Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rasamadevi Part - 3
Rasamadevi Part - 3
Rasamadevi Part - 3
Ebook442 pages2 hours

Rasamadevi Part - 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் இலக்கியங்களுள் மிகத் தொன்மையான. சிறப்பான காப்பியம் "சீவகசிந்தாமணி"யே! இக்காப்பியம் உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று! இதனை இயற்றியு பெரும் புலவர் திருத்தக்கதேவர் பெருமாள். 3145 - விருத்தப் பாக்களால் அமையப் பெற்ற இப்பெருங்காப்பியம், புலவர் பெருமக்களும், பண்டிதர்களும், அறிஞர்களும் மட்டுமே உணரத்தக்கதாக அமைந்துள்ளது. எனவே இக்காப்பியத்தின் பெருமையையும். சிறப்பம்சம்ததையும் பாமரமக்களும், எழுதப்படிக்கத் தெரிந்த மிக எளிய அன்பர்களும் உணர வேண்டும் என்பதே என் நோக்கம். தொடர்கதையாகப் படிக்க விரும்பும் வாசகர்களுக்கு ஏற்ற கதையம்சத்துடனும், சின்னத் திரைக்கு ஏற்றாற் போலவும், வெண்திரை ஓவியமாக்கத் தகுந்தாற் போலவும், புதியதொரு உத்தியைக் கையாண்டு, “இராசமாதேவி” என்னும் தலைப்பில், காதல்-வீரம், சதி - சூழ்ச்சி. ஆடல் பாடல்கள் நிறைந்த, காண்போர் உற்சாகமடையத் தொடர்கதையாக நாடகத் திரைக்ககதை வசனமாக அளிக்கிறேன்.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580131108617
Rasamadevi Part - 3

Read more from Jayadhaarini Trust

Related to Rasamadevi Part - 3

Related ebooks

Reviews for Rasamadevi Part - 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rasamadevi Part - 3 - Jayadhaarini Trust

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    http://www.pustaka.co.in

    இராசமாதேவி பாகம் – 3

    Rasamadevi Part - 3

    Author:

    ‘சீவகச்செல்வர்’

    சீனி.கிருஷ்ணஸ்வாமி

    ‘Seevagaselvar’

    Seeni. Krishnaswamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayadhaarini-trust

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மூன்றாம் பாகம்
    அங்கம் ஆறு

    45. கந்தர்வ உலகில் சீவகன்

    46. தேசிகப் பாவை

    47. உயிருடன் கலந்த உயிர்!

    48. பாவையைத் தீண்டிய படநாகம்

    49. இணைந்த உள்ளங்கள்

    50. அரசியின் ஆலோசனை

    51. வஞ்சகன் வந்தான்

    52. விதி அழைத்தது

    53. வெற்றி வீரன் யார்?

    54. நெஞ்சில் நிறைந்தவள்

    55. தாமரையை விடுத்து, அன்னம் சென்றது!

    56. சீவகன் கண்ட தக்க நாடு

    57. நாணாத நங்கையும் நாணினாள்

    58. ஓத நீரமுதமும் உலகும் விற்குமே!

    59. பிரிவுத் துயரம்

    60. துயர் தீர்த்த வள்ளல்

    61. நட்புக் கரம் நீண்டது

    62. வில்லாசிரியர்

    63. மலர் விடு தூது

    64. சீவகனுக்கு மன்னன் தந்த பரிசு!

    65. கனகமாலை சீவகன் திருமண விழா

    66. சீவகனின் மலர் மஞ்சம்

    67. பிரிந்தவர் கூடினர்

    68. ஒற்றர் மூலம் செய்தி அறிதல்

    69. ஆநிரை கவர்ந்த அந்நியர்கள்

    70. நண்பர்கள் கூடினர்

    71. உண்மை வெளிப்பட்டது

    அங்கம் ஏழு

    72. குடியிருந்த கோயில் கண்டான்

    73. தாயுடன் ஆலோசனை

    74. விமலையின் பந்தாட்டம்

    75. விற்காத பண்டங்களும் விற்றன

    76. விரும்பியவனை மணந்தாள் விமலை

    77. எண்ணமெலாம் நிறைந்து நின்ற ஐயன்

    78. சுரமஞ்சரி

    79. கிழவன் குமரி ஆட வந்தான்!

    80. காமன் கோட்டத்தின் காமதிலகன்

    81. அறத்தொடு நிற்றல்

    82. விரும்பியவனை மணந்த சுரமஞ்சரி

    83. இணைந்த உள்ளம்

    84. கன்றைக்கண்ட தாய்ப் பசு!

    85. குணமாலை பிழைத்தாள்!

    86. குதிரை வாணிகன்

    87. மிதிலா நகர மக்களின் வரவேற்பு

    88. சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்வோம்!

