Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aindhu Naadugalil Arubathu Naal - Part 1
Aindhu Naadugalil Arubathu Naal - Part 1
Aindhu Naadugalil Arubathu Naal - Part 1
Ebook420 pages9 hours

Aindhu Naadugalil Arubathu Naal - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேவன், இயற்பெயர் ஆர். மகாதேவன். 1913 செப்டெம்பர் 8 அன்று திருவிடைமருதூரில் பிறந்தார். பி.ஏ. படித்து, சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு, 'ஆனந்த விகடன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து, தொடர்ந்து இருபத்து மூன்று ஆண்டுகள் விகடன் நிறுவனத்தில் பணியாற்றினார். 1942 முதல் 1957 வரை 'ஆனந்த விகடன்' நிர்வாக ஆசிரியராக இருந்தார். சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், நாவல்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆர்.எம்., அம்பி, விச்சு, காயத்ரி, மயூரம், கேட்டை போன்ற புனைப்பெயர்களிலும் ஏராளமாக எழுதியுள்ளார். தேவன், ஒரு நாடக ஆசிரியரும்கூட; ஸிம்ஹம் என்ற பெயரில் வானொலி நாடகங்கள் இயற்றியிருக்கிறார். தேவன், எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக இருமுறை பதவி வகித்தார். 1957 மே 5 அன்று, தனது 44 - வது வயதில் காலமானார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126604190
Aindhu Naadugalil Arubathu Naal - Part 1

Read more from Devan

Related to Aindhu Naadugalil Arubathu Naal - Part 1

Related ebooks

Related categories

Reviews for Aindhu Naadugalil Arubathu Naal - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aindhu Naadugalil Arubathu Naal - Part 1 - Devan

    http://www.pustaka.co.in

    ஐந்து நாடுகளில் அறுபது நாள் முதல் பாகம்

    Aindhu Naadugalil Arubathu Naal Part 1

    Author:

    தேவன்

    Devan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பிரயாண முஸ்தீப்புகள்

    2. முதல் அனுபவம்

    3. புண்ய பூமியும் புராதன நகரமும்

    4. அனுராதபுரம் நகர சோதனை

    5. காட்டிலே கண்டெடுத்த நகரம்

    6. பாவத்துடன் எழுந்த கோட்டை

    7. புத்தர்பிரானே! சரணம்!

    8. கடல் நடுவில் ஓர் அதிர்ச்சி

    9. சிங்கப்பூர் - இந்திரலோகம்

    10. சிங்கப்பூர் - குபேர பட்டணம்

    11. சிங்கப்பூரில் மூன்று ‘உலக’ங்கள்

    12. அடா பாய்? அப்ப மச்சம்?

    13. கண்டறியாதன கண்டேன்!

    14. நகரஸிம்ஹத்தின் ஹிருதயம்

    15. 'அத்தாப்' மரமும், ‘ஸாலான்' பாயும் புல்லும்

    16. கோலாலம்பூரில் தமிழ் முழக்கம்

    17. கோலாலம்பூரில் சில அனுபவங்கள்

    1. பிரயாண முஸ்தீப்புகள்

    எனக்கு அறிமுகமான ஒருவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆசார உபசாரங்கள் பெற்றுக் கொண்டு சாதிக்க இயலாத காரியங்களைச் சாதித்துக் கொண்டு திரும்புகிறார் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். இதன் ரகசியம் என்னவென்றால், சென்ற சிறிது நேரத்திற்குள் அவர் அங்குள்ளவர்களில் யாரேனும் ஒருவருடைய ரேகையைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடுவது வழக்கமாம். அவருடைய ரேகா சாஸ்திர அறிவு அனுபவங்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல அருகதை உள்ளவனாக இல்லை; ஆனால் மனித சுபாவத்தை அவர் வெகு தெளிவுடன் ஆராய்ந்து வைத்திருக்கிறார் என்பதைப் பற்றி மட்டும் உறுதி கூறுவேன். அவர் அந்த வீட்டில் இருப்பவர்களோடு இமைக்கும் நேரத்தில் ஒன்றிப் போய்விடுவார். அத்தனை பேரும் அவரைச் சூழ்ந்து கொண்டு தங்கள் ரேகையை அந்த 'நிபுண’ரிடம் பரிசோதனை செய்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். மனிதனின் இதய ஆழத்தில் பதிந்து கிடக்கும் ஆசைகள் அபிலாஷைகள் எல்லாம் கரை கண்டவராகையால், மனிதர் எல்லாருக்கும் திருப்திகரமாக பதில் சொல்லுவார். சில புதிய எண்ணங்களையும் அவ்வப்போது விதைத்து வைப்பார்!

