Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siva Vasagam
Siva Vasagam
Siva Vasagam
Ebook143 pages41 minutes

Siva Vasagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அவனை நான் தேடிச் சென்றதில்லை. நாடிக் கேட்டதும் இல்லை. ஆனாலும், என்னை இழுத்துப் பிடித்து தன்னை எழுத வைத்திருக்கிறான். என்னை அவன் தேர்வு செய்தது எனக்குப் பெருமை. அதற்குத் தகுதி உடையவனாக என்னை ஆக்கியிருக்கிறான் என்பதில் மகிழ்ச்சி.

என் ஞானகுரு மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகத்தை அழுதும் தொழுதும் வாசித்திருக்கிறேன். வாசித்தும் நேசித்தும் கண்ணீர் பெருகியிருக்கிறேன். அவர் போல் அல்ல... அது சாத்தியமும் அல்ல... ஆனாலும், அவர் கருத்துக்களை உள் வாங்கிக் கொண்டு எழுத வேண்டும்... வாசிப்போர் உருக வேண்டும் என விரும்பினேன்.

இதை நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, எழுது என்று உற்சாகப்படுத்தினார்கள். இதில் முக்கியமானவர் கோவையைச் சேர்ந்த அன்புச் சகோதரி டாக்டர் சுந்தரி கதிர்.

முகநூலில் தினம் ஒரு பாடல் என பொருளோடு எழுதத் தொடங்கினேன். என் எழுத்தை வாசித்தும் அதில் இறையை பூசித்தும் என்னை உற்சாகப்படுத்தியவர்கள் பலர். இதில் முக்கியமானவர்கள் பதி அய்யப்பன், டாக்டர். தீபப்பரியா ரமணன், மலேசியாவைச் சேர்ந்த வாணிகலை, சிவராம கிருஷ்ணன் சிவா, தமிழ் அரசி, டாக்டர் சுமதி சுந்தர், மஞ்சுபாஷினி சம்பந்த்குமார், மஞ்சுளா ஜெய். இவர்கள் தந்த உற்சாகத்தால் தான் இது சாத்தியமாயிற்று.

முகநூலில் தினமும் நான் எழுதிய பாடல்கள் எங்கோ கரைந்து விடாமல், அதற்கென ஒரு பக்கம் உருவாக்கி, நண்பர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இதை வாசிக்க வைத்து 100 பாடல்களையும் சிந்தாமல் சிதறாமல் சேமித்துத் தந்தவர் முகநூல் தோழி மீரா.

இந்நூலின் வெளியீட்டு விழா தில்லைக் கூத்தன் திருநடம்புரியும் சிதம்பரத்தில் 25.5.2014 அன்று இனிதுற நடைபெற்றது. திருப்பனந்தாள் காசிமடத்தின் இணை அதிபர் சீர்வளர்சீர் சுந்தர மூர்த்தி சுவாமிகள் அவர்களும், திருச்சி மௌனமடம் சீர்வளர்சீர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் அவர்களும், விழாவில் பங்கேற்று நூலை வெளியிட்டு வாழ்த்தினர். சிவன் மீதான இந்நூலைப் பற்றி வாணியம்பாடி பேராசிரியர் கவிஞர் அப்துல்காதர் அவர்கள் சிறப்பித்து பேசி வாழ்த்தினார். விழா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி புகழ் ஈரோடு மகேஷ், மசாலா எப்.எம். புகழ் செல்லி சீனிவாசன் ஆகியோர் சிறப்புற தொகுத்து அளித்தனர்.

சிவவாசகம் நூலில் உள்ள சில பாடல்களை, இசையமைத்துப் பின்னணி இசையுடன் பாடிப் பதிவு செய்து குறுந்தகடாகக் கொடுத்த கோவையைச் சேர்ந்த கர்நாடக இசை மேதை திருமதி. கிரிஜா ஹரிஹரன் அவர்கள்.

இந்நூலை இறைத்தமிழ் உலகம் வரவேற்கும் என்று நம்புகிறேன்.

இரா. குமார்.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580131405729
Siva Vasagam

Read more from Era. Kumar

Related to Siva Vasagam

Related ebooks

Reviews for Siva Vasagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siva Vasagam - Era. Kumar

    http://www.pustaka.co.in

    சிவவாசகம்

    Siva Vasagam

    Author:

    இரா. குமார்

    Era. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/era-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    சமர்ப்பணம்

    வாழ்த்துரை - முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்

    வாழ்த்துரை - சீர்வளர்சீர் சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்

    கருத்துரை

    எழுத வைத்தான்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    அத்தியாயம் 69

    அத்தியாயம் 70

    அத்தியாயம் 71

    அத்தியாயம் 72

    அத்தியாயம் 73

    அத்தியாயம் 74

    அத்தியாயம் 75

    அத்தியாயம் 76

    அத்தியாயம் 77

    அத்தியாயம் 78

    அத்தியாயம் 79

    அத்தியாயம் 80

    அத்தியாயம் 81

    அத்தியாயம் 82

    அத்தியாயம் 83

    அத்தியாயம் 84

    அத்தியாயம் 85

    அத்தியாயம் 86

    அத்தியாயம் 87

    அத்தியாயம் 88

    அத்தியாயம் 89

    அத்தியாயம் 90

    அத்தியாயம் 91

    அத்தியாயம் 92

    அத்தியாயம் 93

    அத்தியாயம் 94

    அத்தியாயம் 95

    அத்தியாயம் 96

    அத்தியாயம் 97

    அத்தியாயம் 98

    அத்தியாயம் 99

    அத்தியாயம் 100

    *****

    சமர்ப்பணம்

    உருக வைத்து

    கண்ணீர் பெருக வைத்து

    என்னை எழுத வைத்த

    என் ஞான குரு

    மணிவாசகப் பெருமானின்

    மலரடிகளில் சமர்ப்பிக்கிறேன்

    இந்நூலையும் என்னையும்.

