Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nandhavanathil Oru Aandi
Nandhavanathil Oru Aandi
Nandhavanathil Oru Aandi
Ebook168 pages1 hour

Nandhavanathil Oru Aandi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என்னுடைய முதல் புதினம் இது. பெண்களைப் போலவே போராட்டங்களே வாழ்க்கையாக அமையும் ஆண்களும் உண்டு. அப்படிப்பட்ட பொறுப்பான ஓர் ஆண்மகனின் கதை இது. படித்துப் பாருங்கள். நன்றி.

Languageதமிழ்
Release dateMar 11, 2023
ISBN6580144609572
Nandhavanathil Oru Aandi

Read more from Puvana Chandrashekaran

Related to Nandhavanathil Oru Aandi

Related ebooks

Reviews for Nandhavanathil Oru Aandi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nandhavanathil Oru Aandi - Puvana Chandrashekaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நந்தவனத்தில் ஓர் ஆண்டி

    Nandhavanathil Oru Aandi

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 1

    "ஆ ஆ ஆகட்டும் ஆகட்டும்

    கள்ளக் கிருஷ்ணா!

    உறியில் வெண்ணெயைத்

    திருடித் தின்னவன்!

    உரலுக்குள்ளே கட்டுப்பட்டவன்!

    ஆ ஆ ஆகட்டும் ஆகட்டும்

    கள்ளக் கிருஷ்ணா!

    கன்னுக் குட்டியை அவிழ்த்து

    விட்டவன்!

    கையைத் தட்டிக் கன்னத்தில்

    வைத்தவன்!

    ஆ ஆ ஆகட்டும் ஆகட்டும்

    கள்ளக் கிருஷ்ணா!"

    குழந்தை அரவிந்துடன் பார்வதி கைகளைக் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தாள்.

    மகள் வயிற்றுப் பேரன். ஒன்றரை வயதுக் குழந்தை. பார்வதியின் பாட்டிற்குத் தலையை ஆட்டி ஆட்டிக் குதித்துக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தான் குழந்தை.

    மாதவன் ஆஃபிஸிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். வீட்டின் பொறுப்பான தலைப்பிள்ளை. தனது கடமைகளை முள் கிரீடமாகச் சூடிக் கொண்டவன். பார்வதி, ஏகாம்பரம் தம்பதியர்க்கு நான்கு குழந்தைகள். மாதவன் தான் மூத்தவன். அடுத்து லாவண்யா. திருமணமாகி ஒரே வருடத்தில் குழந்தை

    வயிற்றில் இருக்கும் போது கணவன் விபத்தில் இறந்து விடப் புகுந்த வீட்டினர் ஏதோ அவளது தவறு தான் என்பது போல் பிறந்த வீட்டிற்குத் திரும்ப அனுப்பிவிட்டு அவளது உறவையே துண்டித்து விட்டனர்.

    மகள் வாழ்வில் நடந்த துக்கத்தைத் தாய், தந்தையால் ஜீரணிக்கவே முடியவில்லை.

    லாவண்யாவிற்கு அடுத்து ஜனனி. அடுத்து கடைக்குட்டி ஷங்கர்.

    லாவண்யாவின் வாழ்வில் வந்த பெரிய சோகத்தைத் தாங்க முடியாத ஏகாம்பரம் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுந்துவிட வீட்டின் பொறுப்புக்கள் தானாகவே வந்து மாதவனின் தலையில் விழுந்தன.

    சிகிச்சை பலனளிக்காமல் ஏகாம்பரம் உயிரிழந்துவிட, அவரது மத்திய அரசு அலுவலகத்தில் கம்பேஷனேட் க்ரௌன்ட் அடிப்படையில் மாதவனுக்கு அரசாங்க வேலை கிடைத்தது. பட்டப்படிப்பு பி.காம் முடித்துவிட்டு ஸி.ஏ படிப்பிற்கான ப்ரயத்தனம் செய்து கொண்டிருந்த அவன் வேறு வழியில்லாமல் படிப்பு ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு வேலையில் சேர்ந்தான்.

    ரிடயர்மண்ட்டிற்கு முன்னாலேயே ஏகாம்பரம் இறந்ததால் தான் இந்த வேலை வாய்ப்பே மாதவனுக்குக் கிடைத்தது. சில அரசாங்க அலுவலகங்களிலும், வங்கிகளிலும் இந்த மாதிரி ஒரு செயல்முறை இருப்பதனால் தலைவனை இழந்து தவிக்கும் பல குடும்பங்களுக்கு ஒரு வர ப்ரசாதமாக இருக்கிறது. குழந்தைகள் சிறியவர்களாக இருந்தால் மனைவிக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். இப்பொழுதும் இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    ஜனனி ஸ்கூல் படித்துவிட்டு மேலே கல்லூரிப் படிப்பில் ஆர்வம் இல்லாததால்,

    கம்ப்யூட்டர் க்ளாஸ் போகிறேன் என்று ஒரு கம்ப்யூட்டர் இன்ஸ்ட்டியூட்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.

