Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Petha Manam
Petha Manam
Petha Manam
Ebook297 pages1 hour

Petha Manam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘திருஷ்டிப்பொட்டு’ இச்சிருக்கதையில், யார் வீட்டுக்குள் புகுந்தாலும் மாமியார் மருமகளுக்குள் சிண்டு முடித்துவிடும் வேலையை கனக்கட்சிதமாக செய்து வரும் வட்டப் பொட்டு பாட்டி, கமலம் வீட்டிற்குள் நுழைகிறாள். இவளின் வேலை கமலத்திடம் நடந்ததா? இல்லையா?

‘பெத்த மனம்’ இச்சிறுகதையில் தன் தந்தையின் உயிர் நண்பர் உதவியால் வாரிசு அடிப்படையிலான வேலை கிடைத்தது மச்சமுனிக்கு. இந்த உதவிக்கு கைமாறாக, அந்த பெரியவருக்கு மச்சம்முனி என்ன செய்தான்? என்பதையும், இன்னும் சில சுவாரஸ்யமான சிறுகதைகளையும் காண வாசிப்போம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateJun 17, 2023
ISBN6580165509790
Petha Manam

Read more from Subramania Pandian

Related to Petha Manam

Related ebooks

Reviews for Petha Manam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Petha Manam - Subramania Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பெத்த மனம்

    (சிறுகதைகள்)

    Petha Manam

    (Sirukathaigal)

    Author:

    சுப்ரமணிய பாண்டியன்

    Subramania Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/subramania-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    புகைப்படம்

    வெண்ணிலவு

    பசி மருந்து

    பிடிப்பு

    வாயும் வயிறும்

    கீச்சொலிகள்

    ஆற்றுப்படுகை

    பெத்த மனம்

    உயிர் மண்

    வேர்கள்

    திருஷ்டிப் பொட்டு

    படிப்பு வாசனை

    உறைவாள்

    விருது

    அன்னப்பட்சி

    ஞானக்கண்

    சமர்ப்பணம்

    இந்த நூலை பாசத்திற்கும், மரியாதைக்குரிய என் தந்தை தெய்வத்திரு த. சுப்ரமணியன், தாய் சு. கமலம் அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

    என் வாழ்வியல் அனுபவங்களே என் படைப்புலகம்.

    இந்நூல் வருவதற்கு காரணமாக இருந்த இலக்கிய நண்பர்கள், எழுத்தாளர்களை இத்தருணத்தில் நினைத்து மகிழ்கிறேன்.

    ‘அப்பாவின் மிதிவண்டி’ என்ற என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பிற்கு அக்டோபர் 2021 தமிழ்ப் பல்லவி இலக்கியக் காலாண்டிதழில் விமர்சனம் எழுதி, அதன் சிறப்பை உலகறிய செய்த ஐயா கவிஞர் தேன்தமிழன், நெய்வேலி அவர்கள், இந்த நூலுக்கு மெய்ப்பும் பார்த்து தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ்ப் பல்லவி இலக்கியக் காலாண்டிதழில் அந்தத் தொகுப்பிற்கான விமர்சனத்தை பிரசுரித்து பெருமைப்படுத்திய ஆசிரியர் பல்லவி குமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    அந்த விமர்சனத்தை வாசித்து என்னை அடையாளம் கண்டு, என்னுடைய அத்துணை கதைகளையும் படித்து தொலைபேசியிலே விமர்சனம் செய்தது மட்டுமல்லாமல், புதுவை வானொலி, தொலைக்காட்சியென்று அழைத்துச்சென்று என்னுடைய இலக்கிய வட்டத்தை பெரிதுப்படுத்தி ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும், இலக்கிய உலகில் தனக்கென்று தனி இடம் பிடித்திருக்கும் பல்கலைச் செல்வர், தமிழ்த் தென்றல், இருநூற்று அறுபது நூல்களுக்கு சொந்தக்காரர், இலக்கிய பிதாமகர், தமிழக அரசு விருது பெற்ற எழுத்தாளர் ஐயா குறிஞ்சி ஞான. வைத்தியநாதன், குறிஞ்சிப்பாடி அவர்களை வணங்கி மகிழ்கிறேன். அதோடு மட்டுமல்லாது, மிகுந்த பணிச்சுமைக்கு மத்தியில், என்னுடைய இந்தப் பதினாறு சிறுகதைகளையும் ஆழ்ந்து படித்து, அகமகிழ்ந்து, அற்புதமானதொரு அணிந்துரையை வழங்கியிருக்கும் ஐயா அவர்களுக்கு என்றென்றும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.

