Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nesamulla Vaansudarey!
Nesamulla Vaansudarey!
Nesamulla Vaansudarey!
Ebook278 pages1 hour

Nesamulla Vaansudarey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனது பெயர் புவனா சந்திரசேகரன். விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்ட வங்கி ஊழியர். கடந்த நாலரை ஆண்டுகளாக, கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், புதினங்கள் எழுதி வருகிறேன். என்னுடைய பல படைப்புகள், போட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கின்றன.

புதிய கதைக் களங்களை எடுத்துக் கொண்டு எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இதுவரை என்னுடைய ஒன்பது நாவல்கள் அச்சில் வெளிவந்துள்ளன. பல கதைகள் புஸ்தகாவிலும் கிடைக்கின்றன. சிறுவர் மின்னிதழ் ஒன்றின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறேன். நாற்பது வருட தில்லி வாழ்க்கைக்குப் பிறகு தற்போது மதுரையில் வசிக்கிறேன். வாசகர்களின் ஆதரவையும் அன்பையும் வேண்டுகிறேன். நன்றி.

Languageதமிழ்
Release dateDec 16, 2023
ISBN6580144610455
Nesamulla Vaansudarey!

Read more from Puvana Chandrashekaran

Related to Nesamulla Vaansudarey!

Related ebooks

Reviews for Nesamulla Vaansudarey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nesamulla Vaansudarey! - Puvana Chandrashekaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நேசமுள்ள வான்சுடரே!

    Nesamulla Vaansudarey!

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 1

    ஜன்னல் வழியாக வெளியே தோட்டத்தில் பூத்திருந்த அழகான ரோஜாக்களைப் பார்த்து இரசித்துக் கொண்டு தன்னை மறந்து உட்கார்ந்திருந்தாள் சம்யுக்தா. எவ்வளவு அழகாகச் சிரிக்கின்றன இந்த ரோஜாக்கள்! ஆசை ஆசையாக வாங்கித் தானே நட்டு வளர்த்த அந்த ரோஜாச் செடிகளைப் பார்த்தாலே மனதில் புத்துணர்ச்சி பொங்கி எழும் அவளுக்கு.

    நாளை விடிந்தால் திருமணம். நினைத்துப் பார்க்கும் போதே சம்யுக்தாவின் மனதில் இனம் புரியாத கலவரம் தோன்றியது. இந்த ரோஜாக்களைப் போலத் தான் பெண்களின் வாழ்க்கையும். செடியில் அப்பாவித்தனமாக அழகாகச் சிரிக்கும் ரோஜாவைக் கையில் யாராவது பறித்து வைத்துக் கொண்டு அழகு பார்க்கும் போது அதன் உண்மை அழகு குறைந்து தானே போகிறது? சிரிப்பும் மறைந்து முகம் வாடிவிடுகிறது.

    அதே போலத் தானே பெண்களையும் பிறந்த வீட்டில் இருந்து அகற்றிப் புகுந்த வீட்டில் சேர்க்கும் போது ஒரு இனம் புரியாத கலக்கம் மனதில் எழுந்து முகத்தை சோகமும் ஆனந்தமும் கலந்த உணர்வு மேகங்கள் சூழ்கின்றன.

    இல்லை. இல்லை. தவறு. ரோஜா மலரைப் பறிப்பது போல அல்ல. ரோஜாச் செடியை வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடுவது போன்ற செயல் தானே திருமணமும். ஆனால் முட்களில்லாத ரோஜாச் செடி. அதுவும் புது மண்ணில் வேரூன்றிப் பின்னர் புதிய சூழ்நிலைக்குத் தன்னை மாற்றிக் கொண்டு பின்னர்‌ அன்பையும் காதலையும் நேசத்தையும் உறவையும் பூக்களாகச் சொரிந்து மணத்தைப் பரப்புவது போலத் தான் இதுவும்.

    ஜன்னல் கிட்ட உக்காந்து எவ்வளவு நேரம் தான் வேடிக்கை பார்ப்பே சம்யூ? மடமடன்னு வந்து உன்னோட டிரஸ், நகையெல்லாம் எடுத்து வச்சுக்கோ. சாயந்திரம் கெளம்பணும் இல்லையா!? நேரம் போறதே தெரியாது. வா வா என்று அம்மா குரல் கொடுக்க சம்யுக்தா மனமேயில்லாமல் அங்கிருந்து எழுந்தாள்.

