Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanmani Nee Vara Kaathirunthen!
Kanmani Nee Vara Kaathirunthen!
Kanmani Nee Vara Kaathirunthen!
Ebook168 pages59 minutes

Kanmani Nee Vara Kaathirunthen!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபல தொழிலதிபர் அன்பரசுவின் மகள்களான கண்மணி, தேன்மொழி.. தனது தொழில் போட்டியாளர் மகன் ராகேஷூக்கு நிச்சயிக்கும் வேளையில், கண்மணியின் காதலனான கார்த்திக் சாலை விபத்தில் மரணமடைகிறான். தன் காதலனின் மரணத்துக்கு தன் தந்தைதான் காரணமென எண்ணி, தற்கொலைக்கு முயல்கிறாள். மகளை காப்பாற்றி ஆறுதலுக்காக, தனது ஏலகிரி பங்களாவுக்கு மன அமைதிக்காக இரு மகள்களையும் அனுப்புகிறார். கண்மணியை கண்கானிக்க தனது நம்பிக்கையான பணியாளரான விவேக்கையும் அவர்களுக்கு தெரியாமல் அனுப்புகிறார். தன்னை நிகாரித்த கண்மணியை கொலை செய்ய ஏலகிரிக்கு வரும் ராகேஷ், மறுபுறம் தனது அண்ணன் கார்த்திக் சாவுக்கு காரணமான கண்மணியை கடத்தி பணம் பறிக்க ஏலகிரிக்கு வரும் கார்த்திக்கின் சகோதரர்கள்.. நாயகன் விவேக்கின் காதல் இவை அனைத்தையும் நாயகன் விவேக் தன் நண்பனின் உதவியோடு எப்படி கையாண்டு இறுதியில் வெற்றி பெறுகிறான் என்பதை நகைச்சுவை கலந்து சொல்வதே "கண்மணி நீ வர காத்திருந்தேன்" நாவல்.

Languageதமிழ்
Release dateMar 2, 2024
ISBN6580176310761
Kanmani Nee Vara Kaathirunthen!

Read more from V. Ramkumar

Related authors

Related to Kanmani Nee Vara Kaathirunthen!

Related ebooks

Reviews for Kanmani Nee Vara Kaathirunthen!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanmani Nee Vara Kaathirunthen! - V. Ramkumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கண்மணி நீ வர காத்திருந்தேன்!

    Kanmani Nee Vara Kaathirunthen!

    Author:

    வெ. இராம்குமார்

    V. Ramkumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-ramkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம்-01

    அத்தியாயம்-02

    அத்தியாயம்-03

    அத்தியாயம்-04

    அத்தியாயம்-05

    அத்தியாயம்-06

    அத்தியாயம்-07

    அத்தியாயம்-08

    அத்தியாயம்-09

    அத்தியாயம்-10

    அத்தியாயம்-11

    அத்தியாயம்-12

    அத்தியாயம்-13

    அத்தியாயம்-14

    அத்தியாயம்-15

    அத்தியாயம்-16

    அத்தியாயம்-17

    அத்தியாயம்-18

    அத்தியாயம்-19

    அத்தியாயம்-01

    அதிகாலை வேளையில்... சில்லென்ற குளிர்காற்று நர்த்தனம் வீசி ஆட, பறவைகளின் சங்கீத குரல்கள் பூபாளமாக ஒலிக்க... கொண்டை சேவல்களின் குரல்கள் விடியலின் வரவை அலாரமாக கூவி மனிதர்களை தூக்கத்திலிருந்து விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது... நகர்ப்புறத்தின் நடுநாயகமாக கம்பீரமாக வீற்றிருக்கும் தொழிலதிபர் அன்பரசு அவர்களின் பங்களா...

    தனது படுக்கையறையில், மெத்தை கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் ஏதோ கெட்ட கனவு கண்டவர் போல, அய்யோ... அம்மா!என அலறியபடி எழுந்து உட்கார்ந்தார். உட்கார்ந்தவரின் உடல் முழுவதுமே வேர்வைத்துளிகள். குளிர்ச்சாதன அறைக்குள் பயத்தில் வேர்த்திருந்தது அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. படுக்கையில் எழுந்து அமர்ந்தவர், மணியைப் பார்த்தார், மணி ஐந்தரை... விடியற்காலையில் கண்ட கனவு பலிக்கும் என்பார்களே... ஒருவேளை நான் இப்ப கண்ட கனவும் பலிச்சிடுமா... நோ, நோ... இந்த கனவு மட்டும் பலிச்சிடவே கூடாது. என தனக்குத்தானே பேசிக் கொண்டவர், அடுத்தது என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு அந்த எண்ணம் வந்தது. உடனே படுக்கையிலிருந்து எழுந்தவர், காலைக் கடன்களை முடித்துவிட்டு, குளித்து முடித்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு பீரோவிலிருந்து தனது பட்டு வேஷ்டி, சட்டையை எடுத்து அணிந்தவர், வெளியே போர்டிகோவுக்கு வந்து தனது காரை எடுத்து ஓட்ட ஆரம்பித்தார்...