    தமிழக அரசு விருது பெற்ற பன்முக எழுத்தாளர் ப. ஜீவகாருண்யன், வெம்பாக்கம் அவர்கள், அவ்வப்பொழுது படைப்புகளைப்பற்றி அளவளாவி, அரும்பெரும் ஆலோசனைகள் வழங்கி வருபவருக்கு என்றும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.

    மேலும் படைப்புகளைப் பாராட்டி வந்த கடிதத்தில் சிலவற்றை தங்களது பார்வைக்கு வைக்கின்றேன். சோர்ந்து போகும்போதெல்லாம் சேர்ந்து பயணப்படுவோமென்று ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் நெய்வேலி பன்முக எழுத்தாளர் பாரதிகுமார், அவர்கள் புலன வழியாக ஞானக்கண், பெத்த மனம் என்ற இரண்டு சிறுகதைகளைப்பற்றி செய்த பதிவு. ‘இந்த ஞானக்கண் என்ற சிறுகதையை தினமணிகதிரில் படித்தேன். மிகவும் அற்புதமாக இருந்தது. வயதான ஒருவரின் தனியாத இசைத் தாகத்தைப்பற்றி அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். சரளமான எழுத்து நடை. மிக்க மகிழ்ச்சி. அடுத்து, சத்யா ஸ்ரீனிவாசன் நினைவு சிறுகதைப் போட்டி 2021 நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசுப் பெற்ற ‘பெத்த மனம்’ என்ற சிறுகதையைப் படித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. எப்போதும் பெரியவர்கள், பிள்ளைகள்மீது வைத்திருக்கும் அன்பைத் தவறாகப் புரிந்துக்கொண்டு விடுகிறார்கள் என்பதை அதைப் படிக்கும்போதே அதனுடைய வலியையும் வேதனையையும் உணர முடிகிறது. மேலும் இது போன்று இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துக்கள் என்று வாழ்த்திய எழுத்தாளர் அவர்களுக்கு என்றென்றும் நன்றிகள் பல.