    நாளையில் இருந்து இந்தக் காட்சியெல்லாம் இப்படி ஜாலியா உக்காந்து பாக்க முடியாதில்லையாம்மா? அதுனால தான் இன்னைக்குப் பாத்து என்ஜாய் பண்ணறேன் என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்றாள் சம்யுக்தா.

    வேலையை முடிச்சுட்டு வந்து எவ்வளவு நேரம் வேணாலும் உக்காந்துக்க சம்யு. ஏதாவது மறந்து போச்சுன்னா மண்டபத்தில இருந்து ஓடி வரணுமா இல்லையா? புரிஞ்சுக்கோ செல்லம் என்று செல்லமாகப் பேசிய அம்மாவிடம் எதிர்த்துப் பேசாமல் உள்ளே சென்றாள் சம்யுக்தா.

    அம்மா ஆனந்தி சொல்லும் எந்த வார்த்தைக்கும் எதிர் வார்த்தை சொல்லிப் பழக்கமில்லை அவளுக்கு. குழந்தையில் இருந்தே பயங்கர அம்மாச் செல்லம்.

    எதுக்கெடுத்தாலும் அம்மா, அம்மா என்று கைக்குழந்தை போல இன்று வரை அம்மாவைச் சுற்றி வருபவள். அவளுக்கு அப்புறம் பிறந்த அர்ச்சனா கூட அம்மாவை அவ்வளவாகத் தேட மாட்டாள்.

    அர்ச்சனா தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துத் திரியும் ஒரு சுதந்திரப் பறவை‌. அப்பா அருணாசலம் என்னவோ இரண்டு பெண்களிடமுமே அதிகமாகப் பேசிப் பழக மாட்டார். ஒரு மாதிரி குணம் அவருடையது. சட்டென்று புரிந்து கொள்ளவே முடியாது. தானுண்டு தன் வேலையுண்டு என்றேயிருப்பவர். குழந்தைகளைக் கூப்பிட்டு ஆசையாகப் பேசுவதும் கிடையாது. அவர்கள் விஷயத்தில் தலையிடுவதும் கிடையாது.

    ஏன் அப்படி இருக்கிறார் என்பது இரண்டு பெண்களுக்கும் புரிவதில்லை. அப்பாவின் பாசம் என்றால் என்னவென்றே புரியாமல் அம்மாவிடமே முழுக்க முழுக்க வளர்ந்தவர்கள் தான் சம்யுக்தாவும் அர்ச்சனாவும்.

    அர்ச்சனா, நீயும் வேகமா ரெடியாகிக்கோ. மண்டபத்துக்குப் போனா உனக்குத் தான் நிறைய வேலையிருக்கும். எல்லாத்தையும் நீ தானே கவனிச்சுக்கணும். அப்புறம் நம்ப உறவுக்காரங்க, ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் பாத்து சிரிச்ச மொகத்தோட பேசி உபசரிக்கணும். அங்கயும் இங்கயும் வழக்கம் போலப் பராக்கு பாத்துக்கிட்டே நிக்கக் கூடாது. அப்புறம் இப்பயே சொல்லிட்டேன். முக்கியமாக இந்த ஸெல்ஃபோனை நோண்டிட்டே இருக்கக் கூடாது. ஒரு கல்யாணத்துல இன்னொரு கல்யாணம் நிச்சயமாகும்னு சொல்லுவாங்க. அது ஏன் உன் கல்யாணமா அமையக் கூடாதுன்னு ஆண்டவன் கிட்ட நான் வேண்டிக்கறேன். கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நல்ல பொண்ணா நடந்துக்கோ

    என்று அர்ச்சனாவிடம் ஆனந்தி புலம்பித் தள்ளினாள்.

    போம்மா. உங்களுக்கு வேற வேலையே இல்லை. நான் கொஞ்ச நாளாவது ஜாலியா இருக்கணும். சம்யு மாதிரி நீங்க சொல்லறதுக்கெல்லாம் நான் சட்டுன்னு தலையாட்டிட மாட்டேன். புரிஞ்சுக்கோங்கோ

    என்று கட் அன்ட் ரைட்டாகப் பேசிக் கொண்டே கையில் இருக்கும் ஸெல்ஃபோனை நோண்டிக் கொண்டே உள்ளே போனாள் அவளும்.