    லாவண்யா நல்ல பொறுமை. புத்திசாலி. பொறுப்பானவள். அவள் கணவன் இறந்ததால் வாழ்க்கையை இழந்து நின்றாள். ஜனனி அவளுக்கு நேர் எதிர். சட்சட்டென்று கோபம் வரும். குழப்பங்களின் திலகம். கொஞ்சம்கூடப் பொறுப்பு கிடையாது. நினைத்ததை சாதிக்க வேண்டும் என எண்ணும் தன்னலவாதி. பிடிவாதக்காரி.

    தந்தை இறந்த நான்கு மாதங்களில் கம்ப்யூட்டர் க்ளாஸ் போன இடத்தில் ஒருவனைக் காதலித்து அவசர அவசரமாக யாரிடமும் சொல்லாமல் கோயிலில் திருமணம் செய்து கொண்டு விட்டாள். மாப்பிள்ளை மோகன் பார்க்க நன்றாக இருப்பான். ஷோக் பேர்வழி. நல்ல படிப்பும் இல்லை. வேலையும் இல்லை.

    மோகனின் பெற்றோர் அவனது திருமண விஷயம் தெரிந்ததும் வீட்டில் சேர்க்காமல், உறவை முறித்துக் கொண்டனர். வேறுவழி இல்லாமல் மாதவனும் ஒரு தனி வீடு பார்த்து அவர்களைக் குடித்தனம் வைத்து ஓர் இடத்தில் மோகனுக்கு வேலைக்கும் ஏற்பாடு செய்தான். ஜனனி, மோகன் இருவருமே பொறுப்பில்லாதவர்களாய் இருந்ததால் அவர்களது குடும்பச் செலவும் மாதவன் தலையில் விழுந்தது. கடைக்குட்டி ஷங்கர் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தான்.

    லாவண்யாவிற்குக் குழந்தை அரவிந்த் பிறந்தபோதுகூட அவளது புகுந்த வீட்டில் இருந்து யாரும் பார்க்க வரவில்லை. லாவண்யா ஸ்கூல் படிப்பு மட்டும் முடித்திருந்ததால் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் மூலமாக பட்டப்படிப்பு படித்துக்கொண்டு இருந்தாள். கூடவே வங்கி வேலைகளுக்கும் கோச்சிங் க்ளாஸ் சேர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தாள். அவள் நல்ல புத்திசாலியும் கூட. திருமணம் மட்டும் பெற்றோர் அவசரப்படாமல் இருந்திருந்தால் நன்றாகப் படித்திருப்பாள்.

    இத்தனை அமர்க்களங்கள் மற்றும் போராட்டங்கள் நிறைந்த மாதவன் வாழ்வில் இன்னும் அவனுக்குத் தான் நல்ல வாழ்க்கைத் துணை கிட்டவில்லை. பார்வதி ஏதோ விடாமல் தேடினாலும் இன்னும் அமையவில்லை. அவனது குடும்ப சூழ்நிலை பார்த்த எந்தப் பெண்ணிற்கும் அவனை மணந்துகொள்ள இஷ்டமில்லை. இருந்தாலும் பார்வதி முயற்சிகளை இன்னும் கைவிடவில்லை. மாதவனுக்கும் வயது ஏறிக்கொண்டே போகக் கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் திருமண பாக்கியம் தனக்கு இல்லை என்று ஏற்றுக்கொண்டு விட்டான். வயது முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

    இவன் வாழ்விலும் இனி வசந்தம் வருமா, இல்லற இன்பம் கிட்டுமா என்பது படைத்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். ஆனால் அலுக்காமல், சலிக்காமல் தனது கடமைகளைச் சரியாகச் செய்துகொண்டு இருக்கிறான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத்தானே ஒரு கூட்டுக்குள் சுருக்கிக்கொள்ள ஆரம்பித்து விட்டான். கலகலப்பாகப் பேசிக்கொண்டு இருந்தவன் இப்போது எண்ணி எண்ணிச் சில வார்த்தைகள் தான் பேசுகிறான். அவனுக்கு ஏற்ற நண்பர்களும் குறைந்து போனார்கள். பாவம். ஒரே ஒரு நண்பன். அதுவும் அலுவலகத்தில் கூட வேலை பார்க்கிறவன், ரங்கராஜன் என்று பெயர். அவனுக்குப் பின்னாலும் ஒரு சோகக் கதை.

