Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Patta Kettu Manu
Patta Kettu Manu
Patta Kettu Manu
Ebook230 pages1 hour

Patta Kettu Manu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழக முதல்வருக்கு தனது கால்காணி நிலத்திற்குப் 'பட்டா கேட்டு மனு' செய்த பொன்னுத்தாயின் அவலப் பரிதவிப்பை அழகாக விண்ணப்ப வடிவத்திலேயே கதையைக் கூறும் பாங்கு நம் கண்களில் உப்பு கரிப்பை கசிய விடுகிறதே! பொன்னுத்தாயின் நிலை கேள்வி குறிதானோ?

வெகு நாட்களாக தன்னுடைய தம்பிக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறாள் கலா. திடீரென்று தரகரிடம் இருந்தும், தோழி பத்மாவிடமிருந்தும் ஜாதகங்கள் வருகின்றன. இரண்டு ஜாதகத்தில் எதை யாருக்கும் அனுப்பினாள்? 'மறதியால் வந்த குழப்பம்' கதையிலும், இன்னும் சில சுவாரஸ்யமான சிறுகதைகளையும் காண வாசிப்போம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateJun 17, 2023
ISBN6580165909823
Patta Kettu Manu

Read more from Uthangal P. Govindaraju

Related authors

Related to Patta Kettu Manu

Related ebooks

Reviews for Patta Kettu Manu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Patta Kettu Manu - Uthangal P. Govindaraju

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பட்டா கேட்டு மனு

    (சிறுகதைகள்)

    Patta Kettu Manu

    (Sirukathaigal)

    Author:

    ஊத்தங்கால் ப. கோவிந்தராசு

    Uthangal P. Govindaraju

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uthangal-p-govindaraju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    முன்னுரை

    1. பட்டா கேட்டு மனு

    2. சத்தமில்லாமல் விழுங்கிய வாடை

    3. உண்மை அன்பு

    4. காத்திருப்பு

    5. குளிர்

    6. தனிமை இரவு

    7. உச்ச பிரவாகம்

    8. குலதெய்வம்

    9. கால்காணியும் கூலிவேலையும்

    10. இரை

    11. கிழித்தெறியப்பட்ட கதை

    12. மறதியால் வந்த குழப்பம்

    13. சுவர் பந்து

    சமர்ப்பணம்

    C:\Users\ASUS\Downloads\அம்மா-min (1).jpg

    அம்மா அப்பாவுக்கு

    அணிந்துரை

    பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். மிகச்சரியாக வெந்து பதமாக வடிக்கப்பட்டுப் பரிமாறிய சோற்றுக்குவியலாக விளங்குகிறது ஊத்தங்கால் ப.கோவிந்தராசு அவர்களின் ‘பட்டா கேட்டு மனு’ என்னும் இச்சிறுகதைத் தொகுப்பு.

    தமிழக முதல்வருக்கு தனது கால்காணி நிலத்திற்குப் பட்டா கேட்டு மனு செய்த பொன்னுத்தாயி, கிராமத்து வட்டார வழக்கோடு நிகழ்ச்சிகளை விவரித்துச் செல்லும் சொல்லாட்சியில் எத்தனை அழகாக, விண்ணப்ப வடிவத்திலேயே கதையைத் தெளிவாக நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர். அதேசமயம், கதையுடன்கூடிய அவலப் பரிதவிப்பையும் அவர் சொல்லிச் செல்லும் பாங்கு நம் கண்களில் உப்புக்கரிப்பைக் கசிய விடுகிறதே! என்றைக்கு அரசு அலுவலர்கள் லஞ்சம் பெறுவதை நிறுத்துவார்கள்? அதுவரைக்கும் பொன்னுத்தாயிகளின் நிலை கேள்விகுறிதானோ?