    89. நண்பனா? பகைவனா?

    90. கட்டியங்காரனின் மகிழ்ச்சி!

    91. இலக்கணையின் சுயம்வரம்

    92. உரிமைப் போர் மூண்டது

    93. அரசியின் உள்ளத்தில், சாந்தி தேவதை!

    94. நாட்டைக் காப்பது உன் கடமை

    95. சீவகனின் முடிசூட்டு விழா

    மூன்றாம் பாகம்
    அங்கம் ஆறு
    காட்சி ஒன்று

    இடம்: சந்திரோதய மலைமேல் உள்ள தேவருலகம்.

    காலம்: மாலை நேரம்.

    பாத்திரங்கள்: சீவகன் - சுதர்சனன் - தேவ கன்னிகைகள்.

    45. கந்தர்வ உலகில் சீவகன்

    (பொன் மதில்களால் சூழப்பட்ட அழகிய விண்ணுலகில்; நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட நிலைவாயில்கள் நான்கும் ஒளி வீசித் திகழ்ந்து கொண்டிருந்தன. உட்புறத்திலே அமைந்திருந்த நிலைமாடங்கள் ஏழும், அவற்றின் மேல் உயர்ந்தோங்கி நின்ற கோபுரங்களும், அந்த வானுலக நகரத்திற்கு மேலும் அழகூட்டிக் கொண்டிருந்தன. நகரத்தின் உள்ளே செல்வதற்கென அமைந்த பிரதான நெடுங்சாலை முழுவதும் - பொன்னாலும், நவமணிகளாலும், கோமேதகங்களாலும், முத்துக்களாலும் அழகு செய்யப்பட்டு, பல வளைவுகளைக் கொண்டு பொலிவுடன் திகழ்ந்து கொண்டிருந்தது.

    அந்த அழகு நெடுஞ்சாலையின் இரு புறங்களிலேயும் செய்குன்றுகளும், எண்ணற்ற அழகிய நீர்நிலைகளும், கண்ணைக் கவரும் பூங்காக்களும், அவற்றின் நடுவே, கருத்தைக் கவரும் கற்பகத்தருக்களும் காணப்பட்டமையால், மன மயக்கம் தருகின்ற பிறிதோர் தேவருலகமோ என்று காண்போர் வியக்கும்படி திகழ்ந்தது அந்தப் பொன்னுலகம். அவ்வழகுப் பொன் நகரத்தின் நாற்புறமும் - மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், மணி மண்டபங்களும், பாங்குடன் அமைக்கப்பட்டிருந்தமையால் - குபேரனுடைய அமராவதி நகரம் போலவே காட்சி தந்து கொண்டிருந்தது அப்பொன்னுலகம்.

    இராசமாபுரத்திலிருந்து சீவகனைத் தழுவி எடுத்து - வானுலகம் அழைத்து வந்த சுதர்சனன், அவனுக்கு, கந்தருவ கன்னிகைகளைக் கொண்டு, மங்கல நீராட்டினான். அணிமணிகளாலும், தூய பட்டாடைகளாலும் அலங்காரம் செய்து அகம் மகிழ்ந்தான். மனத்திற்குச் சுகானந்தம் தரவல்ல, மயக்கும் அந்த மாலைப்பொழுதில், பொன் மாளிகையின் மத்தியிலே அமைந்திருந்த அரசவையின் கீழ்ப்புறத்தில், முத்துக்களாலும், பவழங்களாலும், இரத்தினங்களாலும், கோமேதகங்களாலும், அழகு செய்யப்பட்ட சிம்மாதனங்கள், தங்கத்தகடு வேய்ந்த, தரைப் பகுதியில், உயரமாகவே அமைக்கப்பட்டு இருந்தன. சுதர்சனன், சீவகனைத் தழுவியவாறு அவ்வாசனங்களில் அமர்ந்து கொண்டான்.

    சீவகனும், சுதர்சனனும் ஆசனங்களில் அமர்ந்த மறுகணமே கந்தர்வலோகக் கன்னிகைகள் பொன்னாலான, ஆலவட்டங்களை மெல்ல வீசத் தொடங்கினார்கள். கின்னரர்களும், கிம்புருடர்களும், வித்தியாதரர்களும், இணைந்து இனிய நாதமெழுப்பத் தொடங்கினர். துதிப்பாடகர்கள் தங்கள் தங்கள் இசைக்கருவிகளில், குறுந்தடிகளைக் கரங்களில் மெல்லத் தட்டித் தாளம் எழுப்பியவாறேத் துதிப்பாடல்களைப் பாடத் தொடங்கினர். அவர்களின் பாடல்களுக்கேற்பவும், இசைக்கருவிகளின் தாளங்களுக்கேற்பவும் நடனமாடத் தொடங்கினர். தேவ கன்னிகைகள். சுதர்சனனின் பேரவையின் சிறப்பையும், அவனுடைய நாட்டின் அழகையும், வளத்தையும், பெருமையையும், கண்ட சீவகன், அவனை நண்பனாகப் பெற்றதை எண்ணி மனம் மகிழ்ந்தான்.

