Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nanban Endroru Puththagam
Nanban Endroru Puththagam
Nanban Endroru Puththagam
Ebook123 pages47 minutes

Nanban Endroru Puththagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தச் சிறுகதை தொகுப்பில் உள்ள வீடு, தோப்பில் தனிமரம், பணம் காய்ச்சி மரம், நண்பன் என்றொரு புத்தகம், பாதைகள், பிரம்மாக்கள், ரோல் மாடல் மற்றுமுள்ள சிறுகதைகளும் வாசித்த பிறகு அதில் உள்ள சம்பவங்களோ சொல்ல வந்த கூறுகளோ புத்தகத்தை மூடி வைத்த பிறகும் வாசகரை மனம் கனக்க செய்யும்...

Languageதமிழ்
Release dateMar 18, 2023
ISBN6580163709677
Nanban Endroru Puththagam

Related to Nanban Endroru Puththagam

Related ebooks

Reviews for Nanban Endroru Puththagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nanban Endroru Puththagam - Usha Anbarasu

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    நண்பன் என்றொரு புத்தகம்

    சிறுகதைகள்

    Nanban Endroru Puththagam

    Sirukathaigal

    Author:

    உஷா அன்பரசு

    Usha Anbarasu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/usha-anbarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    1. பிரம்மாக்கள்

    2. வீடு

    3. அழகான கனவுகள்...!

    4. பாதைகள்!

    5. பணம் காய்ச்சி மரம்...

    6. ஒப்பந்தம்...

    7. நண்பன் என்றொரு புத்தகம்...

    8. அடைக்கலம்

    9. இனி எல்லாம் சுகமே...!

    10 வசந்த விழா...!

    11. மருமகள்

    12. தோப்பில் தனிமரம்

    13. கிரி... எம்.எல்.ஏ...!

    14. ரோல் மாடல்

    15. சொல்ல மறந்த கதை

    16. இரும்பு இரையும் விழுங்கும் மீன்களும்...

    அணிந்துரை

    இலக்கிய வடிவங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பிரபஞ்சன் போன்றவர்களை வாசிப்பது போலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர்களையும் நான் வாசிக்கிறேன். கதை சொல்லும் விதத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

    சிறுகதைகளில் மட்டும் அப்படி என்னவொரு ஈர்ப்பு? என்று நீங்கள் கேட்கலாம். சிறுகதை என்று தேனீக்கள் மலர்களை நாடி, துளித்துளியாய் சேகரித்து தன் வயிற்றிலேயே சில வேதியல் மாற்றங்களை செய்து அந்த இனிப்பைத் தேனாக்கிச் சேமித்துத் தருகிறதே, அப்படித்தான் சிறுகதையும் அதன் ஆசிரியர்களும்.

    குறுக்கு வழியில் சம்பாதிக்கும் மனிதர்களை ‘கிரி எம்.எல்.ஏ’ என்ற கதையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். ‘நண்பன் என்றொரு புத்தகம்’ என்ற கதையில் நாம கீழ விழறவரைக்கும் மத்தவங்களை தூக்கிவிட்டுகிட்டே இருக்கிறதுதான் வாழ்க்கை... என்று மிக அழகாக மனிதனின் வாழ்வியல் நெறியை எடுத்துரைக்கிறார்.

    ஒன்றிரண்டு சிறுகதைகளைத் தவிர மற்றெல்லாச் சிறுகதைகளிலும் ஆசிரியர் திருமதி உஷா அன்பரசு தானும் ஒரு கதாபாத்திரமாகவே வெளிப்படுகிறார்.

    பொதுவாக பெண் எழுத்தாளர்கள் ஒரு காலகட்டம் வரை எழுதிக் கொண்டிருப்பார்கள். அதன்பிறகு திடீரென்று எழுதுவதை நிறுத்திவிட்டுக் குடும்பச் சுமைகளுக்குள் மூழ்கிவிடுவார்கள். எழுத்தாற்றல் என்பது எல்லோர்க்கும் கிடைப்பதில்லை. அதுவும் சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய வரப்பிரசாதம். அத்தகைய வரப்பிரசாதம் கிடைக்கப்பெற்ற திருமதி உஷா அன்பரசு அவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் அவர் பாக்கியாவின் வாசகி என்பதில் மிகப்பெரிய சந்தோஷம் எனக்கு.

    ஓர் இளம் படைப்பாளி எழுத்தில் உருவான இந்தக் கதை தொகுப்பு எனக்குத் திருப்தி தருகின்றன.

    நன்றி

    அன்புடன் உங்கள்

    கே. பாக்யராஜ்

    என்னுரை

    விதைக்கவும்... வளரவும், மலரவும் களம் வேண்டும், என் எழுத்தார்வத்திற்கு நீருற்றி உயிர் கொடுத்தது தினமலர்-பெண்கள் மலர்! இச்சிறுகதை தொகுப்பின் முதல் நன்றியை பெண்கள் மலருக்கு உரித்தாக்குகிறேன். தினமலர் பெண்கள் மலர், வாரமலரில் வெளிவந்த படைப்புகள்தான் என் எழுத்தை அடையாளப்படுத்தியது.

    நிறைய சிறுகதைகளை பாக்யாவில் பிரசுரித்தும், இச்சிறுகதை தொகுப்பிற்கு அணிந்துரையை இயக்குனர். பாக்யராஜ் அவர்களிடம் வாங்கி கொடுத்த சகோதரர் கண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி!

