Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alai Payuthey Kanna!
Alai Payuthey Kanna!
Alai Payuthey Kanna!
Ebook193 pages1 hour

Alai Payuthey Kanna!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அலைகளைப் போல் ஓயாமல் பிரச்சினைகள் வாட்டும் வாழ்க்கையை மாயா என்ற இளம்பெண், தனது பொறுமையாலும், நல்ல பண்புகளாலும் எப்படி சமாளிக்கிறாள் என்பது பற்றிய கதை.

காதலைத் தொலைத்து விட்டு அந்தக் காதலைத் திரும்பப் பெறும் போது தொலைத்த தனது உறவுகளையும் எப்படி அடைகிறாள் என்ற பின்னணியில் கதை பின்னப்பட்டுள்ளது.

நான் கதை எழுத ஆரம்பித்த கட்டத்தில் எழுதிய கதை என்பதால் நடையிலும் கதை சொல்லும் விதத்திலும் வித்தியாசம் தெரியலாம். கதையைப் படித்து இரசியுங்கள். நன்றி.

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580144609573
Alai Payuthey Kanna!

Read more from Puvana Chandrashekaran

Related to Alai Payuthey Kanna!

Related ebooks

Reviews for Alai Payuthey Kanna!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alai Payuthey Kanna! - Puvana Chandrashekaran

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    அலை பாயுதே கண்ணா!

    Alai Payuthey Kanna!

    Author :

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 1

    அக்டோபர் மாதத்தின் அழகான இளங்காலை நேரம். மிதமான குளிர் காற்று உடலை வருடுவது இதமாக இருந்தது.

    டெல்லியில் இந்திராகாந்தி இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டின் டி ஒன் டெர்மினல். டிபார்ச்சர் பக்கம். டெல்லி விமானநிலையத்தை உலக அளவில் பிஸியான ஏர்போர்ட்களில் ஒன்று என்று தாராளமாக சொல்லலாம்.

    கபில் என்ற கபில் வெங்கட்ராமன், தனது டிராலியைத் தள்ளிக் கொண்டு பேக்கேஜ் டிராப் செய்ய அதற்கான க்யூவில் நின்று கொண்டிருந்தான்.

    ஏற்கனவே வெப் செக்கின் செய்திருந்ததால் ஜஸ்ட் பேக்கேஜ் டிராப் செய்து விட்டு போர்டிங் பாஸ் இஷ்யூ செய்து கொள்ள வரிசையில் நின்றான்.

    தனது முறை வந்ததும் சென்னை ஃப்ளைட்டிற்கான தனது டீடெயில்ஸை தனது ஃபோனில் காட்டி விட்டு கௌண்டரில் இருந்த பெண்ணைப் பார்த்தவன் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் விட்டான்.

    இவளா? இத்தனை நாட்களாக எங்கெங்கோ தேடியவள் இன்று கண் முன்னால் என்று நினைத்தவன், பேச மறந்து வாயடைத்துப் போய்ப் பார்த்தான்.

    கொஞ்சம் சீக்கிரமே முடிக்கலாமே? பின்னால் க்யூவில் நிறைய பேசஞ்சர்கள் வெயிட் செய்யறாங்க.

    அழகான ஆங்கிலத்தில் தெளிவாகப் பேசித் தன் வேலையில் மும்முரமானாள். அவனைத் தெரிந்து கொண்டதாகவே அந்தப் பெண் காட்டிக் கொள்ளவில்லை.

    கபிலுக்குக் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. அவளை மாதிரியே ஜாடை கொண்ட வேறு பெண்ணாகவும் இருக்கலாமோ? முகம் என்னவோ அவள்தான் என்று பறை சாற்றியது. ஆனால் அவள் பேசும் விதம், உடை, பாவனை எல்லாமே முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருந்தன.

    கபில் சட்டென்று முடிவு செய்து விட்டான். சென்னை போக வேண்டாம் என்று அதிரடி முடிவு எடுத்துவிட்டுத் தனது பெட்டியைத் திரும்ப எடுத்துக் கொண்டான்.

    தனது சென்னை ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு அங்கிருந்து திரும்பினான். பணம் என்னவோ வேஸ்ட்தான். வாழ்க்கையை விடப் பணமா முக்கியம்?

