Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rasamadevi Part - 2
Rasamadevi Part - 2
Rasamadevi Part - 2
Ebook256 pages1 hour

Rasamadevi Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் இலக்கியங்களுள் மிகத் தொன்மையான. சிறப்பான காப்பியம் "சீவகசிந்தாமணி"யே! இக்காப்பியம் உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று! இதனை இயற்றியு பெரும் புலவர் திருத்தக்கதேவர் பெருமாள். 3145 - விருத்தப் பாக்களால் அமையப் பெற்ற இப்பெருங்காப்பியம், புலவர் பெருமக்களும், பண்டிதர்களும், அறிஞர்களும் மட்டுமே உணரத்தக்கதாக அமைந்துள்ளது. எனவே இக்காப்பியத்தின் பெருமையையும். சிறப்பம்சம்ததையும் பாமரமக்களும், எழுதப்படிக்கத் தெரிந்த மிக எளிய அன்பர்களும் உணர வேண்டும் என்பதே என் நோக்கம். தொடர்கதையாகப் படிக்க விரும்பும் வாசகர்களுக்கு ஏற்ற கதையம்சத்துடனும், சின்னத் திரைக்கு ஏற்றாற் போலவும், வெண்திரை ஓவியமாக்கத் தகுந்தாற் போலவும், புதியதொரு உத்தியைக் கையாண்டு, “இராசமாதேவி” என்னும் தலைப்பில், காதல்-வீரம், சதி - சூழ்ச்சி. ஆடல் பாடல்கள் நிறைந்த, காண்போர் உற்சாகமடையத் தொடர்கதையாக நாடகத் திரைக்ககதை வசனமாக அளிக்கிறேன்.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580131108616
Rasamadevi Part - 2

Read more from Jayadhaarini Trust

Related to Rasamadevi Part - 2

Related ebooks

Reviews for Rasamadevi Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rasamadevi Part - 2 - Jayadhaarini Trust

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இராசமாதேவி பாகம் – 2

    Rasamadevi Part – 2

    Author:

    புலவர் சீனி. கிருஷ்ணஸ்வாமி

    Pulavar Seeni. Krishnaswamy
    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayadhaarini-trust

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    25. திருவுடைத்தேவியின் துயரம்

    26. நோய் தீர்த்த வள்ளல்

    27. கடமை முடிந்தது மகனே!

    28. தோளிற்கு வலிமை

    29. ஞானபோதம் செய்த ஞானாசிரியன்

    30. ஆநிரை மீண்டன

    31. புயலில் சிக்கிய மரக்கலம்

    32. சீதத்தனுக்குக் கிடைத்த வரவேற்பு

    33. புதிய நட்பும், உறவும்!

    34. துன்பத்தில் இன்பம்!

    35. அழைப்பு

    36. வீணைப் போட்டியா? கன்னிப் போரா?

    37. சுண்ணத்தில் மாறுபட்ட நங்கையர்

    38. மதக்களிறு அடக்கிய மாவீரன்!

    39. கள்ளம் புகுந்த உள்ளங்கள்

    40. மணவிழாவில் மன்னனின் படை!

    41. எங்கே சீவகன்?

    42. மதனனின் பொய்யுரை

    43. வீரசேனனின் வாக்குறுதி

    44. மதி வழியே விதியை மதிக்க வேண்டும்!

    இரண்டாம் பாகம்

    அங்கம் ஐந்து

    காட்சி ஒன்று

    இடம்: பெருநிதிச்செல்வரின் மாளிகை.

    காலம்: இரவு.

    பாத்திரங்கள்: பெருநிதிச்செல்வர் - திருவுடைத்தேவி - குழந்தை - தோழியர் - பணிப்பெண்கள்.

