Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

O! Pakkangal - Part 6
O! Pakkangal - Part 6
O! Pakkangal - Part 6
Ebook416 pages2 hours

O! Pakkangal - Part 6

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனக்காகத்தான் விகடன் வாங்கிக் கொண்டிருந்தேன்; எனக்காகத்தான் குமுதம் வாங்குகிறேன் என்று என்னை நேரில் சந்திக்கும்போதும், தொலைபேசியிலும் சொன்ன பல வாசகர்கள் இருக்கிறார்கள். எப்போதுமே வாங்குபவர்களிலும் பலர், இதழ் வந்ததும் முதலில் உங்கள் கட்டுரையைத்தான் படிப்பேன் என்று சொல்வார்கள். அவர்களைப் போன்ற, சமூகக் கவலைகள் உடைய எண்ணற்ற சக மனிதர்களுக்காகத்தான் தொடர்ந்து எழுதுகிறேன். தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தருமம் மறுபடியும் வெல்லும். கட்டுண்டோம்; பொறுத்திருப்போம். காலம் மாறும் என்று பாரதியின் பாண்டவர்கள் நம்பிக்கையுடன் பேசுவார்கள். அதே போலத்தான் இந்த சமூகத்தில் எண்ணற்ற மக்கள் இப்போது அவர்களைச் சூழ்ந்திருக்கும் அரசியல், சமூக, கலாசார இருளிலும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் என் ஓ பக்கங்கள். அவர்களுக்கான ஒரு சிறு மெழுகுவத்தி,
என் பார்வையுடன் உடன்பட்டாலும் உடன்படாவிட்டாலும், நான் எழுப்பும் விஷயங்கள் சிந்திக்கவும் விவாதிக்கவும் அவசியமானவை என்ற என் உறுதியான நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் அத்தனை பேருக்கும் மீண்டும் என் நன்றி. இப்போது ஓ பக்கங்களைக் கல்கியில் தொடர்கிறேன். அந்த அனுபவத்தைப் பற்றி, அடுத்த தொகுப்பின் முன்னுரையில் நிச்சயம் பகிர்ந்துகொள்வேன்
அன்புடன்
ஞாநி
Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580121205845
O! Pakkangal - Part 6

Read more from Gnani

Related to O! Pakkangal - Part 6

Related ebooks

Reviews for O! Pakkangal - Part 6

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    O! Pakkangal - Part 6 - Gnani

    http://www.pustaka.co.in

    ஓ! பக்கங்கள் - பாகம் 6

    O! Pakkangal - Part 6

    Author:

    ஞானி

    Gnani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gnani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கொஞ்சம் அரசியல் கொஞ்சம் சினிமா

    2. ஜோல்னா பை விமர்சனம்

    3. போலிகளின் அணிவகுப்பு

    3. போலி அறிவு வளர்ச்சி

    4. என்னைப் போல் ஒருவனா நீ?

    5. யாருக்கும் வெட்கமில்லை

    6. மூன்று மனக்குடைச்சல்கள்

    7. அழியப் போவது யாரு?

    8. அத்து மீறு... அடங்க மறு...

    9. கிளீன் போல்ட்

    10. கொதிப்புகள்

    11. கண்ணீர் தேசம்

    12. ஊரறிந்த ரகசியங்கள் -3

    13. நேற்று போபால்... நாளை கடலூர்?

    14. ஒரு படம் ஒரு பாடம்

    15. குறுக்கும் சூழலில் விலக்க வேண்டிய பனிப் படலங்கள்

    16. ஷேக்ஸ்பியர் சீரியல் எழுதினாரா?

    17. தங்கம் தென்னரசு, ஏ.ஆர்.ரஹ்மான் கவனத்துக்கு...

    18. நம் வாழ்க்கை நம் கையில்...

    19. கருணாநிதி ஓய்வு பெறுவாரா, மாட்டாரா?

    20. ஓ, ஒழுக்கம்!

    21. எந்த ஜோதியிலும் கலக்கவேண்டாம்...

    22. சினிமாவை சீர்படுத்த இரண்டு குரல்கள்...

    23. அய்யோ, பாராட்றாங்க....

    24. ஒரு கொலை ஒரு தற்கொலை

    25. நித்யானந்தா வீடியோ விவகாரம்

    26. என்ன தீர்வு?

    27. அன்புள்ள ரஞ்சிதாவுக்கு

    28. என்னைப் பறக்க வைத்த கோபிநாத்

    29. கூட இருந்தே குழி பறிப்போர் யார்?

    30. மனசாட்சியின் குரல்

    31. அன்புள்ள சோனியா காந்திக்கு

    32. தேவை கொஞ்சம் சுரணை...

    33. மேலவையை வரவேற்போம்...

