Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appavin Radio
Appavin Radio
Appavin Radio
Ebook205 pages2 hours

Appavin Radio

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுகதையை எப்படிச் சொல்லவேண்டும் என்ற கேள்விக்கு ‘கண்ணீர் வரச் சொல்லலாம், சிரிக்கச் சிரிக்கச் சொல்லலாம், கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர, படிப்பவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்' என்று சுஜாதா ‘சிறுகதை எப்படி எழுதுவது' என்ற குறிப்பில் எழுதியிருக்கிறார்.

ஒருமுறை, என்னுடன் ஸ்கூலில் படித்த நண்பன் ஒருவன், திருச்சி ரயிலில் டீ விற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்ததால் எழுதிய கதை ‘வின்னி'.

‘பிச்சை' என்ற கதை விகடனுக்குத் தேர்வானபோது பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஒருவர் ‘Selected' என்ற குறுஞ்செய்தி அனுப்பினார். ‘*' பட்டனை செல்போனில் யதேச்சையாக அழுத்த, அது ‘Rejected' என்று மாறியது. அதில் உள்ள விசித்திரத்தை வியந்து எழுதிய கதைதான் ‘ஆவி' கதை.

சிறுகதைகள் படிக்கும் வாசகர்கள் கடைசியில் அந்த எதிர்பாராத திருப்பத்தில் கிடைக்கும் கிக்கிற்காகவே படிக்கிறார்கள். சிறுகதையின் முடிவை எழுதி வைத்துக்கொண்டு எப்படிக் கதை எழுதலாம் என்ற சவால் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. நீங்களாகவே வாசகனாகவும், எழுத்தாளனாகவும் மாறி மாறி கதை எழுத வேண்டியிருக்கும்.

பல மாதங்களாக ஒரு முடிவை வைத்துக்கொண்டு எப்படி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது, சட் என்று கதை தோன்றும் அந்தக் கணம் சந்தோஷமாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதைகள் பல அந்த மாதிரி எழுதியவைதான்.

இதிலுள்ள சிறுகதைகள் விகடன், குமுதம், கல்கி, டைம்ஸ் இலக்கிய மலர், குங்குமம் மற்றும் சொல்வனம் இணைய இதழ் ஆகியவற்றில் வந்தவை. அவர்களுக்கு என் நன்றி.

- சுஜாதா தேசிகன்,

பெங்களூர்.

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580132505285
Appavin Radio

Related to Appavin Radio

Related ebooks

Reviews for Appavin Radio

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appavin Radio - Sujatha Desikan

    http://www.pustaka.co.in

    அப்பாவின் ரேடியோ

    Appavin Radio

    Author:

    சுஜாதா தேசிகன்

    Sujatha Desikan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sujatha-desikan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சுஜாதாவிற்கு

    பொருளடக்கம்

    1. வின்னி

    2. பூபி, பாபி

    3. கீச்... கீச்...

    4. அப்பாவின் ரேடியோ

    5. நானும் ஒரு டஜன் பெண்களும்!