    தன் நண்பனான சுதர்சனனிடம் முன்னிலும் கெளரவமாக அன்புடன் நெருங்கிப் பழக ஆவல் கொண்டான். அத்தகைய அழகு நகரத்தையும், சுதர்சனனின் பேரவையின் சிறப்பையும், தான் காணக் காரணமாக இருந்த, கட்டியங்காரனையும், அவன் மைத்துனன் மதனனையும், மனத்துக்குள் மனமாறவே வாழ்த்தத் தொடங்கினான். ஆடலும், பாட்டும், சிறப்பாகவே முடிவடைந்தது. அனைவரும் கலைந்து சென்ற பிறகு, அவ்வரசவையின் அருகில் உள்ள அழகான பொன் மண்டபமொன்றில் சீவகனுடன், தன் இரு மனைவியருடனும், பணிப்பெண்கள் சிலருடனும் அமர்ந்து உரையாடத் தொடங்கினான் சுதர்சனன்.)

    சுதர்சனன்: (மலர்ந்த முகத்துடன் சீவகனைப் பார்த்து) என் அன்புக்குரிய நண்பனே! இந்த நாட்டை இனி உன் சொந்த நாடாகக் கருத வேண்டும். இந்த நாடு உனக்கு இன்பமளிக்கிறதா? சீவக! நீ விரும்புவனவெல்லாம் கிடைக்கும் இங்கே. எதையும், மனத்தால் நினைத்த மறுகணமே பெறுவாய்! உன் வருகையால் நான் மிகவும் பெருமை அடைகிறேன். உன்னைக் காட்டிலும் எனக்குச் சிறந்த நண்பன் யாரும் இல்லை.

    சீவகன்: (வியப்புடனும், மகிழ்ச்சியுடனும்) மனத்துக்கினிய நண்பரே! இப்படிப்பட்ட அழகு நகரத்தைக் காண நான், நல்வினை செய்திருக்க வேண்டும்! இரவையும், பகலையும், உமது நாட்டில் பிரித்துக் காண இயலாது போலிருக்கிறதே! எப்பொழுதுமே இந்த நகரம் பேரொளியுடன்தான் திகழும் போல் தோன்றுகிறது. நகரின் சுற்றுப்புறப் பகுதிகளில் எங்கு நோக்கினும், கண்கொள்ளாக் காட்சிகளே கண்டேன். நெடுஞ் சாலையின் இருபுறங்களிலும், கண்கவர் செய்குன்றுகளும், அவற்றினூடே சிதறிச் சரிந்தோடும் செயற்கைச் சிற்றோடைகளும், வனப்புடைய வாவிகளும், அழகு தரும் சோலைகளும், அமைத்திருக்கும் உமது கலைத் திறமையையும், ரசிகத் தன்மையையும் எண்ணி எண்ணி வியப்பே அடைகிறேன். குபேரனுடைய அழகு நகரமான அழகாபுரிக்கும் மேலான பேரழகுடையதாகவே மதிக்கிறேன்!

    சுதர்சனனின் மனைவியருள் ஒருவர்: (கணவனைப் பார்த்து) உங்கள் நண்பர் குபேரபட்டணத்திற்கும் சென்று வந்தவரா?

    சீவகன்: (புன்முறுவலுடன்) இல்லையம்மணீ! புராணங்களும், இதிஹாசங்களும் கற்பனைக் கண் கொண்ட கவிஞர்களால் இயற்றப்படுகின்றன. கற்பனைக் கண் கொண்ட கவிஞர்கள் எதையும், கண்ணால் கண்டு பாடும் இயல்பினரல்லரே! அவர்களுடைய கற்பனைகளில் தோன்றும் அழகையும், சிறப்பையும், நாடுகளின் மீதும், பிறர் காண இயலாத உலகங்களின் மீதும் ஏற்றிப் பாடும் பண்புடையவர்களல்லவா எங்கள் நாட்டுக் கவிஞர்களும், புலவர்களும் இயல்பாகக் காணும் அழகைக் காட்டிலும், கற்பனையாகக் கூறும் அழகு மிகச்சிறப்பாகவே தோன்றும். நம் கண்களுக்கு எழிலுடன் தோன்றும் காட்சிகள் புலவர்களின் அகக்கண்களுக்குப் பேரெழிலுடன் தோன்றும்.

