Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

June 3
June 3
June 3
Ebook255 pages1 hour

June 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த ஜூன் 3-க்கு நான் என்னுரை எழுதும் போது எனக்குள் என்னன்னமோ எழுகிறது. அது அத்தனையும் விளக்கவேண்டுமெனில், படிக்கும் உங்களுக்கு ஒரே ஒரு வார்த்தையில் விளக்கினால் மட்டுமே போதுமான பொருத்தமென்று எனக்குள் தோன்றுகிறது.

இந்தியாவில் 1757-ல் வெள்ளைzszயர்கள் ஆட்சி தொடங்கியது. அதன் அடிமை வாழ்க்கை பிடிக்காமல் நம்மவர்களில் கட்ட பொம்மன், மருதுபாண்டியர், திப்புசுல்தான் போன்றவர்கள் போராடிய போதிலும் அது மக்கள் இயக்கமாக மாறியது. 1915 மகாத்மா காந்தி தலைமை ஏற்ற பிறகு தான் இங்கே நான் தேதி குறிப்பிடவில்லை, ஆனால் சேதி நிஜம், ஏன் உலகறிந்து உண்மையும் கூட! -

இன்றைய மாணவர்கள் கலையியலைப் படிக்கலாம். இன்றைய மாணவர்கள் அறிவியலைப் படிக்கலாம். ஏன் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து விஞ்ஞானத்தை வெற்றி பெறச் செய்யலாம். ஆனால் சுதந்திர மண்ணில், நிரந்திரமாக நம் எதிர்காலத்தில் இப்படியிருக்க வேண்டுமென்று நிதானமாக தன் இளமைபருவத்தில் மட்டும் யோசிக்க வேண்டும் என்று தான் தம்பி சந்திரமௌலி இந்தக் கதையில் சொல்லியிருக்கிறார்.

இவர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் நம் மனக் கண்முன் காட்டவில்லை. ஆசிரியர்கள் எதிரே தெரியாத பதிலுக்கு மாணவர்களையும், மாணவியர்களையும் நிறுத்தவில்லை. இதையெல்லாம் விடுத்துப் பள்ளிப் பருவத்தில் துள்ளிவிளையாடும் விடுமுறை நாட்களில் பசிக்கும், பாசத்திற்கும், படிப்பிற்கும் ஏங்கும் ஒர் இளைஞன் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற லட்சியத்தாயின் வேதவாக்குக்குக் கட்டுப்பட்டு துடிக்கும் இதயத்தை ஒரு நொடிப் பொழுதில் எடுத்துப் பார்க்க ஆசைப்படுகிறாள் நாயகி ஒருத்தி.

இந்தச் சிறுபிள்ளை விளையாட்டின் விளைவு தான் என்ன...?

விளையாட்டு வினையில் முடிந்ததா...?

இல்லை அவள் துணையில் முடிந்ததா...?

ஏன் உங்களுக்குள் குழப்பம், துடிப்பில் முடிந்தது...

இரவு, பகல் இருபத்து நாளு மணிநேரமும் அவன் இதயத்துடிப்பான நாளைக்கு ஒரு லட்சத்து மூன்றாயிரத்து அறுநூற்று எண்பது முறை ஒரே ஒரு

வார்த்தையுடன் அந்த இதயம் துடித்துக் கொண்டே வாழ்கிறது.

அது என்ன வார்த்தை என்று நீங்களும் தெரிந்துகொள்ள எனக்கும் ஆசையாய் இருக்கிறது.

அன்புடன்,
கு. பிச்சான்டி M.A.,

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580131105347
June 3

Read more from Jayadhaarini Trust

Related to June 3

Related ebooks

Reviews for June 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    June 3 - Jayadhaarini Trust

    http://www.pustaka.co.in

    ஜூன் 3

    June 3

    Author:

    வி.ஐ.பி.சந்திரமௌலி

    V.I.P. Chandramouli

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayadhaarini-trust

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. புலிவாசல்...

    2. ராமு தண்டனை...

    3. சின்னபட்டி இளைஞர்கள்...

    4. இரவுப் பயணம்...

    5. வயல் வேலை ஏற்பாடு...

    6. காவியா முத்தழகன் சந்திப்பு...

    7. பசி ஆறிய ராமு...

    8. ரஞ்சனி கடிதம்...