    *****

    வாழ்த்துரை

    ‘கயிலைமாமுனிவர்’

    ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி

    முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்,

    அதிபர்.

    ஸ்ரீகாசிமடம்

    திருப்பனந்தாள்,

    தஞ்சை மாவட்டம்.

    நாள்: 18.5.2014

    திரு. இரா. குமார் அவர்கள், தெய்வச் சேக்கிழார் அருளிய பெரியபுராணத்துள் இலங்கும் அடியார்களின் அருள் வரலாற்றைப் புதுக்கவிதையில் திறம்பட யாத்து, பாமரர்மாட்டும் பரப்பிய பெருமைக்குரியவர்.

    இவர் சைவ சமயப் பற்றாலும், ஈடுபாட்டாலும், சிவபக்தியாலும் மேலும் சிலபல நூல்களைச் செய்ய வேண்டும் என்னும் நல்லார்வத்துடன் தற்போது ‘சிவவாசகம்' என்னும் செந்நூலாகிய நன்னூல் செய்துள்ளார்.

    இந்நூலில் வரும் இறை விளிகளும் வேண்டுதல்களும் திருமுறை ஆசிரியர்களின், ஆசாரியர்களின் சொற்களையும், சொற்றொடர்களையும் ஒட்டியே அமைந்துள்ளமை கொண்டு அவற்றின்பால் இவருக்குள்ள ஈடுபாட்டையும் தோய்வையும் அறியலாம். ஆசாரியர்களின் திருப்பனுவல்கள், இறைவர் உள்நின்று உணர்த்த அருளப்பெற்றவை என்பதையும், அருளாளர் பனுவல்களும் பிரபந்தங்களும் இறையாணைப்படியே இயன்றவை என்பதையும், இக்காலத்துப் பக்தர்களின் பனுவல்கள் ஆர்வம் மையப்பட்டவை என்பதையும் நிறைவிற் கொள்ள வேண்டும். சகலரும் இறையின்பந்துய்க்க ஆற்றுப்படுத்தும் கருவியாக சிவவாசகம் அமைந்துள்ளமையைப் பாராட்டுகிறோம். இதனைக் கற்போர் சைவமாமம் செந்நெறிக்காட்பட்டு, ஆசாரியர்களின் இறைப்பனுவல்களையும் அருளாளர்களின் பக்திப் பனுவல்களையும் நாளும் தோத்தரித்து நற்கதி பெற வேண்டும் என்பது நம் அவா.

    இளைஞராகவும் இதழியல் துறையில் புகழ் பெற்றவராகவும் விளங்கும் திரு இரா. குமார், நம் உயிர்ச் சைவத்திற்கு பாட்டுப் பணியால் நாட்டும் திருத்தொண்டு மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாகும். நிலைத்ததும் ஆகும். இவருக்கு நம் நல் வாழ்த்துக்கள்

    சுபம்

    சிவசிவ

    *****

    வாழ்த்துரை

    திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்த பரம்பரை

    ஸ்ரீ சிவாக்கிரயோகிகள் ஆதீனம்

    இருபத்து ஏழாவது குருமகாசந்நிதானம்

    சீர்வளர்சீர் சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்

    சூரியனார் கோயில் – திருமங்கலக்குடி

    தஞ்சாவூர் மாவட்டம்

    உலகில் தோன்றிய மனிதர்கள் உய்தி பெற இறையருளைப் பெற வேண்டும். அவ் இறையருளைப் பெற நான்கு நெறிகளை நம் முன்னோர் வகுத்துள்ளனர். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதாகும். சரியை நெறியில் செய்ய வேண்டுவன திருக்கோயிலில் விளக்கேற்றுதல், பூமாலை புனைந்து ஏத்துதல், பாமாலைச் சூட்டி மகிழ்ந்து பாடுதல் முதலியனவாகும்.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களும் பட்டினத்தார், அருணகிரிநாதர் போன்ற அருளாளர்களும் செந்தமிழ்ப் பாக்கள் பாடி பரம்பொருளின் அருளைப் பெற்றனர். ‘அளப்பில் கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே' என்பது அப்பரடிகளின் அருள் வாக்காகும்.

    செழுந்தமிழ்ப் பாக்களால் 'சிவவாசகம்' என்னும் நூலைத் தமிழுலகிற்கு அளித்துள்ள திரு இரா. குமார் அவர்களின் பணி பாராட்டிற்குரியது. திருவாசகத்தின் உட்பொருளை உள்ளத்தில் இருத்தி கவிதை வடித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

    "பிடிமேல் இடுகின்ற பொற்றவசைக் கீழ்

    நாய் மேல் இட்டது போல் கருணையனே"

    என்னும்

    Enjoying the preview?
    Page 1 of 1