Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Abini Aaranyam
Abini Aaranyam
Abini Aaranyam
Ebook90 pages35 minutes

Abini Aaranyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்சிபி) சென்னை மண்டலப் பிரிவு திங்கட்கிழமை கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை மருந்துகளை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அழித்தது. உத்தியோகபூர்வ அறிக்கையில், அழிக்கப்பட்ட மருந்துகளில் கோகோயின், ஹெராயின், கஞ்சா, ஹாஷிஷ், எபெட்ரின், சூடோபீட்ரின் மற்றும் கெட்டமைன் ஆகியவை இருந்தன.

மேலே கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்ற செய்திகளை அடிக்கடி நாம் படிக்கிறோம். போதைப் பொருட்களை வியாபாரம் செய்யும் குற்றவாளிகளைக் காவல் துறையினர் பிடிப்பது பற்றிய கற்பனைக் கதை இது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள போதைப் பொருட்களின் மாற்றுப் பெயர்கள் அனைத்தும் முழுக்க முழுக்க எனது கற்பனையே.

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580144610456
Abini Aaranyam

Read more from Puvana Chandrashekaran

Related to Abini Aaranyam

Related ebooks

Related categories

Reviews for Abini Aaranyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Abini Aaranyam - Puvana Chandrashekaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அபினி ஆரண்யம்

    Abini Aaranyam

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    கதையின் கதை

    போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்சிபி) சென்னை மண்டலப் பிரிவு திங்கட்கிழமை கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை மருந்துகளை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அழித்தது. உத்தியோகபூர்வ அறிக்கையில், அழிக்கப்பட்ட மருந்துகளில் கோகோயின், ஹெராயின், கஞ்சா, ஹாஷிஷ், எபெட்ரின், சூடோபீட்ரின் மற்றும் கெட்டமைன் ஆகியவை இருந்தன.

    மேலே கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்ற செய்திகளை அடிக்கடி நாம் படிக்கிறோம். போதைப் பொருட்களை வியாபாரம் செய்யும் குற்றவாளிகளைக் காவல் துறையினர் பிடிப்பது பற்றிய கற்பனைக் கதை இது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள போதைப் பொருட்களின் மாற்றுப் பெயர்கள் அனைத்தும் முழுக்க முழுக்க எனது கற்பனையே.

    அத்தியாயம் 1

    சிறிய முன்னோட்டம்

    அகில இந்திய போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் ( narcotics control bureau) தலைமை அலுவலகம் தில்லியில். தலைமை அதிகாரி சென்னையில் இருந்த ரீஜனல் டைரக்டரிடம் தொலைபேசியில் ஒரு முக்கியமான தகவலைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். இந்த போதை தடுப்புப் பணியகம் இந்திய உள்துறை அமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டு இயங்கி வருகிறது. இதில் பெரும்பாலும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப் படுகிறார்கள்.

    இந்தியாவில் சில வருடங்களாக போதைப் பொருள் புழக்கம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே பெருகி வருவது குறித்துக் கவலையுடன் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையிலும், கல்வி மற்றும் வியாபார நோக்கத்துடன் விசாவைப் பெற்று இந்தியாவில் நுழைந்து மாணவர்களைக் குறிபார்த்துத் தங்கள் வலையில் வீழ வைக்கும் இந்தக் குள்ளநரிக் கூட்டத்தை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கும் மகத்தான பொறுப்பு இந்தப் பணியகத்தின் தோள்களில்.

    கோடிக்கணக்கான மதிப்புள்ள லாகிரி வஸ்துக்கள் பல்வேறு புனைபெயர்களில் இந்தியாவில் நுழைந்து இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைக் கறையானாக அரிக்கிறது. பணத்தாசை பிடித்த கொடியவர்களின் கைகளில் இந்திய இளைஞர்களின் பொன்னான எதிர்காலம் சிக்கிச் சின்னாபின்னமாவதைத் தடுக்க இந்தப் பணியகத்தின் நேர்மையான பல அதிகாரிகள் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்துப் போராடி வருகிறார்கள்.

