Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Parisukku Ponen
Parisukku Ponen
Parisukku Ponen
Ebook52 pages20 minutes

Parisukku Ponen

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.

நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்‌ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.

பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.

இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.

Languageதமிழ்
Release dateDec 8, 2017
Parisukku Ponen

Read more from Gnani

Related to Parisukku Ponen

Related ebooks

Related categories

Reviews for Parisukku Ponen

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Parisukku Ponen - Gnani

    http://www.pustaka.co.in

    பாரீசுக்குப் போ(னேன்)!

    Parisukku Po(nen)!

    Author:

    ஞாநி

    Gnani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/gnani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. செத்த காலேஜ் தேடி

    2. கில்லட்டின் எங்கே?

    3. கேக் ராணி

    4. ஆலயமணி

    5. குணனால் நிமிர்ந்தவர்

    6. ரயில் இல்லா ரயிலடி

    7. டாப்லெஸ் ரூத்லெஸ்

    8. பிண அரசியல்

    1. செத்த காலேஜ் தேடி

    சென்னையிலிருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர்களுக்குஅப்பால் ஒரு குன்றில் இருக்கும் அழகிய சிறு வீட்டில் ஜன்னல் வழியே புல்வெளியில் மேயும் குதிரைகளைப் பார்த்தபடி சில்லென்ற காற்றில் நனைந்துகொண்டு இதை எழுதுகிறேன். பிரான்சில் லியோன் நகருக்கு அருகே செயிண்ட் எடியன் என்ற கிராமத்தில் நண்பர் வீடு இது.

    சென்னையை விட்டு வந்து 14 நாட்களாகின்றன. திரும்பி வர இன்னும் 31 நாட்கள் ஆகும். அந்த நாட்களில் ரோம், வெனிஸ், வியன்னா, பெர்லின், ஆம்ஸ்டர்டேம், பிரஸ்ஸெல்ஸ், லூவன், லண்டன், ஆக்ஸ்போர்ட் என்றெல்லாம் சுற்றிவிட்டு வர திட்டம். இவ்வளவு நீண்ட காலம் நான் வெளிநாடுகளில் இருந்ததில்லை. இந்த முறையும் ஒரு பத்தே நாட்கள் மட்டுமே வெளி நாடு போய் வரலாமென்று சிதம்பரம் நண்பர் பழநி அழைத்தார். நான் அதை 45 நாள் பயணமாக மாற்றிவிட்டேன்.

    பழநி தன் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும்போதெல்லாம் நெருக்கமான ஓரிரு குடும்ப நண்பர்களையும் அழைப்பது வழக்கம். அப்படி அவருடன் ஊட்டி, எர்ணாகுளம், பாலி தீவுகளுக்கெல்லாம் சென்றிருக்கிறேன். பிரான்சின் பாரீசுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் போகலாம் என்று அவர் இம்முறை அழைத்தபோது, ஐரோப்பா பற்றிய என் கனவுப் பயணம் விரிவடைந்தது.

    நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க நண்பர் அருள் என்னை அமெரிக்காவுக்கு அழைத்தபோது அந்த 15 நாள் பயண முடிவில் அடுத்து ஐரோப்பாவுக்கு செல்லவேண்டுமென்ற ஆவலே அதிகரித்தது. நீண்ட வரலாறு எதுவும் இல்லாத அமெரிக்கா தன் சின்ன வரலாற்றையே பிரும்மாண்டப் படுத்திக் கொண்டாடுவதைக் கண்டபோது நெடிய வரலாறு உடைய ஐரோப்பாவைக் காணும் ஆவல் அதிகமாயிற்று.

    ரோம், வெனிசுக்கெல்லாம் அடுத்த வருடம் செல்வோம் என்றார் பழநி. கடந்த சில வருடங்களாக என் உடல் சர்க்கரை, ரத்த அழுத்த நோய்களால் கடுமையாக சிதைக்கப்பட்டுவரும் நிலையில் செய்ய விரும்பும் எதையும் உடனே செய்யமுடியுமானால் அதை நிச்சயம் தள்ளிப் போடுவது இல்லை என்ற மன

    Enjoying the preview?
    Page 1 of 1