Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Minnal Thoorikaigal
Minnal Thoorikaigal
Minnal Thoorikaigal
Ebook276 pages1 hour

Minnal Thoorikaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தற்கொலை என்கிற பிரச்சினை இன்றைய சமுதாயத்தை ஆட்டிப் படைக்கும் மிகவும் மோசமான விஷயம். தற்கொலை செய்யத் துணிவோரைத் தடுத்து நிறுத்த சில நல்லவர்கள், சமுதாய அக்கறையுடன் எடுக்கும் சில முடிவுகளால், பலருடைய வாழ்க்கையில் மாற்றம் வருகிறதா என்று படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580144610503
Minnal Thoorikaigal

Read more from Puvana Chandrashekaran

Related to Minnal Thoorikaigal

Related ebooks

Reviews for Minnal Thoorikaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Minnal Thoorikaigal - Puvana Chandrashekaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மின்னல் தூரிகைகள்

    Minnal Thoorikaigal

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 1

    உலகளவில் தற்கொலை அதிகரித்து வருகிறது, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இறப்புகள் நிகழ்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் தற்கொலை விகிதம் 30% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, மேலும் 2016 ஆம் ஆண்டில், 10-34 வயதிற்குள் இறப்பு களுக்கான இரண்டாவது முக்கிய காரணம் தற்கொலை ஆகும்.

    ***

    சென்னையில் இருந்து இரவு நேரத்தில்‌ தில்லி கிளம்பிய அந்தப் புகைவண்டி தண்டவாளத்தில் சீராகப் பாய்ந்து கொண்டிருந்தது.

    முதல்வகுப்புப் பெட்டியான கூப்பேயில் அந்தப் பெண் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். வாடிய முகத்துடன் சோர்வாகத் தெரிந்தாள். முகத்தில் கவலையின் ரேகைகள் ஓடின. அவளிடம் அதிக உடைமைகள் இல்லை. ஒரு சின்ன பயணப்பை‌. அதைத் தவிர பெண்கள் வைத்திருக்கும் ஒரு சிறிய கைப்பை.

    அந்த முதல்வகுப்புப் பெட்டியின் உதவியாளன் வைத்துவிட்டுப் போன படுக்கையை விரித்துக் கொண்டு விட்டுக் கையில் பற்பசையும் பல் துலக்கும் தூரிகையையும் ( tooth brush) எடுத்துக் கொண்டு அந்தப் புகைவண்டியின் கழிப்பறைக்குள் சென்றாள்.

    பல் துலக்கி முகமெல்லாம் கழுவி விட்டுத் தலையையும் சரி செய்து கொண்டு திரும்பியவள் தனது பகுதிக்குள் நுழைந்தாள். தண்ணீர் பாட்டிலின் கீழே ஒரு சிறிய காகிதம் எட்டிப் பார்த்தது. அதை எடுத்து விரித்துப் பார்த்தாள்.

    "தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வல்ல!

    மின்னலைத் தூரிகையாக்கி

    மின்சார ஓவியம் வடிப்போம்!

    தொட்டால் சுடட்டும்!"

    என்று ஏதோ கவிதை போல எழுதி இருந்தது. வெளியே எட்டிப் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய வரை யாரும் தெரியவில்லை. அந்த உதவியாளன்‌ ஒவ்வொரு சிற்றறைக்குள் ( cabin) பரபரப்பாகப் போய் வந்து கொண்டிருந்தான். அவனைக் கேட்டுப் பிரயோசனமில்லை.

    யோசித்துக் கொண்டே தனது பகுதிக்குள் அமர்ந்தாள். வெளியே இடியுடன் மழை. மின்னல் பளீரென்று மின்னியது மூடிய ஜன்னலையும் மீறித் தெரிந்தது. அவளுடைய அறையின் கதவை யாரோ தட்டும் சப்தம் டக்டக்கென்று கேட்டது.

    கதவைத் திறக்க எழுந்தாள்.