    34. வாஷ்பேசினா, சர்வரோக நிவாரண சஞ்சீவி மருந்தா?

    35. மன்னிப்போம். மறக்கமாட்டோம்.

    36. உயிரினும் மேலான என் உடன்பிறப்பே, உருளைக்கிழங்கே..

    37. ‘தலை’வலி!

    38. தயவுசெய்து மனசாட்சியின் குரலைக் கேளுங்கள்....

    39. நாடகமே இந்த உலகம்...

    40. ஒரு விடுதலையும் ஓர் அடிமைத்தனமும்

    41. ஓ, அமெரிக்கா...

    42. ஓ, அமெரிக்கா 2

    43. யார் காரணம்?

    44. இரண்டு கவலைகள்

    45. படித்ததில் இடித்தது

    46. கவலை இல்லாத மனிதராவது எப்போது?

    48. மதுரை வன்முறை

    49. நந்திகிராமம் சிந்திய ரத்தம் & ஏன் எதற்கு எப்படி?

    50. அறுபது வருட அரசியல்

    51. தி.மு.க ஆட்சியில் போலீஸ்

    52. அசல் அரசியலுக்கு சினிமாவில் இடமில்லை

    53. ஏன் நான் கலைஞர் கருணாநிதியை எதிர்க்கிறேன்?

    54. ஸ்டார் கொன்ற நடிகன்

    55. பேசுகிறோம்... பேசுகிறோம்...

    56. (லேட்டஸ்ட்!) ஸ்டாலின் பற்றி: பரிகாரம் செய்யும் வாய்ப்புள்ள வாரிசு

    வணக்கம்

    தமிழ் இந்தியா டுடே இதழில் ‘கண்டதைச் சொல்லுகிறேன்’ என்ற தலைப்பில் பத்தி எழுதத் தொடங்கியதிலிருந்து, கடந்த ஏழரை ஆண்டுகளாக தமிழ் வெகுஜன இதழ்களில் என் பத்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சுமார் 21 மாத காலம் இந்தியா டுடேவில் எழுதினேன். அடுத்து ஆனந்த விகடனில் ‘ஓ பக்கங்கள்’ என்ற தலைப்பில் ஏப்ரல் 2005ல் தொடங்கிய பத்தி, ஜனவரி 2008 வரை சுமார் 33 மாதங்கள் வெளிவந்தது. கருத்து வேறுபாட்டினால் அங்கே அது நின்றதும், குமுதம் இதழில் பிப்ரவரி 2008ல் ‘ஓ’ பக்கங்களைத் தொடர்ந்தேன். ஆகஸ்ட் 2010 வரை 29 மாதங்கள் அதில் எழுதியிருக்கிறேன். மறுபடியும் கருத்து வேறுபாடு. ஆகஸ்ட் 2010லிருந்து ஓ பக்கங்களைக் கல்கி வார இதழில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஓயுதல் செய்யோம், தலை சாயுதல் செய்யோம், உண்மைகள் சொல்வோம்; பல வண்மைகள் செய்வோம் என்ற பாரதியின் வரிகள்தான் என்னை 35 ஆண்டுகளாக எழுத்திலும் வாழ்க்கையிலும் வழி நடத்துபவை.

    இந்தியா டுடே, ஆனந்த விகடன், குமுதம் ஆகிய மூன்று இதழ்களிலும், வேறு யாரும் இப்படி நீண்ட காலம் விமர்சனப் பத்தி எழுதியதில்லை. எனக்கு இந்த வாய்ப்பு அமைந்ததற்குக் காரணம், சம கால அரசியல், சமூகச் சூழல் பற்றிய விமர்சனங்களை ஆழமாகவும் எல்லா வாசகர்களுக்கும் சென்று சேர்கிற எளிய மொழி நடையிலும் எழுதுவதற்குத் தமிழில் இருப்போர் மிகக் குறைவு என்பதுதான். அதே சமயம் இப்படிப்பட்ட விஷயங்களுக்கான தேவை வாசகர்களிடையே ஏராளமாக இருக்கிறது.