    சற்று தள்ளித் தனது ஸூட்கேஸுடன் அமர்ந்து கொண்டு அவளையே கவனித்துக் கொண்டு இருந்தான். சாதாரணமாக இந்த ஏர்போர்ட் வேலையில் ஷிஃப்ட் இருக்கும். அவளுடைய ஷிஃப்ட் முடியும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்து காத்துக் கொண்டிருந்தான்.

    ஷிஃப்ட் முடிந்து வந்தாலும் பேசுவாள் என்பது நிச்சயமில்லை. பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விடலாம். அவள் வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாம் என்றால் அட்ரஸ் எப்படிக் கண்டுபிடிப்பது? வாடகை கேபில் பின்தொடர்ந்து போகலாமோ?

    ஆனாலும் அவளுடைய அட்ரஸ் தெரியாமல் எப்படி வாடகை கேபில் பின்தொடர முடியும்? ஓலாவோ ஊபரோ புக் செய்வதற்கு டெஸ்டினேஷன் சொல்ல வேண்டுமே, என்ன செய்வது?

    அவளுடைய கௌண்டரில் கூட வேலை செய்பவர்களிடம் கேட்டாலும் அவர்கள் அவன் மீது சந்தேகப்படலாம்.

    உண்மையைச் சொல்லாமல் அவனைப் பற்றியே ஸெக்யூரிடியிடம் கம்ப்ளைண்ட் செய்து விட்டால் அவன் பாடும் திண்டாட்டம் ஆகிவிடும்.

    என்ன செய்வது? படு குழப்பமாக இருந்தது கபிலுக்கு. சரி இப்போதைக்கு எங்காவது ஹோட்டலில் ரூம் புக் செய்து தங்கி இதைப் பற்றி யோசிக்கலாம் என்று முடிவு செய்தான்.

    தன் பெட்டியுடன் அங்கிருந்து கிளம்பினான்.

    கபில் யு.எஸ்ஸில் ஒரு பிரபல யுனிவர்சிட்டியில் எலெக்ட்ரிகல் இஞ்ச்னியரிங் டிபார்ட்மெண்டில் புரஃபசர்.

    இந்தியாவிற்கு ஐ.ஐ.டி. டெல்லியில் ஒரு கெஸ்ட் லெக்சர் கொடுக்க வந்திருந்தான்.

    முடித்து விட்டு சென்னை கிளம்பிக் கொண்டு இருந்தான். சென்னையில் அவனுடைய மாமா வீடு இருக்கிறது. மாமா குடும்பத்துடன் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு அடுத்த வாரம் ஐ.ஐ.டி. மெட்ராஸில் ஒரு லெக்சர் கொடுத்து விட்டுத் திரும்ப வேண்டும்.

    ஒரு கேபை எடுத்துக் கொண்டு ஏர்போர்ட் அருகில் மஹிபால்பூரில் இருக்கும் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துக் கொண்டு விட்டுத் தனது மாமாவிற்கு ஃபோன் செய்து தான் அன்று வரவில்லை என்றும் வேறு வேலை திடீரென வந்து விட்டதால் முடித்துவிட்டு இரண்டு நாட்களில் வருவதாகவும் சொன்னான்.

    அவன் அங்கிருந்து கிளம்பியதும் அந்த ஏர்லைன்ஸ் கவுண்டரில் இருந்த அந்த அழகிய பெண் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

    அவன் அவ்வளவு சீக்கிரம் அவளை மறந்து போய் விடமாட்டான் என்ற விஷயம் அவளுக்குத் தெரியாது.

    ஹோட்டல் ரூமில் இருந்து தனது யு.எஸ். ஃப்ரண்ட் வெங்கட்டை அழைத்தான் கபில். வெங்கட் ஒரு ஸாஃப்ட்வேர் இஞ்சினியர். வெங்கட் தன் குடும்பத்துடன் மதுரை வந்து ஸெட்டில் ஆகி விட்டான். யு.எஸ். வேலையை ரிஸைன் செய்துவிட்டு வந்து விட்டான்.

    வெங்கட் தனது மனைவியைத் தேடித் தவித்துக் கொண்டிருந்தபோது அவனுக்கு டெல்லியைச் சேர்ந்த ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஹெல்ப் செய்ததாகச் சொல்லி இருந்தான். அவனுடைய காண்டாக்ட் நம்பரைக் கேட்கத்தான் வெங்கட்டுக்கு ஃபோன் செய்தான்.