    சென்னை மண்டலத் தலைமை அலுவலகத்தின் ஒரு பகுதியில் ஒரு முக்கியமான மீட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்த தலைமை அதிகாரியின் எதிரே துடிப்பான இளம் அதிகாரி இலக்கியன் உட்கார்ந்திருந்தான்.

    இலக்கியன் ஐ. பி. எஸ் தேர்வில் உயர்ந்த ரேங்க் வாங்கித் தனது இலட்சியப்படி இங்கு பதவியேற்றவன்.

    தனது கல்லூரி நண்பனுக்கு நேர்ந்த துயரகரமான அனுபவத்தால் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தான். போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்வைத் தொலைத்த தனது நண்பனின் நினைவை மனதிலிருந்து அவனால் அகற்றவே முடியவில்லை.

    அதற்காகவே இந்த போதைப் பொருள் விற்கும் கும்பலை அடியோடு அழிக்கவேண்டும் என்ற‌ குறிக்கோளுடன் இந்த வேலையில் சேர்ந்திருந்தான்.

    போதைக் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (என்சிபி) சென்னை மண்டலப் பிரிவு 691 கிலோ எடையுள்ள போதை மருந்துகளை சமீபத்தில் கைப்பற்றி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அழித்திருந்தது.

    அழிக்கப்பட்ட மருந்துகளில் கோகோயின், ஹெராயின், கஞ்சா, ஹாஷிஷ், எபெட்ரின், சூடோபீட்ரின் மற்றும் கெட்டமைன் கிடைத்ததாகத் தகவல்.

    இது போன்ற திடீர் ரெய்டுகள் மற்றும் போதைப் பொருள் கைப்பற்றப் படும் நடவடிக்கைகள் இரண்டிலும் இலக்கியனின் பங்கும் அவனுடைய டைரக்டர் இமயவரம்பனின் பங்கும் மிக அதிகம்.

    இலக்கியன் சென்னைக்கு வந்ததில் இருந்து அவனுடைய உயர் அதிகாரி இமயவரம்பனின் மனப்பூர்வமான ஆதரவுடன் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து ஏகப்பட்ட எதிரிகளை சம்பாதித்திருக்கிறான்.

    திறமையான இளைஞர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து போதைப் பொருட்கள் அதிகம் புழங்கும் இடங்களில் ஊடுருவ வைத்துத் தகவல் தெரிவிக்கும் செய்தியாளர்களாக ( informers) வைத்திருப்பது அவனது வெற்றிக்கான‌ இரகசியம்.

    மூன்றே நாட்களில் கதை முடிகிறது.

    ***

    திங்கட்கிழமை காலை 10 மணி

    சென்னை மண்டல போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகம்.( Regional head office- Narcotics control bureau- chennai chapter)

    டைரக்டர் இமயவரம்பனின் அறையில் அவரெதிரே அந்த மதிப்பிற்குரிய முதியவர் கவலையுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் அருகில் இலக்கியன் ஒன்றும் பேசாமல் அவர் பேசுவதைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.

    எப்படி சொல்லறதுன்னு எனக்குத் தெரியலை. ஆனால் நிலைமை கவலைக்கிடமாத் தான் இருக்கு. இவ்வளவு நாட்களா சம்பாதிச்ச நல்ல பேரெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இழந்துருவேனோன்னு பயமா இருக்கு.

    எங்களோட கல்வி நிறுவனத்தின் பேரில் நம்பிக்கை வைத்துத் தங்களுடைய பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோரின் கனவுகளைத் தரைமட்டமாக்கற‌ மாதிரி சமீப கால சம்பவங்கள் நடப்பதால் உங்க கிட்ட நேரடியாப் பேசலாம்னு வந்தேன். விரைவில் ஏதாவது நடவடிக்கை எடுத்து எங்கள் கேம்பஸில் திடீர்னு அதிகரிச்சு வர ட்ரக் புழக்கத்தை எப்படியாவது நீங்க தடுக்கணும். என்னால் முடிஞ்ச வரை நான் ஒத்துழைப்பு தரேன். சீக்கிரமாவே ஏதாவது செய்யுங்க என்று அழுது விடுவது போலப் பேசினார்.

    "கவலைப் படாதீங்க ஐயா.

    Enjoying the preview?
    Page 1 of 1