    சரியாக ஒரு மணி நேரம் கழித்து ஆந்திராவில் எங்கோ அடுத்த நிறுத்தத்தில் வண்டி நிற்கத் தனது உடைமையுடன் இறங்கிய அந்தப் பெண் அங்கிருந்து வெளியே வந்து ஒரு வாடகை காரைப் பிடித்து சென்னைக்குத் திரும்பினாள்.

    அவள் முகத்தில் இருந்த சோர்வும் வேதனையும் மறைந்து எதையோ சாதிக்கும் வெறியும் துடிப்பும் குடியேறி இருந்தன. முற்றிலும் மாறிய முகபாவம்.

    ஏதோ புதிய முடிவெடுத்து நிறைவேற்றும் ஆர்வத்துடன் சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறாள்.

    என்ன தான் நடந்தது அந்தப் புகைவண்டியில்? அவளுக்கும் அவனுக்கும் அந்த மின்னலுக்கும் தான் தெரியும்!

    மின்னலே சாட்சி!

    அடுத்ததாக இன்னொரு காட்சியில் மதுரை இரயில்வே ஸ்டேஷன். இரவு நேரம். தனியாக அந்தப் பெண் கையில் சிறிய பையுடன் உட்கார்ந்திருந்தாள். பிளாட்ஃபாரத்தில் ஒரு பயணியர் பெஞ்சில் நீண்ட நேரமாக உட்கார்ந்திருந்தாள். கவலை படிந்த முகம். கையில் இருந்த பையை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு சோக பிம்பமாக உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

    நிறைய‌ வண்டிகள் வந்து நின்றன. பயணிகள் இறங்கினார்கள். ஏறினார்கள்.

    பரபரப்பாக இருந்த அந்த இடத்தில் அவள் மட்டும் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

    அங்குமிங்கும் நடந்து போனவர்கள் பரபரப்பில்லாமல் உட்கார்ந்திருந்த அந்த இளம்பெண்ணை வெறித்துப் பார்த்துக் கொண்டே போனார்கள்.

    நள்ளிரவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பிளாட்பாரத்தில் கூட்டம் வெகுவாகக் குறைந்து போயிருந்தது. சில பயணிகள், அதிகாலை வண்டியைப் பிடிப்பதற்காக, உள்ளே இருந்த பகுதியில் துணியை விரித்துப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரம் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்த அந்தப் பெண், கண்களை விழித்த போது, அவள் உட்கார்ந்திருந்த பெஞ்சில் அவளுக்கு அருகில் காற்றில் படபடத்துக் கொண்டிருந்த அந்தக் காகிதம் கண்ணில் பட்டது. எடுத்துப் பார்த்தாள். அவளுடைய பெயர் எழுதப் பட்டிருந்தது.

    மனதில் குழப்பத்துடன் அந்தக் காகிதத்தைக் கையில் எடுத்துப் பார்த்தாள்.

    "தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வல்ல!

    மின்னலைத் தூரிகையாக்கி

    மின்சார ஓவியம் படைப்போம்!

    தொட்டால் சுடட்டும்!"

    என்று எழுதியிருந்தது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கண்களை மூடி யோசித்தாள். ‘நான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இங்கே உட்கார்ந்து இருப்பது இதை எழுதியவருக்கு எப்படி தெரியவந்தது? கையெழுத்தும் பார்த்தால் புதியதாக இருக்கிறதே!’ என்று சிறிது நேரம் யோசித்தவள் சட்டென்று எழுந்தாள். ஏதோ தீர்மானத்துடன் அங்கிருந்து விருவிருவென்று நடக்க ஆரம்பித்தவள் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தாள். ஒரு ஆட்டோவில் ஏறி முகவரியைச் சொல்லி விட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாள். எது எப்படியோ, அவள் தனது முடிவை மாற்றிக் கொண்டாள் என்று மட்டும் நன்றாகத் தெரிந்தது.