    ஆகையால், புராணங்களையும், காவியங்களையும் படிக்கும் போது அவற்றுள் வருணிக்கப்படும் நாடுகளையும், எழில் நகரங்களையும், பிற பொன்னுலகங்களையும் கற்பனைக் கண்ணால் கண்டு ரசிக்கிறோம் நாம். அப்படிக் கண்டு ரசித்த அளகாபுரியின் நகரழகு, உங்கள் பொன்னுலகிற்குத் தாழ்ந்ததாகவே தோன்றுகிறது எனக்கு.

    உண்மையில், எங்கள் நாட்டுக் கவிஞர்களும், புலவர்களும் இந்த அழகு நகரத்தை நேரில் கண்டிருந்தார்களேயானால், நிச்சயமாக அந்த அளகாபுரிக்கும் மேலாகவே இதைப் பற்றிப் பாடி இருப்பார்கள். கண் பார்வை சென்ற இடமெல்லாம் கருத்தைக் கவரும், கவினுரு காட்சிகளையே கண்டேன். இத்தகைய நகரைக் காண நல்வினை செய்திருக்க வேண்டும் நான்.

    சுதர்சனன்: (புன்சிரிப்புடன் தன் மனைவியரைப் பார்த்து) என் நண்பனைச் சாதாரண மனிதனாகக் கருதிவிடாதீர்கள்! வானுலகவாசிகளாகிய வானவருக்கும் வாழ்வளிக்க வல்லமை பெற்றவன் என் நண்பன்!

    (சீவகனைப் பார்த்து)

    நண்பனே! உன்னை வாள் வீச்சிலே மட்டும் வீரனாக மதிப்பதற்கில்லை! சொல் வீச்சிலேயும் நீ சிறந்த வீரனாகவும், புனைந்துரை பகரும் புலவனாகவும் திகழ்கிறாய்! அறிவை ஆள்பவனாகிய நீ, கற்பனைகளையும் மிகச் சிறப்பாகவே ஆளுகின்றாய்! உன்னைப் பெற்றவள் மாபெரும் தவமியற்றியிருக்க வேண்டும்! அந்த மாதரசியின் தவத்தின் பயனாகவே வானவர் இயல்பைப் பெற்ற நீ மண்ணுலகில் மனிதனாகப் பிறந்திருக்கிறாய்!

    சீவகன்: (விசயமாதேவியின் நினைவு வந்தவனாக) ஆம், நண்பரே! உமது கூற்றிலும் உண்மை உண்டு! என்னைப் பெற்ற தாய் என் வளர்ச்சிக்காக, இன்றும் தவமியற்றிக் கொண்டுதான் இருக்கிறாள்.

    சுதர்சனன் மனைவி: (வியப்புடன்) பிரபோ! அழகிலும், அறிவிலும், ஆண்மையிலும், உங்கள் நண்பர் மேம்பாடுடையவராகவே தோன்றுகிறார்! இவ்வறிஞரின் நட்பு தங்களுக்கு எப்படிக் கிட்டியது?

    சுதர்சனன்: (பெருமையுடன் தன் மனைவியரைப் பார்த்து) மண்ணுலகில் முனிபுங்கவரின் தீச்சாபம் ஏற்ற நான் அவ்வுலகில் விலங்காய் மாறிக் கிடந்ததை நீங்கள் அறிவீர்கள்! மண்ணுலகில், விலங்கு உருவில் திரிந்து கொண்டிருந்த என்னை, மானுடர்கள் பலரும் பல நிலைகளில் துன்புறுத்தத் தொடங்கினர். அல்லலுற்ற என்னை ஆட்கொள்ள வந்த தேவ தேவனைப் போலப் பண்புள்ளம் படைத்த இந்த நண்பன், என் செவிகளில் மந்திர மோதினான். விண்ணுலவாசிகள் ஜெபிக்கும் மந்திரங்களினும், மண்ணுலகவாசிகள் ஓதும் மந்திர மொழிகளுக்குத்தான் மாபெரும் சக்தி உண்டு. அதனால், என்னுடைய தெய்வ உடம்பைப் பெற்றேன். அக்கணம் முதலே எங்கள் நட்பும் வளர்ந்தது. இன்று நீங்கள் இருவரும் என்னைப் பழைய உருவில் கண்டு கொண்டிருப்பதற்குக் காரணமாக விளங்குபவன் இந்த நண்பனே!

