Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalluri Kanavugal
Kalluri Kanavugal
Kalluri Kanavugal
Ebook255 pages1 hour

Kalluri Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மங்களம் – கல்யாணம்சுந்தரம் இருவருக்கும் பிறந்த செல்ல மகள் பிரியா. கல்லூரி முதல் நாள் பிரியா ‘ராக்கிங்’ செய்கின்றாள். அதை தடுக்க முயன்றான் மோகன். அப்போது அவன்மேல் காதல் ஏற்பட்டது. மோகன், பிரியாவை ஏற்றுக்கொள்வானா? கல்லூரி உபச்சார விழாவின்போது மோகன் மனமுடைந்து தன் கடந்தகால கதை பற்றி பேசினான். அதன் பிறகு நடந்த நிகழ்வுகளை வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580176310772
Kalluri Kanavugal

Read more from V. Ramkumar

Related authors

Related to Kalluri Kanavugal

Related ebooks

Reviews for Kalluri Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalluri Kanavugal - V. Ramkumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கல்லூரிக் கனவுகள்

    Kalluri Kanavugal

    Author:

    வெ. இராம்குமார்

    V. Ramkumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-ramkumar

    பொருளடக்கம்

    அணிந்துரையுடன் வாழ்த்துரை!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அணிந்துரையுடன் வாழ்த்துரை!

    ‘Love makes things that no one thinks’ காதல் ஏற்படுத்தும் விளைவுகள் எவராலும் அறிந்திடப்படாதவை.

    என்ற வகையில் என் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய நண்பர் திரு. இராம்குமார் அவர்கள் கல்லூரிக் கனவுகள் என்ற புதின ஆரத்தைத் தமிழ் வாசகர்களிடையே சமர்ப்பித்திருக்கிறார். அதன் ஊடே மணிகளாகவும், மாணிக்கங்களாகவும் உவமைகளும், உருவங்களும் மிளிர்வதை இக்கதையின் சிற்பியான திரு. இராம்குமார் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

    அந்த மிளிர் ஒளியின் பழைய ‘Theme’ (கருப்பொருள்)களான போட்டி, பொறுமை, பொறாமை, வைராக்கியம் ஆகியவை இருந்தாலும் இக்காலச் சூழலுக்கு ஏற்ப புதினமாக, புதிராக இல்லாமல் (அரிசியை சோறாக ஆக்குவதோடு மட்டுமன்றி இட்லி, அடை, ஊத்தப்பம், தோசை, அதிரசம், கஞ்சி என்று பலவிதமாகப் படைப்பதுபோல) கல்லூரிச் சூழலையும் தமிழகத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான வேலூரையும், இணைத்துப் பிணைக்கப்பட்ட அருமையான, அழகான அற்புதமான இந்நாவல் படிப்பவர்களின் ஆவலைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.

    கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாகவும் அதிலே வைராக்யம் மிகுந்தவர்களாக புஷ்பாவையும், ப்ரியா, மோகனையும் சித்தரித்துள்ள கைதேர்ந்த எழுத்துச் சிற்பி திரு. இராம்குமாரை வாழ்த்த நான் சொற்களையும், சொற்றொடர்களையும் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.

    கருத்தாழமும் மருத்துவ பின்னணியும் கொண்ட அவரின் கதை என்னும் நீரோட்டத்தில் நனைந்து இன்பம் அடைகிறேன்.

    எழுத்து உளிகளால் அவர் செய்த கல்லூரிக் கனவுகள் என்ற சிற்பம் கண் கவரும் வண்ணம் மட்டும் இல்லாமல் எண்ணங்களைக் கவரும் வண்ணமாகவும் உள்ளது.

    இதுபோன்று மேலும் பல நாவல்களை இத்தமிழ் சமுதாயத்திற்கு அவர் அளிக்க இறைவனை இறைஞ்சுகிறேன்!

    அன்புடன்

    Dr. P.E. உதயக்குமார் M.B.B.S.,

    தேவகி கிளினிக்

    65, பாட்டை தெரு

    வேலப்பாடி, வேலூர் - 632 001.