    அடுத்ததாக மலை வாசஸ்தலமான கொடைக்கானல் மலையில் தற்கொலை முனை அருகே சுற்றுலாப் பயணிகளின் குழு ஒன்று மாலை நான்கு மணி அளவில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தது. அவர்கள் வந்த பஸ், அந்த இடத்தில் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தது. சுற்றுலாக் குழு அச்சத்துடன் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு, பஸ் இருந்த திசையில் நடக்க ஆரம்பித்தது. வழியில் இருந்த தின்பண்டங்களை வாங்கிக் குறித்துக் கொண்டே வந்து அங்கே இருந்த கைவினைப் பொருட்களை அலசிய சிலர் பேரம் பேசி அவற்றை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

    அந்தக் கூட்டத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் கூட்டத்தில் இருந்து விலகி மற்றவர் கண்களில் படாமல் ஒளிந்து கொண்டதை யாரும் கவனிக்கவில்லை. அவள் மட்டும் முதலில் இருந்தே தனியாகத் தான் காணப்பட்டாள். யாரிடமும் அதிகம் பேசாமல், சிரிக்காமல் இறுகிய முகத்துடன் காட்சி அளித்த அவளுடன் பேச யாருமே முயற்சியும் செய்யவில்லை. அவளும் யாரிடமும் நட்பு கொண்டாட முயற்சி செய்யவில்லை.

    பஸ் கிளம்பி விட்டது. கலகலப்பாகப் பேசி ஆர்ப்பரித்துக் கொண்டு கிளம்பிய அந்தக் குழுவில் ஒரு பெண் திரும்பவில்லை என்பதை யாரும் முதலில் கவனிக்கவில்லை. பஸ், அவர்கள் தங்கியிருந்த ரிஸார்ட்டிற்குச் சென்று பயணிகளை உதிர்க்கும் போது தான் அந்த டூர் மேனேஜர் தற்செயலாக அந்தப் பெண் குழுவில் இல்லாததை கவனித்தார். பரபரப்பாக எல்லோரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தார். இரண்டு மூன்று பேர் சேர்ந்து கடைசியாகச் சென்ற தற்கொலை முனையில் போய்த் தேடலாம் என்று கிளம்பினார்கள். அந்த இடத்தில் அவளைப் பார்த்ததாகச் சிலர் கூறியதால், அங்கே தான் அருகில் அவள் வழி தவறியிருக்கலாம் என்று நினைத்தார் அந்த மேனேஜர்.

    அங்கே இருட்டும் வரை மறைவான இடத்தில் காத்திருந்த அந்தப் பெண், அந்த முனையை நோக்கி அடிகளை எடுத்து வைத்தாள். அவளுடைய தோளில் ஒரு கை விழுந்தது. அவளை உறுதியாகப் பிடித்துக் கொண்டு அவளை மேலே நடக்க முடியாமல் தடுத்தது.

    அவள் கையில் ஒரு காகிதத்தைத் திணித்த அந்த உருவம், விருவிருவென்று நடந்து அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தது. அந்தப் பெண் திரும்பிப் பார்த்தபோது, தொப்பியும், குளிர் காலத்திற்கேற்ற முழுக்கை ஸ்வெட்டரும் அணிந்து கொண்டிருந்த அந்த உருவத்தின் பின்பக்கம் தான் தெரிந்தது.

    கையில் இருந்த பேப்பரை விரித்துப் பார்த்தாள். மொபைலில் இருந்த டார்ச்சை ஆன் செய்து, அந்த பேப்பரில் எழுதியிருந்த வரிகளை கவனமாகப் படித்தாள்.

    "தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

    மின்னலைத் தூரிகையாக்கி

    மின்சார ஓவியம் படைப்போம்!

    தொட்டால் சுடட்டும்!"

    என்று எழுதியிருந்தது. ஒன்றும் புரியாமல் விழித்தவள் சிறிது நேரம் கண்களை மூடி யோசித்தாள். மனதில் ஏதோ தீர்மானித்தவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

    மொபைல் சத்தம் போட ஆரம்பித்தது.

    இவ்வளவு நேரம் ஆஃப் செய்து வைத்திருந்தவள், இப்போது தான் சற்று நேரத்திற்கு முன்னால் டார்ச்சுக்காக ஆன் செய்திருந்தாள்.

