Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naanum Kaasikku Ponen
Naanum Kaasikku Ponen
Naanum Kaasikku Ponen
Ebook124 pages49 minutes

Naanum Kaasikku Ponen

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1990-களின் ஆரம்ப காலத்தில் தனியாளாக ஒருவன் அதுவும் முதன்முதலாக ரயிலில் காசிக்கு வேலை தேடி நேர்முகத்தேர்வுக்கு செல்கிறான். கையில் செல்போனோ, கம்ப்யூட்டரோ அல்லது கூகுளோ இல்லாத காலகட்டம். அப்படி பிரயாணப்பட்டபோது அவன் அங்கு புது இடத்தில் எப்படி மாட்டிக்கொண்டு சமாளித்தான்? எந்த மாதிரியான பிரச்சினைகளை அவன் எதிர்கொண்டான்? ரயில்பயண அனுபவங்கள் என பல சுவாரசியமான கலாட்டாக்கள். கடைசியில் அவனுக்கு வேலை கிடைத்ததா இல்லையா? இவை எல்லாவாற்றையும் நம் கற்பனையிலேயே காசிக்கு சென்று காட்சிப்படுத்தி அனுபவித்து மகிழ வாருங்கள் போகலாம் நாமும் காசிக்கு...

Languageதமிழ்
Release dateAug 26, 2023
ISBN6580168110063
Naanum Kaasikku Ponen

Related to Naanum Kaasikku Ponen

Related ebooks

Related categories

Reviews for Naanum Kaasikku Ponen

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naanum Kaasikku Ponen - Ravikumar Veerasamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நானும் காசிக்குப் போனேன்

    Naanum Kaasikku Ponen

    Author:

    ரவிக்குமார் வீராசாமி

    Ravikumar Veerasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ravikumar-veerasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பொறுப்புத் துறப்பு

    நானும் காசிக்குப் போனேன்

    1. அழைப்பு

    2. ஏற்பாடு

    3. வடக்கே போகும் ரயில்

    4. ரயில் சிநேகம்

    5. ரயில் வாசம்

    6. தனிக்காட்டு ராஜா

    7. தொலையும் நேரம்

    8. சங்கமக் கலக்கம்

    9. க்யாரே... செட்டிங்கா

    10. வி.ஐ.பி.

    11. ஒண்ணுக்குள்ள ஒண்ணு

    12. திரும்பவும் பிரிவு

    13. உள்ளேன் அய்யா

    14. தேர்வெழுதிக் காத்திருந்த...

    15. ஆபிசர் வாழ்வு

    16. வேற்றுமையில் ஒற்றுமை

    17. நகர் வலம்

    18. தலை முழுகல்

    19. நம் பெருமை

    20. அனுபவம் புதுமை

    21. சமயோஜிதம்

    22. கூட்டுச் செயல்

    23. தனிமை... கொடுமை

    24. மௌ-கிக்

    25. ஃபேர்வெல்

    26. நேர்முகச் சந்திப்பு

    27. டாட்டா... பைபை...

    28. சரி... அப்புறம் என்னாச்சு?!

    பொறுப்புத் துறப்பு

    இந்தக் பயணக்கதை முழுக்க முழுக்க என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில், படிப்பவர்களின் ரசனைக்காக ஆங்காங்கே என் சொந்தக் கற்பனைகளைக் கலந்து, என்னால் சுயமாக எழுதப்பட்டது ஆகும். இதில் குறிப்பிடப்பட்ட செய்திகளும், இடங்களும், நிகழ்வுகளும், கதாபாத்திரங்களும் என் சொந்த அனுபவத்துக்கும் கற்பனைக்கும் உட்பட்டதே ஆகும். யாரையும் குறிப்பிடுவன அல்ல என்பதையும் இதன்மூலம் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கதைக் கட்டுரை முழுக்க முழுக்க எனக்குச் சொந்தமானது மற்றும் உரிமையானதும் ஆகும். இதை மறுபதிப்பு செய்யவோ அல்லது இதைப் பயன்படுத்தவோ வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நானும் காசிக்குப் போனேன்