    1

    சூரிய மன்மதனின் விழிப்பால், பருவமென்னும் இருள் அகன்று போய் பூமிப்பெண் வெட்கத்தில் வெளிச்சமென்னும் நாணம் கொண்டாள்... அதைப் பார்த்து சேவல்கள் குரலோசையிட்டு தரணிக்கு அறிவித்துக் கொண்டிருந்தது... காலைக் குயில்கள் சங்கீதமிட்டன... தென்றல் லேசான குளிருடன் ஒவ்வொரு வீட்டிலும் மனிதர்களின் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டிருந்தது...

    ஒரு புறம் ஜாக்கிங் என்ற பெயரில் சில நடுத்தரவர்க்கத்து வயதானவர்கள் தொப்பையைக் குறைக்க ஓடிக் கொண்டிருக்க

    மறுபுறம் அதே ஜாக்கிங் பெயரில் இளைஞர்களும் ஓடினார்கள். அதில் பலரின் கண்கள் வாசல் தெளித்துக் கோலமிடும் வயது இளம் பெண்களையும், நடுத்தர வயது பெண்மணிகளையும் ரசித்தன. அதற்காகவே ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையான உண்மை.

    வேலூரில் பூந்தோட்டம் அருமையான எழிலான பகுதி... அங்கே வியாபாரிகளும் செல்வந்தர்களும் சற்று அதிகம்... நடுத்தர வர்க்கமும் இதில் அடக்கம்... சுற்றிலும் மலைகள் இருப்பதால் எப்போதுமே இடம் ஏஸி இல்லாமல் குளுமையாக இருக்கும்... பூந்தோட்டத்தில் துபாய் கல்யாண சுந்தரம் வீடு எதுவென்றால் சிறுகுழந்தைகள் கூட கைநீட்டிக் காட்டிவிடும், அங்கேயிருக்கும் பெரிய வீடுதான் அவர் வீடு என்று! இப்போது நாம் அவர் வீட்டினுள்ளேதான் நுழைகிறோம்.

    கந்தசஷ்டி கவசம் டேப்பில் ஒலித்துக்கொண்டிருக்க... மங்களம் குளித்துவிட்டு, பூஜை எல்லாம் முடித்து இப்போது சமையலறையில் தன் ஒரே செல்ல மகளான ப்ரியா என்ற ப்ரியதர்ஷினிக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொண்டிருந்தாள்.

    சட்டென டேப் பாடும் சத்தம் நின்றது...

    மங்களத்திற்கு நன்றாகத் தெரியும்... பிரியாதான் டேப்பை ஆஃப் செய்துவிட்டுத் திரும்பவும் படுத்திருக்கிறாள் என்று! ஹார்லிக்ஸ் கோப்பையோடு தன் மகளின் பெட்ரூமை நோக்கி வந்தாள் மங்களம்.

    பிரியாவின் பெட்ரூம் மற்ற பணக்கார வீட்டு இளம் பெண்களின் பெட்ரூமைப்போல சுவற்றில் ஹிர்திக், ஷாருக்கான், விஜய், அஜீத் என இளம் கனவு நாயகர்களின் போட்டோ அலங்கரிக்காமல் சிம்பிளாக சுவற்றில் வால்பேப்பர் அலங்காரத்தில் ஆங்காங்கே பொம்மை ஸ்டிக்கர்கள் மட்டுமே அலங்கரித்துக் கொண்டிருந்தது. வலப்பக்க மூலையில் மேக்அப் செட்டுக்களுடன் பெரிதாக முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. இடப்பக்கம் சோனி ஸ்டீரியோவுடன் இரு ஸ்பீக்கர்கள், நடுவில் பெட் அதில் முயல் குட்டிபோல சுருண்டு அழகாகப் படுத்திருந்தாள் அந்த இளைய தேவதை.

    பிரியா எழுந்திரு! மணி 8.00 ஆச்சு! 9.30 மணிக்கு நீ காலேஜிக்கு போகணுமே... போய் சீக்கிரமா ரெடியாகு. இப்ப நீ தூங்கறதுபோல் நடிச்சது போதும்! மகளை செல்லமாகக் கோபித்தாள், மங்களம்.