    என்ன மேடம்? எங்கே இருக்கீங்க? உங்களை இங்கே காணோம்னு தேடிப் பதறிப் போயிட்டேன். ஃபோனில அப்பவேருந்து ட்ரை பண்ணிட்டே இருந்தேன். ஸ்விட்ச் ஆஃப்னே திரும்பத் திரும்ப மெசேஜ் வந்துட்டே இருந்தது? எங்கே இருக்கீங்க? ஏதாவது பிரச்சினையா? உடம்பு சரியில்லையா? எங்கே இருக்கீங்கன்னு மெஸேஜ் அனுப்புங்க. நான் வந்து கூட்டிட்டு வரேன் என்று படபடப்பாகப் பேசினார் அந்தத் டூர் மேனேஜர்.

    ஆமாம். உடம்பு சரியில்லாமல் போயிடுச்சு. ஸாரி. ஒரு பெஞ்சில் நடக்க முடியாமல் கண்ணை மூடிட்டு உக்காந்திருந்தேன். அப்படியே மயக்கமாயிட்டேன் போல இருக்கு. இப்பத் தான் கண்ணை முழிச்சுப் பாத்தேன். கவலைப் படாதீங்க. இதோ சூயிசைட் பாயிண்டில் இருந்து ரிஸார்ட்டுக்கு நடந்து வந்துக்கிட்டு இருக்கேன். இங்கே பக்கத்தில் தான் இருக்குன்னு இங்கே இருக்கறவங்க சொன்னாங்க. அதுனால நடக்க ஆரம்பிச்சேன் என்றாள்.

    சரி மேடம். அங்கேயே நில்லுங்க. நான் பஸ்ஸை எடுத்துக்கிட்டு வரேன் என்று சொன்னவர் டிரைவரை அழைத்தார்.

    அரை மணி நேரத்திற்குள் ரிஸார்ட்டிற்குள் நுழைந்தவளை சக பயணிகள் சூழ்ந்து கொண்டு, கேள்விக் கணைகளைத் தொடுக்க, பதில் சொல்லாமல் புன்சிரிப்புடன் உள்ளே சென்று விட்டாள் அந்தப் பெண்.

    பரபரப்பாக ஏதோ நடந்து விட்டது என்ற எதிர்பார்ப்புடன் வம்புக்காக அலைந்து கொண்டிருந்த கூட்டம், விஷயம் இப்படி சப்பென்று முடிந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கலைந்து போனது. வம்பு பேசிப் பேசி நேரத்தைக் கொல்லும் மக்களுக்கு யாராவது இறந்து போன செய்தி, அதுவும் விபத்து அல்லது தற்கொலை என்றால் நிறையத் தீனி போடும் அல்லவா? அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகி விட்டது. பாவம் தான் அவர்கள்!

    என்ன தான் நடக்கிறது? யார் இந்த மூன்று பெண்கள்? சம்பந்தமே இல்லாத மூவரும் வெவ்வேறு இடங்களில் நின்றாலும், மின்னல் தூரிகைகள் கொண்டு மின்சார ஓவியம் யார் வடிக்கப் போகிறார்கள்? போகப் போகத் தெரியும்!

    வாழ்க்கைத் திரையில்

    வண்ண வண்ண ஓவியங்கள்

    படைத்தவன் வரைகிறானா?

    இல்லை

    வரையும் தூரிகைகளைத்

    தேர்ந்தெடுத்து

    நம்மிடம் தருகிறானா?

    ஓவியங்கள் வடித்திடுவோம்!

    வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்போம்!

    வருவது வரட்டும்!

    அத்தியாயம் 2

    தனது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று தன்னம்பிக்கை இழப்பவர்கள் தான் தற்கொலைக்குத் துணிகிறார்கள். தற்கொலை கோழைத்தனமான முடிவு என்று கருதப்பட்டாலும் தற்கொலை செய்து கொள்வதாக முடிவெடுக்கும் அந்தத் தருணம் மிகவும் துணிச்சலானது.

    ***

    கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி என்ற மலைப்பிரதேச ஊர். கொடைக்கானல் போலவே இயற்கை எழில் கொஞ்சும் இடம். ஆனால் கொடைக்கானல் அளவு பிரபலமாகாத சுற்றுலாத் தளம் என்று சொல்லலாம்.

