Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deepalakshmi
Deepalakshmi
Deepalakshmi
Ebook145 pages54 minutes

Deepalakshmi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேனம்மைலெக்ஷ்மணன் கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர், சுதந்திரப் பத்ரிக்கையாளர். சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு ஆகிய ஐந்து நூல்களின் ஆசிரியர். நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கத்தில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

குங்குமம், குங்குமம் தோழி, குமுதம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் ஹெல்த் ப்ளஸ், ஆனந்தவிகடன், அவள் விகடன், கல்கி, இந்தியா டுடே, தேவதை, மல்லிகை மகள், மெல்லினம், லேடீஸ் ஸ்பெஷல், பாக்யா, பூவரசி, சமுதாய நண்பன், நம் தோழி, சூரியக்கதிர், இவள் புதியவள், தினமலர், தினமணி, தினமணிக் கதிர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம், பரிவு, குறுஞ்செய்தி, தினகரன் வசந்தம், புதிய தலைமுறை, யுகமாயினி, இன் & அவுட் சென்னை, சென்னை அவென்யூ, கொளத்தூர் டைம்ஸ், ஆச்சி வந்தாச்சு, புதிய பயணி, ஹாலிடே நியூஸ், நமது மண்வாசம், கோகுலம், ஷெனாய் நகர் டைம்ஸ், தமிழ்த்தேர், மங்கையர்மலர், ஐபிசிஎன், மகளிர் தரிசனம், தென்றல் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி வருகின்றன.

இளமை விகடன், திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், அதீதம், முத்துக் கமலம், கழுகு, வலைச்சரம், ஊடகம், சுவடு, பூவரசி, தகிதா, புதிய “ழ” , அவள் பக்கம், தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல் ஆகிய இணையங்களில் எழுதி வருகின்றார் .

நம் உரத்த சிந்தனை, தீக்கதிர், லேடீஸ் ஸ்பெஷல், தினமலர், தினமணி, இந்தியா டுடே, தி தமிழ் இந்து, புதிய தரிசனம், தென்றல், புன்னகை உலகம், மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றில் இவர் பற்றியும் இவரது நூல் பற்றியும் வெளியாகி உள்ளன.. சாஸ்த்ரி பவன், போர்ட் ட்ரஸ்ட், பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். கலைஞர் தொலைக்காட்சி, விஜய் டிவி , சன் நியூஸ் தொலைக்காட்சி, புதிய யுகம், வானவில், பொதிகை, வானொலி ஆகியவற்றில் இவரது கருத்து & பேட்டி வெளியாகி உள்ளது.

இவருடைய கவிதைகள் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சகி என்ற கன்னடப் பத்ரிக்கையில் இவரது கவிதையின் மொழிபெயர்ப்பு வெளியாகி உள்ளது. அன்ன பட்சி நூலுக்காக ”அரிமாசக்தி” விருது பெற்றவர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் கவிதைப் போட்டியில் இருமுறை பரிசு பெற்றவர். வலைப்பூ எழுத்துக்களுக்காக 25 விருதுகளும், சமூக இணையப் பங்களிப்புக்காக சிறப்பு விருதும், மதர் தெரசா அவார்டு, விமன் எம்பவர்மெண்ட் அவார்டு, கம்யூனிட்டி சர்வீஸ் அவார்டு பெற்றவர். லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கையின் “ஸ்பெஷல் லேடி” விருது பெற்றவர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580120802336
Deepalakshmi

Read more from Thenammai Lakshmanan

Related to Deepalakshmi

Related ebooks

Reviews for Deepalakshmi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deepalakshmi - Thenammai Lakshmanan

    http://www.pustaka.co.in

    தீபலெக்ஷ்மி

    Deepalakshmi

    Author:

    தேனம்மை லெக்ஷ்மணன்

    Thenammai Lakshmanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/thenammai-lakshmanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. திருநிலை

    2. பத்ம யக்ஞம்

    3. துணை

    4. அகல்யா

    5. முகம்.......

    6. நான் சிவகாமி.....!!!

    7. இரண்டு கோப்பைக் காஃபி

    8. குழந்தைமை...

    9. நிழல்களை எரித்த நிஜங்கள்:-

    10. காதல் அலைகளும் கடலும்

    11. என் பெயர் அருணா.