    மேலும் நன்றி சொல்ல... பலகையில் எழுதும் காலம் பாராட்டிய சென்னை இலக்கிய வட்ட நட்புகள் - ‘உரத்த சிந்தன’ உதயம்ராம், சுகந்தி நாரயணன், பதிப்பாளர் தமிழினியன், சு.ஆ. பொன்னுச்சாமி மற்றும் பிரசுரித்த பத்திரிக்கைகள் தினத்தந்தி, ராணி, தேவதை, தங்க மங்கை. புத்தகம் போடுவதில் பெண்கள் எதிர்நோக்கும் பல சிரமங்களை உடைத்து மிக எளிமையாக புத்தக கனவை கையில் கொடுத்திருக்கிறது புஸ்தகா பதிப்பகம். புஸ்தகாவை வரவேற்கிறோம்! புஸ்தகா பதிப்பகத்திற்கு மிக்க நன்றி!

    உஷா அன்பரசு.

    1. பிரம்மாக்கள்

    லேசாக தூறல் ஆரம்பித்தது. மழை பிடிக்கும் முன் ஸ்கூலுக்கு சென்றுவிடலாம் என்று பஸ்ஸைவிட்டு இறங்கியதும் வேகமாக அடியெடுத்து வைத்தேன். அவசரம் புரியாமல் செருப்பு வார் அறுந்து காலை இழுத்தது. இந்த ஊருக்கு ஆறு வருடம் கழித்து இப்போதுதான் வருகிறேன். சுற்றிமுற்றி பார்க்கிறேன்... செருப்பு கடை எதுவும் கண்ணில் தென்படவில்லை. தூரத்தில் ரோட்டோரம் குடையை விரித்து கடைபோட்டு அறுந்த செருப்புகளை ஒருவன் தைத்துக்கொண்டிருந்தான்.

    சமாளித்து நடந்து, ஏம்ப்பா... இந்த செருப்பை கொஞ்சம் தைச்சிடுப்பா... ஸ்கூலுக்கு நேரமாகுது... கால்களைவிட்டு கழற்றினேன்.

    நிமிர்ந்து பார்த்தவன், சட்டென்று என் கால்களை தொட்டு வணங்கி எழுந்து நின்று, கண்ணன் சார்... என்னை தெரியலையா? நாந்தான் உங்க மாணவன் செங்கோடன்...

    அட செங்கோடனா? பார்த்து ரொம்ப நாளாச்சு இல்ல... அதான் அடையாளமே தெரியலை... இங்க எப்படி? என்ன செய்யறே? கேள்விகள்தான் என் உதட்டிலிருந்து புறப்பட்டது.

    நினைவு ஆறு வருடங்களுக்கு முன் சென்றது...

    என் அப்பாவும் ஆசிரியர்தான். அவரிடம் படித்த மாணவர்கள் நிறைய பேர் நான் இன்னவாக இருக்கிறேன் என்று பெருமையாக சொல்லி இனிப்பு தந்து ஆசிர்வாதம் வாங்குவார்கள்.

    அதை பார்க்கும் போதெல்லாம் ஆசிரியர் பணிமேல் ஒரு மரியாதை. நானும் ஆசிரியராக வேண்டுமென்றே ஆசிரிய பயிற்சி முடித்தேன். அப்போது புதுக்கோட்டை அரசு பள்ளியில்தான் முதல் பணியாக சேர்ந்தேன்.

    டவுனைவிட்டு ஒரு கிராமத்திலிருந்தது அந்த அரசு பள்ளிக்கூடம். அரசு பள்ளிக்கூடங்கள் என்றால் ஏழைப்பிள்ளைகள் மட்டும் படிக்கும் இடமாகிவிட்டது. அந்த ஊரில் தனியார் பள்ளிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் கொஞ்சம் தொலைவு என்பதால் ஓரளவு வசதியுள்ள பிள்ளைகளும் அங்குதான் படித்து கொண்டிருந்தார்கள்.

    ஒவ்வொரு வகுப்பிலும் ஏழை மாணவர்களை தீண்டத்தகாதவர்களைபோல் ஒதுக்கி வைத்திருந்தார்கள். அப்படித்தான் என் வகுப்பில் இந்த செங்கோடனிடம் யாரும் பேசுவதில்லை.

    முதல் நாள் வகுப்பில், எல்லா மாணவர்களின் பெயரை கேட்டு, நட்பாக கை குலுக்கி வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டிருந்தேன். கடைசி பெஞ்சில் இருந்த அந்த மாணவன் மட்டும் தயங்கி நின்று கொண்டிருந்தான். எண்ணெய் காணாமல், வறண்ட தலைமுடியுடன் அழுக்குச் சட்டையுடன் என்னிடம் வர தயங்கி கொண்டிருந்தான்.

    வாப்பா... தம்பி உன் பேர் என்ன...?

    பக்கத்திலிருந்த சில மாணவர்கள், அய்யய்யே... சார்... அவனுக்கு கை கொடுக்காதீங்க அவன் குளிச்சே இருக்கமாட்டான்...

    நான் அதை காதில் வாங்காமல் அவனை பார்த்து புன்னகைத்து, இங்க வாப்பா... உன் பேரை தயங்காம சொல்லு...

    செங்கோடன் சார்...

    அவன் கையை பிடித்து குலுக்கி, குட்... நல்லா படிக்கணும், பாடம் புரியலைன்னா எப்ப வேணா எங்கிட்ட சந்தேகம் கேட்கலாம். வகுப்பு முடிஞ்சதும் என்னை வந்து பாரு...

    தலையாட்டினான். வகுப்பு முடிந்ததும் ஓய்வு அறையில் இருந்த என்னிடம் வந்தான்.

    செங்கோடா பள்ளிக்கு வரும்போது தினமும் குளிக்கணும். குளிச்சாதான் சுகாதாரமா இருக்க முடியும் என்ன...?

    Enjoying the preview?
    Page 1 of 1