    தாண்டிக்குடியில் இருந்த அழகான ஒரு பங்களா. பங்களா என்பதை விட, விஸ்தாரமான இடத்தில் கட்டப்பட்ட அழகான பெரிய வீடு தான் அது. பெரிய பெரிய ஜன்னல்கள். பழைய கால தேக்கு மரக் கதவு. உயரமான கூரை. அந்த ஊரின் குளிருக்கு ஏற்றபடி கட்டப்பட்டிருந்த வீடு.

    அன்றைய தினம் எப்போதும் போல சாதாரணமாகத் தான் விடிந்தது. ஆனால் அதே தினம் அங்கு தனித்தனியாக வந்து சேரப் போகிற மூன்று பெண்களுக்கும் அது நல்ல விடியலைத் தரப் போகிறது.

    கங்கா, காலையில் ஒரு சிறிய பயணப்பையுடன் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள். வாடிய முகம். தளர்வு தெரியும் நடை. ஒளியிழந்த கண்கள். ஆனாலும் எதையோ சாதிக்க நினைக்கும் வெறியும், தேடலும் பார்வையில் தெரிந்தன. முப்பதைத் தாண்டிய வயதாக இருக்கலாம் அவளுக்கு.

    வாம்மா கங்கா, டிராவல் எப்படி இருந்தது? என்று வரவேற்றாள் அந்த முதியவள்.

    கம்ஃபர்டிபளா இருந்துச்சு ஆன்ட்டி. பாண்டியன் எக்ஸ்பிரஸில் கொடைரோடில் இறங்கி பஸ்ஸைப் பிடிச்சு வந்தேன் என்றாள் கங்கா.

    செல்லம்மா, கங்காவுக்கு அவளோட ரூமைக் காமிங்க. ரூமுக்குப் போய்க் குளிச்சு ரெடியாகி, டைனிங் ரூமுக்கு வந்துடு கங்கா என்று சொல்லி விட்டு, அவளுடைய பதிலுக்குக் காத்திருக்காமல் நகர்ந்து விட்டாள்.

    செல்லம்மா என்று அழைக்கப்பட்ட அந்த நடுத்தர வயதுப் பெண், கங்காவுக்கு அவளுடைய அறையைக் காட்டினாள். நல்ல பெரிய ரூமாக இருந்தது. மூன்று கட்டில்கள் இருந்தன. ஆனால் அந்த அறையில் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அட்டாச்டு பாத்ரூம் இருந்தது.

    கங்காவின் முகத்தில் இருந்த கேள்விக் குறியைப் புரிந்து கொண்டது போல பதில் சொன்னாள் செல்லம்மா.

    இன்னும் ரெண்டு பேர் இந்த ரூமுக்கு இன்னைக்கு வரப்போறாங்க. மத்தியானமோ, சாயந்திரமோ வராங்கன்னு நெனைக்கிறேன். பெரியம்மா அப்புறமா உங்க கிட்ட சொல்லுவாங்க. உள்ளே கீசர் இருக்கு. வெந்நீர் போட்டுக் குளிச்சுட்டு ரெடியாகி சாப்பிட வாங்க. ஞாபகமா கீசரை அணைச்சுட்டு வாங்க. கரெண்டை வேஸ்ட் பண்ணினா அம்மாக்குப் பிடிக்காது என்று செல்லம்மா சொன்ன போது, அந்த முதியவள் பேரில் அவளுக்கிருந்த மதிப்பும், மரியாதையும் நன்றாகத் தெரிந்தன.

    குளித்து முடித்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட வரும் போதே உடலிலும் மனதிலும் தெம்பு கூடியிருந்தது. ‘இந்த இடத்தில் நிச்சயமாக ஏதோ பாசிடிவ் வைப் இருக்கு’ என்று நினைத்துக் கொண்டே, எதிரில் இருந்த முதியவளைப் பார்த்தாள்.

