Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammavin Meesai
Ammavin Meesai
Ammavin Meesai
Ebook56 pages22 minutes

Ammavin Meesai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களுக்கு ஏற்படும் பெண்களுக்கு ஏற்படும் ஹிர்சுட்டிஸம் அதாவது அதீத முடி வளர்ச்சி பற்றிய எனது கற்பனைக் கதை. இந்தப் பிரச்சினையால் பாதிக்கப் படும் ஒரு பெண் அதை எப்படி எதிர்த்துப் போராடுகிறாள் என்பதை என்னுடைய எழுத்தில் காட்டியிருக்கிறேன். அவள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறாளா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பிரச்சினையால் பாதிக்கப் படும் ஒரு பெண் அதை எப்படி எதிர்த்துப் போராடுகிறாள் என்பதை என்னுடைய எழுத்தில் காட்டியிருக்கிறேன். அவள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறாளா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580144608411
Ammavin Meesai

Read more from Puvana Chandrashekaran

Related to Ammavin Meesai

Related ebooks

Reviews for Ammavin Meesai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammavin Meesai - Puvana Chandrashekaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அம்மாவின் மீசை

    Ammavin Meesai

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    பின்குறிப்பு

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 1

    ஹிர்சுட்டிஸம் (hirsutism) என்பது பெண்களுக்கு ஏற்படும் அதீத முடி வளர்ச்சி என்பதாகும். அதாவது சில பெண்களுக்கு ஆண்களைப் போல தாடி, மீசை வளர்கின்ற பிரச்சினை தான். இது அனைத்து வயது பெண்களிடமும் ஏற்படலாம். மற்றும் இதனால் சமூக, உளவியல் மற்றும் சுயமரியாதை பிரச்சினைகள் ஏற்படலாம்.

    இந்த நிலை மிகவும் பொதுவானது மற்றும் உலக மக்களில் 5-10 சதவிகிதம் மக்களை இது பாதிக்கிறது.

    அப்பா, அப்பா, எங்கே இருக்கீங்க? சீக்கிரம் வாங்க. குட் ந்யூஸோட வந்திருக்கேன் என்று கத்திக் கொண்டே வீட்டில் நுழைந்தாள் சிந்துஜா.

    என்னடா கண்ணா? என்ன அந்த குட் நியூஸ்? இன்னைக்கு என்ன பிரைஸ் வாங்கிருக்கே? வாரத்துக்கொரு பரிசு வாங்கறது தானே உன்னோட பழக்கம் என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டே வந்தார் சிந்துஜாவின் அப்பா மூர்த்தி.

    அதெல்லாம் ஒண்ணுமே இல்லைப்பா. இது அதை விட சூப்பரான நியூஸ். எனக்கு சுவிட்சர்லாந்தில் இருக்கற பெர்ன் யுனிவர்ட்டியில் அட்மிஷன் கிடைச்சிருக்கு. அதுவும் ஃபைனான்ஷியல் எய்டோட சேந்து. இப்பத் தான் மெயில் வந்தது என்று சொல்லிக் கொண்டே வந்தவள், அப்போது தான் கோயிலில் இருந்து திரும்பிய  தனது சித்தி ஸ்ரீமதியைப் பாசத்துடன் கட்டிக் கொண்டாள்.

    என்ன ஆச்சு? அப்பா, பொண்ணு முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் தெரியுது! என்று ஸ்ரீமதி கேட்க,

    நீங்களும் அதைக் கேட்டதும் எங்களை விட ஜாஸ்தி சந்தோஷப்படப் போறீங்க சித்தி! என்று சிந்து சொன்னாள்.

    அப்படி என்னம்மா சிந்து? என்றவள் விஷயத்தைக் கேட்டதும் முகம் வாடிப் போனாள். சந்தோஷப் படவில்லை.

    என்னம்மா இது? மேலே மேலே இன்னும் எவ்வளவு படிப்பே நீ? உன் ஆசைப்படி எம். எஸ். சி. முடிக்கப் போறே. அதுக்கு மேலே இப்போ வெளிநாடு போயிப் படிக்கறேன்னு சொல்லறே. கல்யாணம் எப்போ செஞ்சுக்குவே? எப்போ எங்க கடமையை நாங்க முடிக்கறது? என்று நிஜமான வருத்தத்துடன் ஸ்ரீமதி சொல்ல, ஓடிப்போய் அவளுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டாள் சிந்து.

    என்ன சித்தி இது? அவ்வளவு ஃபேமஸ் யுனிவர்சிட்டில அட்மிஷன் கெடைச்சிருக்குன்னு சந்தோஷப்படாம என்னவோ தேவையே இல்லாமல் வருத்தப்படறீங்களே! படிச்சு முடிச்சுட்டு வந்ததும் நீங்க கை காமிக்கற மாப்பிள்ளைக்கு இந்த சிந்துஜா கழுத்தை நீட்டறாளா இல்லையா பாருங்க என்றாள்.

    "அப்படியெல்லாம் நான் உன்னைக்

    Enjoying the preview?
    Page 1 of 1