    மேலும், தமுஎகச மாவட்ட பொறுப்பாளர் உயர்திரு ம. மீனாட்சி சுந்தரம், நெய்வேலி அவர்கள் தினமணி கதிரில் வந்த புகைப்படம் திருஷ்டிப்பொட்டு என்ற சிறுகதைகளைப் படித்துவிட்டு எழுதியிருந்த புலனக்கடிதம், ‘தோழர் சுப்ரமணிய பாண்டியன்’ அவர்களுக்கு உங்கள் புகைப்படம் சிறுகதையைப் படித்தேன். ஒரு சிறு நிகழ்வு. அதாவது காலமாகிப்போன தன்னுடைய அப்பாவின் புகைப்படத்தை தன் வீட்டில் மாட்டி வைப்பது... இவ்வளவுதான்... இந்த சிறு நிகழ்வின் வழியே... வீட்டில் தனக்குத் தெரியாமல் எந்த ஒரு சிறு நிகழ்வும் நடந்து விடக்கூடாது என நினைக்கும் அத்தை... என்னதான் படித்திருந்தாலும் சுயமாக எந்த செயலையும் தன்னிஷ்டப்படி செய்ய முடியாத மருமகள். இந்த இருவருக்கிடையில் கணவன் என அற்புதமாக படம் பிடித்துக் காட்டும் லாவகம் மிகவும் அருமை. இதற்கிடையில் தான் பிறந்து வளர்ந்து வந்த விதத்தை மிகவும் அழகாக நளினமாக சொல்லியிருக்கிறீர்கள். பாத்திர வர்ணனை உங்களுக்கு கைவந்த கலையாக உள்ளது. போட்டோவில் இருக்கும் அப்பாவை நாம் நேராக பார்ப்பதுபோல அப்படி ஒரு அழகான வர்ணனை. கதை மிகவும் கனக்கச்சிதமாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் இலக்கியப்பணி நன்றி. என்றும், அடுத்து தோழர் சுப்ரமணிய பாண்டியன் அவர்களுக்கு உங்கள் திருஷ்டிப்பொட்டு என்ற சிறுகதையைப் படித்தேன். அழகான வர்ணனை கதையின் அழகை கூட்டுகிறது... மனவோட்டங்களை மிகவும் நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். வட்டப்பொட்டுப் பாட்டி மனதில் நிற்கிறாள். வித்தியாசமான தலைப்பு. தலைப்பில் கதை தலை நிமிர்கிறது தோழர். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் இலக்கியப்பணி என்று வாழ்த்திய ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும், சிறுகதை எழுதியதும், பாஸ் ஒரு கதை எழுதியிருக்கறேன்! இதைக் கொஞ்சம் படிச்சிப் பாத்து... கதையாயிருக்கான்னு சொல்லுங்க என்றதும், பொன்னான நேரத்தில் பொறுப்பாகப் படித்துப் பார்த்து, அதற்கு தரச்சான்று வழங்குவதுபோல், எல்லாம் சரியாயிருக்கு! இதை அனுப்பலாம் என்றுச் சொல்லி எனக்குப் பக்கப் பலமாக இருந்து வரும் நண்பரும் எழுத்தாளருமான ஊத்தங்கால் ப. கோவிந்தராசு அவர்கள் புலனம் வழியாக புகைப்படம் சிறுகதைக்கு அனுப்பியிருந்த விமர்சனம். யதார்த்த செறிவுடன்கூடிய படிப்பதற்கு எளிமையாக ஆற்றொழுக்கான சரளமான மொழி நடையில் ஆக்கப்பட்டிருந்தது புகைப்படம் என்ற சிறுகதை. புகைப்படம் இருந்தால்தான் நினைவிலிருக்கும் என்றில்லை. ஆனாலும், பக்கத்திலிருப்பது போன்ற உணர்வைப் பெற முடியுமென்று எண்ணிய ஒரு பெண் தனது தகப்பனாரின் கருமகாரிய நிகழ்விற்குச் சென்றிருந்தபோது அவரின் நினைவினைப் போற்றும் விதமாக புகைப்படம் ஒன்றினைக்கேட்டு வாங்கி வருகிறாள். அந்தப் புகைப்படத்தினை எங்கே மாட்டி வைப்பது என்பதில் மாமியார் மருமகள் இருவருக்குள் நடக்கிற விஷயம்தான் கதை. உணர்ச்சிப்பூர்வமான தருணங்களை மிகுந்த விருவிருப்புடன் நகரும்படியாக சொல்லியிருக்கிறார். எழுத்தாளருக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து தமது படைப்புகளில் மேலும் மெருகூட்டி சிறக்க வேண்டுமாய் வாழ்த்துகிறேன் என்று வாழ்த்தும் அன்பு நண்பர் அவர்கள், இந்த நூலுக்கு மெய்ப்பு பார்த்து தந்தமைக்கும், என்றென்றும் நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளேன்.

    மேலும், சகோதரி தமிழாசிரியை ம. கலா முருகேசன், விழுப்புரம் அவர்கள் புலன வழிப்பதிவு, அருமை தம்பிக்கு, இந்த ஞானக்கண் சிறுகதை தினமணிகதிரில் படித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. ஊனக்கண்ணோடு பார்த்தால் எதுவும் குற்றமாகத்தான் தெரியும்! அதே ஞானக்கண்ணால் பார்த்தால் அதுதான் அறிவு. எந்த விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கு வயது ஒரு தடை கிடையாதென்பதை இக்கதை மூலம் தெரியப்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி. இதுபோல் இன்னும் நிறைய எழுதவேண்டும். உயர்ந்த இடத்திற்கு வரவேண்டுமென்று வாழ்த்துகிறேன் என்று வாழ்த்திய சகோதரிக்கு என்றென்றும் நன்றிகள் பல.

