Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolai Kudil
Kolai Kudil
Kolai Kudil
Ebook115 pages44 minutes

Kolai Kudil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மதுரையில் புதிதாக வேலைக்குச் சேரும் அதர்வா, தன்னுடைய குடும்பத்திற்காக வீடு தேடி அலைகிறான். கொலைக் குடில் என்று அழைக்கப்படும் வீடு அவனுக்கு மனதிற்கும் பிடிக்கிறது. வீட்டை விலைக்கு வாங்கும் முயற்சியில் இறங்குகிறான். வினோதமான அனுபவங்கள் அவனுக்கு ஏற்படுகின்றன. கொலைக் குடில் என்ற பெயர் எப்படி வந்தது, அந்த வீட்டிற்கும், அதர்வாவின் உயிர் நண்பன் வெங்கட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்து கொள்ளப் படித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580144607235
Kolai Kudil

Read more from Puvana Chandrashekaran

Related to Kolai Kudil

Related ebooks

Related categories

Reviews for Kolai Kudil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolai Kudil - Puvana Chandrashekaran

    https://www.pustaka.co.in

    கொலைக் குடில்

    Kolai Kudil

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 1

    அதர்வா, தனது பையைத் தூக்கிக் கொண்டு கல்லூரியில் இருந்து கிளம்பினான். மதுரை அருகில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் அதர்வா விரிவுரையாளர்.

    கோயம்புத்தூரில் பார்த்துக் கொண்டிருந்த அலுவலக வேலையை உதறித் தள்ளி விட்டு ஆசிரியர் வேலை தான் தனக்கு மனதிற்குப் பிடித்திருக்கிறது என்று இந்த வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

    ஹோட்டல் ரூமில் தங்கிக் கொண்டு ஸீரியஸாக வீடு பார்த்துக் கொண்டிருக்கிறான். மனைவி மஹின்யாவும் ஒரு வயதுக் குழந்தை அமய்யும், அதர்வாவின் பெற்றோருடன் கோயம்புத்தூரில் தற்சமயம் இருக்கிறார்கள்.

    வீடு கிடைத்ததும் போய்க் கூட்டி வர வேண்டும். புரோக்கரிடம் சொல்லித் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

    திருப்பரங்குன்றம் போகும் வழியில் அதற்கு அருகில் இவனுடைய காலேஜ் இருப்பதால், திருநகர் பக்கம் வீடு பார்த்துக் கொண்டிருக்கிறான்.

    கொஞ்சம் பெரிய வீடாக அவனது பெற்றோரோ இல்லை மஹின்யாவின் பெற்றோரோ வந்து தங்கினால் தங்க சௌகர்யமாக இருக்க வேண்டும் என்று பார்த்தான்.

    விலைக்குக் கிடைத்தால் வாங்கி விடுவான். இல்லை என்றால் வாடகைக்கு எடுக்க வேண்டும். கையில் கணிசமாக சேமிப்பு இருக்கிறது. அப்பாவும் கொஞ்சம் உதவி

    செய்வார். கடனோ, உடனோ வாங்கி வீடு விலைக்கு வாங்கிவிடும் திட்டம் தான் ஐயாவுக்கு.

    வெள்ளிக் கிழமை மாலை நேரம். சனி ஞாயிறு இரண்டு நாட்களும் முழுமூச்சாக வீடு வேட்டை தான்.

    ரூமில் காஃபி வரவழைத்துக் குடித்து விட்டு டி.வி.ஆன் செய்தான். திகில் கதைகள், திகில் படங்கள் பார்க்க அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

    திகில் என்றால் பேய் பிசாசு ஆவி அதெல்லாம் இல்லை. அதெல்லாம் அவனுக்குக் கொஞ்சம் காமெடியாகத் தெரியும். பார்க்கும் போதே சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கி விடுவான்.

    திகில் என்றால் பார்க்கும் போதே சிலீரென்று அடிவயிற்றில் இருந்து பயம் கிளம்பித் தொண்டையை அடைக்க வேண்டும். அந்த மாதிரி திகில் படங்கள் மிகவும் பிடிக்கும்.

    ஹிந்தியில் ஒரு குறும்படம் பார்த்தது ஞாபகம் வந்தது. அஹில்யா என்று பெயர். நம்ப ராதிகா ஆப்தேயும் ஒரு பழம் பெரும் வங்காள நடிகரும் நடித்தது.

    ஒரு போலீஸ் ஆஃபிஸர் ஒரு விசாரணைக்காக ஒரு புகழ் வாய்ந்த செஸ் நிபுணர் வீட்டுக்குப் போவார். வயதானவர். இளம் மனைவி. அழகும் கவர்ச்சியும் போட்டி போட்டுக் கொண்டு பளிச்சென்று தெரியும் இளம் பெண். பொருந்தாத திருமணம்.

