Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kavignargalin Kaalachuvadu!
Kavignargalin Kaalachuvadu!
Kavignargalin Kaalachuvadu!
Ebook173 pages1 hour

Kavignargalin Kaalachuvadu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த ஆண்டு தமிழ்த் திரைப்படம் தொடங்கி 75 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த வருடத்தில் இரண்டு மாபெரும் கவிஞர்களின் வராலாற்றினைப் புத்தகவடிவமாகத் தருவது சாலப் பொருந்தும்.
என்னுடைய நீண்ட கால அருமை நண்பர் கவிஞர் வாலி அவர்கள் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் குறிப்பிட்டது போல எனக்கு ஒரு கண் என்று தான் சொல்ல வேண்டும்.
பாபநாசம் சிவம், சுந்தர வத்தியார், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி, தஞ்சை ராமய்யதாஸ், ஜரினா பேகம், உவமை கவிஞர் சுரதா, புலவர் புலமைப்பித்தன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் நா. காமராசன், கவிஞர் பொன்னடியான், காமகோடியான், மு. மேத்தா, கே.பி. காமாட்சி மற்றும் ஆபாவாணன் போன்ற கவிஞர்களுடன் நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு அதிகம் இருந்தாலும், "கவிஞர்களின் காலச்சுவடு" என்னும் இந்த புத்தகத்தில் கண்ணதாசனைப் பற்றியும் கவிஞர் வாலியைப் பற்றியும் எழுதியுள்ள தம்பி இளநகர் காஞ்சிநாதன், நான் மறந்து போன சில நினைவலைகளை தன்னுடைய தமிழ் வளத்தால் மீண்டும் மலரச் செய்துள்ளார்.
எனக்கு கவிஞர் கண்ணதாசனும், கவிஞர் வாலியும் இரண்டு கண்கள். மூன்றாவது கண் நெற்றிக்கண். அது தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இப்படி பேரும் புகழும் வாய்ந்த இரண்டு கவிஞர்களின் வரலாற்று நூலை அழகாகத் தொகுத்து, ஆத்மார்த்தமாக இரண்டு பேருக்கும் இரண்டு காயத்ரி மந்திரங்களை வடித்திருப்பது புதுமையாகவும் அதே சமயத்தில் தன்னுடைய குருபக்தியையும் வெளிப்படுத்திருப்பது மிகவும் போற்றுதற்குரியது.
எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு நல்லருள் தரவேண்டும் என்று வேண்டிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் மேலும் பல நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580130104855
Kavignargalin Kaalachuvadu!

Read more from Elanagar Kanchinathan

Related to Kavignargalin Kaalachuvadu!

Related ebooks

Reviews for Kavignargalin Kaalachuvadu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kavignargalin Kaalachuvadu! - Elanagar Kanchinathan

    http://www.pustaka.co.in

    கவிஞர்களின் காலச்சுவடு!

    Kavignargalin Kaalachuvadu!

    Author:

    இளநகர் காஞ்சிநாதன்

    Elanagar Kanchinathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/elanagar-kanchinathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இறை வணக்கம்

    எளியேனைப் பற்றி சில வரிகள்...

    அணிந்துரை

    கவிஞர் கண்ணதாசன்

    கவிஞர் வாலி

    கவியரசர் கண்ணதாசன்

    மலரும் நினைவுகள்....

    யுகக் கவிஞர் வாலி

    29.10.2006-கவிஞர் வாலிக்கு பாராட்டு மழை

    வாலிக்கு பாட்டியின் பிறந்தநாள் வாழ்த்து

    வாழ்த்துவோம் வாங்க!

    உன் சுவட்டுக்குப் பின்னால்...

    வாலி 75

    இறை வணக்கம்

    கன்னித் தமிழ் அன்னை

    கற்பகாம்பாள் மயிலையிலே!

    வண்ணத் தமிழூட்டி

    வாயாற முத்தமிட்டு

    என்னையும் ஆளாக்கி

    தமிழ்க் கடலில் நீந்தவிட்டாள்!

    தென்னை உயரமென

    மெல்ல வளருகிறேன்!

    அன்னை மடிசுமந்து

    ஆராரோ பாடியதால்

    இன்பத் தமிழ் எனக்குள்

    ஊற்றெடுத்து ஊறிவர

    இங்கே என் கற்பனையை

    சபையேற செய்கின்றாள்!