    25. திருவுடைத்தேவியின் துயரம்

    (பெருநிதிச் செல்வரின் அழகு மாளிகையே பெருஞ்சோகத்திலே ஆழ்ந்திருந்தது. இரவைப் பகலாக்கிக் கொண்டு அலங்காரமாகச் சுடர்விட்டு ஒளி வீசச் செய்யும் பொற்பாவை விளக்குகள் எல்லாமே அன்று இருக்கும் இடமே தெரியாதவாறு இருளிலே மறைந்திருந்தன. எப்பொழுதும் ஆடலும், பாடலும் நிகழ்த்து கொண்டே இருப்பதால் கலகலவென்று பேரோலியுடன் விளங்கும் அவ்வழகு மாளிகை அன்றிரவு பேரமைதியிலே மூழ்கிக் கிடந்தது. அம்மாளிகையில் உள்ள ஏவலாளர் அனைவரும் பெறாக்கரிய இரத்தினமணியைப் பறி கொடுத்து விட்டதே போலப் பெருநிதிச்செல்வரின் குமாரனின் மறைவால் ஏற்பட்ட துன்பத்தைப் பொருத்துக் கொள்ள இயலாமல் பெருஞ்சோக வெள்ளத்திலே மூழ்கிக் கிடந்தனர். அம்மாளிகையான் முன்புறத்தில் மின்மினிப் பூச்சிகளைப் போல இரண்டொரு இடங்களில் மட்டும் பொன் விளக்குகள் சில இலேசாகக் காற்றில் நடுங்கிக் கொண்டு அரையுங் குறையுமாக ஒளியைச் சிதறிக் கொண்டிருந்தன. மாளிகையின் முன்கூடத்தில் பணிப்பெண்கள் சூழ துன்பத்தின் மறுஉருவமாய்த் திருவுடைத்தேவியார் பொன்னிருக்கை பொன்றில் அழுது அழுது வீங்கிய முகத்தினளாய்ச் சாய்த்தபடியே அமர்த்திருந்தாள்.

    அந்தக் கூடத்தின் ஓரப்பகுதிகளில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த இரு பொற்பாவை விளக்குகளும் திருவுடைத் தேவியாரின் துயரத்தைச் சகித்துக் கொள்ள இயலாதவைகளே போலத் துடித்துக் கொண்டிருந்தன. பெற்றுப் பெற்று மண்ணுக்குப் பறி கொடுத்து வரும் அந்தப் பெண்ணரசியின் பேதை உள்ளம், அப்பொழுது இவ்வுலக வாழ்க்கையையே வெறுத்துக் கொண்டிருந்தது. கடல் போன்ற செல்வத்தைப் பெற்றிருந்தும் என்ன பயன்? இட்ட கோலத்தைக் கலைப்பதற்கும், வைத்த பொருள்களை வீசி விளையாடுவதற்கும், அந்த வீட்டில் ஒரு மழலைச் செல்வம் இல்லையே! கொஞ்சுமொழி பேசும் குழந்தையொன்று விளையாடாத வீடும் ஒரு வீடா? என்றெல்லாம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது அந்த மங்கை நல்லாளின் மாண்புள்ளம்.

    ஆம்! அந்தத் தாய் நான்கு குழந்தைகளைப் பெற்று மண்ணுக்குப் பறிகொடுத்தவள். அன்று ஐந்தாவது குழந்தையையும் பெற்றுக் கால தேவனுக்குக் காணிக்கையாக்கியிருந்தாளாகையால், துயரமென்னும் பெருங்கடலுள் மூழ்கியிருந்தாள் அவள். துயரமாகிய தீ அம்மங்கையர்க்கரசியின் கண்களில் உள்ள கண்ணிரையெல்லாம் வற்றவே செய்திருந்தன. பணிப்பெண்கள் பலரும் ஆறுதல் கூறியும் கூட அந்த நங்கை நல்லாளின் உள்ளம் நடந்து போன நிகழ்ச்சிகளையே எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தது. வெறுப்புணர்ச்சியின் காரணமாக மனம் போனபடியெல்லாம் பித்துப் பிடித்தவளே போலப் பேசத் தொடங்குகிறாள் தன் பணிப்பெண்களிடம். ஈன்றெடுத்த பச்சிளங் குழந்தையுடன் ஈமப் புறங்காட்டிற்குச் சென்றிருந்த தன் கணவர் பெருநிதிச் செல்வரின் வருகைக்காகக் காத்துப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்ணரசி.