    6. சாமி படம்

    7. தி கிரேட் எஸ்கேப்

    8. மூக்குப் பொடி

    9. உயிர் நண்பன்

    10. ராமானுஜலு

    11. பாச்சை உருண்டை

    12. பிச்சை

    13. பூவா தலையா

    14. லக்ஷ்மி கல்யாண வைபோகமே ராதா கல்யாண வைபோகமே

    15. பில்லா

    16. கல்யாணி

    17. தோசை

    18. ஆவி கதை

    19. பிப்ரவரி மழை

    20. அபார்ட்மென்ட் எண்: D505

    21. போராளி

    22. பெருங்காயம்

    23. துக்கடா

    முகவுரை

    சுஜாதா தேசிகனை முதன்முதலாகப் பார்த்தபோது அவரை ஒரு ஒவியக் கலைஞனாகத்தான் அறிந்தேன். 'சுஜாதா'வின் 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' என்ற கதைத் தொகுப்பிற்கு ஓவியங்கள் வரைய ஸ்ரீரங்கம் வந்தார். அந்தக் கதைகளுக்குத் தகுந்த ஸ்ரீரங்கத்துக் காட்சிகளை வரைந்து பலரின் பாராட்டுதலைப் பெற்றார். பிறகு தெரிந்தது, அவர் ஒரு மலரும் எழுத்தாளர் என்பது. அவருடைய சிறுகதைகள், கட்டுரைகள் பலவற்றை நான் படித்து மகிழ்ந்திருக்கிறேன். இணையதளத்தை தனது எழுத்தின் முக்கிய ஊடகமாக வரித்தவர், இப்போது தனது படைப்புகளைப் புத்தக வடிவில் தருகிறார். இது வரவேற்க வேண்டியது. இன்றும் தமிழ் இணையம் ஒரு சிறிய வட்டத்தின் உள்ளேயே உள்ளது. புத்தக வடிவின் மூலம் அவரது வாசகர் வட்டம் பெரியதாகும்.

    படிக்க வேண்டிய சிறுகதைகள் எல்லாவற்றையும் படித்தாகி விட்டது என்று தோன்றிய எனக்கு (வயது 72) அவருடைய சிறுகதைகள் புதுமையுடன் தோன்றின. சொல்லும் விதம், சொல்ல வந்த ஆதாரக் கருத்தின் உண்மை, சொற்களின் சிக்கனம், கதை முடிவில் அவர் ஏற்படுத்தும் 'திடீர்', எல்லாமே அவரை, மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டின. அவர் சிறுகதைகளைப் படித்தால் நமக்குத் தோன்றுவது, நமக்கும் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டு இருக்கிறது, நாமும் இவர் போலே அழகாக அதை சிறுகதையாக்கி இருக்கலாமே என்பது. ஒரு விதத்தில் நாம் எல்லோருமே ஒரே வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம். நம் எல்லோரையும் ஏதோ ஒன்று பிணைக்கிறது என்ற உண்மையை இந்தச் சிறுகதைகள் அறிவிக்கின்றன.

    சுஜாதா தேசிகன், 'கடைசி வரிகள் முன்னாலேயே வந்துவிடும், அதைத் தொடர்ந்து சிறுகதையை உருவாக்குவேன்' என்றார். ஒரு முறை அவரே இதை ஒரு கட்டுரையில் சொல்லி இருக்கிறார். படைப்பில் இது புதுமையானது. 'கூடை நிறைந்த சாத்துக்குடி' பழத்தில் இருந்து 'பில்லா' என்ற கதை உருவானது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.

    இந்தக் கதையில் நாய், தான் கடித்ததற்கு 'Sorry' என்று இறந்த பின் ஏதோ ஒருவிதத்தில் பிராயச்சித்தம் தேடிக் கொள்கிறது. மரணம் முடிவல்ல என்ற நம்பிக்கை நமது முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று. 'கல்யாணி', 'கலர்க் கனவுகள்', 'துப்பாக்கி நண்பர்கள்', 'எலக்ட்ரானிக்ஸ் கனவுகள்', 'வின்னி' எல்லாமே பழைய நினைவுகள் பற்றியவை. நம் எல்லோருக்குமே இந்த நிலை இருக்கிறது. நமது, சில இன்றைய அசட்டுத்தனங்களுக்குக் காரணமாக உள்ளது இந்த மயக்கம். தேசிகன் இந்த மயக்கத்தை உண்மையாக எழுதி இருக்கிறார்.

    இந்தத் தொகுப்பு சமீபத்தில் நான் படித்து அனுபவித்த புத்தகம். சுஜாதா தேசிகன் இன்றைய தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர்.

    'சுஜாதா'வைப் பிடித்தவர்களுக்கு சுஜாதா தேசிகனையும் பிடிக்கும் என்பது நிச்சயம்.

    எஸ்.ராஜகோபாலன்,

    ஸ்ரீரங்கம்,

    ஆகஸ்ட் 2012.