    எங்கே எவர்பிறந்தாலும்

    அன்னைக்கே முதல் வணக்கம்!

    அறிவளித்த தந்தைக்குப்

    பின் வணக்கம்!

    கண்ணைத் திறந்து வைத்து

    கற்பனையில் மிதக்கவிட்ட

    கவியரசர் கண்ணதாசனுக்கும்

    கவிஞர் வாலிக்கும் என்குருவணக்கம்!

    ஆதியின் மூலம் அந்த

    தேவாதிராஜன் திருக்கச்சியின்

    திசைக்கும் என் அன்பு வணக்கம்!

    மாமலை ஸ்ரீநிவாசன்

    மகிமைக்கும் என் வணக்கம்!

    காவிரியின் குளிரோடு

    தென்றலது பாடிவர

    பள்ளி கொண்ட திருவரங்க

    நாதனுக்கும் என் வணக்கம்!

    நோய் தீர்க்கும் வள்ளல்

    அந்த திருஎவ்வுள்

    கிடந்தானுக்கும் என் வணக்கம்!

    குலதெய்வம் இளநகர் பெருமானாம்

    ஸ்ரீநிவாசனுக்கும் என் வணக்கம்!

    ஆதரித்த வள்ளல் பெருமகனார்

    ஆனந்த தாண்டவ நடராஜனுக்கும்

    என் வணக்கம்!

    குடந்தைக் கிடந்தானாம் சாரங்க

    வில்லேந்தும் இராமமூர்த்திக்கும்

    என் வணக்கம்!

    ஜெயதாரிணி அறக்கட்டளை என்ற

    அந்த ஜெயம் தரும் ஏணி

    பத்மநாபனுக்கும் என் நட்பின் வணக்கம்!

    கண்ணசைவில் ஒரு கீதம்

    கையசைவில் வரும் தாளம்

    பண்ணிசையில் துள்ளி ஓடும்

    மெல்லிசையில் என் மோகம்!

    காலசைய வரும் நடனம் – குதி

    காலசைய சலங்கை நளினம்

    மெய்யசைய வரும் சரணம்

    புதுமைகள் பொங்கி வழியும்!

    இரவசைய வரும் நிலவும்

    இதயத்தை மெல்ல வருடும்

    இவர் இசையில் எந்த இரவும்

    இதயமாய் நெஞ்சில் பதியும்!

    நடுநிசியில் பாடல் துவங்கும்

    காதோடு மெல்ல இழையும்

    மெதுவாக இரவு மறையும்

    பெரிதான சுமையும் குறையும்!

    பழுதான இதயம் இயங்கும்

    பலமான இசையின் இயக்கம்

    நடமாடும் கோயில் தெய்வம்

    இசை மேதை இருவர் வடிவம்!

    பல்லாண்டு இசையின் பயணம்

    பாராண்ட இசையின் வேதம்

    கல்லாத நெஞ்சை கரைக்கும்

    இசைஞானி ராக பாவம்.

    எல்லார்க்கும் பொதுவான இசையில்

    வல்லானும் மயங்கி வருவான்

    எல்லோரும் சுகமாக வாழ்வோம்

    நல்லாசி இறைவன் தருவான்!

    - இளநகர் காஞ்சிநாதன்

    எளியேனைப் பற்றி சில வரிகள்...

    15-6-1952 ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தப்பூர் மாவட்டத்தில் தாட்பத்ரி என்னும் ஊரில் பிறந்தேன்.

    நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது முழு ஆண்டுத் தேர்வில் ஒரு மார்க்கில் தமிழில் தோற்று விட்டேன். எனக்கு அப்பொழுது என் தந்தையிடம் இருந்து கிடைத்த வசை வார்த்தை கேவலம் உன்னால் தாய் மொழியில் பாஸ் மார்க் கூட வாங்க முடியவில்லை. நீ யெல்லாம் எப்படி தான் வாழ்க்கையில் முன்னேறி உருப்பட போறீயோ? என்று திட்டித் தீர்த்து விட்டார். அன்று துவங்கி எனக்கு தமிழ் மீது ஒரு காதல். அதற்கு வித்திட்டார் போல் பாரதிதாசனின் பஞ்சவர்ணக் கிளி என்ற படத்தில் வரும் பாடல் வானொலியில் ஒலிக்க என்னை மிகவும் கவர்ந்தது. அந்தப் பாடல் தமிழுக்கும் அமுதென்று பேர். அப்படி நான் சிந்தித்துக் கொண்டு என் வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று உறுதி பூண்டு கொண்டனே.