    அர்ச்சனா, இங்கேயிருந்து கிளம்பும் போது உன்னையும் சம்யூவையும் ப்யூட்டி பார்லரில் இறக்கி விடறோம். அங்கேயிருந்து சம்யுக்தா ரெடியானதும் அவளை மண்டபத்திற்கு நீ கூட்டிட்டு வந்துரு. என்ன சரியா? பேசறதைக் காதில வாங்கிக்கோ. இப்ப சரி சரின்னு தலையாட்டிட்டு அப்புறம் கோட்டை விட்டுராதே என்றாள்.

    அம்மா, நான்லாம் போகமாட்டேன். பெரிய போர்மா அது. சம்யூவோட ஃப்ரண்ட் சாத்விகா தான் இங்க வந்துருவாளே? அவளே போய்க்குவா சம்யு கூட. என்னை விடும்மா நீ என்று அலட்சியமாக அர்ச்சனா சொல்ல,

    என்ன என் பேர் அடிபடுது இங்க? என்று கேட்டுக் கொண்டே சாத்விகா அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தாள்.

    சாத்விகா, சம்யுக்தா இரண்டு பேரும் இஞ்ச்னியரிங் காலேஜ் நாட்களில் இருந்தே பயங்கர க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ். இரண்டு பேரும் இரண்டு வருடங்கள் முன்னால் படிப்பை முடித்து விட்டு மகாராஷ்டிராவில் புனேயில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து புனேயில் இருக்கிறார்கள். கேம்பஸ் இண்டர்வ்யூவில் கிடைத்த வேலை. கம்பெனி அருகிலேயே ஸிங்கிள் பெட்ரூம் வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒன்றாக வசிக்கிறார்கள். இஷ்டமிருந்தால் வீட்டில் எளிமையாக சமைத்துக் கொள்வார்கள். இல்லையென்றால் வெளியே இருந்து சாப்பாடு வந்துவிடும்.

    சாத்விகா சென்னையைச் சேர்ந்தவள். அப்பா வேந்தன் காவல் துறையில் உயர் அதிகாரி. சம்யுக்தாவின் பெற்றோர் வசிப்பது திருச்சி அருகே உள்ள கிராமத்தில். இரண்டு பேரும் படித்தது மதுரையில் இருக்கும் பிரபல பொறியியல் கல்லூரியில். நல்ல படிப்பாளிகள் இரண்டு பேருமே. அதனால் தான் நல்ல கம்பெனியில் படித்தவுடனே வேலை கிடைத்தது.

    என்ன சாத்விகா நீ மட்டும் வந்திருக்கே? பெஸ்ட் ஃப்ரண்ட் கல்யாணத்துக்குக் குடும்பத்தோட வரவேண்டாமா? என்று சம்யுக்தாவின் அம்மா ஆனந்தி கடிந்து கொள்ள,

    ஆண்ட்டி, அம்மா, அப்பா எல்லாருமே தான் வந்திருக்காங்க. அவங்க ஹோட்டலுக்கு நேராப் போயிட்டாங்க. நான் இங்கே வழியில இறங்கிட்டேன். அவங்க சாயந்திரம் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை தரிசனம் பண்ணிட்டு அப்புறமா மண்டபத்துக்கு வருவாங்க. நான் தேவியை அப்புறமாப் பாத்துக்கறேன்; இப்ப என்னோட ஃப்ரண்டைப் பாக்கப்போறது தான் எனக்கு முக்கியம்னு நான் சொல்லிட்டுப் பிச்சுக்கிட்டு வந்துட்டேன் என்று சொல்லிக் கண்ணடித்தாள்.

    அதற்குள் சாத்விகாவின் குரலைக் கேட்டு சம்யுக்தா ஓடி வந்தாள்.

    கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னால வரேன்னு சொல்லிட்டு இப்ப வரயே? போ, நான் உங்கூடப் பேசமாட்டேன் என்று சம்யுக்தா முகத்தைத் திருப்பிக் கொள்ள,

    நீ வேற லீவில வந்துட்டயா? நம்ப டீம் லீடர் அந்த நெட்டைக் கொரங்கு என் தலையில நிறைய வேலையைக் கட்டிடுச்சு. கெளம்பவே விடலை. கடைசில நேத்து மத்தியானம் கோபம் வந்து,’நீயுமாச்சு, ஒன் வேலையுமாச்சு’ ன்னு கத்திட்டு அவனோட தலையிலயே ஃபைலைத் தூக்கிப் போட்டுட்டுக் கிளம்பி ஓடியே வந்துட்டேன். அவன் மூஞ்சி போன போக்கைப் பாக்கணுமே! விளக்கெண்ணெய் குடிச்ச கொரங்கு மாதிரியே இருந்தான் என்று சொல்லி விட்டு சாத்விகா சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

    சம்யுக்தாவும் அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்து வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

    எப்போதுமே சாத்விகாவிற்கும் அவர்களுடைய டீம் லீடர் நீரவ் காம்ப்ளேக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகாது. மகாராஷ்டிராக் காரன். கோபம் வந்தால் மராட்டியில் கத்த ஆரம்பித்து விடுவான். சரியான சிடுமூஞ்சி. அவனுக்கும் சாத்விகாவுக்கும் ஏழாம் பொருத்தம் தான்.