    சுதர்சனனின் இளைய மனைவி: (நன்றியுணர்வுடன் சீவகனைப் பார்த்து) இளங்குமரனாரே! என் கணவருக்குத் தாங்கள் செய்த இவ்வுதவியை நாங்கள் என்றுமே மறப்பதற்கில்லை. விண்ணவரே மேன்மையுடையவர் என்ற மனக்கருத்தை இக்கணம் முதலே மாற்றிக் கொள்ளுகிறோம். மண்ணுலகவரும், விண்ணோர்களாகிய எங்களுக்கு வாழ்வுதர இயலும் என்பதை இப்பொழுதே எண்ணிப் பார்க்கிறோம்! உமக்கு எதிரான பகைவர்கள் உங்கள் உலகில் இருப்பார்களேயாகில், அவர்கள் அனைவரையும் எங்கள் கணவரைக் கொண்டே அழித்துவிடச் சொல்லவே எங்கள் மனம் விழைகின்றது. ஆயினும், தன்மான உணர்வுள்ள மாவீரராய் விளங்கும் நீங்கள், எங்கள் கருத்தை ஏற்க மாட்டார்கள் என்றெண்ணி அமைதியடைகிறோம். மண்ணுலகில் மன்னர்கள் பெற்ற பெருமதிப்புக்கும் மேலாக எல்லாச் சிறப்புடனும் நீங்கள் வாழவேண்டும் என்று எண்ணுகிறோம். அதற்கு எங்கள் கணவர் உதவி செய்வார்.

    சீவகன்: (நன்றியுணர்வுடன்) அன்புடைய அன்னைமார்களே! உங்கள் அன்புரை கேட்டு அகம் மகிழ்கிறேன். எல்லா இன்பங்களையும் தரவல்ல மண்ணுலகம் முழுவதையும் ஆளுதற்குரிய உரிமையையும்; அதற்கும் மேலான இந்த வானுலக ஆட்சிப் பொறுப்பனைத்தையும் எனக்குக் கொடுக்க வேண்டும் என்று உங்களை நான் யாசித்தாலும், என் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய நீங்கள் தயங்க மாட்டீர்கள் என்பதை நான் நன்றாக உணருகிறேன். அத்தகைய அன்பும், பண்பும் உங்களிடம் நிறைந்துள்ளது. போர்க்களத்தில் என் பகைவர்களை அழித்து, எனக்குரிய அரசுரிமையைப் பெற்றுத் தருவது உங்களுக்கு மிகவும் எளிய செயலே! அதை நான் நன்கறிவேன். ஆனால், அவற்றையெல்லாம் உங்களிடம் கேட்டுப் பெற இப்பொழுது நான் விரும்பவில்லை.

    சுதர்சனன்: (அன்புடன் சீவகனைப் பார்த்து) பின் எதை விரும்புகிறாய்? உன் உள்ளம் விரும்பும் எதையும் ஒளிக்காமல் என்னிடம் கூறலாம். உன் விருப்பம் எதுவானாலும் நிறைவேற்றி வைக்கிறேன். உன் மகிழ்ச்சியே இனி என் மகிழ்ச்சியாக அமையும்.

    சீவகன்: (மகிழ்ந்தவனாக) அன்புடைய நண்பரே! இப்பொழுது என் அகம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஆயினும், உங்களிடம் நான் ஒன்றை வேண்டுகிறேன்! எங்கள் மண்ணுலகில் மனிதர்களால் நெருங்கவே இயலாத எத்தனையோ பிரதேசங்கள் உள்ளன. அத்தகைய பிரதேசங்கள் அனைத்தையும், அழகு தரும் நாடுகளையும், அச்சம் தரும் காடுகளையும், மயக்கம் தரும் மலைவளங்களையும், குளிர்ச்சி தரும் பொய்கைகளையும், புறக்கண்ணும், அகக்கண்ணும் குளிரத்தக்க ஆறுகளையும், கண்டுகளிக்கவே விழைகிறது என் மனம். அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் தாங்கள். இதுவே என் விருப்பம்.

    சுதர்சனன்: (வியப்புடன்) என் அன்புக்குரியவனே! அறிந்து கொண்டேன் உன் கருத்தனைத்தையும்! உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வழி கூறுகிறேன். கிணற்றில் வாழும் மீன், தான் இருக்கும் நீர் நிலையைத் தவிர வேறு பெரிய நீர்நிலை எங்கும் இல்லை என்று எண்ணுவதேபோல, மானிடர் பலரும் பெரும்பாலும் தங்களுடைய நாடொன்றே சிறப்புடைய நாடு என்று கருதி வேறு பிற நாடுகள் காண மனம் விரும்பாத இயல்பினராகவே இருப்பார்கள். நீ அவர்களைப் போல் அல்லாமல் நாடு பல கண்டு பெரு வீரனாகவும், பேரறிஞனாகவும் வாழ விரும்புவதை நான் வரவேற்கிறேன். உன் அகம் மகிழ எதையும் செய்யக் காத்திருக்கிறேன்.