    "இன்னைக்கு மட்டும் தான் நீ இங்கே கெஸ்ட். நாளையில் இருந்து இந்த இல்லத்தோட இன்மேட். உன்னோட வேலைகளை நீயாத் தான் செஞ்சுக்கணும். இன்னைக்கு இன்னும் ரெண்டு பேர் உன்னோட வந்து சேந்துக்குவாங்க. மூணு பேரும் ஒருத்தருக்கொருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிட்டு அந்த ரூமில் ஒத்துமையா இருக்கணும்.

    தினமும் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கணும். காலையில் தோட்டத்தில் யோகா ஸெஷன் நடக்கும். தவறாமல் அட்டென்ட் பண்ணனும். கிச்சன் போயி உதவி செய்யலாம். கம்பல்ஸரி கிடையாது. எது முடியுமோ அதைச் செய்யலாம். காய்கறி கட் பண்ணைறது, மசாலா, சட்னி அரைக்கிறது, பாத்திரம் கழுவுறதுன்னு எது முடியுமோ அதைச் செய்யலாம்.

    சரியா ஒரு மாசம் உனக்கு இங்கே தங்க அனுமதி தருவோம். அதுக்குள்ள உன்னோட மனசு சரியாயிடும்னு நம்பறேன். பை தி வே, நாங்க நடத்தற முதியோர் இல்லமும், ஆதரவற்ற குழந்தைகள் இல்லமும் பக்கத்திலேயே நடந்து போற தூரத்தில் இருக்கு. செல்லம்மாவைக் கேட்டா, வழி சொல்லுவாங்க.

    கிச்சனில உதவி செய்யப் பிடிக்கலைன்னா, முதியோர் இல்லத்திலேயோ இல்லைன்னா குழந்தைகள் இல்லத்திலேயோ போய் ஹெல்ப் செய்யலாம். ஓகேயா? "என்று சொல்லி விட்டு கங்காவின் முகத்தைப் பார்த்தாள். கங்காவின் முகத்தில் ஓடிய குழப்ப ரேகைகள் அவளுக்குப் புரிந்தன.

    "என்ன, நான் இங்கே எதுக்கு வந்தேன்? என்ன பிரச்சினைன்னு கேட்டுக்காம, இங்கே இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு ரூல் பேசறாளேன்னு மனசில குழப்பமா இருக்கா? எப்பயுமே பிரச்சினைகளைக் கண்டு மலைச்சுப் போகக் கூடாது. பிரச்சனை இல்லாத வாழ்க்கை யாருக்குமே கிடைக்கறதில்லை. அப்படி கெடைச்சாலும் அந்த லைஃப் சீக்கிரம் போரடிச்சுடும். பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாமாத் தேடிக் கண்டுபிடிக்கணும். தீர்வுகள் ஒண்ணும் கால் முளைச்சு நம்மைத் தேடி வராது.

    இங்கே இருக்கற அமைதியான சுற்றுச் சூழலும், மாற்றமும் உன்னை ஒரு சரியான பாதையில் வழி காட்டும். பழசை மறந்துட்டு முன்னாலே நடக்க முயற்சி பண்ணும்மா. உன்னால் முடியும்னு நான் நம்பறேன். நீ மனசளவில் தயாரானதும் நான் என்னோட கருத்துகளைச் சொல்வேன். அது வரைக்கும் கண்ணை மூடிக்கிட்டு உன்னைச் சுத்தி நடப்பதை ஏத்துக்கிட்டு மனசார அனுபவி" என்று சொல்லி விட்டு எழுந்து விட்டாள் அந்தப் பெண்.

    அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று மட்டும் உள்மனது அவளுக்குச் சொன்னது.

    ‘தற்கொலை என்ற முடிவை எடுத்தபோது எவ்வளவோ தைரியமாத் தான் எடுத்தேன். அந்த முடிவைத் தகர்த்து எறிஞ்சதோடு இந்த இடத்துக்கு அனுப்பி வச்ச அந்த நல்ல உள்ளம் சரியாத் தான் வழிகாட்டியிருக்கு. கடந்ததை மறந்து கையில் கிடைச்ச நூலைப் பிடிச்சுக்கிட்டே முன்னேறலாம்’ என்று அவள் நினைத்த போது,

    Enjoying the preview?
    Page 1 of 1