Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manonmani Malai
Manonmani Malai
Manonmani Malai
Ebook39 pages10 minutes

Manonmani Malai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் பெங்களூருவில் என் தமக்கை மாலதியின் வீட்டில் இருந்தபோது ஒரு மத்தியானப் பொழுதில் நேர்ந்த அனுபவத்தின் விளைவே "மனோன்மணி மாலை." அந்த அனுபவத்திற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு 1987ல்தான் இது 100 வெண்பாக்கள் கொண்ட நூலாய் விளைந்தது. 2005ல் நான் விசாகப்பட்டினத்தில், ஊழியத்திற்குக் கும்பிடு போட்ட பிறகு என் இனிய நண்பர் சுவாமி சிவயோகானந்தா (அன்று அவர் பிரம்மச்சாரி ஶ்ரீநிவாச சைதன்யா) அவர்களின் அழைப்பின் பெயரில் மதுரைக்குச் சென்றேன். அவர்தான் என்னுடைய ஐந்து நூல்களை ஒரே சமயத்தில் பதிப்பித்து, மீனாட்சி கோயில் ஆடி வீதியில் அமைந்த திருவள்ளுவர் கழகத்தில் வெளியிட்டார். அதுதான் இன்று மின்னூலாக மிளிர்கிறது. தமிழை ரசிப்பவர்களுக்கும், தன்னை அறியத் தலைப்பட்டிருப்பவர்களுக்கும் இந்த வெண்பா மலர்கள் சுகம் தரும்.

Languageதமிழ்
Release dateFeb 17, 2024
ISBN6580172510556
Manonmani Malai

Read more from Isaikavi Ramanan

Related to Manonmani Malai

Related ebooks

Reviews for Manonmani Malai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manonmani Malai - Isaikavi Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனோன்மணி மாலை

    Manonmani Malai

    Author:

    இசைக்கவி ரமணன்

    Isaikavi Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/isaikavi-ramanan

    பொருளடக்கம்

    யாரிவள்?

    காப்பு

    நூல்

    யாரிவள்?

    மதுரைத் திருக்கோவிலில் சொக்கநாதர் கருவறையில், சிவனின் இடப்புறம் வீற்றிருக்கிறாள் மனோன்மணி.

    சித்தர்களின் கண்மணி. குமரிமுனைப் பொன்மணி. யோகத்தின் தாய்; தோற்றத்தில் சேய்; ஞானத்தின் சாகரம்; தேகத்தில் சிறுகவிதை. விவரிக்க முடியாத வெற்றி. எந்த வித்தைக்கும் இவளருளே உத்தி. நெஞ்சில், கவலையின் சுவடுகூட மிஞ்சாவண்ணம் உயிர்கவர்ந்து குளிர்விரிக்கும் நகையாள்! இவள், கால்கள்தான் நாம் பணியக் கிடைத்திடுமோ!

    இவள் தேவதையா? தெய்வமா? தமிழே கவிஞனாகிப் பொழிந்த பாட்டில் புறப்பட்ட உருவகமா? பார்! பார்! சொல்லச் சொல்லச் சிரிக்கிறாள்! சோழி குலுங்குவது போல் துவங்கி, மலைகள் நடுங்கி, அண்ட பகிரண்டங்கள் புரண்டு, அதோ அரசமர நிழலில், அந்த இடைச்சிறுவனோடு தாயம் போடத் தகராறு செய்துகொண்டிருக்கிறாள்!

    காற்றைக் கூடச் சட்டம்போட்டு அடைத்து விடலாம்; கவிதையை?! ஆம், எல்லா விளக்கங்களின் தாயகமான இவளை விளக்குவதெவ்விதம்?

    என் தந்தையார், கன்னிக் குமரியைத் தன் குருவாகவே ஆராதித்து வருபவர்.

    பாதச் சதங்கை கொஞ்ச மாரியம்மா! வீட்டுப்

    படியேறி வந்தவளே மாரியம்மா!!

    என்ற வரிகள் எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நேர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு. 1985 ஆம் ஆண்டு, பெங்களூரில் என் தமக்கை மாலதியின் வீட்டில் இருந்தேன். ஒரு மத்தியான வேளை. கவிதையும், தரிசன வெறியும் கலந்ததோர் லஹரியில், எங்களெதிரே இருந்த சுவர் திடீரென்று திரையாகி அவளைக் கண்டோம்...

    என்னால் மறக்க முடியாத அந்த அனுபவத்தின் தாக்கமாய் 1987ல் விளைந்தது

    Enjoying the preview?
    Page 1 of 1