    குமுதம் இதழில் நான் இன்னும் ஐந்தாண்டுகள் கூடத் தொடர்ந்து எழுதியிருக்கலாம். நான் தொடர்ந்து எழுதவேண்டுமென்று அங்கிருக்கும் ஆசிரியர் குழு நண்பர்கள் பெரிதும் விரும்பினார்கள். ஆனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்குள் ஏற்பட்ட உள் முரண்பாடு, நான் எழுத முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டது. பிப்ரவரி 2008 முதல் பிப்ரவரி 2010 வரை எனக்கு, குமுதம் ஆசிரியர் குழுவிடமிருந்து எந்த நிர்ப்பந்தமும் வந்ததில்லை. பக்க அளவிற்காகக் கட்டுரையின் நீளத்தைச் சுருக்க வேண்டி வந்தபோதெல்லாம், என்னிடம் சொல்லி என்னையே சுருக்கித் தரச் சொல்லித்தான் பெற்றுக் கொண்டார்கள். பல மிகக் கடுமையான தீவிரமான கட்டுரைகளை தயக்கமின்றி பிரசுரித்ததற்காக ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், இதர ஆசிரியர்கள் ரஞ்சன், மணிகண்டன் ஆகியோருக்கும் என் கட்டுரைகள் பற்றி உடனடியாக எதிர்வினைகளைச் சொல்லி உற்சாகப்படுத்தி வந்த வடிவமைப்பு ஓவியர் சாய்குமாருக்கும் எப்போதும் என் நன்றிகள் உண்டு.

    குமுதம் உரிமையாளர்கள் டாக்டர் ஜவஹர் பழநியப்பனுக்கும் பி.வரதராஜனுக்கும் இடையே இருந்த நிர்வாக மோதல் வெடித்து, அதைத் தீர்ப்பதற்காக அரசியல் அதிகாரத்திலிருப்பவர்களின் உதவிகள் நாடப்பட்ட பிறகுதான், என் கட்டுரைகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. இன்னும் ஓரிரு வாரங்களுக்கு மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள்; கலைஞர் கருணாநிதி தொடர்புள்ள எதைப் பற்றியும் தொடாமல் எழுதுங்கள். சில வாரங்களில் நிலைமை சரியாகிவிடும் என்று ஆசிரியர் குழுவினர் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் நிலைமை ஓரிரு வாரங்களில் சரியாகவில்லை. வேறெதாவது எழுதுங்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டதில் ஏற்பட்ட வெறுப்பில்தான், உருளைக்கிழங்கு பற்றியும் மைக்ரேன் தலைவலி பற்றியும் எழுதினேன். 1975-76 நெருக்கடி நிலை காலத்தில் முன்தணிக்கை இருந்தபோது முரசொலியில் கலைஞர் காய்கறி பற்றிக் கட்டுரை வெளியிட்டது எனக்கு நன்றாக நினைவிருந்தது.

    குமுதத்தில் ஒரு கட்டுரையில் அழகிரி, கனிமொழி, என்று பெயர்கள் குறிப்பிட்டிருந்ததை நீக்கினார்கள். அதே சமயம் பெயர் குறிப்பிடாமல் எழுதிய இந்த வாக்கியம் அச்சாகிவிட்டது (மதுக்கடைகளைத் திறந்து) நம் தமிழ் சமூகத்தையே சீரழிக்கும் இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு என்று நான் குறிப்பிட்டு எழுதத் தேவையே இல்லை. வாசகர்கள், சம்பந்தப்பட்டவர்கள் அத்தனை பேர் மனசாட்சிக்கும் அது தெரியும்.

    தலைவலி பற்றிய கட்டுரையில், நாம் விரும்பியபடி பேச, எழுத, கருத்து தெரிவிக்க, செயல்பட முடியாமல் தடைகள் வரும்போது அவை தலைவலியை ஏற்படுத்துகின்றன. எனக்கு எதையும் பச்சையாக எழுதினால் தலைவலி வராது. நான் எழுதினால் வேறு யாருக்காவது வேண்டுமானால் தலைவலி வரலாம் என்ற வாக்கியமும் அச்சாயிற்று. கட்டுரை நிற்பதற்கு ஒரு சில வாரங்கள் முன்னால் வந்த கட்டுரைகளில் கீழ் வரும் வாக்கியங்கள் இடம் பெற்றன. மாற்றுக் குரலாக ஒரே ஒரு இதழில் ஒரே ஒரு பகுதி ஒலிக்கும்போது அதை நெறிக்க சாம, தான, பேத, தண்டம் என்று பல முயற்சிகளும் நிகழ்கின்றன. நான்காண்டுகள் எழுதிய பத்திரிகையில் ‘ஓ’ பக்கங்கள் நிறுத்தப்பட்டபின், குமுதத்தில் இப்போது இரண்டாண்டுகளை நிறைவு செய்கிறேன். இதற்காக யாருக்கெல்லாம் நன்றி தெரிவிப்பது என்பதே எனக்குக் குழப்பமாக இருக்கிறது. இன்னொரு கட்டுரையில் நம் ஊரிலோ, ஒவ்வொரு வாரமும் இந்தக் கட்டுரை அச்சாகுமா என்ற கவலையுடனே எழுதியாக வேண்டிய நிலைதான் இருக்கிறது. என்று சொல்லியிருந்தேன்.