    9. அடிபட்ட முத்தழகனை ஜெமீன் தன் வீட்டில் தங்கப் பணித்தல்...

    10. தாய் அறிந்த லட்சியப்பார்வை...

    11. லட்சியவாதியைச் சந்தித்த தோழிகள்...

    12. ரஞ்சனியை வேலை விட்டு நீக்கும் ஐயர்...

    13. மூன்றில் தப்பித்த இறப்பு...

    14. முத்திப்போன பக்தி...

    15. கண்களால் அழும் இதயம்...

    16. செத்துப்போவாத சந்தோஷம்...

    17. ஜெயிப்பது எது...? ஜெயிப்பது யார்...?

    18. ஒருமன திருமணமா?

    19. சலனமனச் சஞ்சீவி...

    20. சண்முகம் கடிதத்தில் காவியா கொண்ட உரிமை...

    21. பெண் கேட்க சாரதா போதல்...

    22. அடைக்கல ஐயர் அமரர் ஆனார்...

    23. புலிவாசல் பூதவாசலானது...

    24. அதிர்ஷ்டம் இல்லாத தாய்மாமன்...

    25. கரும்புத் தோட்டத்தில் முத்தழகனின் கனத்த பெருமூச்சு...

    26. தாயானால் தெரியும் தானா...

    27. வயல் வெளியில் துடித்துச் செல்லும் காதல் இதயம்...

    28. ஆத்மாவுக்குள் அடிபட்ட காவியா... அத்தனைக்கும் அலைபாய்ந்த தோழிகள்...

    29. தங்கராசு தெரிந்து கொண்ட உண்மை

    30. சென்னை மருத்துவமனையில் முத்தழகன்...

    31. சிறகடித்துச் சுற்றியபறவை சிறகுடைந்து கிடந்தது...

    32. உயிரோடு கலந்த உண்மை ஊரெங்கும் போனது...

    33. பொண்ணுதாயிக்கு இப்போதே மண்ணு சொந்தமா...?

    34. நம்ம ஒரு தப்பு செய்யறோம்னா அது தெய்வத்துக்குச் செய்யற நல்லதுன்னு அர்த்தம்

    35. உண்மையே பேச உயிர் துடித்தது...

    36. புலிவாசலில் இறந்த பொண்ணுதாயி சின்னபட்டியில் இருந்தாள்...

    37. அழாதீங்க ஐயா...!

    38. திரும்பிச் செல்லும் பாதையில் பறந்து செல்லும் இதயங்கள்...

    39. மணிவாசகம் தெருவில் நின்ற காவல்...

    40. புலிவாசல் தீர்ப்பு புகுந்தது டவுனுக்குள்...

    41. குணமாகாத மனம் ஒன்று...

    42. தங்கராசு கத்த... சஞ்சீவி கத்தி கொடுக்க...

    43. பிறந்தது எதுவும் இந்தப் பூமியில் இருப்பதும் இல்ல... இறந்தது எதுவும் இந்தப் பூமியில் பிறப்பதும் இல்ல...

    44. ஐந்து வருடத்திற்குப் பிறகு...

    45. புனித வாசல்...

    உங்களுக்காக...

    எண்ணமும் எழுத்தும்

    யதார்த்தத்தை அறிய வேண்டும் என்பதற்காகவும், சின்னத்திரையில் தொடராக வர இருப்பதாலும், இந்த நாவலில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கத்தில் உள்ள தமிழ் நடையே.

    *****

    அணிந்துரை

    28-05-2004

    திருவண்ணாமலை

    இந்த ஜூன் 3-க்கு நான் என்னுரை எழுதும் போது எனக்குள் என்னன்னமோ எழுகிறது. அது அத்தனையும் விளக்கவேண்டுமெனில், படிக்கும் உங்களுக்கு ஒரே ஒரு வார்த்தையில் விளக்கினால் மட்டுமே போதுமான பொருத்தமென்று எனக்குள் தோன்றுகிறது.