    போ மம்மி! என நெளிஞ்சு... வளைந்தபடி சோம்பலை முறித்து எழுந்து உட்கார்ந்தாள்... (ஆங்ஹ்... நாம் இனி பிரியாவின் அழகினை வர்ணிக்கலாமே!) வைரம்போல ஜொலிக்கும் தங்க நிறம்! மெழுகினால் வரைந்த பொம்மை போன்ற அழகான, வனப்பான மேனி; ஜோதிகா, ரம்பா, சிம்ரனை எல்லாம் சேர்ந்தாற்போல ஒரு உருவம் கிடைத்தால் அது எப்படி அழகாக இருக்குமோ அதுதான் பிரியா. 22வயது காலேஜ் க்வின்... நைட்டியில் அந்தரங்க பகுதிகள் அந்தரங்கமாகவே தெரிந்தன.

    மம்மி... தூக்கம் கலைஞ்சாலும் தூங்கறதுபோல கண்களை மூடி பாவ்லா பண்றது இருக்கே! அதுதான் இன்பம், சுகம் சொர்க்கம் எல்லாமே... என்று கூறியபடியே ஹார்லிக்ஸை உறிஞ்சினாள் பிரியா...

    சரியான விளையாட்டு பிள்ளை... இந்த உறக்கம், பெட்காஃபி எல்லாமே கல்யாணம் வரைதான்... 15 வருஷமா உங்கப்பா துபாயே கதின்னு போய்ட்டாரு... வருஷத்துக்கு ஒரு மாசம் வந்து இருந்துட்டு போறாரு... உன்னை அவரு கண்டிக்கவும் இல்லை... வளர்க்கவுமில்லை... நான் வளர்த்த பொண்ணு இப்படி பொறுப்பில்லாமல் இருக்கலாமா? கேட்டாள் மங்களம்...

    அய்யோ... காலையிலே புலம்பலை ஆரம்பிச்சாச்சா? அம்மா நீயும் என்னை நல்லா வளர்த்திருக்கே... நானும் நல்லபடியா வளர்ந்திருக்கேன். நீ என்னைப் பற்றிக் கவலைப்படாதே... தாயை சமாதானப்படுத்தினாள் பிரியா.

    அது சரி... இன்னைக்கு காலேஜ் முதல் நாள். இன்னைக்காவது காலேஜ்க்கு சீக்கிரம் புறப்படக்கூடாதா?

    அம்மா! ஏற்கனவே மூணுவருஷமா பி.காம். படிச்ச காலேஜுல தானே இப்ப எம்.காமும் சேர்றேன்... சரி... சரி... பேசிகிட்டே இருந்தால் நாம பேசிகிட்டே இருப்போம்... போய் சாப்பாடு ரெடி பண்ணுங்க! நான் போய் காக்கா குளியல் குளிச்சிட்டு வர்றேன் என்றபடியே பாத்ரூமுக்குள் தஞ்சமானாள் பிரியா.

    மங்களமும் டிபன் ரெடி செய்து கொண்டிருந்தாள்.

    அடுத்த 15-வது நிமிடத்தில் டைனிங் டேபிளில் ஆஜரானாள் பிரியா.

    என்னடி இது, துணி கூட மாற்றாமல் டவலோடு... முதல்ல போய் துணி போட்டுட்டு வா! என அடிக்காத குறையாக தன் மகளைத் துரத்தினாள் மங்களம்.

    சிணுங்கியபடியே... வயிறு ரொம்ப பசிக்குதும்மா! சே! நீங்க ரொம்ப மோசம்... என்றபடியே தன் அறையில் போய் தன் வெள்ளை உடலைக் கருப்பு சுடிதாருக்குள் தஞ்சம் புகுந்து வெளியே வந்தாள்... கருப்பு சுடிதாரில் அம்சமாகவே இருந்தாள் பிரியா.

    மங்களம் ஒவ்வொரு இட்லியாக பரிமாற, பிரியா அதை ரசித்து, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

    அப்போது வெளியே காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்கவே, மங்களம் எழுந்து போய் கதவை திறந்தாள்.

