாள். பொறி வைத்து ஒரு எலியைக் கூடப் பிடித்தவள் இல்லை; அவள் வீட்டில் வேலை செய்த குட்டி கண்ணம்மாவைப் பார்த்து 'நகர்ந்து நில்’ என்று கூடச் சொன்னதில்லை. ஒரு பலகாரம் பண்ணுகிறேன் என்று தோசை அடையை வைத்து வனளத்துத் தின்றது கிடையாது. ஒரு தலைவலி என்று படுத்துக் கொண்டு ஒரு டாக்டருக்கு எட்டணா மிக்ஸ்சருக்கும் கொடுத்ததில்லை. இதையெல்லாம் கவனித்து பேர். கல்யாணி ரொம்ப புத்திசாலி என்றார்கள். கல்யாணியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவன் அதிர்ஷ்டசாலியாயிருப்பான் என்றார்கள்.

    கிருஷ்ணசாமி நாயுடு. ஈஸி சேரில் சாய்ந்துகொண்டு. ஒரு ஏப்பம் விட்டார். இதெல்லாம் ரொம்ப சரி; எங்கள் மோகாம்பாள் மாதிரி கல்யாணியும் அதிர்ஷ்டசாலியாயிருக்கப் போகிறாள்! என்றார். அப்புறம் கல்யாணியின் பக்கம் திரும்பி. கல்யாணி! உனக்கு வயதாகிவிட்டது! நீ காலா காலத்தில் புருஷனுக்குச் சிசுருஷை பண்ணிக் கொண்டு க்ஷேமமாக – சந்தோஷமாக இருக்க வேண்டாமா? நானோ கிழவன். நாற்பத்தெட்டு வயது ஆகிவிட்டது! எனக்குச் சமைத்துப் போட்டுக் கொண்டு அடுப்பங்கரைப் புகையில் நீ எத்தனை நாளைக்குக் கண்ணைக் கெடுத்துக் கொண்டு இருப்பது? என்னைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். என்ன நான் சொல்றது! ஏன்! நான் ஒரு ஏழைப் பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன். அந்தப் பெண்ணும் வந்து நீயும் வீட்டில் இருந்தால் உங்களுக்குள் சண்டை சச்சரவுகள் வரும். அதெல்லாம் என்னத்துக்கு? நான் உனக்குச் சுதந்தரம் கொடுக்கிறேன். உன் மனதுக்குப் பிடித்த மணாளனாகப் பொறுக்கி நீ கல்யாணம் செய்து கொள். என்னாலானதை நான் செய்கிறேன் என்று முடித்தார். பிறகு பரிவுடன் கல்யாணியின் முகத்தைப் பார்த்தார்.

    கல்யாணி. அப்பா! நீங்கள் சொன்னதை நான் புரிந்து கொண்டேன். ஆனால் எனக்கு புருஷர்கள் என்றாலே வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. அதற்குக் காரணம் என்னுடைய அத்தான் கோபால்சாமிதான்.

    அத்தான் சொல்கிறது அத்தனையும் பொய்யாக இருக்கிறது. அவர் ‘சினிமாவுக்குப் போகிறதில்லை. ராக்கண் விழிப்பதில்லை’ என்று என்னிடம் சொன்னார். ஆனால் வாரத்தில் மூன்று தரம் கடைசி ஆட்டத்துக்குப் போகிறார். பன்னிரண்டு மணிக்கு வருகிறார்; அப்பா! நீங்கள் கல்யாணம் செய்து கொள்கிற பெண்ணோடு வேண்டுமானாலும் நான் சண்டை போட்டுக் கொண்டு இங்கே கஷ்டப்படுகிறேன். இந்தப் பொய் சொல்லும் புருஷர்களை மாத்திரம் நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்!

    கிருஷ்ணசாமி நாயுடு நகத்தைக் கடித்து. கையை மடியில்

    Enjoying the preview?
    Page 1 of 1