    12. விரல்கள்

    13. பூவாய் நீ...

    14. பெல்லட் (குறுநாவல்)

    அத்தியாயம்: 1 சிபிஐ கோர்ட்

    அத்தியாயம்: 2 சிங்காநல்லூர் தோட்டம்

    அத்தியாயம்: 3 ஜம்மு & காஷ்மீர்

    அத்தியாயம்: 4 சிறைச்சாலை

    அத்தியாயம்: 5 சோகவனம்

    அத்தியாயம்: 6 பெல்லட்

    அத்தியாயம்: 7 கண்கள்

    அத்தியாயம்: 8 அதிகாரி சார்

    15. தீபலெக்ஷ்மி…

    ***

    தீபலெக்ஷ்மி

    1. திருநிலை

    டிங் டிடிங் டிங் டிடிங் என்று தொடர்ந்து ஒலித்த காலிங்பெல் திருநெலை ஆச்சியின் நெஞ்சத்துடிப்பை அதிகமாக்கியது. பூக்காரம்மா, பேப்பர்காரன், பால்காரப்பையன், தண்ணி கேன் கடைக்காரர், கூரியர் போஸ்ட், வேலை செய்யும் முத்தி யாராக இருந்தாலும் ஏன் இப்பிடி மண்டையிலடிப்பதுபோல காலிங்க்பெல்லை அடிக்கிறார்கள் என்று அவுகளுக்கு நெஞ்சப்பாரடித்தது. டிடிங் டிடிங் என்று பூட்டைத் திறக்கும்போதெல்லாம் மணியடித்தது போல் சத்தமிடும் பெரியவீட்டின் பட்டாலை முகப்புக்கதவு அவர்களின் கண்ணுக்குள் வந்து போனது.

    எழுபத்தியைந்து வயதைச் சுமந்த உடம்பை அசைத்துச் சென்று கதவைத் திறந்தால் பேரமிண்டியும் பேரனும் நின்றிருந்தார்கள். வாசப்படி நிலையில் நிக்கமுடியாமல் யார் இப்பிடிக் காலிங்பெல்லை உடைக்கிறது என்று கோபமாகக் கேட்க நினைத்தவர் மௌனமாகத் திரும்பி வந்து தன்னுடைய திண்டில் அமர்ந்தார். அப்பத்தா வீட்டு ஐயாவின் பெயரிட்டுக் கொண்ட அவுக பிரியத்துக்குரிய பேரன் ஐயப்பனைக் கோச்சுக்க முடியுமா. புள்ளகூட்டியே வந்த வீட்டில் மொதமொதலாப் பொறந்த பேரன். அவனுக்காகத்தானே எல்லாம். கேட்ட விளையாட்டுச் சாமானை எல்லாம் வாங்கிக் கொடுத்தமாதிரி இப்ப கேட்ட பூர்வீக வீட்டையும் உடைக்கக் கொடுத்திருக்கிறாக.

    ஆயிரத்துச் சொச்சம் சதுர அடி ப்ளாட்டில் பேரனுடனும் பேரன் மனைவியுடனும் வசிப்பதில் அவருக்கு கஷ்டம் ஏதுமில்லை. எல்லாம் பக்கம் பக்கம்தான் உண்ணுவதும் உடுப்பதும் உபாதைகளைக் கழிப்பதும்கூட. பெரிய வீட்டில் சிகப்பி அக்கா இருந்தவரை அவுகளுக்கு எந்தக் குறையுமில்லை. தினம் தினம் சந்தைக்குச் சென்று காய்கனி வாங்கினால் தூக்கி வருவதிலிருந்து கசாப்புக்கடைக்குச் சென்று எலும்பும் கறியுமாக வாங்கிவந்து அம்மியில் மசாலை அரைத்து மஞ்சட்டியில் குழம்பு வைத்துக் கொடுப்பது வரை சிகப்பி இல்லாத அனுவலே இல்லை. நாலுவருஷத்துக்கு முன்னே தீட்டுன்னு நினைச்சு ரத்தப் புற்றைப் பார்க்காமல் விட்டு அவள் போய்ச் சேர்ந்ததில் இருந்து திருநெலை ஆச்சிக்கு கையொடிஞ்சது போலத்தான் இருக்கு.