    உள்ளத்தில் துயரமென்னுஞ் சுமையைத் தாங்கியவராய், சீராட்டித் தாலாட்டி மகிழ வேண்டிய கரங்களில் இறந்து போன குழந்தையைச் கமந்தவராய்; தள்ளாடித் தள்ளாடி முன்னிரவு நேரத்தில் ஈமப்புறங்காட்டை நோக்கிச் சென்றிருந்த பெருநிதிச் செல்வர். மகிழ்ச்சி வெள்ளத்தைத் தன் உள்ளத்தால் தாங்கிக் கொள்ள இயலாதவராய், ஓட்டமும் நடையுமாகப் புதுத்தென்பு பெற்றவராய் அரசிளங்குமரனை அணைத்தவாறு சந்தடியற்ற அந்த இரவு நேரத்தில் இராசமாபுரத்துச் சாலையின் வழியே ஆங்காங்கு நகர் காப்போரின் குறுந்தடி யோசைகளைக் கேட்டவாறு வேகமாகத் தன் வீடு நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தார். ஒருபுறம் மனைவி சோகத்தில் மூழ்கி இருக்க, மறுபுறம் கணவன் மகிழ்ச்சியில் திளைத்திருக்க அமைந்தது அந்த விந்தையான இரவு!)

    (திருவுடைத்தேவி பணப்பெண்களுடன் பேசுகிறாள்)

    திருவுடைத்தேவி: (விரக்தியுணர்வுடன்) என்ன உலகம்? என்ன வாழ்வு? இப்படியும் ஒரு சோக வாழ்வு வாழ வா நான் பெண்ணாய்ப் பிறந்தேன்? நான்கு குழந்தைகளைப் பெற்று மண்ணுக்கே பறிகொடுத்து விட்டேன். இந்த ஐந்தாவது குழந்தையாவது என் மனத்தைக் களிப்படையச் செய்யும் என்றெண்ணினேன். இதுவும் இப்படி என்னை ஏமாற்றி விட்டுச் சுடுகாட்டுக் கோட்டம் தேடிச்சென்று விட்டதே! (குழந்தையின் அழகை எண்ணி வியந்து) இந்தக் குழந்தை தான் எவ்வளவு பேரழகுடன் பிறந்தது? என் கண்களை விட்டு அவ்வழகுருவம் மறையவில்லையே இன்னும்! (பெருமூச்சு விடுகிறாள்)

    பணிப்பெண் ஒருவள்: அம்மணி! இப்படியெல்லாம் தாங்கள் மனம் தளர்ந்து விடக்கூடாது! பெண்களாகப் பிறந்தவர்கள் கணவனையே கண்கண்ட தெய்வமெனப் போற்றி கற்புக்கரசிகளாகப் பெருவாழ்வு வாழ்ந்து வருவதால்தான் அவர்களுக்குச் சிறப்பளிக்கிறது இவ்வுலகம். கணவனுக்குப் பணிபுரிவதே பெண்களின் உயர்ந்த லட்சியம். இவற்றையெல்லாம் தாங்கள் அறியாதவர்களில்லையே! இவ்வுலகில் நம்மைப் போலவே பலரும் துயருடையவர்களாகவே வாழ்கின்றனர் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    கண்ணனை ஈன்றெடுத்த தேவகி அவனைப் பெறுவதற்கு முன்னால் ஏழு குழந்தைகளைப் பெற்று இழந்தாள் என்பதை நாம் படித்திருக்கிறோம். தேவகிக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் பேரழகுடன் உயிருடன் தான் பிறந்தது. பிறந்த உடனேயே அக்குழந்தைகள் எல்லாமே அவள் கண் முன்னாலேயே கொல்லப்பட்டனவே! அப்பொழுது அந்தத் தேவகியின் மனம் எப்படித் துடிதுடித்திருக்கும்? இதையெல்லாம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் தேவி. எல்லாம் வல்ல அருள் வள்ளல், அந்தத் தாய்க்கு இறுதியில் மனம் இரங்கவே செய்தான்! தானே அவள் வயிற்றில் பிறந்து அவளுக்கு மகனாக இருந்து மனக் குறையைப் போக்கினான்! வருகின்ற இன்பம், நான் வருகிறேன், வருகிறேன் என்று முன்னறிவிப்புச் செய்து விட்டு வருவதில்லை. துன்பமும் நாம் அழைத்தபோது வருவதில்லை. அதை நாம் அழையாத காரணத்தால் அது நம்மிடம் வராமலும் இருப்பதில்லை. இன்பத்தை எப்படி மகிழ்ச்சியுடன் வரவேற்க விரும்புகிறோமோ, அப்படியே துன்பத்தையும் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும் நாம். அத்தகைய மனப்பக்குவம் நமக்கு ஏற்பட்டால் நம்மை நாடி வரும் துன்பம் துன்பத்தையடைந்து நம்மைக் கண்டே ஓடிவிடும்.