    மாதவன் வேலை பார்க்கும் அதே மத்திய அரசின் டெல்லிக் கிளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் ரங்கராஜன். அழகான மனைவி. நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை. ஒரு நாள் சரோஜினி நகர் மார்க்கெட்டிற்கு மதிய நேரம் ஷாப்பிங் சென்றாள் ராகினி, குழந்தையுடன். ராகினி ரங்கராஜனின் மனைவி. அங்கு அன்று நடந்த தீவிரவாதிகளின் பாம் ப்ளாஸ்ட் அட்டாக்கில் பல அப்பாவி ஜனங்கள் உயிரிழந்தனர். ரங்கராஜனின் குழந்தையும் உயிரிழந்தது. மனைவி படு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுப் பல நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிர் என்னவோ பிழைத்து விட்டாள்.

    ஆனால் குழந்தையை இழந்த சோகத்தில் மனம் பேதலித்துவிட்டது. அடிக்கடி தற்கொலை முயற்சிகள் செய்ய ரங்கராஜனின் வாழ்க்கை நரகமாகிவிட்டது. உதவிக்கும் அங்கு யாரும் இல்லாததால் சென்னைக்கு மாறுதல் வாங்கிக்கொண்டு வந்து விட்டான்.

    வீட்டில் மனைவியைப் பார்த்துக்கொள்ள ஒரு பெண்ணை வேலைக்கு வைத்துவிட்டு ஆஃபிஸ் வந்து போய் கொண்டிருக்கிறான். ராகினி ஒரு நாள் நன்றாகப் பேசிச் சிரித்து வீட்டு வேலைகள், சமையல் எல்லாம் செய்வாள்.

    ஒருநாள் பித்துப் பிடித்தாற்போல் குளிக்காமல், தூங்காமல், பேசாமல் உட்கார்ந்து கொண்டே இருப்பாள். கண் கொத்திப் பாம்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கணவன், மனைவி இருவர் பக்கமும் பெற்றோர் உயிருடன் இல்லை. மற்ற சொந்தங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சென்னை வந்த முதல் நாள் முதல் அவனுக்குத் தேவையான உதவிகள் செய்து ஆதரவு காட்டும் ஒரே நண்பன் மாதவன் மட்டும் தான். மாதவனின் நட்பு ஒன்று தான் ரங்காவிற்கு ஆறுதல்.

    அத்தியாயம் 2

    மாதவனின் ஆஃபிஸில் மதிய உணவு இடைவேளை. மாதவனும் ரங்கராஜனும் உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.

    ரங்கராஜன் தானாகவே ஏதாவது சமைத்து எடுத்துக் கொண்டு வந்து விடுவான். கொஞ்சம் கொஞ்சமாக இப்போது சமையலும் கற்றுக் கொண்டு விட்டான். மாதவன் எப்போதும் ரங்காவுக்கும் சேர்த்துக் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே எடுத்துக் கொண்டு வந்து விடுவான். மாதவனின் அம்மாவின் சமையலும் உயர்தரம் என்பதால் ரங்காவால் மறுக்கவும் முடியாது.

    ரங்காவின் முகம் காலையிலிருந்தே வாடித்தான் இருந்தது. ஏதோ ப்ரச்சனை என்று மாதவனுக்குப் புரிந்தது. ஆனால் தூண்டித் துருவிக் கேட்டு அவன் மனதைத் துன்புறுத்தக் கூடாது என்று கேட்க மாட்டான் மாதவன். ஆனால் சில சமயம் தானாகவே ரங்கா சொல்லி விடுவான். அவனைப் பொறுத்தவரை மாதவனிடம் மனதில் இருப்பதை ஒருமுறை கொட்டிவிட்டால் கொஞ்சம் ரிலீஃப். அவ்வளவு தான்.

    என்ன ரங்கா, சாப்பாட்டை விரலால் அளைந்துகொண்டே இருக்கிறாயே? பார்த்துச் சாப்பிடு. உடம்புக்குத் தெம்பு வேணாமா?

    "உடம்பு நல்ல தெம்போட தான் இருக்கு. மனசு தான் ரொம்பக் கெட்டுப் போச்சு. வரவர ராகினியை என்னால் சமாளிக்கவே முடியவில்லை. நேற்று ராத்திரி பாரு நல்ல மூடில் இருந்தாள். சப்பாத்தி, குருமா கூடத் தானே செய்தாள். ரெண்டு பேரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சிரித்துப் பேசிக்கொண்டே சாப்பிட்டோம். குடிக்கத் தண்ணீர் எடுக்க சமையலறைக்குள் போனேன்.

    அதற்குள் கொழும்புவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் பற்றிய நியூஸ் டி.வியில் வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ராகினிக்குப் பழசெல்லாம் ஞாபகம் வந்து விட்டது. கதறி அழ ஆரம்பித்து விட்டாள். கையில்

    Enjoying the preview?
    Page 1 of 1