    வெங்கட், அவனுடைய ஃப்ரண்ட் அகரன் மற்றும் ஜோகிந்தர் இருவருடைய நம்பர்களையும் கொடுத்தான். அடிக்கடி அவர்கள் இருவரும் வெளிநாடு செல்வார்கள். டெல்லியில் இருந்தால் ஹெல்ப் செய்வார்கள் என்று சொல்லி ஃபோனை வைத்தான்.

    கபில் உடனே அகரனுக்கு ஃபோன் செய்தான். நல்ல வேளையாக அகரன் டெல்லியில் இருந்ததால் ஃபோனை எடுத்துப் பேசினான்.

    தன்னைப் பற்றி வெங்கட்டின் நண்பன் என்று அறிமுகம் செய்து கொண்டு தனக்குத் தேவையான விவரங்களை சேகரித்துத் தரமுடியுமா என்று கேட்டான்.

    மாயா என்ற பெண் டெல்லியில் டி ஒன் ஏர்போர்ட்டில் தனியார் ஏர்லைன்ஸின் ஒரு கவுண்டரில் இருப்பதாகவும் தனக்கு அவளது அட்ரஸ் மட்டும் உடனடியாகத் தேவை என்றும் சொன்னான்.

    ஒரு பெண்ணைப் பற்றிய விவரங்களை கபில் கேட்டதால், அகரம் கொஞ்சம் தயங்கினான். தன்னால் எந்தப் பெண்ணிற்கும் அனாவசிய பிரச்சனை வரக்கூடாது என்று தீவிரமாக நம்புபவன் அகரன்.

    ஒரு பெண்ணைப் பற்றிய தகவல்கள் கேட்டால் தன்னால் எதுவும் உதவி செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டான் அகரன்.

    கபில் தான் ஏன் மாயாவைப் பற்றி விவரம் அறியத் துடிக்கிறேன் என்ற உண்மையான காரணத்தை அகரனுக்குத் தெள்ளத் தெளிவாக மறைக்காமல் விவரமாக எடுத்துச் சொன்னான். தன்னைப் பற்றியும் எல்லா விவரங்களையும் அகரனிடம் ஒளிக்காமல் கொடுத்தான். அத்தனை விஷயங்களையும் கேட்ட பின்னர் அகரனுக்கே கபில் மேல் கொஞ்சம் இரக்கம் வந்து விட்டது. ஒரு வழியாக உதவி செய்ய ஒத்துக் கொண்டான்.

    அகரன் உடனே வெங்கட்டிற்கும் ஃபோன் செய்து கபில் சொன்ன விஷயங்களை எல்லாம் க்ராஸ் செக் செய்து விட்டு கபில் உண்மையிலேயே மாயாவை நல்ல நோக்கத்துடன்தான் சந்திக்க விரும்புகிறான் என்று உறுதி செய்து கொண்ட பின்னர் தனது நெட்வொர்க் மூலமாக விஷயங்களை சேகரித்தான்.

    அடுத்த நாள் காலை சரியாக பத்து மணிக்கு மாயாவின் அட்ரஸ் கபிலுக்குக் கிடைத்து விட்டது.

    அகரன் கொடுத்த தகவலின்படி அன்று மாயாவிற்கு விடுமுறை இருந்ததால் தைரியமாக அவளை சந்திக்கக் கிளம்பினான்.

    அகரன் கொடுத்த அட்ரஸ் துவாரகா என்பதால் நேரே அங்கு சென்றான். துவாரகாவில் ஒரு ஸெக்டரின் ஹவுஸிங் ஸொஸைட்டியில் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு ஃப்ளாட்.

    தைரியமாகச் சென்று பெல்லை அடித்ததும் ஒரு நடுத்தர வயதுப் பெண் வந்து கதவைத் திறந்தாள்.

    நான் மாயாவின் ஃப்ரண்ட். எனது பெயர் கபில். பல வருடங்களுக்குப் பிறகு மாயாவை ஏர்போர்ட்டில் பார்த்தேன். எனக்கு அவளுடன் பேச வேண்டும்.