    இந்தியாவில் 1757-ல் வெள்ளைzszயர்கள் ஆட்சி தொடங்கியது. அதன் அடிமை வாழ்க்கை பிடிக்காமல் நம்மவர்களில் கட்ட பொம்மன், மருதுபாண்டியர், திப்புசுல்தான் போன்றவர்கள் போராடிய போதிலும் அது மக்கள் இயக்கமாக மாறியது. 1915 மகாத்மா காந்தி தலைமை ஏற்ற பிறகு தான் இங்கே நான் தேதி குறிப்பிடவில்லை, ஆனால் சேதி நிஜம், ஏன் உலகறிந்து உண்மையும் கூட! -

    இன்றைய மாணவர்கள் கலையியலைப் படிக்கலாம். இன்றைய மாணவர்கள் அறிவியலைப் படிக்கலாம். ஏன் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து விஞ்ஞானத்தை வெற்றி பெறச் செய்யலாம். ஆனால் சுதந்திர மண்ணில், நிரந்திரமாக நம் எதிர்காலத்தில் இப்படியிருக்க வேண்டுமென்று நிதானமாக தன் இளமைபருவத்தில் மட்டும் யோசிக்க வேண்டும் என்று தான் தம்பி சந்திரமௌலி இந்தக் கதையில் சொல்லியிருக்கிறார்.

    இவர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் நம் மனக் கண்முன் காட்டவில்லை. ஆசிரியர்கள் எதிரே தெரியாத பதிலுக்கு மாணவர்களையும், மாணவியர்களையும் நிறுத்தவில்லை. இதையெல்லாம் விடுத்துப் பள்ளிப் பருவத்தில் துள்ளிவிளையாடும் விடுமுறை நாட்களில் பசிக்கும், பாசத்திற்கும், படிப்பிற்கும் ஏங்கும் ஒர் இளைஞன் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற லட்சியத்தாயின் வேதவாக்குக்குக் கட்டுப்பட்டு துடிக்கும் இதயத்தை ஒரு நொடிப் பொழுதில் எடுத்துப் பார்க்க ஆசைப்படுகிறாள் நாயகி ஒருத்தி.

    இந்தச் சிறுபிள்ளை விளையாட்டின் விளைவு தான் என்ன...?

    விளையாட்டு வினையில் முடிந்ததா...?

    இல்லை அவள் துணையில் முடிந்ததா...?

    ஏன் உங்களுக்குள் குழப்பம், துடிப்பில் முடிந்தது...

    இரவு, பகல் இருபத்து நாளு மணிநேரமும் அவன் இதயத்துடிப்பான நாளைக்கு ஒரு லட்சத்து மூன்றாயிரத்து அறுநூற்று எண்பது முறை ஒரே ஒரு வார்த்தையுடன் அந்த இதயம் துடித்துக் கொண்டே வாழ்கிறது.

    அது என்ன வார்த்தை என்று நீங்களும் தெரிந்துகொள்ள எனக்கும் ஆசையாய் இருக்கிறது.

    அன்புடன்,

    கு. பிச்சான்டி M.A.,

    *****

    இறகு எழுத்து

    - பேராசிரியர் அப்துல் காதர்

    ஜூன் 3 விஐபி சந்திர மௌலியின் புதினம் என் முன்னே ஒரு பிஞ்சுப் பிறையின் குஞ்சுச் சிறகுபோல விரிந்து கிடக்கிறது. வித்தைத் தின்றுவிட்ட விவசாயி போலக் கழிந்து வீணாகி விட்ட இளமையை முதியவன் எண்ணிப் பார்க்கிறான்.

    என்று நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் கேள்வி எழுப்புகிறார். இறந்துவிட்ட நேற்றையப் பற்றிய கவலை, பிறக்காத நாளையைப் பற்றிய அச்சம் காரணமாக ரொக்கப் பணம் போல் இருக்கும் இன்றைய வாழ்வின் இனிமைகளைப் பலர் பார்க்க மறந்து அல்லாடுகிறார்கள். இன்று போலவேதான் இளமையும்.

    வசந்தம் வாசல் திறக்கும் இளமைப் பருவத்தின் ஏக்கம், இலக்கு, இனிமை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் எல்லாவற்றையும் புலிவாசல் மண் தொடங்கிப் போகிற போக்கில் நயம்பட ஒரு காமிராக் கலைஞனைப் போலப் படம்பிடிக்கிறார் சந்திரமௌலி.

    பஞ்சாயத்துக் கூட்டத்தில் நிற்கிறாள் ரஞ்சனி

    காதிலோ சிறிய கம்மல்

    கலங்காத கண்கள்

    வட்ட முகம்

    இரட்டை ஜடை

    சிவப்புப் பொட்டு

    ஒரே ஒரு ஒற்றைக்கல் மூக்குத்தி

    பச்சை நிறத் தாவணி

    வெள்ளை நிற ஜாக்கெட்

    புளு கலர் பாவாடை

    சந்திர மௌலியின் மின்னல் துண்டு வார்த்தைகளில் நம் கண்முண்னே நிற்கிறார்.