    அந்த மனிதர் சில வருஷங்களுக்கு முன்பு என் நன்மதிப்பையும் பெற்றுக் கொண்டார். நொடியில் என் கண் முன் தாம் ஒரு மேதாவியென உயர்ந்துவிட்டார். எப்படி எனில், நான் என் கையைக் காண்பிக்கு முன்பே, எவ்விதமோ அதில் இரண்டு கோடுகளைக் கண்டுபிடித்து, உமக்கு அயல் நாட்டுப் பிரயாணம் உண்டு என்று கூறிவிட்டார்.

    எப்போது? என்று கேட்டேன்.

    அதெல்லாம் அவ்வளவு நிச்சயமாக ரேகையிலிருந்து சொல்லிவிட முடியாது. ஆனால், பிரயாணம் மட்டும் நிச்சயம் உண்டு.

    உத்தேசமாகச் சொல்லுங்களேன்... எந்த நாடு? அல்லது நாடுகள்? அதுகூடத் தெரியாதா?

    அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன். சில பித்தலாட்டக்காரர்கள்தான் அதையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். கையில் கோடு இருக்கிறதா, பலன் சொல்லுவேன்; இல்லையா, நான் சும்மா இருந்து விடுவேன் என்றார்.

    அப்படியென்றால் நான் வெளிநாடுகள் போகப் போகிறேன்?

    கட்டாயமாக! நீங்கள் போகவில்லையென்றால், இந்த ரேகா சாஸ்திரத்திற்கே ஒரு முழுக்குப் போட்டு விடுகிறேன் - இது உறுதி! என்றார்.

    அரைகுறையாகத் தெரிந்த என்னை உத்தேசித்து இந்த மனிதர் தமது லாபகரமான ஒரு விருத்தியைத் திரஸ்காரம் செய்து விடுவாரோ, இதற்காகவேனும் ஒரு முறை வெளிநாடு போய்விட்டு வரலாமோ என்று நான் அப்போது சிந்தித்தது உண்டு. அப்பால் விசாரித்ததில்,

    இம்மாதிரியானதொரு உறுதியை அவர் தினம் நாலு பேரிடமாவது சொல்வது வழக்கம் என்பதை அறிந்தபின், ஒரு கால் அப்படி நேரிட்டாலும் அதன் முழுப் பொறுப்பு என்னையே சாராது என மன ஆறுதல் கொண்டேன்.

    திடீரென்று ஒரு நாள் - சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் காலை - நான் வெளிநாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டு வருவதென்பது நிச்சயம் ஆயிற்று. ஆதி நாட்களில் இந்திய கலாசாரம் பூர்ணமாகப் பரவியிருந்ததாகச் சரித்திர ஆராய்ச்சி பூர்வமாக அறியக் கிடக்கும் நாடுகளான இலங்கை, மலேயா, இந்தோனேஷியா, தாய்லாந்து, பர்மா ஆகிய ஐந்து நாடுகளுக்குச் சென்று அங்கேயுள்ள பழைய சின்னங்களைக் கண்டும், இன்றைய கலாசாரத்தை அறிந்தும், நம் சகோதரர்கள் அங்கே நடத்தும் வாழ்க்கையைப் பார்த்தும் வர ஒரு சந்தர்ப்பம் நிகழ்ந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சகல வசதிகளையும் தமிழ்ப் பத்திரிகையின் சரித்திரத்திலேயே முதன் முதலாக ஆனந்த விகடன் அதிபர் செய்து தரவே, சுற்றுப் பிரயாணம் ஊர்ஜிதமாயிற்று. என்னுடைய ஒரே குறை அந்த ரேகை சாஸ்திரி அந்தச் சமயம் கண்ணிலே அகப்படாமல் போனது தான். (அவர் தம் தொழிலுக்கு ஏனோ முழுக்குப் போட்டு விட்டதாக நான் அறிகிறேன்!)

    பிரயாணம் செய்யப் போகிறோம் என்றாலேயே மனத்தில் உத்ஸாகம் ஏற்படுவது சாதாரணமான அனுபவம் தான். குழந்தைகளாக இருக்கும்போது ரயிலில் ஜன்னலை ஒட்டிய இடத்திற்காக நாம் எத்தனை பேர் சண்டை போட்டு முரண்டு பிடித்திருக்கிறோம் பேப்பரையும் பென்சிலையும் வைத்துக் கொண்டு, ஸ்டேஷன் பெயர்களை எத்தனை பேர் எழுதியிருக்கிறோம்! பிரயாணம் இறுதிக் கட்டம் அடையும்போது 'அடாடா முடிந்து போகப் போகிறதே!' என்று உள்ளூர ஆயாசம் கொண்டிருக்கிறோம்!