    ***

    தாரகேசுவரர் ஆலயம்... காரை பார்க்கிங் செய்துவிட்டு, கோவிலின் வாசலுக்கு வந்தவர், விண்ணை நோக்கி உயர்ந்து நிற்கும் சிவபெருமானின் ஆலயத்தை பார்த்தார். பின் மனசுக்குள், மூன்று வருஷத்துக்கு பிறகு என் மனைவி செத்த பிறகு, கோவிலுக்கே இனி போகக் கூடாதுன்னு முடிவெடுத்திருந்தேன். ஆனால், கடைசியில, என்னை உன்னைத்தேடி வரவெச்சுட்டீயே ஈஸ்வரா! கோவிலுக்குள் நுழையும் முன், அங்கே இருக்கும் அர்ச்சனை தட்டு விற்கும் வயதான பெண்மணியிடம் சென்று, பூஜைத்தட்டு ஒன்றை வாங்கி கோவிலுக்குள் நுழைந்தார்.

    காலை நேரம் என்பதால், கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டமில்லை. அப்போதுதான் மூலவரின் அலங்காரத்தை முடித்துவிட்டு வெளியே வந்தார் குருக்கள் சௌந்தர். அவரைக் கண்டதும், ’வணக்கம் சாமி!என்றார்.

    அன்பரசை கண்டதும், ஒரு கணம் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றார் குருக்கள்.’ வணக்கம்சார்!நல்லா இருக்கீங்களா... பார்த்து எவ்வளவு நாளாச்சு? அம்மா உயிரோட இருந்தவரைக்கும் வாரம் தவறாமல் கோவிலுக்கு வருவீங்க... ரொம்ப வருஷத்துக்கு பிறகு, உங்களை இங்கே பார்க்கறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?

    ‘நானா எங்கே வந்தேன் சாமி? அவன் இங்கே என்னை வர வெச்சுட்டான்.’

    ‘ரொம்ப சந்தோஷம்ங்க. வீட்ல உங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் நல்லா இருக்காங்களா?’

    ‘ரொம்ப நல்லா இருக்காங்க சாமி...’

    ‘சந்தோஷம்ங்க! பூஜைத்தட்டை கொடுங்க. அர்ச்சனை யார் பெயருக்கு செய்யணும். ?

    ‘எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் சாமி. அதனால, அர்ச்சனையை நீங்க சாமி பேருக்கே பண்ணிடுங்க.’

    ‘அப்படியா... ரொம்ப சந்தோஷம். பேஷா பண்ணிடலாம்.’அவர் கிளம்ப எத்தணிக்கையில்,

    ‘சாமி!நான் இன்னைக்கு கோயிலுக்கு வந்ததற்கு மூலக்காரணமே, விடியற்காலையில கண்ட ஒரு கனவு. அதுவும் நெகட்டிவான கனவு.’

    ‘அப்படி என்ன கனவு சார் கண்டீங்க?

    ‘ஒரு பக்கம் பிணவறையில வெள்ளைத் துணியால மூடப்பட்ட பிரேதம்;மறுபக்கம் ஒரு பெண் உத்தரத்துல கயிறு கட்டி துடிதுடிக்க தொங்கறாள்... இந்த ரெண்டு விதமான கனவுகளுக்கும் என்ன அர்த்தம்ன்னே எனக்கு புரியலை!

    ‘ஒருவேளை அந்த பிணவறையில இருக்கற பிரேதம் நீங்களா இருக்குமோன்னு நினைச்சு பயப்படறீங்கன்னு நினைக்கறேன். கரெக்ட்டா?’

    ‘உண்மைதான் சாமி!என் பிறந்தநாள் அதுவுமா இதுபோல ஒரு கனவு வந்தால், நான் வேற எப்படி நினைக்க முடியும்?