    பிரம்மாவுக்கும், இலக்கியக் கலைஞனுக்கும் என்ன ஒற்றுமை? என்ன ஒற்றுமை? குமரகுருபரர் ஒரு பாடலில் அற்புதமாகச் சொல்கிறார்.

    இருவரும் படைப்பாளிகள். இருவருக்கும் கலைமகளோடுதான் வாழ்க்கை, இருப்பினும் ஒரே ஒரு வேறுபாடு

    கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்

    மலரவன் வண்டமிழோர்க்கு ஒவ்வான் – மலரவன்செய்

    வெற்றுடம்பு மாய்வன போல் மாயா

    மற்றிவர் செய்யும் உடம்பு.

    மலரவனாம் பிரமன் செய்யும் படைப்புகள் காலத்தால் அழியும் ஆனால் இலக்கியப் படைப்புக்கு என்றும் அழிவில்லை. புனைகதைகளில் வனையப்படும் பாத்திரங்கள் காலத்தை வென்று நிற்பன. சில பிரம்மாக்கள் வெறும் குயவர்கள் ஆகிவிடும் விபரீதம் நிகழ்வதுமுண்டு. ஆனால் முந்தழகன், காவியா, ரஞ்சினி, ராமு, ஜெமீன், அய்யர் என்று சந்திரமெளலி சமைத்த பாத்திரங்கள் வாயிலாகப் புறப்படும் ரசங்கள், நிசங்கள்.

    மழையைவிட உழைப்போர் வேர்வையால் அதிகம் ஈரப்படும் கிராமத்தின் மென்மை, இயல்புகள், அவர் பேனாவினால் பிழையின்றிப் பேசப்பட்டுள்ளன.

    விரலை வெட்டிக் கொண்டான் முத்தழகன், பெயரிலேயே காயம் உள்ள வெங்காயம் வெட்டுப்படவில்லை. தாவணி கழித்துக் காவியா கட்டுப் போகிறாள். ஆம் இரண்டு சுற்றுச் சுற்றி மூன்று முடி போடுகிறான்.

    காவியாவின் நெஞ்சுக்குள் மாலை மாற்றித் தாலிகட்டிக் கொள்வதான நினைவு என்று சந்திரமௌலி எழுதும் போது இளைய உள்ளத்தின் யதார்த்த எக்ஸ்ரே தெரிகிறது.

    முத்தழகன் கதையின் இறுதியில் முகம் காட்டி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்பு, ஆளுநர் முன்பு

    வாழ்க்கைங்கிற போராட்டத்துல...

    வாலிபங்கிற வயசுல

    பாசிங்கிற பட்டினியில்

    லட்சயங்கிற வெறியில

    போராடிப் போய்க்கிட்டிருந்த

    ஒரு மாணவன்...

    காதல்ங்கிற வழியில சிக்கிக்கிட்டிருப்பான்!

    ஆனால் அவன்

    தாய் சொல்லுங்கிற மந்திரத்தை ஓதி

    படிப்புங்கிற வேள்வியைக் காத்து

    பட்டங்கிற சாதாரணப் படிப்பை முடிக்க

    அமெரிக்கா போனான்

    அவன் யாருமில்லை நான் தான் முத்தழகன் எனக் கம்பீரமாக முழங்குகையில், ஒவ்வொரு இளைஞனும் அவனைப்போல லட்சிய நகலாக வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்துகிறது.

    காரில் பயணம் செய்யும் போது, ஓட்டுநர் இருக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் கண்ணாடி, கார் கடந்து செல்லும் காட்சிகளைப் பதிவுசெய்வது போல ஒரு புதினத்தின் நிகழ்வுகள் எழுதுபவனால் பதிவாக வேண்டும். ரெய்ன் என்ற திறனாய்வாளன் கூற்றுப்படி சந்திரமௌலி கண்ணாடியாகி வாழ்வை பிம்பப்படுத்தியுள்ளார். வாழ்க அவர் எழுத்துப் பயணம்.

    அன்புடன்,

    பேராசிரியர் அப்துல்காதர்

    வாணியம்பாடி.