    வயதிற்கும் இந்த உணர்ச்சிக்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை என்று நான் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்த சமயம், என் ஆப்த நண்பர்கள் பலரைச் சந்தித்தேன். அவர்கள் எல்லோரும் என் பிரயாணத்தைப் பற்றியே விசாரித்தார்கள்; சந்தோஷம் தெரிவித்தார்கள். என்மீது அன்பைச் சொரிந்து, என்னைப் பற்றிக் கவலையையும் காண்பித்தார்கள். ஒரு வேளைக்கூடக் காப்பி சாப்பிடாமல் இருக்க மாட்டீர்களே... அங்கெல்லாம் காப்பி கிடைப்பது துர்லபமாயிற்றே! என்றார்கள் சிலர்.

    புலால் உணவுதானே அகப்படுமாம்! எப்படி ரொட்டியும் பழமும் போதப் போகிறது...? முன்னேற்பாடு இல்லாமல் எங்கும் போய்விடாதீர்கள்...

    ப்ளேனில் போக வேண்டுமே... ஜாக்கிரதையாகத் திரும்ப வேண்டுமே...! எதற்கும் இந்தக் குங்குமப் பொட்டலமும், 'மார்க்க பந்து' ஸ்தோத்திரமும் உங்கள் பெட்டி அடியில் இருக்கட்டும்.

    கைவசம் எப்போதும் தலைவலி மாத்திரை வைத்துக் கொள்ளுங்கள்.

    என்ன உடை உடுத்திக் கொள்வீர்கள்? கதர் வேஷ்டி, சட்டையுடன்தான் போங்கள். நம்மை யார் என்ன சொல்கிறது, செய்கிறது? நம் நாட்டு உடை!

    வெளியூர் சென்று வருகிறீர்களாமே, அந்த ஊர்களில் என்னென்ன சாமான்கள் மலிவு என்று பார்த்து வாருங்கள்! சிங்கப்பூரில் ஒரு கெடியாரமும் ஒரு நல்ல காமிராவும் முடிந்தால் வாங்கி வாருங்கள்...

    அங்கே வெல்வெட் விசேஷமாம், இரண்டு கஜம் போதும், பாருங்கள்! சும்மா, ஒரு மாதிரிக்குத்தான்.

    மலாக்காவில் கைப் பிரம்பு மிக உசத்தி, திரு நெல்வேலியில் எங்கள் தாத்தா ரொம்ப நாளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்... செளகரியப்பட்டு மலிவாகவும் இருந்தால் ஒன்றே ஒன்று.

    ஜாவாவில் மர சாமான்கள் அற்புதம்; வேலைப்பாடு பிரமாதம்! உங்களுக்கு வாங்கினால் எனக்கும் ஒன்று ஞாபகம் இருக்கட்டும்...

    அங்கே ஒரு 'டான்ஸ்' ரொம்ப ஜோராக இருக்கும். நிழலாட்டம், பொம்மலாட்டம் எல்லாம் பார்த்து விட்டு வந்து சொல்லுங்கள்... ஒரு அருமையான 'ஸாரி' தயாரிக்கிறார்களாம். அதில்லாவிட்டாலும் ஒரு 'ஸாரங்’காவது வாங்காமல் வராதீர்கள். பாலி தீவு கட்டாயம் பார்க்க வேண்டியது...

    பாங்காக் போனால் அயோத்தியா பார்க்காமல் திரும்பக் கூடாது. பிரயோசனமே இல்லை... அங்கிருந்து. அங்கோர்வாட் வெகு சமீபம்...

    ரங்கூன் மாதிரி நகரம் இல்லை என்கிறார்கள். நன்றாகப் பாருங்கள். சுவேதகான் பகோடாவைப் பற்றி எனக்குச் சொல்ல வேண்டும்! - இப்படியாக நண்பர்கள் சொன்னார்கள்.

    பிரயாணத்தில் நல்ல அனுபவமும் என்னிடம் அக்கறையும் கொண்ட ஒருவர் உரிமையுடன் கண்டிப்பாகக் கூறினார்; அங்கேயெல்லாம் போய்விட்டால் மசமசவென்று இருக்கக் கூடாது. இங்கேயே ஒரு 'பிளான்' போட்டுக் கொண்டு போக வேண்டும். இன்ன இடத்தைப் பார்க்கப் போகிறோம், அதில் எது முக்கியம் என்று தெரிந்து கொள்ளாமல் அங்கே போய்த் தேடிக் கொண்டிருப்பது நன்றாயிராது. எடுங்கள் ஐயா படத்தை! நன்றாகப் பாரும் என்று அதட்டிவிட்டு தாம் கொண்டு வந்திருந்த படத்தைப் பிரித்தார்.

    சென்னையிலிருந்து போகிறீர் ஐயா! இலங்கை; இலங்கையில் எத்தனை நாள் இருக்கப் போகிறீர்?