    சம்யுக்தா இருக்கும் வரை பொறுமையாகப் பேசி சமாளித்து விடுவாள். பெரிய பிரச்சினை ஆக்காமல் அவனிடம் பேசவேண்டிய படி தன்மையாகப் பேசுவாள். பத்து நாட்கள் முன்னால் அவள் லீவில் வந்ததில் இருந்து தினமும் நமது சாத்விகாவிற்கும் நீரவுக்கும் முட்டிக் கொண்டேயிருந்தது நேற்று அதிகமாகி விட்டது. அவனுக்கு சாத்விகா வைத்திருக்கும் செல்லப் பெயர்கள் நெட்டைக் கொரங்கு, வேகாத பன்( வெள்ளையாக இருப்பதால்), தலையணை உறை( டைட்டாக டிரஸ் போடுவதால்), சிடுமூஞ்சி. இதையெல்லாம் கூலாகத் தமிழில் அவன் எதிரிலேயே சிரிக்காமல் சொல்லுவாள். சம்யுக்தா தான் சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பாள். சாத்விகா இருக்கும் இடத்தில் பயங்கரக் கலகலப்பாக இருக்கும்.

    சரி சரி வா. ஏதாவது சாப்பிட்டுக்கிட்டே அரட்டை அடிக்கலாம் என்று அவளை டைனிங் டேபிளுக்கே இழுத்துச் சென்றாள் சம்யுக்தா.

    என்ன சமையல் இன்னைக்கு? செம‌ பசி எனக்கு. வரும் வழியில் அம்மா,அப்பா காரை நிறுத்தி சாப்பிடலாம்னு சொன்னாங்க. நான் தான் நேரமாயிடும்னு சொல்லிக் காரை நிறுத்த விடலை என்று சொல்லிக் கொண்டே சாப்பிட உட்கார்ந்தாள்.

    இன்னைக்கு வீட்டில் சமைக்கலை. வேலை நிறைய இருக்குன்னு எல்லாமே வெளியே இருந்து ஆர்டர் பண்ணி வாங்கியாச்சு என்று சொல்லிக் கொண்டே அவளுக்கு சாப்பாட்டைத் தட்டில் எடுத்து சம்யுக்தா பரிமாறினாள். சாத்விகா உள்ளே போய்த் தனது டிராவல் பேக்கை வைத்து விட்டுக் கைகால்களை சுத்தம் செய்து கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தாள். சாப்பிட்டுக் கோண்டே அவர்களுடைய அரட்டைக் கச்சேரியும் தொடர்ந்தது. அவள் சாப்பிட்டு முடித்ததும் சம்யுக்தாவின் அறைக்குள் சென்றார்கள்.

    உள்ளே சென்றதும் சம்யுக்தாவைக் கண் கொட்டாமல் பார்த்த சாத்விகாவின் கண்கள் ஏனோ கலங்கின. முகத்தைத் திருப்பிக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

    "ஏய் ஜான்சி ராணி! எதுக்கு இப்ப அழறே? நியாயப்படி பாத்தா நான் இல்ல அழணும்? நீ ஏன் அழறே? நான் ஒண்ணும் உன்னை விட்டுப் பிரியப் போறதில்லையே! கல்யாணம் முடிஞ்சு திரும்ப ஒரு வாரத்தில் புனே வரப்போறேனே? நீ ஏன் வருத்தப் படறே? நாம திரும்பவும் ஒண்ணாத் தானே இருக்கப் போறோம்?

    கல்யாணம் முடிஞ்ச கையோட மாப்பிள்ளை சிங்கப்பூர் போயி அங்கே இருக்கற பிஸினஸை எல்லாம் வைண்ட் அப் பண்ணிட்டு (மூடிவிட்டு) இந்தியா வரப்போறாரு. அதுக்குக் கொஞ்ச நாட்களாகும். அது வரைக்கும் வேலையை விடவேண்டாம்னு மாப்பிள்ளை வீட்டில சொல்லிருக்காங்களே? உனக்குத் தான் தெரியுமே! அதுக்குள்ள மறந்துட்டயா?