    கடைசியாக அவர் வீட்டுக்குப் போய் வந்த சிலர் மாயமாக மறைகிறார்கள். அது சம்பந்தமாக அவரை விசாரிக்கப் போகிறார். அவர்கள் மேல் சந்தேகம் என்று காட்டிக் கொள்ளாமல் ரொம்ப கேஷுவலாகப் பேசுகிறார்கள்.

    அந்த இளம் மனைவி கொஞ்சம் அளவுக்கு அதிகமாக ஃப்ரண்ட்லியாக போலீஸ் ஆஃபிஸருடன் பழக வயதான அந்தக் கணவர் கண்டு கொள்ளவில்லை.

    தன்னுடன் செஸ் விளையாட வைக்கிறார் அந்த செஸ் விளையாட்டு வீரர். அவர் கண்களை மூடி ஓய்வெடுக்கையில் அந்த இளம் மனைவி போலீஸ் ஆஃபிஸர் கைகளை உரிமையுடன் பிடித்துக் கொண்டு தனது அறைக்கு அழைத்துச் செல்கிறார்.

    அவர் ஒவ்வொரு அறையாகக் கண்காணித்துக் கொண்டே போகும் போது எங்கிருந்தோ டக் டக்கென்று ஒரு சத்தம்.

    யாரோ எங்கோ அடைபட்டுத் தவித்துக் கொண்டு கதவை இடிப்பது போல்.

    அந்த இளம் மனைவியின் அறைக்குச் செல்கிறான். கண்ணாடியில் தன்னைப் பார்த்துத் திகைக்கிறார் அந்த ஆஃபிஸர். தனது உருவம் அந்த வயதான கணவர் போலத் தோன்றுவதைப் பார்த்துத் திகைக்கிறார். அந்தப் பெண் தன் இரு கைகளை விரித்து அவரைப் படுக்கைக்கு அழைக்கிறாள் . தனது கணவன் என்றே எண்ணிக் கூப்பிடுவது போல் அவளது வார்த்தைதள் இருக்கின்றன.

    குழம்பிய ஆஃபிஸர் தனது முகத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டு ஒரு நிமிடம் நிற்கிறார். பின் சபலத்துடன் அந்தப் பெண்ணின் அறைக்குச் செல்கிறார்.

    அடுத்து அவர் கண் விழித்துப் பார்க்கும் போது எங்கோ அடைபட்டு ஹெல்ப் ஹெல்ப் என்று கத்திக் கொண்டு இருக்கிறார்.

    வெளியே வீட்டில் புதிதாக ஓர் இளைஞன். அந்த செஸ் பிளேயரிடம் அவருடைய விளையாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கும் காட்சி அவருடைய செஸ் காயின்ஸ் எல்லாம் மிகத் தத்ரூபமாக உயிரோட்டத்துடன் இருப்பதாக அந்த இளைஞன் சொல்கிறான். அந்த இளம் மனைவியை அந்த இளைஞன் வியப்புடன் பார்ப்பதாகக் கதை முடியும்.

    அந்தப் படம் எடுத்தது சுஜய் கோஷ் என்ற பிரபல டைரக்டர். கஹானி என்ற ஃபேமஸ் த்ரில்லர், வித்யா பாலனை வைத்து எடுத்தவர்.

    அந்த மாதிரி பாதிக்கு மேல் பார்வையாளரை யூகிக்க வைக்கும் படியான த்ரில்லர் கதைகளை விரும்பிப்

    பார்ப்பான் அதர்வா.

    டர்னா மனா ஹை என்ற படத்தில் கூட வந்த ஆறு கதைகளில் ஒன்று கூட அவனுக்கு மிகவும் பிடித்தது. ராம் கோபால் வர்மா எடுத்தது.

    ஷில்பா ஷெட்டி ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவி. வீட்டில் இருக்கும் இல்லத்தரசி. மார்க்கெட்டில் காய்கறி, பழம் வாங்கப் போகும் போது திடீரென நிறைய ஆட்கள் படு மலிவாக ஆப்பிள் விற்றுக் கொண்டு தென்படுகிறார்கள்.

    இவர் விலை கேட்டு விட்டு வாங்காமல் செல்கிறார். ஏதோ மனதில் சந்தேகம் ஓடுகிறது. திரும்பி வரும் வழியில் இன்னும் மலிவாக ஆப்பிள் விற்கப் பட்டுக் கொண்டிருக்கிறது .வழியில் நிறையப் பேர் ஆப்பிள் வியாபாரம். ஆப்பிள் நிறையப் பேர் வாங்குகிறார்கள். இவரும் வாங்கி விடுகிறார் ஒரு வழியாக.

    வீட்டிற்குத்

    Enjoying the preview?
    Page 1 of 1