    இன்னும் யோசனை செய்து முடிவு செய்யவில்லை.

    நாள் நட்சத்திரம் வேணுமோ? இப்போதே யோசனை செய்து முடிவு பண்ணுவோம்! என்று பிரயாணத் திட்டமே தயார் செய்தார். இந்தத் திட்டம் மிகவும் பிரயோசனமாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் கூட ஆனந்தமாக இருந்தது.

    ஊருக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டால் ஆயிற்றா? பாஸ்போர்ட் தயாராக வேண்டாமா? அதற்கு விண்ணப்பம் போட்டாகிவிட்டதா? - என்று அவர் கேட்டார்.

    இந்தக் கேள்விக்குப் பதிலும், இதைத் தொடர்ந்து செய்ய வேண்டி வந்த காரியங்களும் எத்தனை கடுமையானவை என்பதை இந்த க்ஷணம் முதல் வெளிநாட்டுப் பிரயாணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் இந்தியா வந்து சேரும் வரை நடந்த கதைகள் எனக்கு நினைப்பூட்டிக் கொண்டே இருக்கும். பாஸ் போர்ட் வாங்க வேண்டிய கவலை இரவுகளில்

    கனவுகளாக என்னை விரட்டின; பகலில் என் நண்பர், அதைச் செய்தீர்களா, இதைச் செய்தீர்களா? உட்கார்ந்து கொண்டிருந்தீர்களானால் ஆயிற்றா? அப்படியானால் நீர் போகவே போகிறதில்லையா? என்று என்னை விரட்டினார். ஆகவே வெளிநாட்டுப் பிரயாணத்திற்கு விக்னேச்வர பூஜையாக பாஸ்போர்ட் வாங்கும் படலத்தைத் தொடங்கினேன்.

    ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்வதற்கு புறப்படும் நாட்டு சர்க்காரின் அனுமதிப் பத்திரம்தான் பாஸ்போர்ட் என்பது. அதாவது, இந்த நபர் வெளிநாட்டுக்குச் சென்று வரலாம்; அதில் இந்த சர்க்காருக்கு ஆக்ஷேபணை இல்லை என்பதை இது குறிக்கிறது. வெளிநாடு என்னும்போது எந்தெந்த நாடுகள் அவை என்பதையும் விவரமாக இதனுள் குறிப்பிடுகிறார்கள்.

    இதற்கு போலீஸ் கமிஷனர் ஆபீஸில் ஆஜராகி அங்கே வெளி நாட்டுக்குச் செல்வதற்கு அனுமதி பாரம் வாங்கி, அதில் அநேக விவரங்களுக்கு பதில் எழுத வேண்டும். (குண்டு எழுத்தில்) பெயர், தகப்பனார் பெயர், பிறந்த ஊர், பிறந்த தேதி, வயது, உத்தியோகம், வருமானம், வாழ்க்கை பற்றி விவரங்கள், வெளிநாடு போகும் காரணம், அங்கே தங்கப் போகும் அவகாசம், உடன் வருபவர்கள் - இவை போன்ற பிரச்னங்களுக்கு பதில்கள் எழுதி, ஒரு பத்து ரூபாய் ஸ்டாம்பையும் ஒட்டி, குறிப்பிட்ட அளவுள்ள நமது போட்டோ பிரதிகளில் மூன்றையும் அடக்கம் செய்து தாக்கல் செய்ய வேண்டியது.

    இதோடு இங்கே வேலை விட்டுவிடவில்லை. பூஸ்திதியுள்ள நண்பர்கள் யாரேனும் ஒருவரைப் பிடித்து, சர்க்கார் பாரம் ஒன்றைக் கொடுத்து, அதன் பயங்கர வாசகத்தை அப்படியே பிரதி செய்து அவரிடம் கையொப்பமிட்டு வாங்க வேண்டும். அந்த பயங்கர வாசகம், வெளி நாடு செல்லும் பிரயாணி, வெளி நாட்டிலேயே இறந்து போய், அவருடைய ஈமக் கிரியைகளுக்கான செலவுகளை நமது சர்க்காரே செலவழிக்க நேர்ந்தால், இந்த நண்பர் ஈடு செய்வதாக வாக்களிக்க வேண்டும். அல்லது, திரும்பி வரப் பணம் இல்லாமல் போய், சர்க்கார் செலவிலே அவர் கொண்டு வரப்பட்டாலும், செலவான தொகையை இவரிடம் வசூல் செய்து கொள்வார்கள். அல்லது, அந்தப் பிரயாணி வெளி நாட்டில் மணம் செய்து கொண்டு பல குழந்தைகளுக்குத் தந்தையானால், அப்போதும் செலவை ஏற்றுக் கொள்ளும் பொறுப்பு இந்த நண்பருடையது.