    காமராஜர் நினைவிடத்தில் அணையா விளக்கு ஏற்படுத்தப் போவதாக கருணாநிதி அறிவித்ததை தினத்தந்தி ஏடு, முதல் பக்கத்தில் எட்டு காலம் தலைப்புச் செய்தியாகப் போட்டிருந்தது. எனக்கு எரிச்சலாக இருந்தது. சமாதியில், நினைவிடத்தில் அணையாவிளக்கு என்பதே பகுத்தறிவுக்கு விரோதமானது. காமராஜரின் புகழ் அணையாவிளக்கு இல்லாததால் குறையவும் இல்லை; விளக்கு வைப்பதால், கூடப் போவதும் இல்லை. அந்த தண்டச் செலவை ஏழை மாணவர்களின் கல்விக்கு செலவிட்டால், அதுவே காமராஜருக்கான நிஜமான அஞ்சலி என்று எழுதினேன். குமுதம் ஆசிரியர் இதை வெளியிடமுடியாதென்று சொல்லிவிட்டார். முதல்வர் அறிவித்த திட்டத்தை விமர்சிப்பதால் சிக்கல் வருமாம். அப்படியானால் என் முழுக் கட்டுரையையும் போடவேண்டாமென்று மின்னஞ்சல் அனுப்பினேன். அச்சுக்குப் போய்விட்டதால் இந்த முறை பொறுத்துக் கொள்ளும்படி சொன்னார். அடுத்த வாரம் திரும்பவும் பிரச்சினை. அப்போது எழுதிய இந்த இரு கடிதங்களும் நிலைமையை விளக்கும்.

    கடிதம் 1

    அன்புக்குரிய டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்களுக்கு

    வணக்கம்,

    சென்ற வாரம் குமுதம் ஆசிரியர் திரு ப்ரியா கல்யாணராமனுக்கு அனுப்பிய என் மின்னஞ்சல் கடிதத்தினைக் கீழே தருகிறேன். ஏற்கனவே அதை உங்கள் பார்வைக்கு வைக்கும்படி அவரிடம் சொல்லியிருந்தேன்.

    இந்த வாரமும் நிலையில் மாற்றம் ஏதுமில்லை. இந்த வாரக் கட்டுரையில் சவுக்கு இணைய தளம் பற்றிய சில பகுதிகளுக்கு நம்மிடம் ஆதாரம் இல்லாத நிலையில் அவற்றை வெளியிட இயலாது என்று நீங்கள் கூறியதாக ஆசிரியர் குழுவிலிருந்து டாக்டர் திரு. மணிகண்டன் இன்று மாலை என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். இது எனக்கு உடன்பாடானதல்ல. குமுதத்தில் வெளிவரும் எல்லாமே (அரசியல், சினிமா கிசு கிசு செய்திகள் உட்பட) தங்கள் வசம் ஆதாரங்கள் இருப்பதால்தான் வெளிவருகின்றன என்று இப்போது அறிவது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

    என் கட்டுரையில் சவுக்கு இணையதளத்தில் சில முக்கியமானவர்களைப் பற்றி குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றுதான் நான் எழுதியிருக்கிறேனே தவிர, அந்த காவல் அதிகாரிகள், பத்திரிகையாளர் யார் பெயரையும் நான் குறிப்பிடவில்லை. அந்த இணையதளம் ஒளிநகல்களை வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டபோதும் நான் பெயர்களைக் குறிப்பிடவில்லை. அந்தச் செய்திகள் எல்லாம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் நம் கவலைக்குரியவை என்றே நான் எழுதியிருக்கிறேன். அந்த இணையதளத்தின் மொழி நடை எனக்கு உடன்பாடானதல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். இதைவிடப் பொறுப்பாக ஒரு விமர்சகன் எழுத முடியாது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர்ந்து நான் என் ‘ஓ’ பக்கங்களை குமுதம் இதழில் எழுத விரும்பவில்லை. எந்த முன் தணிக்கையும் இல்லாமல், என் கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளித்து நான் எழுதியவற்றை நீக்காமல், மாற்றாமல், முழுமையாக வெளியிடும் சூழலில் மட்டுமே என்னால் எழுத முடியும். தங்கள் இதழின் தேவைகளுக்காக என் 35 ஆண்டு கால வாழ்க்கை, தொழில் நெறிகளில் நான் சமரசம் செய்துகொள்ள இயலாது. இப்போது தங்களிடம் இருக்கும் என் கட்டுரையை முழுமையாக வெளியிட இயலாதென்றால், அதில் எந்தப் பகுதியையும் வெளியிடவேண்டாம்.