    இந்தியா வந்ததுக்கப்புறமும் தமிழ்நாட்டில நல்ல இடமாத் தேர்ந்தெடுத்து அவரோட பிஸினஸை ஆரம்பிச்சுக் கொஞ்சம் பேர் சம்பாதிக்கற வரைக்கும் என்னை இந்த வேலையிலயே தொடரச் சொல்லி அவங்க வீட்டில சொல்லிட்டாங்க. அப்புறம் ஏன் நீ கண் கலங்குறே?" என்றாள் சம்யுக்தா.

    இல்லை, வேற என்னல்லாமோ நெனப்பு மனசில வந்தது. ஏதோ இன்னைக்குக் காலையில் இருந்தே ஒரே தடுமாற்றமாகவும் குழப்பமுமாகவே இருக்கு. ஏன்னு புரியலை. ஏதோ நடக்கக் கூடாதது நடக்கப் போற மாதிரி ஏதோ உள்ளுணர்வு சொல்லுது என்று சொன்ன சாத்விகாவைச் சட்டென்று கலவரத்துடன் சம்யுக்தா பார்த்தாள்.

    அவள் இந்த மாதிரி எப்போதெல்லாம் பேசுகிறாளோ அப்போதெல்லாம் நிச்சயமாக ஏதாவது வேண்டாத நிகழ்வு நடந்திருப்பதை இதற்கு முன்னால் பார்த்திருக்கிறாள் சம்யுக்தா. அந்த அனுபவம் தான் அவளைத் திடுக்கிட வைத்தது.

    நிறைய சம்பவங்களில் சாத்விகாவின் உள்ளுணர்வு அவர்களுக்கு எச்சரிக்கை செய்து பல விபரீதங்களில் இருந்து காப்பாற்றிய கடந்த கால நினைவுகள் மனதில் ஊஞ்சலாடியதால் தான் சம்யுக்தா ஒருவிதக் கலவரத்துடன் சாத்விகாவைப் பார்த்தாள். இன்றைக்கும் ஏதோ விரும்பத்தகாத நிகழ்வு நமக்கெதிரே நடனமாடக் காத்துக் கொண்டிருக்கிறதோ என்று தான் சம்யுக்தா பயந்து போனாள்.

    விதியின் விளையாட்டையும் அது தரும் வேதனையையும் யாரால் அறியமுடியும்?

    மந்திரக் கயிறைக் கையில் வைத்துக் கொண்டு இறைவன் எங்கெங்கோ இருக்கும் உயிர்களை இழுத்துக் கொண்டு வந்து எங்கெங்கோ நிறுத்தி யாருடனோ சேர்த்து வைக்கிறான்!

    நீயும் பொம்மை! நானும் பொம்மை!

    நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை!

    விதியின் பார்வையில்

    உயிர்கள் பொம்மை

    வீசும் புயலில் உலகமே பொம்மை!

    அத்தியாயம் 2

    பிற்பகல் மூன்று மணி அளவில் எல்லோருமாகக் கிளம்பி விட்டார்கள். சாமான்கள் எல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று சரி பார்த்து விட்டு வாடகைக் காரில் ஏற்றிக் கொண்டு நல்ல நேரம் பார்த்து எல்லோரும் கிளம்பினார்கள்.

    பூஜையறையில் கடவுளை வணங்கி மனதில் வேண்டிக் கொண்டு அம்மா, அப்பாவை நிற்க வைத்து நமஸ்காரம் செய்தாள் சம்யுக்தா.

    நல்ல படியாகக் கல்யாணம் முடிஞ்சு சீரும் சிறப்புமா வாழ்ந்து பொறந்த வீட்டுக்குப் பெருமை சேக்கணும் என்று ஆனந்தி வாயார வாழ்த்தினாள். அருணாசலம் வழக்கம் போல வாய் விட்டு ஒன்றும் சொல்லி வாழ்த்தவில்லை. ஆனால் அவர் முகத்தில் ஏதோ பேசத் துடிக்கும் ஒரு தவிப்பு தெரிந்தது. இத்தனை நாட்களாகத் தென்படாத ஓர் உணர்வு அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

    சம்யுகாதாவிற்கும் அப்பாவின் தோளோடு சேர்ந்து சாய்ந்து கொண்டு இத்தனை வருடங்களாகப் பேசாத கதைகளெல்லாம் பேசி அனுபவித்து அவருடைய பாசத்தை முழுமையாக உணர்ந்து சிலிர்க்க வேண்டும் என்று மனதில் ஆசை எழுந்தது.