    இதையெல்லாம், ஒன்றே கால் ரூபாய் (நான்ஜுடிஷியல்) ஸ்டாம்பு பத்திரத்தில் சர்க்கார் வாசகம் பிறழாமல் எழுதி, தமது ஸ்தாவர ஜங்கம் சொத்துக்களைப் பற்றிய விவரங்களையும் தந்து, அவர் கையொப்பமிட வேண்டும். முன் கூறிய மனுவையும் இதையும் வைத்துக் கொண்டு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னும் பல கேள்விகள் கேட்டு எழுதிக் கொள்வார். இதோடு இங்கே உம் வேலை முடிந்தது. இனி செக்ரிடேரியட்டில் போய் விசாரியுங்கள். இந்த 'பாரம்’ அங்கே போய்விடும் என்று அவர் அனுப்பி விடுவார்.

    செக்ரிடேரியட்டில் மாடிப் படிகள் மிக அதிகம்; தாழ்வாரங்கள் மிக நீளம்; வில்லைச் சேவகர்கள் அனந்தம். இந்த மூன்று கடும் சோதனைகளை வென்று கொண்டு, ஹோம் டிபார்ட்மெண்ட் காரியதரிசியை அணுக வேண்டியது. ஏராளமான அவருடைய இதர அலுவல்களிடையே இந்த அற்ப சமாசாரத்தைத் தெரியப்படுத்தி விட்டு, அன்றாடம் போய் விசாரித்துக் கொண்டிருந்தால், ஸி.ஐ.டி. ரிப்போர்ட் வந்து சேரவில்லை என்ற பதில்தான் காதிலே வந்து விழுந்து கொண்டே இருக்கும். போலீஸ் இலாகா அதன் ஸி.ஐ.டி. மூலம், மனுச்செய்யும் நபர் கூறும் காரணங்கள் உண்மைதானா என்று விசாரித்துத் திருப்தி அடைய வேண்டியருப்பதாலேயே, இந்தக் கால தாமதம் ஏற்படுகிறது. திடீரென்று ஒரு நாள் காலை போலீஸ் ரிப்போர்ட் வந்து விட்டது! உமது பாஸ்போர்ட் கிடைக்கும்...! அப்படிப் போய் உட்கார்ந்து காத்திரும்! என்ற மங்களமான செய்தியைக் கேட்டு பரவசமடைகிறோம். சிறிது நேரத்தில் கரிய அழகிய அட்டையில் தங்க ரேக்கில் சிங்கச் சின்னமும் PASSPORT - REPUBLIC OF INDIA என்ற எழுத்துக்களும் மின்ன, உம் முன்னால் வந்து குதிக்கும்படி ஒரு நோட்டுப் புஸ்தகம் சுழட்டப்படுகிறது.

    அதைப் பிரித்துப் பார்த்தால் மனுவில் நாம் கொடுத்த விவரங்களோடு மணி மணியான அக்ஷரங்களில் 'ஸத்யமேவ ஜயதே' என்ற சுலோகத்தின் அடியில், இதைக் கொண்டு வருபவரை எவ்வித தடங்கல் இடையூறுமின்றி அனுமதித்து, தேவையான உதவிகளை அவருக்குச் செய்து, அவசியமான பாதுகாப்பையும் அளிக்க வேண்டுமென்று இந்திய நாட்டின் ஜனாதிபதி கோருகிறார் என்று கண்டிருக்கிறது.

    ரொம்ப வேலை நடந்திருக்கிறது! அதனால்தான் இத்தனை கால தாமதம்! என்று நினைக்கும்போது ரொம்ப வேலை பாக்கியிருக்கிறது! என்று அனுபவம் மிகுந்த நண்பர் அங்கே தோன்றி ஞாபகமூட்டுகிறார். வெளிநாட்டுக்குப் போகிறதென்றால் ரயிலில் ஏறி காஞ்சிபுரத்துக்கும் ஆடுதுறைக்கும் போய் வருகிற மாதிரி இல்லை! படித்துப் பாரும் இந்தக் கடிதத்தையும்" என்று அதனுடன் கொடுக்கப்பட்ட ஒரு டைப் அடித்த கடிதத்தை ஞாபகமூட்டுகிறார்.