    முன்னுரை

    சிறுகதையை எப்படிச் சொல்லவேண்டும் என்ற கேள்விக்கு 'கண்ணீர் வரச் சொல்லலாம், சிரிக்கச் சிரிக்கச் சொல்லலாம், கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர, படிப்பவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்' என்று சுஜாதா 'சிறுகதை எப்படி எழுதுவது' என்ற குறிப்பில் எழுதியிருக்கிறார்.

    ஒருமுறை, என்னுடன் ஸ்கூலில் படித்த நண்பன் ஒருவன், திருச்சி ரயிலில் டீ விற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்ததால் எழுதிய கதை 'வின்னி'.

    'பிச்சை' என்ற கதை விகடனுக்குத் தேர்வானபோது பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஒருவர் 'Selected' என்ற குறுஞ்செய்தி அனுப்பினார். '*' பட்டனை செல்போனில் யதேச்சையாக அழுத்த, அது 'Rejected' என்று மாறியது. அதில் உள்ள விசித்திரத்தை வியந்து எழுதிய கதைதான் 'ஆவி' கதை.

    சிறுகதைகள் படிக்கும் வாசகர்கள் கடைசியில் அந்த எதிர்பாராத திருப்பத்தில் கிடைக்கும் கிக்கிற்காகவே படிக்கிறார்கள். சிறுகதையின் முடிவை எழுதி வைத்துக்கொண்டு எப்படிக் கதை எழுதலாம் என்ற சவால் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. நீங்களாகவே வாசகனாகவும், எழுத்தாளனாகவும் மாறி மாறி கதை எழுத வேண்டியிருக்கும்.

    பல மாதங்களாக ஒரு முடிவை வைத்துக்கொண்டு எப்படி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது, சட் என்று கதை தோன்றும் அந்தக் கணம் சந்தோஷமாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதைகள் பல அந்த மாதிரி எழுதியவைதான்.

    இதிலுள்ள சிறுகதைகள் விகடன், குமுதம், கல்கி, டைம்ஸ் இலக்கிய மலர், குங்குமம் மற்றும் சொல்வனம் இணைய இதழ் ஆகியவற்றில் வந்தவை. அவர்களுக்கு என் நன்றி.

    - சுஜாதா தேசிகன்,

    பெங்களூர்.

    1

    வின்னி

    நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். ஸ்கூலில் எங்களுக்கு Physical Training என்று ஒரு வகுப்பு இருக்கும். வெயிலில் நிற்க வைப்பார்கள். எதாவது எக்ஸர்சைஸ் செய்யச் சொல்வார்கள். எங்களுக்கு அது அவ்வளவாகப் பிடிக்காது. லன்ச் பிரேக்கில் விளையாடுவதுதான் பிடிக்கும். சீக்கிரம் சாப்பிட்டால் ஓர் அரை மணி நேரம் கிடைக்கும். சீசனுக்குத் தகுந்தார் போல் விளையாடுவோம். டிவியில் கிரிக்கெட் காண்பித்தால், நாங்களும் கிரிக்கெட்; புட்பால் என்றால் புட்பால். மழைக்காலம் வந்துவிட்டால் மட்டும் பம்பரம் ஆட ஆரம்பித்து விடுவோம். கூட்டம் கூட்டமாக எங்கு பார்த்தாலும் பம்பரம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். நான் சாப்பிட்டுவிட்டு பம்பரம் விளையாட்டைப் பார்க்கப் போய் விடுவேன்.

    இன்றும் எப்போதும் போல் லன்ச் முடித்துவிட்டு வின்னியின் விளையாட்டைப் பார்க்கப் போனேன்.

    வட்டதிற்குள் சுரேஷின் பம்பரம் இருந்தது. வின்னி குறிபார்த்து அடிக்கத் தயாரானான்; பம்பர ஆணிக்கு முத்தம் கொடுத்து தான்; அடித்தான். சுரேஷின் பம்பரம் ஒரு மொழுக்கு வாங்கி ஒரு சில் பறந்தது.