    ‘நிறைவேறாத ஆசைகளில் இதுவும் ஒன்றாக மனதில் தங்கித் தான் போகப் போகிறது. என்ன செய்ய முடியும் நம்மால்?’ என்று வருந்தத் தான் முடிந்தது.

    வாசலில் வந்து நின்று வீட்டைத் திரும்பி ஒருமுறை பார்த்தாள் சம்யுக்தா.

    என்ன‌ சம்யூ வீட்டை இப்படிப் பாக்கறே? கல்யாணம் ஆனா என்ன? பொறந்த வீட்டுக்கு வராமயா இருக்கப் போறே? முடிஞ்ச போதெல்லாம் வரத்தானே போறே? அதுவும் கல்யாணம் ஆனதுக்கப்புறமும் உன்னை இங்கேயே விட்டுட்டுத் தானே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சிங்கப்பூர் போகப் போறாங்க? நீ நெனச்சப்ப எல்லாம் வந்து இங்க சீராடலாம். கவலைப்படாமக் கெளம்பு. எங்க காலம் மாதிரி இல்லை. இப்ப இந்தக் காலப் பொண்ணுங்க நெனச்சா தலைவலி, கால்வலின்னு அம்மா வீட்டுக்கு ஓடியே வந்துட்டாங்க என்று சிரித்துக் கொண்டே ஆனந்தி சொல்ல சம்யுக்தாவும் இறுதியாக ஒருமுறை ஏக்கத்துடன் வீட்டைப் பார்த்து விட்டு மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினாள்.

    ‘பெரிய ஸீன் போடறாளே இவ. என்னமோ இனிமே இங்க வரவே முடியாம எங்கயோ கண்காணாத எடத்துக்குப் போற மாதிரி இல்ல இவ வீட்டைப் பாக்கறா?’ என்று மனதில் நினைத்துக் கொண்டே அவளுடன் அர்ச்சனா காரில் ஏற, சாத்விகா வழக்கத்திற்கு மாறாக ஒன்றுமே பேசாமல் காரில் ஏறி சம்யுக்தாவின் அருகில் அமர்ந்தாள்.

    என்ன‌ சாத்விகா இது? உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலையே! நீ கூட இருந்தா என்னோட கலகலப்பாப் பேசிக்கிட்டு என்னோட மூடை நீ மாத்துவனு பாத்தா நீயென்னவோ பூசணிக்காய் மாதிரி மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு வரயே! என்ன தான் உனக்குப் பிரச்சினை? உம்முனு இருக்கற கேரக்டர் இல்லையே உன்னுது. எங்கயோ இடிக்குது. பேசாம அந்த நீரவ்வையும் கல்யாணத்துக்கு வரவைச்சிருந்தா அவனைக் கலாய்ச்சுக்கிட்டாவது கலகலப்பா இருந்திருப்பே நீ என்று சாத்விகாவிடம் சம்யுக்தா கிசுகிசுக்க,

    அம்மா தாயே! அவனை நெனைவு படுத்தாதே. ரெண்டு நாளாவது என்னை நிம்மதியா இருக்க விடு. அந்த நெட்டையன் அங்கேயே வடாபாவையும் ஸ்ரீ கண்டையும் மொக்கிட்டு இருக்கட்டும். பயங்கர எரிச்சல் வந்துரும் எனக்கு என்று பதில் சொன்ன போது பழைய சாத்விகாவாக மாறினாள் அவள். அதற்கப்புறம் பயங்கர சிரிப்பும் கலாட்டாவும் தான் காரில்.

    வழியில் ப்யூட்டி பார்லரில் சாத்விகாவையும் சம்யுக்தாவையும் இறக்கி விட்டு மற்றவர்கள் மண்டபத்தை அடைந்தார்கள். ஆறரை மணிக்கு வரவேற்பு இருந்ததால் அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதில் மும்முரமாக ஈடுபட்டார்கள்.

    ஐந்து மணி அளவில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து எல்லோரும் வந்து இறங்கி விட அவர்களுக்கான உபசரிப்பில் பெண் வீட்டார் ஓடிக்

    Enjoying the preview?
    Page 1 of 1