    வெளி நாடுகளுக்குச் செல்வதானால் பாஸ்போர்ட் வாங்கினால் மட்டும் போதாது, ஒவ்வொரு நாட்டுக்கும் 'விஸா' வாங்க வேண்டும் - என்ற பொதுவான கருத்துத்தான் அந்தக் கடிதத்தில் இருக்கிறது. வெளிநாட்டு அலைச்சலுக்கு முன் உள் நாட்டு அலைச்சல் அதிகம் இருக்கிறது என்பது தெரிந்து திகைக்கிறோம். அதை விவரமாகப் பார்த்தால் அடியில் கண்டவாறு இருக்கிறது;

    முதல் முதலில் 'ப்ரொடெக்டர் ஆப் இமிக்ரண்ட்ஸ்' ஆபீஸில் போய், no objection to leave India ஸர்டிபிகேட் வாங்கி வரவேண்டும். இதற்கு அந்த ஆபீஸில் போய் க்யூ வரிசையில் காத்திருந்து பாஸ்போர்ட்டைக் காண்பித்து, அங்கே கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி, சொன்ன இடத்தில் கையொப்பமிட்டு, காரியத்தைச் சாதித்துக் கொண்டு திரும்ப வேண்டும்.

    இதற்கிடையில், அனுபவமுள்ள நண்பர் மற்றும் ஒரு வெடிகுண்டைப் போடுகிறார். "ஏன் ஐயா! ஹெல்த் ஸர்டிபிகேட் தயார் செய்துவிட்டீரா? அதற்கு அம்மை குத்திக் கொள்ள வேண்டுமே! பதினைந்து நாளாவது ஆகியிருந்தால்தானே நம்மை ஊரை விட்டுப் புறப்பட அனுமதிப்பார்கள்! இரண்டு முறை காலரா இனாகுலேஷன் செய்து கொண்டு, இரு ஸர்டிபிகேட்டிலும் கார்ப்பரேஷன் ஹெல்த் ஆபீஸர் முத்திரை வாங்க

    வேண்டுமே! செய்து விட்டீரா? அயல் நாட்டில் போய் காலை வைத்ததும் முதல் முதலில் அதைத்தானே கேட்பார்கள்?"

    இல்லை. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

    என்னைக் கேட்டால்... கார்ப்பரேஷனில் ஐந்து ரூபாய் கட்டி, 'சலான்' வாங்கி, ஏதேனும் ஒரு ஆஸ்பத்திரியில் அம்மை குத்திக் கொள்கிறது; டாக்டரிடம் இனாகுலேஷன் செய்து கொள்கிறது... அவகாசம் இதற்கெல்லாம் எங்கே இருக்கிறது?

    இன்றே செய்து கொள்கிறேன்...

    இந்தக் காரியங்களுக்கு அலைந்து வரும் போதே கடிதத்தின் இரண்டாவது

    உத்தரவையும் பார்த்துக் கொள்கிறோம்.

    இலங்கைக்குப் போகிறதென்றால், இதே டிபார்ட்மெண்டில் மனு எழுதிக்கொடுத்து, பாஸ்போர்ட்டையும் இரண்டு ரூபாய் தபால் தலையையும் அனுப்பி வைத்து, விஸா பெற்றுக் கொள்ள வேண்டியது.

    மறுபடி ஒரு மனுவில் பெயர், பிறந்த தேதி, வயது முதலிய விவரங்களை எழுதி விட்டு, பாஸ்போர்ட்டையும் அனுப்பிக் காத்திருக்கிறோம். மற்றொரு உதவி ஸெக்ரிட்டரியைப் பேட்டி கண்டு, அவருக்குத் திருப்தி அளிக்கும் வகையில் பதில் சொல்லிவிட்டு, மீண்டும் ஒன்றிரண்டு நாள் காத்திருந்தால் பாஸ்போர்ட்

    திரும்பி வருகிறது. அதைப் புரட்டிப் பார்க்கும் போது அதில் முதல் முதலாக, காலியாயிருந்த பக்கங்களில் ஒன்றில் ஒரு புதிய ரப்பர் முத்திரை விழுந்திருக்கிறது...

    இந்த விஸா மூன்று மாத காலம் செல்லுபடியாகும்; இதன்படி நீர் ஒரு வார காலம் இலங்கையில் தங்கலாம்; ஒரே ஒரு முறைதான் போய் வரலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    'அடடா! அதிதி ஸத்காரத்தில் பெயர் போனவர்களாக நாம் இருக்க, வெளி நாட்டில் நுழைய நமக்கு இத்தனை கண்டிப்பு இருக்கிறதே!' என்று வருத்தப்பட்டாலும் கூட, அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஒரு வெற்றிப் புன்னகையுடன் வருகிறோம்.

    அதற்குப் பிறகு அந்த உத்தரவுக் காகிதத்தில் இதர வரிகளைப் படித்து மேலும் கலக்கம் கொள்கிறோம்.

    உங்களுக்கு இந்தோ - சீனாவுக்குப் போக வேண்டுமானால், இந்த நகரத்தில் உள்ள அந்த நாட்டு வைஸ்கான்ஸலிடம் பாஸ்போர்ட்டில் விஸா வாங்கிக் கொள்ள வேண்டியது.