    ‘கால்காணியும் கூலிவேலையும்’ இச்சிறுகதை இரவிவர்மாவின் மிகச்சிறந்த ஓவியம். ஆனால், தூசுபடிய விட்டுவிட்டதே சமுதாயம்! கால்காணி நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயி காசி, தனது பயிர்த்தொழிலுக்காக அல்லாடும் அவலநிலை ஒருபுறம், அன்றாட வாழ்வின் பிறதேவைகளுக்கு பயிர்த்தொழிலும் போதாது, கூலிவேலைக்குச் செல்லும் நிர்பந்த கொடுமை மறுபுறம், இப்படியான அவனை இருபுறமும் நெருப்பிட்ட கழியின் நடுவில் தத்தளிக்கும் எறும்புக்கு உவமையாகச் சொன்னாலும் போதாது! இத்தகு நிலையிலுள்ள காசியின் கண்ணீர்க் கண்களால் நாமும் அறுவடை நிகழாத அவனது வயலைக் காண்கையில் நமது நெஞ்சும் வெதும்பிச் சோர்கிறதே! ஐயோ!

    கிராமத்து மக்களின் கலாச்சாரம், பண்பாடு, குலதெய்வ வழிபாட்டு நியதிகள், நடைமுறைகள், இவற்றுக்கான முன்னெடுப்புகள், நிகழ்த்திக்காட்டும் வழிவகைகள் என அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நமக்கு அறியத்தரும் சிறுகதைதான் ‘குலதெய்வம்’. தங்களது பிள்ளைகள் மூவருக்கும் மொட்டை போட்டு, காதுகுத்தி, குலதெய்வமாகிய காட்டு ஐயனாருக்கு (அருகிலுள்ள கருப்புசாமிக்கு) ஆடுவெட்டி, பூசைபோட்டு பொங்கலிட்டுப் படைத்து, விருந்தினரோடு உண்டாட்டு விழா நடத்தும் தம்பதியரின், இந்நிகழ்வுக்கான ஆதியந்தத்தை கதைத் தொடக்கத்தில் விவரித்துச் செல்லும் ஆசிரியர், கதைப் பின்னலில் சிக்கலில்லாத ஒரு நேர்த்தியான அற்புத எழுத்து நடையில், கிராமத்துத் தம்பதியரின் மனப்போக்கிலேயே உரையாடல் வழியாகச் செப்பிடுவித்தை செய்வதை என்னவென்றுச் சொல்வது? எழுத்து தெளிந்த நீரோடையாய் சலசலத்து ஓடுகிறது. அவ்வளவுதான். நேர்த்திக்கு விடாத ஆடு தப்பிக்க, நேர்ந்துவிட்ட ஆடு கறிக்குழம்பில் கரைந்து போனது கருப்புசாமியின் ஆணையோ?

    பதின்மூன்று சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பு நூலிலுள்ள கதைகளின் கருத்துக்களம், கதை நடக்கும் இடங்களின் பின்னணிக்காட்சிப் புலன்கள் ஆகியவை ஒவ்வொரு கதையிலும் அற்புதமாக விவரிக்கப்பட்டுள்ளன. கதாசிரியரின் காட்சிப்புலன் இவ்வகை விவரிப்பில் பல இடங்களில் மாயாஜாலம் புரிவதை வியக்காமல் இருக்க முடியவில்லை!

    மேலும், கதைகள் அனைத்தும் பெரும்பாலும் உரையாடல் வழியில் பயணிக்கின்றன. இந்த எழுத்துப்போக்கு இவருக்கு கைவந்த கலையாக இருக்கிறது. கதைசொல்லும் இந்த யுக்தி ஒரு தனி வழி, பாராட்டுக்குரியது!

    மொத்தத்தில் கதைகள் புனையப்பட்டுள்ள விதம் மிக நேர்த்தி, அழகு! உள்ளத்தைத் தொடுகிறது.

    வளர்க இவரது எழுத்தாற்றல்! என்றும் இப்பணி தொடர வாழ்த்துகிறேன்.

    முன்னுரை

    வண்ணக்கதிர், செம்மலர்,

    தாமரை, கணையாழி, தினமணி கதிர், புதிய உலகு, தமிழ்ப்பல்லவி போன்ற இதழ்கள் மற்றும் சிறுகதைக்களஞ்சியம், கங்கைகொண்டான் கிளை நூலகம் எனது படைப்புக்களை பிரசுரம் செய்து எழுத்தாளனாக அறிமுகம் செய்து அங்கீகரித்திருக்கிறது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சிகொள்வதுடன் உறுதுணையாக இருந்த, இருந்துகொண்டிருக்கிற இதழ்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.