    பகலுக்குப் பின் இரவு வருவது இயற்கையல்லவா தாயே! இரவு நீங்கியதும் நம் அழைப்பை எதிர்பார்க்காமல் தானே கதிரவன் உலகை உய்விக்கத் தோன்றவே செய்கிறான். துன்பத்தைத் தரும் அந்த இறைவன் இன்பத்தைத் தரத் தவறுவதில்லை. உயிர்கள் அனைத்தையும் அருள் பாலிக்கும் காரணத்தால்தான் அவனை ஆண்டவன் என்று சொல்கிறோம்.

    வேறொரு பெண்: உருவுடன் விளங்குபவனும் அவனே! உருவில்லாமல் விளங்குபவனும் அவனே! எங்கும் உள்ளவனாகவும், எங்கும் இல்லாதவனாகவும் இருந்து செயல்படும் இயல்பினன் இறைவன்! மொட்டாகவும், மலராகவும் ஒளியுடைய மணியாகவும், விளங்குகிறான். இரு சுடராகவும், காரிருளாகவும் தோற்றம் தருபவன் அவன். கருவாகவும், கருவின் உயிராகவும், விளங்குகிறான் அவன். கல்லினுள் உள்ள தேரைக்கும், கருப்பையினுள் உள்ள உயிருக்கும் உணவளித்து ஆதரிக்கும் அருள் வள்ளலல்லவா அவன்! அவன் பெருமையை யாரால் அறிய இயலும்?

    இன்னொரு பெண்: எல்லாம் வல்ல அக்கருணைக் கடலின் அருள் தங்களுக்கு விரைவிலேயே ஏற்படும். தாங்கள் மட்டும் மனம் தளர்ந்து நம்பிக்கையை இழந்து விடக்கூடாது.

    திருவுடைத்தேவி: (வெறுப்புடனும் விரக்தியுடனும்) போதுமடி பெண்ணே! போதும்! நீ கூறும் கருணைக் கடலின் கருணை உள்ளத்தை நன்றாக உணர்ந்து விட்டேன் நான்! இவ்வுலகமே துன்பமயமானது என்ற பெரிய உண்மையைத்தான் எனக்குணர்த்தியுள்ளான் அக்கருணைக் கடல். துன்புற்றோரை மேலும் மேலும் துன்புறுத்துவதே அந்த அருள் வள்ளலின் அருளுடைமை.