    எழுத்தாளர் விஜயராஜ், எழுத்தாளர் மயிலாடுதுறை இராஜசேகரன், இன்னும் பல நட்புகளும், உறவுகளும் என்னுடைய இரு தொகுப்புகளைப் படித்து முடித்து அதற்கு அருமையானதொரு விமர்சனங்கள் நேரிலும், தொலைப்பேசி, புலனம், கடித மூலமாகவும் அனுப்பித் தந்து, என்னை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி என் எழுத்துப்பணி தொடர்ந்து இயங்க, அவர்களது வார்த்தைகள் அடியுரமாகவும், உயிர்ச்சத்தாகவும் மாற்றியதன் விளைவே இந்த பெத்த மனம் என்ற மூன்றாவது சிறுகதைத்தொகுப்பு உங்கள் கைகளில் மலர்ந்திருக்கின்றது.

    ஒரு சமூகத்தில் அன்றாடம் ஏற்படும் அனுபவங்களை சேமித்து வைக்கும் கால பெட்டகங்கள்தான் இலக்கியம். அவ்விலக்கியங்களில் உள்ள பொக்கிஷங்கள், படைப்பிலக்கியங்கள் மூலம் மக்கள் உணர்ந்துக்கொள்ளவும் அறிந்துக்கொள்ளவும் வழி வகை செய்கிறது. அதன் மூலம் ஒழுக்கத்தையும் அறத்தையும் போதிக்கின்றன. அப்படியாக நான் கற்றுக்கொண்ட விஷயத்தை சமுதாயத்திற்கு பயன்படும் என்கிற விதத்தில், எல்லோருடைய மனமும் மகிழும்படியாக இந்தத் தொகுப்பில் ஆன்மநேயம், பெண் கல்வி, அறம், கல்வியின் பெருமை, கற்பு, நட்பு, அன்பு, அலட்சியம், சுற்றுப்புறச் சூழல், வாழ்வியல், வீரம், நம்பிக்கை போன்ற கதைக்களங்களாக இச்சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இயங்குகின்றன, அவைகள் வாசகர்களின் வாசிப்பில், முக்கனியாய் என்றும் இனிக்கும் என்பதில் ஐயமில்லை. இப்படியாக வெவ்வேறு காலச் சூழலில் வெவ்வேறு சமூக சிந்தனைகள் நிறைந்த சுவையான கதைக் களங்களாக இவற்றில் படைத்திருக்கின்றேன்.

    எப்போதும் எழுத்தாளர்களை தாங்கிப்பிடிக்கும் பத்திரிக்கைகளுக்கும், சிறுகதைப் போட்டி நடத்தி ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் இலக்கிய அமைப்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவற்றில், திருஷ்டிப்பொட்டு, புகைப்படம், ஞானக்கண் ஆகிய சிறுகதைகளை தினமணிகதிரில், வெளியிட்டு இலக்கிய உலகில் மிகுந்தப் பாராட்டையும் நன் மதிப்பையும் பெற்றுத் தந்த அதன் ஆசிரியருக்கும், அக்குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல. மேலும், பெண்மணி மாத இதழில் பரிசு பெற்ற சிறுகதைகளையெல்லாம் மறுபதிப்பு செய்து உற்சாகமூட்டிவரும் அவ்விதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    சத்யா ஸ்ரீனிவாசன் நினைவு சிறுகதைப் போட்டி 2021 சென்னை அவர்கள் நடத்திய சிறுகதைப்போட்டியில் ‘பெத்த மனம்’ என்ற சிறுகதை முதல் பரிசுப் பெற்று, அச்சிறுகதை அனைவரது பாராட்டையும் அன்பையும் பெற்றுத்தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடுவர் தஞ்சை ப்ரணா அவர்களுக்கும், அதன் பொறுப்பாளர்களுக்கும், அவர்தம் குழுவினருக்கும் என்றென்றும் நன்றிகள் பல.

    எழுத்தாளர் ராஜகுரு நினைவுச் சிறுகதைப்போட்டி 2021 திருவாரூரில் அவர்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘உறைவாள்’ என்ற சிறுகதை மூன்றாம் பரிசு பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தப் படைப்பாக மாறி மேலும் பல பெருமையைத் தேடித் தந்தது. அதன் பொறுப்பாளர்களுக்கும், அவர்தம் குழுவினருக்கும் என்றென்றும் நன்றிகள் பல.

