Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pillai Prayathiley
Pillai Prayathiley
Pillai Prayathiley
Ebook125 pages46 minutes

Pillai Prayathiley

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுவயது அன்பு கூட்டுப் புழு பருவம்.

அது வண்ணச் சிறகு பெற்று பறக்க ஆரம்பிக்கும் போது விதி வசத்தால் ஒரு சிறுவன் கையில் பிடிபட்டு கயிற்றில் கட்டப்பட்டு கயிறு வழி வாழ்க்கை அமைவது காலத்தின் கொடுமை வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களில் இதுவும் ஒன்று. இந்த குறு நாவல் கதாநாயகன் கற்ற‌ பாடத்தை படியுங்கள்.எண்ண வெம்மையில் கண்ணீரும் காணாமல் போகும். இது கதையல்ல. வாழ்க்கை. வாசித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580100810773
Pillai Prayathiley

Read more from Vimala Ramani

Related to Pillai Prayathiley

Related ebooks

Reviews for Pillai Prayathiley

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pillai Prayathiley - Vimala Ramani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பிள்ளை பிராயத்திலே

    (குறுநாவல் தொகுப்பு)

    Pillai Prayathiley

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    பொருளடக்கம்

    பிள்ளை பிராயத்திலே

    உறவுகள் மாறலாம்

    எங்கிருந்தோ வந்தான்

    என்ன விலை அழகே?

    பிராயச் சித்தம்

    பிள்ளை பிராயத்திலே

    (குறுநாவல்)

    1

    அம்பாள் சந்நிதியின் முன் கண் மூடி நின்றிருந்தேன் எத்தனை நாட்களுக்குப் பிறகு இங்கு வருகிறேன் என்னுடன் அபிராமையும் நின்றிருந்தாள்.

    அவள் தான் சொன்னாள்

    "டாடி இந்த சம்மர் லீவுக்கு என்னை ஏதாவது ஒரு வித்தியாசமான இடத்துக்குக் கூட்டிட்டு போங்க டாடி

    ஊட்டி கொடைக்கானல் இதெல்லாம் வேண்டாம்."

    அபிராமி என் செல்ல மகள் ரெசிடென்சி பள்ளியில் படித்து வருகிறாள். வருடா வருடம் சம்மர் லீவுக்கு தான் வீட்டிற்கு வருவாள்.

    நான் தீர்மானித்தேன் இந்த முறை அழைத்துச் செல்லப் போவது? திண்டுக்கல்...

    என்னுடைய சொந்த ஊர் நான் பிறந்த ஊர் வளர்ந்த ஊர் விளையாடிய இடம் அதன் புழுதிகளில் நான் விளையாடிய சடுகுடு ஆட்டம்... நான் அறிந்த எங்கள் தெரு அதன் நடுநாயகமாக வீற்றிருக்கும் சின்னப் பிள்ளையார் கோவில் எண்ணி பத்தே ஓட்டு வீடுகள்

    எங்கள் வீடு தான் கொஞ்சம் பெரிது மாடி வீடு நாங்கள் மாடி வீட்டு ஏழையாக அங்கு தான் வாழ்ந்திருந்தோம்

    எங்கள் வீதியின் கோடியில் பழனியின் ரயில் டிராக் இருந்தது அதன் வழியாக பழனி ரயில் செல்லும் பொழுதெல்லாம் எங்கள் தெரு பிள்ளைகள் ஒன்று கூடிவென்று சப்தம் போடுவோம்

    என் தாய் சொல்வார்

    மகாத்மா காந்தியடிகளின் 1921 இல் மதுரை கூட்டத்தில் கலந்து கொண்டு இனி நான் மேற்சட்டை அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்து லண்டனுக்குக் கூட அதே வேட்டி உடையுடன் வட்டமேசை மகாநாடுகளில் கலந்து கொண்ட நினைவு அதை அடுத்து சுதந்திர இந்தியாவில் அவர் பொதுக்கூட்டம் நடத்தும் இடங்கள் எல்லாம் சென்று பிரசாரம் செய்தது தேசியம் பேசியது அந்த வரலாற்று சிறப்புகளை எல்லாம் என் தாய் கூறுவார்

    ஒருமுறை மதுரையில் இருந்து பழனி போகும் ரயிலில் ஒரு பொதுக்கூட்டம் முடித்து அவர் போன போது எங்கள் ரயில்வே டிரேக்கின் வழியாக தானே அந்த ரயில் போக வேண்டும் என்று அந்த தெருக்காரர்கள் எல்லாம்வந்தே மாதரம்என்று கூறியபடி காத்திருந்தார்களாம்.

    என் தாய் அதிகம் படித்ததில்லை ஆனால் புத்திசாலி

    நாங்கள் வாழ்ந்த இடம் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம்

    இங்கு இருக்கும் அத்தனை பேரும் ஒரே குடும்பத்தினர் போல ஒன்றாக பழகுவோம்

    யாருக்காவது உதவி தேவை என்றால் ஓடிப் போய் உதவுவோம்

    செல்போன் இல்லாத காலம் அது

    பண்டிகை நாட்களில் அன்பை பகிர்ந்து கொள்வோம்

    விழாக்களை பகிர்ந்து கொள்வோம்

    சதுர்த்தி விழா, கார்த்திகை தீபம், சொக்கப்பானை என்று எல்லா விழாக்களையும் கொண்டாடுவோம்

    பிள்ளையார் முன் அனைவரும் கை குவித்து ஸ்லோகங்கள் சொல்லுவோம்வேக முகத்து விநாயகனேஎன்று தொழுவாரும் உண்டு