    மற்றொரு பணிப்பெண்: (திருவுடைத் தேவியின் காலடிப் பக்கமாக எழுந்து சென்று அமர்ந்து) அம்மணி! தங்கள் மனத்துள் துன்பமென்னும் பெருவெள்ளம் அலைமோதுகிறது. அதனால்தான் தாங்கள் இப்படியெல்லாம் எண்ணத் தொடங்குகிறீர்கள். உண்மை நிலை உணராதவர்களா தாங்கள்! இல்லவே இல்லை. அகங்கையும், புறக்கையும் சேர்ந்துதானே கையென்ற உறுப்பாகக் காட்சி தருகிறது? அகங்கையில்லாத கையையோ - புறங்கையை மட்டும் உடைய உறுப்பையோ நாம் எங்கேனும் கண்டிருக்கிறோமா? தேவருலகிலும் துன்பம் கலவாத இன்பம் இல்லை! இன்ப துன்பங்கள் மாறி மாறியே வரவேண்டும் என்பது தான் ஆண்டவன் விருப்பம். துன்ப வெள்ளம் அலை மோதும் உங்கள் உள்ளத்தில் இன்பவெள்ளம் அலை மோதும் காலம் அண்மையிலேயே வரப்போகிறது என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

    திருவுடைத்தேவி: (துயரத்தைப் பொறுக்காத உள்ளத்தினளாய்) போடி மூடப்பெண்ணே! பெற்றுப் பெற்று இந்த மண்ணில் புதைத்துக் கொண்டே இருப்பதை நீ வேண்டுமானால் சிறிய துன்பம் என்று எண்ணிச் சாந்தியடைவாய். என்னால் இத்துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை! நான் என்ன செய்வது? இந்தத் துன்பத்தைச் சிறியதாக எண்ணுகிறீர்களே எல்லோரும், அப்படியானால் இதைவிடப் பெருந்துன்பம் ஒன்றும் உண்டென்பது தான் உங்கள் எண்ணமா? ஹும்... உங்களைச் சொல்லி என்ன பயன்? நீங்கள் எல்லோருமே கன்னிப் பெண்களாயிருக்கிறீர்கள். கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாயும் இருக்கிறீர்கள். ஏட்டில் பயின்ற அனைத்தையும் மனமென்னும் பெட்டியில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்... என்ன பயன்? அவையனைத்தும் வாழ்க்கைக்கு ஒத்துவராதவை என்பதை அறியும் பருவம் உங்களுக்கு இன்னும் வரவில்லை. தாய்மைக் கோலத்தின் தனிப் பெருமையை உணரும் காலம் உங்களை இன்னும் நெருங்கவில்லை. விரைவில் உங்களுக்கு அந்தக் காலம் வரும். அப்போது உணர்வீர்கள் தாயுள்ளத்தை. பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும் தாய்க்கல்லவா குழந்தைகளின் அருமையும் பெருமையும் அவற்றை இழந்தால் வரும் துன்பமும் புரியும்? மற்றவர்களுக்கு எப்படிப் புரியும்... ஹும்... (பெருமூச்சு விடுகிறாள்)

    (வயது முதிர்ந்த பெண் ஒருவள் மெள்ள எழுந்து அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டு ஆறுதல் கூற முற்படுகிறாள்.)

    வயது முதிர்ந்த பெண் ஒருவள்: (கனிவுடன்) பெருந்தேவியாரே, பொறுத்துக் கொள்ளுங்கள் துயரத்தை! உங்கள் துன்பத்தை எங்கள் துன்பமாகவேதான் இங்குள்ள ஐந்தாறு தாய்மார்களாகிய நாங்கள் கருதுகிறோம். உங்களுக்கு இப்பொழுது நேர்ந்த துன்பம் நிலையானதன்று விரைவிலேயே உங்கள் துயரம் தீரப்போகிறது. அருள் வள்ளலான அந்த ஆண்டவன் உங்களுக்கு அருள் செய்யப் போகிறான். மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்களம்மா.

    (சுடுகாட்டுக் கோட்டம் சென்றிருந்த பெருநிதிச் செல்வர் இறந்து போன தன் குழந்தையை அங்குவிட்டு விட்டு விசய மாதேவியின் குழந்தையைக் கரங்களில் ஏந்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் குரல் எழுப்பியவாறு தன் இல்லத்துள் வேகமாக நுழைகின்றார்.)

    பெருநிதிச்செல்வர்: (மகிழ்ச்சியுடன்) தேவி... தேவி...! இதோ பார்த்தாயா? இறந்து போன உன் மகன் உயிர் பெற்று விட்டான். என்ன அதிசயம் பார்த்தாயா தேவி...!