    நானும் காசிக்குப் போனேன். ஆமாம், நிஜமாகவே நானும் காசிக்குப் போயிருக்கேன். என்னுடைய கல்லூரித் தோழி லலிதாவும் பள்ளித் தோழர் பூபதியும் சமீபத்தில் தாங்கள் காசிக்கு சென்று வந்ததைப் புகைப்படங்களாகவும் செய்திகளாகவும் வாட்ஸ்-ஆப் மூலமாகப் பகிர்ந்து கொண்டார்கள். அந்த இடங்களைப் பார்க்கும் போதும் அந்தச் செய்திகளைப் படிக்கும் போதும் என் பயணகால நிகழ்வுகள் எல்லாம் என் கண்முன்னே நினைவுகளாய் வந்தன.

    நான் காசிக்குப் போய் வந்தது என் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத அனுபவம். அப்பொழுது நடந்த பல சுவாரசியமான நிகழ்வுகளை நான் பல தருணங்களில் மற்றவர்களுடன் பேசி மகிழ்ந்தது உண்டு. நான் பயணப்பட்ட காலகட்டத்தில் என்னிடத்தில் கேமராவோ, ஸ்மார்ட் ஃபோனோ இல்லை. இப்போது போல் சமூக ஊடகங்களும் அப்போது இல்லை. இருந்த போதும் அந்தப் பிரயாண நினைவுகள் எல்லாம் என் மனதில் ஆழமாக, பசுமையாகப் பதிந்து இருந்தன.

    அந்த சுவாரசியமான நினைவுகளையும், பிரயாண அனுபவங்களையும் எழுத்து மூலமாக ஒரு பயணக் கதையாகச் சொல்லலாமென, தினமும் ஒரு பகுதியாக, மொத்தம் இருபத்தியேழு பகுதிகளைக் கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் தொடர்ந்து வாட்ஸ்-ஆப் மூலமாக என் நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்தபோது அதற்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்தன. அவர்களின் பாராட்டுகளும், உற்சாகமும், ரியாக்ஷனும், ரிஃப்ளக்ஸனும் எனக்குள்ளே நாம் ஏன் இதை ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிடக் கூடாது என கேள்வியையும் உத்வேகத்தையும் தந்தன.

    அந்த ஆசையில், என் படைப்புகளைத் தொகுத்து வெளியிடலாமென முடிவு செய்து உருவானதுதான் இந்தப் புத்தகம். இது என் முதல் படைப்பாகும். இப்புத்தகத்தைப் படிக்கும் அன்பர்கள் இதிலுள்ள பிழைகளையும் குறைகளையும் தயவுக்கூர்ந்து பொறுத்துக் கொள்ளவேண்டும் என அன்புடன் விழைகிறேன்.

    நான் இந்தப் புத்தகத்தை எழுதி முடிக்க பல மணி நேரங்களை என் குடும்ப வேலைகளை எல்லாம் தவிர்த்து இந்தப் பணிக்காகச் செலவிட வேண்டியிருந்தது. அதையெல்லாம் பொறுத்து, எனக்கு முழு ஆதரவாக இருந்த என் குடும்பத்தினர் அனைவருக்கும் என் நன்றியினைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    என் வாட்ஸ்-ஆப் பதிவைத் தினமும் தொடர்ந்து படித்து, பாராட்டி, ஆதரவு அளித்த என் நண்பர்கள் அனைவருக்கும் என் மரியாதை கலந்த நன்றியைச் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

    தாங்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தைப் படித்து ரசிக்க அன்புடன் வேண்டுகிறேன். தங்களது கருத்துகளை, rush2ravikumar@yahoo.com என்ற மின் அஞ்சல் (அ) 1-571-388-8304 என்ற வாட்ஸ்-ஆப் எண் வழியாகத் தொடர்பு கொள்ளலாம். நன்றி.