    *****

    ஜூன் - 3...

    பாடப்புத்தகங்களைச் சுமக்கும் இளைஞர்கள்...

    காதல் இதயங்களைச் சுமந்து கனமாகிப்போய்...

    காலம் இயந்திரமென்பதை மறந்துவிட்டு,

    அவரவர்கள் ஆத்மாவையும் அலையவிட்டு...

    அடுக்கப்பட்ட புத்தகங்களைப் படிக்காமல்,

    அப்பா அம்மா பேச்சுகளைக் கேட்காமல்...

    ஆசிரியர்கள் வழியும் நடக்காமல்...

    அவள் போடும் கலரில் துணிபோட்டு...

    அவள் ஏறும் பஸ்ஸில் நடைபோட்டு...

    முட்டி மோதி மூச்சுவிட்டு...

    எட்டிப்பிடிக்கும் வாழ்க்கையை இழந்துவிட்டு...

    ரொட்டியாகக் கடைசியில் வீசப்பட்டு...

    வெட்டியாக முடிவில் போவதைக்கேட்டு...

    ஈட்டியாகக் குத்தினேன் மையில் தொட்டு...

    அதுதான் ஜூன் 3...

    வயிற்றுக்காகவே உழைத்த அப்பா...

    நோய்க்குள் வாழ்ந்த அம்மா...

    இவர்கள்,

    சோற்றுக்காகவே உழைத்த காலத்தில்...

    ஆற்றுநீர் அடித்துச் செல்லும் லட்சியத்தை...

    அப்பா இறந்ததால் பிடிக்கமுடியவில்லை...

    அம்மா இருந்தும் அணைக்க முடியவில்லை...

    அண்ணன் வாழ்ந்தும் வாய் - பேசமுடியவில்லை...

    அந்த ஜூன் 3... வந்ததால் மட்டுமே

    அவன் உயிர்வாழ முடிந்தது...

    ஏன் முடிந்தது...

    எப்படி முடிந்தது...

    எதற்காக முடிந்தது...

    இதோ...

    இந்த ஜூன் 3... - இல் தெரிந்து கொள்வோமா...?

    அன்புடன்,

    - V.I.P. சந்திரமௌலி

    *****

    1. புலிவாசல்...

    டும்டும்... டும்டும்... டும்டும்டும்... இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அக்கரகாரத்து ராமு அம்பி, வேலைக்காரி மகள் ரஞ்சனியைக் கை தொட்டதால் காரணம் அறிய... இன்று மாலை ஆறுமணி அளவில் பிள்ளையார் கோவில் ஆலமரத் திடலில் பஞ்சாயித்து விசாரணை நடைபெற இருப்பதால்... புலிவாசல் ஜெமீன் மணிவாசகம் உத்திரவுப்படி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    டும்டும்... டும்டும்... டும்டும்டும்... என்று மேட்டுத்தெரு, மாரியம்மன் கோயில் தெரு, முதலித்தெரு, பள்ளிக்கூடத் தெரு, அக்கரகாரத் தெரு என்று அனைத்தையுமே சுற்றி ஒருவாறு செய்தி தெரிவித்த வீரஜாம்பு ஜெமீன் வீட்டை நோக்கி நடந்தான்...

    இன்னைக்குக் காளை மாட்டு சூப்புல எக்ஸ்ட்ரா ஒரு காட்டு காட்டிட வேண்டியதுதான்...

    ஐயாகிட்ட எப்படினா ஒரு இருபது ரூபாயை நைசா புடிங்கிடனும்... என்று வெட்டியான் வீரஜாம்பு தன் திடகார்த்த உடம்பில் மூக்குக்கு கீழே உள்ள முருக்கு மீசையைத் தடவிகிட்டு... தன் இடத்தோளின் பின்புறம் தண்டோராவைப் போட்டு... ஐம்பது வயது நடையை இருபது வயதில் நடந்தான்... ஜெமீன் வீடு வந்தது...

    பத்து தென்னை மரம் கூடிய அந்த இரண்டு மாடி வெள்ளை நிறக் கட்டட வாயிலின் முகப்பில் செம்பருத்தி பூச்செடி... வீட்டையே சுற்றி வளைத்துப் பாதுகாக்கும் காம்பௌண்ட் சுவர்... அதனுயரத்தில் நின்ற இரும்பு கேட்டை விலக்கிக் கொண்டு மெதுவாக வீரஜாம்பு உள்ளே சென்றான்...