    (பெருநிதிச்செல்வரின் மகிழ்ச்சிக் குரலைக் கேட்டு முதலில் வியப்படைகிறாள் திருவுடைத்தேவி. பின் மகிழ்ச்சி வெள்ளத்தைத் தன் உள்ளத்துள் தாங்க இயலாமல் கணநேரம் தவிக்கிறாள். பிறகு தன் இருகரங்களையும் கூப்பி அருகனை மனத்தால் நினைந்து வியக்கிறாள். பேருநிதிச் செல்வரை நோக்கி நீட்டிய கரங்களுடன் ஓடுகிறாள்.)

    திருவுடைத்தேவி: (மகிழ்ச்சி வெள்ளம் மனத்தில் அலைமோத ஆனந்தப் பரவசத்துடன்) என்ன? என்ன சொல்லுகிறீர்கள் தாங்கள்! நீங்கள் கூறியதெல்லாம் உண்மைதானா? என் செல்வம் உயிர் பெற்றுவிட்டானா, எங்கே என் செல்வன்?

    (பெருநிதிச் செல்வரின் கையில் உள்ள குழந்தையை ஆசையுடன் பிடுங்கிக் கொள்ளுகிறாள். முத்தமாரி பொழிகிறாள். இறுகத் தழுவி மகிழுகிறாள். குழந்தையின் உறுப்புக்களையெல்லாம் ஆசையுடன் தடவிப் பார்த்து மகிழுகிறாள். மீண்டும் தழுவுகிறாள்.)

    பெருநிதிச்செல்வர்: (மனைவியின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தவராய்) ஆம் தேவி! உன் மகன் பிழைத்துவிட்டான். சுடுகாட்டுக் கோட்டம் சென்ற உன் செல்வன், அங்கு உயிர் பெற்றுவிட்டான்!

    திருவுடைத்தேவி: (முன்பு ஆறுதல் கூறிய பெண்களை நோக்கிக் குழந்தையுடன் வேகமாக ஓடுகிறாள்). என்ன புதுமை பார்த்தீர்களா! சற்று முன்பு நீங்கள் சொன்ன சொற்கள் எல்லாம் பலித்துவிட்டதைப் பார்த்தீர்களா! (சிறிது தொலைவில் நின்று கொண்டிருக்கும் தன் கணவனை மகிழ்ச்சியுடன் பார்த்தவளாய்)

    தேவகி எட்டாவது பிள்ளையை உயிருடன் பெற்றது போலவே, நானும் என்னுடைய ஐந்தாவது பிள்ளையைப் பெற்றுவிட்டேன்! (மீண்டும் பணிப் பெண்களைப் பார்த்து)

    உங்கள் வாக்கு அருள் வாக்கே! உங்கள் வாய்க்குச் சர்க்கரைதான் போட வேண்டும்!

    (அருகனை மனத்தால் நினைத்தவளாய்)

    அல்லலுற்றார்க்கு ஆறுதல் அளிக்கும் அருகப் பெருமானே! நீ அளித்த மகிழ்ச்சி வெள்ளத்தை என் உள்ளத்தால் தாங்கிக் கொள்ள இயலவில்லையே! சற்று முன் உன்னைத் தூற்றி இகழ்ந்து வருந்திய எனக்கு இப்படியும் ஒரு பேருதவி செய்து அருள் செய்த உன் அருளுடைமையை எவ்வாறு புகழ்வேன்! உன்னை இகழ்ந்துரைத்த இந்த நாக்கிற்கு என்ன தண்டனையளித்தாலும் தகும். என்னை ஆட்கொண்ட அருக தேவா... இந்த மகிழ்ச்சியைத் தாங்கும் சக்தியையும் எனக்குக் கொடுத்து அருள வேண்டும்.

    (மனையாளின் மனமகிழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த பெருநிதிச்செல்வர் அவன் அருகில் வருகிறார்.)

    Enjoying the preview?
    Page 1 of 1