    எல்லார் விருப்பத்துக்கும் எல்லார் சொல்லுக்கும் வளைஞ்சு கொடுக்க வேண்டிய நிலை. தன் நிலையை நினைத்ததும் பெரிய வீட்டின் ஞாபகம் வந்தது ஆச்சிக்கு. பக்கத்திலிருக்கும் இரட்டை வளவு கொண்ட வீடுதான் அவுக வாக்கப்பட்டு வந்த வீடு. நான்காவது மாடியின் ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்தார். உச்சியில் இருக்கும் இடிதாங்கும் கலசங்கள் மழையில் பூசரம் பூத்து மரப் ப்ளாச்சுகள் எல்லாம் பெயர்ந்து தேக்குகளும் கூட ஸ்லாகைகளாகப் பிரிந்து சாயம் இழந்து கொண்டிருந்தன. இரண்டாம் கட்டும் மூன்றாம் கட்டும் ஓரளவு கட்டுக்குலையாமல்தான் இருந்தன. இருநூறு வருஷம் இருக்குமா அந்த வீட்டுக்கு. பாட்டையா ரெங்கோனுக்குக் கொண்டுவிக்கப் போய் பெருக்கி வந்து கட்டிய வீடு.

    தான் பிறந்த வீடு. ஆயா வீடு. மூத்த பேத்தியாக ஒரே பேத்தியாகப் பிறந்ததும் ஐயா ஓவியமாய்த் தங்கம் உரசி நாவிலிட்டுப் பெயரிட்டு அழைத்த வீடு. ஆயா வீட்டுக்கு ஆம்பிளைப்பிள்ளை இல்லை என்று ஆயாவீட்டு கூடிக்கிற பங்காளிகளில் செகப்பா அழகா இருந்த ஐயப்பனைப் புள்ளி போட்டு பிடித்துப் பிள்ளை எழுதிக்கொண்டு ஐயா பேத்திக்கே கட்டி வைத்த வீடு.

    எவ்வளவு பெரிய நிலை வாசல். வெளியிலேயே விக்டோரியா மஹாராணியும் சாமரப் பெண்களும், சிங்கங்களும் புடை சூழ சிப்பாய்கள் நின்று வரவேற்கும் வெளி வாசல் நிலை. மல்லிகைப் பந்தல் வளைத்த ஆர்ச்சின் கீழே பத்து கல்படி ஏறிவந்தால் உள்ளே முகப்பு நிலை வாசல். அதன் பின் பட்டாலைக்குச் செல்லும் நிலை வாசல். பிரம்மாண்ட யானையின் கால்களைப் போல நிற்கும் இருபக்கக் கதவுகளை ஒட்டிய மர வேலைப்பாடு. ஒரு அலமாரியைக் குறுக்கே வைத்தது போலிருக்கும் அதன் கீழ்ப்பக்கமெங்கும் கரவு செறிவான வேலைப்பாடுகளுடன் சூரியகாந்திப் பூக்கள், சாமந்திப் பூக்கள், நாகங்கள். குழலூதும் கிருஷ்ணர், பெரிய திருவடி, ஆலிலைக் கிருஷ்ணர் என பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்ட மரப்பட்டயங்கள்.

    நாகங்களின் மேல் வரிவரியாய் வடிவழகாய்ச் செதுக்கப்பட்டிருக்கும் மடிப்புகளின் முடிவின் சூரியப் பலகை. துவாரபாலகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், நாரதர், கவரி வீசும் பெண், திருமால், மீனாக்ஷி சுந்தரேசுவரர், கவரிப் பெண், பிரம்மன், விநாயகர் பூதகணங்கள், என பிரம்மாண்டமான தேக்கங்கதவை இன்னொரு முறை கீழே போய்ப் பார்க்கவேண்டும் போலிருந்தது அவருக்கு.