    சீவகன்: (மகிழ்வுடன்) நன்றி, நண்பரே! நன்றி. நான் மண்ணுலகில் பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் வரிசைப்படுத்திக் கூறவேண்டும்! அவ்விடங்களுக்குச் செல்லுவதற்குரிய வழியை விரிவாகக் கூறவேண்டும். பல நாடுகள் காண வேண்டும் என்ற பேரவாவே இப்பொழுது என் உள்ளம் முழுவதும் நிறைந்திருக்கிறது.

    சுதர்சனன்: மாண்புடைய மாவீரனே! மகிழுகிறேன் உன் மனக்கருத்தறிந்து. என்னுடைய நாட்டில் சில நாட்களாவது உன்னை விருந்தினனாக இருத்திக் கொள்ள வேண்டும் என்றே நான் எண்ணினேன். என் எண்ணம் ஈடேறவில்லை. உன் மனமோ நாடுகள் பல காண விழைகிறது. அதற்குத் தடையாக நான் இருக்கவும் விரும்பவில்லை. இங்கிருந்து உன்னைச் சிறப்பான முறையில் மண்ணுலகம் அனுப்ப முயலுகிறேன். நான் கூறுவனவற்றையெல்லாம் மிகக் கவனமாகக் கேட்டுக்கொள்

    இந்தச் சந்திரோதய மலையிலிருந்து, இரண்டு காதத் தொலைவு கடந்து சென்றால், இருளடைந்த பெருமலையொன்று தென்படும். அந்த மலையையே 'அரணபாதமலை' என்று கூறுவார்கள். அதனடியில் பிறவா வரம் பெற வேண்டித் தவமியற்றும் சாரணர்கள் வசிப்பதைக் காணலாம். நாள் தோறும் அருக வழிபாட்டிலேயே வாழ்வைக் கழித்து வருபவர்கள். அவர்களைக் கண்டாலே உன்வினைப் பயன்கள், நல்ல பயனை உனக்குக் கொடுக்க முற்படும். அதுவே உன்னுடைய முதற்செயல்.

    அவர்களை வணங்கியதும், ஆற்றல் மிகுந்த இயக்கியொருவள் உன் முன் தோன்றுவாள். உன்னை வரவேற்பாள். நல்ல விருந்தளிப்பாள். விருந்துண்ட பிறகு, அவ்வியக்கியிடம் விடை பெற்று சந்தன மரங்கள் அடர்ந்த, அவ்வரணபாதமலையின் சாரல் வழியே நீ செல்ல வேண்டும். இது உன் வழிப் பயணத்தின் தொடக்கம்.

    சீவகன்: நீண்ட நாட்களாகவே அரணபாதம் சென்று அருகதேவனை வழிபட வேண்டும் என்று பலமுறை நான் கருதியது உண்டு. இப்பொழுது அந்த வாய்ப்பைத் தருகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி!

    சுதர்சனன்: (மெல்ல நகைத்தவனாய்) சீவக! இன்று முதல் உன் மனத்துள் மகிழ்ச்சியே நிறைந்திருக்கும். நன்மைகள் யாவும் உன்னைத்தேடி வரும்! நான் கூறுவதைக் கவனமாகக் கேள். அரணபாத மலையை அடுத்து இருபத்தைந்து காதவழி முழுவதும் மதக்களிறுகள் நிறைந்த அடர்த்தியான காடுகள் உள்ளன! அக்காடுகள் அனைத்தும் கங்கைக் கரையை அடுத்துள்ளன.

    பெரும்பாலான மக்கள் அவ்வடர்த்தியான காட்டு வழியாகச் செல்ல அஞ்சி நடுங்குவார்கள்! அதனால், அக்காட்டில் மனிதர்களின் நடமாட்டத்தையே காண இயலாது. அந்தக் காட்டின் வலது புறத்தில் களிப்பூட்டும் பொய்கைகள் பல உண்டு. அவைகளைக் கண்டதும் உன் மனம் மயங்கவே செய்யும். ஆனால், அவற்றைக் காணும் நீ, உன் மனத்தை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அந்தப் பக்கமாகக்கூட நீ செல்ல வேண்டாம். வேறு நாடு காண ஆவல் கொண்ட நீ அக்காட்டின் வழியே இரண்டு காதங்கள் செல்ல வேண்டும்.

    சீவகன்: அப்பக்கமாகச் செல்வது அபாயம் என்கிறீர்களே?

    சுதர்சனன்: ஆம்! ஆண்மையற்றவர்கட்கு அவ்வழி செல்வது அபாயமே! உன் நிலை அப்படிப் பட்டதல்ல. எதிலும் துணிவுள்ளம் கொண்டவன் நீ. ஆகையால், அக்காட்டைக் கடந்து செல்வது உனக்கு மட்டும் எளிதே! அந்த அடர்த்தியான கானகத்தில் இரண்டு காதம் நடந்து சென்றால், இரண்டு பெருங்குன்றுகள் தென்படும்! அதைத் தொடர்ந்து ‘பேய் வனம்' ஒன்றும் தென்படும்!