    நான் வைணவக் கல்லூரியில் நுழைந்தது 1969-70. என்னுடைய இஷ்ட தெய்வம் காஞ்சியில் இருக்கும் வரதராஜப் பெருமானை நானும் என் நண்பர்களும் சேர்ந்து தரிசிக்கச் சென்றிருந்தோம். அப்பொழுது நான் இறைவனிடம் என்னையும் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்க ஏதாவது சாதனை செய்ய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அதன் விளைவாக என்னுடைய கனவில் பெருமாள் தோன்றி எனக்கு காஞ்சி நாதன் என்ற பெயரை சூட்டி பிற்காலத்தில் உனக்கும் ஒரு காலம் வரும் என்று கூறி மறைந்தார். அதன் பிறகு காஞ்சிநாதன் என்ற பெயரை நான் எனக்குள்ளே சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அன்று விடியற்காலை 2.00 மணி அளவில் எனது முதல் கவிதை உதயமானது.

    நான் கவிபாட கலைவாணி இசைமீட்ட என்ற பாடலை எழுதினேன். முதலில் அச்சத்தின் காரணமாக அதை நான் யாரிடமும் காட்டவில்லை. ஒரு நாள் என் நண்பர்களோடு சேர்ந்து கல்லூரியில் உள்ள தோட்டத்தில் மதியவேளை உணவு சாப்பிடும் போது இந்தப் பாடலைக் காண்பித்து அவர்களிடம் கருத்தைக் கேட்டேன். 'யேய் நீயா எழுதின? நல்லா இருக்கே பேசமா படிக்கறத விட்டுட்டு, எங்கேயாவது படத்துக்கு பாட்டெழுத போடா' என்று ராதா கிருஷ்ணன், மோகன், ஸ்ரீதர் போன்ற நண்பர்கள் கிண்டல் அடித்தார்கள். ஆனால் அதை நான் யாரிடமும் காட்டிக் கொள்ள வில்லை.

    பிறகு நிறைய சினிமா பாடல்கள் கேட்கும் பழக்கம் ஏற்பட்டது. குறிப்பாக சிலோன் வானொலி நிலையத்தில் வைக்கும் அந்த பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அப்பொழுதெல்லாம் தொலைக் காட்சி கிடையாது. சிலோன் வானொலி கேட்பது தான் பெரிய விஷயமாக இருக்கும். திரைப்படப் பாடல்கள் பல யார் எழுதியது, யார் இசையமைத்தது, யார் பாடியது? என்று கூறிவிட்டு படத்தின் பெயரையும் படப்பாடல்களின் கருத்தையும் கூறும் போது கண்ணதாசனின் பாடல்கள் பல என்னைக் கவர்ந்தது. அப்படி ஒலிக்கும் பாடல்கள் டி. எம். சௌந்தரராஜனோ அல்லது பி. சுசீலாவோ அற்புதமாகப் பாடி இருந்தாலும் நம் கண்களுக்கு முன் சிவாஜியோ அல்லது எம்.ஜி. ஆரோ சாவித்திரியோ அல்லது சரோஜாதேவியோ தான் நம் கண்களுக்குள் கொண்டு நிறுத்தினார்கள்.

    நான் அப்போது தியாகராய நகரில் தான் வசித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் எப்படியாவது கண்ணதாசனை சந்திக்க வேண்டும், அவரோடு பேச வேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போக அந்த ஆசை என்னுடைய கல்லூரி தமிழ் மன்றத் துவக்க விழாவினால் நிறைவேறியது.