    இளவல் ஹரிஹரன் இகர முதல்வி இதழ் இணைந்து நடத்தும் அன்னை திருமதி சுமித்திரா அம்மையார் நினைவுச் சிறுகதைப் போட்டி 2021 சென்னையில் அவர்கள் நடத்திய சிறுகதைப்போட்டியில் பிடிப்பு என்ற சிறுகதை ஆறுதல் பரிசு பெற்று இன்னும் பல சிறப்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்த அதன் பொறுப்பாளர்களுக்கும், அவர்தம் குழுவினருக்கும் என்றென்றும் நன்றிகள் பல.

    எனது வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வரும் என்.எல்.சி இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும், வாசகசாலை நண்பர்களுக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெத்த மனம் என்ற மூன்றாவது சிறுகதைத்தொகுப்பு வருவதற்கும் உறுதுணையாகவும், அச்சாணியாகவும் இருந்து செயல்பட்டு, அற்புதமானதொரு தொகுப்பை உருவாக்கியிருக்கும் சகோதரி கவிஞர் ஆர். தேவகி இராமலிங்கம் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள்.

    சிறுகதைச் செம்மல் விருது வழங்கிய தமிழ் இலக்கிய ஆய்வு மையமும், ‘சிந்தனைச் சிற்பி’ என்ற விருதை வழங்கிய பாலறாவாயன் கலைக்குழுமம், சங்கரன் கோவில் அவர்களுக்கும், இலக்கியச் செம்மல் விருது வழங்கிய சேலம் தமிழ் சங்கத்தாருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    அன்றும் இன்றும் என்றுமே எனது எழுத்துப் பணிக்கு உதவியாகவும், கதைகள் எப்படியிருந்தாலும் அதை பொறுமையாகக் கேட்டு அகமகிழ்ந்து ஆசி வழங்கி வரும் பெரியப்பா த. மணி, மனைவி ச. ஜோதி, மகள் பா.ஜோ. பூஜாஸ்ரீ மற்றும் சகோதரர் ம. குணசேகரன், ம. பாலு, மைத்துனர்கள் கே. ராஜீ, ஆர். திருமுருகன், ச. ஸ்ரீஸ்கந்தன், சு. முருகேசன் என்று என் உறவுகள் பட்டியல் இன்னும் என் மனதில் நீண்டுக்கொண்டே இருக்கின்றன. அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    பெத்த மனம் சிறுகதைத்தொகுப்பில் கருப்பொருளுக்கு தக்க கதாபாத்திரங்களாக, கதை நாயகர்களாக உலா வந்து, உயிரோட்டமான கதாபாத்திரத்தினை ஏற்று, மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திற்கும், என் தாய் தந்தையர், மகான்கள், குலதெய்வம் இவர்களை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகின்றேன். இலக்கிய உலகில் கைப்பிடித்து, கரம் கோர்த்து அழைத்துச்செல்லும் இலக்கிய அன்பர்களும் நண்பர்களும், பத்திரிக்கையாளர்களும் இந்த பெத்த மனம் என்ற சிறுகதைத் தொகுப்பிற்கும், அதே அன்பையும் ஆதரவையும் கொடுத்து என் எழுத்தை தாங்கிப்பிடிப்பீர்கள் என்று எண்ணுகிறேன். வாசகர்களாகிய தாங்கள், இதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டி, மேலும் என்னுடைய எழுத்துப்பணி சிறக்க ஊக்கமளிக்க அன்போடு வேண்டுகிறேன்.

    அன்பன்

    (சுப்ரமணிய பாண்டியன்)

    எண் 8 F, வகை 1 குடியிருப்பு,

    வட்டம் 19, நெய்வேலி - 607803.

    கடலூர் மாவட்டம்.

    9442865869

    Subramaniapandian25@gmail.com

    அணிந்துரை

    பல்கலைச் செல்வர்.

    குறிஞ்சி. ஞான. வைத்தியநாதன்

    தமிழக அரசு பரிசு பெற்ற எழுத்தாளர்

    17, எல்லைக்கல் தெரு, குறிஞ்சிப்பாடி - 607 302.