    அவனை ஏற இறங்கப் பார்த்த அந்தப் பெண் உள்ளே சென்று சில நொடிகளில் திரும்பி வந்தாள்.

    ஸாரி. உங்களை மீட் பண்ண அவளுக்கு விருப்பம் இல்லை. நீங்கள் வீணாகக் காத்திருக்காமல் போகலாம்.

    கை கூப்பி நின்றாள் அந்தப் பெண்.

    பரவாயில்லை. அவளைப் பார்க்காமல் நான் இங்கிருந்து போகப் போவதில்லை. தயவுசெய்து ஒரு அரை மணி நேரம் வந்து உங்கள் எதிரிலேயே என்னுடன் பேசச் சொல்லுங்கள்.

    நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களிடம் என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறாள் என்பதும் எனக்குத் தெரியவில்லை. அவள் வரட்டும். நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

    நான் மாயாவின் அம்மா தாரிணி.

    திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தான் கபில்.

    மாயாவின் அம்மா உயிருடன் இருப்பது அதுவும் டெல்லியில் இருப்பது அவனைப் பொறுத்தவரை புதிய விஷயம். அவளை ஏறிட்டுப் பார்த்ததும் முக ஜாடை நன்றாகத் தெரிந்தது.

    அவர்கள் பேசியது எல்லாம் உள்ளே இருந்த மாயாவின் செவிகளில் கண்டிப்பாக விழுந்திருக்கும்.

    புயல் போல் வெளியே வந்தாள்.

    "உங்களை எல்லாம் திரும்ப என் வாழ்க்கையில் பார்க்கவே கூடாதுன்னு முடிவு செஞ்சதால்தானே நான் சென்னையை விட்டு டெல்லி வந்தேன்?

    இங்கேயும் வந்து ஏன் என்னைத் தொந்தரவு செய்யறீங்க? கிளம்புங்க. இல்லைன்னா ஸெக்யூரிடிக்கு ஃபோன் செஞ்சு வரவழைக்கட்டுமா? போலீஸுக்கும் ஃபோன் செய்யத் தயங்க மாட்டேன். என்னைப் பழைய மாயாவாக நினைக்க வேண்டாம். தைரியமான புது அவதாரம். போய் விடுங்கள்."

    போயிடறேன். அதுக்கு முன்னால் உனக்கு சில விஷயங்களைத் தெளிவாகப் புரிய வைக்க வேண்டியது எனது கடமை. எனக்குப் பேசறதுக்கு ஒரு சான்ஸ் கொடு. அதுக்கு அப்புறமா நான் இங்கிருந்து போயிடறேன்.

    உங்களுடைய வார்த்தைகளை நம்பி, நான் திரும்பத் திரும்ப ஏமாறப் போறதில்லை. முயற்சி செய்ய வேண்டாம். தயவு செஞ்சு இங்கிருந்து போயிடுங்க.

    கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் மாயா. தாரிணி, அவள் அருகில் அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

    சரி. நான் சொல்ல வந்த எதையும் கேட்கவே வேணாம். உன்னுடைய பொருள் ஒண்ணு என்னிடம் பத்திரமாக இருக்கிறது. திரும்ப ஒப்படைக்க வேண்டாமா?

    அழுகையை நிறுத்திவிட்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள் மாயா.

    என்ன பொருள்? என்ன இது புதுக்கதை?

    கோபத்துடன் கேட்டாள் மாயா.

    பரத்தை உன்னிடம் ஒப்படைக்க வேண்டுமே?

    பரத்தா? எங்கே இருக்கான்? உங்களுக்கு எப்படித் தெரியும்?

    கபிலின் அருகே வந்து அவனது சட்டையைப் பிடித்து உலுக்கினாள் மாயா.

    அத்தியாயம் 2

    பரத்தைப் பற்றிச் சொன்னவுடன் துள்ளி எழுந்து தான் ஓடி வந்தாள் மாயா. தாரிணியும் கொஞ்சம் வியப்பும் எதிர்பார்ப்பும் கலந்த பார்வையுடன் அவனைப் பார்த்தாள்.

    "பரத் எங்கே இருக்கான்? எப்படி இருக்கான்? சித்தப்பா வீட்டிலிருந்து ஏன் வெளியே போனான்? உங்களுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1