    குமுதத்தின் எடிட்டோரியல் பாலிசியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ஞாநி இனி குமுதத்தில் ‘ஓ’ பக்கங்களை எழுத இயலாது என்று தெரிவித்திருக்கிறார். என்ற அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    கடந்த சுமார் மூன்று ஆண்டுகளாக என் பத்தியை வெளியிட்டு லட்சக்கணக்கான வாசகர்களிடம் என் கருத்துகளை கொண்டு சேர்த்தமைக்காக உங்களுக்கும் இதழின் ஆசிரியர் குழுவினருக்கும் என் நன்றி.

    பிரிவோம். சந்திப்போம்.

    அன்புடன்

    ஞாநி

    கடிதம் 2

    திரு ப்ரியா கல்யாணராமனுக்கு ஜூலை 17, 2010 காலை 11.35 க்கு அனுப்பிய மின்னஞ்சல் விவரம்:

    அன்புள்ள ஆசிரியர் திரு ப்ரியா கல்யாணராமன் அவர்களுக்கு

    வணக்கம்

    தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக என் ஓ பக்கங்கள் கட்டுரையில் தங்கள் அலுவலகத்தின் குறுக்கீடு என் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதாக அமைந்துள்ளது. தி.மு.க., ஆட்சி, அதன் தலைவர், அவரது குடும்பத்தினர் சார்ந்த பொது வாழ்க்கை விஷயங்கள் பற்றியெல்லாம் விமர்சனங்கள் செய்யவேண்டாம் என்று வேண்டுகோள் தொடர்ந்து என்னிடம் வைக்கப்பட்டது. ஓரிரு வாரங்களில் நிலைமை சரியாகிவிடும் என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தி வந்தீர்கள். மூன்று மாதங்களாகியும் நிலைமை அவ்வாறே உள்ளது.

    இன்றும் என் கட்டுரையில் காமராஜர் நினைவிடத்தில் அணையாவிளக்கு வைப்பதாக முதல்வர் அறிவித்தது பற்றி நான் எழுதிய விமர்சனம் நீக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறீர்கள். இது எனக்கு உடன்பாடானதல்ல.

    எனவே முழு சுதந்திரத்துடன் எழுதும் வாய்ப்பில்லையென்றால் நான் குமுதத்தில் ‘ஓ’ பக்கங்களைத் தொடர்ந்து எழுத விரும்பவில்லை. இப்போது தங்களிடம் இருக்கும் என் கட்டுரையையும் முழுமையாக வெளியிட இயலாதென்றால், அதில் எந்தப் பகுதியையும் வெளியிடவேண்டாம்.

    குமுதத்தின் எடிட்டோரியல் பாலிசியுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டினால் ஞாநி இனி குமுதத்தில் ஓ பக்கங்களை எழுத இயலாது என்று தெரிவித்திருக்கிறார். என்ற அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இதுவரை எனக்கு நீங்களும் உங்கள் அலுவலக நண்பர்களும் அளித்துவந்த ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் என் நன்றி.

    அன்புடன்

    ஞாநி

    இப்படியாக குமுதம் இதழில் ஓ பக்கங்கள் வருவது நின்றது. இனி ஓ பக்கங்கள் வராது என்ற அறிவிப்பை குமுதமும் போடவில்லை. முன்னர் விகடனும் போடவில்லை. பாதியிலேயே நிறுத்தப்பட்ட இன்னொரு தொடரான ‘அறிந்தும் அறியாமலும்', ஏன் நிறுத்தப்பட்டது என்று வாசகர்களுக்குத் தெரிவிக்கும் தார்மிகக் கடமை, தனக்கு உண்டு என்பதைப் பற்றியும் விகடன் கவலைப்படவே இல்லை. பத்திரிகைச் சுதந்திரம் என்பது முதலாளிகளின் சுதந்திரம்தான். அலுவலகம் தாக்கப்படும் என்று எந்த அரசியல் ரவுடியாவது மிரட்டினால், உடனே கருத்துச் சுதந்திரம் பறி போகிறது என்று, எல்லா பத்திரிகையாளர்களையும் திரட்டி ஒப்பாரி வைத்து ஷோ காட்டுவார்கள். அவரவர் இதழ்களில் உள்ள பத்திரிகையாளர்களுடைய சுதந்திரம் பற்றி கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