    தினமணிக்கதிர், கணையாழி போன்ற இதழ்களில் பிரசுரமான கதைகளுடன், இத்தொகுப்பில் ராஜகுரு நினைவு சிறுகதைப்போட்டி, இளவல் ஹரிஹரன் மற்றும் இகரமுதல்வி இதழ் இணைந்து நடத்திய அன்னை சுமித்திரா அம்மையார் நினைவு சிறுகதைப் போட்டியில்(2021) கலந்துகொண்டு பரிசுபெற்றக் கதைகளுமிருக்கின்றன. அவர்களுக்கும், இதழ் ஆசிரியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

    ‘பட்டா கேட்டு மனு’ நான்காவது சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பிற்கு இத்தலைப்பு வைக்க முனைந்தபொழுது ‘பட்டா கேட்டு மனுவென்று ஏன் வைக்கவேண்டும், இதனைவிட வேறு பரிசுபெற்ற கதைகளில் ஒன்றின் பெயரை வைக்கலாமே’ என்று நண்பர்கள் பலரும் சொன்னார்கள். அதிலும் குறிப்பாக நண்பரும் எழுத்தாளருமான சுப்ரமணிய பாண்டியன் அவர்கள் பிரசுரத்திற்கு அனுப்புவதற்கு முன்பாக கதைகளை படித்து விமர்சிப்பவர் என்கிற முறையில் அவரும் இந்த விஷயத்தில் கடுமையான விவாதம் செய்தார். இறுதியில் ஒரு எழுத்தாளன் என்ன மனதில் எண்ணுகிறானோ அதுதான் தீர்வாகும் என்கிற புரிதலோடு வாழ்த்துச்சொன்ன அவருக்கும், நிறைகுறைகளை நேர்பட எடுத்துரைக்கும் பாசமிகு நண்பரும் எழுத்தாளருமான திரு. நெய்வேலி பாரதிகுமார் அவர்களுக்கும், திரு. கவிஞர் தேன்தமிழன், எழுத்தாளர் திரு. விஜயராஜ் இவர்களுடன் இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்துவந்த திரைத்துறையில் உதவி இயக்குனராக இருந்துவரும் பாசத்திற்குரிய நண்பரும் கவிஞருமான வெளிக்கூனங்குறிச்சி திரு. த.அறிவழகன் அவர்களுக்கும், சிறுகதை எழுத தூண்டுதலாகயிருந்த தமிழ்நாடு அரசின் விருது பெற்ற எழுத்தாளர் வெம்பாக்கம் திரு. ப.ஜீவகாருண்யன் அவர்களுக்கும் மற்றும் வாசக சாலை நண்பர்களுக்கும் என்றென்றும் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

    கிராம நிர்வாக அலுவலர்கள் பட்டா எங்கள் மூலமாகத்தான் வழங்கப்பட வேண்டுமென்று போர்க்கொடித் தூக்கியபொழுது அது சம்பந்தமான ஒரு கதையை எழுதி அதனை தமிழ்ப்பல்லவி ஆசிரியரிடம் சொல்லி இதனை இந்த சமயத்தில் பிரசுரித்தால் நன்றாகயிருக்குமென நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க தலைப்புக் கதையை பிரசுரம் செய்து பலரும் அறியச் செய்த தமிழ்ப்பல்லவி காலாண்டிதழ் ஆசிரியர் திரு. பல்லவிக்குமார் அவர்களை இந்நேரத்தில் நினைவுகூர்ந்து அவருக்கு நன்றியைச் சொல்வதனை எனது பாக்கியமாகக் கருதுகிறேன்.