    இந்தோனேஷியாவுக்குப் போக வேண்டுமானால், புது டெல்லியில் அந்த நாட்டு ஸ்தானீகராலயத்துக்கு மனுச்செய்து விஸா வாங்கிக் கொள்ள வேண்டியது.

    மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், பர்மா ஆகியவற்றுக்குப் போகிறதானால், தனிப்பட இந்தப் பாஸ்போர்ட்டுடன், அங்கே செல்ல வேண்டிய அவசியத்தையும் தங்க வேண்டியிருக்கும் கால அளவையும் கூறி மனுச் செய்து கொள்ள வேண்டியது.

    இதற்கு அடியில் சர்க்கார் உள்நாட்டிலாகா டிபுடி ஸெக்ரிட்டரியின் கையொப்பம் தீர்க்கமாக இருந்தது.

    அனுபவம் மிகுந்த நண்பர் இதைப் படித்ததும் என் முகத்தில் ஏற்பட்ட பீதியைக் கவனித்து, உளறி விடாதேயும். நீர் சிங்கப்பூருக்குப் போகிறதால் அங்கே உமக்கு எல்லா நாட்டு ஸ்தானீகர் காரியாலயங்களும் இருக்கின்றன. நம்முடைய இந்தியா ஹவுஸ் மூலமாக நீர் மனுச் செய்து கொண்டால் 'சடக்’கென்று காரியம் முடிந்து விடும். அடுத்தபடி ஆக வேண்டியதைப் பாருங்கள்! என்று சொன்னார்.

    அடுத்தபடி புறப்பட வேண்டியதுதானே? என்றவுடன், சாது மனிதரே! இந்த உலகம் பூராப் பூராவும் பணத்தினால் இயங்குகிறதே! போகிற இடத்தில் கையில் பணம் இல்லாமல் என்ன செய்வீர்? பாஸ்போர்ட்டுக்குப் பத்து ரூபாயும் விஸாவுக்கு இரண்டு ரூபாயும், அம்மைக் குத்திக் கொள்ள ஐந்து ரூபாயும் கொடுத்துவிட்டால் புறப்பட்டு விடலாமா? விமான டிக்கெட் வாங்க வேண்டாமா? செலவுக்குப் பணம் எடுத்துக் கொள்ள வேண்டாமா? என்று கேட்டார்.

    இதில் என்ன சிரமம்? கையில் வேண்டிய ரூபாயை எடுத்துச் செல்லலாமே! என்றேன்.

    அவர் வெகு நேரம் சிரித்துவிட்டு, இதர நாடுகளுக்கு உமக்கு இஷ்டப்பட்ட பணம் எடுத்துப் போக முடியாது. இலங்கைக்கு எண்பது ரூபாய்க்கு மேல் கொண்டு போகக் கூடாது. சிங்கப்பூருக்கு நூறு ரூபாயோ என்னமோ கணக்கு வைத்திருக்கிறார்கள். அதற்கு மேல் அனுமதி இல்லை... எனவும், எனக்கு மறுபடி நாடி ஒடுங்கியது. அங்கே போய் நான் ஜீவிக்க வேண்டுமே! என்று தீனமாகக் கேட்டேன்.

    அதற்காக, பணத்தைக் கொஞ்சமாக வைத்துக் கொண்டு, பாங்கி மூலம் Traveller's Cheque என்று வாங்கிக் கொள்ளலாம். நீர் போகும் நகரங்களில் இதே பாங்கியோ இதனுடன் தொடர்பு கொண்டுள்ள பாங்கியோ இருக்கும். அவைகளில் உமது 'செக்'குகளில் தேவைக்கு ஏற்றாப்போல் கொடுத்து, அந்த நாட்டுப் பணமாக மாற்றிக் கொண்டு விடலாம்...

    அடடா, மறந்து விட்டேனே! நாட்டுக்கு நாடு நாணயம் வெவ்வேறாயிற்றே!

    பிரயாண சமயத்தில் அநேக விஷயங்களில் மறதி ஏற்படுவது சகஜந்தான். ஞாபகமாக இன்று கார்ப்பரேஷனில் போய் ஒரு குத்து வாங்கி வாருங்கள். ஆமாம், உமது 'ஹெல்த் ஸர்டிபிகேட்டில்’ தான் சொன்னேன்! முதுகில் இல்லை! என்று என்னை அதட்டி, என் முதுகில் குத்துகிற மாதிரியே பார்த்தார். அப்புறம் டிக்கெட் வாங்குவது பற்றி ஒரு தீர்மானம் செய்தோம்.