    தென்னைமர ஓரத்தில் தான் ஒரு பிச்சைக்காரன் போன்று கூனிக் குனிந்து ஐயா...! ஐயா! நான் வீரஜாம்பு வந்திருக்கேன்... என்று பத்தடிக்கு அப்பாலேயே நின்றான்... முதல்மாடி வரை படர்ந்து இரண்டாவது மாடியை எட்டிப்பிடிக்க காத்துக் கொண்டிருந்த செம்பருத்திச் செடியை பார்த்துக்கொண்டே...

    ஐயா இருப்பாங்களா...? இல்லை அம்மாதான் இருப்பாங்களா? என்று தனக்குத்தானே யோசித்தான்...

    முகத்தின் முன் மூடிய கூந்தலை தன் இடக்கையால் தனக்கே உண்டான ஸ்டெயிலில் சரிசெய்து கொண்டாள் காவியா... நிமிர்ந்தாள்... இரு கைகளுக்கும் மத்தியில் உள்ள கடிதத்தில் தன் முகத்தை பதித்தாள்...

    அப்பா படிக்கிறேன் கரெக்ட்டானு பார்த்துக்குங்க...! என்றாள் தன் மெல்லிய குரலில்...

    ஜெமீன் மணிவாசகம் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிக்கொண்டே, ம்... படிம்மா என்றார் தன் திடகார்த்த குரலில்...

    "சின்னப்பட்டி பெருமாள் மகன் முத்தழகனுக்கு... நானாகிய புலிவாசல் ஜெமீன் மணிவாசகம் எழுதிக் கொள்வது... நீங்கள் வழக்கம்போல்... எங்களுக்கு உங்கள் பணி தொடரும் காலம் நெருங்கிவிட்டது... எனவே நாற்பது நாளில் உங்கள் வேலைகளை முடித்து கொடுத்துவிட்டு, முழுப் பணத்தையும் பைசல் செய்து கொண்டு போவது... உங்கள் தாயையும் சக தொழிலாளிகளையும் விசாரித்ததாகச் சொல்லவும்...

    இப்படிக்கு,

    மணிவாசகம்,

    புலிவாசல்."

    ம்... கரெக்ட்டுமா... லெட்டரை ரத்தின சுருக்கமா வலவலனு இல்லாம எழுதிட்டே... இதுக்குத்தான் பொம்பளை புள்ளையா இருந்தாலும் படிக்க வைக்கனும்னு சொல்றது...

    இதை நீயே ஒட்டி மடிச்சு போட்டுடுமா... காவியா சலக் சலக்கென்று சலங்கை ஒலியோடு நடந்தாள்...

    அம்மாடி...! வெளியில வீரஜாம்பு குரல் கேட்டது... அவன் நின்றுங்கெடப்பான்... உட்காரச் சொல்லு... நான் தோ வர்றேன்...! என்று தந்தை கூற,

    Hello, நீங்க உட்காருவீங்களாம்... அப்பா இப்போ வருவாங்களாம்... என்று நடந்தாள் காவியா...

    இதைக் கேட்ட வீரஜாம்பு... ஜெமீன் மகள் காவியாவையே ஒரு ஓவியம் போல் பார்த்தான்...

    துருதுரு முகம்...

    மீன் போன்ற கண்கள்...

    கார்மேகக் கூந்தல்...

    செவ்வுதடு...

    தேன் கலந்த பேச்சு...

    முத்து போன்ற பற்கள்...

    நெற்றியில் ஒரு கருப்புப்பொட்டு...

    நீண்ட தூரம் நிமிர்ந்து பார்க்காத மெல்லிய நடை...

    அழகான முழங்கால்கள்...

    அருமையான இரு கைகள்...

    வெள்ளையான உடல்வாகு...

    ஒல்லியும் இல்லை... தடியும் இல்லை தண்டவாளம் போன்ற திடகார்த்தம்...

    அன்னப்பறவை நடை...

    அவளுக்கேற்ற தாவணி...

    அதற்கேற்ப ஜாக்கெட்...

    அதற்கேற்ற அழகான பாவாடை... மொத்தத்தில் அவள் ஒரு காவியா எனும்

    Enjoying the preview?
    Page 1 of 1