    கடலூர் மாவட்டம். கைபேசி: 9751482679

    சுண்டித் தெறித்த வார்த்தைகளோடு சுருக்கமான கதைக்களன் கொண்டு, அதிவேகத்துடன் பயணித்துச் சட்டென இறுதிப்பத்தியில் முடிந்து, வாசகனை நிலைகுத்தி நிற்க வைத்து, ஏதோ ஒருவகை உணர்வில் அவனை ஆழ்த்துவதே சிறுகதைக்கான இலக்கணம் என்று நான் உணர்கிறேன். எனது இந்த உணர்வுப் புரிதல் உண்மை என்பதற்கு திரு. சுப்ரமணிய பாண்டியன் அவர்களின் ‘பெத்தமனம்’ என்னும் இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுமே சான்று பகர்கின்றன.

    இந்நூலில் உள்ள கதைகள் அனைத்துமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட, வெவ்வேறு கதைக்களன்களில், வெவ்வேறு வழித்தடங்களில் பயணிப்பவை. இக்கதைகளைப் படிக்கின்றபோது நான் உணர்ந்த கருத்து வெளிச்சத்தை அப்படியே ஒளி குறையாமல் கூறினாலே இந்நூலுக்கான அணிந்துரையாகிவிடும் என்று நம்புகிறேன். என்றாலும், வாசகர்களுக்காக இக்கதைகளில் பலவற்றை விட்டு விட்டு, மூன்று கதைகளில் மட்டுமே நான் உணர்ந்தவற்றைக் கூறி, அணிந்துரையை நிறைவு செய்ய விழைகிறேன்.

    பெற்றால்தான் பிள்ளையா? பெறாமலும், நண்பனின் பிள்ளையைக்கூட தன் பிள்ளையாகப் பாவிக்கலாமே! இதுதான் தாய் மனத்தினும் பெரிது! ‘பெத்தமனம்’ கதையின் உயிர்நாடி கதைக்கரு மிகச் சிறப்பானது. சிறிய கதைதான் என்றாலும், இது மனதைவிட்டு நீங்காத அற்புத விளைவை ஏற்படுத்தியுள்ளது! பெரியவரின் உயர்ந்த மனமும், கதை நாயகனின் கீழ்மையானச் சிந்தனையும் இரு வேறு துருவங்கள். தலைமுறை இடைவெளியில் நிகழ்ந்துள்ள இன்றைய சுயநலப்போக்கை, கதைநாயகன் தன் பர்ஸிலிருந்த 100, 500 ரூபாய் நோட்டுகளை மறைத்து வைப்பதிலிருந்து ஆசிரியர் தெளிவுபடுத்திவிடுகிறார். சிறுகதைப் போட்டியில் இக்கதை பரிசு பெற்றதில் வியப்பொன்றுமில்லை!

    கல்வியும் கலையும் கற்பதற்கு வயது வரம்பில்லை; பொருட்டும் இல்லை! ஆர்வம் மட்டும் போதும். அதைக்கொண்டு முயற்சித்தால் வந்து சேராதது எதுவுமில்லை. இசை கற்க வந்தவரும், கற்றுத்தரும் ஆசானும் முதியவர்கள்; சம வயதினர். கற்க வந்தவரிடம் அடங்காத ஆர்வம் இருந்தது. கற்றுத்தரப் போகும் ஆசானிடமும் அதைத் தெள்ளென உணரும் சக்திவாய்ந்த ஞானக்கண் இருந்தது. இனி, என்ன? அங்கே இசைவெள்ளம் மடைநோக்கிப் பாயும் என்பதில் என்ன ஐயம்! ‘ஞானக் கண்’ மிகச் சிறந்த கதை! ஆசிரியருக்கும் சிறிது இசைஞானம் உண்டோ?

    பசிக் கொடுமை ஆங்காரமாக எழுந்து ஏழை முதியவளின் வயிற்றையும் மனத்தையும் வதைத்தெடுப்பதை இத்தனை தத்ரூபமாக உணர்வு பூர்வமாக விவரிக்க முடியுமா? ‘பசி மருந்து’ கதையில் விவரித்திருக்கிறார் ஆசிரியர். கோயில் தலத்தில் அமைந்துள்ள ஹோட்டல்; திருமணநாள்

    Enjoying the preview?
    Page 1 of 1