    சீவகன்: (வியப்புடன்) என்ன! பேய்வனமா? அக்கானகத்தில் பேய்களைத் தவிர வேறு எவரும் வசிப்பதில்லையா? விந்தையாக உள்ளதே! பேய்களுக்கென்றே ஒரு தனி வனமும் உண்டா?

    சுதர்சனன்: ஆம் நண்பனே! அங்கு பேய்களே வசிக்கின்றன! அதிலும், பெண் பேய்கள் மிகுதியாக வசிக்கின்றன! (குறும்புடன்) ஆண்களே, மயக்கம் அடையும்படியான அழகு படைத்த ஆணழகன் நீ! ஆகையால், அந்தக் காட்டை நீ எச்சரிக்கையுடன் கடந்து செல்ல முயற்சி செய்!

    சீவகன்: (மெல்ல நகைத்தவனாய்) ஏன்? அந்தப் பேய்கள் என்னைக் கொன்றுவிடுமோ என்று அஞ்சுகிறீர்களா?

    சுதர்சனன்: இல்லையில்லை, உன்னைக் கண்டதுமே உன் வாளின் ஒளியைப் பார்த்ததுமே அவை அஞ்சியோடி விடும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை! ஆனால், உன்னைத் தொடர முற்படும் அந்தப் பேய்கள் பேய் வடிவத்தில் வராது! அதனால்தான் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று சொன்னேன்!

    சீவகன்: (வியப்புடன்) என்ன! அவை பேய் வடிவில் வருவதில்லையா? பின் எந்த வடிவில், என் முன் தோன்றுமென்கிறீர்கள்!

    சுதர்சனன்: (குறும்புப் புன்னகையுடன்) பரந்த மார்பினையுடைய ஆணழகா என்று இன்னொலியோடு அழைத்தவாறே உன் முன் தோன்றும்! களவொழுக்கத்தில் பெண்டிரின் நிறை கவர்ந்த கள்வனே என்று கூப்பிட்டவாறு உன்னை நெருங்கும்! அமரேந்திரனின் அமராவதி நகரில் அழகு நடை போடும் அரம்பையர்களே இங்கு வந்தார்களோ என்று நீ ஐயுறும்படி பெண்களின் வடிவம் எடுத்து உன் முன் ஆடியபடியே வரும் இயல்புடையவை அவை. ஆகையால், அம்மகளிர்ப் பேய்களிடம் நீ முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். அப்பேய்ப் பெண்களைக் கண்டு நீ மயங்கிவிடக் கூடாது. பேய் மகளிரின் பேரெழில் கண்டு மயங்குவோரை அவை தழுவி இன்புற வருவதே போல வந்து உயிரைப் பிழிந்து பருகிவிடும். ஆகையால், அவற்றைக் கண்டவுடனேயே, அவை உன்னை அழைத்தவுடனேயே, நெருங்காமல் விலகிச் செல்.

    சீவகன்: விலகிச் சென்றால் மட்டும் விட்டுவிடுமா அவை?

    சுதர்சனன்: ஆமாம்! உன்னுடைய விருப்பமின்றி, உன்னை நெருங்க இயலாது அவைகளால்! உன்னுடைய கூர்வாளை எக்காரணம் கொண்டும் அப்பேய் வனம் முழுவதையும் கடந்து செல்லும் வரையில் கீழே வைத்து விடாதே. உன்கரத்தில் பிடித்த வாளைக் கீழே வைத்த மறுகணமே உன்னை ஆபத்து நெருங்கும். இதை நன்றாக நினைவில் கொள். பேய்வனத்தைக் கடந்து சென்றதும். செந்நெல் வளர்ந்த வளமான வயலை, ஒழுங்கான கரும்புகள் சூழ்ந்த வேலி, சிற்றிடையைச் சுற்றிய பவள மேகலையைப் போல வெண்மையான அலைகளால் சூழப்பட்ட பொன்தீவே போலக் காட்சி தரும் அழகிய நாட்டைக் காண்பாய்! அந்த நாடே பல்லவநாடு. வழிநடந்து சென்ற களைப்பு நீங்க ஒரு திங்கள் வரை நீ அந்த நாட்டில் தங்கலாம். அந்த நாடு உனக்கு நல்ல வரவேற்பை நல்கும்.

    சீவகன்: அப் பல்லவ நாட்டை ஆளும் அரசர் யார்? அவர் பெயர் என்ன?