    கைத்தல நிறை கனி அப்பமொடு அவல்பொரிஎன்று திருப்புகழ் பாடுகிற நண்பர்களும் உண்டு

    ஐந்து கரத்தனை ஆறுமுகத்தானைஎன்று பாடுகிறவர்களும் ஒன்று

    பக்தி தான் முக்கியமானது யார் பாடுகிறார்கள் குரலில் அபஸ்வரம் இல்லையா என்றெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை

    திண்டுக்கல்லை சுற்றி சின்ன சின்ன ஜமீன்கள் சமஸ்தானங்கள் ஆங்கில ஆட்சிகளை நினைவுறுத்தும் சின்னங்கள்

    சிறுமலை காற்று சிறுமலை வாழைப்பழம் காந்திகிராமம் சின்னாளப்பட்டி சேலை மலைக்கோட்டை கோட்டை மாரியம்மன் கோவில் அபிராமி அம்மன் கோவில்

    இப்படி எத்தனையோ சிறப்புகள் எங்கள் ஊருக்கு உண்டு

    பாலகிருஷ்ணாபுரம் சற்று தள்ளி ஊருக்கு வெளியே இருக்கும்.

    நான் படித்த காலத்தில் அவ்வளவாக வளர்ச்சி அடையாத ஊர்

    ஊரை நினைத்ததும் பழைய நினைவுகள்

    என் தந்தைக்கு சவரம் செய்ய ஒரு நாசுவன் வருவார் நான் தான் உள்ளே சென்று அம்மாவையும் கேட்டு வெந்நீரை ஒரு மக்கில் வாங்கி வருவேன் அவரிடம் இருக்கும் உபகரணங்களை நான் தண்ணீரை விட அவைகளை எல்லாம் சுத்தமாக கழுவி என் தந்தைக்காக கைகட்டி காத்திருப்பார்

    என் தந்தை துண்டு கட்டிக்கொண்டு உள்ளே இருந்து கம்பீரமாக வருவார்

    எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் பவளமல்லி மரத்தின் கீழே அமர்வார்.பூக்கள் பாய் விரித்தது போல் கீழே பரந்து கிடக்கும்.

    என்ன பழனி எப்படி இருக்க?

    நல்லா இருக்கேன் தொரஎன்பார் பழனி

    இங்கு கொஞ்சம் வசதி படைத்தவர்கள் பிரிட்டிஷ்காரர் தொடர்புடையவர்கள் எல்லோரையும்

    தொர தொரஎன்றுதான் அழைப்பார்கள்

    அப்பா துரை என்றால் என் தாய் துரைச்சாணி நான் சின்னதுரை

    சின்னதுரை என்ற உடனே ஊமைத்துரை நினைவு வருகிறது

    ஊமைத்துரை கட்டபொம்மனின் தம்பி

    பிரிட்டிஷ் ஆதிக்கும் செழித்த காலத்தில் ஊமத்துரையை பிடிக்க ஆங்கிலேயர் வலை வீசியபோது திண்டுக்கல் மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து ஊமைத்துரை தற்கொலை செய்து கொண்டதாக செய்தி கூட உண்டு.

    ஒருவர் மட்டுமே பதுங்கி வெளி மனிதர்களை கண்காணிக்க கூடிய சின்ன சின்ன வட்ட வடிவ பதுங்கு அறைகள் மலைக் கோட்டையில் உண்டு பழைய பீரங்கி ஒன்று போர்காலச் சின்னமாக அங்கிருக்கும்.

    இறங்கும் வழியில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் உண்டு

    என் தாயுடன் எப்போதாவது வடமாலை சார்ந்த நானும் கூடப் போவேன்

    பாதையில் வெயிலில் கால் சுடும் அதனால் நாங்கள் சீக்கிரமே போய் சீக்கிரமே திரும்பி விடுவோம்

    ஆஞ்சநேயர் தரிசனம் முடிந்து கீழே இறங்கி அபிராமியின் சன்னதி தரிசனத்தை முடித்து அது ஒரு அற்புதமான கனாக்காலம்

    டவுனில் தான் புடவைக் கடைகள் இருக்கும்... சொக்கய்யர் கடை சுப்பையர் கடை என்ற பெயருடன்... அவர்கள் பட்டு நூல்காரர்களாம் என் தாய் சொல்லுவார்.

    அபிராமி அம்மனுக்கு வேண்டுதல் புடவை வாங்க என் தாய் போகும் போது நானும் கூடப் போவேன். தரையில் அமர்ந்தபடி புடவைகளை பிரித்துக் காட்டுவார்கள்.

    என்னுடைய பள்ளி பருவம் நான் படித்த பள்ளி டவுனில் இருந்தது டவுனுக்கு கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் அப்போது எல்லாம் கிலோ மீட்டர் கிடையாது...  மைல் தான்.

    நடந்தே போவேன் அம்மாவிடம் சண்டை போட்டு ஒரு சைக்கிள் வாங்கி தரச் சொல்லி அடம்பிடித்தேன் சைக்கிள் வந்தது

    ஓட்ட கற்றுக் கொண்டேன் என் தெரு மண்ணில் புரண்டு படுத்து விழுந்து எனக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தவர் எங்கள் தெருவின் மூத்த நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்று பெயர்

    அவன் தான் வயதில் பெரியவன் ஆனால் பிறவி ஊமை ஆனால் நாங்கள் அனைவரும் அவனுடன் நட்புடன் பழகினோம் அவனை சில பேர் கிட்டா என்று அழைப்பார்கள் கிட்டா என்று அழைப்பது அவனுக்கு வாயசைப்பை வைத்தே தெரிந்து விடும்

    உடனே முகம் சிவக்க சண்டைக்கு வருவான் தன்னை முழு பெயர்

    Enjoying the preview?
    Page 1 of 1