    ஆங்கிலேய மாதுக்களும், தென்னிந்திய தெய்வங்களும், ராசலீலையும், மஹாலெக்ஷ்மியும், தஞ்சாவூர் பெயிண்டிங்கிலும், ரவிவர்மா ஓவியங்களாகவும் நிறைந்திருந்த வீடு. பெல்ஜியம் கண்ணாடிகளும் ஆத்தங்குடி சலவைக் கற்களுமாய்ப் பளபளத்த வீடு. தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும் ஓவியங்களில் மட்டுமல்ல மூன்று கட்டு முழுக்கக் கோலோச்சிய வீடு. திண்டும், கைப்பொட்டியும் சடப்பிரம்பாயும் விரித்த, மான் கொம்பும், மாட்டுத் தலையும், பாடம் செய்து மாட்டிய பட்டாலை. மாடமாளிகை கூடகோபுரம் போல உப்பரிகை கொண்ட வீடு. செவலைப் பசுவும் செவர்லெட்டும் காரும் கூட ஐயா வைத்திருந்த வீடு. இன்று செம்புராங்கற்கள் மட்டுமே மிஞ்சிய வீடு. அதையும் பேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    பள்ளிக்கூட விடுமுறை தினங்களில் ஆடிய ஆட்டங்களும் பாடிய பாட்டுக்களும் கொஞ்சம் நஞ்சமில்லை.மாலை நேரத்தில் ஆத்தாவைத் தேடி அழுதது பார்த்துஊட்டி வளக்காத ஆத்தா மேலேயே இம்புட்டுப் பாசம்னா ஊட்டி வளத்திருந்தா ஆத்தாடி தாங்காது என்று தன் மோவாயில் கைதட்டி வைத்துக்கொள்வாள் முத்தாத்தா அக்கா. இரவு விழிப்பு வந்தால்தான் இன்னும் பயம். அந்தத் தேக்கந்தூண்களில் கவிழ்ந்து கிடக்கும் கல்தாமரைகளின் நுனிகளும் சரி, பட்டியக்கல்லில் வரிசையாக நிற்கும் கல்தூணின் நாற்புறமும் எட்டிப் பார்க்கும் நாகங்களும் சரி பயத்தைக் கிளறத் தவறியதே இல்லை. பயத்தில் ஒருமுறை ஓடிவந்து விழுந்து பட்டியகல்லில் முன்பல்லைக் கூட உடைத்துக் கொண்டிருக்கிறாள் தூக்கத்தில். பூரணை புஷ்கலை ஐயனாரப்பா, முனியையா, காட்டுக் கருப்பா, சோனையா காப்பாத்து என்று வேண்டிக்கொண்டபடியே வந்து கண்ணயர்வாள் குட்டித் திருநிலை.

    விசாரிக்காமப் பண்ணிட்டோம் என்று திருமணமாகி இரண்டு வருடத்துக்குள்ளேயே எலும்புருக்கி நோயால் சிவபதவியடைந்த ஐயப்பனை நினைத்து நினைத்து வருந்திய ஐயாவும் ஆயாவும் அடுத்தடுத்துப் போய்ச் சேர்ந்தார்கள். கல்நாகங்கள் பிரம்மாண்டமாகிக் கனவில் வந்து பயமுறுத்தும்போதெல்லாம் நிலையில் இருக்கும் கிருஷ்ணனைப் பற்றி முறையிட்டுக் கண்ணீர் சிந்துவாள் கையறு நிலையில் வெள்ளைச் சீலையில் திருநிலை. நிலையாய் இருக்கும் நிலையில் வரைமுறையற்று இன்பத்திலாடிக்கொண்டிருக்கிறான் கிருஷ்ணன். அவனைப் பற்றிப் பரவிக் கரைந்து அழுது என்ன பயன். ஆம்பிள்ளையான் என்ற உருவத்தைப் சந்தனமாலையிட்ட படமாகப் பார்த்து வணங்கியே பழக்கப்பட்டுவிட்டாள் அவள். சீதனப் பணத்தை பங்காளி வீட்டுச் சோனாவிடம் கொடுத்து அடைத்து அந்த வட்டிப் பணத்தில்தான் மகனையும் வளர்த்து ஆளாக்கி இருந்தார்கள் திருநெலை ஆச்சி.

    சிந்தனையில் இருந்தபோது மகர்நோன்புப் பொட்டலில் திருநெலையம்மன் அம்பு போட வரும்முன் போட்ட அதிர்வேட்டுச் சத்தம் ஆச்சிக்கு எதை எதையோ ஞாபகப் படுத்தியது.

    Enjoying the preview?
    Page 1 of 1