    வெளியே புஷ்பா நின்று கொண்டிருந்தாள்...

    வா புஷ்பா! உள்ளே வா! என்னம்மா விஷயம்? என மங்களம் விசாரித்தாள்.

    மங்களத்தின் மற்றுமொரு வீட்டில்தான் புஷ்பா வாடகைக்கு இருக்கிறாள்... அவர்கள் வேலூருக்கு வந்து ஒரு மாதமே ஆகின்றது... 17 வயது இளம் பெண்... பிரியாவைப் போன்று ஆஹா, ஓஹோ என அழகு இல்லாவிட்டாலுங்கூட இளைஞர்கள் சைட் அடிக்கும் அளவிற்கு அழகி அவ்வளவே...

    கண்களில் ஒரு வித மிரட்சி... மனதில் ஒரு விதபயத்துடன், நா... நான் பிரியாக்காவை பார்க்கணும் என்றாள்.

    அப்போது பிரியா சாப்பிட்டு முடித்துவிட்டு புஷ்பா அருகில் வந்து, ‘வா புஷ்பா!’ என்ன விஷயம்? என வினவினாள்.

    அக்கா நான் உங்க காலேஜ்லதான் பி.காம். பர்ஸ்ட் இயர் சேர்ந்திருக்கேன்... இன்னைக்கு ஜாய்ன்ட் பண்றேன்... நீங்க, சீனியர்ஸ் எல்லாம் ராகிங் செய்யறதாக கேள்விப்பட்டேன்... எனக்கு ராக்கிங்ன்னாலே பயம்... அதுவும் கும்பலோட ஆண்களைக் கண்டால் அழுதுடுவேன்... அதனால என்னை ஒண்ணுமே செய்யாதீங்கன்னு சொல்ல வந்தேன்க்கா! பயந்தபடியேதான் கூற வந்ததைக் கூறினாள் புஷ்பா.

    பிரியா ஒரு நிமிடம் கண்களை மூடினாள்... பின், கவலைப்படாமல் போ... ஒண்ணுமே செய்யமாட்டேன்! நீ தைரியமா போ! என்றாள்.

    ரொம்ப தேங்க்ஸ் அக்கா! என புஷ்பா நன்றி கூறவும்,

    ஆங்ஹ்... அப்புறம் அக்கான்னு சொல்லாதே! எனக்கு என்னவோ மாதிரி இருக்குது! எனக்கு வயசு தூக்கலா தெரியறதுபோல பிலீங்! என்ன புரிஞ்சுதா? மிரட்டினாள் பிரியா.

    ம் சரி... என்பதுபோல அப்பாவித்தனமாக தலையாட்டினாள் புஷ்பா.

    புஷ்பா சென்ற பிறகு தன் தாயின் அருகே சென்று அம்மா... இன்னைக்கு காலேஜ்ல போய் புஷ்பாவை ஒரு வழி பண்ண போகிறேன் பாரேன்... பிரியா கூறவும்,

    என்னடி பண்ணப் போறே? ராக்கிங்கா? மங்களம் கேட்க,

    ய்யா... எனக் கூறியபடியே வெளியே வந்தவள் தனது ஸ்கூட்டியை உதைத்தாள் பிரியா.

    அடிப்பாவி  மகளே... பாவம் புஷ்பா... என வாய்விட்டே கூறினாள் மங்களம்.

    2

    பாகாயத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தள்ளி போனால் அந்த தனியார் கல்லூரி... சுற்றிலும் மலைகள்... கல்லூரிக்கு அருகே பஸ் ஸடாப்... பஸ் ஸ்டாப்க்கு அருகே பெட்டிக்கடையோடு இலவச இணைப்புப்போல ஒட்டியிருக்கும் டீக்கடை. கோ எஜுகேஷன் என்பதால் இரண்டு மூன்று மாதங்களாய் இலையுதிர்காலமாக இருந்த இந்த இடம்... தற்சமயம் பசுமையாக ஆரவாரமாக இருந்தது.