    நானும் என் நண்பரும் தமிழ் மன்ற செயலாருமாகிய திரு. சு.பா. இராம மூர்த்தியும் கவிஞரின் வீட்டிற்குச் சென்று அவருடைய சம்மதத்தை பெற்று கல்லூரிக்கு வரவழைத்தோம். அப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

    இப்படி பல காலம் சென்றது. கல்லூரி வாழ்வும் முடிந்து நண்பர்கள் பலபேரும் திசைக்கு ஒருவராகப் பிரிந்து சென்றோம். சிலர் மேல் படிப்புக்குச் சென்றார்கள். நான் வேலை தேடும் படலத்தில் இறங்கினேன். இரண்டு வருடம் வேலை இல்லாமல் தவித்தேன். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாத காரணத்தால் டைப்ரைட்டிங் சார்ட்ஹேன்ட் கற்றுக் கொண்டேன். அப்பொழுது தியாகராயநகரில், ராமசாமி தெருவில் உள்ள ஸ்ரீராம விலாஸ் டைப்பிங் இன்ஸ்டிட்யூட் மிகவும் பிரசத்தி பெற்றது. அதில் சேர்ந்து கொண்டு ஆங்கிலத்தில் டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றேன்.

    தமிழ் மீது கொண்ட காதலால் தமிழ் டைப்பிங்கும் கற்றுக் கொள்ள ஆவலாய் இருந்தது. எனக்கு அப்பொழுது அதற்கு பணம் கட்ட வசதி இல்லாததை அறிந்த திரு. நடராஜன் என்பவர் (இன்ஸ்டிட்யூட்டின்) நிறுவனர் எனக்கு இலவசமாக தமிழ் டைப்பிங் கற்றுக் கொள்ள உதவி புரிந்தார். அவரை என் வாழ்நாள் உள்ள வரையிலும் மறக்க முடியாது. அன்று அவர் எனக்கு கொடுத்த ஆதரவும் ஊக்கமும் இன்று எனக்கு கணினியில் நேரடியாக எதையும் செய்யும் அளவிற்கு உதவிபுரிகிறது.

    இத்தனை காலம் கையில் எழுதி வந்த நிலைமை மாறி கவிதை, நாடகம், கட்டுரை என்பவற்றை நேரடியாக கணினியில் பதிவு செய்து வைக்க முடிகிறது. இந்த விஞ்ஞான வளர்ச்சிக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். இப்படி கவிதைகள் பல புத்தகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிரசுரமாகத் தொடங்கியது. ஆனால் ஊர் சொல்லும் அளவுக்கு வாய்ப்பு கிட்டவில்லை.

    எல்லோரும் நீ உன் குலதெய்வத்திற்கு பூசை செய் உன் வாழ்வு மலரும் என்று கூறினார்கள். எனக்கு என் குலதெய்வம் எங்கிருக்கிறது என்று தெரியாது. திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளைத் தான் குலதெய்வமாக கருதி மொட்டை போடுவதும் காணிக்கை செலுத்துவதுமாக இருந்து வந்தேன். ஆனால் குலதெய்வம் கோயில் இருக்கும் இடம் இளநகர் என்று தெரியுமே தவிர அங்கு செல்லும் மார்க்கம் மிகவும் கடினம் என்று உணர்ந்து நெடுநாள் வரையில் செல்லாமல் இருந்தேன்.

    8.3.2004 அன்று காலையில் நானும், என் மனைவி, என் சகோதரி மூவரும் ஒரு காரில் திருப்புட்குழியில் ஒரு சுப நிகழ்ச்சிக்காக சென்றிருந்தோம். அந்த சுபநிகழ்ச்சி முடிந்தவுடன் சென்னைக்குத் திரும்பும் வழியில் என் சிற்றப்பா பையன் இராகவனிடம் இளநகர் பற்றி விசாரித்தேன். காஞ்சிபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது என்றான். அவனையும் வண்டியில் அழைத்துக் கொண்டு, காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து இளநகர் சென்று எங்கள் குலதெய்வம் ஸ்ரீநிவாசப் பெருமாளையும், பத்மாவதி தயாரையும் தரிசிக்க நேர்ந்தது.

    கோயில் சிதிலமடைந்து மண்டபத்தில் வௌவ்வாலும் பூரான், பாம்பு போன்ற விஷ சந்துக்களும் மற்றும் ஒட்டடையும் நிறைந்து காணப்பட்டது. எங்கள் மூதாதையர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் இங்ஙனம் இருப்பதை கண்டு கண்கள் கலங்கியது. ஆமாம், சுமார் 800 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட கோயில். இது ஒரு பட்டாச்சாரியாரின் அன்பின் காரணமாக ஒரு கால

    Enjoying the preview?
    Page 1 of 1