    தங்களின் எழுத்துப் பணி நிற்காமல் தொடரட்டும் என்று ஆசிர்வதித்து என்னை உற்சாகப்படுத்திய தினமணி ஆசிரியர் ஐயா கி.வைத்தியநாதன் அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

    இத்தொகுப்பிற்கு அழகானதொரு அணிந்துரை வழங்கியிருக்கும் ஐயா குறிஞ்சி ஞான.வைத்தியநாதன் அவர்கள் பார்போற்றும் ஞான அருள்வடிவானவர், கடலூர் மாவட்டத்தின் அத்துணை எழுத்தாளர்களும் ஏதோ ஒரு வகையில் அவருடன் தொடர்பில் இருந்துக் கொண்டிருப்பவராகவே இருக்கும் சூழலில் எப்படியோ அவர் கண்களில் சிக்காமல் இருந்திருக்கிறேன் என்பது என் துரதிஸ்டம்தான் காரணம் என்று எண்ணுகிறேன். நல்லவேளையாக ‘பட்டா கேட்டு மனு’ தமிழ்ப்பல்லவியில் அவர் படித்ததினால் எனக்கும் அவருக்குமான அறிமுகத்தினை ஏற்படுத்தியிருந்தது என்பதினால் அதன் நினைவாக இந்தக் கதையை தலைப்புக் கதையாக தேர்வு செய்திருக்கிறேன். குறுகிய நேரத்தில் தள்ளாத வயதிலும் தமிழ் என்று வந்தவுடன், அணிந்துரை வழங்க இன்முகத்துடன் ஒப்புக்கொண்ட ஐயா தமிழகம் மட்டுமல்ல இவ்வையகம் உள்ளவரை போற்றப்படும் எழுத்தாளராக இருப்பார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஐயாவின் நட்பிற்குப் பிறகு புதுவை வானொலி, பொதிகை தொலைக்காட்சியின் அறிமுகம் எனக்கான வரப்பிரசாதமாக எண்ணி மகிழ்வதுடன், ஐயா குறிஞ்சி ஞான.வைத்தியநாதன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

    பின் அட்டையில் எனது ஒவ்வொரு நூலிலும் புகைப்படம் இடம்பெற உறுதுணையாகயிருந்து வரும் அன்பு நண்பர் புகைப்படக் கலைஞர் திரு.ந.செல்வன் அவர்களுக்கும், ஆரம்பத்திலிருந்தே ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் இலக்கிய கர்த்தாக்கள் ஐயா வேர்கள் மு.இராமலிங்கம், நெய்வேலி ஓம்சக்தி ஐயா ஆதித்யா செல்வம் அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

    எழுத்துத்துறையில் அடியெடுத்துவைக்க வெளிச்சத்தினைத் தந்த நெய்வேலி புத்தகக்கண்காட்சி நிர்வாகிகளுக்கும், தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கும் எனது பணிவான வணக்கத்தையும், நன்றியையும் உரித்தாக்குகிறேன்.

    பெரிதும் உறுதுணையாக இருந்துவரும் முதல் வாசகர்களான என் மனைவி வண்ணக்கிளி, பிள்ளைகள் பார்த்திபன், பிரசாந்த், கார்த்திகேயன் இவர்களுடன் மருமகள்கள் கவிதா பார்த்திபன், சிந்துஜா கார்த்திகேயன், பேத்தி இசைவாணி என்கிற பா. ஜகத்ரக்ஷிதா ஆகியோருக்கும், ஒவ்வொருகதை பிரசுரத்தின்போதும் அம்மாவிடம் சொல்லி அதனை அவர்களிடம் படித்து ஆசிர்வாதம் பெறுவதும் வழக்கமாக இருப்பதினால் ஆவலுடன் கேட்கும் அவர்களுக்கும் மற்றும் எனது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இலக்கிய வளர்ச்சிக்கு நல் ஆலோசனைகள் வழங்கி அவ்வப்பொழுது நெறிப்படுத்தி வரும் அன்பு நண்பர் திரு. A. பஞ்சாபகேசன், நெய்வேலி அவர்களுக்கும், புலனக்குழுவில் பதிவேற்றம் செய்திருக்கும் பிரசுரம் ஆன கதைகளைப் படித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துக் கூறிவரும் நண்பர்கள் பலருக்கும், கதைகளை அவ்வப்பொழுது படித்து நல்லதொரு கருத்துப் பரிமாற்றம் உரைத்து விமர்சனம் செய்துவரும் எனது அக்கா மகன் பாசமிகு கோ.பிரிவிந்த் M.E., அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