    பேருந்துகளில் இளைஞர்களும், இளைஞிகளும் கூட்டத்தில் நிரம்பி வழிந்தனர்... கல்லூரி கட்டடங்களுக்கும் இப்போதுதான் வீரம் வந்ததுபோல் கம்பீரமாகத் தோற்றமளித்து காட்சி தந்துகொண்டிருந்தது...

    கல்லூரி வாசலில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு தூரத்தில் கவனித்தாள் பிரியா... தூரத்தில் ரஞ்சன் நின்று கொண்டிருந்தான்... அவன் கூடவே ஒரு சில இளைஞர்கள், வேறு சில இளைஞர்களுடன் தகராறு செய்து கொண்டிருந்தனர்.

    பிரியா சந்தோஷத்தில் ரஞ்சனின் தோளைத் தட்டினாள்... திரும்பிய ரஞ்சன் சட்டென ஒருகணம் திகைத்து, பின் அதிர்ச்சியில் இருந்து மீண்டவனாய்... ஹாய் ப்ரியா! ஹவ் ஆர் யூ? பார்த்து எவ்வளவு நாளாச்சு? எனக் கேட்டுக் கொண்டே போனான்.

    ப்ரியா, கல்லூரி ஹீரோயின் என்றால், ரஞ்சன் கல்லூரி ஹீரோ... ஹீரோ என்றால் நெகட்டிவ் ஹீரோ... அடிதடி, ஸடிரைக், கலாட்டா எல்லாவற்றிற்கும் மூலவன்… கட்டுமஸ்த்தான உடல்... கம்பீரமான ஆண்மைத் தோற்றம், ஆனால் முன் முடி கொஞ்சம் மிஸ்ஸிங்... லட்சாதிபதி வீட்டு பையன் என்பதால் பேராசிரியர்கள் அனைவரும் ரஞ்சனை எதிர்ப்பதே இல்லை. ஆனால் பிரியாவைப் பார்த்தால் மட்டும் சரண்டர் ஆகிவிடுவான். காரணம், பிரியா மீது அவன் கொண்ட காதல் மோகம்... தன் காதலைத் தெரிவித்தபோது, பிரியா மறுக்கவே, பிரியா மனம் கவர நட்பு போர்வையில் அவள் பின்னே சுற்றுகிறான்... அப்படியாவது பிரியா நமக்குக் கிடைக்கமாட்டாளா? என்ற நப்பாசை... ஒருவேளை பிரியா தனக்குக் கிடைக்காவிட்டால் இறுதியில் கற்பழிப்பு! என்ற முடிவோடு பழகும் ஜென்ட்டிலான, கேடி... அவனுக்கு ஜால்ரா போடவே இரு சக வகுப்பு மாணவர்களும் எப்போதுமே ரஞ்சனுக்கு உண்டு.

    ஆமாம் என்ன தகராறு? எனக் கேட்டாள்.

    அதை ஏன் கேட்குறே? பொழுதும் போகலை... நீயும் வேற வரலையா? அதான் நம்ம காலேஜ் பிகருங்களை எல்லாம் வெளியிலயிருந்து சைட் அடிக்க வந்திருக்கானுக... அதைக் கண்டிச்சிட்டு இருக்கேன்... ரஞ்சன்.

    ஆமாம்! நீ மட்டும் ரொம்ப யோக்கியமாக்கும்? சரி அதைவிடு... அதைவிட இன்ட்ரஸ்ட்டான கேம் ஒண்ணு இருக்கு?

    எ... என்ன கேம்? ஆவலுடன் கேட்டான் ரஞ்சன்.

    ஆமாம்... ராக்கிங்... என்றாள் பிரியா.

    ரஞ்சனும் உடனே முகம் அக மலர்ந்தான்... ஓ.கே.ரெடி... ஸ்டார்ட் மை பிரண்ட்ஸ், ஆக்ஷன் என கத்தினான் ரஞ்சன்.

    ரஞ்சனோடு அவனது ஜால்ரா வகுப்பு தோழர்களும், பிரியாவோடு ஒரு சில சக மாணவிகளும் சேரவே ராக்கிங் ஆரம்பமானது...