    எனக்காகத்தான் விகடன் வாங்கிக் கொண்டிருந்தேன்; எனக்காகத்தான் குமுதம் வாங்குகிறேன் என்று என்னை நேரில் சந்திக்கும்போதும், தொலைபேசியிலும் சொன்ன பல வாசகர்கள் இருக்கிறார்கள். எப்போதுமே வாங்குபவர்களிலும் பலர், இதழ் வந்ததும் முதலில் உங்கள் கட்டுரையைத்தான் படிப்பேன் என்று சொல்வார்கள். அவர்களைப் போன்ற, சமூகக் கவலைகள் உடைய எண்ணற்ற சக மனிதர்களுக்காகத்தான் தொடர்ந்து எழுதுகிறேன். தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தருமம் மறுபடியும் வெல்லும். கட்டுண்டோம்; பொறுத்திருப்போம். காலம் மாறும் என்று பாரதியின் பாண்டவர்கள் நம்பிக்கையுடன் பேசுவார்கள். அதே போலத்தான் இந்த சமூகத்தில் எண்ணற்ற மக்கள் இப்போது அவர்களைச் சூழ்ந்திருக்கும் அரசியல், சமூக, கலாசார இருளிலும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் என் ஓ பக்கங்கள். அவர்களுக்கான ஒரு சிறு மெழுகுவத்தி,

    என் பார்வையுடன் உடன்பட்டாலும் உடன்படாவிட்டாலும், நான் எழுப்பும் விஷயங்கள் சிந்திக்கவும் விவாதிக்கவும் அவசியமானவை என்ற என் உறுதியான நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் அத்தனை பேருக்கும் மீண்டும் என் நன்றி. இப்போது ஓ பக்கங்களைக் கல்கியில் தொடர்கிறேன். அந்த அனுபவத்தைப் பற்றி, அடுத்த தொகுப்பின் முன்னுரையில் நிச்சயம் பகிர்ந்துகொள்வேன்

    அன்புடன்

    ஞாநி

    சமர்ப்பணம்

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பல்வேறு ஊழல்களை, முறைகேடுகளை. அம்பலப்படுத்தியதற்காக கொலை செய்யப்பட்ட எல்லா சமூக ஆர்வலர்களுக்கும், இதற்காக பயப்படாமல் தொடர்ந்து இதே பணியில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்களுக்கும்.

    1. கொஞ்சம் அரசியல் கொஞ்சம் சினிமா

    1.ராகுல் காந்திக்கு:

    தமிழ் நாட்டில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் செய்த நீங்கள், ஒவ்வொரு சமாதியாக ஒவ்வொரு சிலையாகப் போய் மாலை போடும் சடங்குகளையெல்லாம் தவிர்த்துவிட்டது நல்ல விஷயம். அதே போல உங்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தி சென்னை வந்தால், சத்தியமூர்த்தி பவனுக்குப் போகாமல் கலைஞர் வீட்டுக்கோ அறிவாலயத்துக்கோ மட்டும் போகும் பழக்கம் உடையவர். நீங்கள் அதையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் கட்சியின் கடந்த 62 வருட வரலாற்றிலேயே இல்லாத முறையில், இளைஞர் காங்கிரசுக்கு உட்கட்சித் தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் புரட்சியில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள். தேசிய நதிகள் இணைப்பை நீங்கள் ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தது, என்னைப் போன்ற சுற்றுச் சூழல் அக்கறையாளர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தந்தது.

    இன்னும் சில மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஒரு இளைஞர் காங்கிரஸ் அமைப்பை ஏற்படுத்தியிருப்பீர்கள். ஆனால் அந்த அமைப்பு யாரோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று யோசித்தீர்களா?

    கடைசி கணக்குப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 12 கோஷ்டிகள் காங்கிரசுக்குள் இருக்கின்றன. அவற்றை வழிநடத்துகிற எல்லாரும் பல்வேறு சமயங்களில் நியமனம் மூலமே கட்சிப் பதவிக்கு வந்தவர்கள்.

    அவர்களுடன் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் ஒன்றாக வேலை செய்யமுடியும்? உற்சாகமாக வேலை செய்யத் தொடங்கும் அவர்கள் ஒவ்வொருவரும், சில தினங்களிலேயே விரக்தியை நோக்கி உங்கள் கட்சியின் பெரிசுகளால் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்பதுதான் நடைமுறை நிஜம்.

    தவிர உங்கள் கட்சிக்குள் இருக்கும் பல கோஷ்டிகளுக்கு சோனியாவைத் தவிர வேறு தலைவர்களும் உண்டு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் தலைமையைப் பின்பற்றும் அவர்களை, எப்படி உங்கள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் சமாளிக்கப் போகிறார்கள்? அதை சமாளிக்காமல் எப்படி, அடுத்த தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு தி.மு.க, அ.தி.மு.க இருவரையும் வீழ்த்தும் கனவை நனவாக்கப் போகிறீர்கள்?