    உலக தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழர் கலை இலக்கிய ஆய்வு மையம் இணைந்து நடத்திய தமிழாய்வுப் பெருவிழாவில் தர்ஷினியின் ‘சிறுகதைச் செம்மல்’ விருது வழங்கியமைக்காக, அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சிக் கொள்கிறேன். எனது இந்தக் கதைகளை வாசகர்கள் உங்கள்முன் சமர்ப்பித்து, செழுமைப்படுத்திக்கொள்ள நிறைகள் மட்டுமல்லாது குறைகளையும் கேட்க விழிநோக்குகிறேன்.

    நன்றி,

    என்றும் அன்புடன்

    ஊத்தங்கால் ப.கோவிந்தராசு

    1. பட்டா கேட்டு மனு

    அனுப்புதல்,

    பொன்னுத்தாயி, W/o கண்ணாயிரம்,

    பெறுதல்,

    மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,

    பொருள்: நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டுமாய் தாழ்மையுடன் கோரும் கண்ணீர் மனு.

    ஐயா வணக்கம்,

    காக்காணி நிலம் வைத்து விவசாயம் செய்துகொண்டிருக்கும் ஏழை பொன்னுத்தாயி கண்ணீரால் எழுதும் கருணை மனு. ஆம், வாழ்வா... சாவா... என்கிற உச்சக்கட்ட விளிம்பில் இருந்து கொண்டிருப்பதினால், வாழ்வுக்கு வழி கேட்டு தங்களை நாடியிருக்கின்றேன். அந்த வகையில், இதனை கருணை மனுவாகவே பாவித்து என்மீது இரக்கம் கொள்வீர்கள் எனவும் மிகுந்த நம்பிக்கை கொண்டு எழுதுகிறேன்.

    நானும், என் வீட்டுக்காரர் கண்ணாயிரமும் சேர்ந்து எங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய காக்காணி நிலம் அது. தாங்களும் ஒரு விவசாயி என்கிற முறையில் சிறு,குறு விவசாயிகளின் கஷ்டம் என்னவென்பதனை தாங்கள் உணர்ந்துகொள்வீர்கள் என்கிற மேலான அடிப்படையில் இந்த மனுவினைத் தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

    அந்த நிலத்திற்குச் சென்று வர தனிப்பாதையென்று ஒன்று இல்லை. சுத்தி நாலு பக்கமும் பிறத்தியார் நிலங்கள் இருக்க, நடுவிலிருக்கும் நிலத்தினை எங்கள் உழைப்பு மொத்தத்தினையும் விலையாய்க் கொடுத்து வாங்கி விட்டோம். எங்களின் உழைப்பு என்று சொன்னது, சிறுதொகையாக ரெக்கரிங் டெபாசிட் என்கிற வகையில் போஸ்ட் ஆபீசில் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்தது உட்பட, நூறுநாள் வேலைக்குச் சென்று வயக்காடு, முள்ளுக்காடு, ஊரில் குளம் வெட்டுதல், வாய்க்கால் வெட்டுதலென்றும், ஊர் சாக்கடையை சுத்தம் செய்தல் என்று எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த இன்னும் அநேக வேலையினை சரியாகச் செய்து அதன்முலம் கிடைக்கப்பெற்ற வருவாயாகிய கூலிப் பணம்.

    அதுமட்டுமில்லாமல் மாதர் சங்க குழுக்களின் வாயிலாக இருபதாயிரம், முப்பதாயிரம் என தவணை முறையில் கடனாகப் பெற்று, மேற்கண்டத் தொகையை எங்கள் அன்றாட கூலி வேலையின் வருவாய் மூலமாக அடைத்து, மீண்டும் மீண்டுமாக வருவாயைப் பெருக்கி எங்களின் ஜீவனாம்சத்திற்காக வாங்கிய

    Enjoying the preview?
    Page 1 of 1