    முதலில் கும்பலாக மாட்டியது B.A. முதலாமாண்டு ஐந்து மாணவர்கள்... அவர்களை ரஞ்சன் விசிலடித்து அறிமுகப்படுத்த அழைத்தான்... அவர்கள் அருகில் வந்து பயத்தில் வெளிறிப் போய் நிற்க...

    ஏண்டா! சீனியர்ஸ்ஸை பார்த்தால் விஷ் பண்ண மாட்டீங்களா? என ரஞ்சன் கேட்க...

    ஐவரும் குட்மார்னிங் என்றார்கள்...

    அதை நீங்களே வெச்சுக்கோங்க? இப்ப நாங்க உங்களை ராக்கிங் பண்ண போறோம்... ஒழுங்கா கோ ஆப்ரேட் பண்ணினால் விட்டுவிடுவோம் என்று பிரியா கூற...

    ஐவரும் தலையாட்டினார்கள்.

    நாங்க எல்லாம் ‘தரையில நீச்சலடி! துணியை கழட்டிட்டு கல்லூரியை சுத்திட்டு வா! பொண்ணுங்கட்ட போய் ஐ லவ்யூன்னு சொல்லிட்டு வான்னு எல்லாம் சொல்லமாட்டோம். இப்ப நாங்க கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம், சாப்பிட தம் அடிக்க, பணம் வேண்டும் அதை கொடுங்க என ரஞ்சன் கூற...

    ஐவரும் தங்களை ஒருவரையொருவர் பார்த்தபடியே பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்து ரஞ்சன் முன் நீட்ட... ரஞ்சன் எண்ணிப் பார்த்தான். ம் பத்தாதே... இது பத்தாது... ஒண்ணு பண்ணுங்க... மூணு பேர் போய் காலேஜ்ல பார்க்கிற எல்லோர்கிட்டேயும் போய் வசூல் பண்ணிட்டு வாங்க! நீங்க கொண்டு வர்ற பணத்துல இவங்க ரெண்டு பேரும் எங்களுக்கு டிக்கெட் எடுப்பாங்க... என்றான் ரஞ்சன்.

    அம்மூன்று மாணவர்களும் செல்லவே... மற்ற இரு மாணவர்களையும் பார்த்து, அவர்கள் வரும் வரை நீங்க ரெண்டு பேரும் தோப்புக் கரணம் போடுங்க என்றான் ரஞ்சன்.

    அவர்களிலிருவரும் அப்பாவியாக பதிலேதும் பேசாமல் தோப்புக்கரணம் போட ஆரம்பித்தார்கள்.

    அப்போது கல்லூரி உள்ளே புஷ்பா அவளது தோழியோடு நுழைகிறாள்... புஷ்பாவை பார்த்ததும் பிரியா மனதுக்குள் ஒரு ஆசை... உடனே அவர்களைக் கைதட்டி அழைக்கிறாள்...

    புஷ்பாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. மனம் திக்... திக்கென கூடுதலாக அடிக்க ஆரம்பித்தது. தன் தோழியை அழைத்தபடி பிரியா குழுவை நோக்கி வந்து விஷ் செய்தாள்...

    என்ன புத்திசாலின்னு நினைப்பா? எனக்கு மட்டும் விஷ் பண்றே? இவர்கள் எல்லாரையும் விஷ் பண்ணு! பிரியா ஆணையிட அரண்டு போனாள் புஷ்பா.

    புஷ்பா அனைவருக்கும் விஷ் பண்ணினாள். கூடவே அவளது தோழியும்தான்.

    ராக்கிங் குழுவை சுற்றி மெல்ல, மெல்ல கூட்டம் சேர ஆரம்பித்தது.

    இப்ப நான் உங்களை ராக்கிங் செய்யப் போகிறேன்... என்று பிரியா கூறியதும்தான் தாமதம், ஏங்கி, ஏங்கி அழ ஆரம்பித்தாள் புஷ்பா.

    சே! பாவம்பா! தாய்க்குலம் அழுவறதை என்னால் பார்க்க முடியலைப்பா விட்டுடேன்... என பொய்யாக கெஞ்சினாள் ரஞ்சன்.

    "ஏய், நீ அழுதாலும்

    Enjoying the preview?
    Page 1 of 1