    2. விருது நீதிபதிகளுக்கு

    இந்திய அரசின் 2007க்கான தேசிய சினிமா விருதுகளை அறிவித்திருக்கிறீர்கள். எல்லா விருதுகளும் எப்போதும் சர்ச்சைக்குரியவைதான். பிரகாஷ் ராஜ் ஒரு திறமையான நடிகர் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. விருதுகள் பெறுவதற்கான தகுதி உடையவர்தான் அவர். ஆனால் வருட அடிப்படையில் விருது தரும்போது, அந்த வருடம் வந்த படங்களில் சிறந்த படம், அவற்றில் இருந்த நடிகர்களில் சிறந்த நடிகர் என்பதுதான் அடிப்படையாக இருக்க வேண்டும் அல்லவா?

    அப்படிப் பார்த்தால் காஞ்சிவரம் படமும் சரி, பிரகாஷ்ராஜும் சரி, சிறந்த படம், சிறந்த நடிகர் விருதுகளுக்குரியவர்களாக, ஒரு ரசிகன் என்ற முறையில் எனக்கு உடன்பாடில்லை. காஞ்சிவரம் படம் ஒரு செயற்கையான படம். தொழில்நுட்ப நேர்த்தியால் செயற்கையான கதையை மறைக்கிற பாவனைப் படம். நேர்த்தி இருக்கிறது. ஆன்மா இல்லை.

    நியாயப்படி சிறந்த பட விருது ‘தாரே சமீன் பர்’ படத்துக்குத்தான் தரப்பட்டிருக்க வேண்டும். கற்றல் குறைபாடுள்ள சிறுவனின் வாழ்க்கையைப் பற்றி, நேர்மையோடும் அக்கறையோடும் எடுக்கப்பட்ட படம் அது என்பது, படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். அதே போல சிறந்த நடிகர் விருது, தாரே சமீன் பர் படத்தில் நடித்த சிறுவனான தர்ஷீல் சஃபாரிக்குத்தான் தரப்படவேண்டும். சிறந்த நடிகர் விருதை குழந்தைகளுக்குத் தரக்கூடாது என்று விதி இருக்கிறதா என்ன?

    தாரே சமீன் பர் படம் பிலிம்பேர் பத்திரிகையின் விருதுகளுக்கு நியமனத் தேர்வான சமயத்தில், தர்ஷீல் தன்னை குழந்தை நடிகர் பிரிவில் பரிசீலிப்பதற்கு சம்மதிக்கவில்லை. அந்தப்படத்தின் கதாநாயகன் தான்தான் என்ற முறையில், சிறந்த நடிகர் பிரிவிலேயே தன்னை பரிசீலிக்க வேண்டும் என்பது தர்ஷீலீன் நியாயமான வாதம்.

    தாரே சமீன் பர் படத்துக்குச் சிறந்த குடும்ப நலப்படம் என்ற பிரிவில் விருதளித்திருப்பது கொடுமை.

    மாநில அளவில் சிறந்த படம் என்று தமிழில் ‘பெரியார்’ படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களே, இது சுத்தமான அரசியல். பெரியாரை கவுரவிப்பதற்கான வழி இதுவல்ல. பெரியாரை சரியாக சித்திரிக்கத் தவறிய படம் அது. 2007ல் தமிழில் வந்த படங்களில், பெரியாரை விட சிறந்த படங்கள் என்று, மொழி, ஒன்பது ரூபாய் நோட்டு, எவனோ ஒருவன், பருத்தி வீரன், பள்ளிக்கூடம் என்று குறைந்தது ஐந்து படங்களைப் பட்டியலிடமுடியும்.

    சாகித்ய அகாதமி முதல் சினிமா விருதுகள் வரை டெல்லியிலிருந்து வரும் எந்த விருதும், லாபியிங்கெல்லாம் இல்லாமல் நேர்மையாக மொழி, வட்டாரம் கடந்து தேர்வு செய்வது எப்போது நடக்கும்?

    இந்த வாரப் பூச்செண்டு

    மத்திய அரசின் அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரின் பயணச் செலவுகளைக் குறைத்து, ஒட்டு மொத்த நிர்வாக செலவுகளில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க உத்தரவிட்டிருக்கும் மன்மோகன்சிங் அரசுக்கு இ.வா.பூ.

    இந்த வாரத் திட்டு

    சிக்கன நடவடிக்கைகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.பிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருப்பதற்காக மன்மோகன்சிங் அரசுக்கு இ.வா.தி.

    இந்த வார ஆறுதல்

    நடிகர் விஜய் இப்போதைக்கு அரசியலில் குதிக்கப்போவதில்லை என்று அறிவித்திருப்பது இ.வா.ஆ.