    ‘நீங்க நினைக்கறது ரொம்ப தப்புங்க. கனவுல பிரேதத்தை பார்த்தால், ரொம்ப நல்லதுங்க. எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சுக்கோங்க...’

    ‘இல்ல சாமி... ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபரா இருந்தப்போ, அவர் சாகறதற்கு முன்னாடி, நடுஹால்ல ஒரு பிரேதத்தை வெள்ளைத் துணியால மூடியிருந்ததா நான் படிச்சிருக்கேன். அதனாலதான்... உயிர் மேல கொஞ்சம் பயம் வருது.’

    ‘ஒஹா... அன்பரசு சார்!நீங்க இப்போ ரொம்ப மனக் குழப்பத்துல இருக்கீங்க. பிரேதமோ, உத்தரத்துல கயித்துல தொங்கற பொண்ணோ கவலையை விடுங்க... உங்களுக்கு வந்த பிரச்சனைகள் கூடிய சீக்கிரமே உங்களை விட்டு விலகப் போகுதுன்னு நினைச்சுக்கோங்க. வேணுமுன்னா ஒண்ணு பண்றேன். நீங்க வீட்ல எப்போ ஃப்ரீன்னு சொல்லுங்க. ஹோமம் ஒண்ணு பண்ணிடலாம்.’

    ‘இப்போது சற்று முகமலர்ந்தவர், நீங்க சொல்றதுதான் சரி சாமி!நீங்களே ஒரு நல்லநாளா பார்த்து சொல்லுங்கள். அன்னைக்கே பண்ணிடலாம்!’

    ‘அதற்கென்ன... பேஷா பார்த்து சொல்லிடறேன்.’

    ‘இப்போது அர்ச்சனை தட்டுடன் உள்ளே சென்று ஈஸ்வரனுக்கு அர்ச்சனை செய்து தீபாராதணை காட்டவும், அன்பரசு கண்களை மூடி கடவுளிடம் தன் வேண்டுதலை ஆரம்பிக்க... அவருக்கு பின்னே கோயில்மணி ஒலிக்க ஆரம்பித்தது.’

    ‘நல்ல சகுனம் சார்!எல்லாமே நல்லா நடக்கும்... நீங்க போய்ட்டு வாங்க. ஹோமம் விஷயமா நான் நேர்லேயே வந்து பேசறேன்.’

    ‘சரி சாமி!நான் புறப்படறேன்.’

    ***

    வீட்டை வந்தடைந்தபோது அன்பரசுவின் முகத்திலோ சற்று தெளிவு...

    வீட்டுக்குள் நுழைந்ததுமே இன்ப அதிர்ச்சி... மகள்கள் கண்மணியும், தேன்மொழியும் தங்களது தந்தைக்கு பிறந்தநாள் பாடலை ஆங்கிலத்தில் பாடி வாழ்த்துச் சொல்லி, பரிசளிக்க... அதை மகிச்சியுடனும், புன்னகையுடனும் ஏற்றுக் கொண்டு, தேங்க்யூ மை சைல்ட்’ஸ் என இருவருக்கும் நெற்றியில் அன்புடன் முத்தமிட்டார்.

    ஐம்பது வயதான பில்டிங் அன்பு கன்ஸ்ட்ரக்ஷன் அதிபர் அன்பரசுக்கு மனைவி சுகுணா இறந்த பிறகு, மகள்களான கண்மணியும், தேன்மொழியும்தான் அவரது வாழ்க்கை மட்டுமல்ல;அவரது ஒட்டுமொத்த உலகமும் இருவரும்தான்...

    மூத்தவள் கண்மணி... வயசு இருபத்தியிரண்டு... கவிஞர்களும், பாடலாசிரியர்களும் ஒரு கற்பனை பெண்ணுக்கு அழகிய வடிவம் தங்கள் கவிவரிகள் மூலம் எழுதினால் எப்படியிருக்குமோ, அந்தளவுக்கு ஒர் கவியழகி... அவள் அழகை வர்ணிக்க ஒன்று கவிஞனாக இருக்க வேண்டும்;அல்லது இசைக் கலைஞனாக இருக்க வேண்டும்...