    ரவிக்குமார் வீராசாமி

    பிப்ரவரி, 2023

    1. அழைப்பு

    நான் காசிக்குப் போறேன் எனச் சொன்னவுடனே, அதுக்குள்ள என்னப்பா வயசாயிருச்சா? சன்யாசமா? சடங்கா? திதி குடுக்கறயா? தோசம் ஏதும் கழிக்கணுமா? எனப் பலருடைய கேள்விகளும் சந்தேகங்களும் என்னைச் சூழ்ந்தன.

    அதுவும் நான் என்னுடைய இருபது வயதில் காசிக்குப் போகிறேன் என சொன்னதால் என்னை எல்லோரும் மேலேயும் கீழேயும் பார்த்தார்கள். ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டாம் வருடம், நான் ஈரோட்டில் எஞ்சினியரிங் கடைசி ஆண்டு படித்த சமயம் அது. இந்தியன் ஏர் ஃபோர்ஸ் பைலட் ஆபிசர் வேலைக்கு அப்ளிக்கேசன் போட்டிருந்தேன். வாரணாசி கேண்டில் இன்டெர்வியூ என்று அழைப்புக் கடிதம் வந்தது.

    நான் அப்போதுதான் முதல் முறையாக வாரணாசி என்ற ஊரின் பெயரையேக் கேள்விப்பட்டேன். அப்போது எல்லாம் நம்மிடம் கூகுளோ இன்டெர்நெட்டோ இல்லை. நமக்குத் தெரிந்த பூகோள அறிவில் அது எங்கேயோ வடக்கில் இருக்கிறதென்று மட்டும் நன்றாகத் தெரியும். இன்டெர்வியூக்குப் போக வீட்டில் பெர்மிஷன் கேட்டேன். டேய், அது காசிக்குப் பக்கத்துல போகணும்டா, இதெல்லாம் உனக்குத் தேவையா? அவ்வளவு தூரம் போவணுமா? என்றுக் கவலையுடன் கேட்டார்கள்.

    அப்போதுதான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ‘காசின்னா கோயில், குளம், ஆறு, திதி, இறுதிச்சடங்கு அது இதுன்னு ஒரே பக்தி மேட்டராதான் இருக்கும், ஏர் ஃபோர்ஸும் அங்க இருக்குமா என்ன?’ என சந்தேகம் இன்னுமும் வலுத்தது. ‘காசிக்கு எதுக்காக நாம போவணும்? ஒருவேளை ரெண்டு ஊரும் ஒண்ணுதானா?’ என என்னுடைய சந்தேகத்தைத் தீர்க்க இந்தியா மேப்பை எடுத்துப் பார்த்தப் பிறகுதான், ‘ரெண்டு ஊரும் ஒண்ணுதான்’ எனத் தெரிந்தது.

    ‘இது நிஜமான இண்டெர்வியூதானா?’ என நானும் அந்த லெட்டரைத் திருப்பித் திருப்பி பார்த்தேன். கவா்மெண்ட் சீல் எல்லாம் சரியாகத்தான் போட்டு இருந்தது. அது அரசாங்கத் தபால் வேறு, நான் நம்பித்தான் ஆகணும். போக வர போக்குவரத்து செலவும் அவங்களே குடுத்துருவாங்களாம், தங்கறதுக்கும் சாப்புடறதுக்கும் அங்கேயே ஏற்பாடாம் என்று வீட்டில் விசயத்தை எடுத்துச் சொல்லி நான் காசிக்குப் போக சம்மதமும் வாங்கிவிட்டேன்.

    நான் இப்போது முதலில் ட்ரெயின் டிக்கட்டை வாங்க வேண்டும். முக்கியமான விசயம் என்னவென்றால், ஒரு வழி டிக்கட்டுதான் வாங்கணும் என லெட்டரில் சொல்லி இருந்தது. ஏனென்றால் இன்டெர்வியூ ஒரேநாளில் கூட முடியலாம் அல்லது ஏழு நாள் கூட ஆகலாம். அதனால்

    Enjoying the preview?
    Page 1 of 1