    குமுதம் 14.9.2009

    2. ஜோல்னா பை விமர்சனம்

    'கந்தசாமி- நொந்தசாமி’ என்ற தலைப்பில் குமுதம் 1.9.2009ல் வெளியான என் கட்டுரைக்காக அந்தப் பட இயக்குநர் சுசி கணேசன் எழுதிய கடிதம் 7.9.2009 இதழில் வெளியிடப்பட்டது.: அந்தக் கடிதத்திலிருந்து.

    அன்புள்ள ஞாநி அவர்களுக்கு,

    வணக்கம்...

    உங்கள் வார்த்தைப்படி ஒரே பத்திரிகை அலுவலகத்தில் நீங்கள் சீனியராகவும், நான் ஜூனியராகவும் பணியாற்றிய பரிச்சயத்தோடு சுசி. கணேசன் எழுதும் கடிதம்...இன்ஜீனியரிங் படித்தாலும் பத்திரிகையாளனாய் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்ற கனவில் இருந்த என்னை பத்திரிகை உலகம் வேண்டாம் என்று சினிமா உலகிற்குத் தாவ வைத்தது நீங்கள்தான்... நம்பமுடியவில்லை..? ஒரு ஜோல்னா பையை போட்டுக் கொண்டு எல்லாவற்றையும் நெகட்டிவ் பார்வையோடு பார்த்துக் கொண்டு எடிட்டோரியலில் சுற்றிக் கொண்டிருந்த உங்களைப் பார்க்கும்போதெல்லாம் ஞாநி போல் ஒரு பத்திரிகையாளனாக அறியப்பட்டுவிடுவேனோ? என்ற பயத்தில் பத்திரிகை உலகை உதற வைத்தவர் நீங்கள்... அதற்காக முதல் நன்றி.

    படம் வாங்கிய வினியோகஸ்தர்களின் நம்பர்களை கேட்டு வாங்கி அவர்கள் லாபம் அடைந்திருக்கிறார்களா என்பதை நேர்மையாக கேட்டு வெளியிட்டிருந்தால் உங்களை ஒரு ஆண்மையுள்ள எழுத்தாளராக மதித்திருக்கலாம். வெளிவந்த ஒரு வாரத்தில் உலகம் முழுக்க 37 கோடி ரூபாய் வசூல் செய்த ஒரு சாதனைப் படத்தை தோல்விப் படம் என முத்திரை குத்த நினைப்பது யாரை குஷிப்படுத்த?

    ஒரு தியேட்டருக்கு போய் நடுநிலை பத்திரிகையாளர்களோடு நீங்களும் நானும் சேர்ந்து படம் பார்ப்போம். ஒரு சின்ன ஓட்டுப் பெட்டி வைத்து வெற்றி தோல்வி எழுதிப் போடச் சொல்வோம். தோல்வி என்று ஒரு ஓட்டு கிடைத்துவிட்டால் நான் சினிமா இயக்குவதை நிறுத்திக் கொள்கிறேன். இல்லை என்றால் நீங்கள் குப்பைகளை எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

    சிறிய பட்ஜெட் படங்களை ஆதரித்து ஒருசார்பான கருத்துக்களை இதற்கு முன்பாக பல வாரங்கள் எழுதியிருக்கிறீர்கள். பத்திரிகையாளனாய் உம்முடைய கருத்தை நியாயப்படுத்த விரும்பி பெரிய பட்ஜெட் படமான ‘கந்தசாமி’யை ஹிட்லர் புத்தியோடு களங்கப்படுத்தியிருக்கிறீர்கள். இதனை நீங்கள் பாராட்டிய மூன்று படங்கள், ‘சுப்பிரமணியபுரம்’ ரவுடியிசம் மையமாக வைத்து காதலோடு பின்னப்பட்ட படம், ‘பசங்க’ சிறுவர்களுக்கு என்று பெரியவர்களுக்கு கருத்து சொன்ன படம், ‘நாடோடிகள்’ காதலை சேர்த்து வைக்க அலைந்த மூன்று நண்பர்களின் கதை. இவற்றை மகா சினிமாக்கள் போன்ற மாயையை உருவாக்கி கந்தசாமியை மட்டம் தட்டப் பார்த்திருக்கிறீர்கள்.

    ஒருவேளை அந்த இயக்குநர்கள் போல உங்களுக்கெல்லாம் பரிச்சயமாகாதவனாக நான் இருந்திருந்தால், கந்தசாமியை தமிழில் வெளியான அட்டகாசமான சூப்பர் ஹீரோ படம். வெளிநாட்டு வங்கிகளில் பதுங்கியிருக்கும் பணத்தை இந்தியா கொண்டுவர வேண்டும் என்று அரசியல்வாதிகளுக்கு அறிவுரை சொல்கிற முதல் தமிழ் சினிமா, ரெகுலரான காதல் வசனங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1