    வட்டத்துக்குள் இருக்கும் பம்பரத்தை சொல்லி வைத்து மொழுக்கு குத்துவதில் வின்னி கில்லாடி. சிலசமயம் 'மொழுக்கு' கொஞ்சம் பலமாக விழுந்து பம்பரத்திலிருந்து சில்லு தெறிக்கும். இது ஒருவிதமான அவமானச் சின்னம். வின்னியின் பம்பரத்தின் ஆணி பல பம்பரங்களை மொழுக்குப் போட்டு, சொறி நாய் மாதிரி ஆக்கியிருக்கிறது.

    வின்னி அப்போது என்னைப் பார்த்தான். 'என்ன தயிர்வட' என்று என்னருகில் வந்து என் தலையில் ஒரு தட்டு தட்டினான்.

    மேலே சொன்ன வின்னியின் முழுப் பெயர் வின்சென்ட். நாங்கள் அவனை 'வின்னி' என்றுதான் கூப்பிடுவோம். பள்ளியில் எல்லோருக்கும் இப்படி ஒரு நிக்நேம் இருக்கும். ஸ்கூலில் என் பெயர், 'தயிர்வடை'. இந்தப் பெயரை வின்னிதான் வைத்தான். வின்னிக்கு வேறு ஒரு பெயரும் இருக்கிறது. அதைச் சொல்லிக் கூப்பிட்டால் அவனுக்குக் கோபம் வரும். இப்போதுகூட அதைச் சொல்ல எனக்குப் பயமாக இருக்கிறது. எங்கள் வகுப்பில் வின்னிதான் ரொம்ப சீனியர். அவனுக்கு லேசாக மீசை இருந்தது. எங்களுடன் எட்டாவதை இரண்டாம் முறையாகவோ, மூன்றாம் முறையாகவோ படித்துக் கொண்டிருந்தான். பிளஸ்டூ மாணவர்கள் அவனுக்கு நண்பர்கள். ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களில் எப்படியாவது பத்துக்குள் ஒரு நம்பரை மார்க்காக வாங்கி விடுவான். நன்றாகப் பாடுவான். அவனுக்குப் பிடித்த பாடல்,

    'ஆத்தாடி பாவாட காத்தாட...' இதை ஒரு முறை பாரதியார் பாட்டுப் போட்டியில் வின்னி பாட ஏக கலாட்டா. அதை பிறகு சொல்கிறேன். அவனின் பம்பர விளையாட்டைப் பார்ப்பதற்கென்றே ஒரு தனி கூட்டம் இருக்கும்.

    'என்ன தயிர், இந்த பக்கம்'

    'சும்மா வேடிக்கை பார்க்க வந்தேன்'

    'எப்பவும் வேடிக்கை மட்டும் பாக்குற, வந்து வெளையாடுறது'

    'என் கிட்ட பம்பரம் இல்லை'

    'அதெல்லாம் தெரியாது, நாளைக்கு பம்பரத்தோட வர; இல்ல உனக்கு அந்த இடத்தில... ஒரு மொழுக்குதான்'

    வின்னிக்கு என்னைக் கண்டால் பிடிக்காது. வகுப்பு நடக்கும் போது 'தயிர்வட' என்று சத்தமாகக் கூப்பிடுவான், எல்லோரும் சிரிப்பார்கள். என் ஜாமெட்ரி பாக்ஸ், பேனா அல்லது புத்தகங்களை ஒளித்துவைப்பான். தொடையில் காம்பஸால் குத்துவான். காரணம் இல்லாமல் தலையில் தட்டுவான். வின்னியிடம் அதிகம் பேசமாட்டேன். எது சொன்னாலும் கேட்டுக் கொள்வேன், அல்லது சிரித்து மழுப்புவேன்.

    பள்ளி விட்டவுடன் வின்னி என்னிடம் திரும்பவும் வந்து நினைவுப்படுத்தினான்.

    'நாளைக்கு பம்பரத்தோட வர... இல்ல...' எனக்கு அடிவயிற்றில் என்னவோ பண்ணியது.

    வீட்டுக்குச் சென்று, 'அம்மா பம்பரம் வாங்க பைசா...'

    'என்னடா புது விளையாட்டு, எக்ஸாம் எப்போ?'