    இளையமகள் தேன்மொழி... அழகிலும், குணத்திலும் அக்காவுக்கு சளைத்தவளில்லை. அக்கா, தங்கையை பார்ப்பவர்கள், அடுத்த சாய்ஸூக்கு செல்லவேமாட்டார்கள். மொத்தத்தில் மூத்தவள் ஐஸ்கீரிம் அழகி என்றால், இளையவள் தேன்மொழியோ, சாக்லேட் அழகி... ஏற்கனவே இவர்களை சைட்டடித்த ஆண்களில் பலர், நிலவு, தேவதை, காக்டெயில், காந்தக் கண்ணழகி, மேக்னைட்ன்னு பல வடிவில் வர்ணித்துவிட்டதால், இந்த வஞ்சிகளுக்கு இப்புகழ்ச்சி வரிகளே போதுமென எண்ணுகிறேன்...

    ‘அப்பா!நாங்க உங்களுக்கு பர்த்டே விஷ் பண்ணி கிஃப்ட் கொடுத்திட்டோம். நீங்க எங்களுக்கு என்ன ட்ரீட் இன்னைக்கு தரப்போறீங்க?’கண்மணி கேட்கவும்,

    ‘நான் உங்களுக்கு அப்பாவா கெடச்சதே பெரிய ட்ரீட்தான்னு மொக்கையா ஏதாவது சொல்லி எங்களை வெறுப்பேத்திடாதீங்க!’ என்றாள் தேன்மொழி.

    ‘உடனே சிரித்தவர், ரெண்டு பேருமே ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க பார்த்தீங்களா?’

    இருவருமே ஒன்றுமே புரியாமல் ஒருவரையொருவர் பார்க்க...

    ‘அப்பா!கன்ஸ்ட்ரக்ஷன் அசோசியேஷன் ஆரம்பிச்சு இன்னையோட இருபத்தைந்து வருஷம் ஆகுது. அந்த வெள்ளிவிழாவை கொண்டாடற வகையில ஹோட்டல் சோழாவுல பங்ஷன் வெச்சிருக்கோமே...

    ‘அடடா... மறந்துட்டோம்ப்பா, சாரி!என்றாள் இளையவள்.

    ‘நாங்களும் வரணுமாப்பா?கண்மணி கேட்க,

    ‘கண்டிப்பாம்மா!இது நம்ம ஆபிஸ் பங்ஷன் மட்டுமல்ல, குடும்ப விழாவும்தான். ஆறுமணிக்கு அப்பா வந்து, உங்களை பிக்கப் பண்ணிக்கறேன் ஒகேவா?

    ‘ஒகே டாடி!தேன்மொழி.

    ‘கண்மணிக்கு மட்டும் ஏனோ, பங்ஷனுக்கு செல்வதில் விருப்பமேயில்லை...

    தந்தையும், தங்கையும் சென்ற பிறகு, தனது அறைக்குள் வந்தவள், கார்த்திக்குக்கு போன் செய்தாள்...

    ‘கார்த்திக்!நாம வழக்கமா சந்திக்கற இடத்துல, வழக்கமா சந்திக்கற நேரம் வேண்டாம். இன்னைக்கு நாலு மணிக்கே மீட் பண்ணலாம்.’

    ‘மறுமுனையில்... ஒகே டியர்!என பதில் வந்தது...

    அத்தியாயம்-02

    வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை சகிதமாய் ஆபிசில் தனது அறைக்குள் நுழைந்த அன்பரசு, இன்டர்காமை எடுத்து புவனாவை அழைத்தார்.

    சற்று நேரத்தில் அவரது அறைக்குள் நுழைந்தவள், குட்மார்னிங் சார்!என்றாள்.

    ‘குட்மார்னிங்ம்மா... ஆடிட்டர் கேட்ட டாக்குமென்ட்ஸெல்லாம் ரெடி பண்ணிட்டீயாம்மா?’

    ‘எல்லாம் ரெடி பண்ணிட்டேன் சார்... நீங்க வேணும்ன்னா, ஒரு தடவை செக் பண்ணிடறீங்களா சார்?

    ‘சரி எடுத்துட்டு வாம்மா. அப்புறம், விவேக்கை எங்கே?’

    ‘இன்னும். வரலை சார்!’

    ‘ஒகே. அவன் வந்ததும், என்னை வந்து பார்க்க சொல்லு?’

    ‘சரிங்க சார்... என கூறிவிட்டு கிளம்பினாள்.’

    புவனா... இருபத்து மூன்று வயதான அழகி. காண்போரை வசீகரிக்கும் அழகிய முகம். அவள் தனது காந்த விழிகளால் ஆடவரை கண்டால், அவளை பார்க்கும் ஆண்கள், அவளது அழகில் தடுமாறுவது நிச்சயம்...

    தனது பைக்கை ஆபிசுக்கு வெளியே

    Enjoying the preview?
    Page 1 of 1