    சுதர்சனன்: தனபதி என்ற பெயருடைய மன்னன் அவ்வழகு நகரை ஆண்டு வருகிறான். அந்நாட்டு இளவரசன் உலோகபாலன் என்ற இளைஞன். இளவரசியின் பெயர் பதுமை. (குறும்புடன்) பார்ப்பதற்கும் பதுமை போலவே இருப்பாள். பேரெழில் படைத்தவள்! அவ்வழகியைக் கண்டவுடனேயே உன் உள்ளம் உன்னைவிட்டு நீங்கி, அவளிடம் சரணடைந்து விடும். அவள் தந்தை உண்மையறிந்து உனக்கு நல்ல பிறப்பும் செய்வான். சில நாட்கள் கடந்த பிறகு அந்த நாட்டை விட்டுப் புறப்பட வேண்டும் நீ.

    பல்லவ நாட்டையடுத்துப் பாலைவனம் ஒன்று தென்படும். தரை வழியாகக் கடந்து செல்ல இயலாது. வான் வழியாகத்தான் அந்தப் பாலைவனத்தைக் கடந்து செல்ல வேண்டும். நான் ஒரு மந்திரம் உபதேசிப்பேன் உனக்கு. அதை உச்சரித்தால் நீ அந்தரத்தில் திரிந்து, வான் வழியாகச் செல்ல இயலும். பாலைவனத்தைக் கடந்ததும், தாபதர்கள் வாழும் சித்திரகூட மலையைக் காண்பாய். அங்கு வசிக்கும் முனிவர்களால் நீ வரவேற்கப்படுவாய். அவர்களை வணங்கி அவர்களது ஆசியைப் பெற்றுக் கொள். அதன் பிறகு உன் பயணத்தைத் தொடங்கலாம். அம்முனிவர்களின் தவப்பள்ளியின் இடப்பக்கமாகச் சித்திரகூட மலையும், வலப்பக்கமாக அஞ்சனமா நதியும் தென்படும். இவற்றை அடையாளமாக நினைத்துக் கொள். சித்திரகூட மலையிலிருந்து பன்னிரண்டாவது காதத்தில் 'தக்க நாடு' என்றொரு நாடு தென்படும்.

    அந்த நாடு மிகவும் அழகான நாடு. வளமுடைய நாடு, நரபதிதேவன் என்ற பெயருடைய மன்னன் அந்த நாட்டை ஆண்டு வருகிறான். அந்தத் தக்க நாட்டில், உனக்குத் தகுந்த பரிசும் கிடைக்கும். உன் உள்ளமும், உடலும் அந்த நாட்டில் பேரின்பம் காணும். பிறகு அந்த நாட்டிலிருந்து புறப்படும் நீ, வேடுவர்கள் வசிக்கும் கொடிய காடொன்றைக் காண்பாய். அது கொடிய காடாக இருப்பினும், நல்லியல்பு படைத்த நால்வகையான குணங்களை உடைய, வாவிகள் நான்கையும் அது பெற்றிருக்கும். ஆனால் அவற்றை யாரும் நெருங்க இயலாது.

    சீவகன்: (சிந்தனை ரேகை நெற்றியில் படர) நல்லியல்புள்ள வாவிகள் என்கிறீர்கள்! ஆனால் அவற்றை எவரும் நெருங்க இயலாது என்றும் கூறுகிறீர்கள்! ஒன்றும் விளங்கவில்லையே! நன்மைகளை நாடிச் செல்லவும் இப்படியொரு தடையுண்டா?

    சுதர்சனன்: புன்னகையுடன் கண்களையும், கருத்தையும் கவரும் அழகுடையதுதான் ரோஜா மலர்! ஆனால், எச்சரிக்கையின்றி அவற்றைக் கொய்வதற்கியலுமா? கூறியமுள் அதனைப் பாதுகாக்கவில்லையா? அது போல, அந்த நல்லியல்புள்ள நால்வகைக் குளங்களையும், கொடுந்தொழில் புரியும் வேடுவர்கள் பாதுகாத்து வருகின்றனர். ‘பாவம் செய்தவர்கள் தான் அக்குளங்களை நாடிச் செல்வர்' - என்ற மனக் கருத்துடையவர்கள் வேடுவர்கள். ஆகையால், அக்குளங்களை இடப்பக்கமாக விட்டுவிடு. வலப் பக்கமாகவே செல். அப்போது உன்னைப் புண்ணியம் செய்தவனாகக் கருதி விட்டுவிடுவார்கள் அவ்வேடுவர்கள். அதோடல்லாமல் உன்னைப் புகழ்ந்து வணங்கவும் செய்வார்கள்.

    சீவகன்: (குழப்ப மனமுடையவனாய்) நீங்கள் கூறுவதெல்லாம் எனக்கு மனக்குழப்பத்தையே தருகிறது. நல்லியல்பு படைத்த பொய்கைகளாயினும் அந்தப் பக்கம் கூடச் செல்லக் கூடாது

    Enjoying the preview?
    Page 1 of 1