    'எல்லாம் படிச்சுட்டேன், பம்பரம் வாங்கணும்'

    'பருப்பு டப்பா கீழ சில்லரை இருக்கு, எடுத்துண்டு போ'

    பருப்பு டப்பாவின் கீழே மூன்று ரூபாய் இருந்தது. கொஞ்சம் கம்மிதான். சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒத்தக்கடைக்குப் போனேன்.

    ஒத்தக்கடை என்ற பேர் எதனால் வந்தது என்று எனக்குத் தெரியாது. இங்கிலிஷ் வேர்ஹவுஸ் பக்கத்தில் இருக்கிறது. என் அப்பா காலத்திலிருந்து இருக்கும் கடை. அதில் எங்களுக்கு வேண்டியவை எல்லாம் கிடைக்கும். அன்ரூல்டு புத்தகம், பேனா, கலர் பேப்பர், வாட்டர் கலர், கோலி, பம்பரம், இன்னும் நிறைய. கடையில் எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

    'பம்பரம் இருக்கா?'

    'நீட்ட கட்டையா, சட்டி கட்டையா?'

    'சட்டி கட்டை'

    'சாட்டை ரெட்டா, பிளாக்கா'

    'பிளாக்'

    'நீட்ட கட்டை' என்பது பம்பரத்தில் ஒரு வகை; பெயருக்கு ஏற்றார் போல் நீளமாக இருக்கும். விலை அதிகம். சத்தம் போடாமல் அழகாக நிறைய நேரம் சுத்தும். 'சட்டி கட்டை' கொஞ்சம் 'கட்ட குட்டையா' இருக்கும். கவனமாக ஆணி அடிக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கும். அவ்வளவு சின்னது.

    என்னிடம் இருக்கும் மூன்று ரூபாய்க்கு அதுதான் வாங்க முடியும். வாங்கினேன். பச்சை நிறத்தில் பளபள என்று இருந்தது. ஆணி அடித்தேன். கூறாகச் சீவிக்கொண்டேன். ஒரு சோடா பாட்டில் மூடியை குஞ்சலம் போல் சாட்டையின் கடைசியில் மாட்டிக் கொண்டேன், கிரிப்புக்கு. சாயங்காலம் முழுக்க பம்பரம் விட்டுப் பழகிக்கொண்டேன். என் பெயர் 'தயிர்வடை'யிலிருந்து 'மொழுக்கு தேசிகன்' என்று மாறுவதாக ராத்திரி கனவு கண்டேன்.

    மறுநாள் ஸ்கூல் போனவுடன் வின்னி என்னைத் தேடிக்கொண்டு வந்தான். மறந்திருப்பான் என்று நினைத்தேன்.

    'தயிர்வட, பம்பரம் எங்க?'

    பாக்கெட்டிலிருந்து என் பம்பரத்தை எடுத்தேன்.

    'அட, சொன்னா சொன்ன மாதிரி வாங்கியாந்துட்டே, குடு பாக்கலாம்'

    கொடுத்தேன்.

    'சட்டி கட்டை, லன்ச்சில பாத்துறலாம்'

    எனக்கு அன்று பாடத்தின் மேல் நாட்டம் இல்லை. லன்ச் பிரேக்குக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். லன்ச் பிரேக் அன்று ரொம்ப நேரம் கழித்து வந்ததாகத் தோன்றிற்று. சாப்பாட்டை சீக்கிரம் முடித்துவிட்டு பம்பரம் விளையாடச்(!) சென்றேன்.

    வின்னி என்னைப் பார்த்துச் சிரித்தான். 'என்ன தயிர்வட ரெடியா?'

    தலையாட்டினேன்.

    'ஒன், டூ, த்திரி' என்று கோரஸ்ஸாக எல்லோரும் கத்தி அபீட் எடுத்தார்கள்.

    நானும் எடுத்தேன்.

    பம்பரம் விளையாட்டு ரூல்ஸ் தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒன்றே. பம்பரம் விளையாட்டுக்கு எவ்வளவு பேர் வேண்டுமானலும் இருக்கலாம். விளையாட்டு ரொம்ப சிம்பிள். 1-2-3 என்று கூறியவுடன் எல்லோரும்

    Enjoying the preview?
    Page 1 of 1