    ஆகாய விமானக் கம்பெனிகள் அநேகம் இருக்கின்றன. அவற்றில் என்னுடைய பிரயாணத்திற்கு பி. ஓ. ஏ. ஸி.யைத் தேர்ந்தெடுத்தார் நண்பர். டிக்கெட் ஏற்பாடு செய்வதற்குத் திறமையுள்ள ஏஜெண்டு ஒரு வரையும் தேடிப் பிடித்தார். பணத்தையும் பாஸ்போர்ட்டையும்

    அவரிடம் கொடுத்ததும், அவர் பல இடங்களுக்கு டெலிபோன் செய்து இரண்டு நாட்களில் கத்தையாக டிக்கெட்டுகளையும், அவைகளை வைத்துக் கொள்ள அழுத்தமான உறைகளையும், பிரயாண காலத்தில் கையுடன் எடுத்துச் செல்வதற்கென்று அழகிய 'ஸிப்’ வைத்துத் தைத்த ஒரு தோல் பையையும் கொடுத்து, பத்திரமாகப் போய் வாருங்கள் என்று இன்முகத்துடன் விடை கொடுத்தார். இரண்டாயிரம் ரூபாய் நாம் கொடுத்தது பெரிதாகத் தோன்றவில்லை; இந்த அழகிய தோல் பையை அவர் எடுத்துத் தாராளமாகக் கொடுத்ததே பெரிதாகத் தோன்றுகிறது!

    இந்தக் கம்பெனியின் மூலம் ஒரு 'வட்ட' டிக்கெட் எடுத்தோம் - சென்னையிலிருந்து கொழும்பு, கொழும்பிலிருந்து சிங்கப்பூர், சிங்கப்பூரிலிருந்து பாங்காக், பாங்காக்கிலிருந்து ரங்கூன், ரங்கூனிலிருந்து கல்கத்தா, கல்கத்தாவிலிருந்து சென்னை. சென்னையிலிருந்து புறப்படும் தேதி தவிர, இதர தேதிகள் எல்லாம் அவ்வப்போது உசிதம் போல் பூர்த்தி செய்து கொள்வதற்கு வசதியாகக் காலியாக விடப்பட்டிருந்தன. இந்தோனேஷியாவுக்கும், மலாய் பெடரேஷனுக்கும் செல்வதற்குச் சிங்கப்பூரிலிருந்து தனியாக ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.

    அனுபவஸ்தரான நண்பர் சொன்னார்; என்னைப் பார்த்து இப்படியெல்லாம் விழிக்க வேண்டாம். நீர் போகிற இடங்களில் பி.ஓ.ஏ.ஸி. சர்வீஸ் இல்லை என்றால் எப்படி என்றுதானே உமக்கு இப்போது சந்தேகம்? இந்த டிக்கெட்டை அவர்களிடம் கொடுத்தால், எந்த ஸர்வீஸ் இருக்கிறதோ அதற்கு மாற்றிக் கொடுப்பார்கள். அது அவர்களுடைய பொறுப்பு... அடுத்தபடி உம்முடைய செக்குகளுக்கு பாங்கியில் ஏற்பாடு நடந்தாக வேண்டும்!

    பாங்கியில் போனதும் முதலாவதாக பாஸ்போர்ட்டைக் காட்டும்படிச் சொன்னார்கள். ஐயா, பாஸ்போர்ட்டைக் கேட்காத இடம் ஒன்று இருக்குமானால் சொல்லுங்கள்! என்று கதறிவிட வேண்டுமென்று என் நெஞ்சம் துடித்தது. எனினும், பேசாமல் எடுத்துப் போட்டேன்.

    பாங்கிக்காரர் பல முறை என்னைப் பார்த்துப் புன்சிரிப்பு செய்தார். வெளியூர் போகிறீரா? என்று கேட்டார். Traveller's Cheques கொண்டு போவதற்குக்கூட ஓர் அளவு இருப்பதாக அவர் மூலம் அறிந்து கொண்டேன். என் பிரயாணத்திற்கு ஆயிரத்தைந்நூறு ரூபாய் வரையில் கொண்டு செல்லலாம், அதற்கு 112 பவுன் ஆகிறதென்று கணக்குப் போட்டு, நான்கு சிறு புஸ்தகங்களாக அவைகளை என்னிடம் கொடுத்தார். 10, 5, 2, 1 என்கிற வகைகளில் அவை இருந்தன. இந்த நோட்டுக்கள் ஒவ்வொன்றிலும் அவர் முன்னிலையிலேயே என்னைக் கையொப்பம் செய்யச் சொன்னார். பல கையெழுத்துக்களைப் போட்டு மிகவும் சோர்ந்து போன என்னிடம், "நீங்கள் எந்த பாங்கியில் இதை மாற்றினாலும், அந்த பாங்க் மானேஜர் தமது முன்னிலையில் இதேபோல் இன்னொரு கையெழுத்துப் போடச் சொல்லுவார். இரு கையெழுத்துக்களையும் சரி பார்த்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1